Friday, September 28, 2012

பதிவர்களுக்கு கண்ணதாசன் சொன்ன அறிவுரை!


நண்பர்களே சமீப காலமாக பதிவுலகத்தில் மத சம்பந்தமாக  பல பதிவுகள் அரங்கேறின. அதில் சிலர் ஒரு மதத்தில் இருந்து கொண்டே அதனை சிறுமைப் படுத்துகிறேன் பேர்வழி என்று  அண்ணாந்து பார்த்து எச்சில் உமிழ்ந்து தாங்களாகவே  ரிலாக்ஸ் ஆகிக் கொண்டிருக்கின்றனர்.

நிற்க, கண்ணதாசனின் "அர்த்தமுள்ள இந்து மதம் " என்ற புத்தகத்தை உங்களில் பெரும்பாலோர் படிக்கவில்லை என்றாலும் கேள்விப் பட்டாவது இருந்திருப்பீர்கள். நான் அந்த புத்தகத்தின் முதல் பாகத்தைப் படித்தபொழுது , அவரின் முன்னுரையில் தான் எவ்வாறு  நாத்திகனாக இருந்து பின் ஆத்திகனாக மாறினார் என்பதை நச்! என்று சொல்லிய விதம் அருமையாக இருந்ததால், அதனை பற்றி விவரிக்கவே இந்த பதிவு.

அதில் , எவ்வாறு இந்து மதம் எதிர்ப்பதை ஒரு ஸ்டைல்! ஆக  இப்போது உள்ள பதிவர்கள் நினைப்பது போல் தானும் நினைத்ததாகவும் , அதில் ஒரு போலி மரியாதை கிடைப்பது போன்ற மாயத் தோற்றம் ஆரம்பத்தில் இருந்ததாகவும், பின் அதில் பலரின் சுய நலம் கலந்த அரசியலை கண்டு உணர்ந்ததாகவும் எழுதி இருப்பது ஆச்சர்யமாகவும் ,அட! எவ்வளவு உண்மை என்றும் தோன்றியது.

பின் தான் எவ்வாறு புராணத்தில் ஐக்கியம் ஆகி அதன் அடிமையாகவே மாறி விட்டதையும் அழாக எடுத்தக் கூறியுள்ளார்.  இதோ அந்த முன்னுரையின் சில வரிகள் அவரின் எழுத்திலேயே :


என்  இனிய  நண்பர்களே,

இந்து மதத்திற்கு புதிய பிரசாரங்கள் தேவை இல்லை. ஏற்கனவே உள்ள  பிரசாரகர்கள் ,உபந்யாசகர்கள்  யாரும்  சக்தி குறைந்தவர்களல்லர்.

ஆரம்பமே அதிரடியா இருக்குல்ல , மேலும் படிங்க ,

ஆகவே 'புதிய பிரச்சாரகன் கிளம்பி இருக்கிறான்' என்ற முறையில் இந்த தொடர் கட்டுரையை யாரும் அணுகத் தேவை இல்லை.

நான் நாத்திகனாக இருந்தது இரண்டு ,மூன்று ஆண்டுகளே!

பாருங்க எவ்வளவு குறைந்த காலத்திலேயே அந்த மாயையிலிருந்து வெளிய வந்துட்டாருன்னு.


அதுவும் , நாத்திகத்திற்கு ஒரு போலித் தனமான மரியாதை கிடைக்கத் தொடங்கிய இடைக் காலத்திலேயே !

இப்ப சில பதிவர்கள் இந்த மாதிரி நிலமையில தான் இருக்காங்க , சீக்கிரம் பின்னாடி எரிஞ்ச பிறகு தான் தெரியும் தான் எது மேல உக்கார்ந்து இருக்கோமின்னு. 

நான் எப்படி ஆத்திகனானேன்?

கடவுளையும் ,புராணங்களையும்  கேலி  செய்வதற்காக கந்த புராணம்,பெரிய புராணம் , கம்பனின் ராம காதை ...என்று படிக்கத் தொடங்கினேன்.

அறிஞர் அண்ணா அவர்கள் ,கம்பனை விமர்சித்து 'கம்பரசம்' எழுதிய பின் அதன் எதிரொலியாகவே எனக்கு இந்த ஆசை தோன்றிற்று.

படித்தேன்;பல பாடல்களை மனனம் செய்தேன், விளைவு?

என்ன ஆச்சுன்னு கேட்பீங்களே , படிங்க :

கம்பனை படிக்க படிக்க நான் கம்பனுக்கு அடிமை ஆனேன்.

