Monday, October 31, 2011

தைரியம் இருந்தா கை வச்சிப் பாருடா!

வழக்கமாக சந்திக்கும் அந்த கால்வாய் ஒட்டிய ஜாகிங் ட்ராக் வந்து சேர்ந்தார்கள் 
சாகுலும் , பிரதீப்பும். அவர்கள் இருவரும் சிங்கையில் உள்ள ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்பவர்கள்.

நிதமும் காலை ஆறு முதல் ஏழு வரை , மெது ஓட்டம் செய்து கொண்டே ,அவர்கள் பார்த்த , படித்த, கேள்விப்பட்ட விசயங்களை பரிமாறிக் கொள்வார்கள்.

"ச்சே ஒரே வெக்கையா இருக்கு " என்று சட்டையை கழட்டி வெற்றுடம்புடன் ஓடத் தொடங்கினான் சாகுல்.
"என்னடா , நீ சல்மான் கான் ரசிகனா ,சொல்லவே இல்ல ?" கேட்டது பிரதீப்.
"இல்லையே ஏன் கேட்குற ?' 
"நானும் பாக்குறேன் , முந்தி வந்த படத்தில இருந்து இப்ப வந்த படம் வரைக்கும்,ஒரு சீன்ஆவது சட்டைய கழடிருவேன்னு பிளான் பண்ணி செய்றாரே "

"அவர் பாடி சிக்ஸ் பாக் ,நம்ம பாடி ஒன் சாக்" - சாகுல்

"சரி விஷயம் கேள்விபட்டயா, சும்மா கார் மேல கை வச்சு நின்னா , அந்த கார்  உனக்கு பரிசா கெடைக்கும் " - பிரதீப்
"ஹா , சும்மா கை வச்சா காரா" -சாகுல் 


 
"ஆமாண்டா , கார்ல ஒரு கை ஸ்டிக்கர் இருக்கும் ,யார் ஸ்டிக்கர்  மேல கை வச்சுகிட்டே, அதே இடத்தில அசையாம 
ரொம்ப நேரம் நிக்குரான்களோ ,அவங்களுக்கு அந்த கார் பரிசு ,அது சாதாரண கார் இல்ல , சுபாரு காரு ...அதுவும்  லக்சரி மாடல் ... "
"அடடா , விளம்பரம் செய்றதுக்கு ஒரு அளவே இல்லையா , கை அசைக்காம எப்படி ரொம்ப நேரம் இருக்கிறது" - சாகுல்

"இடையில ஒரு பத்து நிமிஷம் பிரேக் எடுதுக்கெலாம்,நீ ட்ரை பண்றீயா" - பிரதீப்.

"நம்மக்கு கார் மேல அவ்ளவா இன்ட்ரஸ்ட் இல்ல, அதுவுமில்லாம கார வாங்கி , இங்க ரோட்ல ஒட்றதுக்கு,அப்புறம் பார்க் பண்றதுக்கே , டெய்லி காசு அழணும், பேசாம நான் நினைக்கிற போட்டி வச்சா பாக்கலாம்"  - சாகுல்"என்ன போட்டி?" ஆர்வத்துடன் பிரதீப்.

"யாரு நம்ம ஹன்சிகா தோள் மேல ரொம்ப நேரம் கை வச்சு நிக்ரான்களோ  அவங்களுக்கு ஹன்சிஹா கூட டின்னர்,எப்படி நம்ம ஐடியா" - சாகுல்

"போடங்..ஏற்கனவே ரொம்ப பயலுக ஹன்சிகா ,ஹன்சிகா ன்னு கோவில் கட்டுற ரேஞ்சுக்கு அனத்திக்கிட்டு கெடகாயீங்க, இதுல நீ வேற கெளம்பிட்ட" - பிரதீப்.


டிஸ்கி: என்னங்க ரெடியா கை வைக்க , கார் மேல!

Saturday, October 29, 2011

நான் போட்ட சவால்!

அந்த கிளினிக்-ல் நுழைந்தவுடன்,ரிசப்சனிஸ்ட் அடையாள அட்டையை வாங்கி , கம்ப்யுடரில் விவரங்களை சரி பார்த்து விட்டு, ஒரு வரிசை எண்ணை வழங்கினாள். 

