பல வருடங்களுக்குப் பிறகு சென்னையில் வேலை நேர்முகத் தேர்விற்காக சென்று இருந்தேன். காலத்தின் கோலத்திற்கேற்ப , ஆன் லைன் இல் என் தங்கும் இடத்திற்கான முன் பதிவை செய்துர்ந்தேன். எக்மோருக்கும் சென்ட்ரலுக்கும் இடையிலான தூரத்தில் அமைந்திருந்த ஒரு ஹோட்டல் அது.
இரவில் , சொந்த ஊருக்குப் போகலாம் என்று , எக்மோரை நோக்கி நடக்க, வழி எங்கும் , மூத்திர வாசம் , குடி மகன்களின் வாந்தி டிசைன் டிசைன் ஆக நிறைந்து இருந்தது.
பெருஞ்சாலைகளின் ஓரத்தில்,பல குடி மகன்கள் புரண்டு கொண்டிருக்க , பல குடும்பங்கள் , பல கதைகளை பேசியபடி , மிகவும் கேசுவலாக , தங்கள் இரவு நித்திரைக்கு ஆயத்தமாகி கொண்டிருந்தார்கள் .
அவர்களை ஒரு வித அச்சத்துடன் கடந்து , எக்மோர் வாசலை அடைய, சாலை ஓரத்தில் இருந்த பைத்தியம் , மீண்டும் , 'தே ..மகனே ' என்று சத்தம் போட்டு வசை பாடிகொண்டிருப்பதை பார்க்க முடிந்தது.
ரயில்வேசின் இலவச வை பை , அனுபவித்துக் கொண்டு , இணையத்தை மேய்ந்த போது , ஒரு குடி மகனின் ஊடுருவலால் டிஸ்டர்ப் செய்யப்பட்டேன்.
"சார், வெறும் நாலு இட்டிலி மட்டும் வாங்கி கொடுங்க " என்றான். "இல்லப்பா " என்ற போது , "பல பேரை கேட்டேன் சார், பிலீஸ் உதவி பண்ணுங்க" என்றான்.
சரி, போனா போகுது , வா வாங்கி கொடுக்கிறேன் என்று , அருகில் இருந்த சங்கீதா ஓட்டலின் விலை பட்டியலை பார்த்த போது , முப்பது ரூபாய் இரண்டு இட்லி என்றது. ஆக அறுபது ரூபாய் செலவா என்று எண்ணிக் கொண்டு, என் பின்னால் வா, வேறு இடத்தில வாங்கி கொடுக்கிறேன் என்ற போது , 'இல்ல சார் இங்க தான் சீப் என்றான் அந்த குடி மகன்.' 'இல்லப்பா, வா வேற இடத்தில் வாங்கி கொடுக்கிறேன் என்று சொல்லி விறு விறு என்று நடக்க ஆரம்பித்தேன்.' ஒரு நிமிடத்திற்க்கு பிறகு பார்த்தால், அவன் என்னை தொடரவில்லை என்று உணர்ந்து கொண்டேன்.
அப்பாடா என்று இருந்தது. என் பேரூந்து க்காக காத்திருக்கும் இடைவேளையில் , 'சார் ஆட்டோ' என்று ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கொரு முறை ஆட்டோ நண்பர்களின் தொல்லை. ஐயோ எப்படா என் பஸ் வரும் என்று காத்திருக்க, ஒரு வழியாக , நான் செல்ல வேண்டிய பஸ் வந்தது, உள்ளே ஏறி, என் இருக்கையில் அமர்ந்த பின், ஒரு ஆழமான பெரு மூச்சை விட்டேன் , உண்மையிலே ஆனந்தமாக இருந்தது.
நான் வியந்தது , ஒரு ஆணாக இருந்து , இவ்வளவு இம்சைய்கள், இதுவே ஒரு பெண் அல்லது வெளி நாட்டவராக இருந்திருந்தால் , அப்பப்பா , ஆணாக பிறந்தும் ஒரு கொடுப்பினை தான் என்று தோன்றியது.
