சின்ன வயதில் நாம் ஓடி ஆடி விளையாட எத்தனை வித விதமான வாய்ப்புகள் இருந்தன என்பதை எண்ணி பாக்கும் பொழுது ,அடடா , சுகமான அந்த நாட்கள், மீண்டும் வாராதா...
பட்டாம் பூச்சி விரட்டியது
கிட்டி புள்ள விள்ளாண்டது
கோலி குண்டு அடித்தது
பொன் வண்டு பிடித்தது
மழையில் காகித கப்பல்
கிரிகெட் தென்னம் மட்டையில்.
டென்னிகாட் , பையர் இன் தி மௌன்டைன்
டாக் அண்ட் தி போன்
கண்ணாமூச்சி லே லே
குலை குலையா முந்திரிக்கா
ஐஸ் பால் ஓட்டம்
பாண்டி ஆட்டம்
தாயக் கட்டை
ராஜா மட்டி
ஆனால் இன்று குழந்தைகள் விளையாட இவ்வளவு வாய்ப்புகள் உள்ளதா என்று பார்த்தால் , நிச்சயமாக இல்லையென்றே சொல்ல முடியும். காரணம் மாறி வரும் டிரன்ட், இட நெருக்கடி , படிப்பே பிரதானம் என்று எதுகெடுத்தாலும் அந்த டூஷன்,இந்த டூஷன். கிடைக்கும் விடுமுறை நாட்களில் ,போகோ டிவி ,கம்ப்யுட்டர் கேம்ஸ் என்று உக்கார்ந்த இடத்தை விட்டு நகராமல் மணிகணக்கில் தவம். இதனால் குழந்தைகளுக்கு பல பிரச்சினைகள் , அதில் முக்கியமானது , குழந்தைகளுக்கு போதிய உடற்பயிற்சியின்மை.
குழந்தைகளுக்கு பிடித்த டிவி , அதில் அவர்களுக்கு பிடித்த கேம்ஸ் , அதே சமயம் அவர்களுக்கு உடற்பயிற்சியும் கிடைக்க வேண்டும். என்ன செய்யலாம் ? உண்மையிலேயே உக்காந்து யோசித்து, மைக்ரோசாப்ட் அதற்க்கு தீர்வு ஒன்று கொண்டு வந்துள்ளது:
Microsoft XBOX 360 Kinect
இந்த Kinect என்ற சென்சார் தான் இந்த தீர்வின் காரண கர்த்தா. உங்களுக்கு பிடித்த விளையாட்டை டிவி யில் ஓட விட்டு , நீங்கள் எழுந்து நின்று கொண்டு , நீங்களே அந்த விளையாட்டில் பங்கு கொண்டு , உங்கள் உடலை அசைப்பதன் மூலம் அதில் பங்கு கொள்ளலாம். சும்மா சொல்லக் கூடாது , ஒவ்வொரு விளையாட்டும் அருமை.
உங்கள் குழந்தைகள் டான்ஸ் ஆடுவதில் விருப்பமா,அதுக்கும் உள்ளது கேம்,
திரையில் வரும் உருவம் சொல்லிக் கொடுப்பதை ஆடி பழகலாம்.
அவர்களுக்கு விலங்குகள் மேல் பிரியமா, Kinectimals உள்ளது.
உங்கள் ஊரில் , இயற்கை எழில் கொஞ்சும் பார்க் இல்லையா ,அதில் மெது ஓட்டம் ஓட வேண்டும் என்று கனவில் மட்டுமே நினைத்ததுண்டா ..வெளியில் ஓடினால் மற்றவர்கள் பார்பார்களே என்று வெக்கமா ...உடல்பயிற்சி ஒரே போர் , அத யார் செய்வா என்று தள்ளிப் போடுகிறீன்களா, கவலை வேண்டாம் இருக்கவே இருக்கு , You Shape Fitness Evolved 2012.
இந்த விளக்க விடியோவை பாருங்கள்:
உடற்பயிற்சி விளையாட்டின் வீடியோ :
டிஸ்கி:
விலை என்ன , எங்கே கிடைக்கும் என்பதையெல்லாம் , கூகிள் ஆண்டவனிடம் கேளுங்கள் ,அவர் கொடுப்பார்.
No comments:
Post a Comment
படித்தது பிடித்தால் நண்பர்களுக்கு என் பதிவை, மறக்காமல் ,மறக்காமல் அறிமுக படுத்துங்கள்,அப்படியே ,எனக்கும் உங்கள் முத்தை உதிர்த்து விட்டு சென்றால் நானும் பதிவுலகில் பணக்காரன் ஆவேன் உங்கள் தயவில் :-)