"மணி அங்க உக்காரு" என்று வந்தது கட்டளை. சொன்ன இடத்தில நல்ல பிள்ளையாய் அமர்ந்து கொண்டு, வேற யாராவது தெரிந்தவர்கள் வந்திருகிரார்களா என்று பார்க்கத் தொடங்கினேன். யாரும் தெரிந்த மாதிரி இல்லை.  பக்கத்தில் ஒருவன் உடல் முழுவதும் நடுக்கத்துடன் உக்கார்ந்து கொண்டிருந்தான். 'பய  ஓவராக நடுங்கிரானே, மொதல் தடவையா வர்றானோ' என்று நினைத்துக் கொண்டே,என்ன ஆச்சு என்றேன்.

"மணி , உஷ் , இது ஹாஸ்பிடல் , இங்கே இப்படி சத்தம் போட்டு பேசக் கூடாது "
என்று அதட்டல் வந்தது. நான் அதனை கண்டு கொள்ளாமல்,அந்த புதியவனை பார்த்து,
"என்ன ஆச்சு?" என்றேன்.
"ரெண்டு நாளா ஒரே காச்சல்" என்றான். 
 "ஒன்னும் பயப்டாத, உள்ள போனவுன்னே ,உன் வாயத் தெறக்கச் சொல்லி , செக் பண்ணிட்டு , என்னத்தையோ ஊட்டி விடுவாங்க,மொதல்ல கசகுற மாதிரியே இருக்கும், அப்புறம் நல்லா இனிக்கும் ,அப்புறம் நாக்க சாப்பிட்டு சாப்பிடலாம் ...ஹ்ம்ம் செம டேஸ்டு".
அவன் ஒன்றும் சொல்லாமல் இன்னும் நடுங்கிக் கொண்டே இருந்தான். 

நான் கண்ணாடிக் கதவின் வெளியே பார்க்க, காரில் இருந்து இறங்கினான் ராஜா. எப்பவும் துள்ளல் நடையுடன் வருபவன் , ஏனோ அன்று , கொஞ்சம் நடக்க முடியாமல் நடந்து வந்து , என்னருகே அமர்ந்தான்.

"என்னடா ராஜா ஆச்சு?"
"அத ஏண்டா கேட்குற ? என்றான் ராஜா சோகத்துடன்.
"சொல்லு " என்றேன்.
"ஒன்னும் இல்லடா , நேத்து புதுசா ஒரு Cafe கு கூப்பிட்டு போனாயிங்க. அங்க வித விதமா , கேக் அது இதுன்னு இருந்துச்சு...புதுசா Strawberry Muffin இருந்தச்சு...
எனக்கு தான் Strawberry ரொம்ப புடிக்குமே ..ஆசையா நாலஞ்சு சாப்டுட்டேன்...
பாவி பயலுக என்னத்த போட்டாங்களோ ,  வீட்டுக்கு போனதில் இருந்து , ஒரே வயித்து வலி, இப்பவரைக்கும் தீந்த பாடில்ல"  
"சரி ,கவலைப் படாதே ,இந்த டாக்டர் உன் கவலையைப் போக்கிருவாறு "
என்றேன் சிரிப்பை அடக்கி கொண்டே.

எதேச்சையாக வெளியே வாசலை பார்க்க , புதிதாக இருவர் ...ரெண்டு பேரும் ஒரே மாதிரி , ஹேர் ஸ்டைல் , உடல் அமைப்பு ,கலர் ...ஒருவன் மட்டும் கண்ணாடி கதவை திறந்தவுடன் உள்ளே வந்து விட்டான் தைரியமாய், இன்னொருவன் , நான் உள்ள வரமாட்டேன் என்று காலை தரையில் ஊன்றிக் கொண்டு கதவின் வெளிப்புறம் நின்று கொண்டு , எவ்வளவு இழுத்துப் பார்த்தும் வராமல் முரண்டு பிடித்தான். நான் முதல் முதலில் இந்த கிளினிக் வந்த போதும் இதே மாதிரி நடந்து கொண்டதை எண்ணி எனக்குள் சிரித்துக் கொண்டேன்.

