முஸ்கி: இந்த பதிவில் வரும் கருத்துக்கள் இந்த பதிவரின் சொந்த கருத்து.
"மன்னார் அண்ட் மன்னர் " கம்பனிக்கும் ,இதற்கும் எந்த சம்பந்தமும்
இல்லை. ஹை,ஹை நாங்களும் எஸ் ஆவமுள்ள ,
இப்ப என்ன செய்வீங்க ...இப்ப என்ன செய்வீங்க!
தென் தமிழகத்தின் ஒரு மூலையில் இருந்த குக்கிராமத்தில், பிறந்தவன் ராஜாமணி. ஆனால் அவன் பிறந்து கொஞ்ச நாள்ல , அவன் அம்மா இறந்து விட்டதால் ,
அவன் அப்பா "இனிமே உன் பேரை கூட சொல்லி கூப்பிட மாட்டேன்டா " சொல்லிட்டாரு. அப்புறம் ஊர்ல எல்லாம் சேந்து அவனுக்கு ஏனோ பேரே இல்லாம தான் கூப்டாங்க.
பய்யன் கெட்டிக்காரன். படிச்சு ஒரு நாள் , அப்பா நான் நகரத்துக்கு போய் பெரிய "ஆளா " ஆகப்போறேன் ன்னு சொல்லிட்டு போய்ட்டான்.
அப்புறம் கொஞ்சம் வருஷம் ஆச்சு.
ஒரு நாள் ஊரு பஸ் ஸ்டாண்ட்ல ,ராஜ மணி யோட ,சின்ன வயசு நண்பன் ஒருத்தன் இருக்கான்.அவனப் பாத்து இன்னொருத்தன்.
"என்னடா ,அடிக்கடி பேரு மாத்துவீயே,இப்ப உன் பேரு என்ன?"
"கும்புடுரன் சாமி "
"என்னடா ,எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே ?"
"இப்ப தான் பாலா சார் படம் பாத்தேன் ,அதுல இருந்து என் பேர மாத்தி வச்சுகிட்டேன் அப்படின்னு சொன்னான் அவன்.
"இப்படியே மாத்திகிட்டு இருக்காதாட, 'நூறு பேரு வச்ச அபூர்வ சிந்தாமணி" அப்படின்னு எவனாவது பட்டப் பேரு வைக்கப் போறானுங்க அப்படின்னு
சொன்னான் இவன்.
அவிங்க இப்படி பேசிகிட்டு இருக்குறப்ப , "சர் சர்" ன்னு ஸ்பீட் ஆ ஒரு கார் வருது . எல்லாரும் ஓடி போயி பாத்தா , 'அர டவுசர் ' போட்டுக்குட்டு ஸ்டைலா ஒருத்தரு இறங்குனாப்ல.
"யாருடா ?" அது , நாய் கீய் பிடிக்க வந்த்ருப்பனோ ,அவன் டவுசர் பாத்தா அப்படி தான் இருக்கு ,அப்பிடின்னு ஒரு பெருசு கேட்டுட்டு ,பொக்க வாய தொறந்து சிரிச்சாப்ல.
அந்த "அர டவுசர்" நேரா போயி அவுக அப்பா முன்னாலே நின்னாப்புல. "யாரு" அப்பிடின்னாரு அவுக அப்பா சைகையில.
"அப்பா நான் தான்பா"..
"நான் தான்பா ன்னு யாருடா ,எனக்கு அப்பிடி யாரும் மகன் இல்லியே,ஒருத்தன் இருந்தான்,அவன் எங்கயோ என்னமோ ஆகிறேனுட்டு போயிட்டான்"
"அப்பா நான் தான் பா அது"
"அட பாவி மக்கா , உன் பேர சொல்லிருகலாமில்லை"
"இல்லப்பா என் பேரு உங்களுக்கு பிடிக்காதா , அதுனால் எனக்கு இப்ப பேரே இல்லப்பா"
"சரி சரி உள்ளார போ".
மகனிடம் மெல்ல அவன் வேலையை பத்தி விசாரித்தார் . அவன் சொல்ல ஆரம்பித்தான்:
"எப்பா நான் பெரிய டாக்டர் பா.."
"அப்படியா,நல்லா வரும்படி வருமே.."
"ஆமாம்பா ,ஆனா பொழுது போலன்ன ,நாங்க தொரட்டி எடுத்துக்கிட்டு போவம்
"ஏண்டாப்ப இந்த வேல ..."
