Friday, September 30, 2011

வாகை சூட வராதே!

நம்ம பிரபல பதிவர் கவுன்செல் பார் எனிதிங் அய்யா அவுங்க , கமெண்ட் போடுறப்ப ஏற்படற பிரசினைங்கள ,கேள்வியா கேட்டு , ஒரு பதிவு போட்டிருந்தாரு. எனக்கும் அந்த பிரச்சினைங்க இருந்துச்சு ,இப்ப அவர் பாணில , எனக்கு பதிவுலகத்தை உலா வர்றப்ப தோன்ன கேள்விகளை ஒரு பதிவா போட்டுட்டேன்.

நண்பர்களே ,அன்பர்களே ,பதிவுலக சீமான்களே ,கோமான்களே ,இது யார் மனதையும் புண்படுத்தும் பதிவு அல்ல. சும்மா என் மனதில் தோன்றிய லாஜிக் இல்லா கேள்விகள். புடிகலென்ன ,ஜஸ்ட் இக்நோர் இட். ஏன்னா ,நீங்க சொல்ற மாதிரி ,எனக்கு தோன்னத கிறுக்கி இருக்கேன். சூடான ,என் முந்தைய பதிவை படித்து ,மனதை இலகுவாகி கொள்ளுங்கள்.

சரி கேளிவிகளை நான் தொடுக்கட்டுமா?

நம்ம பதிவுலக நண்பன் , பதிவுலக எம் ஜி ஆர் (அண்ணே இந்த பட்டம் உங்களுக்கு இது வரைக்கும் யாரும் குடுகலையின்ன, இந்த பதிவுலக ஏழை ,அத கொடுக்கிறதுல ரொம்ப பெருமை படுறேன்) அவர்கள் வழக்கமாக சினிமா போயிட்டு வந்து , அதுல வர்ற , முத்தான வசனங்கள , ரசிக்கும் படியா எழுதி இருப்பாரு. என்னோட கேள்வி என்னென்ன , அவர் டேப் ரெகார்டர் கொண்டுபோய்ருவார இல்ல அவர் முன் ஜென்மத்த நெனவு வக்கிர அளவுக்கு பெரும் நினைவாற்றல் படைத்தவரா ?

அப்புறம் நானும் ஒரு படத்துக்கு விமர்சனம் எழுதனும்ன்ர முடிவோட , படத்த பாக்க உக்காந்தேன் , ஒவ்வொரு சீன் வர்றப்ப, இத பதிவுல எழுதணும் ,அத பதிவுல எழுதனுமின்னு ,உன்னிப்பா கவனிச்சு ,கடசீல ,
படம் பாக்குற இண்டேரச்டு போயிடுது , ஆனால் , விமர்சனம் எழுதுறவுங்க,ஒரு சீன் விடாம ,அப்படியே சொல்றாங்க ...அவங்கல்கு இந்த போடோ கிராபிக் மூளைன்னு சொல்வாங்கீள அது இருக்குமா ,இல்ல , கை ஓட , ஏதாவது காமிரா செட்டப் இருக்குமா ?
இன்னொருதர பத்தி சொல்ல வேணாம் னு பாத்தேன். சரி விடு கழுதைய, நாம பாக்காததா ன்னுட்டு எழுதறேன் . ஒரு சிலர் , யாராவது பதிவர சீண்டற மாதிரி கமென்ட் போட்டா , 'டே மொதல்ல உன் மூஞ்சிய ப்ரோபயில் ல போடு, அப்புறம் சொல்றேன் ' அப்ப்டினுவாங்க .  நான் என்ன கேட்குறென்ன ,
அவங்க மூஞ்சிய போட்டு ,அது ஒரு விகாரமா இருந்து ,இவர் அரண்டு போயிட்டா என்ன பண்றது ?


அடங்கொன்னியா சரகடிச்சதுல கேட்க வேண்டிய கேள்வி எல்லாம் டாயிலேட்ல போய்ருச்சே. கொஞ்சம் அடக்கி வச்சிருக்கணும் , ஆனாலும் ,பெரியவுங்க சொன்னகளே ,அது கரெக்ட் தான்.  ஆத்திரத்தை அடகுனாலும் , அத அடக்க முடியாது .

ஆ ஒரு கேள்வி , இந்த பின் நவீனதுவம்னு ஒரே கூத்து பன்னாயீன்களே, அத ரொம்ப நாளா காணோம் . இப்ப நான் ஏதோ எழுதி இருக்கேன் ,இது பின்னாலையா இல்ல முன்னாலையா ?

இன்னும் ரெண்டு மூணு கேள்வி இருந்துச்சு , பப் சு , அப்புறமா கேட்குறேன் .


ஆத்தாடி பாவாடை காத்தாட - பார்ட் 1

எல்லோரும் தொடர் பதிவு போடுறாங்க,நீயும் ஒரு பதிவு போடு , அப்ப தான் பெரிய அப்பா டக்கர் ஆகமுடியும்னு , ஆல மரத்தடில உக்காந்துகிடுருந்த ஒன்றை கண்ணு ஜோசியன், 'கண்ணு மைய' வச்சு பாத்து , குறி சொல்லிட்டான் அப்பு. அதுனால ,வேற வழி இல்ல,எழுதலாமின்னு முடிவு பண்ணிட்டேன். நான் ஒரு வாட்டி முடிவு பண்ணா, எங்க வீட்டுல எவனுமே கண்டுக்க மாட்டயீங்க. அப்படியே மந்திரிச்சி தண்ணி தெளிச்சு போயுட்டு வாடா மகனேன்னு பொடனில அடிச்சு தொரத்திடுவாங்க.

நான் தொடர் பதிவு எழுத ஆசைப்பட்டதுக்கு இன்னும் ரெண்டு காரணம் இருக்கு. எனக்கு எப்பவுமே ரெண்டு ரொம்ப பிடிச்ச நம்பர். ஏன்னா ,கொஞ்சம் யோசிச்சு பாருங்க , நமக்கு கடவுள் , எல்லா முக்கிய விசயத்தையும் ரெண்டு ரெண்டா படசிருகாப்ல. அதாங்க , கிட்னி , காது , மூக்கு ஓட்டை , கண்ணு இப்படி. இன்னும் ஒரு அவயம் கூட ரெண்டா படசுருக்கிற அந்த அற்புத டிசைனர் இருக்காரே , அவருக்கு கோயில் கட்டி கும்புடிரது ரொம்ப பொருத்தம் தானுங்க.

சரி, அந்த ரெண்டு விஷயம் :

  1. நம்ம ஆ.வி புத்தகிதுல, இளமை கவிஞர் திரு.வாலி எழுதுற நினைவு நாடாக்கள் - Rewind  ,அவரோட வாழ்க்கை அனுபவங்கள , தெல்லிய தமிழ்ல , முத்து முத்தா எழுதுறது ரொம்ப படிக்க பிடிக்கும்.  அது மாதிரி நானும் என்னோட நினைவுகள இந்த தொடர் பதிவுல பகிரலாமுன்னு ஆசை. அவரு பெரிய கவிஞர் , நாம என்ன பெரிய பருப்பான்னு கூட மொதல்ல நெனச்சேன். சரி , வந்தது வரட்டும் ,'எடுரா புல்லட்ட' ன்னு முடிவு கட்டியாச்சு. இந்த காட்டாத்து வெள்ளத்த அண வச்சாலும் தடுக்க முடியாது. எப்படிங்க நம்ம பில்ட் அப்பு?

 2. நான் ஒரு சினிமா பாட்டு  பைத்தியம். ரேடியோவுலையோ ,  டிவி லையோ , பாட்டு ஆரம்பிக்ரப்பவே ,அதுல வர்ற பல்லவிய கூட சேர்ந்து  சத்தம் போட்டு பாட ஆரம்பிச்சுருவேன். நீங்க கூட அப்படிதான், இது என்ன பெரிய விசயமாடா ன்னு சொல்றீங்களா. ரைட்டு, நீங்களும் நம்ம கட்சி. அப்படி நான் ரசிச்ச பல பாடல்கள் , அது தொடர்பா ,எதாவது நிகழ்ச்சி இருந்தா அதையும் இணைச்சு ஒரு தொடர் பதிவா எழுதலாம் ங்குறது , என் எண்ணம். நீங்க படிச்சுட்டு காரி துப்ப மாடீங்கன்றது என் திண்ணம். எப்படி நம்ம தீம். இதத் தான் உக்காந்து ஒசிகரதுன்னு பெரியவுக சொன்னாங்களோ.

இன்னைக்கு வெள்ளி கிழம , எல்லா மதத்தவருக்கும் , ஒரு புனித நாள் , அதுவுமில்லாம , அடுத்து வர்ற ரெண்டு நாள் , எல்லாரும் ஓய்வெடுத்து ,ப்ளாக் மேயுற நன்னாள். அதுனால ஒன்னு ரெண்டு ஹிட் கூட கெடைகுமேன்ர நப்பாசை.

மொதல்ல ,இந்த பாட்டை பத்தி சொல்றேன். இதுல வந்தவரு , இந்த பாட்டு வரதுக்கு முன்னாடி அவ்வளவா பிரபலம் ஆகதவரு ,என்னோட அறிவுக்கு எட்டுன வரைக்கும். ஏதோ ஒரு பண்டிகை சமயத்தில தான் வந்துச்சு ,இந்த படமும் அந்த பாட்டும். அப்பல்லா, இவ்வ்ளோவு சேனல் கெடையாது. நம்ம தூர் தர்சன் தான். அதுல சிறப்பு ஒளியும் ஒலியும் போடுவாய்ங்க. அதுல தான் மொத மொதல்ல பாத்து ,கேட்டு ரசிச்சது.


அந்த பாட்டு ,  லா லாக்கு டோல் டப்பிமா.  நம்ம நடனப் புயல் , பிரபு தேவா, பாச்சான் மாதிரியே ஆடி , பட்டய கெலபுன பாட்டு. அவர் ஆட்டத்த பாருங்க , அப்படியே , இந்த பாச்சான் ன்னு ஒரு பூச்சி அங்கிட்டு இங்கிட்டு ரப்பரா துள்ளும் பாருங்க ,அந்த மாதிரி ஒரு துள்ளாட்டம் போட்டுருபாறு ,நெனவிருக்கா.

இந்த பாட்ட கேட்குரப்ப , ஊட்டில நாங்க , காலேசுல இருந்து டூர் போனப்ப நடந்தது நெனவுக்கு வரும். ஊட்டி போட் ஹவுஸ் இடத்துக்கு போயி ,பஸ்ல இருந்து இறங்கி , அப்படியே , அந்த பனி கொஞ்சுற , கண்ணுக்கு எட்டுற வரைக்கும் அந்த தண்ணிய , அப்படி ஒரு சில் கிளைமேட்ல பாத்த அந்த அனுபவம் , ஆஹா. அப்படி நின்னு அனுபவிச்சுட்டு இருக்குறப்ப , வேறொரு பெண்கள் காலேஜ் வண்டி வந்து நின்னு , மலர்கள் கொத்து கொத்தா இறங்கி , ஏரியப் பாத்து தாவி வந்துச்சுங்க.  அதுல இருந்த ஒரு கொடி இடையாள், சத்தம் போட்டு , ' லா லாக்கு டோல் டப்பிமா' அப்படின்னு உற்சாகமா கூவிச்சு. எனக்கு எங்க இருந்து அந்த ஐடியா வந்த்சுன்னு தெரியல , நானும் சத்தம் போட்டு , 'உன் இடுப்ப சுத்தி டயர பாரும்மா' அப்படின்னு எடுத்து கொடுத்தேன். அத  கேட்டுட்டு அந்த புள்ள , வெட்கப்பட்டு ஓடிருச்சு. நல்ல வேல ,இந்த ஈவு டீசிங் ங்கற விசயமெல்லாம் அப்ப அவலவா இல்ல.

அதுக்கப்புறம் ,ஹே ஒரு பொண்ண லந்து அடிசிடோம்டானு , இருமாப்பா நெஞ்ச நிமிதிகிட்டு திரிஞ்சேன்.அந்த ஏரியா விட்டு , பொட்டனிக்கல் கார்டன்  போனோம்  , அப்ப இன்னொரு காலேஜ் பஸ்ல இருந்து , இன்னொரு அம்சமான பிகரு இறங்கிச்சி. அது ஒரு டி சர்ட் போட்டிரிந்துச்சு அதுல ஒரு வாசகம் , இன்னும் அப்படியே இருக்குது பாருங்க மனசுல ..."ஒன் இன் தௌசண்டு".  உண்மையிலேயே அவ ஆயிரத்தில் ஒருத்தி , ஏன்ன அவளை நான் கண்டே புடிக்க முடியல அதுக்கப்புறம்.

மீண்டும் சந்திப்போமா. அன்பு நண்பர்களே , ஓட்டையும் , கமெண்டும் மறக்காம போடுங்கப்பு.

Thursday, September 29, 2011

நான் சிரிச்சா தீபாவளி - அனுஷ்காவின் அடுத்த அட்டாக்

அன்பு நண்பர்களே ,உங்கள் அனைவர்க்கும் என்னுடைய 'அட்வான்ஸ்'  தீபாவளி வாழ்த்துக்கள். இந்தியாவில் , குறிப்பாக சொந்த ஊரில் தீபாவளி கொண்டாடும் கொடுத்து வாய்த்த நபர்களே ,மாசம் பொறக்க போகுது , சமபளம், போனஸ் நு ,வர ஆரம்பிக்கும். நல்லா ஜமாயிக்க ,எல்லாம் திட்டம் போட ஆரம்பிச்சு இருப்பீங்க . ஏதாவது ஒரு ரீசன்காக ,இதுவரை கொண்டாடிவிட்டு ,இந்த வருடம் கொண்டாட முடியாதவங்க ,கவலை படாம , அடுத்து வரும் வருடங்கள்ள சேத்து வச்சு கொண்டாடுவீங்கனு நம்புறேன்.

தீபாவளியில் எனக்கு நடந்த கொடுமைய இந்த பதிவுல கொண்டு வர ஆசைப்பட்டேன். அதுக்கு முன்னாலே , இன்னொரு கொடுமைய பத்தி பாப்பமா.

'நாக்கு முக்கா' புகழ் விஜய் ஆண்டனி பண்ண கொடுமை. அவரோட 'அஆதிசூடி ' பாட்டுல வருமே ஒரு கிழவி சொல்றமாதிரி ,'இப்பெல்லாம் பாட்டா போடுராயுங்க , கொலையா கொல்றாயீங்க', அது மாதிரி ஒரு பாட்டு போட்டுருகாரு.  அந்த குத்து ,இந்த குத்துன்னு போயி ,இப்ப 'கொல' குத்தாமில்ல.அவரும் என்ன பண்ணுவாரு பாவம் , வர்ற டைரக்டர் ருங்க , 'எனக்கு நாக்க முக்கா மாதிரி ஒரு குத்து வேணும் ' அப்படின்னு அவர் கற்பனைக்கு தடா போட்டா. நம்ம இசை புயல் A.R.R  ஒரு பேட்டில கூட சொன்னாரு , 'டைரக்டர் எங்க கற்பனைய தூண்டுற மாதிரி சீன் சொன்னா தான் எங்களுக்கு நல்ல விதமா போடத் தோணும்'. "சும்மா , 'சார் , ஹீரோவும் ,ஹீரோயினும் காதலிக்றாங்க,ஒரு பாட்டு போடுங்க ',அப்படின்னு மொட்டையா சொன்னா,என்ன போட முடியும்?'. அவர் கேட்குறதும் கரெக்ட்.

சரி , நம்ம தீபாவளி மேட்டர்க்கு போலாம்.  நாங்க சிறு வயதில , ஒரு கேங்கா , எங்க தெருவையே அதகளபடுதிகிட்டு இருப்போம். எங்க தெருவுல புதுசா ஒரு பேமிலி குடி வந்துச்சு. அதுல ஒரு பொடி பய்யன் இருந்தான். ரெண்டு டு மூணு வயசுல ,குட்டியூண்டா இருப்பான். ஆனா நல்ல சிவப்பா இருப்பான்.

