Tuesday, March 18, 2014

நிமிர்ந்து நில் - வேலைக்காகுமா ?

நிமிர்ந்து நில் படம் பார்க்கலாம் என்று தியேட்டருக்கு சென்றேன். போவதற்கு முன்னால் , படத்தின் கதை , 'எவனோ ஒருவன்' , 'ரமணா', மற்றும் 'அந்நியன்' சாயல் என்று மட்டும் தெரியும். சரி , போய் தான் பார்ப்போம் என்று போனேன்.

தியேட்டர்  வாசலிலயே , நிமிர்ந்து நிற்க வாய்ப்பு கிடைத்தது. அதாவது , டிக்கட் விலை ,  நூறு ரூபாய் , ஆனால் கொடுத்ததோ , ஏதோ ஒரு நுழைவுச் சீட்டு , நிச்சயம் அரசுக்கு வருமானம் போகும் , டிக்கட் அல்ல.  அதை தட்டிக் கேட்க , நான் என்ன கேபிள் அண்ணனின் 'கேட்டால் கிடைக்கும்', மெம்பர் ஆ என்ன. எங்க ஊரில் எல்லாம் சென்னை மாதிரி இல்லை. கேட்டால் , கேட்டதுக்கு மேலேயே மொத்து கிடைக்கும் ஊர். அதனால் பொத்திக் கொண்டு , உள்ளே நுழைந்தேன்.

படம் அப்படி , இப்படி என்று , நடை முறைக்கு ஒவ்வாத காட்சி அமைப்பில் சென்று கொண்டிருந்தது. பிற பதிவர்கள் இதன் விமர்சனத்தை அல்ரெடி பிரிச்சு மேய்ந்த்ருப்பார்கள் , எனவே அந்த தப்பை நான் செய்யப் போவதில்லை. கமல் அடிக்கடி சொல்வாரே, 'கடவுள் இல்லைன்னு சொல்லலே ,  அப்படி இருந்தா நல்லா இருக்கும்' , அதுபோல் , இந்த படத்தில் நடப்பது போல் , நடந்தா நல்லா இருக்கும் , ஆனா , நம் வாழ் நாளில் நடப்பது சந்தேகமே.

படத்தின் ஒரு சீனில் ,  ஜெயம் ரவி, டீ  குடிக்கலாம் என்று , போலிஸ் காரர் , தம்பி ராமையாவிடம் சொல்ல , தம்பி ராமையா , 'உன் டீக்கு நீ கொடு, என் டீக்கு நான் கொடுக்கிறேன் ' என்றார். அதைக் கேட்டவுடன் , எனக்கு அன்று காலையில் நடந்த நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது.

நான் வழக்கம் போல் , என் நாயைக் கூட்டிக் கொண்டு , வாக்கிங் சென்றேன். வழியில் , ஒரு வடைக் கடை. அந்த காலை வேளையில் அது மிகவும் பிசி.  எல்லா வடையும் வெறும் ஐந்து ரூபாய் தான்.

நான் வடை வாங்கலாம் என்று அந்த கடைக்குப் போனேன். அங்கே, இருவர் வடை சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அவர்களை எதேச்சையாப் பார்த்த பொழுது , அவர்களின் பெரிய விருமாண்டி மீசை என் கவனத்தைக் கவர்ந்தது. எங்கயோ இவரை  பார்த்திருக்கோமே , என்று என் மனம் அடித்துக் கூறியது.

அந்த இருவரில் ஒருவர், இருபது ரூபாய்  நோட்டை எடுத்து , வடைக் கடைகாரரிடம் நீட்டினார். உடனே அந்தக் கடைகாரர் , 'சார் வைங்க  சார் , இருக்கட்டும் ' என்றார். அதற்க்கு அந்த பெரிய மீசைக்காரர் , ' இல்ல அவர் சாப்பிட்டதுக்கு வாங்கிக்கோங்க ' என்று மற்றொருவரைக் காட்டி மீண்டும் இருபது ரூபாயை நீட்டினார்.

கடைக்காரர் , மிகவும் விபரமாக , 'சார் இந்த கடையே அவருதுதான் ' என்றார்.  என்னடா இது ஓவர் பில்ட் அப் ஆ இருக்கே என்று , அவர்கள் இருவரையும் கவனித்தபோது , அவர்களின் பேன்ட்  கலர் அவர்களை காட்டிக் கொடுத்தது.


நான் வடையை சுவைத்துக் கொண்டே இடத்தை காலி செய்தேன் . சும்மா சொல்லக் கூடாது , வடை செம டேஸ்டு .  என்னாது , நிமிர்ந்து நில்லா , அட போங்க சார், உங்க வெளாட்டுக்கு அளவே இல்ல. சமுத்திரக் கனியே , அமலா பால் கூட டூயட் பாட ரெடி யாயிட்டாரு.

இந்த காமடிய பாருங்க , உண்மை விளங்கும்:






1 comment:

படித்தது பிடித்தால் நண்பர்களுக்கு என் பதிவை, மறக்காமல் ,மறக்காமல் அறிமுக படுத்துங்கள்,அப்படியே ,எனக்கும் உங்கள் முத்தை உதிர்த்து விட்டு சென்றால் நானும் பதிவுலகில் பணக்காரன் ஆவேன் உங்கள் தயவில் :-)