Wednesday, October 12, 2011

கண்கள் இரெண்டால்,உன் கண்கள் இரெண்டால்(சவால் சிறுகதைப் போட்டி -2011)

முக்கிய அறிவிப்பு:

நண்பர்களே , இது , நான் ,சவால் சிறுகதைப்  போட்டி - 2011 - க்காக( யுடான்ஸ் திரட்டி நடத்தும் ),எழுதிய, மூன்றாவது கதை.  "நீ அடங்க மாட்டியா" என்று சொல்லி பயப்படும் என் அன்பு நண்பர்களே ,வாசக மக்களே, பயப்படாதீங்க, மூணுக்கு மேல எழுதினா, கம்பனி லாஸ் ஆகிரும் என்று என்
கைகளை கட்டிப் போட்டதால் , நான் என் வன்முறையை இத்தோடு நிறுத்தி ,அடுத்த வருட போட்டிக்கு இப்போதிருந்தே தயார் படுத்திக் கொள்கிறேன். அதுவரை உங்களுக்கு என்னிடம் இருந்து தற்காலிக விடுதலை. ரைட்டா , ரைட்டு...
 (சும்மா தமாசு பரிசல் ,ஆதி மற்றும் கேபிள் ஜி)

கண்கள் இரெண்டால்,உன் கண்கள் இரெண்டால்(சவால் சிறுகதை போட்டி -2011)

மணி "ஆறு" என்று அலாரம் அலறியபடி , ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அனிதாவை எழுப்பியது . திடிக்கிட்டு எழுந்த அனிதா , கலைந்திருந்த ஆடைகளை  சரி செய்து கொண்டே , "இன்னிக்கி சீக்கிரம் போய் , அந்த பெண்டிங்  வேலைய முடிச்சுரனும் , இல்லேன ,அந்த முசுடு மேனேஜர் , டீம் மீட்டிங் -ல வச்சு , மானத்த வாங்கிடுவான்" என்று மனதினுள் முனு முணுத்தவாறே , தன் வீட்டு வேலைகளை செய்ய ஆரம்பித்தாள். 

லஞ்ச்-கு தேவையானதை குக்கரில் வைத்துவிட்டு , கடிகாரத்தை பார்க்க , "மணி ஆறரை ,இப்ப ரீத்து -வ எழுப்பினாதான் ,அவ ரகளைய முடிச்சு ,எழுந்து வர்றதுக்கு சரியா இருக்கும்" என்று போய் அவள் செல்ல மகளை எழுப்பினாள்.

"அம்மா ,இன்னும் பத்து நிமிஷம்மா -ப்ளீஸ் " கெஞ்சினாள் ரீத்து.
"சரி , கரெக்ட் -ஆ பத்து நிமிஷத்தில வந்து  அம்மா வந்து எழுப்புவேன் ,சத்தம் போடாம எந்திரிக்கணும் என்ன? " - அனிதா.
"ஓகே" என்று comfortar -ஐ இழுத்து போர்த்திக் கொண்டாள் ரீத்து.

ஆறரைக்கு , வழக்கம் போல் ரீத்து அடம் பிடிக்க ஆரம்பித்தாள். 
"ஓ , அம்மா நான் இன்னைக்கு ஸ்கூல் போக மாட்டேன்" , வீல் என்று பக்கத்துக்கு வீட்டுக்கு கேட்குமாறு அலறி, தன் சுப்ரபாரத்தை தொடங்கி வைத்தாள் அவள் .

"ஏண்டி செல்லம் போ மாட்ட ,அம்மாகிட்ட சொல்லு " என்று அவளை தாஜா செய்து , ஒரு வழியாக பிரேக் பாஸ்ட் சாப்பிட வைத்து , மற்ற எடு பிடி வேலைகளையும் செய்து வைத்து ,அவளை பள்ளிக்கு அனுப்பி வைத்தாள் அனிதா.