"டோக்கன் நம்பர் 17" என்று காட்டியது மேலே இருந்த அந்த டிஸ்ப்ளே.
"மணி வா ,உள்ள போகலாம்"

உள்ளே போனவுடன் , "என்னாச்சு மணிக்கு?" என்றார் டாக்டர் . 
"எப்பப் பாத்தாலும் அரிச்சிகிட்டே இருக்கான் டாக்டர்,கண்ட இடத்துல விழுந்து புரள்றது,எது சொன்னாலும் கேட்குறதே இல்ல,வால் ரொம்ப ஜாஸ்தி ஆயிடிச்சி"
"அப்படியா ,என்ன மணி ,வால கட் பண்ணிரட்டுமா?" என்றார் டாக்டர் என்னைப் பார்த்து.
"அய்யா ..சாமி ...அப்பிடி எதுவும் செஞ்சி என் மானத்த வாங்கிடாதீங்க" என்று நினைத்துக் கொண்டே, அமைதியாக அவரப் பார்த்தேன்.
என்ன முடியை விலக்கி நன்றாக செக் செய்தவர் , நெறைய பூச்சி வந்தருக்கு,
வேற வழியில்ல , முடியெல்லாம் ரீமூவ் பண்ணனும் , என்று சொல்லிவிட்டு , என் கழுத்தில் ஒரு வட்ட பிளாஸ்டிக்கை மாட்டிவிட்டு அடுத்த அறைக்கு 
அனுப்பி விட்டார்.

அங்கே கன ஜோராக ,எனக்கு உடம்பெல்லாம் ஒரு முடி விடாமல் சிரைத்து விட்டார்கள். நான் இப்போது முழுசா உரிச்ச கோழியாட்டம் இருந்தேன். 

உடல் நடுங்கியவாறு வெளியே வந்த என்னைப் பார்த்து ,விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினான் அந்த 'காய்ச்சல்' பார்ட்டி.அவனுடன் என் நண்பன் ராஜாவும் , மற்றவர்களும் சேர்ந்து கொள்ள , ஒரே அவமானம்,

"இனிமே இந்த Pets Clinic பக்கம் வரவே கூடாது , வானமே இடிஞ்சி விழுந்தாலும்" என்று சபதம் செய்து கொண்டே, என் எஜமானருடன் நடக்கத் தொடங்கினேன்.

டிஸ்கி:  சமீபத்தில் பத்திரிகையில் படித்த செய்தி, நாய்களுக்கு வழக்கமாக கொடுக்கும் Pet Food அவளவு ஹெல்தியாக இல்லையென்று நாய் வைத்திருக்கும் ஓனர்கள் ரொம்பவே கவலைப் பட்டதால் , ஆர்கானிக் மற்றும் ஹோம் மேட் டின்னர் உணவுகள் செய்யும் பிசினஸ் சக்கப் போடு போட ஆரம்பித்து விட்டதாம்.  நாய்களுகென்று பிரத்யோக பேக்கரிகள் கூட திறக்கப் பட்டுவிடனவாம். நாய்களை கவனித்துக் கொள்ள Day Care சென்டர்கள் கூட உள்ளது உங்களுக்குத் தெரியுமா,பாவம் நம்ம ஊர் தெரு நாய்கள்...

இந்த சுட்டிகளை பாருங்கள், சிங்கையில் நாய்களுக்கென்றே உருவான வர்த்தகத் தளங்களின் விவரங்கள், அங்கே கிடைக்கும் கேக் விபரங்கள் உள்ளன:Thursday, October 27, 2011

உனது விழி வலிமையிலே!

அலுவலக வேலையில் மும்முரமாக இருந்த விமலாவின் கவனத்தை கலைத்தது ,அவளின்  செல்போனின் வைப்ரேசன். யாரென்று பார்த்தாள்,அவள் கணவன் - ஜெகதீஷ்.
"சொல்லு  ஜேக்"
 "யா விம்மி , இன்னிக்கி நைட்டு என்ன டின்னெர் செய்ய?"
"உன் சாப்பாட்ட சாப்ட்டு ஒரே போர்,வெளிய டின்னர் போலாமா?" என்று கேட்டாள் அவள்.
"ஓகே ,எங்க போகலாம், யுவர் சாய்ஸ்?" என்றான் ஜெகதீஷ்.
"நம்ம வீட்டுக்கு பக்கத்தில ஒரு ரெஸ்டாரன்ட் இருக்கே,அது பேர் என்ன ?"
"லெமன் கிராஷ்"
"யா ,அங்க போரம்" - விமலா.
"ஓகே ஸ்வீட்டி, சி யு தேர்" - ஜெகதீஷ் .


