Monday, October 8, 2012

அந்தரங்கம் யாவுமே!

சமீபத்தில் எப் எம் வானொலியில் , இந்த பழைய பாட்டைக் கேட்டேன். SP  பாலா வின் தேன் குரலில், இளையராஜாவின் அற்புதமான இசை அமைப்பில் கேட்கவே சுகமாக இருந்தது. இந்த பாட்டை நல்ல ஸ்டீரியோ எபக்டில் வைத்துக் கேட்டால் , ஆகா , சுகமோ சுகம்.  பாடல் வரிகளும் மிகவும் ரசிக்கத் தக்கதாகவும் இருந்தது.

இதற்கு முன், இந்த பாடலின் காட்சி அமைப்பை பார்த்திருக்கவில்லை , அதனால் இதை எப்படி காட்சிப்படுத்திருப்பார்கள் என்று அறிய ஆவாலாக இருந்தேன். அதிலும் இந்த பாடலில் வரும் 'எப்படி ,எப்படி'  மேலும் ஆர்வத்தைத் தூண்டியது.

இதே 'எப்படி , எப்படி' யை தான் , தேவி ஸ்ரீ பிரசாத், 'வாடா மாப்பிள்ளை ,வாழப்பழத் தோப்பில வாலி பால் ஆடலாமா ' என்ற பாடலில் கூட உபயோகப் படுத்தியிருப்பார்.

இப்படி பல எதிர்பார்ப்புகளுடன் ,  யு டூபில் தேடினேன், உடனே கொடுத்தான் கூகிள் ஆண்டவன்.  ஆனால் காட்சி அமைப்பு என்னை நன்றாக ஏமாற்றி விட்டது.

முதல் ஏமாற்றம் , இதில் நான் கார்த்திக்கை எதிர்பார்க்கவில்லை. இதுல டபுள் ஆக்ட் வேற. தலைவர் பென்சில் கோடு  மீசை வேறு , ஒரே ஜோக்காக இருந்தது.
அதிலும் சுலக்சனாவை , சில்க் பிட்டு பட ரேஞ்சுக்கு , காட்சிப் 'படுத்தி' இருந்தார்கள்.  படிச்சவன் பாட்டை கெடுத்தான் என்பது மாதிரி, இதை எடுத்தவர் பாடிக் கெடுத்து விட்டார்.

நீங்களும் இந்த பாட்டை 'கேட்டு'   , என்ஜாய் பண்ணுங்களேன்.

      

Friday, September 28, 2012

பதிவர்களுக்கு கண்ணதாசன் சொன்ன அறிவுரை!


நண்பர்களே சமீப காலமாக பதிவுலகத்தில் மத சம்பந்தமாக  பல பதிவுகள் அரங்கேறின. அதில் சிலர் ஒரு மதத்தில் இருந்து கொண்டே அதனை சிறுமைப் படுத்துகிறேன் பேர்வழி என்று  அண்ணாந்து பார்த்து எச்சில் உமிழ்ந்து தாங்களாகவே  ரிலாக்ஸ் ஆகிக் கொண்டிருக்கின்றனர்.

நிற்க, கண்ணதாசனின் "அர்த்தமுள்ள இந்து மதம் " என்ற புத்தகத்தை உங்களில் பெரும்பாலோர் படிக்கவில்லை என்றாலும் கேள்விப் பட்டாவது இருந்திருப்பீர்கள். நான் அந்த புத்தகத்தின் முதல் பாகத்தைப் படித்தபொழுது , அவரின் முன்னுரையில் தான் எவ்வாறு  நாத்திகனாக இருந்து பின் ஆத்திகனாக மாறினார் என்பதை நச்! என்று சொல்லிய விதம் அருமையாக இருந்ததால், அதனை பற்றி விவரிக்கவே இந்த பதிவு.

அதில் , எவ்வாறு இந்து மதம் எதிர்ப்பதை ஒரு ஸ்டைல்! ஆக  இப்போது உள்ள பதிவர்கள் நினைப்பது போல் தானும் நினைத்ததாகவும் , அதில் ஒரு போலி மரியாதை கிடைப்பது போன்ற மாயத் தோற்றம் ஆரம்பத்தில் இருந்ததாகவும், பின் அதில் பலரின் சுய நலம் கலந்த அரசியலை கண்டு உணர்ந்ததாகவும் எழுதி இருப்பது ஆச்சர்யமாகவும் ,அட! எவ்வளவு உண்மை என்றும் தோன்றியது.