பெரிய போருக்கு பின் ஏற்பட்ட அந்த அமைதியை அனுபவித்து ரசித்து ,தனக்கு பிடித்த பாடலை முனுமுனுத்தபடியே   குளித்து உடை மாற்றி , கிடைத்த பாக்ஸ் -இல் லஞ்ச்சை திணித்துக் கொண்டாள்.

இதுவரை நடந்த களேபரத்தை கண்டு கொள்ளாமல் உறங்கிக் கொண்டிருந்த கணவன் விமலிடம், "என்னங்க நான் கெளம்புறேன், மறக்காம லஞ்ச் எடுத்துட்டு போய்டுங்க" என்று அக்கறையுடன் சொல்லி விட்டு  வீட்டிலிருந்து அனிதா வெளியேறினாள்.

                         ----------oOoOo--------------------------
வழக்கமாக ஏறும் பஸ்ஸில் ஏறி, கிடைத்த சீட்டில் உக்கார்ந்தாள் அனிதா. அவள் அவசரத்தை புரியாமல் , டிரைவர் அலட்சியமாக , ஸ்லோவாக ஓட்டுவது போல் பட்டது அவளுக்கு. திடீர் என்று பஸ், ' ஒரு சடன் பிரேக்' போட்டு, அடுத்து வந்த சிக்னலில் நின்றது. சில நிமிடத்  துளிகளுக்கு பிறகு , கிரீன் விழுந்தும் பஸ் எடுக்கவில்லை. "ஐயோ டைம் ஆகுதே" என்று கவலையாக ஜன்னலின் வெளியே பார்த்தாள் அனிதா.

ஒரு போக்குவரத்து கான்ஸ்டபுள், பத்து குழந்தைகளை , வரிசையாக கை பிடித்து
'ஜீப்ரா கிராசிங் '  வழியாக ரோடை க்ராஸ் பண்ண உதவிக் கொண்டிருந்தார்.அந்தக் குழந்தைகளின் கையில் இருந்த குச்சியை பார்த்தவுடன் தான் அவர்கள் பார்வை அற்றவர்கள் என்பதை உணர்ந்தாள்.

அவள் மனம் , இரண்டு நாட்களுக்கு முன் கணவன் விமலுடன் பேசிக் கொண்டிருந்ததை  நினைவில் Play செய்ய ஆரம்பித்தது:

      ரீத்துவுக்கு கதை சொல்லி தூங்கப் பண்ணி விட்டு, தங்களின் தனி
      அறையில் வந்து படுக்கையில் சரிந்தான் விமல். அவன் தலையை   கோதி விட்ட அனிதா,
                " ஏங்க உங்கட்ட ஒன்னு சொல்லணும்" .
                "சொல்லு ஸ்வீட் ஹார்ட்".
                "வர்ற சனிகிழம உங்க பர்த் டே ,நினைவிருக்கா"
                "ஆமா அதுக்கென்ன, உனக்கு எத்தன தடவ சொல்றது,
                   எனக்கு பர்த் டே கொண்டாடுறதுல அவ்வளவா இன்டெரெஸ்ட் இல்லேன்னு"
                "தெரியுங்க, ஆனால் இந்த தடவ உங்கள விடுறதா இல்ல,உங்க
                  நண்பர்கள்  பாமிலி -ய கூப்பிட்டு விருந்து வைப்போம் ,அப்படியே ஒரு
                  கெட் டுகதர் வச்ச மாதிரியும் இருக்கும்,நம்ம கொழந்தைக்கும் வெளயாட நண்பர்கள் கெடச்ச மாதிரியும் ஆச்சு"
                "அவங்க யாருக்கும் சோத்துக்கு பஞ்சமில்லாம செழுமையா இருக்குறவங்க,அவங்கள கூப்பிட்டு சோறு போடறதுக்கு , இல்லாத ஏழைபட்டவன்களுக்கு கொடுத்தாலாவது புண்ணியம்"
                "இப்படியே சொல்லிக்கிட்டு இருங்க, நாள பின்ன , ஒரு ஹெல்ப் -ன்னு கேட்குறதுக்கு ஆள் இல்லாம போகப் போகுது"


சீறிக் கொண்டு சென்ற மற்ற வாகனங்களின் போட்ட சத்தத்தில், அவள் எண்ணம் தடைபட்டவளாக , அனிதா தான் இறங்க வேண்டிய ஸ்டாப் -ஐ எதிர் நோக்கத் தொடங்கினாள்.

