Friday, October 7, 2011

அவள் வருவாளா? (சவால் சிறுகதைப் போட்டி -2011)

ஒரு முக்கிய அறிவுப்பு :

அன்புள்ள வாசகர்களே ,இது நான் ’யுடான்ஸ்’ திரட்டி தற்போது நடத்தி
வரும் ,சவால் சிறுகதை -2011 போட்டிக்காக எழுதிய இரண்டாவது சிறுகதை.இதை படித்துவிட்டு ,உங்களுக்கு பிடித்திருந்தால் , எனக்காக Vote
செய்து உங்கள் ஆதரவை அளிக்குமாறு வேண்டி , விரும்பி ,தாழ்மையுடன்
கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ,இந்த
கதையின் முடிவில் இருக்கும் ’யுடான்ஸ்’ லோகோ
பக்கத்தில் உள்ள Like ஐ கிளிக் செய்து ,உங்கள் ஓட்டை பதிவு செய்யவும்.

முதல் கதை இன்னும் வாசிக்காதவர்கள் இங்கே படித்து பார்க்கவும்:
       

அவள் வருவாளா? (சவால் சிறுகதைப் போட்டி -2011)
 
 
 "டே, சீக்கிரம் வெளிய வாடா,அவங்க எல்லாம் வந்த்ருவாங்கடா" அவசரப்படுத்தினான் குகன். குளித்து விட்டு வெளியே வந்தவன்  சரவணன்.
அவசரமாக உள்ளே போன குகன், "என்னா எழவடா தின்னே , நாத்தம் கொடல புறட்டுதுடா , எருமை மாடு "  என்று ஓங்கி கதவை அறைந்து சாத்தினான்.

தலையை காசித் துண்டால் துவட்ட ஆரம்பித்த சரவணனைப் பார்த்து ,
"அதெப்பிடிரா மாப்ளை , 8.30 to 9.௦௦00  மணிக்கி தான் வர்றாங்க,அதுக்கு கொஞ்சம் முன்னாடி வந்தா என்ன, அவங்க 'கருப்பு' போயிடுமா? " என்றான் சின்னி ஜெயந்த். "அட கர்மம் பிடிச்சவனே, ஒரு லெட்டர மாத்திப் போட்டு உயிரை வாங்கிறியே,உன் பேர எவனாவது மாத்திப் போட்டு கூப்பிடப் போறாங்க ஒரு நாளு,அப்ப தெரியும்"  என்று முறைத்த சரவணன், சின்னியையும் , குகனையும் , வாங்கடா ,பஸ் போயிரப் போகுது " என்று நினைவு படுத்தினான்.

அவர்கள் மூவரும் பஸ்சில் ஏறி ,கடைசி இருக்கையில் அமர்ந்தார்கள்.
பஸ் வேகமெடுத்து நகர ஆரம்பிக்க, ஒரு பெண்ணின் செல் போன் ,
"மாமா , நீங்க எங்க இருக்கீங்க" என்று ரிங்க்டோனத் தொடங்கியது.
உடனே சின்னி வேகமாக , "இங்க தான் கடைசி சீட்ல இருக்கேன் புள்ள" என்று டைம் பார்த்து எடுத்து விட , கண்டக்டர் உள்பட பயணிகள் அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.

பஸ் அந்த மூவரையும் அவர்கள் படிக்கும் கோ-எட் காலேஜுல் உதிர்த்து விட்டு சென்றது. அங்கிருந்த மற்ற வகுப்பு நண்பர்களுடன் அவர்கள், சிரித்து பேசிக் கொண்டு, கடிகாரம் 8.30  - ஐ தொடுவதற்கு காத்திருக்கத் தொடங்கினார்கள்.

