தலைவர் சுஜாதா எழுத்துலகில் பல புதுமையை புகுத்தியவர் என்று சொன்னால் மிகையில்லை என்று அனைவரும் ஒத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். சமீபத்தில் அவர் ஒரு காலத்தில் ஆவியில் வெறும் 55 வார்த்தைகளில் எழுதிய சிறு கதைகள் கண்ணில் பட்டது. படித்ததும் ஆஹா வாத்தியார் வாத்தியார் தான் என்று தோன்றியது.
சரி நாமளும் ஒரு முயற்சி பண்ணலாம் என்று தோன்றி நான் கிறுக்கியது முதலில் கொடுக்கிறேன் . வாத்தியாரின் கதையின் தழுவலாகா இருப்பதால் நீங்கள் முன்கூட்டியே யூகித்துவிடுவீர்கள் எனவே முதலில் எனதுகதை பின்னர் அவரது கதை தொடர்கிறது.
அழகான சீன வாஸ்து பொம்மைகளை துடைத்து வைத்துக் கொண்டிருந்தான் அந்த வாஸ்து கடையில் வேலை செய்யும் குமரன். ஒரு வாடிக்கையாளர் வந்தவுடன் , விவரிக்க ஆரம்பித்தான். ''இந்த பச்சை டிராகனை கிழக்கில் வைத்தால் நீங்கள் விரைவில் கோடீஸ்வரர்..வெள்ளைப் புலி மேற்கில் , சிவப்பு பீனிக்ஸ் தெற்கில் , கருப்பு ஆமை வடக்கில் வச்சுப் பாருங்க சார் சீக்கிரம் நான் சொன்னது நடக்கும்'' .வாடிக்கையாளர் வாங்க விழையும் போது,
எங்கிருந்தோ வந்த கூட்டம் , 'எங்க ஆளக் கொன்னுட்டாங்க ,கடைய மூடுங்கடா ' என்று திபு திபு என கத்திக் கொண்டே ஓடியது...வேறு வழியில்லாமல் சடுதியில் கடை சட்டர் இறக்கப் பட்டது. 'இன்னைக்காவது சம்பளம் வாங்கிட்டு வாங்க , அப்பதான் ராவுக்கு சோறாக்க முடியும் என்று மனைவி சொன்னது குமரனின் மனதை பிராண்ட ஆரம்பித்தது!
இப்ப நம் வாத்தியார் எழுதிய கதை;
எப்படி தான் தமிழ் சினிமா இயக்குனர்கள் ஒன் லைனில் கதை சொல்லி தயாரிப்பாளர்களை மடக்குகிறார்களோ தெரியவில்லை...கேபிள் அண்ணனிடம் கேட்க வேண்டும் .
அப்பறோம் சுஜாதவை எனக்கு நேரில் பழக்கமே இல்லை ,ஒரு கல்லூரி விழாவில் தூரத்தில் இருந்து பாத்ததோட சரி ...உங்களை வரவழைக்க நான் செய்த யுக்தி , தவறாகப் பட்டால் மன்னியுங்கள் நண்பர்களே.
No comments:
Post a Comment
படித்தது பிடித்தால் நண்பர்களுக்கு என் பதிவை, மறக்காமல் ,மறக்காமல் அறிமுக படுத்துங்கள்,அப்படியே ,எனக்கும் உங்கள் முத்தை உதிர்த்து விட்டு சென்றால் நானும் பதிவுலகில் பணக்காரன் ஆவேன் உங்கள் தயவில் :-)