----------oOoOo--------------------------



ஒரு வழியாக  வேலைகளை முடித்து , லஞ்சிற்கு உட்கார்ந்த அனிதாவிற்கு,
கணவன் ஞாபகம் வர, அவன் நம்பரை கூப்பிட , போன் அடித்துக் கொண்டே இருந்தது. சரி , "வழக்கம் போல எதாவது மீட்டிங் ஆ இருக்கும்"
என்று நினைத்தவளுக்கு ,அவன் பர்த் டே  ஞாபகம் மீண்டும் வந்தது. எதாவது வித்யாசமா செய்யணும்,அவனுக்கு என்ன பிடிக்கும் என்று யோசிக்கத் தொடங்கினாள்.

ஏழரை மணிக்கு வீட்டில் நுழைந்த அனிதா, பக்கத்துக்கு வீட்டில் இருந்து வந்த ரீத்துவை பார்த்து, "ஹாய் செல்லக் குட்டி, பசிக்குதாடா?" எனக் கேட்க,
"ஆமாம் , ஆனா நான் இப்ப தான் குக்கி பிஸ்கட் சாப்பிட்டேனே" என்றவளை வாரி எடுத்து ஒரு முத்தம் கொடுத்துவிட்டு, "நீ TV பாரு, அம்மா , அப்பா வரதுக்குள்ள டின்னர் பண்ணிர்றேன் " என்று சமையல் அறைக்கு ஓடினாள்.

லேப் டாப்பை திறந்து, கீதா ஆச்சல் அவர்களின் "என் சமையல் அறையில்", ப்ளாக் சென்று ,விமலுக்கு பிடித்த
அய்டத்தை பார்த்து, சமைத்து முடித்து , அவன் வந்ததும் , எல்லோரும் சேர்ந்து டின்னர் சாப்பிட்டு முடிக்க , இரவு பத்தாகி விட்டது. "சரி,போய் , ரீத்துவ தூங்க வச்சிட்டு வாங்க" என்று கணவனை விரட்டிவிட்டு, படுக்கையில் விழுந்தவளை ,  கால் மணி நேரத்தில் வந்து படுத்த விமலின் வாசம் எழுப்பியது.

"என்னம்மா , ரொம்ப டயர்டா இருக்கா, தூங்கிட்டயா?"
"இல்லங்க, உங்க பர்த் டே பத்தி தான் நினச்சுகிட்டு இருந்தேன்"
"மறுபடியுமா,சொன்னா கேட்க மாட்டியா நீயி"
"ஒரு ஐடியா வந்துச்சு,மொதல்ல அதக் கேளுங்க"
"சரி சொல்லு"

தான் காலையில் பார்த்த அந்த கண் தெரியாத பிள்ளைகளைப்  பற்றி சொல்லி ,"உங்க பர்த் டேவ , அவங்க கூட கொண்டாடலாமே" என்ற அவளின் ஐடியாவை தயங்கி தயங்கி சொல்ல,அவனோ உலக அதிசயமாக ,  தயங்காமல் , உடனே ஓகே பார்க்கலாம் என்று சொல்லிவிட்டான்.

