Sunday, September 18, 2011

காஞ்சனா பார்ட் 3 - ரஜினி ஹீரோ ?

ஒரே பர பரப்பா வந்துருபீங்க,கொஞ்சம் நிறுத்தி நிதனாமா வாசிங்க ,அப்ப தான் மேட்டர கரெக்டா புடிக்க முடியும்.

அந்த கல்லூரி,படிப்புக்கு பெயர் போனது இல்லை என்றாலும் ,மத்தது கெல்லாம் பெயர் போனது (ஆனால் உண்மையில் ரொம்ப நல்ல காலேஜு).
என் நண்பர்கள் எல்லாம் சேந்து , சரி டீ அடிப்போமுன்னு ,காண்டீன் போனம்.   சரி ஒரு வடை வாங்கலாமுன்னு , ஒரு வடைய , பத்து பேர் பங்கு போட்டு , வாயில வச்சா , உப்பே இல்லங்க.

வந்தது பாருங்க கோபம் .  "யார்றா அங்க , எடுரா சொம்ப" ன்ற ஆக்டரு விசயகுமாரு ரேஞ்சுக்கு ஒரு கோபம். என் நண்பன் என்ன நெனச்சானோ , தீடிருன்னு ஒரு டீ கிலாச உடைக்க , கலவரம் நம்ம பரம குடி ரேஞ்சுக்கு , தீயா பரவி, அறிவிச்சாங்க பாரு " காலேசுக்கு இன்றைக்கு விடுமுறை"!

(எனக்கு ஒரு டவுட்டு, இந்த "உப்பு பெறாத சமாச்சரமுன்னு ஒன்னு இருக்கே அது இது தானோன்னு)

அப்புறம் ,இன்னிக்கி பொழுத எப்படிடா ஓட்டறதுன்னு, தீவிர வாதியா சிந்திச்சோம், சரி வாங்கடா, மொதல்ல ஹாஸ்டல் ரூமுக்கு போய், ரிலாக்ஸ் பன்னுவோம்ன்னு எல்லாரும் போனம்.

அப்ப ஒருத்தன் , 'டேய் ,நாம ஆவி கூட பேசலாமா?" ன்னு போட்டான் ஒரு பிட்ட ஒரு ஆவி எக்ஸ்பெர்ட்டு. "  சரி நாமெல்லாம் ரொம்ப தைரியம் , நைட்டு ஒன்னுக்கு போனும்ன கூட வார்டனுக்கு தந்தி போட்டு வரவழைக்கிற சூரங்க ,என்ன ஆனாலும் ரைட்டுன்னு" , ஒரு வழியா ஒத்துக்கிட்டு, வட்டமா உக்காந்தோம் . ஒரு வட்டத்த வரஞ்சு ,அத சுத்தி A ல இருந்து Z வரைக்கும் எழுதிகிட்டோம்.

(இன்னொரு டவுட்டு , படிக்காத ஆவிங்க எப்படி வரும் ?)

அப்புறம் ஒரு மெழுகு வர்த்திய ஏத்தி, அது மேல ஒரு தம்ப்ளர் போட்டு மூடினம்.  அந்த எச்பெர்டு , "சரி யாரவது ஒருத்தன் செத்து போன யாரையாவது நெனச்சு இந்த தம்ப்ளர் மேல விரலை வைங்கடான்னு " சொல்ல ,என் குறும்பு நண்பன் அதன் மேல் வைத்தான். அப்புறம் என்ன நெனச்சானோ , என்னையும் ஒரு விரல் வைக்க சொன்னாயிங்க, சர்தான் , நம்ம வாழ்க்கை , இந்த நாளோட முடியபோதுன்னு மனசுல ஒரு வாய்ஸ் ஓவர் கேட்க , "சரி,வந்தது வரட்டும் ,எவ்வோலோவோ பண்ணிட்டோம் ,இத பண்ண மாட்டோமா,என்ன  இன்னைக்கு செத்தா நாளைக்கு சாராயம் , விஸ்கி" னு என்ன நானே சமாதானம் செஞ்சு ,ஒரு வழியா விரலை அந்த கிளாசு மேல வச்சேன். 