அவனுக்கு நாங்க வச்ச பட்டப் பேரு , 'எலி குட்டி'. அப்படியே வெள்ளெலி மாதிரியே இருப்பான். 'Stuart Little'  படம் பாத்ருபீங்களே,அதுல வர்ற மாதிரி எலி .

நாங்க அவன விட மூத்தவீன்களா இருந்தாலும் , எங்க கூட தான் இருப்பான். கிட்டி புள்ள,கோலி குண்டு ,சப்பாத்தி கல்லு,பம்பரம்,கபடி, பட்டம், பட்டாம் பூச்சி  பிடிகிறது,பாண்டி, தாயக் கட்டை,ராசா-மட்டி தீப் பெட்டி படம் வச்சு வெளாட்றது,சீட்டுக்கட்டு , டென்னிகட்டு , கிரிக்கெட், ஐஸ் பால்,டாக் அண்ட் தி போனு,இன்னும்னு நாங்க அடிக்கிற கொட்டத்துல ,கூடயே சுத்திகிட்டு இருப்பான் கிறுக்கு பய.

[ இந்த கால நம்ம புள்ளயீங்க பாவம் , ஒரு சின்ன வட்டத்துல ஓடரத நெனச்சா பாவமா இருக்கு ]


இப்படி வாழ்கை வெளாட்ட போய்ட்டு இருக்குறப்ப , நாங்க ஆர்வமா எதிர் பாத்த தீபாவளி வந்தது. தீபாவளி வர்றதுக்கு ஒரு மாச முன்னாடியே , அங்க அங்க புதுசு புதுசா வெடி கடைங்க முளைச்சிருக்கும். அந்த வருஷம் என்ன ஸ்பெஷல் வெடி வந்த்ருக்குன்னு பாத்த பிறகு தான் , பட ரிலீஸ்,  டிரஸ் வாங்கிறது , இத்யாதி இத்யாதி.

தீபாவளி அன்னிக்கி ,வாங்கி வச்ச , வெடியெல்லாம் எடுத்துகிட்டு , பாட்டுக்கு எதிர் பாட்டு பாடுற மாதிரி , நீ பாம்பு மாத்திரையா ,நான் டிரைன் நூல கட்டி விடுவேன், நீ லட்சுமி வெடியா , நான் குருவி வெடி , நீ ஓலை வெடியா , நான் அணு குண்டு ,நீ நூறு சரமா , நான் ஐ நூறு சரம் ...இந்த மாதிரி ஒரே போர் தான் போங்க.

எல்லாம் முடிச்ச பின்னாடி , எங்க ஸ்பெஷல் ஐடெம் எடுத்தோம், அது தாங்க , ராக்கெட்.  நான் முன்னாடியே சொன்ன மாதிரி , எலியும் எங்க ஜோதில ஐக்கியமாகி இருந்தான். அவன் ஒரு ஓரமா நின்னு பாத்துகிட்டு இருக்க , நாங்க ஒரு  காலி  பாட்டில்ல , ஒரு ரொக்கெட்ட ,முடிஞ்ச வரைக்கும் நேரா வச்சு , தீய பொருத்தி விட்டோம். தீ திரில எரிஞ்சு கொஞ்சம் கொஞ்சமா மேல ஏரிச்சி.

திடீர்னு ராக்கெட் கொஞ்சம் சாஞ்சி அப்படியே மேல கொஞ்சம் போல  எழும்பி , வேகமா போகுது .  அன்னார வரைக்கும் , அங்கிட்டு நின்ன நம்ம எலி , தீடிருன்னு அரக்க பரக்க எதிர் திசையில ஓட ஆரம்பிச்சுட்டான் ,என்னடா பய இப்படி ஓடுறானே நு பாத்தா, அந்த ராக்கெட் அவன தொரத்திக்கிட்டு இருக்கு ..பய புலியா பாஞ்சு ஓடுறான் ,ஆனா ராக்கெட் விடாம அவன , இந்த பழைய புராண படங்கள்ல , பானம் விட்டு சண்டை போடுவயீன்கல்ல, அது மாதிரி சொய்ன்னு  அவன் பின்னாடி போயி ,கடசில அவன் டவுசர ஓட்டை போட்டுட்டு தான் நின்னுச்சு. அவன் அலறி ஓடுற சீன ,இப்ப நெனச்சாலும் கண்ல தண்ணி வர்ற அளவுக்கு சிரிப்பு வரும் எங்களுக்கு.

அப்படி நான் அன்னைக்கு ஓவரா சிரிச்சதுக்கு ,அன்னிக்கி சாயிங்காலமே , வந்துச்சு பாருங்க ஒரு ஆப்பு. நாங்க கொஞ்சம் இருட்டு ஆனவினே , ஒவ்வொரு வீட்டு வாசலுக்கு போயி ,அவிங்க போடுற , பூசெட்டி , சங்கு சக்கரம் ,கலர் கம்பி மத்தாப்பு இதெல்லாம் வேடிக்கை பாப்போம் . அப்படி நாங்க , முன்னால் சிறுமி , பின்னால் பிகரு , வீட்டு வாசலுக்கு நடைய கட்னோம். அங்க அவ ,ஒரு கம்பி மத்தாப்ப எடுத்து , ஒரு சங்கு சக்கரத்துல வச்சுட்டு ,அது சுத்தின ஸ்பீட பாத்து பயந்து , என் பின்னாடி வந்து நின்னா.

நின்னவ, கைய சும்மா வைக்காம , அவ பாட்டுக்கு , பாதி எரிஞ்சிகிட்டு இருக்கிற கம்பி மத்தாப்ப , என் முதுகுல வச்சா பாவி சிறுக்கி. நல்ல வேளை, ஒரு சின்ன சூடு தான் பட்டது என் தோள்ல, ஆனா , நான் காலேல இருந்து அஆசையா , பெருமையா ,போட்ட ,லேட்டஸ்ட் டிசைன் சட்டையில ஒரு பெரிய ஓட்டை.டிஸ்கி: தலைப்புல பொம்பள புள்ள பேர போட்டா தான் எட்டி பாக்கிறீங்க. இந்தாங்க புடிங்க ,டிஸ்கில ஒரு காணொளி.

http://www.tubetamil.com/view_video.php?viewkey=12b62c35bcf855b94bab
 Tuesday, September 27, 2011

போடா டுபுக்கு - ஒரிய படம் எந்திரன் வசூலை மிஞ்சும்

அந்த சிறிய டவுனில் , ரெண்டு நண்பேங்க. ஒருத்தன் பேரு பீபீ , இன்னொருத்தன் டும்டும். இப்படி ஒரு பேராண்றீன்களா ,  பேர்ல என்னங்க இருக்கு ,நம்மக்கு மேட்டர் தான முக்கியம்.

பீபீ  கொஞ்சம் விவரமான ஆளு , ஏன்ன, வாரத்துக்கு ஒரு தரம் , இணையத்த மேஞ்சு , எல்லா பிரபல பதிவுங்களும் படிச்சு ,உலக ஞானம் எப்பவும் மண்டேல இருந்து வழியுரமாதிரி நெனப்புல தான் பேசுவான்.  ஆனா  மத்தவங்க அவனுக்கு வச்ச பட்டப்பேரு 'ஆயில்'  , அவன் மண்டல வச்ச ஒரு லிட்டர் வேப்பெண்ண எப்பவும் அவன் மூஞ்சில வழிஞ்சிகிடே இருகிரதுனால.

டும்டும் ஒரு அப்பாவி , பீபீ மேல அவனுக்கு ரொம்ப மருவாத , அவன் என்ன சொன்னாலும் அப்படியே நம்புபவன். ஒரு நாள், வழக்கம் போல , அவிங்க ரெண்டு  பேரும், ஆதங்கரயில , பொழுது சாய உக்காந்து தண்ணி அடிசிகிடே பேச ஆரம்பிச்சாங்க.

பீபீ , வழக்கம் போல , பதிவுல படிச்ச மேட்டர்லாம் ஒன்னு விடாம வாந்தி எடுத்தான்.  டும்டும் அவன் பேச்ச ,கண்ண விரிச்சி ஆச்சர்யமா பாத்துகிட்டே கேட்டான். பேச்சு அப்படியே ,சினிமா பத்தி திரும்பியது.

"ஒனக்கு தெரியுமா , சில தமிழ் படங்கள் , கொரிய படத்தின்  அப்பட்டமான காபின்னு  சொல்லி ஓட விடாம செய்ற அளவுக்கு பவர்புள்ளு இந்த பதிவுலகம் " அப்படின்னு போட்டு தாக்குனாப்ல பீபீ.

"அப்படியா , படத்த பத்தி கூட எழுதுவாங்களா ,படக் கதைய அப்படியே போட்ட்ருவாங்கள ,அப்ப அத வச்சி நாம போலாமா , வேண்டாமானு முடிவு பண்ணலாம்ல "  னு ஆர்வமா கேட்டான் டும்டும்.

"ஆமா ,ஆமா ,அதுமட்டுமிலடா , எங்க எங்க , மாண்டேசு  வருது , எங்க கிரேன் சாட் வச்சாங்க , எங்க ஆக்சன் புளாக்கு வருது ,எங்க டிராலி சாட் வச்சாங்க , எந்த காமராவ வச்சு படம் புடிச்சாயங்க,காட்சி  லோ ஆங்கிலா ,ஹை ஆங்கிலா அப்பிடின்னு , நமக்கு வெளிலவே தெரியாத சங்கதி எல்லாம் இருக்கும்டா. நால பின்ன நாம சினிமா படம் புடிகுனுமின்ன , இதெல்லாம் நமக்கு நல்லா ஊசு பண்ணிகலாம் . அப்புறம் தமிழ் மட்டுமிலாம ,ஹிந்தி ,தெலுகு ,கன்னடம் ,மலையாளம் அப்படின்னு ஒன்னு விடாம எல்லாப் படத்துக்கும் விமர்சனம் எழுதுவாங்க . " - பீபீ அடிகிக் கொண்டே போயிட்டிருந்தான்.

"சரிடா , வீட்கு  வெரசாபுல வந்திடுன்னு என் பொண்டாட்டி காலேல கெழம்புரப்பவே சொல்லிவிட்டா , நான் இப்ப போல ,என்னை பொடனிலையே ஏறி மிதிப்பா " நான் போறேண்டா ன்னு ஓடினான் டும்டும். 

வீட்டிற்கு வந்த டும்டும் வுக்கு , மனசு பூரா பதிவு சினிமா விமர்சனம் இதபத்தியே நெனப்பு ஓட ஆரம்பிச்சுருச்சு . நாடு ராத்திரி ஒரு மணிக்கு , அப்படியே எந்திரிச்சு உக்காந்தான், அவன் மூஞ்சில ஒரு சிரிப்பு. 

"கொரிய படத்த , தமிழா எடுத்து அதுக்கப்புறம் தானே , விமர்சனம் எழுதுராயுங்க ,நாம நேர கொரிய படத்துக்கு விமர்சனம் எழுதுவோம் "  ஒரு ஐடியா புடிச்ச நெம்மதில தூங்க ஆரம்பிச்சான். 

மறு நாள் , அந்த ஊர்ல இருந்த கேசட்டு கடைக்கு போயி ,
"அண்ணே நீங்க உலகப் பட கேசட்டு வசுரீன்கீன்களா ?" கேட்டான் டும்டும்.
கடைகாரர் ஒரு மாதிரியா முழிச்சுட்டு ,
"இருக்கு தம்பி , ஆனா காசு கொஞ்சம் கூட கொடுக்கணும் சரியா " ன்னாரு .
"ஆட்டும்னே,காமிங்க தரேன் ".
ஒரு பலான படத்தை கொடுத்தார் கடைகாரர்.
"என்னனே, இத கொடுக்றீங்க ".
"இதாம்ப நீ கேட்ட ஒலக படம்".
"போங்கண்ணே உங்களுக்கு நான் கேக்குறது பிரியல ".
கடைகாரர் கோபமாகி , "டேய் மரு வாதைய  ஓடி போயிரு ,இல்ல துமக்குண்டு அருவாளில ஒரே வெட்டு".

"ச்சே நம்ம பதிவு ஆசைய்லே மண்ணெ போட்டாங்களே,நாசமா போரவீங்க ,இப்ப   என்ன பண்ணலாம் " னுட்டு , பலமா ஓசிச்ச டும்டும் , டக்குன்னு 'மதுர' கு வண்டி ஏறிட்டான்.
பஸ் ஸ்டாண்ட்ல வித்த , பலா பலத்த வாங்கி சாப்டுகிட்டே, பசார்ல நடக்க ஆரம்பிக்க , கண்ல பட்டுச்சு, 'இன்டர்நெட் ப்ரொவ்சிங் செனட்டர்'. பீபீ இந்த மாதிரி எடத்துல வந்து தான , விமர்சனம் படிக்குறான் , நாமலும் போவமின்னு உள்ள போனான். 

அங்கே சில இளசுகள் பலான படம் நெட்டில் மேய்ந்து கொண்டிருந்தார்கள். 
'என்னனே படம் லா வருது ?' கேட்டான் டும்டும் . 
ஆமாம் நீங்க சினிமா படம் கூட பாக்கலாம் " சொன்னது சென்டர் ஆளு.
"சரி தமிழ் ப் படம் இருக்கா " னு கேக்க , "இந்த கூகிள் போயி இப்படி தேடு " ன்னு அவனுக்கு ட்ரைனிங் கொடுத்தாரு சென்டர் பய்யன்.

சிறிது சிறிதா அவனுக்கு வெசயம் விளங்க , கூகுளில் ஒரு ஒரியத் திரைபடத்தை பாத்து முடித்தான். மரு வாரம் , மீண்டும் அதே சென்டர் வந்து , பிளாக் எழுவது எப்படின்னு கத்துகிட்டான் .  உடனே சூடாக , ஒரு விமர்சனம் எழுத ஆரம்பித்தான்.
ஓலிவூடின், அட்டகாசமான டயிரடக்கரு 'அசோக் படேலு' , அவர் இளம கால சேட்டைகளை அட்டகாசமா சொல்ற படம் இது.  கீரோ, சர்ருன்னு பைக்ல பறந்து , ரவுடிய அடிச்சு , கீரோயன் ட்ட , தன் காதல சொல்ர எடத்துல வரிசையா வர்ற மாண்டசு காட்சீங்க , உங்கள் மனச கிள்ளும் ,  கிரோயின் குளிக்ரப்ப , ஹை ஆங்கிலில காமரவ வச்சு , கீரோயன் 'இளமய' ஒன்னு விடாம காட்றாரு பாருங்க
அங்க தான் நிக்கிறாரு டயிரடக்கரு. கீரோயன் 'இளம' குஸ்புவ விட ***** இருக்குங்க. 

கீரோ ஒரு குட்சையில வாழுற ஏழை. கீரோயன் அந்த ஊரு MLA வோட தங்கச்சி.
அவங்களுக்குள்ள எப்படி காதல் வருது துன்னு டயிரடக்கரு தன் தெரமய எல்லாம் காட்டி , உங்கள எப்படி வசபடுதுராருன்னு தியேட்டர்ல போயி பாருங்க.
உங்க வவுத்துல அல்சர் புன்னு வர்றதுக்கு நான் காரண்டி.

"யே ,'அத' தொறந்து காட்டு" ன்னு கீரோ அதட்ட ,
டக்குன்னு ,"அவள் கைபைய தொறந்து அதுல இருகுரதேல்லாம் "
கிரோயன் வெளிய எடுத்துப் போட, "தான் வச்சுருந்த சிவிங்கி அதுல
இருகிரதப் பாத்து ,  அது என்று தன் தலை முடிய தடவுறாரு. அப்ப, அவரு
முடி அப்படியே ணீட்டமா வளர்றத கிராபிக்ஸ்ல போட்ட்ருக்காயங்க பாருங்க , சங்கரு படத்துல கூட அந்த மாதிரி கிராபிக்ஸ் வர இன்னும் பத்து வருஷம் ஆகும் பாருங்க.
கூடலி ராத் ஓட மூஸிக்கு, அட அட அட , கொன்னுடாறு போங்க. "ஓரன்னொன்னு ,ஈ ரெண்ட ரெண்டு " பாட்டுல போட்டுருப்பரு பாருங்க ஒரு கொட்டு சத்தம்,சும்மா  நங்குன்னு வந்து விழுகுது.