----------oOoOo--------------------------


விமல் முதல் நாளே, 'அன்னை தெரசா பார்வையற்றோர் பள்ளி'-க்கு போன் செய்து சொல்லியிருந்ததால், அவன் அங்கு குடும்பத்துடன் சென்றவுடன்,
அந்த பள்ளியின் முதல்வர் அவர்களை அன்புடன் வரவேற்றார். அன்று மூன்று வேளையும் அந்த குழந்தைகளுக்கு ஸ்பெஷல் உணவு வழங்கியதற்கு தன் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார். அப்பள்ளி குழந்தைகளுடன் பழகி,அவர்களின் வெவ்வேறு திறமைகளை கண்டு வியந்து மகிழ்ந்து, பிரியா விடை பெற்று வீடு வந்து சேர்ந்தனர் அம்மூவரும்.

ரிச்சா தனக்கு புதிய நண்பர்கள் கிடைத்த மகிழ்ச்சியில் இருக்க, விமல் அனிதாவிடம்,
     "அங்க ஒரு பொண்ணு ,நல்லா ஆக்டிவா பேசிக்கிடுர்ந்துச்சே
       கவனிச்சயா"
    "ஆமாங்க அவளுக்கு,நம்ம ரிச்சாவ விட ஒரு ரெண்டு வயசு தான்
     கூட இருக்கும், அவ பேரு கயல் விழி"
    "அப்படியா , நல்ல பேரு ஆனா பாவம் பார்வைக்கு கொடுப்பினை இல்ல  ,இந்த ஆண்டவன நெனச்சா,எனக்கு கோவம் கோவமா வருது"
   "அவள பத்தி விசாரிசேங்க, அவ பிறவியிலேயே குருடு இல்லையாமாம்,
      அவ கதைய கேட்டா, பயங்கர சோகம்ங்க,இந்த ஆம்பிளைங்க எதுக்கு இப்படி இருக்கீங்களோ தெரியல"
    "அப்படியா, உன் ஆம்பிளைங்க குறை சொல்லற பஞ்சாயத்த ஆரம்பிட்சிட்டயா,அந்த பிள்ளையப் பத்தி சொல்லு மொதல்ல" என்று ஆர்வமானான் விமல்.

 "அந்த பொண்ணோட அப்பா ,நல்ல வசதியான குடும்பம். ஆனா அவனுக்கு குடி பழக்கம். வீட்லயே வாங்கி வச்சு குடிக்க ஆரம்பிச்சுட்டான்.சொத்தெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கரைய ,ஒரு நாள் - கயல் விழி , "குடிகாதீங்கப்பா"ன்னு , அவன் வாங்கிட்டு வந்த பாட்ல உடச்சிட்டதால, அவளை கோபத்தில புடிச்சி தள்ளி விட்டுட்டான், கீழ விழுந்ததுல , கண்ணு பக்கத்தில அடி பட்டு , கண் நரம்பு கட்டாகி,பார்வை போயிடிச்சு. அந்த சோகத்துல அவன் அப்பன் மேலும் மேலும் குடிச்சி போய் சேர,அவ அம்மாவும் அல்பாயுசுல போய் சேர்ந்துட்டா,அவ இப்ப அந்த பள்ளில" என்று சொல்லி முடித்தாள் அனிதா.

விமலுக்கு சுருக்கென்று குத்தியது, அடிக்கடி பார்ட்டி,டென்ஷன் என்று சாக்கு சொல்லி குடித்தது நினைவுக்கு வர, "சரி , வாங்க டைம் ஆச்சு,எல்லாம் படுக்க போகலாம்" என்று கோபமாக விரட்டி விட்டான்.


