Tuesday, September 27, 2011

போடா டுபுக்கு - ஒரிய படம் எந்திரன் வசூலை மிஞ்சும்

அந்த சிறிய டவுனில் , ரெண்டு நண்பேங்க. ஒருத்தன் பேரு பீபீ , இன்னொருத்தன் டும்டும். இப்படி ஒரு பேராண்றீன்களா ,  பேர்ல என்னங்க இருக்கு ,நம்மக்கு மேட்டர் தான முக்கியம்.

பீபீ  கொஞ்சம் விவரமான ஆளு , ஏன்ன, வாரத்துக்கு ஒரு தரம் , இணையத்த மேஞ்சு , எல்லா பிரபல பதிவுங்களும் படிச்சு ,உலக ஞானம் எப்பவும் மண்டேல இருந்து வழியுரமாதிரி நெனப்புல தான் பேசுவான்.  ஆனா  மத்தவங்க அவனுக்கு வச்ச பட்டப்பேரு 'ஆயில்'  , அவன் மண்டல வச்ச ஒரு லிட்டர் வேப்பெண்ண எப்பவும் அவன் மூஞ்சில வழிஞ்சிகிடே இருகிரதுனால.

டும்டும் ஒரு அப்பாவி , பீபீ மேல அவனுக்கு ரொம்ப மருவாத , அவன் என்ன சொன்னாலும் அப்படியே நம்புபவன். ஒரு நாள், வழக்கம் போல , அவிங்க ரெண்டு  பேரும், ஆதங்கரயில , பொழுது சாய உக்காந்து தண்ணி அடிசிகிடே பேச ஆரம்பிச்சாங்க.

பீபீ , வழக்கம் போல , பதிவுல படிச்ச மேட்டர்லாம் ஒன்னு விடாம வாந்தி எடுத்தான்.  டும்டும் அவன் பேச்ச ,கண்ண விரிச்சி ஆச்சர்யமா பாத்துகிட்டே கேட்டான். பேச்சு அப்படியே ,சினிமா பத்தி திரும்பியது.

"ஒனக்கு தெரியுமா , சில தமிழ் படங்கள் , கொரிய படத்தின்  அப்பட்டமான காபின்னு  சொல்லி ஓட விடாம செய்ற அளவுக்கு பவர்புள்ளு இந்த பதிவுலகம் " அப்படின்னு போட்டு தாக்குனாப்ல பீபீ.

"அப்படியா , படத்த பத்தி கூட எழுதுவாங்களா ,படக் கதைய அப்படியே போட்ட்ருவாங்கள ,அப்ப அத வச்சி நாம போலாமா , வேண்டாமானு முடிவு பண்ணலாம்ல "  னு ஆர்வமா கேட்டான் டும்டும்.

"ஆமா ,ஆமா ,அதுமட்டுமிலடா , எங்க எங்க , மாண்டேசு  வருது , எங்க கிரேன் சாட் வச்சாங்க , எங்க ஆக்சன் புளாக்கு வருது ,எங்க டிராலி சாட் வச்சாங்க , எந்த காமராவ வச்சு படம் புடிச்சாயங்க,காட்சி  லோ ஆங்கிலா ,ஹை ஆங்கிலா அப்பிடின்னு , நமக்கு வெளிலவே தெரியாத சங்கதி எல்லாம் இருக்கும்டா. நால பின்ன நாம சினிமா படம் புடிகுனுமின்ன , இதெல்லாம் நமக்கு நல்லா ஊசு பண்ணிகலாம் . அப்புறம் தமிழ் மட்டுமிலாம ,ஹிந்தி ,தெலுகு ,கன்னடம் ,மலையாளம் அப்படின்னு ஒன்னு விடாம எல்லாப் படத்துக்கும் விமர்சனம் எழுதுவாங்க . " - பீபீ அடிகிக் கொண்டே போயிட்டிருந்தான்.

"சரிடா , வீட்கு  வெரசாபுல வந்திடுன்னு என் பொண்டாட்டி காலேல கெழம்புரப்பவே சொல்லிவிட்டா , நான் இப்ப போல ,என்னை பொடனிலையே ஏறி மிதிப்பா " நான் போறேண்டா ன்னு ஓடினான் டும்டும். 

வீட்டிற்கு வந்த டும்டும் வுக்கு , மனசு பூரா பதிவு சினிமா விமர்சனம் இதபத்தியே நெனப்பு ஓட ஆரம்பிச்சுருச்சு . நாடு ராத்திரி ஒரு மணிக்கு , அப்படியே எந்திரிச்சு உக்காந்தான், அவன் மூஞ்சில ஒரு சிரிப்பு. 