" இல்லப்பா ,பட்டனத்துல தென்னை மரம் ஜாஸ்தி , ஆனா ஒரு பயலுக்கும்
மரம் ஏறத் தெரியாது, தேங்காயெல்லாம் அழுகி , ஒரே 'நாத்தம்'...அதான்
சுத்தம் பண்றோம் ,அதுவும் "இலவசமா "...
"அட கருமம் பிடிச்சவனே ,இப்படி கூறு இல்லாம யாராச்சும் இருப்பங்கள"
"அப்பா,என்னப்பா இப்படி சொல்ற ,எல்லாம் ஒரு கணக்குப்ப,நான் மாட்டும் இல்ல ,நாங்க மூணு பேரு , ஒரு கம்பனி வச்சு இந்த சேவை செய்றோம் ,அதுனால நாங்க சொந்த வேல கூட பாகிரதிள்ள"
"சரி இப்ப என்னடா இங்க வந்தே"
"இல்லப்பா ,எங்க கம்பனிக்கு யாரவது சரியா காசு கொடுகலன்ன , நான் அடிகடி தூகிருவேன் ன்னு சொல்லுவேன் ,ஒருத்திய
பாத்து சொல்லி பஞ்சாயத்து ஆகி போச்சு,எல்லோரும் கம்பனிய கல்லெறிய ஆரம்பிச்சுடாங்க "
"அடடா ,காசு வாங்க மாட்டேன்னு சொன்ன ,சரி உங்க கம்பெனி பிரண்ட்சு வச்சு பஞ்சாயத்த பேசி முடிக்க வேண்டியது தான"
"பேசுநாங்க,இந்த கம்பனிக்கும் அவன் சொன்னதுக்கும் சம்பந்த மில்ல ,அப்பிடின்னு சொல்லி என்ன காப்பாதிடான்கப்பா ...
,எப்படிப்பா வெவரமா சொல்லிடோமில்ல?சரி விஷயம்
வெவகாரம் ஆகுரதுகுள்ள ,இங்க வந்து ஒளிஞ்சி கிடலாம்ன்னு வந்தேன் "
"அட புத்தி கெட்டவனே,உனக்கு ஏதாவது இருக்கா"
"என்னப்பா சொல்றீங்க"
"உனக்கு பின்னாடி ரெண்டு பேரு வச்சுதான கம்பெனி நடத்துறீங்க"
"ஆமா ,அவங்க இருக்காங்கன்னு தான் நான் தைரியமா அப்பிடி சொல்லிக்கிட்டு இருந்தேன் ,எல்லாம் கம்பனி, தேங்கா நாத்தம் இத போக வைக்க "
"நீ சரியான ஈ நாடா "
"ஏம்பா"
"அப்புறம் என்னடா ,ஒரு பஞ்சாயத்து ,அதுவும் கம்பெனி விவகாரம்ன, நாங்க எல்லாரும் பொறுப்பு ,மன்னிசிகுடுங்க அப்பிடின்னு சொன்னா பிரச்ன தீந்துசு"
"அதேபிடிப்பா, எங்க மானம் , கம்பனி மானம்"
"டே ,நல்ல யோசனை பண்ணு , நாளிக்கி இத விட பெரிய பஞ்சாயத்து வந்து,
எல்லாரும் சேந்து உன்ன மாட்டி விட மாட்டானுங்க ன்னு என்ன நிச்சயம்,
அப்ப பெரிய ஆபத்தா போயிடும்லாடா,நீ மட்டும் தானடா மாட்டுவ "
"ஆமாம்பா ,அப்படி ஒன்னு இருக்குல்ல , நான் நெனச்சே பாக்கல ,இப்ப என்னப்பா செய்ய சொல்றீங்க"
"பேசாம , தெரட்டி வச்சு தேங்கா 'புடுங்குறத' விட்டுட்டு , உன் டாக்டர் தொழிலைப் பாத்து ,உன் புள்ள குட்டிங்களுக்கு சொத்து சேறுப்பா!"
அவன் என்ன சொல்வது என்று தெரியாமல் 'ங்கே ' என்று விழித்தான்.
idhu nallaa irukke
ReplyDeleteSUPER...BOSS...
ReplyDeleteசெம கலக்கல் ...
ReplyDeleteநல்ல காமெடி...
ReplyDeleteஇது கதை என்றால், கொஞ்சம் வெளக்கவும்!
ReplyDelete:-)
கதைக்கெல்லாம் வெளக்கமா .... தெரிய வேண்டியவுங்க படிச்சி தெரிஞ்சா ஆச்சு, இல்ல மன்னர் அன் மன்னர் கம்பெனி கோகயா!
ReplyDeleteம்ம்.. நல்லா இருக்கு..!!
ReplyDelete