----------oOoOo--------------------------


மறு நாள், வேலை மும்முரத்தில் இருந்த விமலுக்கு, பார்வையற்றோர் பள்ளியிலிருந்து முதல்வர் பெயர் அவன் செல் போனின்  காலர் ஐடியில் தெரிய,
  "ஹல்லோ விமல் ஹியர்"
  "சார்,நான் தான்,நேத்து நீங்க வந்திட்டு போனீங்களே ,அந்த பள்ளியின்
    முதல்வர் பேசறேன்"
 "சொல்லுங்க சார்"
 "சார் மறுபடியும் உங்களுக்கு நன்றி தெரிவிச்சுக்கிறேன்,ஒரு சின்ன உதவி
  பண்ணனுமே"
 "சொல்லுங்க சார் முடிஞ்சா செய்றேன்"
 "உங்களால நிச்சயம் முடியும்னு நம்புறேன்,உங்க நண்பர்கள்ட்ட சொல்லி,
   ரெண்டு மூணு பழைய கம்ப்யூட்டர் விலைக்கு வாங்கித் தரமுடியுமா,
  நீங்க IT ல இருக்கறதால கேட்குறேன்"
 "சார், நிச்சயமா செய்றேன் சார்" என்ற விமல் , கயல் விழி நினைவு வந்தவனாக ,அவளை பற்றி விசாரிக்க,அவளுக்கு ஆபரேஷன் செய்தால் பார்வை வர வாய்ப்பு இருப்பதையும்,சில லட்சங்கள் செலவு செய்ய ஆளில்லாமல் இருப்பதையும் கேட்டறிந்தான்.

கயல் விழி நினைவாக விமல் லஞ்சில் கூட சோகமாக இருக்க,அவன் நண்பன் விஷ்ணு, "என்னடா, நேத்து உன் பர்த் டே,செலவு பண்ணக் கூடாதுன்னு வழக்கம் போல எங்களுக்கெல்லாம் சொல்லல" என்று அவனை கிண்டல் செய்ய ஆரம்பிக்க, தான் பர்த் டே கொண்டாடியதையும் ,கயல் விழி ஆபரேஷன் பணம் தேவை வரை சொல்லி முடித்தான்.

சிறிது நேரம் யோசித்த விமல், "ஒரு ஐடியா,நேத்து TV ல ஒரு Ad பாத்தேன்,
நம்ம "***" TV  , "10 minutes of fame" அப்படின்னு ஒரு போட்டி நிகழ்ச்சி நடத்துது,
"பத்து நிமிசத்துல சமுதாயத்துக்கு உருப்படியா ஒரு மெசேஜ் சொல்லணும் , அது ஒரு நாடகமாகவோ ,இல்ல குரும்படமாகவோ கூட இருக்கலாம்,visual -ஆ இருக்கணும்  , யார் சிறப்பா செய்றாங்களோ அவங்களுக்கு பத்து லட்சம் பரிசாம்,நாம ஏன் அத முயற்சி பண்ணக் கூடாது?" என்றான்.

"பண்ணலாம்,ஆனா ,நமக்கு அதெல்லாம் பண்ண அனுபவமே இல்லையே" என்றான் விமல்.
"எதுக்கு கவலை படுற,நம்ம பிரண்ட் கோகுல் -கு ,காலேஜ் ல இருந்தே ,இந்த விஷயமெல்லாம் அத்துப்படி,கவலைய விடு ,நான் அவன்ட்ட பேசிக்கிறேன்"
"சும்மாவா சொல்றோம், நீ எல்லா விசயத்தையும் இப்படி விரல் நுனியுல வச்சி இருகிறதால தான், உன்னை நாங்க இன்பார்மர் விஷ்ணு -னு கூப்பிடுறோம், ரொம்ப நன்றிடா விஷ்ணு என்ன புரிஞ்சிகிட்டு இவ்வளவு சீக்கிரம் ஐடியா குடுத்ததுக்கு" என்று அவனை மெச்சினான் விமல்.

----------oOoOo--------------------------



விமலின் நண்பன் கோகுல், பர பரப்பாக,ஒரு ஸ்கிட்(skit) யோசித்து,
அதில் வரும் வசனங்களை பிரிண்ட் செய்து, சிறு சிறு துண்டுகளாக 
ஆக்கி கொண்டிருந்தான்.