விமலா வரும் முன்னரே ,வேலையில் இருந்து வீட்டிற்கு திரும்பிய ஜெகதீஷ்,அவசரமாக காசுவல் டிரசுகு மாறினான். மறக்காமல் அவன் லேப்டாப் எடுத்துக்கொண்டு ,வீட்டிற்கு பக்கத்தில் இருந்த அந்த உணவகத்துக்கு நடக்க ஆரம்பித்தான்.

அரை மணி நேர காத்திருப்புக்கு பின் ,விமலா வந்து சேர்ந்தாள். "ஹாய் டியர்" என்று செல்லமாக அவளை ஒரு அவசர hug செய்து விட்டு, "கம் லெட்ஸ் கோ இன்" என்று ஆவலுடன் அந்த உணவகத்தில் நுழைந்தான்.அதன் வாசலில் இருந்த கண்ணாடி கதவில் "ப்ரீ wifi " என்று பெரிய ஸ்டிக்கர் ஒட்டி இருந்தது.

"குட் ஈவ்னிங் சார்" என்று வரவேற்ற அந்த பெண் waitress" ஐ பார்த்து , "table for two" என்றாள் விமலா.  சாலையை பார்த்தபடி இருந்த,கண்ணாடி சுவருக்கு அருகில்  இருந்த couch-ல் அமர வைக்கப்பட்டார்கள்.

முதலில் ஏதோ ஒரு mocktail-ஐ இருவருக்கும் ஆர்டர் செய்து விட்டு ,அது வரும் வரை , அந்த உணவகத்தின் interior design-ஐ ரசித்தார்கள் இருவரும். "நாட் பாட்" என்றாள் விமலா சுற்றி தன் விழிகளை சுழற்றி  பார்த்தபடி.

நீளமான இரண்டு கண்ணாடி தம்ப்ளரில் ,மூன்று வேறு வேறு வண்ண அடுக்குகளாக அந்த திரவம் கொண்டுவரப்பட்டது. இருவரும் அதனை ஒரு வாய் சுவைத்துவிட்டு, ஆளுக்கொரு லேப்டாப் -ஐ அவரவர் bag-ல் இருந்து  எடுத்து மேசையின் மீது வைத்து அதனை switch on  செய்தார்கள்.
இருவரின் லேப்டாப் முன்புறத்தில் இருந்தது பாதி கடித்த ஆப்பிளின் லோகோ. 

"ஹாய் விம்மி  hon" - வேகமாக type செய்தான் ஜெகதீஷ்.
"யெஸ் ஜேக்" - பதிலுக்கு type செய்தாள் விமலா.
"என்ன ஆர்டர் பண்ணலாம்?"
"I want something chinese"
"ஓகே,எனக்கு செட்டி நாட், மை fav" என்று எழுதிவிட்டு,அவர்களையே பார்த்துக் கொண்டிருந்த waitress-ஐ ,கை அசைத்து கூப்பிட்டு, ஒரு செஷ்வான் fried rice and ஒன் நாட்டுக் கோழி பிரியாணி" என்று ஆர்டர் கொடுத்தான் ஜெகதீஷ்.

"then..." என்று மீண்டும் type செய்தான் ஜெகதீஷ்.
"then what ...nothing" பதில் டைப் செய்து அவனைப் பார்த்தாள் விமலா.
"r u not in mood"
"s,had so much at work,very tired :-("
"oh no,okay,I m hungry"
"me too,these guys are taking ages to bring just 2 items"
"yep" என்று ஜெகதீஷ் டைப் செய்து முடிக்கவும், அவர்களின் உணவு சூடாக
கொண்டுவரப்பட்டு பரிமாறவும் சரியாக அமைந்தது.