பின் தான் எவ்வாறு புராணத்தில் ஐக்கியம் ஆகி அதன் அடிமையாகவே மாறி விட்டதையும் அழாக எடுத்தக் கூறியுள்ளார்.  இதோ அந்த முன்னுரையின் சில வரிகள் அவரின் எழுத்திலேயே :


என்  இனிய  நண்பர்களே,

இந்து மதத்திற்கு புதிய பிரசாரங்கள் தேவை இல்லை. ஏற்கனவே உள்ள  பிரசாரகர்கள் ,உபந்யாசகர்கள்  யாரும்  சக்தி குறைந்தவர்களல்லர்.

ஆரம்பமே அதிரடியா இருக்குல்ல , மேலும் படிங்க ,

ஆகவே 'புதிய பிரச்சாரகன் கிளம்பி இருக்கிறான்' என்ற முறையில் இந்த தொடர் கட்டுரையை யாரும் அணுகத் தேவை இல்லை.

நான் நாத்திகனாக இருந்தது இரண்டு ,மூன்று ஆண்டுகளே!

பாருங்க எவ்வளவு குறைந்த காலத்திலேயே அந்த மாயையிலிருந்து வெளிய வந்துட்டாருன்னு.


அதுவும் , நாத்திகத்திற்கு ஒரு போலித் தனமான மரியாதை கிடைக்கத் தொடங்கிய இடைக் காலத்திலேயே !

இப்ப சில பதிவர்கள் இந்த மாதிரி நிலமையில தான் இருக்காங்க , சீக்கிரம் பின்னாடி எரிஞ்ச பிறகு தான் தெரியும் தான் எது மேல உக்கார்ந்து இருக்கோமின்னு. 

நான் எப்படி ஆத்திகனானேன்?

கடவுளையும் ,புராணங்களையும்  கேலி  செய்வதற்காக கந்த புராணம்,பெரிய புராணம் , கம்பனின் ராம காதை ...என்று படிக்கத் தொடங்கினேன்.

அறிஞர் அண்ணா அவர்கள் ,கம்பனை விமர்சித்து 'கம்பரசம்' எழுதிய பின் அதன் எதிரொலியாகவே எனக்கு இந்த ஆசை தோன்றிற்று.

படித்தேன்;பல பாடல்களை மனனம் செய்தேன், விளைவு?

என்ன ஆச்சுன்னு கேட்பீங்களே , படிங்க :

கம்பனை படிக்க படிக்க நான் கம்பனுக்கு அடிமை ஆனேன்.

சூர்யாவோட அப்பா  நடிகர்  சிவகுமார்  இதே மாதிரி ஆகி விட்டார் என்று சமீபத்து செய்தி கூட நேத்து பதிவுலகத்தில் செய்தியாக மின்னியதே நியாபகம் இருக்கா ?

புராணங்களில் உள்ள தத்துவத்தை படிக்க படிக்க ,நான் கடவுளுக்கு அடிமையானேன்.

அடுத்து வக்கிறாரு பாருங்க ஆப்பு :

நாத்திகவாதம் என்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பதையும் ,உள்மனதின் உண்மையான உணர்ச்சி அல்ல என்பதையும் உணர்ந்தேன்.

நம்ம மஞ்ச துண்டு தலீவரே இதுக்கு உதாரணம் போதுமே!

அடுத்து நம்ம எழுத்துலக பதிவு சிங்கங்களுக்கெல்லாம் கொடுத்தாருங்க பாருங்க ஒரு 'பன்ச் '  , எல்லாரும் இத கவனமா மனசுல வச்சு பதிவு எழுதுங்க மக்களே :

புரட்சி என்ற பேரில் குருட்டுத் தனமான நாத்திக மனப் போக்கு தொடர்ந்திருந்தால் , எனது எழுத்துக்கள் சுருங்கி ,கருத்துக்கள் சுருங்கி ,என் பெயரும் சுருங்கி இருக்கும்.


என்ன நண்பர்களே, கண்ணதாசன் கருத்தில் உடன் பாடு இருக்கா , இல்லையா ?

இதவரை படித்ததற்கு நன்றி, சிந்திப்போம் , முன்னேறுவோம் !

 டிஸ்கி:  யாரும் பொங்கி நான் அது, இது என்று என்னை சிறுமை படுத்தலாம் என்று நீங்களே சிருத்து விடாமல் , சொல்ல வந்த விஷயத்தை  மட்டும் உள்வாங்கு மாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.!
Friday, August 31, 2012

மிஸ்கினின் முக மூடி - என் பார்வையில்!

