Wednesday, August 20, 2014

இரா.பார்த்திபன் செய்தது சரியா?

கதை , திரை...டைரெக்சன் படத்தைப் பற்றி , இடைவிடாமல் தொல்லைக் காட்சியில் தொல்லை செய்தார்கள் . சும்மா சொல்லக் கூடாது , அதிலேயே படத்தில் வரும் சில வசனங்களைத் தூவி எதிர்பார்ப்பை எகிற வைத்தார்கள். என் மனதில் தோன்றியது , நம் பிரபல பதிவரும் அவர் படத்தில் இது போல் வசனங்களை வைத்து , நம் எதிர்பார்ப்பை தூண்ட வைத்ருக்கலாமென்று.ஆனால் அவரின் டீசரில் ஒன்னையும் காணோம் . ஆனால் சூப்பர் அப்படி, இப்படின்னு அல்லைகைகள் அலும்பு தாங்க முடியலப்பா! அண்ணா , கொஞ்சம் டீசறை மாத்துங்கன்னா ... பாப்போம் சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் ,  ஐ யாம் வைடிங் .

பணப் பற்றாக் குறையோ என்னமோ, சன் நூசில் , திரையுலகத்தில் ஒரு புரட்சி என்ற ரீதியில் ,'விவாத மேடை' என்ற நிகழ்ச்சி வாயிலாக செய்த பட புரமோசன் ஒன்றில்  , நம்ம டைரக்டரிடம்  ஒருவர் கேட்டார்..."சார் , புதிய பாதைக்கபுரம் , இந்த படத்தில்தான் சார் , நீங்க மீண்ட்ருக்கீங்க என்ற ரீதியில் நெஞ்சை நக்கினார் "...பார்த்திபனிடம் ஒரு சங்கடமான ஆமோதிக்கும் ஒப்புதல் சிரிப்பு ...அதைக் கேட்டவுடன் எனக்கும் அதே கேள்வி தான் ....

புதிய பாதையில் உச்சத்தைத் தொட்டவர் , சுகமான சுமைகள் என்று கண்ணீரை "பக்கட் பக்கட்" டாக கொட்டுமளவுக்கு  படம் எடுத்தார். ஆடியன்ஸ் ஒரே அப்செட். அடுத்து 'பொண்டாட்டி தேவை' என்று எடுத்து 'குட் மார்னிங்' என்று கன்றாவி கிரியேட்டிவிட்டியை தன் 'குரு' போல் வைத்து ஒப்பெத்தினார். பருப்பு வேகவில்லை.

என்ன பண்ணுவது என்று தெரியாமல் , 'உள்ளே வெளியே' என்று , டபுள் மீனிங் படத்தை வெளியிட்டார். படம் அவரின் வயிற்றையும் , வாயையும் நிரப்பியது. அடுத்து பூஜைப் போட்டே காசு சம்பாரிப்பவர் என்று பேர் வாங்கினார்.

க.தி.வ.டைரக்சன் படத்தில் அவர் வசனம் வைத்தது :  'குடும்பத்தோடு படம் பாக்க , அதென்ன பொண்ணு பாக்க போர மாதிரியா,போனமா , விசிலடிச்சமா , வந்தமான்னு இல்லமா' .  இப்பவும் , அப்பவும் அவர் நிலை போலும். அதனால் தான் , 'பச்சக் குதிரை ' என்று , மீனாவையும் , கும்கி நமீதாவையும் புரட்டி எடுத்தார்.

'வித்' -அ -கன் ' என்று வார்த்தை ஜாலத்துடன் பரீட்சித்துப் பார்த்தும் போனியாகவில்லை. காலம் ஓடிக் கொண்டிருக்கிறது . அவரின் இந்தப் படத்தில் சொல்வது போல் , டிரண்டு மாறிக் கொண்டிருக்கிறது.

குறும்படம் எடுக்கிறார்கள் , வெற்றி பெற்று , அடுத்த படம் எடுக்கிறார்கள். என்ன பண்ணுவது என்று யோசித்தார். பலர் பிற மொழி படங்களின் குறுந்தகடைப் பார்த்து , உட்டாலக்கடி பண்ணி , காசை அள்ளுவதைப் பார்த்தார். உள்ளம் கொதித்தது.

பொதுவாக , சினிமாவைப் பற்றி படம் எடுத்தால் , ஓடவே ஓடாது என்பது திரையுலக விதி. அதையும் மீறி , கதையே இல்லை என்று சொல்லியாகிவிட்டது , ஆனால் , கதையை விவாதிக்க , ஒரு சினிமா களம் தான் லாயக்கு என்று முடிவு செய்தார். பல படங்களின் டிஸ்கசன் போல் , திரை கதையை கோர்க்க ஆரம்பித்தார்.