இங்கிட்டு அன்கிட்டுன்னு பல லாசிக்கு மிச்டக்கு இருந்தா கூட ,
படம் அட நம்ம சின்னபிலேல செஞ்சதெல்லாம் அப்படியே வருதேன்னு 
அட போட வக்கிது.

143  - இளமல வெளாண்ட சாட் பூட் த்ரீ.


டிஸ்கி :  கொரியாவ , நம்ம பய புள்ள , மப்புல ஒரியானு கேட்டு டாங்க.

டிஸ்கி :  தமிழ், தெலுகு , மலயாளம் ,கன்னடம் ,ஹிந்தி மட்டுமில்லாம , ஒரிய ,போஜ்புரி இன்னும் இந்தியாவுல இருக்கிற அனைத்து படங்களின் விமர்சனத்தையும் பிரபல விமர்சன பதிவர்கள் எழுதி ,'தேசிய ஒருமை பாட்டை' காக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.


அப்புறம் முக்கியமா ஒரு கார்டு போடணும்:

"இந்த பதிவில் வரும் சம்பவங்கள் ஒரு நகைச்சுவை கற்பனையே.
 எந்த பதிவரையும் குறிப்பிட்டு அல்ல. அப்படி தோணினால் ,அது
 ஒரு தற்செயலாக அமைந்தது என்பதை அன்புடன் சொல்லிக் கொள்கிறேன்.
  வணக்கம்."Sunday, September 25, 2011

கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்

அவள் மெல்ல அருகில் வந்து , தலை முடியை கோதினாள்.மீசையை ஆசையுடன் தடவி கன்னத்தை செல்லமாக கிள்ளினாள். மெல்ல குனிந்து, தன் உதட்டை குவித்து... கிர் கிர் கிர் என்று அலாரம் அலறத் தொடங்கியது.
"ச்சே ,சனியன் பிடிச்ச அலாரம் ,இப்பவா அடிச்சி தொலைக்கணும் ,ஹ்ம்ம் நல்ல கனவு ,உன்னை " என்று ஓங்கி டைம் பீசின் தலயில் வைத்தான் ஒன்று. கண்ணை மூடி கொண்டு வலுகட்டாயமாக அவளை மறுபடியும் வர வழைக்க பார்த்தான், ம்ஹீம் ,ஒன்னும் நடக்கல, அப்படி இப்படி புரண்டு , அவனை அறியாமலே தூங்கத் தொடங்கினான்.

அவன் எழுமுன் , அவனை பத்தி ஒரு இன்ட்ரோ. ஒரு எம் என் சீ பிராடக்ட் கம்பெனில , மார்க்கெட்டிங் எக்சிகிடிவ் , இருபத்தி நாலு வயதாகும் , கன்னி கழியாத பையன். அழகான பெண்கள் எங்கிருந்தாலும் , அவர்கள் கண்ணிலிருந்து மறையும் வரை , ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனிப்பவன்.

என்ன அது , ஏதோ சத்தம் கேட்குது , ஓ எந்திரிசுடான் போல ,வாங்க அவன் என்ன செய்யுறான்னு பாப்போம், அதுவுமில்லாம இதுக்கு மேல அவனுக்கு பில்ட் அப் கொடுக்குறதுக்கு அவனிடம் ஸ்பெஷல் எதுவும் இல்லேங்க.

கண்ணை கசக்கி கொண்டே எழுந்து , டைம் ஐ பார்த்தான்... ஷிட் எட்டே காலா , இன்னைக்கு எல்லாம் சொதப்ப போகுதா , ஒரு இம்போர்டன்ட் கிளயன்ட்கு டெமோ , ஓடத் தொடங்கினான் ..வேற எங்க , பாத் ரூம் இத்யாதி இத்யாதி ...

எல்லாம் முடித்து , சமையல் கட்டில் இருந்த அம்மாவை நோக்கி ஓடினான் , 'ஏம்மா, நேத்தே சொன்னன்ல , சீக்கிரம் எழுப்புன்னு ,ஏன் எழுப்பலை?' என்று திட்ட ஆரம்பிக்க, "சாரிடா கண்ணா , நீ தான் அலாரம் வச்சிருப்பன்னு நெனச்சேண்டா , நானும் இன்னிக்கி கொஞ்சம் கூடுதலா தூங்கிட்டேன் போல ,எல்லாம் அந்த வலி நிவாரணி பண்ண வேலை" என்றாள் அம்மா.  "போம்மா , இன்னிக்கி எல்லா வேலையும்  கெட்டு போகப் போகுது" என்று கத்த ஆரம்பிக்க , "இந்தா , மொதல்ல இந்த தோசைய சாப்பிடு " என்று அவன் குணம் அறிந்து அவன் வயிற்றை நிரப்பினாள் அம்மா.

அம்மா கொடுத்ததை அவசரமாக வாயில் திணித்து , ரெண்டு மடக்கு காப்பியையும் குடித்து விட்டு ,  உடை மாற்ற ஓடினான். "அம்மா ,இங்க வச்ச ,என் பெல்ட காணம், எங்கேம்மா வச்ச?"  "உன் பெல்ட வச்சு நான் என்னடா பண்ணபோறேன்,அங்க தா எங்கியாவது கெடக்கும் நல்லா தேடுடா ,இவனக்கு கால காலத்துல ஒருத்திய கட்டி வக்கிர வரைக்கும் ,என் உசிர வாங்காம விடமாட்டான் " .

ஒரு வழியாக பெல்டை கண்டுபிடித்து மாட்டி ,  வண்டி சாவிய எடுத்து , பஜாஜ் பல்சரை உதைக்க ,அது ஸ்டார்ட் ஆகும் மூடே இல்லாமல் அமைதியாக இருந்தது.  ப் ச் ச்சே ,இது வேறயா ,நமக்கு இன்னிக்கி  ஏழர தான் , சும்மாவா சொன்னாரு மர்பி.  விறு விறு என்று பஸ் ஸ்டாப் நோக்கி நடக்க இல்ல ஓட ஆரம்பித்தான். என்னிக்கும் இல்லாத திருநாளா , அவன் போக வேண்டிய  பஸ் புறப்படும் தொனியில் ஊர ஆரம்பிக்க , ஓடிப் போய் ஏறி விட்டான்.

பஸ்சில் அவளவாக கூட்டமில்ல,காலியாக இருந்த ஜன்னல் ஓர சீட்டாக
பாத்து அமர்ந்தான். சிறிது நேரம் கழித்து,அடுத்த ஸ்டாப்பில் ,ஒரு நவீன இளம் மங்கை ஏறினாள். இவன் கண்கள் வழக்கம் போல் , அவளை பிரித்து மேயத் தொடங்கின. "இங்க வந்து உக்காந்தா எவ்ளோவு நல்லா இருக்கும் "  என்றது அவன் மனம். இவன் அருகில் வந்த அவள் ,அவனை ஒரு முறை ஏற இறங்க பாத்து விட்டு ,என்ன நினைத்தாளோ, அவனுக்கு முன் இருந்த சீட்டில் உட்காந்துவிட்டாள்.

பஸ்சில் 'கண்ணும் கண்ணும் நோக்கியா ,கொள்ளை கொள்ளும் மாபியா "  ஒலித்து கொண்டிருந்தது. அவன் இருதயம் ,ஹை ஸ்பீட் இல் துடிக்க ஆரம்பிக்க , ஒரு இனம் புரியாத , அவஸ்தையில் , அவளையே பாக்க ஆரம்பித்தான். அவளோ , ஹான்ட்ஸ் ப்ரீ இல் ,யாரிடமோ பேசிக் கொண்டிருந்தாள்.

இவன் மனம் கேள்விகளை அடுக்க ஆரம்பித்தது ," யார்ட்ட பேசுவா? ஒரு வேளை பாய் பிரண்டோ? ச்சே இருக்காது , இது மாதிரி லட்டு பிகுரெலாம் எனக்கு மடிய மாட்டேங்குதே....ஒரு வேளை அவள் தோழியோ ...இவ்வ்ளோவ் நேரம் பேசுறாள்" .  இவன் காதில் இயர் போன் ஐ மாட்டிக் கொண்டு ,FM கேப்பது போல , மெல்ல அவன் உடம்பை முன் நோக்கி நகர்த்தி , கூர்ந்து அவள் பேச்சை கவனிக்க முயற்சித்தான்.

படக் கென்று அந்தப் பெண் இவன் பக்கம் திரும்பி முறைக்க ,  இவன் பாட்டு கேப்பது போல் முகத்தை வைத்துக் கொண்டான். கொஞ்ச நேரம் சென்று ,மறுபடி முயற்சிக்க , மீண்டும் அவள் முறைத்தாள்.

அடுத்த ஸ்டாப் வந்தது போல் ,அவள் மெதுவாக எழுந்து ,இவன் பக்கம் திரும்பினாள். அவள் எதுவும் கத்தி  , ஆர்ப்பாட்டம் செய்வாளோ என அஞ்சி , "ஆக்ச்சோல்லி ஐ வாஸ் நாட் லுகிங் அட் யு " என்று என் அப்பன் குதிருக்குள் இல்லை கணக்கா அவன் ஆரம்பிக்க, அவள் , 
"யோவ் அதெல்லாம் இருக்கட்டும் , மொதல்ல ஜிப் அ போடுயா ,காலங்காத்தால வந்துட்டானுங்க ,
தொறந்து போட்டுகிட்டு  " என்று வசை பாடத் தொடங்கினாள்.

உனக்கு பெரிய "ரஜினி" ன்னு நெனப்பா?

சமீப காலமாக , திரை படங்களில் அதிகம் புழங்கும் ஊர் அது. அது எந்த ஊர் என்று கண்டுபிடித்தால் , நீங்கள் ரசனையான ஆள் தான் , ஏன்ன, பெரும்பாலான திரை படங்கள் ,இந்த மண்ணின் ராசியால் வெற்றி நடை போட்டுள்ளன. அந்த ஊரின் பஸ் ஸ்டான்ட்,  வேர்க்க, விறு விருக்க , சைக்கிளை மிதித்து கொண்டு "அவன்" அங்க வந்து சேர்ந்தான். சைக்கிள் அங்கிருந்த ஸ்டாண்டில் கலந்து தன்னை மறைத்து கொண்டது.  அவன் , --வழக்கமாக பஸ் ஸ்டான்ட் உள்ளே வராமல் வெளியவே கொஞ்ச நேரம் நின்று , டாட்ட காட்டிச் செல்லும் --,அந்த SNR பஸ் நிற்கும் இடம் நோக்கி நகர்ந்தான்.

அங்கே ஏற்கனவே "இவன்" காத்து கொண்டிருந்தான். அவன் , இவனை நோக்கி ,
"என்னடா மாப்ளை , SNR போயுருசாடா ?"
"அதெபுட்ரா போகும் , நான் நிக்குறது கண்ணு தேர்லயாட உனக்கு?"
"சாரி டா மாப்ள ,சும்மா கேட்டேன்டாண்டா "
"அப்படி வந்தாலும் உன்னை விட்டுட்டு நாங்கெல்லாம் போவமாடா ?"
"நன்பேண்டா" என்று அவன் இவனை உச்சி மொகர்ந்தான்.

(உச்சி மொகர்ந்தான் அப்ப்டீன்ன என்னங்க , தலையில மோந்து பாக்கிறதா?)

அப்போது , ஒரு உள்ளூர் போக்குவரத்துக்கு கழக பஸ் வர , அதில் ஓர் பிகரின் 
மூஞ்சி தெரிந்தது. உடனே , இவன் , அவனை பாத்து, 
"சரிடா மாப்பிளை , என் ஆளு அந்த பஸ் ல போறா , உன்னை  காலேசுல பாக்குறேன் " என்று அந்த பஸ் ஐ பாத்து ஓடத் தொடங்க ,
"இங்கேர்ற , பெருசா வசனம் பேசிட்டு ,உன் புத்திய காட்டிட்ட, போடி , உன்னை கிளாசுல வச்கிறேன் இன்னிக்கி " என்றான் அவன்.

கொஞ்சம் , கொஞ்சமாக , மற்ற நண்பர்கள் வந்து சேர , ஒரு வழியாக , SNR வந்து நின்று , சில பயணிகளை உதிர்த்தது. SNR இன் பெசலே,  அதிக வேகம் , சில் சில் என்று வந்து விழும் , இளையராசாவின் லேட்டஸ்ட் ஹிட்டுகள்.

நண்பர்கள் அனைவரும் ,வழக்கம் போல் , பூட் போர்டில் தொங்க ஆரம்பிக்க , பஸ் சீறி பாய்ந்தது.  கடைசி சீட்டில் இருந்த பெருசு , " உள்ள வாங்கப்பா "  என்று சொல்ல , அவர்கள் ஒருவரை ஒருவர் பாத்து சிரித்து கொண்டனர்.

ஸல் ஸல் என்று எக்ஸ்ட்ரா எபக்டில் பதிந்த ,இளையராசாவின் பாட்டு, காதில் இனித்தது :

       தென்றல் வந்து என்னை தொடும் ,
      ஆஹா சத்தமின்றி ....சாதாரணமாக , முப்பது நிமிடத்தில் , அடைய வேண்டிய இடத்தை , இருபதே நிமிடங்களில் வந்து அடைந்தது. "அவர்கள்" அனைவரும் , அந்த பஸ் ஸ்டாண்டில் காத்திருந்த , கல்லூரி பஸ்சில் ஏறினார்கள் .

அந்த கல்லூரி பஸ் , ஊரை ஊடுருவி ,கல்லூரி நோக்கி உருளத் தொடங்கியது.
அது , ஒரு NS  பட்டணம் பொடி விற்கும் கடைய தாண்டும் பொழுது , மாணவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து , "ஆஆஆஆ அச் சூ"  என்று ராகம் போட்டார்கள்.

பஸ் சிறிது வேகம் எடுத்து , முன்னால் சென்ற பஸ்ஸை ஓவர்டேகியது. அந்த முன்னால் சென்ற பஸ் ,அதே கல்லூரிக்கு செல்லும் ,மாணவியர் மட்டும் பயணிக்கும் பஸ். உடனே , மாணவர்களிடம் இருந்து கிளம்பியது , வேறென்ன , விசிலும் , கிண்டலும் , கை தட்டலும் .

ஆண்கள் பஸ்சில் ,கண்டக்டர் பாவம், டிக்கெட் டிக்கெட் என்று கத்த , "என் மாப்ள முன்னாடி எடுப்பான்" , "டே மச்சான் , நீ எனக்கும் எடுதுடா " என்று , கடீசில ,ஒருத்தனும் எடுக்கலை. அந்த ஓவர் கிரவுடட்,மாணவர் பஸ்சில் , கண்டக்டர் விரலில்  மிஞ்சி போனா , ஒரு நாலஞ்சு ரெண்டு அல்லது ஒரு ரூபா நோட்டுகள் மட்டுமே .

ஆண்கள் பஸ் ,ஒரு ஆத்து பாலத்த கடக்க , அங்கே சில பெண்கள் துணி துவைத்து கொண்டிருக்க , மாணவர்கள் அனைவரும் , மறுபடியும் ஒன்று சேர்ந்து , "ஆஅ ஆஅ  ஆச்சு " என்று தும்ம ,அந்த பெண்கள் ,வாய்க்கு வந்த வார்த்தைகள் , காதோடு கரைய , பஸ் வேகம் எடுத்து ,ஒரு வழியாக ,கல்லூரியில் நுழைந்து நின்றது .

அந்த பாடப் பிரிவு மாணவர்கள் , மெது வாக அசம்புல் ஆகவும், மணி அடிக்கவும் சரியாக இருந்தது. அந்த சப்ஜெக்ட்  ஆசிரியர் , ஒரு பெரிய புடுங்கி என்று நினைக்கும், நடந்து கொள்ளும் ஒருவர். அவர் வழக்கம் போல் , ரம்பத்தை எடுத்து  எல்லோரையும் , துடிக்க துடிக்க , கொலை செய்யத் தொடங்கினார்.