அதில் சில வசனங்கள் இவ்வாறு இருந்தன:

Mr.கோகுல் ,

S W 62 HF - இதுதான் குறியீடு. கவனமாக.. .
- விஷ்ணு
-------------------

Sir,

எஸ்.பி ,கோகுலிடம் நான் தவறான குறியீடைதான் கொடுத்திருக்கிறேன் .
கவலை வேண்டாம்."
-விஷ்ணு


கோகுல் i-போனின்  திரை,  'விஷ்ணு இன்பார்மர்'  என்று ஒளிர்ந்தது .கோகுல் போன்-ஐ எடுத்து, "எஸ். பீ கோகுல் பேசுறேன்" என்று ஆரம்பிக்க,
"டே,நீ எப்ப டா ,எஸ். பீ ஆன,சொல்லவே இல்ல" என்று ஆச்சர்யப்பட்டான் விஷ்ணு.
"அட நாயி , அந்த TV contest கு ,ஸ்கிட் எழுதிகிட்டு இருந்தேனா,அதுல என் காரக்டர் போலிஷ் எஸ்.பீ,அந்த காரக்டர்ல அப்படியே இன்வால்வ் ஆய்ட்டேன் "  என்றான் கோகுல்.
"ஆமா பெரிய விக்ரம், அப்ப நானு,விமல் என்னவா நடிக்கப் போறோம் ?" - விஷ்ணு கேட்க,அவன் காரக்டர்-ஐ அவனுக்கு விளக்கி , வசனம் கூட ரெடியாயுருச்சு,சொதப்பாம , நல்லா நடிச்சி 
நாம அந்த பரிச வாங்கணும் , கயல் விழிக்கு ஆபரேஷன் செய்யணும்"
என்று நினைவூட்டினான் கோகுல்.
"சரி,ரொம்ப தேங்க்ஸ்,நான் விமல்ட்ட சொல்லிர்றேன்,கலகிருவோம் மாப்ஸ்"
என்று வைத்தான் விஷ்ணு.
----------oOoOo--------------------------

ஒரு வழியாக அந்த TV யின் பிரத்யோக ஸ்டுடியோவில் , ஸ்கிட்(skit) செய்து முடித்தார்கள் விமல்,கோகுல் மற்றும் விஷ்ணு. யூனிட்டில் இருந்தவர்கள், பிரமாதமாக இருந்ததாக கை தட்டியது அவர்களுக்கு நம்பிக்கை கொடுத்தது."SMS votes கூட உண்டு,கண் தெரியாதவங்களுக்கு உதவி செய்யனும்னு நீங்க அந்த ஸ்கிட் -ல சொன்ன மெசேஜ் , உண்மைய்லையே உங்களுக்கு பப்ளிக் ட்ட அதிக வாக்கு வாங்கிக் கொடுக்கும் பாருங்க ,என் பல வருட அனுபவத்தில் சொல்றேன் " என்று ப்ரொடக்சன் மானேஜர் ஸ்பெஷல் ஆக கூப்பிட்டு பாராட்டினார்.

சிறிது நாட்களுக்கு பின்...அன்று அவர்கள் செய்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்
நாள்,மற்றும் அன்று தான் வின்னெர்ஸ் அறிவிப்பும் கூட, எனவே , விமல் வீட்டில்,கோகுல் ,விஷ்ணு ,அனிதா,ரிச்சா மற்றும் பலர், ஆர்வத்துடன் TV-ஐ பார்த்துக் கொண்டிருந்தனர்.இன்பார்மர்  விஷ்ணு, அவப்போது TV நிறுவனத்தில் இருந்த  ,யாருக்கோ போன் செய்து , SMS Vote நிலவரத்தை அறிந்து , "நாம தான் லீடிங் " என்று டென்ஷன்-ஐ எகிறச் செய்து
கொண்டிருந்தான்.

TV announcer பல மொக்கை வசனங்களை சம்பிரதாயமாக சொல்லிவிட்டு,
"...and the winner is......."  .....xxxx team.....என்று வேறு யாரோவோட  பெயரை அறிவித்தார்.

