Sunday, September 25, 2011

உனக்கு பெரிய "ரஜினி" ன்னு நெனப்பா?

சமீப காலமாக , திரை படங்களில் அதிகம் புழங்கும் ஊர் அது. அது எந்த ஊர் என்று கண்டுபிடித்தால் , நீங்கள் ரசனையான ஆள் தான் , ஏன்ன, பெரும்பாலான திரை படங்கள் ,இந்த மண்ணின் ராசியால் வெற்றி நடை போட்டுள்ளன. அந்த ஊரின் பஸ் ஸ்டான்ட்,  வேர்க்க, விறு விருக்க , சைக்கிளை மிதித்து கொண்டு "அவன்" அங்க வந்து சேர்ந்தான். சைக்கிள் அங்கிருந்த ஸ்டாண்டில் கலந்து தன்னை மறைத்து கொண்டது.  அவன் , --வழக்கமாக பஸ் ஸ்டான்ட் உள்ளே வராமல் வெளியவே கொஞ்ச நேரம் நின்று , டாட்ட காட்டிச் செல்லும் --,அந்த SNR பஸ் நிற்கும் இடம் நோக்கி நகர்ந்தான்.

அங்கே ஏற்கனவே "இவன்" காத்து கொண்டிருந்தான். அவன் , இவனை நோக்கி ,
"என்னடா மாப்ளை , SNR போயுருசாடா ?"
"அதெபுட்ரா போகும் , நான் நிக்குறது கண்ணு தேர்லயாட உனக்கு?"
"சாரி டா மாப்ள ,சும்மா கேட்டேன்டாண்டா "
"அப்படி வந்தாலும் உன்னை விட்டுட்டு நாங்கெல்லாம் போவமாடா ?"
"நன்பேண்டா" என்று அவன் இவனை உச்சி மொகர்ந்தான்.

(உச்சி மொகர்ந்தான் அப்ப்டீன்ன என்னங்க , தலையில மோந்து பாக்கிறதா?)

அப்போது , ஒரு உள்ளூர் போக்குவரத்துக்கு கழக பஸ் வர , அதில் ஓர் பிகரின் 
மூஞ்சி தெரிந்தது. உடனே , இவன் , அவனை பாத்து, 
"சரிடா மாப்பிளை , என் ஆளு அந்த பஸ் ல போறா , உன்னை  காலேசுல பாக்குறேன் " என்று அந்த பஸ் ஐ பாத்து ஓடத் தொடங்க ,
"இங்கேர்ற , பெருசா வசனம் பேசிட்டு ,உன் புத்திய காட்டிட்ட, போடி , உன்னை கிளாசுல வச்கிறேன் இன்னிக்கி " என்றான் அவன்.

கொஞ்சம் , கொஞ்சமாக , மற்ற நண்பர்கள் வந்து சேர , ஒரு வழியாக , SNR வந்து நின்று , சில பயணிகளை உதிர்த்தது. SNR இன் பெசலே,  அதிக வேகம் , சில் சில் என்று வந்து விழும் , இளையராசாவின் லேட்டஸ்ட் ஹிட்டுகள்.

நண்பர்கள் அனைவரும் ,வழக்கம் போல் , பூட் போர்டில் தொங்க ஆரம்பிக்க , பஸ் சீறி பாய்ந்தது.  கடைசி சீட்டில் இருந்த பெருசு , " உள்ள வாங்கப்பா "  என்று சொல்ல , அவர்கள் ஒருவரை ஒருவர் பாத்து சிரித்து கொண்டனர்.

ஸல் ஸல் என்று எக்ஸ்ட்ரா எபக்டில் பதிந்த ,இளையராசாவின் பாட்டு, காதில் இனித்தது :

       தென்றல் வந்து என்னை தொடும் ,
      ஆஹா சத்தமின்றி ....சாதாரணமாக , முப்பது நிமிடத்தில் , அடைய வேண்டிய இடத்தை , இருபதே நிமிடங்களில் வந்து அடைந்தது. "அவர்கள்" அனைவரும் , அந்த பஸ் ஸ்டாண்டில் காத்திருந்த , கல்லூரி பஸ்சில் ஏறினார்கள் .