கடைசி பெஞ்சில் அந்த அஞ்சு பேர். அதில் ஒருவன் ,பரம ரஜினி ரசிகன். அவன் நிக்கும் போது கூட , இடுப்பு ஒரு சைடாக நெளிந்து , இடுப்பில் ஒரு கையுடன் தான் நிற்பான். அவன் உடுப்பு , இடுப்பில் பல ப்லீட்களுடன் விரிந்து ,கெண்டை கால் அருகில் டைட் ஆகி ,ரஜினி சமீபத்து படத்தில் போட்ட டிரெஸ்ஸை நினைவு படுத்தும்.

அவன் செல்லப் பெயர் "நட்டு". ஒரிஜினல் பெயர் என்னனு நீங்க ஈஸ்யா கண்டுபிடிக்கலாம் , ஆமா அதே தான்.

அந்த அஞ்சு பேரும், பர பரன்னு , தமிழ் சினிமா கல்லூரி காட்சில வழக்கமா வருமே , "அத" செய்ய ஆரம்பித்தார்கள்.  அசிரியர்  அவர் பின்புரத்தை காட்டியவாறு , போர்டில் ஏதோ சீரிஸ் ஆக, கிறுக்கி கொண்டிருக்க , அவர்கள் "அத" பறக்க விட ஆரம்பித்தார்கள்.  அதில் ,நட்டுவின் டார்கெட் , அந்த ஆசிரியரின்  பேக் "கிரவுண்டு".  சில பல முயற்சிகளில், நட்டுவோட "அது" சரியாக  இலக்கை அடைய ,அவன் முகத்தில் பெரிய வெற்றி களிப்பு.

சரியா அப்ப பாத்து , அந்த ஆசிரியர் திரும்பி மாணவர்களை நோட்டம் போட்டாரு . அவர் கண்ணில் முதலில் பட்டது , சிரித்த முகத்துடன் நட்டு.  

"ஏம்பா  சிரிக்கிற ?"
"ஒன்னும் இல்ல சார் ,சும்மா தான் சிரிச்சேன்"
"சும்மா சிரிக்க நீ என்ன லூசா ?"

நட்டு அமைதியாக  இருக்க ,அவர் விடாமல் ,

"சொல்லுப்பா, நீ லூசா ?  ஆளும் மூஞ்சியவும் பாரு " ன்னுட்டு ,அவனை மேலும் கீழும் பார்த்தார்.  நட்டு வழக்கம் போல அந்த கோணல் ஸ்டைலில் நின்று கொண்டு , தலயில் கை விட்டு , முடியை ஒரு சிலுப்பு சிலுபினான் ,ரஜினி ஸ்டைல் லில் .

அவருக்கு வந்ததே கோபம் , " நீ என்ன பெரிய ரஜினின்னு நெனப் பாடா உனக்கு ?"
"நாளிக்கி உங்க அப்பா வ வந்து என்ன பாக்க சொல்லு " னுட்டு ,அவர் பாடத்தை 
ஆரம்பித்தார்.

நட்டு அந்த வகுப்பு முடியும் வரை , கண்கள் மேல் நோக்கி வெறிக்க ,தலைய கோதியபடியே கோபமாக உக்கர்ந்திருந்தான். மாணவர்களை காப்பாத்த , பெல் அடிக்கும் புண்ணியவான் , அருள் பாலித்தான். 

மாணவர்கள் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக , மெல்ல வெளியேறினார்கள். அந்த ஆசிரியரும் ,ஒரு சில மாணவர்களும் மட்டுமே இருக்க, ஆசிரியர் வாசல பாத்து நடக்க ஆரம்பிக்க , நட்டு அவர பாத்து ,

"சார் ஒரு நிமிஷம் "
என்னவென்று அவர் அவனை பாக்க ,
"நீ லூசு ,உங்க அப்பா லூசு , உங்க அம்மா லூசு ,
 உங்க பாமில்யே லூசு "  , கோபமாக கத்தினான் .

Friday, September 23, 2011

ஆண்களே ,பெண்களே : நீங்கள் "அந்த" விசயத்தில் கில்லாடி ஆகணுமா?

இந்த பதிவில் ஒரு கிளு கிளு சமாசாரம் இடம் பெற்றுள்ளது. நான் சொல்லறப்ப , அப்பீட்டு ஆகுரவங்க ஆகிக்கலாம், அதுவரை நீங்க தாராளமா படிக்கலாம்.

மொதல்ல ரெண்டு விசயங்களை நான் குறிபிட்டே ஆகணும். 

* இந்த பதிவுக்கு தூண்டு கோலா அமைந்தது , நம்ம லேட்டஸ்ட் சூப்பர் ஸ்டார் பதிவர் , டாக்டர் ஐடியா மணி அவர்கள். என்னது "அவர் யாரா ?" , அப்ப்டின்ன நீங்க பதிவுலத்தை அப்ப அப்ப எட்டி பாக்குற பச்ச புள்ளயாதான் இருக்கணும். 
"அவர் எப்படி தூண்டு கோலா அமைஞ்சாறு?" அப்படின்னு கேட்கப் போறீங்களா,அதை மட்டும் வெளிய சொல்லமாட்டேன்னு , மைல் கல்லு சாமி மேல  சத்தியம் பண்ணிட்டு தான் இந்த பதிவே எழுத ஆரம்பிச்சேன். 


*இதில் வரும் சம்பவங்கள் , நீங்கள் ஏற்கனவே வேற எந்த பதிவிலாவது படிச்சு , இன்னும் மண்டையிலே அப்படியே ஏத்தி வச்சுரீன்தீங்கன்ன, அந்த பதிவு புண்ணியவான் என்னை மன்னிப்பாராக . நான் ஒன்னும் கொலம்பஸ் இல்லை என்பதை மிகத் தாழ்மையுடன் சொல்லிக் "கொல்" கிறேன் .

இனிமே நான் சொல்லப் போற விஷயம் , கல்யாணம் ஆனவங்களுகும் ,கல்யாணம் ஆகதவங்களுகும் ஒரு பெரிய வரப் பிரசாதம்.  குறிப்பா சொல்லனுமின்ன , கல்யாணமான ஆம்பிளைகளுக்கு. 

க.ஆன ஆம்பளைகளே,  உங்கள் மீது ,உங்கள் துணைவியார் , அன்பை பொழிய வேண்டுமா ....அய்யயோ ,இந்த மூத்த தலிவரு , துணைவியார் அர்த்தத்தையே மாத்தி வசிருகார்ல...சரி ,உங்கள் மனைவிய்டனான நெருக்கத்தை அதிகமாக்க
இதை உபயோகப் படுத்தி பாருங்கள்.  இதை படிக்கும் க.ஆன பெண்களே , நீங்களும் பார்க்கலாம் தப்பில்லை ,ஏன்ன, சில நேரம் , உங்கள் கணவர் , 'அதுல'  அவ்வளவா எனக்கு இண்டரெஸ்ட் இல்லன்னு சொல்லக் கூடியவரா இருக்க கூடும் , வேற வழி , நீங்க தான் "அத" பண்ணி ஆகணும் .

என்னங்க அந்த க்ளோஸ் கிட்ட மௌஸ் கொண்டுபோகாதீங்க , இன்னும் நீங்க அப்பீட்டு ஆகுற நேரம் வல்லை .

சரி ,என்ன விஷயம் ,ஏன் இம்புட்டு பில்ட் அப் ,  புரியுது ,இதோ சொல்றேன்.
உங்கள் வீட்டில் ,உங்கள் மனைவியார் , எல்லோரோட துணிகளையும் ,  அடிக்கடி துவைத்து போட்டு ,பல சமயம் , அப்படியே அவைகளை மடிக்காமல் , ஒரு மூலையில் குவித்து வைத்திருக்கலாம். பாவம் அவங்களும் எவ்வ்ளோவு வேலை தான் பண்ணுவாங்க . நீங்கள் அவர்களுக்கு உண்மையிலே உதவ நினைத்தால் ,இந்த சுட்டியில் உள்ளது போல் செய்து , உங்கள் இல்லத்து அரசியை மனம் குளிரச் செய்யலாம் .என்ன சார் , உச் கொட்டுறீங்களா?  சரி , உங்களுக்காக ,அந்த நெசமாலுமே கிளு கிளு சமாசாரம். நீங்க இதுல ஏற்கனவே எச்பெர்ட் ஆ இருந்தா , உண்மையிலே கில்லாடி தான் சார் நீங்க.  பெண்களே , நீங்க இப்ப அப்பீட் ஆகிக்கலாம் . அதுக்கு மேலயும் கேக்காம , பாத்துட்டு , முகத்தை சுளித்தால் ,அதற்கு "கம்பெனி " பொறுப்பாகாது.


டிஸ்கி:   "என்னங்க ,உங்களை பாக்க ,இந்த தெருவுல உள்ள ஆம்பிளங்க
                    எல்லாம் சேர்ந்து உங்கள பாக்க வந்திருக்காங்க "
                  "வாங்க சார் , என்ன எல்லாம் சேர்ந்து வந்த்ருகீங்க ,என்ன விஷயம் ?"
                  "நீங்க துணி மடிக்கிற அழக, உங்க வூட்டுகாரம்மா,எங்க வீட்ல   சொல்லிடாங்க  போல "
                 "அப்படியா ரொம்ப சந்தோசம்"
                 "ஹி,ஹி அப்படியே எங்க வீடு துணியெல்லாம் மடிச்சி கொடுத்துடுங்களேன் ப்ளீஸ் ".

                 "அய்யோயோ ,மாப்பு,என் பொண்டாட்டி எனக்கு வசுட்டாடா  ஆப்பு !"
               


Thursday, September 22, 2011

சிறை என்னை வாட்டுகிறது - கனி மொழி

இப்ப நினச்சி பாத்தா மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. பணத்துக்கு ஆசை பட்டு நான் அந்த தப்ப பண்ணி இருக்க கூடாது. நான் மட்டுமா பண்றேன் , எல்லாரும் தான் பண்றாங்கன்னு செய்ஞ்சி , இப்ப மாட்டிகிட்டு முழிக்றேன். எல்லாத்துக்கும் காரணம் அந்த போன் உரையாடல். 

எங்க அப்பாவும் எவ்ளோவோ ட்ரை பண்ணாரு,என்ன எப்படியாவது இந்த சிறையிலிருந்து மீடுடன்னுமின்னு. ப்சு, அவரும் பாவம் ,வயசாயிருச்சி ,முன்னே இருந்த செல்வாக்கு ,இப்ப அவருக்கு இல்ல ,என்ன பண்ணுவாரு பாவம்.

சரி, இந்த தனிமை கொடுமையிலிருந்து வெளிய வர ,ஒரே வழி , "எதுலவாவது ,உன் கவனத்தை திசை திருப்பு , வாசிக்கிறது, டைரி எழுதுறது,கவிதை எழுதுறது , இதுமாதரி,உனக்கு தான் கவிதை எழுதுறது பிடிக்குமே ,அதுல பெரிய ஆளா வருவேன்னு ,உங்க அப்பா கூட அடிக்கடி சொல்லுவாரே " என் உயிர் தோழி நினவில் சமீபத்தில் என்னை பார்க்க வந்த போது கூறியது நினைவுக்கு வந்தது.

எனக்கு இப்ப இருக்குற மூடுக்கு ,கவிதையில் மனம் செல்லாது என்பதை நான் உணர்ந்தே இருந்தேன். சரி, டைரி எழுதி தான் பார்ப்போமே , ம்ம்ம் என்ன எழுதலாம். பல நினைவுகள் மனதில் ஊசலாட ,சரி, நம் வாழ்கையின் சந்தோஷ   தருணங்களை எழுத ஆரம்பிப்போம் .

என் நினைவு ,பள்ளி பருவத்தில் ஆரம்பிச்சு வரிசையாய் திரைபடம் போல ,காட்சிகளாய் உருள தொடங்கின . எல்லாரயும் போல , என் அப்பா , என்னை பல் விலக்க சொன்னார் ,தலை சீவ சொன்னார் , பள்ளிக்கு போக சொன்னார் ,
நன்றாக படிக்கச் சொன்னார். எல்லாவற்றையும் செய்தேன்.

கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பித்த வயதில் , எனக்கு தமிழில் அதிக  ஈடுபாடு ஏற்பட்டது. பள்ளியில் நடக்கும் பேச்சு போட்டி , கவிதை போட்டி ,பட்டி மன்றம் ,எதையும் விடாம , ஆர்வத்துடன் கலந்து ,ரொம்ப தடவை , முதல் பரிசு வாங்கியதை , என் அப்பா , ஊரே பாக்க ,என்னை தலையில் வைத்து கொண்டாடினார்.

பின் கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தேன். அப்போது தான் கம்ப்யூட்டர்  அறிமுகம் கிடைத்தது. நண்பர் கூட்டம் , சாட்டிங் செய்வதை அறிமுக படுத்த ,நானும் மெல்ல அந்த சோசியல் நெட்வொர்கிங் சைட் களில் ,நடை பயில ஆரம்பித்தேன்.

எனக்கு தமிழ் ஆர்வம் இருந்ததால்,தமிழ் மக்கள் இணையத்தில் எங்கெல்லாம் தென்படுகிறார்களோ, அங்கெல்லாம் என் தடத்தை பதியத் தொடங்கினேன். அப்போது தான் அவன் அறிமுகம் கிடைத்தது.

பல நாள் ,பல மணி நேரம் ,எங்கள் நட்பு ,இணையம் வாயிலாக , எங்களின் நெருக்கத்தை கூட்டத் தொடங்கியது. தமிழ் மேல் இருந்த காதல் ,எங்கள் இருவரையும் ,ஒருவராக மாற்ற தொடங்கியது ,ஆம் ,எங்களுக்குள் காதல் கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. 

எங்களுக்கே ஆச்சர்யம் ,இவ்வ்ளோவு நாளு,நான் யார் ,என்ன செஞ்சிகிட்டு இருக்கேன்னு அவனுக்கும், அவன் என்ன செய்றானு நானும் கேட்கவே இல்லையேன்னு. அவன் MBA  படிப்பதையும் , அமெரிக்காவில் வேலை செய்ய வாய்ப்பு காத்து  கொண்டிருப்பதையும் ,அவன் குடும்ப பிண்ணனியும் சொன்னான் . என்னை பற்றி அறிந்ததும் , "சரி நாம கல்யாணம் பண்ணலாமா ?" என்று கேட்டான்.  ஏற்கனவே என் மனம் அவனை முழுதாக நிரப்பி இருந்ததால் , என் அப்பாவிடம் தொடர்பு கொள்ளச் சொன்னேன்.

அப்பாவுக்கும் அவனை பிடித்ததால்,சரியென்று உடனே சம்மதித்தார். எனக்கும் ,என் கம்பெனியிலிருந்து அமெரிக்கா செல்ல வேண்டும் என்று சொல்லி ,சென்னை அமெரிக்க எம்பசி இல் , விசா ஸ்டாம்ப் செய்ய அனுப்பி வைத்தார்கள். அன்று தான் அவனும் விசா ஸ்டாம்ப் செய்ய வந்திருந்தான் ,நாங்கள் மொதல்லேயே திட்டம் போட்டபடி.

விதி அப்போது தான் , அமெரிக்க வெள்ளையன் மூலமாக விளையாடத் தொடங்கியது. எனக்கு எந்த வித கேள்வியும் கேட்காமல் , உடனே விசா கொடுத்து விட்டார்கள் . ஆனால் அவனுக்கு ,என்ன காரணம் என்றே சொல்லாமல் ,  விசா கொடுக்க முடியாது போ என்று சொல்லிவிட்டான் அந்த வெள்ளையன்.

அப்புறம் அவன ஒரு வழியாக தேற்றி , எனக்கு ஆபீஸ்ல கட்டாயம் ,"உடனே அமெரிக்கா கெளம்பி ஆகணும்" என்ற நெலமைய சொல்லி ,"நான் என்ன பண்ணட்டும்" என்று கேட்டேன் .  நீ மட்டும் இப்ப அமெரிக்கா போ , அப்புறம் நம்ம கல்யாணம் முடிச்சி ,எனக்கு H4  எடுத்துகிட்டு, முடிவு பண்ணிக்கலாம் " என்று என்னை அமெரிக்காவுக்கு வழி அனுப்பினான்.  

