அது என்னவோ தெரியல , நம்மக்கு ரொம்ப வயசாகலன்னக் கூட , ஒரு காலத்தில் கருப்பு வெள்ளைக் கால பாடல் என்றாலே காத தூரம் ஓடிய நான்
அவ்வப்போது சில கருப்பு வெள்ளைக் கால பாடல்களைக் கேட்கும் போது , அட அட என்னமா எழுதி பாடியிருக்காங்க அப்படின்னு தோணும்.
அப்படி சமீபத்தில் தோன்றியது ரெண்டு பாடல்கள்.
முதலில் , சமீபத்தில் சூது கவ்வும் பாடலில் வந்த , 'இதுவும் கடந்து போகும்' என்ற பழைய பாடல் படத்தின் இறுதி கட்டத்தில் இயக்குனர் சேர்த்திருப்பார் . இதற்கு முன் இதைக் கேட்டதில்லை. ஆனால் அதைக் கேட்டபோது அட ஆமால்ல , என்னமா அனுபவிச்சி எழுதி இருக்காங்க அப்படின்னு தோணியது. ஏனென்றால் , அது நிதர்சனமான உண்மை. உங்கள் வாழ்வில் மிகப் பெரிய இன்பம் வந்தாலும் , அல்லது பேசாம செத்துரலாமா என்று மன உளைச்சலில் இருந்தாலும் , இந்த மூன்று வார்த்தையை உளமார நம்புங்கள் , ஆம் அதுதான் 'இதுவும் கடந்து போகும்'.
இதைப் பற்றி கூகுளிடம் கேட்டபோது , பார்வையில் விழுந்தது இந்த பேச்சு...
நீங்களும் கொஞ்சம் கேளுங்கள் , அருமையான பேச்சு, இது உண்மை.
அப்புறம் இன்னொரு பாட்டு....இந்த காதல் பாட்டு ...நானும் இசைப் புயலில் இருந்து , தமன் , ஜிப்ரான் மற்றும் ரகு நந்தன் வரை கேட்பவன் தான் , ஆனாலும் இந்த பாடலை , இரவு பத்து மணிக்கு மேல் , இங்கே உள்ள யெப் எம் இல் கேட்டபோது , சுகம் சுகம் ....
நன்றி வணக்கம்.
No comments:
Post a Comment
படித்தது பிடித்தால் நண்பர்களுக்கு என் பதிவை, மறக்காமல் ,மறக்காமல் அறிமுக படுத்துங்கள்,அப்படியே ,எனக்கும் உங்கள் முத்தை உதிர்த்து விட்டு சென்றால் நானும் பதிவுலகில் பணக்காரன் ஆவேன் உங்கள் தயவில் :-)