மணி 8.30 ஐத் தொடவும், மாணவிகள் வரத் தொடங்க ஆரம்பித்தார்கள்.அவரவர்கள் அவர்களுக்கு பிடித்த கேங்குடன், ஐக்கியமாக ,அப்பாவின் ஸ்கூட்டரில் இருந்து இறங்கிய ரம்யா,அவரை அனுப்பி வைத்துவிட்டு , இவர்கள் மூவரையும் பார்த்து ,சிரித்துக் கொண்டே வந்து , "என்னங்கடா , மச்சான்ஸ்,என்ன பண்றீங்க?" என்று கேட்டாள்.  சின்னி சும்மா இருக்காமல் , "சரவணன் ஒரு புக் படிச்சான் ,அதப் பத்தி பேசிக்கிட்டு இருக்கோம்" என்றான். அப்படியா "என்ன புக் , என்ன புக் ?"  என்று ரம்யா ஆர்வம் அடங்கமாட்டாமல் கேட்டாள்.
சின்னி - "சரவணா சொல்லுடா அத"
எனக் கேட்க ,  "நீயே சொல்லுடா சின்னி" என்று அவன் மறுக்க, "ஒண்ணுமில்ல ,பெண்கள் தலையில் பேன் பார்ப்பது எப்படி?" அப்பிடின்னு படிச்சிருக்கான்," நீ உன் தலைய கொஞ்சம் குடேன் " என்று சின்னி சொல்ல ,அவனை கையை ஓங்கி அடித்தாள் ரம்யா.

அப்போது , பக்கத்தில் இருந்த ஒரு மாணவ ஜோடியின் செயல்பாடுகள் அவர்கள் கவனத்தை ஈர்த்தது. மெதுவாக ,  அந்த ஜோடி பேசுவதை ஒட்டுக் கேட்க ஆரம்பித்தார்கள்:

 அவன்:  "என்னம்மா , ஒன்னும் பேசாம இருக்க"
  அவள்:  "உன் மேல கோபம்"
  அவன்: "ஏன், என்னாச்சு"
  அவள்: " வர வர ,நீங்க என்ன கொஞ்சுறதே இல்ல"
  அவன்: "சரி , நான் ஒரு கவித படிக்கிறேன் கேளேன்,

                   செவ்வாய் கிரகத்தில் தண்ணி இருக்கிறதா
                  என்று தேடுகிறார்கள்,
                  அவர்களுக்கு தெரியாது , நான் உன் 'செவ்வாயில்' ஊரும்
                  தண்ணீரில்  மூழ்கி, காணாமல் போய்விடும்
                  அபாயத்தில் இருக்கிறேன் என்று!

             எப்படி செல்லம் இருக்கு என்று 'திடீர்' வைரமுத்துவாக மாறினான்.

இதனை கேட்ட நம் கதையின் கதாபாத்திரங்கள் நால்வரும்,
"இன்னொரு முறை சொல்லுங்க" என்று சத்தமாக கோரஸ் பாட,அந்த இருவரும் அலறி தெறித்து  ஓடிவிட்டார்கள்.


வகுப்பு ஆரம்பிக்கும் முதல் மணி அடிக்க ,அவர்கள் நால்வரும் , கிளாஸ் -ல் நுழைந்து ,அவரவர் இடத்தில அமர்ந்தார்கள்.

சின்னியின் முன்னால் இருந்த இருக்கையில் இருந்த 'மல்லு ; குட்டி,
கொஞ்சம் ராகமாக ,ஆனால் மெதுவாக ,
  "கடலின் அக்கர போவோரே , கானம் பிறையில் போவோரே,
    போய் வரும்போ எந்து கொண்டுவரும் "  என்று பாடுவதை சின்னி கேட்டு விட்டான். உடனே , 'ரெண்டு கிலோ இருட்டு கடை அல்வா கொண்டுவரும்' என்று கடிக்க ,அவளின் அழகிய, பெரிய கண்கள் , மேலும் பெரிதாகி முறைக்க ஆரம்பித்தாள். 'விடுமா ,விடுமா ' என்று அவளை சமாதானப் படுத்தினான்  அவள் அருகில் இருந்த குகன்.


