நண்பர்களே , என் உறவினர் ஒருவர் மருத்துவராக சென்னையில் பணி புரிந்த பொழுது ,அவரின் வேலையில் ஏற்பட்ட சில நிகழ்வுகளை பகிர்ந்த போழ்து , சிக்கிய விடயங்களை இரண்டு பதிவுகளாக கொடுக்க எண்ணியிள்ளேன் , இது முதல் பதிவு:
என் உறவினர் அன்று வழக்கம் போல் சென்னை அரசாங்க மருத்துவ மனையில் , தன் மருத்துவப் பயிற்சியை மேற்கொண்டிருந்த போது , ஒரு வயதான அம்மா , ஒரு இளம் பெண் , மற்றும் ஒரு நடுத்தர வயதுப் பெண் , என் உறவினரை அணுகினர்.
அந்த வயதான பெண்மணி ,
"டாக்டர் , (அந்த இளம் பெண்ணை சுட்டிக் காட்டி ), இது என் மருமகள் , நாங்கள் , பேசிகொண்டிருந்த பொழுது , என் மருமகளின் வயிறு தீடிர் என்று வீங்கி விட்டது , பயங்கரமாக வயிறு வலிக்கிறது என்கிறாள் ,அவளுக்கு என்ன பிராப்ளம் என்று பாருங்க "
"பொருங்க நான் செக் பண்றேன் "....
சில நிமிட சோதனைக்குப் பிறகு , " மேடம் , உங்க மருமக கர்ப்பமா இருக்கா "
அந்த மாமியார் சில கணம் அதிர்ச்சியுற்று , "டாக்டர் அது எப்படி , என் மகன் , இவ புருஷன் , வெளி நாட்டில் வேலை செய்கிறான் , அவன் ஊருக்கு வந்து ஒரு வருசத்துக்கு மேல ஆச்சு , நீங்க கொஞ்சம் நல்லா செக் பண்ணுங்க "....
என் உறவினரும் , மற்ற டாக்டர்களும் இது ஒரு விவகாரமான கேஸ் என்பதை புரிந்து கொண்டனர்.
அவர்களுக்குள் டிஸ்கஸ் செய்துவிட்டு ,
"அம்மா , இங்க பாருங்க , நீங்களும் , உங்க மருமகளும் உள்ள வாங்க ..."
என்று அவர்களை உள்ளே அழைத்து , மருமகள் பிரசவ வலியில் இருப்பதை சுட்டிக் காட்டி, அந்த மாமியார் மற்றும் அவர் உறவினப் பெண் முன்னிலையே , அந்த இளம் பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்டது ...
வெற்றிகரமாக குழந்தை வெளியே எடுக்கப்பட்டு , அந்த இளம் பெண் ரெஸ்ட் எடுக்க வார்டில் அனுமதிக்கப்பட்டாள் . அந்த மாமியாரிடமும் , உடன் வந்த உறவினப் பெண்ணிடமும் , அந்த குழந்தை மருமகளுக்குதான் பிறந்தது என்று எழுதி வாங்கப்பட்டது .
பின் அந்த மாமியாரிடம் விசாரித்த போது :
"என் மகன் , வெளி நாட்டில் வேலை செய்கிறான். அவன் தான் மூத்த மகன் "
"என் வீட்டில் அவனைத் தவிர , எனக்கு இரண்டு மகன்கள் ".
"என் இரண்டாவது மகன் , கல்யாணம் ஆனவன் ,அவன் உண்டு அவன் வேலை உண்டு என்று இருப்பான் "
"என் மூன்றாவது மகன் , பிளஸ் டூ படிக்கிறான் ...என் மருமகள் அவனுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பாள் ..அவர்கள் இருவரும் நன்றாக பேசிக் கொள்வார்கள்"
என்று குடும்ப சூழ் நிலையை விளக்கினார்.
அந்த பெண்ணிடம் விசாரிக்க , "இந்த விபத்தின் சூத்திரதாரி அந்த பிளஸ் டூ படிக்கும் மாணவன் என்று புலப்பட்டது ".
விஷயம் கேள்விப்பட்டவுடன் , அந்த வெளி நாட்டு கணவன் , உடன் சென்னை வந்திறங்கினான்.
அந்த குழந்தை , வலுக் கட்டாயமாக , தாயிடம் இருந்து பிரிக்கப்பட்டு , மாமியாரிடம் கொடுக்கப் பட்டது .
கணவன் , அந்த மனைவிக்கு மட்டும் டிக்கட் எடுத்து உடன் அழைத்து சென்றான் மருத்துவ மனையில் இருந்து நேராக .
ஆகவே, நண்பர்களே , "ஆதலால் காதல் செய்வீர்!"...
தொடரும் ....
No comments:
Post a Comment
படித்தது பிடித்தால் நண்பர்களுக்கு என் பதிவை, மறக்காமல் ,மறக்காமல் அறிமுக படுத்துங்கள்,அப்படியே ,எனக்கும் உங்கள் முத்தை உதிர்த்து விட்டு சென்றால் நானும் பதிவுலகில் பணக்காரன் ஆவேன் உங்கள் தயவில் :-)