நான் பதிவுலக ஜாம்பவான்கள் போல் , கேமரா எங்க வச்சாயங்க, என்ன கதை அப்படின்னு புட்டு புட்டு வைக்கப் போறதில்ல! மிஸ்கின் பல பேட்டிகளில் சொன்ன மாதிரி , அவர் கதையை சிறுவனாக இருந்தபோதே யோசித்து என்றது போல , சிறு வயதில் இரும்புக்கை மாயாவி , அப்புறம் ஏற்கனவே பார்த்த சூப்பர் ஹீரோக்களின் சாயலை ஒட்டிய கதையே!

இதெயெல்லாம் ரசிக்கும் குழந்தை உள்ளம் படைத்தவர் எனில் நிச்சயம் ரசிக்கும் படியாகவே அமைந்துள்ளது. மற்றவர்களும் நிச்சயம் பார்க்கலாம். ஏனென்றால் அருவாள் தூக்கும் வன்முறையோ , படிக்காத தற்குறிகளை ஹீரோவாக்கும் செல்லரித்த பாங்கோ இல்லை. வல்கர் சீன் எதுவும் இல்லை. ஜீவா உச்சா போகும் ஒரு சீன் கொஞ்சம் அந்த லெவெலுக்கு இறங்கப் பார்த்து மயிரிழையில் தப்பியது.

இசை பற்றி சொல்லவேண்டும் என்றால் , யுத்தம் செய் படத்தில் மியூசிக் அடித்தவர் என்று நினைக்கிறேன், அதே போல் நன்றாக வயலின், கிதார் இன்ன பிற வாத்தியங்களை நன்றாக இழுத்து காட்சிகளின் விறு விறுப்பை கூட்டச் செய்வதை செம்மையாகவே செய்துள்ளார்.

சண்டை அடிப்படையாக கொண்ட படம் என்பதால் , சும்மா சொல்லக் கூடாது , அடி இடி மாதிரி கொடுக்கும் வித்யாசமான காட்சிகளை எடுத்துள்ளார்கள் , அந்த மாஸ்டருக்கு ஒரு தனி பாராட்டு!

சில திருப்பு முனைகள் கதையில் அட போட வைத்தாலும் , பார்த்தவைகளே என்பதால் , ஓகே ஓகே என்று பெரிய இம்பாக்ட் எதுவும் கொடுக்காத வகையில் தான் உள்ளது!

நரேனும், ஜீவாவும் , மிஸ்கின் சொன்ன மாதிரியே செய்திருக்கிறார்கள். ஒரு ஆங்கில படம் பார்க்கும் பீல் வர வேண்டும் என்று முகத்தில் ஏதோ செய்து ஒரு சொபிஸ்டிகேடட் லுக் கொண்டு வந்திருக்கிறார்கள் , நன்றாகவே பொருந்துகிறது. முகத்துக்கு தனியாக எக்சைசு பண்ணி அப்படி கொண்டு வந்தார்களா ,இல்லை டயட் ?

மிஸ்கின் பாணி இதிலும் ஆங்காங்கே தெளித்துள்ளார் , எனக்கு ரசிக்கும் படியாகவே இருந்தது. வாழ்த்துக்கள் சார், குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி சில காட்சிகளை வைத்து இருக்கலாம்,யார் கண்டது இந்த காலத்து பிள்ளைகள் ரொம்பவே அட்வான்சுடு , எனவே இது அவர்கள் லெவலுக்கு கரெக்ட் ஆ கூட இருக்கலாம். ஹாலிவூட் காரர்கள் , குழந்தைகளிடம் பேசி பேசி, திரைக்கதை தயாரிப்பார்கள் போல, நம் இயக்குனர்களிடம் அந்த ஹோம் குறைவே பொதுவாக.


இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம், ஆனால் சுவை கெட்டுவிடும் என்பதால் விட்டு விடுகிறேன், கொடுத்த காசுக்கு நல்ல கராத்தே பைட் பார்க்கலாம். ஆனால் கொஞ்சம் பல சூப்பர் ஹீரோக்களின் டெம்ப்ளேட் கதையாகவே உள்ளதே ஒழிய , ஒரு பொழுது போக்குப் படம். சிறுவர்களை தாராளமாக பார்க்க விடலாம். பசங்க ஸ்கூல் லீவ் சமயத்தில் விட்டு நல்ல காசு பார்த்திருக்கலாம் ..சோனி ஸ்பைடர் மென் விடுவது போல (அமெரிக்க ஸ்கூல் லீவுங்கோ).


தமிழில் ஆங்கில பட பாணி சூப்பர் ஹீரோ கதை , முயற்சியை பாராட்டுவதில் தப்பில்லை என்றே தோன்றுகிறது, ஆதரவு கொடுக்கலாம், அவர்கள் உழைப்பை ஊக்குவிக்க , உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்! I Like it, you may like it!