                                                                                                                                                                    

மறு நாளும் , காலை விடிந்தவுடன் , தங்கள் 'கல கல'  ஆட்டத்தை அந்த நால்வர் கூட்டணி கல்லூரி வளாகத்தில் தொடங்கியது. அப்போது சரவணன், நாய் மாதிரி முகத்தை வைத்து கொண்டு இஸ் இஸ் என்று முகர ஆரம்பித்தான். "ஏதோ ஒரு புது வாடை வருதே" என்று அவன் கேட்க, ரம்யா  வேகமாக, "இவன் கிட்ட இருந்து தான் வருது , ஏன்டா சாக்ஸ தொவடான்னு சொன்னா கேக்கிறையா? " என்று சின்னியை கை காட்டினாள். 'இல்ல ,இது ஒரு சென்ட் வாட,அவன் கிட்ட இருந்து தான் வருது , ஒரு பாட்டிலே கொட்டிருப்பானோ?' என்று முன்னால் செல்லும் அந்த மாணவனை பார்த்து கை காட்டினான் சரவணன்.

"ஹலோ , கொஞ்சம் நில்லுங்க பிரதர்" என்று அவனை ஓரம் கட்டினார்கள்.
"புதுசா இருக்கியே , பேர் என்ன?" என்று ராகிங் செய்ய முடிவு  செய்து அதட்ட,
" பரசுராம்".
"இப்ப வந்து சேர்ந்துருக்க, transfer கேஸ் தானே , என்ன அட்டூழியம் பண்ணி TC கொடுத்தாங்க" - சின்னி.
"அப்படிலாம் ஒன்னும் இல்ல " .
"சார் ன்னு சேத்து சொல்லணும், எங்க படிச்ச முன்னால?" - சரவணன்.
"** காலஜுல படிச்சேன் சார்"
"அது நல்ல காலஜ் ஆச்சே , இங்க ஏன்ப்பா வந்த?" - குகன் 
"எங்க அப்பா தான் , நான் அங்க இருந்தா கெட்டுப் போவேன்னு , அவர் பார்வையிலேயே இருக்கனுமுன்னு ,இங்க கொண்டு வந்து போட்டாரு சார்".
"அப்படியா , பெரிய வில்லனா இருக்காரே ,யாருடா உங்க அப்பா?" - சின்னி.
"இந்த கல்லூரி முதல்வர் , எஸ்.பி.கோகுல் , எங்க அப்பா"
"அடங்கொக்க மக்கா,இத மொதல்லையே சொல்லி தொலைக்க வேண்டி தானே " என்று அவனை அனுப்பி வைத்தார்கள்.

இந்த இடத்தில, கல்லூரி முதல்வர் எஸ்.பி.கோகுல் அறிமுகம் செய்து வைக்க வேண்டியது முறையல்லவா, அவர் ஒரு கண்டிப்பான முதல்வர்,மாணவர்களின் அத்து மீறல்களை  கண்காணிக்க , மாணவர்களுக்குள்ளேயே, informer வைத்து , எல்லா விசயங்களையும் கறந்து விடும் புத்திசாலி. அதுவுமில்லாமல் எப்படி  குறியீடு வார்த்தைகள் கொண்டு மெசேஜ் அனுப்புவது என்று கூட அந்த  iformar -களுக்கு ட்ரைனிங் கூட கொடுத்து வைத்து ,மிகவும் புத்திசாலிதனமாக  நடந்து கொள்வதாக நினைக்கும்  ஒரு பிறவி. அவ்வாறு அவர் வைத்த informer களில் ஒருவன் தான் - விஷ்ணு. அவன் , இந்த கதையின் ஆரம்பித்தில் சொன்ன நால்வர் படிக்கும் அதே வகுப்பில் படிப்பவன். விஷ்ணுவுக்கும் ,
அந்த நால்வருக்கும் ஆகவே ஆகாது, முன்னாளில் ஏற்பட்ட ஏதோ ஒரு 'சில்லறை மேட்டர்' தகராறால்.

பரசுராம் , வேற மேஜர் எடுத்திருந்தாலும் , இந்த நால்வர் கூட்டணியில் மெதுவாக தன்னை இணைத்து கொண்டு 'ஐவர்' கூட்டணி ஆகி விட்டான். ஆரம்பத்தில் , ரம்யா அவனிடம் அவ்வளவாக ஒட்டவில்லை.

