Thursday, October 13, 2011

ஏழாம் அறிவு , இப்ப Online ல் available

நல்ல செங்குத்தான மலை. அதன் உச்சியில் , சீன முறைப்படி அமைந்த ஒரு குரு குலம்.  சூர்யாவின் தோளில் ஒரு பெரிய குச்சி. அதன் இரு முனைகளிலும் , 
ஒரு பெரிய மர அண்டா. அதில் தழும்ப , தழும்ப , நீர் . குடி நீர் அல்ல. சோம பானம்.


அந்த செங்குத்தான மலையில் , கால் இஞ்சில் அமைந்த பல படிக்கட்டுகள் , தோராயமாக ஒரு முப்பதாயிரம் இருக்கும். சூர்யா அதை , நவீன கால OTIS லிப்டுகளை விட ,அதிவேகமாக ஏறி , அந்த கோவிலுக்குள் நுழைகிறார். 

அங்கே , பல சீன கன்னியர்கள் புடை சூழ  , சிம்மாசனத்தில் நான். என் முன்னால் வந்து ,  "ஹெவ் ஹாவ் ஹைச்சி , குங் பாவ் சிக்கன் முன்க்சி ,கண்க்க்சி போகா" என்று  என் காலை தொட்டு வணங்குகிறார் சூர்யா.

நான் மெதுவாக எழுந்து , அந்த சோம பானத்தை , லேசாக நாக்கில் வைத்து சுவைக்க , சீக்கிரம் புரிகிறது , அது போலி சரக்கென்று. " துஞ்சா  லஹி யஹூம ,யன்க்சி புங்க்சி சுகதுமா " என்று சொல்லி காலால் உதைக்கிறேன். 


"இல்லங்க அவர் கொண்டு வந்தது சுத்த சரக்கு தான் , நான் பல்லி,பாம்பு ,பூரான் போட்டு காச்சுறத பார்த்தேன்  , அப்புறம் அதுல இருந்து சூர்யா மோந்துட்டு வர்ரத , நான் என் கண்ணால பார்த்தேன் " என்று சுத்த தமிழிலில் சொல்கிறார்  அஜித்.

"ஆ, மாட்டிகிடீன்களா  ரெண்டு பேரும்"  என்றேன் நான். அவிங்க ரெண்டு பேரும் முழிக்க , "எங்கயா கரப்பான் பூச்சி ,அத போட்டா தான் யா 40%ஆல்கஹால் , ISO  ஸ்டாண்டர்ட் படி " , யாரங்கே , "இவிங்க ரெண்டு பேருக்கும் நூறு பிரம்படி பின்னாலேயே கொடுங்கடா" என்று நான் உத்தரவிட , வில்லச் சிரிப்புடன் விஜய் நுழைகிறார் .

