நான் இன்று பஸ் நிறுத்தத்தில் பார்த்த கீழே உள்ள விஷயம் தான் இந்த பதிவின் கருப் பொருள்.
நாம் கேள்விப்பட்ட வரையில் , கைப்பாவை , பொம்மலாட்டம் போன்றவற்றை என்டேர்டைன்மென்ட் என்ற வரைமுறைக்கு மட்டும் உட்படுத்தாமல் அதையும் தாண்டி சுதந்திரப் போராட்டம் , ராம இதிகாசக் கதைகள் ,புரட்சி போன்ற விசயங்களுக்கும் உபயோகப் படுத்தியதாக நாம் கண்டு ,கேட்டு,படித்து இருக்கிறோம் இதுவரையில்.
நாம் கேள்விப்பட்ட வரையில் , கைப்பாவை , பொம்மலாட்டம் போன்றவற்றை என்டேர்டைன்மென்ட் என்ற வரைமுறைக்கு மட்டும் உட்படுத்தாமல் அதையும் தாண்டி சுதந்திரப் போராட்டம் , ராம இதிகாசக் கதைகள் ,புரட்சி போன்ற விசயங்களுக்கும் உபயோகப் படுத்தியதாக நாம் கண்டு ,கேட்டு,படித்து இருக்கிறோம் இதுவரையில்.
'அவள் பெயர் தமிழ் அரசியில் ' கூட அத்துறையில் ஈடுபட்ட கலைஞர்கள் ,மிஞ்சி இருப்பவர்கள் , எவ்வாறு கால ஓட்டத்தில் ,சுத்தமாக வருமானம் இன்றி கொஞ்சம் கொஞ்சமாக நசிந்து கொண்டு வருகிறார்கள் என்றும் காட்டியிருப்பார்கள்.
சிங்கையில் கூட ,முக்கியமான சீன விசேஷ நாட்களின் போது ,அங்கங்கே கூடாரம் அமைத்து , இரண்டு மூன்று பொம்மைகளை வைத்து , சீன இதிகாசங்களை , உரத்த குரலில் , கிட்டதட்ட நம்ம ஊர் மாதிரி பாட்டுப் பாடி சொல்லிக் கொண்டிருப்பதை இன்றும் எளிதில் காணலாம். நானும் ஒரு நாள் ,வெகு சீரியசாக அதனைப் பார்த்து கொண்டிருந்தேன் , ஆனா ஒன்னும் புரியல ..நமக்கு சீன மொழி தெரியாது ,சரி பொம்மைய வச்சு என்ன விளையாட்டு காட்றாங்கன்னு ஒரு ஆர்வத்தில் பார்த்துக் கொண்டிருந்தேன். நான் பார்த்த வரையில் , இங்கும் ,ஒன்று அல்லது இரண்டு பேரே பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனாலும் விடாமல் அந்த ஆட்டம் போய்க் கொண்டுதான் இருந்தது.
ஏன் மக்களுக்கு இந்த மாதிரி விஷயங்கள் பிடிப்பதில்லை என்பதற்கு பல காரணங்கள் உள்ளது நம் எல்லோருக்கும் தெரியும். என்னைக் கேட்டால், புது வித உத்திகளை புகுத்தி , கண் கவர் வண்ணத்தில் பொம்மைகளை செய்து,நல்ல நகைச்சுவையில் புரியும்படியாக , குழந்தைகளை டார்கெட் செய்தாலே போதும்.
பதிவின் ஆரம்பத்தில் நான் போட்டிருக்கும் ImaginOcean என்ற அந்த மியூசிக்கல் பொம்மலாட்டம் அந்த வகையில் செய்து உலகமெங்கும் போய் பட்டயக் கிளப்பிகொண்டிருக்கிரார்கள் இந்த குழுவினர்.இப்போது சிங்கையில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நான் இன்னும் பார்க்கவில்லை, ஆனால் பல வருடங்களுக்கு முன் அமெரிக்காவில் டிஸ்னிலாந்தில் , Mermaid கதையை அவர்கள் பொம்மலாட்டத்தில் காட்டியபோதே அசந்துவிட்டேன். இந்த பொம்மைகளின் சிறப்பே ,இவை இருளில் ஒளிரக் கூடியவை..ப்லோரசன்ட் உபயத்தால்..அதுவும் அந்த பொம்மைகள் கையிற்றால் அசைக்கப் படாமல் , கம்ப்யூட்டர் துணையுடன் அசைக்கப்பட்டு,மிக தத்ரூபமாக , உண்மையில் அவைகள் பேசி நடிப்பதை போலவே இருப்பது அட்டகாசமான அனுபவம்.
அநேகமாக இந்த குழுவும் அந்த வகை யுத்திகளையே கையாண்டு இருக்கவேண்டும் என்று எண்ணுகிறேன்.
கீழே உள்ள காணொளியை காணுங்கள்... உங்களால் கண்டே பிடிக்க முடியாது அவைகள் இயக்கப்படும் பொம்மைகள் என்று ...இது கட்டாயம் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் கிடையாது...
ImaginOcen Video Clip
இந்த காணொளியில் அந்த காரக்டர்கள் காட்டும் முக பாவங்கள் அப்படியே கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் வகை அனிமேஷன் படங்களில் வருவதற்கு ஈடாக இருப்பதை பாருங்கள். நான் இப்போது நினைப்பது, படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் இதே உத்தியை பயன் படுத்தி ஒரு குழந்தைகள் படத்தை கூட எடுத்து ரசிக்க வைக்கலாம். இப்போதெல்லாம் குழந்தைகளை டார்கெட் வைத்து வரும் தமிழ் படங்கள் வெகுவாக குறைந்துவிட்டன. அமெரிக்காவில் , பள்ளி / கல்லூரி விடுமுறையை ஒட்டி , Spiderman போன்ற Super ஹீரோ படங்களை வெளியிட்டு நன்றாக கல்லா கட்டுவது நினைவுக்கு வருகிறது. ஆனால் நம் குழந்தைகள் இன்றைய தமிழ் ஹீரோக்களின் "வரம்பற்ற வன்முறைகளுக்கு" ஆளாகி , அவர்களின் ரசிகர்களாக கட்டாய மன மாற்றத்திற்கு அவர்கள் அறியாமலே தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
வீடியோ பார்த்து விட்டு வருகிறேன்....
ReplyDelete