உணவை சுவைத்துக் கொண்டே, ஜெகதீஷ், விமலாவுடன் Chat விண்டோவில் தொடர்ந்து டைப் செய்தான்.
"so after dinner?"
"after dinner nothing" என்றது விமலாவின் பதில்.
"nothing..hmm..I want something...let's have that,its been a while"
"no way, காலையில் இருந்து ஒரே மீட்டிங்,மீட்டிங்,I am dead tired" என்று மறுத்தாள் விமலா.
"ப்ளீஸ்" என்று கெஞ்சினான் ஜெகதீஷ்.
"சாரி டியர், நாம கல்யாணம் பண்ணுன , first நைட்-ல வே நாம இதப்
பத்தி டிஸ்கஸ் பண்ணிருக்கோம்,நான்  கண் அசைச்சு ஒப்புதல் தர்ற
வரைக்கும் நீங்களா என்ன இதுக்காக அப்ரோச்,பண்ணக் கூடாது"

"ok whatever...:-( " என்று டைப் செய்து விட்டு சோகத்துடன் லேப்டாப்-ஐ மூடி வைத்து , மீதம் இருந்த பிரியாணி முழுவதையும் தன் தட்டில் கொட்டிக் கொண்டான் ஜெகதீஷ்.

அவர்கள் இருவரும் சாப்பிட்டு விட்டு, பில் பே பண்ணிவிட்டு வெளியேறினார்கள்.  விமலா அவளின் "ஹோண்டா சிட்டி" காரை பார்கிங் லாட்டில் இருந்து வெளியேற்றி,ஜெகதிசின் அருகில் நிறுத்தி, "கெட் இன்" என்றாள்.

ஜெகதீஷ் வாயில் சீரகத்தை மென்றபடியே, "நோ , யு கோ ahead, I want to walk ,இப்பவே என் தொப்பை அஜித் மாதிரி இருக்கு ,இப்படியே விட்டா, அப்புறம் 
பிரபு  ரேஞ்சுக்கு பெருசாகிடும்" என்றான்.

"ஓகே,நாளைக்கு நான் சீக்கிரம் போகணும்,I am going to bed right away,see you
  tomorrow night" என்று காரை கிளப்பி போய்விட்டாள் விமலா.

தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கிய ஜெகதீஷ், அங்கே ஒருவன் சுவற்றில் ஏதோ சினிமா பட போஸ்டரை ஓட்டுவதை பார்த்து ஒரு நிமிடம் நின்றான்.

அந்த போஸ்டரில்,   "தி டர்ட்டி பிக்சர்" என்று கொட்டை எழுத்துடன்,
வித்யா பாலன் ,நீச்சல் உடையில்... அதை திரும்பி ,திரும்பி பார்த்துக் கொண்டே வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான் ஜெகதீஷ்.


 


Monday, October 24, 2011

மீனம்மா,மீனம்மா - உன் கண்கள் மீனம்மா!

அழகிய வண்ணங்களில் ,ஆச்சர்யமான உருவ அமைப்பில்,கற்பனைக்கெட்டாத டிசைன்களில்-இருந்தது அந்த உலகத்தில் வாழும் உறுப்பினர்கள் ஒவ்வொன்றும். அவள் என் கைபிடித்து ,மெதுவாக நீந்திச் சென்று , ஒவ்வொன்றாக காண்பித்தாள்.

"இறைவா! உன் படைப்புத் திறனை மிஞ்ச ஆளே இல்லை.இது சத்தியம்!" என்று மனம் திரும்பத் திரும்ப அறுதியிட்டுக் கூறியது.

அவள் உற்சாகமாக,இன்னும் இன்னும் ஆழத்திற்கு என்னை இழுத்துக் கொண்டு போனாள்! ஐயோ, இவளின் ஆர்வம் ,இன்றோடு என் கதையை முடித்துவிடும் போல உள்ளதே, " முடியவில்லை ,மேலே போகலாம்!" என்று சைகையில் சொன்னேன். உடனே புரிந்து கொண்டு ,விரைவாக நீரின் மேல் பரப்பை நோக்கி கொண்டு சென்றாள். என்னை ஒரு பாறையின் மேல் இருத்தி,அவள் மட்டும் நீரின் உள்ளேயே நின்று கொண்டாள்.

"என்ன ஆச்சு?" என்றவளிடம், "அப்பா , என்னால மூச்ச அடக்க முடியல,மூச்சு முட்டி செத்து போய்ருப்பேன்,எனக்கு என்ன , உன்ன மாதிரி சிறப்பு உடல் அமைப்பா?" என்று பதில் கேள்வி கேட்டேன்.