அந்த கல்லூரி பஸ் , ஊரை ஊடுருவி ,கல்லூரி நோக்கி உருளத் தொடங்கியது.
அது , ஒரு NS  பட்டணம் பொடி விற்கும் கடைய தாண்டும் பொழுது , மாணவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து , "ஆஆஆஆ அச் சூ"  என்று ராகம் போட்டார்கள்.

பஸ் சிறிது வேகம் எடுத்து , முன்னால் சென்ற பஸ்ஸை ஓவர்டேகியது. அந்த முன்னால் சென்ற பஸ் ,அதே கல்லூரிக்கு செல்லும் ,மாணவியர் மட்டும் பயணிக்கும் பஸ். உடனே , மாணவர்களிடம் இருந்து கிளம்பியது , வேறென்ன , விசிலும் , கிண்டலும் , கை தட்டலும் .

ஆண்கள் பஸ்சில் ,கண்டக்டர் பாவம், டிக்கெட் டிக்கெட் என்று கத்த , "என் மாப்ள முன்னாடி எடுப்பான்" , "டே மச்சான் , நீ எனக்கும் எடுதுடா " என்று , கடீசில ,ஒருத்தனும் எடுக்கலை. அந்த ஓவர் கிரவுடட்,மாணவர் பஸ்சில் , கண்டக்டர் விரலில்  மிஞ்சி போனா , ஒரு நாலஞ்சு ரெண்டு அல்லது ஒரு ரூபா நோட்டுகள் மட்டுமே .

ஆண்கள் பஸ் ,ஒரு ஆத்து பாலத்த கடக்க , அங்கே சில பெண்கள் துணி துவைத்து கொண்டிருக்க , மாணவர்கள் அனைவரும் , மறுபடியும் ஒன்று சேர்ந்து , "ஆஅ ஆஅ  ஆச்சு " என்று தும்ம ,அந்த பெண்கள் ,வாய்க்கு வந்த வார்த்தைகள் , காதோடு கரைய , பஸ் வேகம் எடுத்து ,ஒரு வழியாக ,கல்லூரியில் நுழைந்து நின்றது .

அந்த பாடப் பிரிவு மாணவர்கள் , மெது வாக அசம்புல் ஆகவும், மணி அடிக்கவும் சரியாக இருந்தது. அந்த சப்ஜெக்ட்  ஆசிரியர் , ஒரு பெரிய புடுங்கி என்று நினைக்கும், நடந்து கொள்ளும் ஒருவர். அவர் வழக்கம் போல் , ரம்பத்தை எடுத்து  எல்லோரையும் , துடிக்க துடிக்க , கொலை செய்யத் தொடங்கினார்.

கடைசி பெஞ்சில் அந்த அஞ்சு பேர். அதில் ஒருவன் ,பரம ரஜினி ரசிகன். அவன் நிக்கும் போது கூட , இடுப்பு ஒரு சைடாக நெளிந்து , இடுப்பில் ஒரு கையுடன் தான் நிற்பான். அவன் உடுப்பு , இடுப்பில் பல ப்லீட்களுடன் விரிந்து ,கெண்டை கால் அருகில் டைட் ஆகி ,ரஜினி சமீபத்து படத்தில் போட்ட டிரெஸ்ஸை நினைவு படுத்தும்.

அவன் செல்லப் பெயர் "நட்டு". ஒரிஜினல் பெயர் என்னனு நீங்க ஈஸ்யா கண்டுபிடிக்கலாம் , ஆமா அதே தான்.