கையில் வைத்திருந்த , எண்ணெயில் பல நாள் ஊறவைத்த மூங்கில் குச்சியால் வெளுத்துகிறார் விஜய் அவர்கள் இருவரின் பின் புறத்தையும்.
அந்த அதிர்ச்சியில் அவர்கள் மூர்ச்சையாகி மடிகின்றனர்.அடுத்த பிறவியில் , சூர்யா , ஒரு இளவரசன். ரஜினி அவரின் பெரியப்பா. ரஜினிக்கு ஒரு பெண் குழந்தை வேண்டுமென்று ஆசை. அவரின் தம்பி கமல். 
அவருக்கும் பெண் குழந்தை வேண்டும் என்று ஆசை. நான் அவர்கள் வீட்டு வேலைக்காரன். விஜய் , தந்தை ரஜினியின் ஒரே மகன். அஜித் ,தந்தை கமலின் இரண்டாவது மகன். விஜயும் ,அஜித்தும் , சூர்யாவும் -குரு குல வாசத்திற்கு படிக்க போகிறார்கள் .  அங்கே அவர்களுக்கு எழுத்துப் பயிற்சி , ஆனால், அவர்களுக்கு , என்ன செய்தும் , மலையாளம்  எழுத கற்றுக் கொடுக்க முடியவில்லை ,குரு நம்பியாரால். அதனை கேள்விப் பட்ட , மன்னன் ரஜினி, என்னை அழைத்து , அவர்களுக்கு ,தினமும் imposition கொடுத்து , train பண்ணச் சொல்கிறார் . நானோ ,அவர்கள் இருவருக்கும் , தப்பு தப்பாக மலையாளத்திற்கு பதில் தமிழ் சொல்லிதர ,அவர்கள் அதனையே follow செய்கிறார்கள். ஒரு நாள் , அரச சபையில் ,பாட்டு போட்டி நடக்க , விஜய் கேரளா  நாட்டில் தங்கி  இருந்து படித்துவிட்டு  வந்து,ஒரு பெரிய டாக்டர் இன் மலையாளம்  லிடரட் என்ற கித்தாப்புடன், செந்தமிழில் பாட , அஜித்தும் , சூர்யாவும் , "அவன் பாடினதுல ஏக பட்ட ஸ்பெல்லிங் மிஸ்டேக்,அது மலையாளம் அல்ல தமிழ் " என்று உண்மையைச் சொல்லி ,விஜயை அடிக்க ,விஜய் கோபத்தில் , அஜித்தை ஓங்கி இடுப்பில் உதைக்க ,அஜித் வலியுடன் ,"எண்ட அம்மே  என்று செத்து விழ, மன்னன் சூர்யா , விஜயை  கழுவில் ஏற்றி கொன்று விடுகிறார்கள். ரஜினி  "இதுக்கு தான் ஆம்பிளப் பிள்ளைங்க வேணாம்னு சொல்றது" என்று கண்ணில் வழிந்த கண்ணீரை , இரு கைகளால் கசக்கி அழ , கமல் , சூர்யாவை ,தன் கையில் இருந்த கோடாரியால் ஒரே போடு போட்டு விட்டு, சூர்யாவின் உடலை பார்த்து ,கோ வென்று மயில் போல் அகவி அழுகிறார். 

அதற்கு அடுத்த பிறவியில் , அதாங்க இப்ப , ரஜினி ,கமலுக்கு அவர்கள் ஆசைப் பட்ட படி , ரெண்டு ரெண்டு பெண் குழந்தைகள் . விஜய் ,அஜித் ,சூர்யா , பெரிய நடிகர்கள். நான் ப்ளாக் ரைட்டர். அஜித்துக்கு ஆகிச்டன்ட் ஆகி ,இடுப்பில் பயங்கர அடி . பின்னர் மருந்து மாத்திரைகளில் ஓரளவு குணமாகிறது.


என்னங்க ஒன்னும் புரியலையா. தல சுத்துதா. தெளிவா உங்களை குழப்பிட்டேனா ?.  எனக்கும் அப்படி தாங்க இருந்துச்சு , 
"கதையல்ல நிஜம்" அப்படின்னு விஜய் TV ப்ரோக்ராம் பாத்தப்ப .அதாங்க நடிகை லட்சுமி அவர்கள் நடத்துற டால்க் ஷோ.

ஒரு டாக்டர் , சில பேத்த , மனோ வசியம் மூலமா , என்னமோ Regression பண்ணி , அதாங்க ,அவங்க முன் ஜென்மத்தில இருந்தத அவங்களுக்கு உணர வச்சதா ,ரெண்டு மூணு பேரு வந்து சொன்னாங்க.

ஒரு மல்லு அம்மா ,முன் ஜென்மத்துல ,அவங்க அப்பா , இவளுக்கு பையனாம் , அப்ப இருந்த இவ பய்யன் , இப்ப இவ புருசனாம் ,அதுக்கும் முன் ஜன்மத்துல ,இந்த அம்மா ,ஒரு பேரரசராம் சீன நாட்டுல.என்னமா குடுக்றாங்க லிங்க் . பருவகாலம் , சரோஜா தேவி எல்லாம் தோத்திருச்சி.

அடுத்து வந்த இன்னொருதரு ,இப்ப ஒரு பிசியோ தெரபிஸ்ட் ,ஆனா முன் ஜன்மத்தில ஒரு emperror , யாரோ அவர , இடுப்புல கோடாரியால ஒரே போடா போட்டு , கொன்னுர்றாங்க ..இப்ப இந்த பிறவில அவருக்கு முதுகுல ஏதோ ஸ்லிப் ஆகி , அப்புறம் ஆபரேஷன் மூலமா சரியாயிடுராறு.