"இவ்வளவு நேரம் ,உள்ளே நீந்தி, எனக்கு சோர்வாகவும் ,பசியாகவும் இருக்கே" என்றேன் அவளை பார்த்து. நான் அமர்ந்திருந்த பாறையை சுற்றி , கண்ணுக்கெட்டிய தூரம் வரை கடல் நீர். என் முக வாட்டத்தை புரிந்து கொண்ட அவள், "இதோ வருகிறேன்!" என்று , அழகிய டால்பின் போல் , துள்ளி தன் உடலை நீரினில் புகுத்தி மூழ்கினாள்.

சிறிது நேரத்தில் , 'சரக்' கென்று, நீரினை கிழித்து வெளியே வந்தவளின் முகத்தில் ஒரு மந்தகாசப் புன்னகை. அவள் கைகளில், நான் அடிக்கடி தேடித் தேடி ,கடை கடையாக ஏறி , விரும்பி உண்ணும் 'மீன்கள்' , ஆனால் உயிருடன்.

"கொண்டுவந்ததெல்லாம் சரி, ஆனால் , பச்சையாத் தின்ன முடியாதே!" என்றவனைப் பார்த்து , குறும்புடன் கண் சிமிட்டினாள். பர பர வென, தன் கைகளைத் தேய்த்தவுடன், நான் உக்கார்ந்திருந்த பாறையின் அருகிலேயே "தீ"  வரவழைத்தாள் ஒரு தேர்ந்த மந்திர நிபுணனைப் போல். அதில் அந்த மீன்களை வாட்டி, சூடாக சுவைக்கக் கொடுத்தாள்.

வெறும் உப்பு நீரை மட்டும் கொண்டு சமைத்த அந்த மீன்கள் , தேனாய் தித்தித்தன.  ஒவ்வொருமுறையும் மிளகாய்ப் பொடியின் மேல் குறை சொல்லி, வேகாமலோ, ஓவராக வெந்தோ கிடைக்கும் மனைவியின் 'மீன் பிரை'  என் நினைவில் மின்னி மறைந்தது.

வயிற்றுக்கு சுவை கிட்டியதால், மனம் குளிர்ந்து ஆவலுடன் , பல கதைகள் பேசத் தொடங்கினேன். நேரம் போனதே தெரியவில்லை. சூரியன் வெளிச்சப் பந்தாக , என் கண் முன்னே , நீரினுள் மூழ்கும் ,அந்த அற்புதத்தை , கண் கொட்டாமல் பார்த்தேன். சட்டென்று நினைவு வந்தவனாக, "சரி நான் வீட்டுக்கு போற நேரமாச்சு" என்றேன் அவளிடம்.

உடன் முகம் வாடியவளின் கண்ணில் நீர்த் துளிகள். சமீபத்தில் பார்த்த , பல ஆங்கிலப் படங்களின் நினைவு வந்தவனாக, விரைந்து என் பாக்கெட்டில் இருந்து , ஒரு சிறிய கண்ணாடி குடிவையில் அந்த கண்ணீர் துளிகளை சேமித்தேன். என்ன ஆச்சர்யம் , அந்த துளிகள் , உருண்டு திரண்டு, இரண்டு மூன்று முத்துக்களாக மாறிகொண்டிருக்கும் போதே ,  யாரோ என் உடம்பை உலுக்குவது போல் உணர்ந்தேன். என் கை அந்த கண்ணாடி குடுவையை தவற விட, என் கண் முன்னே அது உருண்டு ஓடி,
நீரினுள் உடைந்து விழுந்து நீருடன் கலந்தது. என் நினைவிலிருந்து அந்த
'mermaid'-இன் உருவம் மெழுகாக கரைய ,கண் விழித்தால் ,எதிரே என் மனைவி.

"இது தான் நீங்க மீன் வாங்கப் போற லட்சணமா?
இந்நேரம் நல்ல மீனெல்லாம் வித்து முடிச்சிருக்கும். மீன் பிரை வேணும்னு வக்கணையா கேட்கத் தெரியுதுல்ல. போய் கால காலத்துல வாங்கிட்டு வராம, அப்படியே செத்த பொணம் மாதிரி 'bed' மேல கெடக்குரதப் பாரு. இப்படி ஒரு சோம்பேறி மாப்ளைய எங்கப்பன் எனக்கு கட்டி வச்சிட்டாரே எங்கப்பா" என்று கூச்சலிட்டாள் கோபாலின் மனைவி.

