சமீபத்தில் எப் எம் வானொலியில் , இந்த பழைய பாட்டைக் கேட்டேன். SP பாலா வின் தேன் குரலில், இளையராஜாவின் அற்புதமான இசை அமைப்பில் கேட்கவே சுகமாக இருந்தது. இந்த பாட்டை நல்ல ஸ்டீரியோ எபக்டில் வைத்துக் கேட்டால் , ஆகா , சுகமோ சுகம். பாடல் வரிகளும் மிகவும் ரசிக்கத் தக்கதாகவும் இருந்தது.
இதற்கு முன், இந்த பாடலின் காட்சி அமைப்பை பார்த்திருக்கவில்லை , அதனால் இதை எப்படி காட்சிப்படுத்திருப்பார்கள் என்று அறிய ஆவாலாக இருந்தேன். அதிலும் இந்த பாடலில் வரும் 'எப்படி ,எப்படி' மேலும் ஆர்வத்தைத் தூண்டியது.
இதே 'எப்படி , எப்படி' யை தான் , தேவி ஸ்ரீ பிரசாத், 'வாடா மாப்பிள்ளை ,வாழப்பழத் தோப்பில வாலி பால் ஆடலாமா ' என்ற பாடலில் கூட உபயோகப் படுத்தியிருப்பார்.
இப்படி பல எதிர்பார்ப்புகளுடன் , யு டூபில் தேடினேன், உடனே கொடுத்தான் கூகிள் ஆண்டவன். ஆனால் காட்சி அமைப்பு என்னை நன்றாக ஏமாற்றி விட்டது.
முதல் ஏமாற்றம் , இதில் நான் கார்த்திக்கை எதிர்பார்க்கவில்லை. இதுல டபுள் ஆக்ட் வேற. தலைவர் பென்சில் கோடு மீசை வேறு , ஒரே ஜோக்காக இருந்தது.
அதிலும் சுலக்சனாவை , சில்க் பிட்டு பட ரேஞ்சுக்கு , காட்சிப் 'படுத்தி' இருந்தார்கள். படிச்சவன் பாட்டை கெடுத்தான் என்பது மாதிரி, இதை எடுத்தவர் பாடிக் கெடுத்து விட்டார்.
நீங்களும் இந்த பாட்டை 'கேட்டு' , என்ஜாய் பண்ணுங்களேன்.