Friday, August 31, 2012

மிஸ்கினின் முக மூடி - என் பார்வையில்!

நான் பதிவுலக ஜாம்பவான்கள் போல் , கேமரா எங்க வச்சாயங்க, என்ன கதை அப்படின்னு புட்டு புட்டு வைக்கப் போறதில்ல! மிஸ்கின் பல பேட்டிகளில் சொன்ன மாதிரி , அவர் கதையை சிறுவனாக இருந்தபோதே யோசித்து என்றது போல , சிறு வயதில் இரும்புக்கை மாயாவி , அப்புறம் ஏற்கனவே பார்த்த சூப்பர் ஹீரோக்களின் சாயலை ஒட்டிய கதையே!

இதெயெல்லாம் ரசிக்கும் குழந்தை உள்ளம் படைத்தவர் எனில் நிச்சயம் ரசிக்கும் படியாகவே அமைந்துள்ளது. மற்றவர்களும் நிச்சயம் பார்க்கலாம். ஏனென்றால் அருவாள் தூக்கும் வன்முறையோ , படிக்காத தற்குறிகளை ஹீரோவாக்கும் செல்லரித்த பாங்கோ இல்லை. வல்கர் சீன் எதுவும் இல்லை. ஜீவா உச்சா போகும் ஒரு சீன் கொஞ்சம் அந்த லெவெலுக்கு இறங்கப் பார்த்து மயிரிழையில் தப்பியது.

இசை பற்றி சொல்லவேண்டும் என்றால் , யுத்தம் செய் படத்தில் மியூசிக் அடித்தவர் என்று நினைக்கிறேன், அதே போல் நன்றாக வயலின், கிதார் இன்ன பிற வாத்தியங்களை நன்றாக இழுத்து காட்சிகளின் விறு விறுப்பை கூட்டச் செய்வதை செம்மையாகவே செய்துள்ளார்.

சண்டை அடிப்படையாக கொண்ட படம் என்பதால் , சும்மா சொல்லக் கூடாது , அடி இடி மாதிரி கொடுக்கும் வித்யாசமான காட்சிகளை எடுத்துள்ளார்கள் , அந்த மாஸ்டருக்கு ஒரு தனி பாராட்டு!

சில திருப்பு முனைகள் கதையில் அட போட வைத்தாலும் , பார்த்தவைகளே என்பதால் , ஓகே ஓகே என்று பெரிய இம்பாக்ட் எதுவும் கொடுக்காத வகையில் தான் உள்ளது!

நரேனும், ஜீவாவும் , மிஸ்கின் சொன்ன மாதிரியே செய்திருக்கிறார்கள். ஒரு ஆங்கில படம் பார்க்கும் பீல் வர வேண்டும் என்று முகத்தில் ஏதோ செய்து ஒரு சொபிஸ்டிகேடட் லுக் கொண்டு வந்திருக்கிறார்கள் , நன்றாகவே பொருந்துகிறது. முகத்துக்கு தனியாக எக்சைசு பண்ணி அப்படி கொண்டு வந்தார்களா ,இல்லை டயட் ?

மிஸ்கின் பாணி இதிலும் ஆங்காங்கே தெளித்துள்ளார் , எனக்கு ரசிக்கும் படியாகவே இருந்தது. வாழ்த்துக்கள் சார், குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி சில காட்சிகளை வைத்து இருக்கலாம்,யார் கண்டது இந்த காலத்து பிள்ளைகள் ரொம்பவே அட்வான்சுடு , எனவே இது அவர்கள் லெவலுக்கு கரெக்ட் ஆ கூட இருக்கலாம். ஹாலிவூட் காரர்கள் , குழந்தைகளிடம் பேசி பேசி, திரைக்கதை தயாரிப்பார்கள் போல, நம் இயக்குனர்களிடம் அந்த ஹோம் குறைவே பொதுவாக.


இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம், ஆனால் சுவை கெட்டுவிடும் என்பதால் விட்டு விடுகிறேன், கொடுத்த காசுக்கு நல்ல கராத்தே பைட் பார்க்கலாம். ஆனால் கொஞ்சம் பல சூப்பர் ஹீரோக்களின் டெம்ப்ளேட் கதையாகவே உள்ளதே ஒழிய , ஒரு பொழுது போக்குப் படம். சிறுவர்களை தாராளமாக பார்க்க விடலாம். பசங்க ஸ்கூல் லீவ் சமயத்தில் விட்டு நல்ல காசு பார்த்திருக்கலாம் ..சோனி ஸ்பைடர் மென் விடுவது போல (அமெரிக்க ஸ்கூல் லீவுங்கோ).


தமிழில் ஆங்கில பட பாணி சூப்பர் ஹீரோ கதை , முயற்சியை பாராட்டுவதில் தப்பில்லை என்றே தோன்றுகிறது, ஆதரவு கொடுக்கலாம், அவர்கள் உழைப்பை ஊக்குவிக்க , உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்! I Like it, you may like it!