கொஞ்சம் பூசின தேகம், வட்ட முகம் , அரும்பு மீசை, குறும்பு பார்வை - இந்த மாதிரி ஒரு நண்பன் உண்டு எங்கள் ஆபீசு நண்பர் குழுவில். ஆள் நல்ல இருந்தாலும் ,பாவம் பாருங்க ரொம்ப நாளா கல்யாணம் ஆகாம இருந்துச்சு. என்னனு கேட்குறீங்களா, பாவம் செவ்வா தோஷம். "மாப்ள எனக்கெல்லாம் கல்யாணம் ஆகுமாடா" ன்னு புலம்பிடுருப்பான்.
அப்படி இப்படி அலைஞ்சு , திரிஞ்சு , ஒரு வழியா கல்யாணத்த முடிச்சு வச்சாயிங்க. பையன் ரெண்டு வாரத்திற்குப்பரம் மெல்ல ஆபிசு பக்கம் தலை காட்டினான். "என்னடா பேச வேண்டியதெல்லாம் பேசி, பாக்க வேண்டியதெல்லாம் பாத்து, செய்ய வேண்டியதெல்லாம் செஞ்சியா? எப்படிடா இருந்துச்சு? " அப்படின்னு லந்த ஆரம்பிச்சோம்.
அப்ப அவன் தலைய லேசா சாச்சி ,வாய ஒரு கோணால கொண்டு போயி , "கேண பாதி , லூசு பாதி ரெண்டும் செஞ்ச கலவை நான்னு " - சில பல படங்கள்ல , நம்ம சூரிய தம்பி , சிறுத்தை கார்த்தி சிரிக்கிற மாதிரி சிரிச்சு , ஒரு லுக் விட்டான். அதோடு விட்டானா பாவி பய , சத்தம் போட்டு பாட ஆரம்பிட்சிடான், அவன் பாடினது :
"அடடா பிரமன் புத்திசாலி,
அவனை விட நான் அதிர்ஷ்டசாலி"
அட கொங்கமக்க, அமுத்துடா உன் ரேடியோவை, இல்லேன பாத்ரூம் போன நம்ம டேமேஞ்சரூ ,பாதியிலேயே வந்த்ருப்போராடுடான்னு , பாஞ்சு அவன் வாய மூடினோம். அப்புறம் கொஞ்ச நாளா மந்திரிச்சி விட்ட மாககானட்டம் பய திரிஞ்சி கிடுர்ந்தாப்ல.
"எல்லாம் கொஞ்சம் நாளிக்கு தாண்டி மாப்ள ",அவன லந்து கொடுத்து கிட்டிறேந்தும்.
ஒரு ரெண்டு மூணு மாசதுகப்புரம் , பய , தலைல பிளஸ்த்ரியோட வந்தாப்ல.
"என்ன மாப்பு வட்சுடான்களா ஆப்பு ?" ன்னு கேட்டோம் . அந்த சோக கதைய ஏன்டா கேட்குரீங்க,லஞ்ச் ஹௌர்ல சொல்றேன்னு சொல்லிட்டு போயிட்டான்.
லன்ச்ல அவன் சொன்னது இது தாங்க :
என் பொண்டாட்டி எங்கிட்ட வந்து,"ஏங்க டின்னருக்கு என்ன பண்ணடுமுன்னு?" கேட்டா.
நான் , "உனக்கு பிடிச்சத பண்ணுமா".
"இப்படி சொன்ன எப்படி , என்ன வேணுமுன்னு சொல்லுங்க"
"சரி, எனக்கு பூரி ,மசாலா சாப்பிட ஆசையா இருக்கு ,அத பண்ணலாமா?"
"பூரி எல்லாம் , தேச்சு போட,ரொம்ப நேரம் ஆகும், நான் தோச போடுறேன்"
"சரி ,போடு"
கொஞ்சம் நேரம் அங்கிட்டு போயிட்டு திரும்ப வந்தா, "ஏங்க , நான் பூரி யே போடுறேன், ஆனால் நீங்க தான் , வெங்காயம் ,தக்காளி கட் பண்ணனும் , நான் மாவ உருடுறேன்நு" சொன்னா.
அப்ப தான் சனி என் நாக்குல வந்து குத்தாட்டம் போட வந்துருச்சு போல,நான் சும்மா இருக்காம, "ஏமா ,அந்த எபெம் ரேடியோவ போடு ,எனக்கு பாட்டு கேட்டா தான் வேல ஓடும் " அப்படின்னு சொன்னேன். அவளும் அத போட்டா. அப்ப அதுல ஒரு பாட்டு. நல்ல கேட்சியான பாட்டு. நானும் உற்சாகிதுல, அத கொஞ்சம் அவள பாத்து ஆக்சன் பண்ணி,முத வரிய மட்டும் அழுத்தி பாடி தொலச்சிட்டேன். உடனே அவளுக்கு கோபம் வந்து , பூரி கட்டைல ஓங்கி முன் மண்டைல போட்டுடாட.
அப்படி என்ன பாட்டுடா அந்த ரேடியோல வந்துச்சுநு உங்கள மாதிரியே நாங்களும் ஆர்வமா கேட்டோம் :
இது தான் அந்த பாட்டாம்:
"பெத்தவங்க பாத்து வச்ச பொண்ண எனக்கு பிடிக்கல"
பாத்து ரசிங்க:

டிஸ்கி : அந்த நண்பன் பேரு கார்த்திகேயன் ,சர் தானுங்களா.
ஆஹா........ செம காமெடிங்க......
ReplyDeleteகலக்கல் தொடரட்டும் ...
ReplyDeleteவாழ்த்துக்கள்
யானைக்குட்டி
கலக்கல் தொடரட்டும் ...
ReplyDeleteவாழ்த்துக்கள்
யானைக்குட்டி
பின்னூட்டத்துக்கு நன்றி உங்கள் அனைவருக்கும் .
ReplyDeleteஉணவுமதி உங்களுக்கு ஸ்பெஷல் நன்றி தமிழ்மணத்தில் போட்டதுக்கு.