அந்த அஞ்சு பேரும், பர பரன்னு , தமிழ் சினிமா கல்லூரி காட்சில வழக்கமா வருமே , "அத" செய்ய ஆரம்பித்தார்கள்.  அசிரியர்  அவர் பின்புரத்தை காட்டியவாறு , போர்டில் ஏதோ சீரிஸ் ஆக, கிறுக்கி கொண்டிருக்க , அவர்கள் "அத" பறக்க விட ஆரம்பித்தார்கள்.  அதில் ,நட்டுவின் டார்கெட் , அந்த ஆசிரியரின்  பேக் "கிரவுண்டு".  சில பல முயற்சிகளில், நட்டுவோட "அது" சரியாக  இலக்கை அடைய ,அவன் முகத்தில் பெரிய வெற்றி களிப்பு.

சரியா அப்ப பாத்து , அந்த ஆசிரியர் திரும்பி மாணவர்களை நோட்டம் போட்டாரு . அவர் கண்ணில் முதலில் பட்டது , சிரித்த முகத்துடன் நட்டு.  

"ஏம்பா  சிரிக்கிற ?"
"ஒன்னும் இல்ல சார் ,சும்மா தான் சிரிச்சேன்"
"சும்மா சிரிக்க நீ என்ன லூசா ?"

நட்டு அமைதியாக  இருக்க ,அவர் விடாமல் ,

"சொல்லுப்பா, நீ லூசா ?  ஆளும் மூஞ்சியவும் பாரு " ன்னுட்டு ,அவனை மேலும் கீழும் பார்த்தார்.  நட்டு வழக்கம் போல அந்த கோணல் ஸ்டைலில் நின்று கொண்டு , தலயில் கை விட்டு , முடியை ஒரு சிலுப்பு சிலுபினான் ,ரஜினி ஸ்டைல் லில் .

அவருக்கு வந்ததே கோபம் , " நீ என்ன பெரிய ரஜினின்னு நெனப் பாடா உனக்கு ?"
"நாளிக்கி உங்க அப்பா வ வந்து என்ன பாக்க சொல்லு " னுட்டு ,அவர் பாடத்தை 
ஆரம்பித்தார்.

நட்டு அந்த வகுப்பு முடியும் வரை , கண்கள் மேல் நோக்கி வெறிக்க ,தலைய கோதியபடியே கோபமாக உக்கர்ந்திருந்தான். மாணவர்களை காப்பாத்த , பெல் அடிக்கும் புண்ணியவான் , அருள் பாலித்தான். 

மாணவர்கள் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக , மெல்ல வெளியேறினார்கள். அந்த ஆசிரியரும் ,ஒரு சில மாணவர்களும் மட்டுமே இருக்க, ஆசிரியர் வாசல பாத்து நடக்க ஆரம்பிக்க , நட்டு அவர பாத்து ,

"சார் ஒரு நிமிஷம் "
என்னவென்று அவர் அவனை பாக்க ,
"நீ லூசு ,உங்க அப்பா லூசு , உங்க அம்மா லூசு ,
 உங்க பாமில்யே லூசு "  , கோபமாக கத்தினான் .

6 comments:

 1. @விக்கியுலகம்
  வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 2. /////அந்த பெண்கள் ,வாய்க்கு வந்த வார்த்தைகள் , காதோடு கரைய , பஸ் வேகம் எடுத்து ,ஒரு வழியாக ,கல்லூரியில் நுழைந்து நின்றது ////

  பொல்லாத பசங்களப்பா..

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  7 ம் அறிவு பாடலில் ஹரிஷ் ஜெயராஜ் அரைத்தமாவும், சுட்ட வடையும்

  ReplyDelete
 3. @ம.தி.சுதா
  வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 4. Cool, went back to the college while on each line, originally Nattu did'nt wait for the class to get over, he fired while the class in on, hilarious.

  Nadai is good, keep going...

  Pradeep

  ReplyDelete
 5. Thanks dah Pradeep. Did you read my latest story?

  ReplyDelete

படித்தது பிடித்தால் நண்பர்களுக்கு என் பதிவை, மறக்காமல் ,மறக்காமல் அறிமுக படுத்துங்கள்,அப்படியே ,எனக்கும் உங்கள் முத்தை உதிர்த்து விட்டு சென்றால் நானும் பதிவுலகில் பணக்காரன் ஆவேன் உங்கள் தயவில் :-)