நாங்கள் சிறுவர்களாக இருந்த போது , தப்பித் தவறி வானத்தில் ஏரோப்பிளேன் பறந்தால் போதும்.
நாங்களும் கொஞ்ச தூரம் தரையில் அதனை விரட்டிச் செல்வோம் அது கண்ணுக்கெட்டும் தூரம் வரை.
அதிலும் பசங்கள் விடும் கமண்ட்ஸ் :
"டே ஒரு வெள்ளைக்காரி டாட்டா காட்டுறா "
"டே டிரைவர் நம்மளப் பாத்து சிரிக்கிறார்டா "
அந்த பிளேன் போவதோ , பல அடிகள் உயரத்தில் ....அங்கிருந்து பார்த்தால் , நாமெல்லாம் ஒரு சிறு எறும்பே.
இன்று தின மலரில் இந்த படத்தைப் பார்த்தவுடன் , சிரிப்பு தாளவில்லை. நாங்கள் அன்று டவுசர் போட்ட விபரம் அறியா பச்சைப் பிள்ளைகள். இவர்கள் , வேட்டி கட்டிய , அரசியல் வியாதிகள். இதில் எத்தனைப் பேர் , பதவியில் உள்ளவர்களோ. இவர்கள் கையில் , வேட்டிக்கும் ,சேலைக்கும் ஆசைப்பட்டு ஓட்டைப் போட்ட மாக்களே , நீங்கள் மக்கள் ஆவது எப்போது?
நன்றி தினமலர்.
இவர்கள்தான் பகுத்தறிவு பாசறையில் உதித்தவர்கள்! என்ன செய்வது? நம் தலையெழுத்து இப்படி ஆகிவிட்டது!
ReplyDeleteஇல்லாத கடவுளுக்கு பூசை புனர்காரியங்கள் செய்வதில்லையா? அது போலத்தான் பக்தி முற்றினால் புத்தி பேதலிக்கும், அது ஆன்மிகமோ அரசியலோ எதுவோ.
ReplyDelete