ஆறு மாத காலம் , மறுபடியும் இணையமே எங்கள் இதயத்தை இணைக்கும் ஒரு நரம்பில்லா பாலமாக இருந்தது. 

தீடிரென்று என் அப்பா போன் செய்து , "குட்டிமா ,நான் சொல்றத கேளு , உனக்கு இப்ப வேற நல்ல நல்ல வரன்கள் வருது ,பேசாம அப்பா சொல்றதை கேழு, அவனை தலை மொழுகிடு ன்னு" சொல்லி   கட் செய்து விட்டார். 

நாளுக்கு நாள் ,அவர் நச்சரிப்பு என் நிம்மதியை கொஞ்சம் கொஞ்சமாக தின்றது. 
அவனிடம் சாட்டில் சொன்ன போது , "நீ என்ன செய்யப் போற ? " என்று பதில் வந்தது. எனக்கு மொதல்ல கோபம் வந்தாலும் அடக்கிட்டு ,சரி அவனுடன் விளையாடுவோமின்னு, அவன் மொபைலை அதிர செய்தேன்.

"வேற வழி இல்லடா" என்று நான் விளையாட்டை ஆரம்பிக்க ,அவன் அது நிஜம் என்று நினைத்து , பேச்சை வேறு விதமாக கொண்டு செல்ல ஆரம்பிக்க , மெல்ல மெல்ல அவன் சுய ரூபம் , வார்த்தைகளாய் என் நெஞ்சை சுட ஆரம்பித்தது .

அப்புறம் அவனிடம் இருந்து ,பல நாட்கள் தொடர்பே இல்லை. என் அப்பாவின் தொந்தரவும் அதிகரிக்க , அங்கேயே வேலை செய்யும் ,அவருக்கு தெரிந்த ஒரு வரனை குறிப்பிட்டு ," நீ அடுத்த வாரமே ,இங்க வர்ற , கல்யாணத்த முடிக்கிற" ன்னு இதுவரை நான் கோப பட்டு பாக்காத என் அப்பா , அப்படி கத்தியது, என் காதில் இன்னும் கேட்டுகிட்டே இருக்கு.

ஆபீசில் அவசரமாக இந்திய போய் வர வேண்டும் என்று உத்தரவு வர ,அங்கே என் அப்பா , அவர் சொன்னபடி ,திருமணத்தை நடத்தி முடித்து விட்டார். "நீ இனிமே வேலை பாக்கத் தேவை இல்லை" என்று வேலையையும் விட வைத்தார்.

அப்புறம் என் கணவுருடன், மீண்டும் அமெரிக்கா பயணம். வாழ்க்கையில் மெல்ல சுவாரசியம் துளிர்க்க தொடங்கியது. அதுவரை , நன்றாக பேசிக் கொண்டிருந்த என் கணவர் , தீடீர் என்று கோப படத் தொடங்க ,எவ்வளோவ விசாரித்தும் ,காரணமே சொல்லாமல் , "நீ பேசாம ஊருக்கு  போயிடு " ன்னு சொல்லி ,என்னை வலுக் கட்டாயமாக  அனுப்பி வைத்தார்.

ஆறு மாதம் கழித்து,என் கணவரிடம் இருந்து ஒரு மெயில் , "மனைவிக்கு , என் அப்பாவின் வற்புறுத்தலால் தான் ,நான் உன்னை கல்யாணம் செய்ய வேண்டி வந்தது , ஆனால் நான் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலிக்கிறேன் , நான் அவளை விட்டு விலக முடியாது , என்னை மன்னித்து விடு ".

அந்த மெயிலை வைத்து என் அப்பா , என்னவெல்லாமோ செய்து பார்த்தார். போலிஷ் கம்ப்ளைன்ட் ,சட்ட நடவடிக்கை என்று , ஆனாலும் காலம் கரைகிறதே தவிர , என் நடத்தை களங்கப் பட்டது தான் மிச்சம்.


டிஸ்கி :   அவள் பெயர் கனி மொழி.


Tuesday, September 20, 2011

முதல்வர் என்னை சந்திக்க விரும்பினார் - சோனா

அந்த காலத்து டிசைன் இல் போடப்பட்ட  ஒரு பெரிய கோட்டை கதவு. அதன் முனையில் ஈட்டி மாதிரி ,கூரான பல முனைகள். உத்தரவின்றி உள்ளே வர்றவன் டங்குவார கிழிக்க ரொம்ப நாளாக காத்து கிடந்து , துரு பிடித்து ,உன்னை குத்தவா, வேண்டாமான்னு நட்டுக்க்ட்டு நின்னு இருந்திச்சி.

கங்காருவின் வயுத்துல ஒரு சின்ன பய்யி  இருக்குமே , அது மாதிரி அவ்வ்ளோவு பெரிய கதவுல , சின்னதா இன்னொரு கதவு. கங்காரு வவுத்துல இருந்து அதோட குட்டி எட்டி பாக்கிற மாதிரி, ஒரு முகம் அப்ப அப்ப எட்டி பாக்குது, வேற யாருமில்ல ,அதான் இந்த காவலன் , வாட்ச்மன் , கங்காணி,கூர்க்கா அப்படின்னு பல பேர்ல சொல்வீங்கள்ல அவனோட முகம் தான்.  மனு குடுக்க வரும் அப்பாவி ஏழைகளிடம் இவன் காட்டும் பந்தா இருக்குதே ,  மன்மோகன் சிங்க விட எனக்கு தாண்டா பவரு ஜாஸ்தின்னு அப்படி ஒரு தெனாவட்டு தெரியும்.

சர் சர் னு , கார் வர , அந்த பெரிய கதவு ,தெறக்க அப்புறம் பூட்ட இப்படியே இருக்கு. அப்பதான் அவன் வந்து நிக்கிறான். கால்ல ஹவாய் செப்பல் , கைல ஒரு இத்து போன கடிகாரம் , கசங்கி கசங்காம சட்டை , அதுக்கு சம்பந்தேம இல்லாத ஒரு கலருல பேண்ட்டு போட்டுகிட்டு ,கைல ஒரு பைல். அதுல அவன் சமீபத்தில வாங்கின பிளஸ் டூ மார்க் சீட்.

லேசா அந்த சின்ன கதவை தட்டுறான். பல தடவ தட்டின பிறகு , அந்த சின்ன கதவு திறந்து , மறுபடியும் எட்டி பாக்குது அந்த தெனாவட்டு மூஞ்சி.

 "ஏன்னா வேணு?  "
" கோர்ஸ்ல சேர அப்ளிகேசன் வாங்கணும்? "
" அதெல்லாம் ரெண்டு மணிக்கு மேல வா"
"இல்ல சார் , முதல்வர் தான் வரச் சொன்னாங்க"
"என்னாது, வரச் சொன்னாரா ,எப்ப சொன்னாரு ?"

 --நேற்றைக்கு முதல்வரை அவர் வீட்டில் சந்தித்தது அவன் நினைவில் சுலழ ஆரம்பிச்சு.

....
அவன் அவர் வீட்டுக்கு போன போது, அவர பாக்க ,நிறைய பெற்றோர்கள் கூட்டம். அவனோட அவன் அப்பாவும் வந்திருந்தார். பல மணி நேர வெய்டிங்குக்கு பிறகு , உள்ள போனாங்க.

அப்ப மெல்ல ஆரம்பித்தார் , "சார் பையனுக்கு உங்க காலேசுல ஒரு சீட்டு வேணும்..."
"அப்படியா , எங்க உன் மார்க் ஷீட கொடு பாப்போம் " என்றார் அவர் அவனை பாத்து.
"பய்யன் இங்கிலீஷ்ல நல்ல மார்க் வாங்கிருக்கான் , பி எ இங்கிலீஷ் லிடேரசுர் படிக்க போடுங்க "  (அவர் அதன் துறை தலைவர் வேறு ).
"இல்ல சார் பய்யன் சயின்சு படிக்க ஆசைபடுறான் சார் "
"எடமெல்லாம் அல்ரெடி புல்லா போச்சே "
"சார் எதாவது பாத்து செய்ங்க சார் "
"சரி ,புதுசா கம்ப்யூட்டர் கோர்ஸ் ஆரம்பிட்சுருக்கோம் ,செகுறீங்களா?"
"சரி சார் "
"கொஞ்சம் பணம் கட்ட வேண்டி இருக்குமே "
"பரவல்ல சார் "
"சரி உங்க பையன என்னை காலேசுல வந்து பாக்க சொல்லுங்க "
..

--"யே என்னப்பா ,எப்ப வரச் சொன்னாரு முதல்வர் னு கேட்டா எங்கயோ பராக்கு பாக்குற ? "

"நேத்து சார்." 

"சரி சரி ,உள்ள போ ன்னு " , ஒரு வழியா , கேட்ட தொரந்துவிட்டான்.

அவன் மெல்ல முதல்வர் அறை நோக்கி போக ஆரம்பித்தான். வழியில் கொஞ்சும் மைனாக்கள் ,கலர் கலரா நின்றிருந்தன.  அட நெச மைனாங்க ,
நீங்க வேற மைனானு நெனச்ருபீங்களே.  கருப்பும் ஒரு கலர் தானுங்களே .

ஒரு வழியா முதல்வர் அறைய கண்டு பிடித்து , வெளியில் நின்றிந்த பியூனிடம் , தன் ,பெயர் எழுதி ,அந்த துண்டு சீட்டை கொடுத்தான். அந்த ப்யூன் பெரியவர் , க்ரீசென்று ஒரு மாதிரி சத்தம் போடுற அந்த குட்டி கதவை திறந்து உள்ளே போக, அது தான மீண்டும் மூடி ,திறந்து ஒரு சின்ன குத்தாட்டம் போட்டு நின்றது.

கொஞ்ச நேரம் கழிச்சு , அவர் வெளியே வந்து ,உள்ள போப்பா னு கைய காட்டுனாரு. அவன் கொஞ்சம் மெதுவாக உள்ளே போனான். முதல்வர் அவனை மேலும் கீழும் பாத்துட்டு , கையில் வைத்துருந்த பயில கேட்டாரு. அவன் அதை கொடுத்துட்டு , என்ன நினைச்சானோ , டபக்குன்னு
அவர் முன்ன போட்டிருந்த சேர்ல உக்கந்திட்டான்.

முதல்வர் மூஞ்சில கோபம் கொப்புளிக்க ஆரம்பிச்சுடுசு. "யே , உன்ன யாரு உக்காரச் சொன்னா?  எந்திரி மொதல்ல ?"
"என்னடா இது மதுரைக்கு வந்த சோதனினு" , பய்யன் எந்த்ரிச்சபுல.
அவர் கோபமாக , ஒரு சீட்டை எடுத்து , அதுல கோழி , நெளி நெளி யா ஆயி போகுமே , அது மாதிரி , அவர் கைக்கு வந்தத கிறுக்கி , போயி வெளிய இருக்கிற கவுன்ட்டர் ல கொடுன்னு , பொடனில தள்ளாத கொறையா அவன அனுபிச்சாறு.

அவன் வெளியே போயி , அந்த கவுடர்ல அந்த கோழி பீய ,சாரி சீட்ட கொடுக்க , அத வாங்கிட்டு ,அவர் பணத்த எடுன்னு மிரட்ட ,அவன் பேன்டுல கை விட்டு ,பணத்த கொடுத்து ஒரு வழியா வாங்கிட்டான் சீட்டு .

அப்புறம் மூணு வருஷம் ,இல்லாத கொட்டம் எல்லாம் அடிச்சு , இப்ப அவன் ஒரு பெரிய கணினி வல்லுனன இருக்காப்ல.

டிஸ்கி :   சொல்ல மறந்துட்டேனே , அவன் கொஞ்சம் , உருண்டு திரண்டு இருந்ததால ,அவனுக்கு நாங்க வச்ச பேரு சோனா , உண்மை பெயரு சோமநாதன்.Monday, September 19, 2011

பெத்தவங்க கட்டி வச்ச பொண்ண எனக்கு பிடிக்கல - கார்த்திக்

கொஞ்சம் பூசின தேகம், வட்ட முகம் , அரும்பு மீசை, குறும்பு பார்வை - இந்த மாதிரி ஒரு நண்பன் உண்டு எங்கள் ஆபீசு நண்பர் குழுவில். ஆள் நல்ல இருந்தாலும் ,பாவம் பாருங்க ரொம்ப நாளா கல்யாணம் ஆகாம இருந்துச்சு. என்னனு கேட்குறீங்களா, பாவம் செவ்வா தோஷம். "மாப்ள எனக்கெல்லாம் கல்யாணம் ஆகுமாடா" ன்னு புலம்பிடுருப்பான்.

அப்படி இப்படி அலைஞ்சு , திரிஞ்சு , ஒரு வழியா கல்யாணத்த முடிச்சு வச்சாயிங்க. பையன் ரெண்டு வாரத்திற்குப்பரம் மெல்ல ஆபிசு பக்கம் தலை காட்டினான். "என்னடா பேச வேண்டியதெல்லாம் பேசி, பாக்க வேண்டியதெல்லாம் பாத்து, செய்ய வேண்டியதெல்லாம் செஞ்சியா?  எப்படிடா இருந்துச்சு? " அப்படின்னு லந்த ஆரம்பிச்சோம்.

அப்ப அவன் தலைய லேசா சாச்சி ,வாய ஒரு கோணால கொண்டு போயி , "கேண பாதி , லூசு பாதி ரெண்டும் செஞ்ச கலவை நான்னு "  - சில பல படங்கள்ல , நம்ம சூரிய தம்பி , சிறுத்தை கார்த்தி சிரிக்கிற மாதிரி சிரிச்சு , ஒரு லுக் விட்டான். அதோடு விட்டானா பாவி பய , சத்தம் போட்டு பாட ஆரம்பிட்சிடான், அவன் பாடினது :

   "அடடா பிரமன் புத்திசாலி,
    அவனை விட நான் அதிர்ஷ்டசாலி"


அட கொங்கமக்க, அமுத்துடா உன் ரேடியோவை, இல்லேன பாத்ரூம் போன நம்ம டேமேஞ்சரூ ,பாதியிலேயே வந்த்ருப்போராடுடான்னு , பாஞ்சு அவன் வாய மூடினோம்.  அப்புறம் கொஞ்ச நாளா மந்திரிச்சி விட்ட மாககானட்டம் பய திரிஞ்சி கிடுர்ந்தாப்ல.

"எல்லாம்  கொஞ்சம் நாளிக்கு தாண்டி மாப்ள ",அவன லந்து கொடுத்து கிட்டிறேந்தும்.

ஒரு ரெண்டு மூணு மாசதுகப்புரம் , பய , தலைல பிளஸ்த்ரியோட வந்தாப்ல.
"என்ன மாப்பு வட்சுடான்களா ஆப்பு ?" ன்னு கேட்டோம் . அந்த சோக கதைய ஏன்டா கேட்குரீங்க,லஞ்ச் ஹௌர்ல சொல்றேன்னு சொல்லிட்டு போயிட்டான்.

லன்ச்ல அவன் சொன்னது இது தாங்க :

என் பொண்டாட்டி எங்கிட்ட வந்து,"ஏங்க டின்னருக்கு என்ன பண்ணடுமுன்னு?" கேட்டா.

நான் , "உனக்கு பிடிச்சத பண்ணுமா".

"இப்படி சொன்ன எப்படி , என்ன வேணுமுன்னு சொல்லுங்க"

"சரி, எனக்கு பூரி ,மசாலா சாப்பிட ஆசையா இருக்கு ,அத பண்ணலாமா?"

"பூரி எல்லாம் , தேச்சு போட,ரொம்ப நேரம் ஆகும், நான் தோச போடுறேன்"

"சரி ,போடு"

கொஞ்சம் நேரம் அங்கிட்டு போயிட்டு திரும்ப வந்தா, "ஏங்க , நான் பூரி யே போடுறேன், ஆனால் நீங்க தான் , வெங்காயம் ,தக்காளி கட் பண்ணனும் , நான் மாவ உருடுறேன்நு" சொன்னா.