விமல் வீட்டில் இருந்த அனைவரும் தொங்கிய முகத்துடன்அதிர்ச்சியுடன்  எழுந்தனர்.ரிச்சா ஒன்றும் புரியாமல் , அப்பா , நீங்க தான வின்னர் ,சொல்லுங்கப்பா " என்று விமலை உலுக்கினாள்.

நண்பர்கள் அனைவரும் சோகமாக விடைபெற்று சென்றதும், விமல் ,'சிரிப்போ சிரிப்பு ' என்று அடுத்து வந்த ப்ரோக்ராம் டைட்டில் -ஐ பார்த்து  கடுப்பாகி, TV-ஐ அணைத்து விட்டு, "கயல் விழிக்கு வேற ஏதாவது ஏற்பாடு பண்ணனும்,இந்த வருஷம் போனஸ் வரும் , அப்புறம் , ரிச்சவுக்கு நக வாங்க கொஞ்சம் பணம் வச்சுருகொமே,அத கூட சேத்துக்கனும்,அப்ப கூட பத்தாது போல இருக்கே" என்று யோசிக்கத் தொடங்கினான்.

விமலின் போன் 'Informar Vishnu' என்று அவன் போட்டோவுடன் அழைத்தது:
"டே விமல்" என்றான் விஷ்ணு அவசரத்துடன்.
 "நீ உடனே கெளம்பி , அன்னைக்கு போனமே அந்த TV ஸ்டுடியோவுக்கு வா,இன்னைக்கு ரெண்டுல ஒன்னு பாத்திடுவோம் அவனுகள " என்று சொல்லி விட்டு கட் செய்துவிட்டான்.

விமலுக்கு தலையும் புரியல ,வாலும் தெரியல, "என்னாவா இருக்கும்" என்று யோசித்தபடி ,அனிதாவிடம் சொல்லிவிட்டு ஸ்டுடியோவுக்கு பைக்-ல் பறந்தான்.

விமல்,விஷ்ணு,கோகுல் ஆகிய மூவரும், அந்த TV நிறுவன இயக்குனரின் அறைக்கு சென்று,அவர் எதிரில் இருந்த இருக்கையில் அவர் சைகையின் படி அமர்ந்தார்கள். அந்த இயக்குனர் எழுந்து நின்று கொண்டே,

  "விமல்,  எங்க நிறுவன PRO கார்த்தி  ,உங்க நண்பர் விஷ்ணுவுக்கு நண்பர்,
   அவர் சொல்லித்தான் , நீங்க மூணு பேரும், ஏன் இந்த contest -ல போட்டி போட்டீங்கன்னு,எங்களுக்கு எல்லா விவரமும் தெரிஞ்சது. நாங்க இந்த மாதிரி contest நடத்துறது சும்மா 'டி ஆர் பீ '  ரேட்டிங் உயர்துரதுக்கு. மத்தபடி
 நாங்க பரிசு குடுக்கிற மாதிரி காமிக்கிறது,நாங்க முன்னாடியே ஏற்பாடு
செஞ்ச எங்க டீம் ஆளுங்களுக்கு தான்" என்று சொல்லி நிறுத்தினார்.

 கேட்டதை ஜீரணிக்க முடியாமல் , கோகுல் - "அப்ப , இந்த நடுவர் , அவங்க அளப்பர செய்றது இதெல்லாம் கூட..."

"ஆமாம் அதுவும் திட்டமிட்ட நாடகம்" என்றார் இயக்குனர்.

"ரொம்ப நன்றி சார் " என்று விமல் எழ, "நல்ல TV,போங்கடா நீங்களும் உங்க பாழாப் போன TV யும் " என்று விஷ்ணு கோபமாக கத்திக்கொண்டே எழ,

"wait..wait...நான் இன்னும் முடிக்கல...நாங்க கயல் விழிக்கு உதவி செய்யப் போறோம்...ஆனால் நீங்க இந்த மேட்டர யாருகிட்டயும் மூச்சு விடக் கூடாது...உங்க பொறுப்பு இதோட முடிஞ்சு போச்சு...deal ஓகே வா? " என்றார் அந்த வியாபர புலி.