அந்த குறும்பன் என்னடானா , கண்ண மூடி போலி சாமியார் ரேஞ்சுக்கு , ஒரு ஆழ்ந்த மாத்திரைக்கு சாரி நித்திரைக்கு போய்ட்டான்.  நானும் உள்ளுக்குள்ள வெல வெலன்னு நடுங்கிகிட்டே விரல் வச்சிருக்கேன்.

அப்ப அந்த எக்ஸ்பெர்ட்டு , "நீ வந்த்ருகிறது உண்மென்ன , லெட்டர் D கு போ " அப்படின்னு கீறல் விழுந்த டீ வீ  டீ டிஸ்க் மாதிரி திரும்ப திரும்ப சொல்ல ஆரம்பிட்சிடான்  . ஒரு கால் , அரை மணிக்கு அப்புறம் , மெதுவா தம்ப்ளர் , மெழுகு வர்த்திய தள்ளி விட்டுட்டு,நகர ஆரம்பிச்சுடுசு! என் விரலும் ,என் நண்பன் விரலும் , அந்த லெட்டெர பாத்து அந்த தம்ப்லோரோட நகர்துன்ச்சு.  எனக்கு வேர்வை மோரா சாரி ஆறா கொட்ட ஆரம்பிட்சுடிச்சு .

ரெண்டு மூணு பசங்க ,ரொம்ப தைரியமாகி , நீ அந்த லேட்டேருக்கு போ ,இந்த லெட்டருக்கு போ ன்னு லந்த கொடுக்க ஆரம்பிட்சிடாங்க.
அதுவும் ஒரு லெட்டர பல முறை சொன்னாதான் ,அந்த தம்ப்ளர் நகருது.
அதுல ஒருத்தன் , என்ன நினைச்சானோ ,ஒரு ப்லோவுல ,நீ அந்த லெட்டருக்கு போ ன்னு சொன்னான். எந்த லெட்டருன்னு கேட்கீறேன்களா?
அத எப்படி சொல்றதுன்னு கூச்சமா இருக்கு , இருந்தாலும் சொல்றேன் ...ஏன்ன ,அத வேக வேகமா சொன்நீங்கன்ன ,ஒரு மாதிரி  கெட்ட வார்த்தை வாக்கியமா வரும் , எழுதவா வேண்டாமான்னு நெனச்சேன் ...அப்புறமா , இந்த கால இளைங்கிகெல்லாம் , அந்த வார்த்தையின் ஆங்கில வார்த்தைய , "வாடி ,போடி " ன்ற ,ரேஞ்சுக்கு பேசுறத பாத்துட்டு ,போன போகட்டும் போடா நம்ம கவுருத ன்னு ,என் மானத்தை ,காத்துல பறக்கவிட்டு ,வெக்கத்தை விட்டு சொல்றேன்.

அவன் சொன்னது இது தான் " நீ வந்துரிகிறது உண்மேன்ன,  O க்கு போ!"
இதை கேட்டதும் , நான் உள்பட , எல்லோரும் பக பகன்னு  சிரிக்க ஆரம்பிச்சிட்டோம் .  அது வரைக்கும் நல்லா தூங்கிட்டுருந்த நண்பன் ,அதாங்க அந்த தம்ப்ளர் மேல வெரல் வட்சானே ,அவன் தான், மெல்ல நிஷ்டையிலிருந்து எந்திரிச்சான் . நாங்கெல்லாம் விழுந்து விழுந்து சிரிக்க , அவன் முழிக்க, மீண்டும் அந்த வாக்கியத்த, எல்லோரும் ஹாப்பி பர்த்டே டூ யு பாடுற மாதிரி கோரச பாட , அவன் பக்கத்திலிருந்த ஒரு பிஞ்ச ஹவாயி செப்பல எடுதுக்க்டு எங்கள டாம் அண்டு ஜெர்ரி கணக்கா தொரதினான் பாருங்க .

