இந்தப் பதிவின் தலைப்பில் தந்தை (நம்மக்கு தாத்தா?) பெரியார் எழுதியது போல் ஒரு புத்தகம் படித்தேன். நாம் இருக்கும் இக்காலத்தில் , ஆங்காங்கே சாதிக் கொடுமைகள் இருப்பதை நாம் கண்ணுற்றாலும் , பெரும்பாலும் நமக்கு இன்னல்கள் சுதந்தரத்திற்கு முன் இருந்தது போல் அவ்வளவு கொடுமையாக இல்லை என்பதே என் கருத்து. ஏன் என்றால் அந்த காலத்தில் எவ்வளவு கொடுமையாக இருந்தது என்று இந்த புத்தகத்தில் , கல்கண்டு புத்தக பாணியில் , பாயிண்ட் பாயிண்டாக எழுதியிருந்த சம்பவங்கள் , வயிற்றை கலக்கியது , நல்ல வேளை , பெரியாரும் மற்றும் அவரின் ஆதரவாளர்களும் உண்மைலேயே புரட்சி செய்திருக்கிறார்கள் என்பதை மனசாட்சி மற்றும் மனிதத்துவம் நெஞ்சில் கொண்ட எவரும் மறுக்க முடியாதென்பது என் திண்ணமான கருத்து.
அந்த புத்தகத்தில் நான் படித்த சில ஆச்சர்யங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்;
1925 க்கு முன்பு காந்தி அடிகள் தமிழ் நாட்டுக்கு வரும் போதெல்லாம் , மைலாப்பூரில் இருந்த சீனுவாச அய்யங்கார் வீட்டிற்கு உள்ளே செல்லாமல் திண்ணையில் தான்
உக்கார்ந்திருப்பராம்(உக்கார வைக்கப் பட்டிருக்கிறார் ). காந்திக்கே இந்த நிலைமை ?
இராசாராம் மோகன் ராய் , வேதங்களின் கருத்துகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தபோது, தங்களைத் தவிர வேற யாரும் படிக்கக் கூடாது என்று காரணம் காட்டி , பார்ப்னர்கள் அதற்க்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
வேலை கேட்டு மனுச் செய்த நாடார் சமூகத்தைச் சேர்ந்த ஓர் டாக்டருக்கு தென்னங் கன்றுகளை வாங்கிக் கொடுத்து , குலத் தொழிலை செய்யச் சொன்னாராம் திர்வான்கூர் சமஸ்தான திவான் ராமசாமி அய்யர்.
கீழ்ச்சாதி என்று சொல்லப் பட்டவர்கள் அரசாங்கத்துக்கு சம்பளமில்லாமல் வேலை செய்யவேண்டு என்று 1814 இல் திருவிதாங்கூர் அரசாங்கம் சட்டமே போட்டதாம்.
1916 இல் சென்னைக்கு படிக்க வந்த பார்ப்பனர் அல்லாத மாணவர்களுக்கு தங்க விடுதி இல்லை , பெரும்பாலனா ஹோட்டல்கள் பார்ப்பனர் நடத்தியதால் அவர்கள் அங்கே உணவருந்தவும் அனுமதிக்கப் படவில்லை.
சென்னையில் கீழ்பாக்கம் மருத்துவ மனையில் ,பார்ப்பன மன நோயாளிகளுக்கு தனிப் பிரிவாக சிகச்சை வழங்கப் பட்டதாம்.
இன்னும் நெறைய இருக்கு அதுல , முடிஞ்சா தேடித் பிடித்துப் படியுங்கோளேன்.
இந்தக் கொடுமைகள் எல்லாம் குறைந்தபின் என்னை பிறக்க வைத்த
ஈசனுக்கு நன்றி.
யாரும் ஆத்திரத்தில திட்டிபுடாதீங்க , அந்தக் காலத்தில் ஒடுக்கப் பட்டவர்களில் நீங்கள் இருந்தீர்கள் என்றால் உங்கள் மனம் என்ன பாடு பட்டிருக்கும் - put youself in their shoes.
நன்றி மீண்டும் வருக!

சாதிகள் இல்லா காலம் நிச்சயம் வரும் .கல்வியால் அந்த மாற்றம் வரும்..
ReplyDelete