Thursday, September 29, 2011

நான் சிரிச்சா தீபாவளி - அனுஷ்காவின் அடுத்த அட்டாக்

அன்பு நண்பர்களே ,உங்கள் அனைவர்க்கும் என்னுடைய 'அட்வான்ஸ்'  தீபாவளி வாழ்த்துக்கள். இந்தியாவில் , குறிப்பாக சொந்த ஊரில் தீபாவளி கொண்டாடும் கொடுத்து வாய்த்த நபர்களே ,மாசம் பொறக்க போகுது , சமபளம், போனஸ் நு ,வர ஆரம்பிக்கும். நல்லா ஜமாயிக்க ,எல்லாம் திட்டம் போட ஆரம்பிச்சு இருப்பீங்க . ஏதாவது ஒரு ரீசன்காக ,இதுவரை கொண்டாடிவிட்டு ,இந்த வருடம் கொண்டாட முடியாதவங்க ,கவலை படாம , அடுத்து வரும் வருடங்கள்ள சேத்து வச்சு கொண்டாடுவீங்கனு நம்புறேன்.

தீபாவளியில் எனக்கு நடந்த கொடுமைய இந்த பதிவுல கொண்டு வர ஆசைப்பட்டேன். அதுக்கு முன்னாலே , இன்னொரு கொடுமைய பத்தி பாப்பமா.

'நாக்கு முக்கா' புகழ் விஜய் ஆண்டனி பண்ண கொடுமை. அவரோட 'அஆதிசூடி ' பாட்டுல வருமே ஒரு கிழவி சொல்றமாதிரி ,'இப்பெல்லாம் பாட்டா போடுராயுங்க , கொலையா கொல்றாயீங்க', அது மாதிரி ஒரு பாட்டு போட்டுருகாரு.  அந்த குத்து ,இந்த குத்துன்னு போயி ,இப்ப 'கொல' குத்தாமில்ல.அவரும் என்ன பண்ணுவாரு பாவம் , வர்ற டைரக்டர் ருங்க , 'எனக்கு நாக்க முக்கா மாதிரி ஒரு குத்து வேணும் ' அப்படின்னு அவர் கற்பனைக்கு தடா போட்டா. நம்ம இசை புயல் A.R.R  ஒரு பேட்டில கூட சொன்னாரு , 'டைரக்டர் எங்க கற்பனைய தூண்டுற மாதிரி சீன் சொன்னா தான் எங்களுக்கு நல்ல விதமா போடத் தோணும்'. "சும்மா , 'சார் , ஹீரோவும் ,ஹீரோயினும் காதலிக்றாங்க,ஒரு பாட்டு போடுங்க ',அப்படின்னு மொட்டையா சொன்னா,என்ன போட முடியும்?'. அவர் கேட்குறதும் கரெக்ட்.

சரி , நம்ம தீபாவளி மேட்டர்க்கு போலாம்.  நாங்க சிறு வயதில , ஒரு கேங்கா , எங்க தெருவையே அதகளபடுதிகிட்டு இருப்போம். எங்க தெருவுல புதுசா ஒரு பேமிலி குடி வந்துச்சு. அதுல ஒரு பொடி பய்யன் இருந்தான். ரெண்டு டு மூணு வயசுல ,குட்டியூண்டா இருப்பான். ஆனா நல்ல சிவப்பா இருப்பான்.

அவனுக்கு நாங்க வச்ச பட்டப் பேரு , 'எலி குட்டி'. அப்படியே வெள்ளெலி மாதிரியே இருப்பான். 'Stuart Little'  படம் பாத்ருபீங்களே,அதுல வர்ற மாதிரி எலி .

நாங்க அவன விட மூத்தவீன்களா இருந்தாலும் , எங்க கூட தான் இருப்பான். கிட்டி புள்ள,கோலி குண்டு ,சப்பாத்தி கல்லு,பம்பரம்,கபடி, பட்டம், பட்டாம் பூச்சி  பிடிகிறது,பாண்டி, தாயக் கட்டை,ராசா-மட்டி தீப் பெட்டி படம் வச்சு வெளாட்றது,சீட்டுக்கட்டு , டென்னிகட்டு , கிரிக்கெட், ஐஸ் பால்,டாக் அண்ட் தி போனு,இன்னும்னு நாங்க அடிக்கிற கொட்டத்துல ,கூடயே சுத்திகிட்டு இருப்பான் கிறுக்கு பய.

[ இந்த கால நம்ம புள்ளயீங்க பாவம் , ஒரு சின்ன வட்டத்துல ஓடரத நெனச்சா பாவமா இருக்கு ]


இப்படி வாழ்கை வெளாட்ட போய்ட்டு இருக்குறப்ப , நாங்க ஆர்வமா எதிர் பாத்த தீபாவளி வந்தது. தீபாவளி வர்றதுக்கு ஒரு மாச முன்னாடியே , அங்க அங்க புதுசு புதுசா வெடி கடைங்க முளைச்சிருக்கும். அந்த வருஷம் என்ன ஸ்பெஷல் வெடி வந்த்ருக்குன்னு பாத்த பிறகு தான் , பட ரிலீஸ்,  டிரஸ் வாங்கிறது , இத்யாதி இத்யாதி.