ரம்யா ஏதோ ஒரு காரணத்தினால் அன்று கல்லூரி வரவில்லை. அந்த நால்வரும் ,கல்லூரி எதிரே இருந்த , 'நாயர்' கடைக்கு ,  சாயா அருந்தச் சென்றார்கள்.  "டே மாப்ள ,நோட்டு வச்சிருந்தா , ஒரு சிகரட் வாங்குடா" என்றான் சரவணன்,பரசுராமை பார்த்து. "எனக்கு ஒரு வட" என்று சின்னியும்
சொல்ல ," டே மச்சான் , என்ட்ட, புக் வாங்க எங்க அப்பா கொடுத்த ,500 ரூபா தாண்டா இருக்கு , அது புக் வாங்கவே சரியா இருக்கும்டா " என்று மறுத்தான் பரசுராம். "டே குகா,போயி நாயர்ட்ட எல்லாருக்கும் ஒரு 1 பை 
2 டீ மட்டும் சொல்லுடா என்று கடையின் உள்ளே அனுப்பி விட்டு ,இவர்கள் வெளியே நின்றார்கள்.

உள்ளே போன குகனிடம் , "ஏற்கனவே அக்கவுண்டுல நெறைய balance இருக்கு " என்று நாயர் கடுப்படிக்க ஆரம்பித்தார். குகன் அவரிடம் கெஞ்சி கூத்தாடி , நான்கு கப்களில் டீ மட்டும் வாங்கி வந்தான். சின்னி எனக்கு வட வேணும் என்று சொல்லி உள்ளே போய், 'நாயர் ,இன்னும் வட வல்ல" என்று சொல்ல , நாயர் 'கரண்டி' எடுத்து காமிக்க,வெளியில் ஓடி வந்து விட்டான்.  டீ கடையில் இருந்து , "தேவதையை கண்டேன் , காதலில் விழுந்தேன்" என்று FM  ஒலிக்கத் தொடங்க, பரசுராம் , மெய் மறந்து அதை கேட்க ஆரம்பித்தான். அதனை கவனித்த மற்ற மூவரும், நைசாக அவன் பாக்கெட்டில் இருந்து , 500 ஐ எடுத்து, நாயர் கடையில் செட்டில் செய்துவிட்டு தேவையானவைகளை அள்ளிக் கொண்டு வந்து சாப்பிடத் தொடங்கினார்கள். அந்த பாட்டு முடிந்தவுடன் ,சுய நினைவு திரும்பிய ,பரசுராம் , "டே மக்கா ,வச்சுடிங்களா ஆப்பு" என்று அலறினான்.
"சரி அது இருக்கட்டும் , யார்ர அந்த தேவத" என்று துழாவினார்கள் கேள்விகளால் பரசுராமை. வேறு வழியில்லாமல் , ரம்யா தான் அது என்று போட்டுடைத்தான்.

சில நாட்களுக்கு பிறகு , சில பல ஹீரோ வேலைகள் காட்டி , ஒரு வழியாக ரம்யாவை மடக்கி விட்டான் பரசுராம்.அவர்கள் காதல் ,நாளொரு மேனி ,பொழுதொரு வண்ணமாக வளரத் தொடங்கியது.

                                                                                                                                                     

சரவணன்,குகன்,சின்னி மற்றும் ரம்யா , அவர்கள் வகுப்பில் பாடத்தை கவனித்துக் கொண்டிருக்க, பரசுராம் வெளியில் நின்று , சன்னல் வழியாக , அவர்கள் அனைவரையும் வெளியே வருமாறு சைகை செய்தான்.

வேறு வேறு காரணம் சொல்லி , ஒவ்வொருவராக, வெளியில் வந்து சேர்ந்து , "என்னடா ஆச்சு?" என்று கேட்க, பரசுராம் சொல்ல ஆரம்பித்தான்:
"எங்க அப்பாவுக்கு , நானும் , ரம்யாவும் லவ் பண்றது எப்படியோ தெரிஞ்சுடுச்சி போல , அவருக்கு அது பிடிக்கல ,அவர் குணம் உங்க எல்லாருக்கும் தெரியுமே." . "இத்தனைக்கும் நாங்க காலேஜ் வெளிய மட்டும் தான் அப்ப அப்ப ரகசியமா சந்திப்போம் ,யார் போட்டு கொடுத்தா " என்றாள் ரம்யா  கவலையுடன். சின்னியும் ,சரவணனும் ,ஒருவரை ஒருவர் பார்த்து , "எங்களுக்கு தெரியும்,அவனுக்கு இன்னிக்கி தண்ணி காட்றோம்" என்றார்கள் கோரசாக. 