"ச்சே எல்லாம் கனவா! பிள்ளைக்கு இன்னைக்கு mermaid கதை சொல்லலாம்னு படிசிகிட்டே அப்பிடியே தூங்கிட்டேன் போல"  என்றாவறே, அவசரமாக சட்டையை மாட்டிக் கொண்டு , பைக்கை வீட்டை விட்டு வெளியேற்றினான் கோபால்.Saturday, October 22, 2011

அடுத்தவனுக்கு உதவினால் தப்பா?

பிரதி பலன் பாராமல் , அடுத்தவர்க்கு உதவுங்கள் - என்று கிட்டதட்ட எல்லா மதங்களும் வலியுறுத்துகின்றன. ஆனா , இன்னிக்கி இதெல்லாம் ஒத்து வராது, நான் உனக்கு இந்த காரியத்த /உதவிய செய்தாதான் , நாளைக்கி எனக்குன்னு வர்றப்ப , நீ உதவி செய்வ,அதனால உனக்கு நான் இப்ப உதவுறேன், என்ற ரீதியில் தான் இன்று வாழ்க்கை மாறிவிட்டது பெரும்பாலானோருக்கு.

அப்படி இருந்தா தான் இந்த காலத்துல பொழைக்கமுடியும் , என்பார் சிலர். இப்ப விக்கிற வெல வாசில , நமக்கே பத்தல, இதுல நான் எங்கிட்டு அடுத்தவனுக்கு உதவுறது,அப்பிடியே கண்டுக்காம போய்கிட்டே இருக்கணும், என்பார் சிலர்.இவன் நம்ம ஜாதி,நம்ம மதம், நம்ம மொழி,நம்ம நாடு  என்று ஒரு எல்லைக்குள் , பிறருக்கு செய்யும் உதவியை ஒரு எல்லை வகுத்துக்கொண்டு அதனை விட்டு வெளியில் வரத்  தயங்குவார் சிலர்.

நான் அவ்வாறு எந்த வித கட்டுப்பாடில்லாமல் ,பிறருக்கு உதவி ,அதனால் எனக்கு என்ன ஆச்சு என்பதே இந்த பதிவில் நான் உங்களுக்கு சொல்லப் போகும் சேதி. 

முன்னொரு காலத்தில், என் பெற்றோருடன் , அந்த புகழ் பெற்ற , திருச்செந்தூர்   சென்று , முருகனுக்கு ஒரு சலாம் வைத்துவிட்டு வெளியில் வந்தேன்.நான் அப்போது கல்லூரி முதலாம் ஆண்டோ இல்லை பள்ளி இறுதி ஆண்டோ , படித்துக் கொண்டிருந்த நினைவு.

ஒரு வயதான பெண், "அய்யா காசு போடுங்க" என்று இறைஞ்ச, நான் ஸ்டைல் ஆக,ஒரு இரெக்க உணர்வில், என் பாக்கெட்டில் இருந்து , ஒரு ரூபாய் நாணயத்தை கொடுத்தேன். அதனைப் பார்த்த என் அப்பாவுக்கு , திடீர் என்று கோபம் வந்து , "ஒரு ரூபா சம்பாரிச்சு பாருடா அப்ப தெரியும் ,ஆச் பூச்..." என்று  ஏக்கே.47  ரேஞ்சுக்கு வார்த்தைகளால் துளைத்து எடுத்தார். நாம என்ன பெருசா தப்பு பண்ணிட்டோம் என்று அன்றிலிருந்து இன்றுவரை ஆச்சர்யப்ப ட்டதுண்டு. அவரின் கோபத்தின் காரணம் ,"பய்யன் காசோட அருமை தெரியாமல் இருக்கானே!" என்று இன்று புரிந்தும் கூட.