"கொரிய படத்த , தமிழா எடுத்து அதுக்கப்புறம் தானே , விமர்சனம் எழுதுராயுங்க ,நாம நேர கொரிய படத்துக்கு விமர்சனம் எழுதுவோம் "  ஒரு ஐடியா புடிச்ச நெம்மதில தூங்க ஆரம்பிச்சான். 

மறு நாள் , அந்த ஊர்ல இருந்த கேசட்டு கடைக்கு போயி ,
"அண்ணே நீங்க உலகப் பட கேசட்டு வசுரீன்கீன்களா ?" கேட்டான் டும்டும்.
கடைகாரர் ஒரு மாதிரியா முழிச்சுட்டு ,
"இருக்கு தம்பி , ஆனா காசு கொஞ்சம் கூட கொடுக்கணும் சரியா " ன்னாரு .
"ஆட்டும்னே,காமிங்க தரேன் ".
ஒரு பலான படத்தை கொடுத்தார் கடைகாரர்.
"என்னனே, இத கொடுக்றீங்க ".
"இதாம்ப நீ கேட்ட ஒலக படம்".
"போங்கண்ணே உங்களுக்கு நான் கேக்குறது பிரியல ".
கடைகாரர் கோபமாகி , "டேய் மரு வாதைய  ஓடி போயிரு ,இல்ல துமக்குண்டு அருவாளில ஒரே வெட்டு".

"ச்சே நம்ம பதிவு ஆசைய்லே மண்ணெ போட்டாங்களே,நாசமா போரவீங்க ,இப்ப   என்ன பண்ணலாம் " னுட்டு , பலமா ஓசிச்ச டும்டும் , டக்குன்னு 'மதுர' கு வண்டி ஏறிட்டான்.
பஸ் ஸ்டாண்ட்ல வித்த , பலா பலத்த வாங்கி சாப்டுகிட்டே, பசார்ல நடக்க ஆரம்பிக்க , கண்ல பட்டுச்சு, 'இன்டர்நெட் ப்ரொவ்சிங் செனட்டர்'. பீபீ இந்த மாதிரி எடத்துல வந்து தான , விமர்சனம் படிக்குறான் , நாமலும் போவமின்னு உள்ள போனான். 

அங்கே சில இளசுகள் பலான படம் நெட்டில் மேய்ந்து கொண்டிருந்தார்கள். 
'என்னனே படம் லா வருது ?' கேட்டான் டும்டும் . 
ஆமாம் நீங்க சினிமா படம் கூட பாக்கலாம் " சொன்னது சென்டர் ஆளு.
"சரி தமிழ் ப் படம் இருக்கா " னு கேக்க , "இந்த கூகிள் போயி இப்படி தேடு " ன்னு அவனுக்கு ட்ரைனிங் கொடுத்தாரு சென்டர் பய்யன்.

சிறிது சிறிதா அவனுக்கு வெசயம் விளங்க , கூகுளில் ஒரு ஒரியத் திரைபடத்தை பாத்து முடித்தான். மரு வாரம் , மீண்டும் அதே சென்டர் வந்து , பிளாக் எழுவது எப்படின்னு கத்துகிட்டான் .  உடனே சூடாக , ஒரு விமர்சனம் எழுத ஆரம்பித்தான்.
ஓலிவூடின், அட்டகாசமான டயிரடக்கரு 'அசோக் படேலு' , அவர் இளம கால சேட்டைகளை அட்டகாசமா சொல்ற படம் இது.  கீரோ, சர்ருன்னு பைக்ல பறந்து , ரவுடிய அடிச்சு , கீரோயன் ட்ட , தன் காதல சொல்ர எடத்துல வரிசையா வர்ற மாண்டசு காட்சீங்க , உங்கள் மனச கிள்ளும் ,  கிரோயின் குளிக்ரப்ப , ஹை ஆங்கிலில காமரவ வச்சு , கீரோயன் 'இளமய' ஒன்னு விடாம காட்றாரு பாருங்க
அங்க தான் நிக்கிறாரு டயிரடக்கரு. கீரோயன் 'இளம' குஸ்புவ விட ***** இருக்குங்க. 

கீரோ ஒரு குட்சையில வாழுற ஏழை. கீரோயன் அந்த ஊரு MLA வோட தங்கச்சி.
அவங்களுக்குள்ள எப்படி காதல் வருது துன்னு டயிரடக்கரு தன் தெரமய எல்லாம் காட்டி , உங்கள எப்படி வசபடுதுராருன்னு தியேட்டர்ல போயி பாருங்க.
உங்க வவுத்துல அல்சர் புன்னு வர்றதுக்கு நான் காரண்டி.

