அலுவலக வேலையில் மும்முரமாக இருந்த விமலாவின் கவனத்தை கலைத்தது ,அவளின் செல்போனின் வைப்ரேசன். யாரென்று பார்த்தாள்,அவள் கணவன் - ஜெகதீஷ்.
"சொல்லு ஜேக்"
"யா விம்மி , இன்னிக்கி நைட்டு என்ன டின்னெர் செய்ய?"
"உன் சாப்பாட்ட சாப்ட்டு ஒரே போர்,வெளிய டின்னர் போலாமா?" என்று கேட்டாள் அவள்.
"ஓகே ,எங்க போகலாம், யுவர் சாய்ஸ்?" என்றான் ஜெகதீஷ்.
"நம்ம வீட்டுக்கு பக்கத்தில ஒரு ரெஸ்டாரன்ட் இருக்கே,அது பேர் என்ன ?"
"லெமன் கிராஷ்"
"யா ,அங்க போரம்" - விமலா.
"ஓகே ஸ்வீட்டி, சி யு தேர்" - ஜெகதீஷ் .
விமலா வரும் முன்னரே ,வேலையில் இருந்து வீட்டிற்கு திரும்பிய ஜெகதீஷ்,அவசரமாக காசுவல் டிரசுகு மாறினான். மறக்காமல் அவன் லேப்டாப் எடுத்துக்கொண்டு ,வீட்டிற்கு பக்கத்தில் இருந்த அந்த உணவகத்துக்கு நடக்க ஆரம்பித்தான்.
அரை மணி நேர காத்திருப்புக்கு பின் ,விமலா வந்து சேர்ந்தாள். "ஹாய் டியர்" என்று செல்லமாக அவளை ஒரு அவசர hug செய்து விட்டு, "கம் லெட்ஸ் கோ இன்" என்று ஆவலுடன் அந்த உணவகத்தில் நுழைந்தான்.அதன் வாசலில் இருந்த கண்ணாடி கதவில் "ப்ரீ wifi " என்று பெரிய ஸ்டிக்கர் ஒட்டி இருந்தது.
"குட் ஈவ்னிங் சார்" என்று வரவேற்ற அந்த பெண் waitress" ஐ பார்த்து , "table for two" என்றாள் விமலா. சாலையை பார்த்தபடி இருந்த,கண்ணாடி சுவருக்கு அருகில் இருந்த couch-ல் அமர வைக்கப்பட்டார்கள்.
முதலில் ஏதோ ஒரு mocktail-ஐ இருவருக்கும் ஆர்டர் செய்து விட்டு ,அது வரும் வரை , அந்த உணவகத்தின் interior design-ஐ ரசித்தார்கள் இருவரும். "நாட் பாட்" என்றாள் விமலா சுற்றி தன் விழிகளை சுழற்றி பார்த்தபடி.
நீளமான இரண்டு கண்ணாடி தம்ப்ளரில் ,மூன்று வேறு வேறு வண்ண அடுக்குகளாக அந்த திரவம் கொண்டுவரப்பட்டது. இருவரும் அதனை ஒரு வாய் சுவைத்துவிட்டு, ஆளுக்கொரு லேப்டாப் -ஐ அவரவர் bag-ல் இருந்து எடுத்து மேசையின் மீது வைத்து அதனை switch on செய்தார்கள்.
இருவரின் லேப்டாப் முன்புறத்தில் இருந்தது பாதி கடித்த ஆப்பிளின் லோகோ.
"ஹாய் விம்மி hon" - வேகமாக type செய்தான் ஜெகதீஷ்.
"யெஸ் ஜேக்" - பதிலுக்கு type செய்தாள் விமலா.
"என்ன ஆர்டர் பண்ணலாம்?"
"I want something chinese"
"ஓகே,எனக்கு செட்டி நாட், மை fav" என்று எழுதிவிட்டு,அவர்களையே பார்த்துக் கொண்டிருந்த waitress-ஐ ,கை அசைத்து கூப்பிட்டு, ஒரு செஷ்வான் fried rice and ஒன் நாட்டுக் கோழி பிரியாணி" என்று ஆர்டர் கொடுத்தான் ஜெகதீஷ்.