தீபாவளி அன்னிக்கி ,வாங்கி வச்ச , வெடியெல்லாம் எடுத்துகிட்டு , பாட்டுக்கு எதிர் பாட்டு பாடுற மாதிரி , நீ பாம்பு மாத்திரையா ,நான் டிரைன் நூல கட்டி விடுவேன், நீ லட்சுமி வெடியா , நான் குருவி வெடி , நீ ஓலை வெடியா , நான் அணு குண்டு ,நீ நூறு சரமா , நான் ஐ நூறு சரம் ...இந்த மாதிரி ஒரே போர் தான் போங்க.

எல்லாம் முடிச்ச பின்னாடி , எங்க ஸ்பெஷல் ஐடெம் எடுத்தோம், அது தாங்க , ராக்கெட்.  நான் முன்னாடியே சொன்ன மாதிரி , எலியும் எங்க ஜோதில ஐக்கியமாகி இருந்தான். அவன் ஒரு ஓரமா நின்னு பாத்துகிட்டு இருக்க , நாங்க ஒரு  காலி  பாட்டில்ல , ஒரு ரொக்கெட்ட ,முடிஞ்ச வரைக்கும் நேரா வச்சு , தீய பொருத்தி விட்டோம். தீ திரில எரிஞ்சு கொஞ்சம் கொஞ்சமா மேல ஏரிச்சி.

திடீர்னு ராக்கெட் கொஞ்சம் சாஞ்சி அப்படியே மேல கொஞ்சம் போல  எழும்பி , வேகமா போகுது .  அன்னார வரைக்கும் , அங்கிட்டு நின்ன நம்ம எலி , தீடிருன்னு அரக்க பரக்க எதிர் திசையில ஓட ஆரம்பிச்சுட்டான் ,என்னடா பய இப்படி ஓடுறானே நு பாத்தா, அந்த ராக்கெட் அவன தொரத்திக்கிட்டு இருக்கு ..பய புலியா பாஞ்சு ஓடுறான் ,ஆனா ராக்கெட் விடாம அவன , இந்த பழைய புராண படங்கள்ல , பானம் விட்டு சண்டை போடுவயீன்கல்ல, அது மாதிரி சொய்ன்னு  அவன் பின்னாடி போயி ,கடசில அவன் டவுசர ஓட்டை போட்டுட்டு தான் நின்னுச்சு. அவன் அலறி ஓடுற சீன ,இப்ப நெனச்சாலும் கண்ல தண்ணி வர்ற அளவுக்கு சிரிப்பு வரும் எங்களுக்கு.

அப்படி நான் அன்னைக்கு ஓவரா சிரிச்சதுக்கு ,அன்னிக்கி சாயிங்காலமே , வந்துச்சு பாருங்க ஒரு ஆப்பு. நாங்க கொஞ்சம் இருட்டு ஆனவினே , ஒவ்வொரு வீட்டு வாசலுக்கு போயி ,அவிங்க போடுற , பூசெட்டி , சங்கு சக்கரம் ,கலர் கம்பி மத்தாப்பு இதெல்லாம் வேடிக்கை பாப்போம் . அப்படி நாங்க , முன்னால் சிறுமி , பின்னால் பிகரு , வீட்டு வாசலுக்கு நடைய கட்னோம். அங்க அவ ,ஒரு கம்பி மத்தாப்ப எடுத்து , ஒரு சங்கு சக்கரத்துல வச்சுட்டு ,அது சுத்தின ஸ்பீட பாத்து பயந்து , என் பின்னாடி வந்து நின்னா.

நின்னவ, கைய சும்மா வைக்காம , அவ பாட்டுக்கு , பாதி எரிஞ்சிகிட்டு இருக்கிற கம்பி மத்தாப்ப , என் முதுகுல வச்சா பாவி சிறுக்கி. நல்ல வேளை, ஒரு சின்ன சூடு தான் பட்டது என் தோள்ல, ஆனா , நான் காலேல இருந்து அஆசையா , பெருமையா ,போட்ட ,லேட்டஸ்ட் டிசைன் சட்டையில ஒரு பெரிய ஓட்டை.டிஸ்கி: தலைப்புல பொம்பள புள்ள பேர போட்டா தான் எட்டி பாக்கிறீங்க. இந்தாங்க புடிங்க ,டிஸ்கில ஒரு காணொளி.

http://www.tubetamil.com/view_video.php?viewkey=12b62c35bcf855b94bab
 3 comments:

 1. நல்ல அனுபவப் பகிர்வு..

  தலைப்பு நல்லாத்தான் வைக்கிறீங்க

  ReplyDelete
 2. @மதுரன்,
  வாங்க, நன்றி ,உங்கள் பொன்னான கருத்தை முதலில் போட்டதுக்கு.

  ReplyDelete
 3. நல்ல நகைச்சுவைப் பதிவு. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete

படித்தது பிடித்தால் நண்பர்களுக்கு என் பதிவை, மறக்காமல் ,மறக்காமல் அறிமுக படுத்துங்கள்,அப்படியே ,எனக்கும் உங்கள் முத்தை உதிர்த்து விட்டு சென்றால் நானும் பதிவுலகில் பணக்காரன் ஆவேன் உங்கள் தயவில் :-)