அப்ப தான் சனி என் நாக்குல வந்து குத்தாட்டம் போட வந்துருச்சு போல,நான் சும்மா இருக்காம, "ஏமா ,அந்த எபெம் ரேடியோவ போடு ,எனக்கு பாட்டு கேட்டா தான் வேல ஓடும் " அப்படின்னு சொன்னேன். அவளும் அத போட்டா.  அப்ப அதுல ஒரு பாட்டு. நல்ல கேட்சியான பாட்டு.  நானும் உற்சாகிதுல, அத கொஞ்சம் அவள பாத்து ஆக்சன்  பண்ணி,முத  வரிய மட்டும் அழுத்தி  பாடி தொலச்சிட்டேன்.  உடனே அவளுக்கு கோபம் வந்து , பூரி கட்டைல ஓங்கி முன் மண்டைல போட்டுடாட.

அப்படி என்ன பாட்டுடா அந்த ரேடியோல வந்துச்சுநு உங்கள மாதிரியே நாங்களும் ஆர்வமா கேட்டோம்  :

இது தான் அந்த பாட்டாம்:

  "பெத்தவங்க பாத்து வச்ச பொண்ண எனக்கு பிடிக்கல"


பாத்து ரசிங்க:

டிஸ்கி :  அந்த நண்பன் பேரு கார்த்திகேயன் ,சர் தானுங்களா.

Sunday, September 18, 2011

காஞ்சனா பார்ட் 3 - ரஜினி ஹீரோ ?

ஒரே பர பரப்பா வந்துருபீங்க,கொஞ்சம் நிறுத்தி நிதனாமா வாசிங்க ,அப்ப தான் மேட்டர கரெக்டா புடிக்க முடியும்.

அந்த கல்லூரி,படிப்புக்கு பெயர் போனது இல்லை என்றாலும் ,மத்தது கெல்லாம் பெயர் போனது (ஆனால் உண்மையில் ரொம்ப நல்ல காலேஜு).
என் நண்பர்கள் எல்லாம் சேந்து , சரி டீ அடிப்போமுன்னு ,காண்டீன் போனம்.   சரி ஒரு வடை வாங்கலாமுன்னு , ஒரு வடைய , பத்து பேர் பங்கு போட்டு , வாயில வச்சா , உப்பே இல்லங்க.

வந்தது பாருங்க கோபம் .  "யார்றா அங்க , எடுரா சொம்ப" ன்ற ஆக்டரு விசயகுமாரு ரேஞ்சுக்கு ஒரு கோபம். என் நண்பன் என்ன நெனச்சானோ , தீடிருன்னு ஒரு டீ கிலாச உடைக்க , கலவரம் நம்ம பரம குடி ரேஞ்சுக்கு , தீயா பரவி, அறிவிச்சாங்க பாரு " காலேசுக்கு இன்றைக்கு விடுமுறை"!

(எனக்கு ஒரு டவுட்டு, இந்த "உப்பு பெறாத சமாச்சரமுன்னு ஒன்னு இருக்கே அது இது தானோன்னு)

அப்புறம் ,இன்னிக்கி பொழுத எப்படிடா ஓட்டறதுன்னு, தீவிர வாதியா சிந்திச்சோம், சரி வாங்கடா, மொதல்ல ஹாஸ்டல் ரூமுக்கு போய், ரிலாக்ஸ் பன்னுவோம்ன்னு எல்லாரும் போனம்.

அப்ப ஒருத்தன் , 'டேய் ,நாம ஆவி கூட பேசலாமா?" ன்னு போட்டான் ஒரு பிட்ட ஒரு ஆவி எக்ஸ்பெர்ட்டு. "  சரி நாமெல்லாம் ரொம்ப தைரியம் , நைட்டு ஒன்னுக்கு போனும்ன கூட வார்டனுக்கு தந்தி போட்டு வரவழைக்கிற சூரங்க ,என்ன ஆனாலும் ரைட்டுன்னு" , ஒரு வழியா ஒத்துக்கிட்டு, வட்டமா உக்காந்தோம் . ஒரு வட்டத்த வரஞ்சு ,அத சுத்தி A ல இருந்து Z வரைக்கும் எழுதிகிட்டோம்.

(இன்னொரு டவுட்டு , படிக்காத ஆவிங்க எப்படி வரும் ?)

அப்புறம் ஒரு மெழுகு வர்த்திய ஏத்தி, அது மேல ஒரு தம்ப்ளர் போட்டு மூடினம்.  அந்த எச்பெர்டு , "சரி யாரவது ஒருத்தன் செத்து போன யாரையாவது நெனச்சு இந்த தம்ப்ளர் மேல விரலை வைங்கடான்னு " சொல்ல ,என் குறும்பு நண்பன் அதன் மேல் வைத்தான். அப்புறம் என்ன நெனச்சானோ , என்னையும் ஒரு விரல் வைக்க சொன்னாயிங்க, சர்தான் , நம்ம வாழ்க்கை , இந்த நாளோட முடியபோதுன்னு மனசுல ஒரு வாய்ஸ் ஓவர் கேட்க , "சரி,வந்தது வரட்டும் ,எவ்வோலோவோ பண்ணிட்டோம் ,இத பண்ண மாட்டோமா,என்ன  இன்னைக்கு செத்தா நாளைக்கு சாராயம் , விஸ்கி" னு என்ன நானே சமாதானம் செஞ்சு ,ஒரு வழியா விரலை அந்த கிளாசு மேல வச்சேன். 

அந்த குறும்பன் என்னடானா , கண்ண மூடி போலி சாமியார் ரேஞ்சுக்கு , ஒரு ஆழ்ந்த மாத்திரைக்கு சாரி நித்திரைக்கு போய்ட்டான்.  நானும் உள்ளுக்குள்ள வெல வெலன்னு நடுங்கிகிட்டே விரல் வச்சிருக்கேன்.

அப்ப அந்த எக்ஸ்பெர்ட்டு , "நீ வந்த்ருகிறது உண்மென்ன , லெட்டர் D கு போ " அப்படின்னு கீறல் விழுந்த டீ வீ  டீ டிஸ்க் மாதிரி திரும்ப திரும்ப சொல்ல ஆரம்பிட்சிடான்  . ஒரு கால் , அரை மணிக்கு அப்புறம் , மெதுவா தம்ப்ளர் , மெழுகு வர்த்திய தள்ளி விட்டுட்டு,நகர ஆரம்பிச்சுடுசு! என் விரலும் ,என் நண்பன் விரலும் , அந்த லெட்டெர பாத்து அந்த தம்ப்லோரோட நகர்துன்ச்சு.  எனக்கு வேர்வை மோரா சாரி ஆறா கொட்ட ஆரம்பிட்சுடிச்சு .

ரெண்டு மூணு பசங்க ,ரொம்ப தைரியமாகி , நீ அந்த லேட்டேருக்கு போ ,இந்த லெட்டருக்கு போ ன்னு லந்த கொடுக்க ஆரம்பிட்சிடாங்க.
அதுவும் ஒரு லெட்டர பல முறை சொன்னாதான் ,அந்த தம்ப்ளர் நகருது.
அதுல ஒருத்தன் , என்ன நினைச்சானோ ,ஒரு ப்லோவுல ,நீ அந்த லெட்டருக்கு போ ன்னு சொன்னான். எந்த லெட்டருன்னு கேட்கீறேன்களா?
அத எப்படி சொல்றதுன்னு கூச்சமா இருக்கு , இருந்தாலும் சொல்றேன் ...ஏன்ன ,அத வேக வேகமா சொன்நீங்கன்ன ,ஒரு மாதிரி  கெட்ட வார்த்தை வாக்கியமா வரும் , எழுதவா வேண்டாமான்னு நெனச்சேன் ...அப்புறமா , இந்த கால இளைங்கிகெல்லாம் , அந்த வார்த்தையின் ஆங்கில வார்த்தைய , "வாடி ,போடி " ன்ற ,ரேஞ்சுக்கு பேசுறத பாத்துட்டு ,போன போகட்டும் போடா நம்ம கவுருத ன்னு ,என் மானத்தை ,காத்துல பறக்கவிட்டு ,வெக்கத்தை விட்டு சொல்றேன்.

அவன் சொன்னது இது தான் " நீ வந்துரிகிறது உண்மேன்ன,  O க்கு போ!"
இதை கேட்டதும் , நான் உள்பட , எல்லோரும் பக பகன்னு  சிரிக்க ஆரம்பிச்சிட்டோம் .  அது வரைக்கும் நல்லா தூங்கிட்டுருந்த நண்பன் ,அதாங்க அந்த தம்ப்ளர் மேல வெரல் வட்சானே ,அவன் தான், மெல்ல நிஷ்டையிலிருந்து எந்திரிச்சான் . நாங்கெல்லாம் விழுந்து விழுந்து சிரிக்க , அவன் முழிக்க, மீண்டும் அந்த வாக்கியத்த, எல்லோரும் ஹாப்பி பர்த்டே டூ யு பாடுற மாதிரி கோரச பாட , அவன் பக்கத்திலிருந்த ஒரு பிஞ்ச ஹவாயி செப்பல எடுதுக்க்டு எங்கள டாம் அண்டு ஜெர்ரி கணக்கா தொரதினான் பாருங்க .

இப்ப தாங்க  ,இந்த சம்பவத்தோட "கை லைட்டு " நடந்துச்சு. அப்புறம் ஒரு வழியா அவன் கோவம் தணிஞ்சு , நீ யாரடா மனசுல நெனச்சு கூபிட்ட ன்னு கேட்டோம் , அதுக்கு அவன் சொன்னான் "  நான் சில்க்கை நெனச்சுகிட்டேன்!" இன்னு சொன்னான் ,"நாங்கள்ள அப்படியே சாக்! ஆயிட்டோம் ஒரு நிமிஷம்.

டிஸ்கி : எங்கடா காஞ்சனா வே மேட்டர்ல வல்லை ன்னு திட்டு வீங்களே ,இதோ ,அந்த படத்தில வர்ற இந்தா வரிய கேட்ரீப்ன்களே :  

  அடி ஆத்தா ஆத்தா குங்கும பூ மூடைய தின்னுபுட்டு
  உங்கம்மா பெததாளா
  அடி பாத்தா பாத்தா பள பளன்னு இருக்குற
  வெறும் பால ஊத்தி குளிகவசாள...

கேட்கலையா ,அப்ப கேளுங்க :

டிஸ்கி 2
அப்புறம் ரஜினி எங்க இதுல வர்றாருன்னு கேட்பீங்களா, அட என்னங்க நீங்க , எலி ஏரோ பிளேன் ஓட்டுதுன்னு சொன்னா அப்படியே நம்புற வெள்ளந்தியா நீங்க.  ஏதோ ஒரு பிரபல புத்தகிதுல , அட்டைல ரஜினி படத்த போட்டு , இது மாதிரி கோக்கு மாக்கு நூச போட்டு , கோடி கணக்குல சம்பாரிகிராங்கள்ள ,அவங்கள நிறுத்த சொல்லுங்க நான் நிறுத்துறேன்!  உன்னை யார்ர நிறுத்த சொல்லவே இல்லைன்னு சொல்றீங்க போல , சாரிங்க ,எல்லாம் ஒரு தமாசு.  நீங்க சிரிச்சு இன்புற்று
இருப்பதே என் நோக்கம். வர்ட்டா!Mr.Bean in Johny English Reborn விமர்சனம்

நீங்கள் இந்த பதிவை படிக்க வந்ததில் இருந்தே தெரிகிறது, நீங்களும் என்னைப் போல , Mr.Bean இன் பரம ரசிகர் என்று. உங்களுக்கு தெரிந்துரிக்குமென்று நினைகிறேன் , அவர் சினிமா விலிரிந்து ரிடயர் ஆக போவதாக அறிவிதிரிக்கிறார். Johny English Reborn , 2003 இல் வந்த படத்தின் இரண்டாம் பாகம் ,தலைப்பே சொல்லுதில்லையா அத.

சரி சரி ,படத்த பத்தி சொல்லுயா ன்னு சொல்றீங்களா ,இதோ வரேன் :

பீன் (அவர அப்படி கூப்பிடறது தான் எல்லாருக்கும் பிடிக்கும்னு நானும் அப்படியே குறிப்பிடப் போறேன்), பிரிட்டிஷ் உளவுத்துறையின் முன்னாள் ஏஜன்ட்,அவர் செய்த காமெடி குளறுபடியால் ,வேலையிலிருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டவர். அணு ஒப்பந்த சம்பந்தமாக , சீனாவுடன் , பிரிட்டிஷ் பிரதமர் ஏற்பாடு செய்திருக்கும் சந்திப்பில் , சீன பிரமுகர்களை கொல்ல, சதி நடப்பதாக உளவுத்துறைக்கு வருகிறது செய்தி. அதை கண்டுபிடிக்க மீண்டும் வேலைக்கு அழைக்கப்படுகிறார் ,வேற யாரு நம்ம பீன் தான். இப்பதான் நம்ம தலைவர்
இன்ட்ரோ.

அவர் வாழ்வை வெறுத்துப்போய் , சீனர்களிடம் குருகுல வாசத்தில் இருக்கிறார். அங்கே வழக்கம் போல் அவர் செய்யும் சேட்டைகள் ,வயித்தை பதம் பாக்கும் வித்தை அவருக்கு மட்டுமே இருக்கும் அற்புதம் என்னன்னு சொல்ல ,தேட்டரில் ஒரே சிரிப்பு மழை தான் போங்க . அங்கே அவர் செய்யும் சேட்டைகள் ,இந்த கிளிப்பில் உள்ளது ,கண்டு களியுங்க முதல்ல :
அவர் உளவுத்துறை தலைவியை பார்க்க போயி , ஆரம்பிக்கிறார் அவரு ஆட்டத்தை.  அதற்கு பிறகு வரும் சீன வாலிபனுடன் அவர் சேசிங் செய்து அலடிகாம போடும் சண்டை ,  நீங்கள் வாய் விட்டு சிரிக்க செய்யும் .

அவர் ஒவ்வொன்றாக மர்மங்களை அவிழ்த்து , குத்தவாளியை மிஸ் செய்து செய்து கண்டுபிடிக்க ,கடைசில் அவர் தான் குத்தவாளி என்று பழி வீழ்கிறது .

அவர் அந்த பழியில் இருந்து எப்படி , லூட்டி யடித்து , எஸ்கேப் ஆவதை படத்தில் நீங்கள் கட்டாயம் சிறிது அனுபவிக்க வேண்டும்.

படத்தில் நான் ரசித்த சில காட்சிகள் :

* ஒரு குத்தவாளியை காப்பாற்ற , ஹெலி காப்டரை ஓட்டும் சமயம், ஹாச்பிடலை எப்படி அடைவது என்று ஹெல்ப் சர்வீஸ் ஐ கேட்க , நீங்கள் இப்போது எங்க ன்னு அங்க கேட்க , அவர் உடனே ஹெலிகோப்டேரை அப்படியே நடு ரோட்டில் இறக்கி, ரோடின் பெயர் பலகையை பார்த்து சொல்வது.

*பிரதமரை சந்திக்க செல்லும் பொது, பிரதமிரடமே, எங்க அவர் இன்னும் வல்லையா ன்னு கேட்க , நான் தான் பா பிரதமர் இன்னு அவர் சொல்ல, போங்க சார் ரொம்ப ஆசை தான்னு பீன் கூத்தடிக்கும் சீன்.

*பிரதமர் சீரியசாக பேசிகொண்டிருக்க ,இவர் வழக்கம் போல் தன் சேர் பட்டனை நோண்டி ,அது மேலும் கீழும் உயர தாழ, இவர் முகத்தை சீரியசாக வைத்து கொண்டு பேச்சை  கவனிப்பது போல் இருப்பது .

* அவர் முதலில் சஸ்பெண்டு ஆக காரணமாக , அந்த இம்போர்டன்ட் அசைன்மேண்டின் போது ,அவர் ஜொள்ளு விட்டு தவற விடுவது .