பொதுவாக சினிமா டைரக்டர்கள் , தங்கள் முதல் படத்தின் கதையில் , தங்கள் வாழ்வில் நடந்த சுவையான காதல் கத்திரிக்காய் சமாசாரங்களை சீனாக வைப்பார்கள். இந்த படத்திலும் அதே போல் , ஹீரோ டைரகிடர் செய்வதாகக் காட்டி , குத்திக் காட்டுகிறார்.

ஆர்யா, அமலாப் பாலை வைத்து நெஞ்சை நக்கும் ஒரு குறும் படம் எடுத்துக் காட்டுகிறார். சூது கவ்வும் படத்தில் வரும் இல்லாத பெண் ஒன்றை இருப்பது போல் காட்டியதையும் கிண்டல் செய்து , இதிலும் ஒரு சீன் வைத்து தன ஆத்திரத்தை தீர்த்துக் கொள்கிறார்.

என்னடா பெருசா சீன் பிடிக்றீங்க , 'அந்தக் காலத்திலேயே' டுவிஸ்ட் வச்சு படம் எடுத்திருக்காங்க என்று சில பல கருப்பு வெள்ளைப் படங்களைக் காட்டி, 'நூறாண்டு கால சினிமாவுக்கு டிரிபுட் ' என்ற விளம்பரத்திற்கு அர்த்தம் சொல்லிக் கொடுக்கிறார்.

திடீர் என்று , ஹிரோவும் , ஹிரோயினும் , தனித் தனியாக குளிப்பதைக் காட்டி சூடேத்துகிறார். கேட்டால் , 'ஆடியன்ஸ் வெக்ஸ் ' ஆயிடுவாங்கன்னு ப்ரொட்யுசர் கவலைப் பட்டார் என்று சால்ஜாப்பு சொல்லி பலியை நம் மீது போட்டுவிடுவாராக்கும். ஆனால் உண்மை என்னவென்று , எனக்கு அவர் சன் தொலைக் காட்சியில் காலை வணக்கம் நிகழ்ச்சியில் சொன்னதில் இருந்தே அவரைப் பற்றி புரிந்து கொள்ள முடிந்தது . அவரிடம் , 'நீங்க இப்ப எந்த கீரோயின் கூட கிரோவா நடிக்க ஆசைப் படுறீங்க ' என்று கேட்டதுக்கு , 'நித்யா மேனன் ' என்று சொல்லி 'ஏ' ன்னா அவங்கதான் 'ஹெவியா ' நடிப்பாங்க என்று புன்முறுவலுடன் சொல்லியதில் இருந்தே.

அவரிடம் திறமை இருக்கிறது இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அவரும் சராசரி மனிதன் தானே. அவரின் இப்படத்தில் தம்பி ராமையா சொல்வது போல் , 'திறமை , அனுபவம் ' மட்டும் போதாது , லக்கு வேணுமாம் , அதுக்கு நான் எங்கே போவேன்' என்று வசனம் வரும். அதனால் தான் என்னவோ   இரா .பார்த்திபனில் இருந்து ராதா கிருஷ்ணன் பார்த்திபனாகி 'லக்'கை தேடிக் கொண்டுள்ளார்.

படத்தில் எனக்குப் பிடித்த ஒரே வசனம் ,

அமலா பால் ஆர்யாவிடம் :  இன்னைக்கு நைட் என்ன டிப்பன் ?
ஆர்யா:  நீ போதும்!

அப்புறம் நானும் இரா.பார்த்திபன் விசிறி தானே அப்புறம் எப்படி இருப்பேன் ...இல்ல இல்ல இராதா கிருஷ்ணன் பார்த்பன் விசிறியாக்கும்!


'அஞ்சால்' அலுப்பு மருந்துக்கு இது எவல்லவோ தேவலை ...போங்க என்ஜாய் பண்ணுங்க , அப்புறம் மறந்திடுங்க!



No comments:

Post a Comment

படித்தது பிடித்தால் நண்பர்களுக்கு என் பதிவை, மறக்காமல் ,மறக்காமல் அறிமுக படுத்துங்கள்,அப்படியே ,எனக்கும் உங்கள் முத்தை உதிர்த்து விட்டு சென்றால் நானும் பதிவுலகில் பணக்காரன் ஆவேன் உங்கள் தயவில் :-)