Sunday, June 2, 2013

என்னை அறியாமலே!

அது என்னவோ தெரியல , நம்மக்கு ரொம்ப வயசாகலன்னக் கூட , ஒரு காலத்தில் கருப்பு வெள்ளைக் கால பாடல் என்றாலே காத தூரம் ஓடிய நான் 
அவ்வப்போது சில கருப்பு வெள்ளைக் கால பாடல்களைக் கேட்கும் போது , அட அட என்னமா எழுதி பாடியிருக்காங்க அப்படின்னு தோணும்.

அப்படி சமீபத்தில் தோன்றியது ரெண்டு பாடல்கள்.

முதலில் ,  சமீபத்தில் சூது கவ்வும் பாடலில் வந்த , 'இதுவும் கடந்து போகும்' என்ற பழைய பாடல் படத்தின் இறுதி கட்டத்தில் இயக்குனர் சேர்த்திருப்பார் . இதற்கு முன் இதைக் கேட்டதில்லை. ஆனால் அதைக் கேட்டபோது அட ஆமால்ல , என்னமா அனுபவிச்சி எழுதி இருக்காங்க அப்படின்னு  தோணியது. ஏனென்றால் , அது நிதர்சனமான உண்மை. உங்கள் வாழ்வில் மிகப் பெரிய இன்பம் வந்தாலும் , அல்லது பேசாம செத்துரலாமா என்று மன உளைச்சலில் இருந்தாலும் , இந்த மூன்று வார்த்தையை உளமார நம்புங்கள் , ஆம் அதுதான் 'இதுவும் கடந்து போகும்'.

இதைப் பற்றி கூகுளிடம் கேட்டபோது , பார்வையில் விழுந்தது இந்த பேச்சு...


 நீங்களும் கொஞ்சம் கேளுங்கள் ,  அருமையான பேச்சு, இது உண்மை.

அப்புறம் இன்னொரு பாட்டு....இந்த காதல் பாட்டு ...நானும் இசைப் புயலில் இருந்து , தமன் , ஜிப்ரான் மற்றும் ரகு நந்தன் வரை கேட்பவன் தான் , ஆனாலும் இந்த பாடலை , இரவு பத்து  மணிக்கு மேல் , இங்கே உள்ள யெப்  எம் இல் கேட்டபோது , சுகம் சுகம் ....



நன்றி வணக்கம்.