சூர்யாவோட அப்பா  நடிகர்  சிவகுமார்  இதே மாதிரி ஆகி விட்டார் என்று சமீபத்து செய்தி கூட நேத்து பதிவுலகத்தில் செய்தியாக மின்னியதே நியாபகம் இருக்கா ?

புராணங்களில் உள்ள தத்துவத்தை படிக்க படிக்க ,நான் கடவுளுக்கு அடிமையானேன்.

அடுத்து வக்கிறாரு பாருங்க ஆப்பு :

நாத்திகவாதம் என்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பதையும் ,உள்மனதின் உண்மையான உணர்ச்சி அல்ல என்பதையும் உணர்ந்தேன்.

நம்ம மஞ்ச துண்டு தலீவரே இதுக்கு உதாரணம் போதுமே!

அடுத்து நம்ம எழுத்துலக பதிவு சிங்கங்களுக்கெல்லாம் கொடுத்தாருங்க பாருங்க ஒரு 'பன்ச் '  , எல்லாரும் இத கவனமா மனசுல வச்சு பதிவு எழுதுங்க மக்களே :

புரட்சி என்ற பேரில் குருட்டுத் தனமான நாத்திக மனப் போக்கு தொடர்ந்திருந்தால் , எனது எழுத்துக்கள் சுருங்கி ,கருத்துக்கள் சுருங்கி ,என் பெயரும் சுருங்கி இருக்கும்.


என்ன நண்பர்களே, கண்ணதாசன் கருத்தில் உடன் பாடு இருக்கா , இல்லையா ?

இதவரை படித்ததற்கு நன்றி, சிந்திப்போம் , முன்னேறுவோம் !

 டிஸ்கி:  யாரும் பொங்கி நான் அது, இது என்று என்னை சிறுமை படுத்தலாம் என்று நீங்களே சிருத்து விடாமல் , சொல்ல வந்த விஷயத்தை  மட்டும் உள்வாங்கு மாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.!




4 comments:

  1. //சொல்ல வந்த விஷத்தை மட்டும் உள்வாங்கு மாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.! //

    விஷத்தை உள்வாங்கணுமா? நான் வரல இந்த விளையாட்டுக்கு :)

    ReplyDelete
    Replies
    1. typo corrected and thanks for pointing that with double meaning. :-)

      Delete
  2. காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் நம்பிக்கைக்குரிய

    இந்து மதப் பார்ப்பனர்

    “புராண மீமாம்ஸாத்வாய ஸுத்ர விஷாரத்” ,
    “வேதார்த்த ரத்னாகர வேதவாஸஸ்பதி”,
    “மஹோ பாத்யாய”,
    “மகா மஹோ பாத்யாய”


    Dr.அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்
    என்னும் வைணவப் பெரியார்

    இந்து மதத்தின் பேரால் ஏனைய சாதியினரை அடக்கவும், ஒடுக்கவும், அறியாமையில் ஆழ்த்தவும், அவமதிக்கவும் ஒரு குறிப்பிட்ட சாதியினரால் பாரபட்சமான ஓர வஞ்சனையாக நடத்தப்படும் அக்கிரமங்களை, அட்டூழியங்களை, பரப்பிடும் மூடநம்பிக்கைகளை செயல்களை அவர்களின் வேதங்களையே ஆதாரமாக சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தி கண்டித்து அச்சுறுத்தலுக்கோ எச்சரிக்கைகளுக்கோ பணிய மறுத்து தனது 100ஆவது வயதில் “உண்மையைத் தேடும் தமிழ் அறிவுலகத்துக்கு சமர்ப்பணம்" என்ற முகமனோடு "இந்து மதம் எங்கே போகிறது?" என்ற நூல் எழுதினார்.


    இங்கே படிக்க

    .

    ReplyDelete
    Replies
    1. முகமன் என்ற சொல்லாடலே இந்த கருத்தின் நோக்கத்தை தெளிவுற எடுத்துக் கூறுகிறது, எனினும் என் பதிவை வாசிப்பதற்கு நேரம் ஒதுக்கியமைக்கு நன்றிகள் பல!

      Delete

படித்தது பிடித்தால் நண்பர்களுக்கு என் பதிவை, மறக்காமல் ,மறக்காமல் அறிமுக படுத்துங்கள்,அப்படியே ,எனக்கும் உங்கள் முத்தை உதிர்த்து விட்டு சென்றால் நானும் பதிவுலகில் பணக்காரன் ஆவேன் உங்கள் தயவில் :-)