அதுக்கப்புறம் வந்தாரு இவுங்கள அப்படி பேச வச்ச மகராசன் ,அவரும் ஒரு டாக்டர் ஆம். அவரு ஒரு கத சொன்னாரு :
அவருக்கு வந்த ஒரு பேசண்டு, பயங்கர குண்டாம் . இவங்க ஹிப்னாடிசதுல அவங்கள ஒல்லி ஆகினான்கலாம். ஆனா ,அந்த அம்மா ,நல்லா சாப்பிட்டு ,திரும்பவும் குண்டடிசிடாங்கலாம். இவரு சரி Regression பண்ணலாம்னு ,அவங்க முன் ஜென்மத்துக்கு போய் பாத்தா , அந்த பேசண்ட், முன் ஜென்மத்துல சோத்துக்கே வழி இல்லாம பஞ்ச பரதேசியா , வெறும் வயுத்தோட காலத்த ஒட்டுனாங்கலாமாம்.

இந்த நிகழ்ச்சிய,நான் வேற கைல Red  Label ஓட பாத்தவுன்னே, எனக்கு திடீர்னு என்ன ஆச்சுன்னு தெரியல ..கை கால் எல்லாம் வெறச்சது..முடி அப்படியே நட்டுகிட்டு நிக்குது ...என் மண்டை பின்னால ஒரு ஒளி வட்டம் ....அப்படியே என் ஐந்து அறிவு , extend ஆகி ஆறா மாறிச்சி ...அப்புறம் என் முழி கரு வலயம் மேல போயிருச்சி ..திடீர்னு என் உச்சி மண்ட வழியா ஏழாம் அறிவு மெல்ல கொஞ்சம் கொஞ்சமா வெழிய வரப் பாக்குறப்போ  ...யாரோ என் முகத்தில போர்வைய மூடி ஒரே இருட்டாய்ருச்சு ...

கொஞ்ச நேரத்துல , திடீர்னு பொடனில,கைல ,கால் ,உடம்புன்னு ,ஒரு இடம் பாக்கி விடாம , சும்மா DTS சத்தத்தோட,சரா மாரியா வந்து விழுந்தது பாருங்க  அடி ..உங்க அடி இல்ல , எங்க அடி இல்ல ...அப்படி ஒரு மரண அடி ...எவளவு நாளு அடக்கி வசிருந்தான்களோ தெரியல .. நான் அப்படியே flat ...  ஹீம் இன்னையோட மூணு வாரம் ஆச்சுங்க , ஒரு பயலும் பக்கத்துல வந்து பேச மாட்டேன்னு ஓடுராங்க ,என்ன பாத்தவொடனே.


டிஸ்கி:  பா பா ப்ளாக் ஷீப் , ஹாவ் யு எனி வுல்...

                லண்டன் பிரிட்ஜ் இஸ் பாலிங் டௌன், பாலிங் டௌன்....

                 மேரி கேட லிட்டில் லாம்ப் ,லிட்டில் லாம்ப் ....

                  வீல்ஸ் ஆர் கோயிங் அப் அண்ட் டௌன்,அப் அண்ட் டௌன்...

                  ஓல்ட் மெக் டெனால்ட்டு கேட பார்ம்...

                    ஓஹஅம்சி வசா ஹைலா , ஆசை பைல, ஒஹ் சி ...


                மேல உள்ள பாட்டெல்லாம் கேளுங்க ,கேளுங்க ,கேட்டுகிட்டே இருங்க மச்சி,இது ரொம்ப ஹாட்.


No comments:

Post a Comment

படித்தது பிடித்தால் நண்பர்களுக்கு என் பதிவை, மறக்காமல் ,மறக்காமல் அறிமுக படுத்துங்கள்,அப்படியே ,எனக்கும் உங்கள் முத்தை உதிர்த்து விட்டு சென்றால் நானும் பதிவுலகில் பணக்காரன் ஆவேன் உங்கள் தயவில் :-)