எந்த ஒரு விஷயத்திற்கும் அதிக ஆர்ப்பாட்டம் செய்ததால் , சிறுது காலத்திற்கு அந்த ஈர்ப்பு இருக்கும் . சினிமா வியாபாரிகள் மற்றும் பொதுவாக வியாபாரிகள் , அந்த ஈர்ப்பை , காசாக மாற்றி தங்கள் குறிக்கோளை அடைந்து விடுவார்கள். கபாலி விஷயத்திலும் முன் போல் , மீடியாவை நன்கு கவனித்து , ஈர்ப்பை ஏகத்துக்கும் எகிறவைத்து , நன்றாக வசூலித்து விட்டார்கள். பொதுவாக மலிவான சரக்கு அதிக விளம்பரத்தில் நன்றாக விற்க வைக்கப்படும். இங்கும் அதுவே!
இத்தனை கோடி பணத்தை வாரி இறைத்து , மீண்டும் தங்கள் பெட்டியை ரொப்பிக் கொள்ள இந்த படம் வினியோகஸ்தர்களுக்கு உதவி உள்ளதே தவிர , இந்த படம் இவர்கள் எல்லாம் பீற்றியது போல் , ரஜினிக்கு ஒரு மகுடம் , மற்றும் தாணு கலைப் படைப்புக்கு ஒரு மகுடம் என்பது எல்லாம் , காதில் வைக்கும் பூ.
ஒன்றுமே புதிதாக எதுவுமே இல்லை. இந்த ரஞ்சித் அப்படி என்ன புதிதாக பண்ணினார் (மெட்றாஸில்) என்று இவருக்கு இந்த வாய்ப்பை கொடுத்தார்களோ தெரியவில்லை. அதிலும் , இந்த கதையில் அப்படி என்ன சிலிர்ப்பூட்டும் விஷயத்தை ரஜினி கண்டு கொண்டு ஓகே பண்ணினார் என்றும் தெரியவில்லை.
ஆரம்ப காட்சி , சங்கரின் படத்திலிருந்து உருவியுள்ளார். முடிவு காட்சி , மணிரத்தினத்தின் படத்தில் இருந்து உருவியுள்ளார். அதிலும் நாயகனில் கமலை கொல்பவன் அரை கிறுக்கு , இதிலும் டைகர் ஒரு அரை கிறுக்கு. அடங்கொன்னியா , புதுசா யோசிக்க மாட்டீங்களாடா!
பாவம் ரஞ்சித் என்ன பண்ணுவார் , திடீரென்று ஒரு லக்கி பிரைஸ் , ரஜினி ரூபத்தில் ...கிரியேட்டிவிட்டி ஒன்றும் தோன்றியிருக்காது அந்த பதட்டத்தில். எனவே , அது , இது என்று கொஞ்சம் கொஞ்சம் கிள்ளிப் போட்டு ஒரு அவசர சமையல் செஞ்சிருக்கார்.
உங்களுக்கெல்லாம் இந்த அனுபவம் கட்டாயம் ஏற்பட்டிருக்கும். பலர் சொன்னார்கள் என்று ஒரு உணவு விடுதிக்கு சாப்பிட செல்வீர்கள். சொன்னவர்கள் இது நல்லா இருக்கும் , அது நல்லா இருக்கும் என்று உங்களை ஏத்தி விட்டு இருப்பார்கள். நீங்களும் ஆர்வத்துடன் , அதை ஆர்டர் பண்ணிவிட்டு , ஆசையுடன் சாப்பிட்டு இருப்பீர்கள்...அப்புறம் தான் தெரியும் , அந்த அளவுக்கு உணவு ஒர்த் இல்லை என்று. என்ன செய்ய , உண்டாகிவிட்டது , பணத்தை கொடுத்துவிட்டு வெளியே வந்திருப்பீர்கள். கபாலியும் அது தான், நண்பர்கள், குடும்பம் என்று , பணத்தை வாரி இறைத்து விட்டு சென்றாகி விட்டது, என்ன ஓடுகிறதோ அதை பார்த்து விட்டு வெளியே வருவது தான். சிலாகிக்க ஒன்றும் இல்லை. எல்லாம் பாம்பாட்டி செய்யும் மோடி மஸ்தான் வேலை , வேற என்ன சொல்ல.
நேற்று டிவியில் , Focus என்ற Will Smith நடித்த படத்தை டிவி யில் முதல் முதலாக போட்டார்கள். ஒரு பிக் பாக்கட் காரன் எவ்வளவு சாமர்த்தியமாக மற்றவர்களை ஏமாற்றுகிறான் என்று காமிக்கிறார்கள். ஒவ்வொரு கட்சியும் யூகிக்க முடியாத காட்சிகள். எங்கேயும் கிளிஷே என்று சொல்லப்படுகிற சமாச்சாரம் இல்லை. நம்ம ஊர் டைரக்டர்கள் எப்ப இப்படி படம் எடுப்பார்கள்.
ரஜினி,கமல், அஜித், விஜய் என்று சுற்றி திரியும் கதா நாயகர்களே நீங்கள் நினைத்தால் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும். செய்வீர்களா , செய்வீர்களா?
கபாலி மாதிரி காலி டப்பா படங்களை ஒதுக்கிவிட்டு , கொடுக்கும் காசுக்கு நல்ல சரக்கு விற்கப் பாருங்கள்!!
மித மிஞ்சிய அதிரடி அலப்பறை செய்யும் போதே படம் ஊத்திக்கும் என்று தோன்றியது. ரஜினிகாந்த் பரிதாபமாக காட்சியளிக்கிறார்- படத்திலும் நிஜத்திலும்.
ReplyDeleteWhy don't u direct a movie with "guess what next" approach? Why don't u write a story? U guys are "online paper tigers" without conscious! Who needs ur stupid review. For Kabali?
ReplyDeleteWell, I can answer in the same manner. Who asked you to read my blog and give stupid reply. How does it feel my friend? I will ask you one thing, say I am ready to direct a movie, will your Hero be ready to give a chance to me? Don't give me this kind of shit, you know , your reaction is also cliche.
Delete