                                                                                                                                                              

குகனுக்கு தெரிந்த ஒரு நண்பன் , விஷ்ணுவுக்கும் நண்பன்,அவன் மூலமாக ,  விஷ்ணுவை அன்று இரவு ,   'குஸ்பூ wines' வரவழைத்தார்கள் , ரம்யாவின் நண்பர்கள். விஷ்ணு அடித்த beer இல் , சின்னி , போதை மாத்திரை போட்டு வைக்க, அதை குடித்த விஷ்ணு இல்லாத கெட்ட ஆட்டம் போடத் தொடங்கினான். அதை ஒன்று விடாமல் குகன் செல் போனில்  படம் பிடித்துக் கொண்டான்.

மறு நாள், பரசுராம் , நண்பர்கள் நால்வரிடமும் அப்பா அவர் நண்பரிடம் போனில் பேசியதையும் ,"அவர் ரம்யாவுக்கு என்ன தொல்லை வேணா கொடுக்கலாம்,எனக்கு பயமா இருக்கு ,ஒரு வேளை ரம்யாவ காலஜ விட்டே தூக்கினாலும் கூட ஆச்சர்யப் படுரதுகில்ல"  என்று நடுக்கத்துடன்  விவரித்தான். சிறிது நேரம் யோசித்த சரவணன், 'பேசாம நான் சொல்றத கேளு, நீ நாளிக்கு காலையில , ரம்யாவ  கூட்டிட்டு போயி ,கல்யாணம் செய். இது தான் பிளான் , நாளைக்கு காலையில் பரசுராம் வீட்டுக்கு குகன் ,சின்னி நீங்க ரெண்டு பெரும்  குக னோட சித்தப்பா கார்ல போய் கூட்டிட்டு வாங்க , நானும் , என் பிரண்டு சைலஜாவும் , ரம்யாவ கூட்டிட்டு  வர்றோம் '  என்று எல்லா சினிமாவில் வரும் அரதப் பழசான ஐடீயாவைச் சொன்னான். மற்ற நண்பர்கள் அதை ஆமோதித்தனர். அதை அவர்களுக்கு தெரியாமல் ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தான் விஷ்ணு.

விஷ்ணு, உடனே ,  எஸ்.பி.கோகுல்கு போன் செய்து விசயத்தை சொல்ல ஆரம்பித்தான். கூடவே , குகனின் சித்தப்பா வீடு தன்னோட வீட்டுக்கு பக்கத்தில் இருப்பதயும் ,அந்த காரின் எண்ணை ,சிறிது நேரம் கழித்து SMS  இல் அனுப்புவதாகவும் கூறி போனை வைத்தான்.


                                                                                                                                                          

விஷ்ணு போனில் போட்டுக் கொடுத்த விஷயம்,  குகனுக்கு அவன் நண்பன் மூலமாக தெரியவும் , அவனும் ,சின்னியும்,அவனை காலேஜ் விடுதியில் வைத்து பிடித்து நோண்ட ஆரம்பிக்க, 'உங்கட்ட ஏன் சொல்லணும்' என்று அவன் போக்கு காட்டத் தொடங்கினான். சின்னி குகனின் போனில் இருந்த விஷ்ணுவின் குத்தாட்டத்தை காட்டி, எஸ்.பி யிடம் காட்டப்போவதாக மிரட்டவும், வேறு வழியில்லாமல், தான் கார் எண்ணை இன்னும் SMS செய்யவில்லை என்பதையும் சொல்லி விட்டான்.