"யே ,'அத' தொறந்து காட்டு" ன்னு கீரோ அதட்ட ,
டக்குன்னு ,"அவள் கைபைய தொறந்து அதுல இருகுரதேல்லாம் "
கிரோயன் வெளிய எடுத்துப் போட, "தான் வச்சுருந்த சிவிங்கி அதுல
இருகிரதப் பாத்து ,  அது என்று தன் தலை முடிய தடவுறாரு. அப்ப, அவரு
முடி அப்படியே ணீட்டமா வளர்றத கிராபிக்ஸ்ல போட்ட்ருக்காயங்க பாருங்க , சங்கரு படத்துல கூட அந்த மாதிரி கிராபிக்ஸ் வர இன்னும் பத்து வருஷம் ஆகும் பாருங்க.
கூடலி ராத் ஓட மூஸிக்கு, அட அட அட , கொன்னுடாறு போங்க. "ஓரன்னொன்னு ,ஈ ரெண்ட ரெண்டு " பாட்டுல போட்டுருப்பரு பாருங்க ஒரு கொட்டு சத்தம்,சும்மா  நங்குன்னு வந்து விழுகுது.

இங்கிட்டு அன்கிட்டுன்னு பல லாசிக்கு மிச்டக்கு இருந்தா கூட ,
படம் அட நம்ம சின்னபிலேல செஞ்சதெல்லாம் அப்படியே வருதேன்னு 
அட போட வக்கிது.

143  - இளமல வெளாண்ட சாட் பூட் த்ரீ.


டிஸ்கி :  கொரியாவ , நம்ம பய புள்ள , மப்புல ஒரியானு கேட்டு டாங்க.

டிஸ்கி :  தமிழ், தெலுகு , மலயாளம் ,கன்னடம் ,ஹிந்தி மட்டுமில்லாம , ஒரிய ,போஜ்புரி இன்னும் இந்தியாவுல இருக்கிற அனைத்து படங்களின் விமர்சனத்தையும் பிரபல விமர்சன பதிவர்கள் எழுதி ,'தேசிய ஒருமை பாட்டை' காக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.


அப்புறம் முக்கியமா ஒரு கார்டு போடணும்:

"இந்த பதிவில் வரும் சம்பவங்கள் ஒரு நகைச்சுவை கற்பனையே.
 எந்த பதிவரையும் குறிப்பிட்டு அல்ல. அப்படி தோணினால் ,அது
 ஒரு தற்செயலாக அமைந்தது என்பதை அன்புடன் சொல்லிக் கொள்கிறேன்.
  வணக்கம்."8 comments:

 1. நல்ல எழுத்து நடை
  அருமையாக நகைச்சுவையாக எழுதியுள்ளீர்கள்

  ReplyDelete
 2. @மதுரன்,
  வாங்க, வருகைக்கும் ,விரைவான கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 3. ஹா...ஹா...நல்லா குத்தறீங்க தல.

  ReplyDelete
 4. நகைச்சுவை எழுத்துக்களில் எனக்கு திராத தாகம் உண்டு அந்தப்பட்டியலில் இப்போதும் நீங்களும்.

  ReplyDelete
 5. மாப்ள உங்க கலாய்ச்சல் சூப்பர் ஹிஹி! என்னைக்கு இந்த பட மேட்டர கண்டு புடிசாங்களோ...அன்னையில இருந்து இந்த கடைசி டிஸ்கியும் வருது ஹிஹி!

  ReplyDelete
 6. @சி.பி.செந்தில்குமார்
  உங்களுக்கு தெரியாததா, பதிவுலகில இதெல்லாம் சகஜம் பாசு

  @Jana,
  நன்றி, நானும் உங்கள மாதிரி தான்

  @விக்கியுலகம்
  நன்றி மாப்பிள

  ReplyDelete
 7. நல்ல பொழுதுபோக்கான பதிவு. ஆனா இன்னும் கொஞ்சம் தெளிவா எழுதி இருக்கலாம். வாழ்த்துக்கள்--
  இப்படிக்கு
  வெட்டி ஆபிசர்.
  தலைவர்
  அகில உலக அல்வா நாயகி ரசிகர் மன்றம்.

  ReplyDelete
 8. @வெட்டி ஆபிசர்

  வாங்க பாசு , கொஞ்சம் தேனி,மதுரை வட்டாரத்துல ஒரு ட்ரிப் அடிங்க.

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete

படித்தது பிடித்தால் நண்பர்களுக்கு என் பதிவை, மறக்காமல் ,மறக்காமல் அறிமுக படுத்துங்கள்,அப்படியே ,எனக்கும் உங்கள் முத்தை உதிர்த்து விட்டு சென்றால் நானும் பதிவுலகில் பணக்காரன் ஆவேன் உங்கள் தயவில் :-)