"எப்படியாவது கயல் விழிக்கு நல்லது நடந்தா சரி,நாங்க ஒதுங்கிக்றோம்" என்று மூவரும் ஒத்துக் கொண்டு வெளியேறினர்.

மீண்டும் அந்த TV ல் , "உலகத் தொலை காட்சிகளிலேயே முதல் முறையாக,ஒரு பார்வை அற்றவருக்கு உதவி செய்கிறோம்" மற்றும் "கயல் பார்வை போனது எப்படி ,குற்றம் நடந்தது என்ன?"  என்று மீண்டும் மீண்டும் விளம்பரப் படுத்தி , கயல் விழி ஆபரேஷன் செய்து, கண் கிடைத்து மகிழ்வதை கூட விடாமல்  Live ஆக காட்டி அந்த TV 'டி ஆர் பீ '  ரேட்டிங்கை உச்சத்தில் கொண்டு நிறுத்தியதை சொல்லவும் வேண்டுமா?



டிஸ்கி: நான் இந்த கதையை ,தமிழ்  பதிவுலக ஜாம்பவான்கள், கேபிள் சங்கர்,செங்கோவி, டாக்டர் ஐடியா மணி,அவிய்ங்க ராசா மற்றும் எண்ணிலடங்கா அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் , என்னையும் மதித்து, follow செய்யும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் சமர்ப்பிக்கின்றேன். ஏன்ன, நீங்க இல்லேன்னா , நான் இல்ல...

     "சொன்னா தெரியாது ,சொல்லுக்குள்ள அடங்காது,
     என் மேல நீங்க வச்ச அன்பு, பாசம்"

..யோவ் யாருயா DJ அது ...நிப்பாட்டுயா பாட்ட ....எனக்கு தல ரசிகனும் வேணும் ,  தளபதி ரசிகனும் வேணும் ...ரைட்டா , ரைட்டு...

  இப்ப நீங்க என்ன பண்ணணும்ன , யுடான்ஸ் லோகோ பக்கதுல Like இருக்கு பாருங்க ,அங்க வச்சி ,சும்மா  'நச்' னு.. ஒரு ...சீ சீ , அதுல்லங்க , உங்க mouse ஆல ஒரு செல்ல 'குட்டு' ...அம்புடுதேன்.






 

குறிப்பு : மேல உள்ள வணக்கம் இமேஜ் ,கூகிள் ஆண்டவர் கொடுத்தது , அது உங்கதுன்ன , உங்களுக்கும் என்னோட நன்றி தலைவா!

6 comments:

  1. உண்மையில் நண்பா சூப்பர்.....

    ஓட்டு போட்டாச்சு

    ReplyDelete
  2. @veedu
    மிக்க நன்றி!முதல் மழை உங்களுதா? மிக்க மகிழ்ச்சி!

    ReplyDelete
  3. @Arun J Prakash

    Thanks a bunch friend!

    ReplyDelete
  4. கதை நல்லா இருக்கு. வித்தியாசமான சிந்தனை..
    வாழ்த்துகள்.
    அப்படியே என்னோட கதையையும் படிச்சுடுங்க..
    http://venpuravi.blogspot.com/2011/10/blog-post_30.html

    ReplyDelete
  5. @வெண் புரவி
    Thanks a lot, will read yours.

    ReplyDelete

படித்தது பிடித்தால் நண்பர்களுக்கு என் பதிவை, மறக்காமல் ,மறக்காமல் அறிமுக படுத்துங்கள்,அப்படியே ,எனக்கும் உங்கள் முத்தை உதிர்த்து விட்டு சென்றால் நானும் பதிவுலகில் பணக்காரன் ஆவேன் உங்கள் தயவில் :-)