குகன் , அவனை தப்பான கார் எண் அனுப்பச் சொல்ல ,விஷ்ணு கீழ் வரும் மெசேஜ்-ஐ அனுப்பினான்:
  
  Mr. கோகுல்,
  SW 62HF - இதுதான் குறியீடு.

  -விஷ்ணு

சரவணன்,குகனுக்கு நிலவரத்தை அறிய  கூப்பிட, அவன் , விஷ்ணு மாட்டிக் கொண்டதை கூறி ,நான் பரசுவுக்கு மெசேஜ் அனுப்பி விடுகிறேன்,கவலை வேண்டாம் என்றான். பின் , குகன், விஷ்ணுவின் போன்-ல் இருந்து ,கீழ் வரும் SMS -ஐ அனுப்புமாறு கூறி,விஷ்ணுவும் அனுப்பி வைத்தான்,அது
:

Sir,


எஸ்.பி ,கோகுலிடம் நான் தவறான குறியீடைதான் கொடுத்திருக்கிறேன் .

கவலை வேண்டாம்."

-விஷ்ணு


அதற்கு பிறகு ,குகனும் , சின்னியும் , விஷ்ணுவை , ஒரு ரூமில அடைத்து வைத்தார்கள்.அவனிடம் இருந்த செல்போனையும் பிடுங்கி வைத்து கொண்டார்கள்.

_______________________________________________________________________

விஷ்ணுவின்  மெசேஜ் -ஐ பார்த்த எஸ்.பி , கோபால் , தனக்கு தெரிந்த போலீஸ் SI  க்கு போனில் தகவல் கூற , அவர் கவலை வேண்டாம் , அவர்களை காருடன் கையும் களவுமாக பிடிக்கலாம் என்று சொல்லி விட்டார்.

போலிசார் தப்பான எண் கொண்ட காரை தேடிக் கொண்டிருக்க, அவர்கள் கண்ணில் மண்ணை தூவி விட்டு, குகனும்,சின்னியும் ,ஒரு வழியாக அந்த கோவிலுக்கு பரசுராமுடன் வந்து சேர்ந்தார்கள்.

நேரம் விரைவாக ஓடத் தொடங்கியது , ஆனால் ,சரவணனும் , ரம்யாவும் வந்தபாடில்லை. அய்யர் காத்திருந்து விட்டு , மணி பண்ணி ரெண்டாச்சு ,நல்ல நேரம் முடிஞ்சாச்சு,எனக்கு வேற appointment இருக்கு  என்று இடத்தை காலி செய்து கொண்டு போய் விட்டார்.

 அந்த மூவரும் எங்கு தேடியும் , சரவணனையும் ,ரம்யாவையும்  கண்டு பிடிக்க முடியவில்லை. வேறு வழியில்லாமல் , எஸ்.பி கோகுலிடம் சொல்ல , அவர்களை அழைத்து கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்றார் அவர்.


அவர்களுக்கு வந்த SMS களை, அங்கிருந்த SI , கம்ப்யூட்டர் மூலமாக பிரிண்ட் அவுட் எடுத்து , ரெகார்ட் ல வக்கணும் , என்று பொறுமையாக scale வைத்து கிழித்துக் கொண்டிருந்த பொழுது ,  எஸ்.பி.கோகுலின் போனுக்கு ,
விஷ்ணு விடம் இருந்து ஒரு அழைப்பு வந்தது.

SI -ஐ அதை அட்டென்ட் செய்ய, விஷ்ணு அவசரமாக,
"சார் ,இப்ப தான் தப்பிச்சேன் , உங்க வீட்டுல வந்து விசயத்த சொல்லலாம்னு போனப்ப,அங்க சரவணனும் , ரம்யாவும்  , உங்க வீடு வேலைகாரன்ட்ட ஏதோ லெட்டர் கொடுத்திட்டு அவசரமா போய்ட்டாங்க"
என்று சொல்லி முடித்தான்.