கொடுத்த காசுக்கு நிச்சயமாக சிரித்து விட்டு வரலாம் .  போங்க ,நல்ல தேட்டரில் பாத்து ரிலாக்ஸ் ஆகுங்க .


 டிஸ்கி : இது என் முதல் விமர்சனம் ...எப்படி இருக்குன்னு கொஞ்சம் சொல்லுங்க ...முடிந்த வரைக்கும் திரை கதையை ஒப்பிக்கவில்லை என்று நினைக்கிறேன்.

Friday, September 16, 2011

கமல் படத்தில் இனி முத்தம் இல்லை?

கமல் முத்தத்தில் நனையாத நடிகைகள் குறைவு ,அந்த அளவுக்கு பேர் போன அவர் , இனி தன் படங்களில் முத்த காட்சி இல்லை என்ற அதி முக்கிய  விசயத்தை, சொல்ல போகிறேன்.  அதற்கு முன், என் நண்பனின் நண்பனுக்கு நடந்த இந்த முத்த கதையை கேளுங்களேன் கொஞ்சம் :

அந்த நண்பன் , ஒரு கணினி நிரலும் நிபுணன் . அவனுக்கு ப்ராஜெக்ட் விசயமாக அமெரிக்கா போக வேண்டி வந்தது. குஷியாக அமெரிக்கா சென்று தன் உல்லாச வாழ்வை தொடங்கினான். ஒரு லாங் வீகெண்டில் , அங்கிருந்த 'சாகச பார்க்' சென்று எல்லா சாகச ரைடையும், ட்ரை பண்ணி கொண்டிருந்தான். ஒரு ரைடு பாக்கவே பயங்கரமா இருந்திருக்கு , எவ்வளோவோ பண்ணிட்டோம் ,இது என்ன ஜுஜுபி  அப்படின்னு நெனசுகிட்டு , அதுல உக்காந்து பெல்ட் போட்டுருகாப்ல.

ரைடு தொடங்கி, கண்ணை மூடி தெரகுருதுகுள்ள , முடிஞ்சு நிக்குது. எல்லாரும் ஒரு பரவச உணர்வோட இறங்குறாங்க. ஆனா இவனால மட்டும் எந்திருக்க முடியவே இல்ல. அய்யாவுக்கு ஸ்பைனல் கார்டு ஏதோ ஸ்லிப் ஆகி ,கழுத்துக்கு கீழ புல்லா எந்த உணர்வுமில்லாம ,மரகட்டையா உக்காந்துட்டாரு.

அப்புறம் , ஆம்புலன்ஸ் வந்து ,அவரை அப்படியே , ரொம்ப பழுத்த தக்காளிய பொத்துநாப் ல , எடுபயிங்கல்ல அது மாதிரி ,சூதானமா தூக்கி கொண்டு போயிருக்காங்க . 

ஒரு மூணு மாசம் அமெரிக்காவுல வச்சு ட்ரீட்மெண்டு ,அப்புறம் ஒரு டாக்டர் ,ஸ்பெஷல் ஆ ,இவர் கூடவே ,இந்தியா வரைக்கும் வந்து ,அதுவும் ஸ்பெஷல் விமானத்துல ,ஒரு பாத்து நாள் இருந்து பாத்துட்டு போயிருக்காரு.

ஒரு வழிய இன்னொரு ஆறு மாசம் சிகிட்சையில , நல்ல குணமாகி ,அதே வேலைக்கு போக ஆரம்பிட்சிருக்கரு. அவருக்கு கல்யாணம் பண்ணலாமுன்னு , ரொம்ப தேடி தேடி ,பொண்ணு கெடைக்காம ,நொந்து நூடூள்ஸ் ஆகி, கடைசியில் ,அவங்க நெருக்கமான உறவுல ,எப்படியோ சமாளிச்சி , நிச்சயம் முடிச்சிருக்காங்க.

நிச்சயம் முடிச்சு வழக்கம் போல , பயனும் பொண்ணும், கல்யாண ஆகுறதுக்கு கொஞ்ச நாள் இருக்குறப்ப ,நல்லா சுதிருக்காங்க. அவன் நண்பர்கள் அத பத்தி அவன ஓட்டிஇருக்கிறப்ப ,அவன் சொல்லிருக்கான்:

"  டே பசங்களா, உதட்டு முத்தம் இவ்ளோ சூபேரா இருக்கும்னு நான் கனவுல கூட நினைக்கலடா "


டிஸ்கி : சரி கமல் முத்தம் என்னாச்சுன்னு கேட்குறீங்களா ?  அவருக்கும் எனக்கும் அறிமுகமே இல்ல . ஒரு வேலை அப்படி கெடச்சா, இனிமே முத்த காட்சி வகாதீங்கன்னு ,கேட்கலாமுன்னு இருக்கேன். அதெப்படி சும்மா அவர் மட்டும் அப்படி அனுபவிக்க்கலாமுன்னு ஒரு பொறாம தானுங்கோ !

சூர்யா படத்தில் விஜய் வில்லன் ?

கூ..கூ  வென்று ஒரு ரயில் அதி வேகமாக போய் கொண்டிருக்கிறது.தீடிரென்று அதன் கூரையில் ஒரு லாங் ஜம்ப் அடித்து ,லேன்ட் செய்றாரு , நல்லா பரந்த வெற்று மார்போட , ஆறு புள்ளி அஞ்சு பேக்கோட, ஹீரோ சூர்யா.

"அரிசியும் , உளுந்தும் தனியா ஊரபோட்டு , ஓடுற கிரைண்டர்ல , தனி தனி யா  அரைச்சு , அந்த உப்பு ,இந்த உப்புன்னு போடாம , நல்ல கல்லு உப்பை ,வீட்ல BP இருக்குறவங்கள மனசுல வச்சு , அதிகமா இல்லாம ,கொரட்சலாவும் இல்லாம ,பக்குவமா போட்டு, கைபடாம கலக்கி , என் அப்பன் பத்து வருஷமா போட்ட வெள்ளை பனியனை , உஜாலாவுல வெளுத்து வெள்ளையாக்கி, அது மேல அரச்ச  மாவை ஊத்தி , ஆவில சுட்டு வரது தாண்டா  இட்லி "  என்று நம்ம டைரக்டர் ஹரி ஸ்டைல் ல ,நிறுத்தாம பஞ்ச் அடிச்சிட்டு , "அந்த இட்லி ல, என் டாவு, அரை லிட்டர் இதயம் நல்லெண்ணெய் ஊத்தி சாபிடுறதை எவன்டா கிண்டல் பண்ணினது , வாடா இப்ப வெளியேன்னு " சிங்கமா கர்ஜனை செய்றாரு. 

அப்ப சொய்க் சொய்க் நு ஒரு பேக்கிரவுண்டோட என்ட்ரி கொடுகிராறு விஜய்.
அவர் மூஞ்சியெல்லாம் ஒரே சந்தனம், நடுவில பெரிய பொட்டு,கைல ஒரு பெரிய வீச்சு அருவா வேற.  அவரும் சட்டை போடல ,அவருக்கும் அதே ஆறு புள்ளி அஞ்சு பேக் வயுதில்ல.

"இட்லி சாபிட்ரதுங்க்றது ஒரு பீலிங் , அதுல இதயம் நல்லெண்ணெய் ஊத்தினா    டேசு டா , இல்ல கோல்ட் வின்னர் ஊத்தினா டேச்டான்னு பரீட்சை செய்றதுல எனக்கு எப்பவும் உடன்பாடில்ல .  அதுவுமுல்லாம நான் ஒரு வாட்டி இட்லி சாப்டுட்டஆ , என் வீடு நாய் கூட மோந்து பாக்காது அந்த இட்லிய "  அப்படின்னு பல டைரக்டர் ஸ்டைல் ல போடுறாரு ஒரு மொக்கைய .

அப்புறம் ரெண்டு பெரும் பீட்டர் ஹுசைன் சொல்லி கொடுத்தமாதிரி , தீயா அடிட்சிகிறாங்க.

த்டீருனு ஒரு கை ,அதுல ஒரு எப் ம்  பாட்டு ஓடுற ரேடியோ இருக்கு ...


ஒரு நிமிஷம் இந்த கதைய விட்டு கொஞ்சம் வெளியில வாங்க , ஒரு சைடு ட்ராக்கு :

சமீபத்தில  ஒரு பாட்டு கேட்டேன் ,நம்ம நா.முத்துக்குமார் எழுதின "எங்கேயும் எப்போதும்" பாட்டு,இதுல என்ன பேர் அதுன்னு கொஞ்சம் கூட என் டூப் லைட்டு மூளைக்கு எட்டமாடீங்கது ,நீங்க கொஞ்சம் கமெண்ட் சொல்லுங்க ,அந்த பாட்டு வரிகள்: 

உன் பேரே தெரியாது 
உனைக் கூப்பிட முடியாது 
நான் உனக்கோர் பேர் வைத்தேன் 
உனக்கே தெரியாது 
அந்தப் பேரை அறியாது 
அட  யாரும் இங்கேது 
அதை ஒரு முறை சொன்னாலே 
தூக்கம் வாராது 

அட தினம் தோறும் அதைச் சொல்லி 
உன்னைக் கொஞ்சுவேன் 
நான் அடங்காத அன்பாலே 
உன்னை மிஞ்சுவேன்

You never find a better time
Make a stand you ll be fine

ஹோ ..சூடான பேரும் அது தான் 
சொன்னவுடன் உதடுகள் கொதிக்கும் 
சூரியனாய் நீயும் நினைத்தால் 
அது இல்லையே ..
ஹோ ..ஜில்லென்ற பேரும் அது தான் 
கேட்டவுடன் நெஞ்சம் குளிரும் 
நதி என்று நீயும் நினைத்தால் 
அது இல்லையே...

சிலிர்க்க வைக்கும் தெய்வம் இல்லை 
மிரள வைக்கும் மிருகம் இல்லை 
ஒளி வட்டம் தெரிந்தாலும் 
அது பட்டப் பெயர் இல்லை
என் பேரின் பின்னால் வரும் பேர் 
நான் சொல்லவா ...?

You never find a better time
Make a stand you ll be fine.

பெரிதான பேரும் அது தான் 
சொல்ல சொல்ல மூச்சே வாங்கும் 
எத்தனை எழுத்துக்கள் என்றால் 
விடை இல்லையே..
ஓ ..சிறிதான பேரும் அது தான் 
சட்டென்று முடிந்தே போகும் 
எப்படிச் சொல்வேன் நானும் 
மொழி இல்லையே ...

சொல்லி விட்டால் உதடு ஒட்டும்
எழுதி  விட்டால் தேனும் சொட்டும் 
அது சுத்தத் தமிழ் பெயர் தான் 
அயல் வார்த்தை அதில்  இல்லை 
என் பேரின் பின்னால் வரும் பேர் 
நான் சொல்லவா ...?

உன் பேரே தெரியாது .......

நன்றி:
 
http://tamil-paadal-varigal.blogspot.com
சரி மறுபடியும் கதைக்கு வருவோம். என் பிரண்டு ரெண்டு பேரு இருக்காய்ங்க ...
ஒருத்தன் சூரிய மூர்த்தி , ஒருத்தன் விஜய் ராஜன் .  ரெண்டு பேறும் சினிமாவுல நடிக்கினுமுன்னு , ஒரு உப்புமா கம்பனி டிறேக்டர்ட மேல சொன்ன கதைய கேட்டுட்டு ,
என்னை பணம் புரட்டு , நாங்க நடிகபோரம் நு  ஒரே கொலையா கொல்ராஇஙக .

போங்கடா ,காசுக்கு பிடிச்ச கேடான்னுடு ,அவங்க வீட்டுக்கு சொல்லனுமுன்னு போறேன்:  இதுக உருப்படுமானு ,அவங்க அம்மாக்கள், வெளக்க மாத்த ஆட்டி ஆட்டி பேசுனது நைட்டு கனவுல குளோசப்புல வந்து , உசுர வாங்குதுது போங்க !டிஸ்கி : அது என்ன , ஆறு புள்ளி அஞ்சுன்னு கேட்குறீங்களா ..வேற ஒண்ணுமில்ல , எட்சாவ  ரெண்டு கோட போட்டுகிட்டு திரியுதுங்க இந்த ரெண்டு பக்கிங்களும்  ,  அந்த ரெண்டு முன்னணி நடிகர்களுக்கும் போட்டியா இருக்கனுமாம் ,அப்ப தான் உடனே வாய்ப்பு கெடைக்குன்னு பாடம் நடத்துற கொடுமைய எங்க போயி சொல்ல ?

Thursday, September 15, 2011

மெக்ஸிகோ சலவை காரி ஜோக்

உங்களுக்கு சுஜாதா அடிக்கடி குறிப்பிடும் மெக்ஸிகோ  சலவை காரி ஜோக்  தெரியுமா ?  அதுக்கு முன்னாடி ,கொஞ்சம் இந்த ஜோக்ஸ் :

கேனடா :
 "என் பொண்டாட்டி மூணு வார டயட்ல இருக்கா!"
"அப்படியா ,எவ்வ்ளோவ்  கொரச்சாங்க?"
"மூணு வாரத்தை ,ரெண்டா கொரச்சுடாங்க"

தாய்லாந்த் :

கிண்டேர்கார்டேன் டீசெர் மாணவ குட்டீஸை பாத்து கத்தினார் "சீக்கிரம் நடங்க ,இல்லன லேட் ஆயிடும் ".
ஒரு சுட்டி "என்ன அவசரம் டீச்சர் ?"
"இப்படி லேட் பண்ணா அடுத்த கிளாஸ் மிஸ் பண்ண வேண்டி இருக்கும் "
சுட்டி தோளை குளிகியபடி, "உங்களுக்கு அவசரம்ன ,நீங்க மட்டும் போங்க மிஸ்"

மெக்ஸிகோ:

செவ் இந்தியர்கள் ,தங்கள் புதிய இனத் தலைவனை பார்த்து , "இந்த வருஷம் வின்ட்டர் ரொம்ப ஜாஸ்தியா இருக்குமா நு?"  கேட்டாங்க.
அந்த தலிவன் அவ்வளவு அனுபவம் இல்லாதனால , "நீங்கல்லாம் குளிர் காய மரத்த சேகரிங்க" அப்படின்னு சொல்லீட்டு, நைசா , வானிலை அறிவுப்பு நிலையத்துக்கு ஒரு போன் செய்து "வின்ட்டர் ரொம்ப கடுமையா இருக்குமான்னு?" கேட்டாரு.   "அப்படிதான் இருக்கும் போல நு " பதில் வந்தது.

உடனே அந்த தலைவன் தன கூட்டத்தை பாத்து "ரொம்ப மரம் வேண்டியுருக்கும் குளிருக்கு ,நெறைய சேகரிங்க" ன்னு உத்தரவிட்டான்.

ஒரு வாரம் கழித்து , மீண்டும் ஒரு கால் பண்ணி கேட்டாரு "உங்களுக்கு நிச்சயமா தெர்யுமா ,வின்ட்டர் ஜாஸ்தி யா இருக்கும்னு ?"

"நிச்சயமா "  வந்தது நிலைய பதில்.

தலிவன் தன் மக்களை பாத்து , "இன்னும் நெறைய மரம் வேண்டி இருக்கும் போல, இன்னும் போயி நெறைய கொண்டு வாங்கனு " சொல்லிட்டான்.

திரும்பியும் ஒரு போன் போட்டாரு கொஞ்ச நாள் கழித்து :
 "சார் , உண்மையாவே குளிர் ஜாஸ்தி யாக போகுதா ?"
"யோவ் ,இது வரைக்கும் ரெகார்ட்ல இல்லாத அளவுக்கு இருக்குமுய்யா" சொன்னங்க நிலையத்தில்.
"அது எப்படி சார் ,ரொம்ப அடிச்சு சொல்றீங்க? " கேட்டான் தலைவன் .
"ஏன்ன, இந்த செவ் இந்திய கூட்டம் ,நெருப்புக்கு மரத்த ,ஓவரா சேகரிக்கிறத வச்சு சொல்றோம்யா "என்ன மக்காஸ் , தலிவர் சுஜாதா சொன்ன அந்த ஜோக் சத்தியமா எனக்கு தெரியாது. அவர் சொல்லுவாரு சொல்லுவாருன்னு பாத்தா சொல்லாமலே போனாரு மவ ராசரு.  உங்களுக்கு தெரிஞ்சதுன்ன , கமெண்ட் போடுங்க ப்ளீஸ்.