வாழ்க சென்னை மற்றும் இந்தியா. நான் இது மாதிரி அனுபவத்தை அமெரிக்காவில் மற்றும் சிங்கப்பூரில் வசித்த போது கூட உணரவில்லை என்றபோது ஆச்சர்யமாக இருந்தது.
என் சொந்த ஊரில் இருந்து , பல மணி நேரங்களுக்குப் பிறகு , எக்மோரில் இறங்கிக் கொண்டேன். சார் ஆட்டோ வேண்டுமா என்ற பலரின் அந்த அதிகாலைக் கத்தலின் பின் , ஒரு ஆட்டோவை தேர்வு செய்து , உத்தேசமாக பெரிய மேட்டை அடையாளமாக சொன்னேன் . அந்த ஓட்டுனரும் என்னை பெரிய மேட்டின் நடுவில் அமைந்துள்ள மஸ்ஜித் அருகில் இறக்கி விட்டார்.
கண்ணில் தெரிந்த சிலரை கேட்ட பிறகு , கூகுளை நம்பி களத்தில் இறங்கினேன் என் தங்கும் விடுதியை காண. அந்த அதி காலை கும்மிருட்டில் , கூகிளில் நான் செல்லும் இடத்துக்கு தெளிவாக பாதை காட்டிய அந்த மென்பொருள் உருவாக்கிய புண்ணியவானை வாழ்த்தி நான் தங்கும் இடத்தை அடைந்தேன். இந்த இடத்தில தொழில் நுட்ப வளர்ச்சியை சும்மா சொல்லக் கூடாது , அது இல்லை என்றால் நான் எவ்வளவு நேரத்தை இழந்திருப்பேன் என்றும் போதே மனம் ஓய்வாய் இருப்பது எவ்வளவு சிறந்தது என்பதை உணரச் செய்கிறது.
சொல்ல மறந்து விட்டேன் , நான் எக்மோரில் இறங்கி , எங்கு செல்வது என்று தெரியாமல் , குத்து மதிப்பாக , ஸ்டேஷன் எதிர் நோட்டில் நடந்த போது , திடீர் என்று அந்த அதி காலை வேளையில் , 'டாய் உன்னை விட்டேனா பார் , ங்கோத்தா , ங்கொம்மா என்று சுப வார்த்தைகளை பேசியபடியே என்னை நோக்கி வந்த அந்த பயித்தியத்தைப் பார்த்தவுடன் கொஞ்சம் டர் ஆகி பின் சுதாரிச்சி , அவனை விலக்கி என் பாதையில் சென்றதை நினைக்கும் பொது , அப்பப்பா நல்ல வேளை குடும்பத்தோடு வர வில்லை என்று ஆன்ந்தப் பட்டுக்கொண்டேன் .
ஒரு வழியாக என் நேர்முகத் தேர்வை முடித்தபின், தரமணியில் உள்ள ரயில் நிலையத்தில் , டிக்கட் வாங்க , நூறு ரூபாயை நீட்டி , ஒரு பூங்கா ஸ்டேஷன் என்றேன். ஐந்து ரூபாய் சில்லறை வேண்டும் என்ற ஊழியரிடம், ஐந்து ரூபாய் சில்லறை மற்றும் நூறு ரூபாய் கொடுத்தேன். மீதி தொண்ணுறு ரூபாயிடன், ஐந்து ரூபாய்க்கு டிக்கட் கொடுத்தார், வெறும் ஐந்து ரூபாய்க்கு டிக்கெட் , ஆனா, பதினைந்து ரூபாய்க்கு சார்ஜா என்று வியந்து கொண்டே வண்டி ஏறினேன்.
ரெயிலில் ஏறிய பின், கரெக்ட்டான ரெயிலா என்று சந்தேகம். அருகில் இருந்த நபரை கேட்டபோது , என்னமோ அவரின் சொத்தை பாதியாக கேட்டதுபோல் நடந்து கொண்டார். இதே நம்மூரில் ஒருவர் உதவி கேட்டால் , அவருக்கு வலிந்து உதவும் உள்ளூர் மக்களின் இயல்பை நினைத்துக் கொண்டேன்.