எல்லோரும் விரைவாக ,  எஸ்.பி கோகுல் வீட்டிற்கு போய் ,அந்த கடிதத்தை படித்தார்கள். அதில்:

அன்பில்லா பரசுராமுக்கு,

நம் காதல் பிரச்சினை ஆரம்பித்தவுடன் ,நீ ஒரு கோழை போல்,எங்க அப்பா வ நெனச்சா பயமா இருக்கு என்று அதனை தடுக்க , நீயாக எந்த
முயற்சியும் செய்யவில்லை. இந்த விசயத்தில் சரவணன் எடுத்த அக்கறை எனக்கு பிடித்திருந்தது. உன்னை திருமணம் செய்து ,உன் அப்பாவிற்கு நான் இரண்டாவது அடிமையாய் இருப்பதை விட, சரவணன் உடன் வாழ்வதே
என் எதிர் காலத்துக்கு நல்லது,நாங்கள் இந்த ஊரை விட்டே போகிறோம் ,தயவு செய்து எங்களை தேட வேண்டாம்" .


உன் முன்னாள் காதலி,
ரம்யா.


பரசுராம் ஒரு மூலையில் உக்காந்து அழத் தொடங்க, எஸ்.பி.கோகுல் , "கவலை படாத , நான் உனக்கு நல்ல பொண்ணு பாக்கிறேன்" என்று ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார். குகனும் , சின்னியும் , அழுவதா ,சிரிப்பதா என்று தெரியாமல் ,தலையில் அடித்துக் கொண்டே சேர்ந்து பாடினார்கள் :

"பெண் மனசு ஆழமின்னு , ஆம்பிளைக்கு தெரியும் ..."

டிஸ்கி ௦: சுத்த அபத்தம் ,இப்படி நடக்க சான்ஸ் இல்ல எனும் கலாசார காவலர்கள் , இந்த லிங்க் கொஞ்சம் படிக்கவும். இக்காலத்தில் இது வெகு சகஜம் என்று செய்திதாள்களில் வரும் செய்திகள் கட்டியம்
கூறுகின்றன.



டிஸ்கி 1:  இந்த பதிவில் வரும் பெயர்கள் ,நிகழ்ச்சிகள் ஒரு கற்பனையே.
                  உங்கள் பெயர் இதில் இருந்தால் , அது எல்லாம் வல்ல அந்த         இறைவனின் விளையாட்டு என்று எண்ணி ,உவகை கொண்டு , இன்புற்று இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

டிஸ்கி 2 : அன்பு நண்பர்களே , நான் மூன்றாவது கதை எழுதி அனுப்பவா வேண்டாமா என்று ,தயவு செய்து ,பின்னூட்டத்தில் சொல்க. ஏன் எனில் , எனக்கு 'வன்முறையில்'  எப்போதும் நம்பிக்கை இல்லை.


டிஸ்கி 3: இன்னும் என்ன யோசிகிறீங்க ,மொதல்ல ஓட்டப் போட்டுட்டு ,அப்புறம் யோசனை பண்ணுங்க மக்களே!










5 comments:

  1. அமெச்சூர் விவரணைகள், தப்பும் தவறுமான வார்த்தைப்பிரயோகங்கள், எந்தப் பெயரும் மனதில் நிற்கவில்லை...

    என்னளவில் இது ஒரு கதையே இல்லை...

    மன்னிக்கவும்... மனதில் தோன்றியதை அப்படியே சொல்லியிருக்கிறேன்.. நிறைய படியுங்கள்.... பிறகு கதை முயற்சிகளைத் தொடருங்கள்... வாழ்த்துகள்

    ReplyDelete
  2. @சுந்தர் (காங்கோ)
    மிக்க நன்றி.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. பயப்படாம அடுத்த கதைய எழுதுங்க பாஸ் :))))))))

    ReplyDelete
  5. @கோமாளி செல்வா

    சொல்ட்டீங்கள்ள , பயங் குடுத்திருவோம்.

    ReplyDelete

படித்தது பிடித்தால் நண்பர்களுக்கு என் பதிவை, மறக்காமல் ,மறக்காமல் அறிமுக படுத்துங்கள்,அப்படியே ,எனக்கும் உங்கள் முத்தை உதிர்த்து விட்டு சென்றால் நானும் பதிவுலகில் பணக்காரன் ஆவேன் உங்கள் தயவில் :-)