Sunday, October 9, 2011

இவர்கள் மனிதர்களா?

அன்று ஒரு நாள் , அலுவலக வேலைகளை முடித்து விட்டு, வீட்டிற்கு திரும்புவதற்காக ,பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்து நின்ற ஒரு பஸ் நிறுத்தத்தில் இருந்து இறங்கினார் அந்த பெண்மணி. நல்ல டீசன்டான உடையில் , பார்த்தாலே தெரிந்தது ,வேலைக்கு போய்விட்டு திரும்புகிறார் என்று.

அவருக்கு எப்படியும்  முப்பதுக்கு மேல் வயதிருக்கும். அவர் வீடு கொஞ்சம் தொலைவில் உள்ளது போலும். அவர் விறு விர்வென்று நடக்கத் தொடங்கினார்.
அவர் நடந்து செல்லும் பாதை அருகில் , ஒரு கழிவு நீர் செல்லும் சாக்கடை இருந்தது, கொஞ்சம் ஆழமான பள்ளம். அவர் அதனை நோக்கி போகத் தொடங்கினார். ஐயோ விழபோகிறார் என்று நான் நினைக்கும் பொழுதே ,நல்லவேளையாக அங்கிருந்த , தடுப்பை உணர்ந்து ,மீண்டும் சரியான பாதையில் செல்லத் தொடங்கினார்.அடுத்து அவர் செய்தது , ஒரு நாள் முனை சந்திப்பு ,இங்கும் அங்கும் சீறிப் பாயும் வாகனங்கள் , அது ஒரு நீளமான ஜங்ஷன் ,அவர் வால்க்கர் சைன் போட்டதும் , விறு விறுவென்று ,அதனை கிராஸ் செய்யத் தொடங்கினார். 

டே இதுல என்னடா ஆச்சர்யம் என்கிறீர்களா , அவர் ஒரு கண் தெரியாத பெண்மணி. ஆனால்,வெறும் ஒரு குச்சியுடன் , அவ்வப்போது தடுமாறினாலும் ,
நிமிர்ந்த நடையுடன் அவர் நடந்து சென்றதும் என் மனதில் பல கேள்விகள் ஓடின.

டெய்லி அதே ஆபீஸ், போறது ,வரதுன்னு எவ்வளவு அலைச்சல். நாமும் ஒரு கோடிஸ்வரனா இருந்த , பேசாம வீட்ல உக்காந்து சாப்பிடலாம். இப்படி பஸ் ,ட்ராபிக் நு ஒரே இம்சைப்பா,என்று நம்மக்கு எல்லாம் இருந்தும் ,அது இல்ல ,இது இல்ல என்று குறை பட்டுக்கொள்கிறோம். ஆனால் இவர்கள் எப்படி , ஒரு பெரிய குறை இருந்தும் , தன்னம்பிக்கையுடன் செயல்படுகிறார்கள்.

பாவம், இப்படி கண் தெரியாதவங்கள ,ஆபீஸ் அனுப்புறாங்க ,ஆனா அட்லீஸ்ட் ,யாராவது பஸ் நிலையம் வந்து காத்திருந்து அலைசுகிட்டு போலாமே என்றும் ஒரு கேள்வி.

அப்புறம், நாம குருடு தான , நம்மள யார் பாத்து என்ன சொன்னா என்ன , என்றில்லாமல் ,அவர்கள் ஜீன்ஸ் ,டீசர்ட் என்று மிக நேர்த்தியாக உடை உடுத்தி செல்வதை பார்த்தபொழுது, காமா சோமா என்று உடை உடுத்தும் என்னையே பிடிக்கவில்லை.

மற்றொரு நாள், தொலைக் காட்சியில் ,அந்த மனிதனை பற்றி காண்பித்தார்கள்.
நல்ல செங்குத்தான பாறையில், ஒரு கை தேர்ந்த வல்லுனரை போல் ,அவர் மலை ஏறத் தொடங்கினார். பின்னர் தான் தெரிந்தது அவரும் ஒரு பார்வையற்றவரே.

இதில் அதிசயம் என்னவென்றால், அவர் நாக்கின் மூலமாக , சயின்ஸ் கண்டுபிடிப்புடன் ஏறியதே. அந்த சயின்ஸ் கண்டுபிடிப்பு இருக்குல்ல ,அப்புறம் என்ன ,என்று சாதாரணமாக நினைக்காதீர்கள்.  

ஒரு விஷயம் சொல்கிறேன் ,கேளுங்கள் / படியுங்கள். நான் பெங்களூருவில் உள்ள அந்த மிகப் பெரிய நிறுவனத்தில் சேர்ந்த புதிது , அப்படி புதிதாக சேர்ந்தவர்களுக்கு ,கம்பனியின் கோர் வேல்யூஸ் கற்றுக் கொடுப்பதற்காக ,
ஒரு இரண்டு நாள் , ஒரு ரிசார்ட் ல் , பல வேடிக்கை ,விளையாட்டுக்கள் மூலம் 
எங்களை ஈடு படுத்திக் கொண்டிருந்தார்கள். சும்மா சொல்லக் கூடாது ,
ரெண்டும் நாளும் , நல்ல சாப்பாடு , செம கட்டு , கட்னோம். அந்த விளையாட்டின் ஒரு அங்கமாக ,  Rappelling  என்று கூப்பிட்டு போனார்கள்.