இப்ப தாங்க  ,இந்த சம்பவத்தோட "கை லைட்டு " நடந்துச்சு. அப்புறம் ஒரு வழியா அவன் கோவம் தணிஞ்சு , நீ யாரடா மனசுல நெனச்சு கூபிட்ட ன்னு கேட்டோம் , அதுக்கு அவன் சொன்னான் "  நான் சில்க்கை நெனச்சுகிட்டேன்!" இன்னு சொன்னான் ,"நாங்கள்ள அப்படியே சாக்! ஆயிட்டோம் ஒரு நிமிஷம்.

டிஸ்கி : எங்கடா காஞ்சனா வே மேட்டர்ல வல்லை ன்னு திட்டு வீங்களே ,இதோ ,அந்த படத்தில வர்ற இந்தா வரிய கேட்ரீப்ன்களே :  

  அடி ஆத்தா ஆத்தா குங்கும பூ மூடைய தின்னுபுட்டு
  உங்கம்மா பெததாளா
  அடி பாத்தா பாத்தா பள பளன்னு இருக்குற
  வெறும் பால ஊத்தி குளிகவசாள...

கேட்கலையா ,அப்ப கேளுங்க :

டிஸ்கி 2
அப்புறம் ரஜினி எங்க இதுல வர்றாருன்னு கேட்பீங்களா, அட என்னங்க நீங்க , எலி ஏரோ பிளேன் ஓட்டுதுன்னு சொன்னா அப்படியே நம்புற வெள்ளந்தியா நீங்க.  ஏதோ ஒரு பிரபல புத்தகிதுல , அட்டைல ரஜினி படத்த போட்டு , இது மாதிரி கோக்கு மாக்கு நூச போட்டு , கோடி கணக்குல சம்பாரிகிராங்கள்ள ,அவங்கள நிறுத்த சொல்லுங்க நான் நிறுத்துறேன்!  உன்னை யார்ர நிறுத்த சொல்லவே இல்லைன்னு சொல்றீங்க போல , சாரிங்க ,எல்லாம் ஒரு தமாசு.  நீங்க சிரிச்சு இன்புற்று
இருப்பதே என் நோக்கம். வர்ட்டா!4 comments:

 1. ஹா ஹா ஹா சூப்பர்! தமாசு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 2. வருகைக்கு நன்றி ஐடியா மணி ...
  நீங்க படிச்சு பட்டம் வாங்குனவரா ,இல்ல "ருவைக்கு ரெண்டுன்னு" யாரோ சைடுல வாய்ஸ் ஓவர் குடுகிறங்கோ... (கோவிக்க மாடீங்கள்ள?)

  ReplyDelete
 3. அப்பறம் கடைசிவரைக்கும் அந்த சில்க் ஆவி என்ன ஆச்சுன்னு சொல்லவே இல்ல?

  ReplyDelete
 4. @ராஜா,
  அத ஏன் கேட்குறீங்க ,அந்த சில்க் ஆவி என்ன பண்ணிச்சோ தெரியல ,அத கூப்டவன் அதுக்கப்புறம் ஒரே பிட்டு படமா பாத்து, முதல் ரேங்க் ல இருந்து , சொய்யின்னு கீழ போயிட்டான். காலேசு முடியுற வரைக்கும் பையன் மேல வரவே இல்லே ...எல்லாம் அந்த சில்கோட வேலைன்னு இன்னும் நாங்க நம்பிக்கிட்டு இருக்கோம்.

  ReplyDelete

படித்தது பிடித்தால் நண்பர்களுக்கு என் பதிவை, மறக்காமல் ,மறக்காமல் அறிமுக படுத்துங்கள்,அப்படியே ,எனக்கும் உங்கள் முத்தை உதிர்த்து விட்டு சென்றால் நானும் பதிவுலகில் பணக்காரன் ஆவேன் உங்கள் தயவில் :-)