"then..." என்று மீண்டும் type செய்தான் ஜெகதீஷ்.
"then what ...nothing" பதில் டைப் செய்து அவனைப் பார்த்தாள் விமலா.
"r u not in mood"
"s,had so much at work,very tired :-("
"oh no,okay,I m hungry"
"me too,these guys are taking ages to bring just 2 items"
"yep" என்று ஜெகதீஷ் டைப் செய்து முடிக்கவும், அவர்களின் உணவு சூடாக
கொண்டுவரப்பட்டு பரிமாறவும் சரியாக அமைந்தது.
உணவை சுவைத்துக் கொண்டே, ஜெகதீஷ், விமலாவுடன் Chat விண்டோவில் தொடர்ந்து டைப் செய்தான்.
"so after dinner?"
"after dinner nothing" என்றது விமலாவின் பதில்.
"nothing..hmm..I want something...let's have that,its been a while"
"no way, காலையில் இருந்து ஒரே மீட்டிங்,மீட்டிங்,I am dead tired" என்று மறுத்தாள் விமலா.
"ப்ளீஸ்" என்று கெஞ்சினான் ஜெகதீஷ்.
"சாரி டியர், நாம கல்யாணம் பண்ணுன , first நைட்-ல வே நாம இதப்
பத்தி டிஸ்கஸ் பண்ணிருக்கோம்,நான் கண் அசைச்சு ஒப்புதல் தர்ற
வரைக்கும் நீங்களா என்ன இதுக்காக அப்ரோச்,பண்ணக் கூடாது"
"ok whatever...:-( " என்று டைப் செய்து விட்டு சோகத்துடன் லேப்டாப்-ஐ மூடி வைத்து , மீதம் இருந்த பிரியாணி முழுவதையும் தன் தட்டில் கொட்டிக் கொண்டான் ஜெகதீஷ்.
அவர்கள் இருவரும் சாப்பிட்டு விட்டு, பில் பே பண்ணிவிட்டு வெளியேறினார்கள். விமலா அவளின் "ஹோண்டா சிட்டி" காரை பார்கிங் லாட்டில் இருந்து வெளியேற்றி,ஜெகதிசின் அருகில் நிறுத்தி, "கெட் இன்" என்றாள்.
ஜெகதீஷ் வாயில் சீரகத்தை மென்றபடியே, "நோ , யு கோ ahead, I want to walk ,இப்பவே என் தொப்பை அஜித் மாதிரி இருக்கு ,இப்படியே விட்டா, அப்புறம்
பிரபு ரேஞ்சுக்கு பெருசாகிடும்" என்றான்.
"ஓகே,நாளைக்கு நான் சீக்கிரம் போகணும்,I am going to bed right away,see you
tomorrow night" என்று காரை கிளப்பி போய்விட்டாள் விமலா.
தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கிய ஜெகதீஷ், அங்கே ஒருவன் சுவற்றில் ஏதோ சினிமா பட போஸ்டரை ஓட்டுவதை பார்த்து ஒரு நிமிடம் நின்றான்.
அந்த போஸ்டரில், "தி டர்ட்டி பிக்சர்" என்று கொட்டை எழுத்துடன்,
வித்யா பாலன் ,நீச்சல் உடையில்... அதை திரும்பி ,திரும்பி பார்த்துக் கொண்டே வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான் ஜெகதீஷ்.
கதை யதார்த்தமா இருக்கு....
ReplyDeleteஇந்தக் கதையின் மூலம் நீங்க சொல்ல வர்ர நீதியையும் எழுத இருந்துச்சு,....
@Mohamed Faaique
ReplyDeleteஎனது பதிவுகளை தவறாமல் படித்து ஊக்கமளிக்கும் உங்கள் ஆதரவிற்கு என் நன்றிகள் பல.