அதுக்கு முன்னால் அப்படி என்றால் என்ன அர்த்தம் என்றே தெரியாது. நாங்கள் சென்ற வாகனம் , பல கல் குவாரிகளை கடந்து சென்றது. நம்ம தெலுகு படத்துல காமிப்பான்களே அது மாதிரி. 

ஒரு ஆர்வத்துடன் ,கரடு , முரடான பாதையில் அழைத்து சென்றது வண்டி.குண்டும் குழியுமாக இருந்த ரோட்டில் ,தூக்கி யடித்து ,உடம்பெல்லாம் வலி எடுக்க ஆரம்பித்தது.

எப்படா வரும் என்று மனம் நோக ஆரம்பித்தபோது , ஒரு வழியாக ,அந்த சின்ன பாறை குன்றின் அருகில் வண்டி நின்றது. அங்கே , நல்ல தடிமனான , கயிட்ட்ருடன் காத்துக் கொண்டுர்ந்தார்கள் அவர்கள். 

இந்த பாறையின் மேல் கைற்றை பிடித்து ஏற வேண்டும் , அதுதான் Rappling என்றார்கள் .  அடங்கொக்க மக்கா, இது தான அது , இவ்ளோவு சின்ன மலையா 
இருக்கு , இது என்ன பிரமாதம் என்று, ஒரு சிலர் , ஏறிய பிறகு ,நானும் ஏற ஆரம்பித்தேன். ஆனால் அதன் உச்சியை அடைவதற்குள் நான் பட்ட பாடு.

இத்தனைக்கும் எனக்கு கண் நன்றாகத் தெரியும், இடுப்பை சுற்றி , சூப்பர் men ஜட்டி மாதிரி, கயிறினால் போடப்பட்ட ,அந்த சேப்டி ஹார்ர்நெஸ் ஜட்டி வேறு ,
என்னை தாங்கி பிடித்துள்ளது. மேல வேற ஒருத்தர் ,ரெடியாக ,நான் ஏறி வந்த கையிற்றை கெட்டியாக பிடித்து கொண்டுள்ளார் . எனவே, கீழ விழ , நூறு சதவீதம் சான்சு கெடையாது.  இருந்தும் ,நான் செத்து, பிழைத்து ஏறினேன்.

ஒரு வழியாக உச்சியை அடைந்தவுடன் , மறுபடியும் வந்த வழியே , இறங்க வேண்டும் என்றார்கள். அட சாமிகளா , இன்னும் இந்த கொடும முடியலையா,
சரவணா என்று, தட்டு தடுமாறி , இறங்கிவிட்டேன் .  ஏறுவதை விட ,இறங்குவதற்கு கொஞ்சம் பயமாகவே இருந்தது. ஏன்ன ,நான் கொஞ்சம் பல்க் பாடி பாருங்க.

கிரவுண்டை அடையும் பொழுது , நான் பட்ட கஷ்டத்திற்கு ஒத்தடம் கொடுப்பது போல் , காதில் விழுந்தது ,ஒரு சில கரவொலிகள் அங்கிருந்த ஏனைய ,அறிமுகம் இல்லாத என்னுடன் வந்திருந்த மற்ற பார்டீசிபண்ட்ஸ் -களிடமிருந்து .அதில் விஷேசம் என்னவென்றால் , ஒரு சில பிகர்களும் கைதட்டினார்கள்.(ஆம்பிளைங்க கை தட்டல் யார்க்கு வேணும்.)

இந்த மாதிரி கஷ்டம் உள்ள அந்த வீர விளையாட்டை , அதை விட ,உயரமான ,
செங்குத்தான பாறையில், இவர் செய்தது ,உண்மையிலேயே எனக்கு இன்றும் 
நம்பிக்கை கொடுக்கும் ஆச்சரியாமான விசயமே .

அவர் ஏறும் அந்த காணொளி ,இங்கே உள்ளது , அதனை காண 

இங்கே சுட்டவும்.****Video******


டிஸ்கி : ஏன் நெகடிவ் ஆக ,பதிவு தலைப்பு வைத்தேன் என்றால் , அப்படி வச்சா தான் , நம்ம ஆளுங்க , எட்டி பாக்குறாங்க. எல்லாம் தினசரி பத்திரிகைகள் , நம்மள , sensational news போடுறேன்னு சொல்லி அப்படி ஆக்கி வச்சுடாங்க, என்ன பண்றது.

4 comments:

  1. உண்மையில் இவர்கள் தன்நம்பிக்கையின் மறுவடிவம்

    ReplyDelete
  2. ரொம்பா ரசித்துப் படித்தேன்...

    ReplyDelete
  3. @K.s.s.Rajh
    ஆமாம் மிகச் சரியாக சொன்னீர்கள்! வரவுக்கு நன்றி!

    ReplyDelete
  4. @Mohamed Faaique
    நன்றி நண்பரே , மீண்டும் வருக!

    ReplyDelete

படித்தது பிடித்தால் நண்பர்களுக்கு என் பதிவை, மறக்காமல் ,மறக்காமல் அறிமுக படுத்துங்கள்,அப்படியே ,எனக்கும் உங்கள் முத்தை உதிர்த்து விட்டு சென்றால் நானும் பதிவுலகில் பணக்காரன் ஆவேன் உங்கள் தயவில் :-)