டி ராஜேந்திரா கொக்கா

இன்னைக்கு ரேடியோவுல , தனக்கு நேர்ந்த சங்கடத்தை ஒரு நேயர்  பகிர்ந்து கொண்டது , ஏனோ எனக்கு டி ராஜேந்தரை உடன் ஞாபகப் படுத்தியது .  அந்த நேயர் கடைசியில் சொன்ன ஒரு பஞ்ச் காரணமா தெரியல ,அவர் சொன்ன சங்கடம் :

   நானும் , எங்க ஏரியா  பொண்ணுக்கும், ஒரு நல்ல நட்பு உருவாகியது.
   பின்பு நான் அவரை காதலிக்க ஆரம்பித்தேன் . ஒரு நாள் என்னை கல்யாணம் 
    பண்ணிகிரயான்னு கேட்டப்ப , இல்ல எங்க வீட்டுல என்ன மாமனை தான் 
    கல்யாணம் செய்யணும்னு சொல்லிட்டாங்க நு சொன்னா அவ.

     நானும் சரி,நம்ம எப்பயும் போல நல்ல பிரண்ட்சா இருப்போம்னுன்னு சொல்லி ,எங்க நட்ப வளர்துகிட்டோம் .  

     அப்புறம் எனக்கு பாரின்ல வேலை கெடைச்சு  போயிட்டேன் . ஆனாலும் அவ கூட நட்பை விடாம , அடிக்கடி போன் செய்து பேசிக்கிட்டு தான் இருந்தேன் .

    ஆனா சமீபத்தில தான் கேள்வி பட்டேன், அவ மாமா வுக்கும் ,  இவ குடும்பத்துக்கும் பெரிய சண்டை வளர்ந்து , கல்யாணப் பேச்சை நிருதிடாங்கனு ..  ஆனா அவள் ரெண்டு நாளைக்கு முன்னாலே ,அவ மாமனை கல்யாணம் செய்தது என்  நண்பர் மூலமாக தெரிய வந்துச்சு .

   நான் அவ்வ்ளோவ் பெருந்தன்மையா பழகியும் ,அவ என் கிட்ட கல்யாணம் செய்ய போறதை சொல்லவே இல்லை.

   அவளுக்கு போன் பண்ணி ,ஏன் ,எங்கிட்ட கூட சொல்லாம ,இப்படி நடந்து கிட்ட அப்படின்னு கோபமா கேட்டப்ப , உன்னால எனக்கு எதாவது பிரச்னை வரும்னு தான்  சொல்லலை சொன்னா பாருங்க, எனக்கு அப்ப இருந்து மனசே கேட்கலை .


   மேல சொன்னது எல்லாம் சொல்லிட்டு ,ஒரு பஞ்ச் விட்டாரு ,அது:

    "காதிலிக்கிற எல்லாதுக்கும் ஒன்னு சொல்ல விரும்புறேன் ,  பூக்களை பறிக்கும் பொது , முள்ளால மட்டும் தான் காயம் வரும்னு நெனைக்காதீங்க ,
 சில சமயம் பூவே உங்களை குத்திடும் "
ரஜினி , கமல் இணையும் புதிய படம்

என் இனிய தமிழ் வலை மக்களே, உங்கள் பாசத்திற்கும் ,நேசத்திற்கும் உரிய இந்த இளையதாசன் , டிரங்கு பெட்டியில் தூங்கிகொண்டிருந்த என்
ஓட்டை காமிராவை தூசி தட்டி , உங்களுக்காக கடல் கரையில் வாசம் பிடித்து ,அதை நேசத்துடன் உங்கள் பார்வைக்கு இரு திரை இமயங்களை வைத்து அப்படியே லவட்டி கொண்டு வந்திருக்கிறேன். அதன் விவரம் இந்த பதிவின் கடைசியில்.

நெதர்லாந்த் ஜோக்:

ஒரு நகர மனிதன் , கிராமத்திற்கு வாத்து வேட்டைக்கு போனான். ஒரு வாத்தை குறி பார்த்து சுட , அது ஒரு வயலில் விழுந்தது. அந்த வயலின் உரிமையாளரான ஒரு விவசாயி ,அந்த வாத்து இனி தனக்கு தான் சொந்தம் என்றான். நகர மனிதன் அவனுடன் வெகு நேரம் விவாதம் செய்து பார்த்தான் .  ஆனால் விவசாயி மறுத்து , ஒரு யோசனை கூறினான்.  நாம் இருவரும் யு கிக் , ஐ கிக் விளையாடுவோம் ,யார் ஜெய்க்கிரர்களோ , அவருக்கு தான் இந்த வாத்து என்றான். அது என்ன விளையாட்டு என்றான் நகர வாசி. "நான் ஓங்கி உன் மர்ம ஸ்தானத்தில் உதைப்பேன் , நீ அதனை தாங்கி கொண்டால் , நீ வெற்றியாளன் ...நான் உன் உதையை தாங்கி கொண்டால் நான் வெற்றியாளன் " என்றான் விவசாயி.   ஓகே ,நான் ரெடி ,நீ பர்ஸ்டு என்னை உதை என்று தம் கட்டி நின்றான் நகர வாசி.
விவசாயி ஓங்கி தன காலால் அவன் மர்ம ஸ்தானத்தை தாக்கியதில் ,அப்படியே மயக்கமுற்றான் நகர வாசி .  ஒரு அரை மணி சென்று எழுந்த நகர வாசி ,  சரி, இப்ப நான் உன்னை உதைகட்டுமா என்றான் .  ஆனால் அந்த விவசாயி , சரி சரி, நீ தான் வெற்றியாளன் ,இந்த பிடி உன் வாத்தை என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.


அமெரிக்க ஜோக்:

ஒருவன் காரை அதி வேகமாக ஓட்டி சென்று கொண்டிருந்தான். அப்போது அவன் பின்னால் ஒரு போக்குவரத்து போலிஷ் , லைட் போட்டு அவனை ஓரம் கட்டினார். அந்த போலிஷ், "நீ ஒரு நல்ல ரீசன் சொன்ன , உனக்கு ஸ்பீட் பைன் போடாம விட்ருவேன் ,சொல்லு ஏன் இந்த எம வேகத்தில ஓட்டின?" 

 அவன், "சார் ,நாலு வாரத்துக்கு முன்னாடி என் பொண்டாட்டி உங்கள மாதிரி ஒரு போலிசோட ஓடி போயிட்டாள் ...என் கார் பின்னாடி போலிஷ் வண்டிய பாத்ததும் , எங்க என் வைப்ப , திருப்பி கொடுக்கத்தான் என்னை விரடிடுட்டு வரீங்கன்னு நெனச்சேன் சார்!"


நுசிலாந்து சோக்கு:

ஒரு பர்கர் கடையில் நுழைந்த ஒரு வயதான தம்பதி ,  ஒரே ஒரு பர்கர் வாங்கி கொண்டு , அதை சரி பாதியாக பிரிக்க தொடங்கினர்.  அதனை பார்த்த ஒரு கஸ்டமர் , நான் வேண்ண, இன்னொரு பர்கர் வாங்கி தரட்டுமா அந்த அம்மாவுக்கு என்றார்.  அதற்கு ,அந்த கணவர் ,இல்லை நாங்க எப்பய்மே எதைய்மே ஷேர் பண்ணிகுவோமுன்னாரு.
கணவர் அவர் பங்கு பர்கரை மெதுவாக சாப்பிட தொடங்கினார். அந்த அம்மாள் சாபிடாமல் இருப்பதை பார்த்த அந்த கஸ்டமர், "பாருங்க அவங்க சாபிடல்ல ,நான் இன்னொன்று வாங்கி தரேன் என்று மறுபடியம் ஆரம்பிக்க ",  இல்ல வேண்டாம், நாங்க எப்பய்மே எதைய்மே ஷேர் பண்ணிக்குவோம் என்று மீண்டும் மறுத்தார் கணவர்.
என்னங்க நீங்க , நான் வாங்கி தருவேன் என்று அடம் பிடித்தார் அந்த கஸ்டமர்,அவரை பாத்து கத்தினாள் அந்த வயதான மனைவி , "யோவ் , நான்  அந்த பல் செட்டுக்கு வெயிட் பண்றேன் , உன் வேலைய பாத்துக்குட்டு போ தம்பி என்றாள்.


டிஸ்கி :  என்னடா ,தலைப்புக்கு வரலயேன்னு உங்க BP கூடிசுன்னா, மேல உள்ள ஜோக் மற்றும் என் முந்தைய பதிவு ஜோக்ஸ் படிச்சு , ரிலாக்ஸ் பண்ணுங்க ப்ளீஸ்.

Wednesday, September 14, 2011

மங்காத்தா பார்ட் டூ

ஒரு முன் அறிவிப்பு ,  மறுபடியும் தல ரசிகர்கள் மன்னிப்பார்களாக , இது
என் மிட்சர் பொட்டலத்தின் தொடர்ச்சி ...

தைவான் ஜோக் :
அப்பா மகனுக்கு பெட் டைம் கதை சொல்ல ஆரம்பித்தார் .
  "முன்னே ஒரு காலத்தில ,காட்டுக்குள்ள  ஒரு அழகான 
   வெள்ளை முயல் இருந்துச்சி ..."
உடனே மகன் "அப்பா ஸ்டாப் ஸ்டாப் ..அதெல்லாம் சின்ன கொழந்தைகளுக்கு ,
ஒரு சயின்ஸ் பிக்சன் கத சொல்லுப்பா"
"சரி, முன்ன ஒரு காலத்தில , விண்வெளியில ஒரு அழகான வெள்ளை முயல் ..."
"அப்பா , நான் பெரிய பய்யன் ,அதுக்கேத்த மாதிரி சொல்லுங்க ..."
"சரி,சரி , அம்மாகிட்ட சொல்ல மாட்டேன்னு சத்தியம் பண்ணு சொல்றேன் ..."
"சத்தியமா சொல்ல மாட்டேன் ,சொல்லுங்கப்பா ..."
"முன்ன ஒரு காலத்தில ,ஒரு முயல் முண்டமா நின்னு கிட்டுருந்த்ச்சு...."


இந்திய ஜோக்கு:

ஒரு வியாபாரி , ஹாஸ்பிடல் இல்  இருந்த தன்  சீன நண்பரை பார்க்க சென்றிருந்தார்.
அந்த சீன நண்பர் "சிங் முங் சிங் முங் சங்க"  என்று ஈன ஸ்வரத்தில் அவரை பார்த்து 
முனகினார். தன் நண்பர் என்ன சொல்றாருன்னு அந்த இந்திய வியாபாரிக்கு புரியாம 
தவிட்சாறு. அந்த சீன நண்பர் மறுபடியும் அதே வார்த்தைகளை சொல்லிட்டு ,தன் உயிரை 
விட்டாரு .    சில வருடத்திற்கு பிறகு , அந்த வியாபாரி ,சீனா போனாரு . அங்க பல நாள்
இருந்து சீன மொழி கத்துகிட்ட பிறகு தான், இறந்து போன சீன நண்பன் சொன்னது புரிந்தது ,
"டேய் ,ஆக்சிஜன் குழாயிலிருந்து உன் காலை எடுடா  சீக்கிரம்!"


ஹங்கேரி சோக்கு:
டாக்டர் :   நான் சொன்னபடி , ஜன்னல நல்ல தொறந்து வச்சு தூங்கி நீங்களா ?
அவர்:   ஆமா சார், நீங்க சொன்னபடி செய்தேன் .
டாக்டர் : அப்படின்னா,உங்க ஆஸ்த்மா கம்பிலீட்டஆ ,போயிருக்குமே இப்ப ?
அவர் :  இல்ல சார் , ஆனா ,என் வாட்ச் ,  ஐ போன் , டிவி, லேப்டாப் எல்லாம் போச்சு !


இன்னும் சிலது அடுத்து வரும் !

மிட்சர் பொட்டலத்தில் ஒரு 'மங்காத்தா '

பொழுது போகலேன்னு மெல்ல கடை வீதிக்கு போயிட்டு , அப்படியே வீடு திரும்பும்போது ,
செட்டியார் கடை கண்ணில பட்டது. மிட்சர் நல்லா இருக்கும் வாங்கி சாப்பிடுவோமுன்னு ,
ஒரு பொட்டலம் கட்டச் சொன்னேன். வீட்டுக்கு வந்து , அப்படியே பேன்-ஐ போட்டுட்டு , பொட்டலத்தை
பிரித்தேன் ..அந்த பொட்டலத்தின் பேப்பரில் இருந்த தலைப்பு என்னை கவர்ந்தது : உலகத்தின் சிறந்த சிரிப்புகள்.

அதில் பல ஜோக்குகள் என் பொழுதை மிக 'சிரிப்பாக' போக்கின ,உங்கள் பார்வைக்கு சில. சிரிப்பு வல்லன்ன என்ன
கேட்காதீங்க :

** ஒரு குறி சொல்பவரை பார்த்த ஒருவன் ,அவரை எப்படியாவது நக்கல் செய்யலாமுன்னுட்டு ,தன் கைய
காட்னான். அவன் கைய உத்து பாத்துட்டு , உனக்கு ரெண்டு புள்ளைங்க இருக்கனுமேன்னு சொன்னாரு குறி
சொல்றவரு. அதுக்கு ,அவன் ,ஹி ஹி ,எனக்கு மூணு புள்ளைங்க அப்பிடுன்னு பெருமையா சொன்னானாம் .
அதுக்கு அவரு, 'ஹி ஹி ..அப்படின்னு நீ நெனட்சிகுட்டு இரு' அப்ப்டின்னாரம் ...:-)
மேல உள்ளது ஜெர்மனி ஜோக்காம் ...

இப்ப சுவிட்சர்லாந்து ஜோக்கு :

பொண்டாட்டி: ஏங்க, டோயலேட் ல , புது டோயலேட் ப்ருஷ் வாங்கி வச்சுருக்கேன் பாத்தீங்களா?
புருஷன்: பாத்தேன் , ஆனா ,எனக்கு டோயலேட் பேப்பர் தான்மா வசதியா இருக்கு !


இந்தா படிங்க பின்லாந்த் ஜோக்கு:

ஒருத்தன் முப்பது வருஷத்துக்கு முன்னால தேனிலவு கொண்டாடின அதே ஹோடேல்ல, தன் திருமண
நாள் கொண்டாட விரும்பி ,தான் மட்டும் மொதா நாலு அங்க ஏற்பாடு பண்ண போனான் . அங்கே நல்லா அதே ரூம
அலங்காரமெல்லாம் செஞ்சிட்டு , தன் மனைவிக்கு ஒரு இ மெயில் தட்டி விட்டான் . ஆனா பாவி பய ,தப்பான அட்ட்ரசுகு அனுப்புனான் .
அவன் அப்படி தப்பா அனுப்புனது , சமீபத்தில் கணவனை இழந்த ஒரு இளம் விதவைக்கு.

அடுத்த நாள், அந்த விதவையின் மகன் அவன் அம்மா கம்ப்யூட்டர் முன்னால இறந்து கிடப்பதை பார்த்தான் . அந்த திறந்திருந்த கம்புடேரில்
அந்த ஈ மெயில் :
" அன்பே, நான் இப்பதான் இங்க வந்து சேர்ந்தேன் , நீ நாளை இங்க வருவதற்கு எல்லா ஏற்பாடும் செய்தாயிற்று . உன்னுடைய பயணம்
என்னுடையது மாதிரி சிறப்பா இருக்குமுன்னு நினைக்கிறேன்.
பின் குறிப்பு: இங்க ஒரே குஜாலா இருக்கு எனக்கு! "


மிச்ச ஜோக்கு அடுத்த பதிவில் ...

டெயில் : தலைப்பு சும்மா ஒரு கவர்ச்சிக்காக...தல ரசிகர்கள் மன்னிப்பார்களாக ...