நான் சமீபத்தில், பெங்களுருக்கு சென்று திரும்பும் வேளையில் ,என் அருகே ,இரு இளம் வயது பையன்கள் இரண்டு பேர் அமர்ந்திருந்தனர். நான் டிக்கெட் எடுத்து முடித்தவுடன்,கண்டக்டர் அவர்களைப்பார்த்து "டிக்கெட்" என்றார். அவர்கள் கையில் இருந்த பணத்தை கொடுத்து ,ஏதோ அடுத்து வரும் ஒரு ஊரின் பெயரைச் சொன்னார்கள். பணத்தை எண்ணிய கண்டக்டர் , "அஞ்சு ரூபா கொறயுதே " என்றார். அவர்களிடம் வேற பணம் இல்லாமல் ,அவர்கள் சங்கடத்துடன்  முழிக்க, "நான் தருகிறேன்" என்று கண்டக்டரிடம் கொடுத்தேன்.
"காசு வச்சுருந்தோம்,ஆனால் போன் டாப் அப் பண்ணிட்டேன் ,அதான் பத்தல " என்றான் ஒருவன். "நான் பரவாயில்ல" என்றேன். அப்புறம் வேறு யாரோ ஒரு நண்பனுக்கு போன் செய்து , பேச ஆரம்பித்தான் அவன். 

 பிறிதொரு நாள்,நான் இந்தியர்கள் வார இறுதியில் ஐக்கியமாகும் முஸ்தபாவிற்கு சென்று விட்டு, வீடு திரும்ப ,சிங்கையின் மெட்ரோ ரயிலுக்கு, (சிங்கையில் அது MRT)- ரயில் வர காத்திருக்கும் போது, ஒரு நடுத்தர வயதுடைய தமிழர் ஒருவர் வந்து, "அண்ணே , உங்க போன் கொஞ்ச நேரம் கொடுக்குறீங்களா,அவசரமா ,இந்தியாவுக்கு ஒரு கால் போடணும் ,இப்ப கூபிடலன்ன என் பொண்டாட்டி கோவிச்சுக்குவா,டாப் அப் பண்ண காசில்ல " என்றார். என் போனை கொடுத்தவுடன் ,"நான் பத்திரமா வந்து சேந்திட்டேன் , ஒன்னும் கவலைப் படாதே,பிள்ளைங்கள நல்லா பாத்துகொம்மா" என்று அவசரமாக பேசிவிட்டு ,"ரொம்ப நன்றிண்ணே" என்று போனை கொடுத்தார்,என் ரயில் வர ,என் போனை வாங்கிக் கொண்டு நகர்ந்தேன்.

மற்றொரு நாள், ஆபீஸ் வேலை முடித்து , MRT யை நோக்கி நடந்து கொண்டிருந்தவனை ,நிறுத்தினான்  மற்றொரு தமிழன். நான் யாராக இருக்கும் என்று அவனை பார்க்க ,பெரிதாக ஒரு "அண்ணா வணக்கம்" வைத்தான் இரு கரம் கூப்பி. நான் தயக்கத்துடன் அவனை பார்க்க, "அண்ணே ஒரு பத்து டாலர் கொடுக்க முடியுமா" என்றான். நான் வீடு திரும்பும் அவசரத்தில் இருந்ததால் , என்ன ,ஏன் என்று எந்த குறுக்குக் கேள்வியும் கேட்காமல், அந்த பத்து டாலரைக் கொடுத்துவிட்டு ,அவன் வைத்த வணக்கத்தை பார்த்துக் கொண்டே அவ்விடம் விட்டு நகர்ந்தேன்.

"சரி ,சரி , பெருசா நீ அடுத்தவனுக்கு செஞ்சத சொல்ல வந்திட்டியா" ன்னு கோபம் கீபம் பட்ராதீங்க,இதோ வர்றேன் ,அந்த முக்கிய மெசேஜ்க்கு.

ஒரு நீண்ட வார விடுமுறையில் , கோலாலம்பூர்(KL) சென்று என்ஜாய் பண்ணிவிட்டு, சிங்கைக்கு திரும்ப , சல்லிசாக கிடைத்ததே என்று வாங்கி வைத்துருந்த விமானத்தை பிடிக்க LCC விமான நிலையத்திற்கு செல்லும் அந்த விரைவு ரயிலை பிடித்து ,மற்றொரு transfer பஸ் க்கு மாறி ,ஒரு வழியாக விமான நிலையம் வந்தடைந்து பார்த்தால், நாங்கள் போக வேண்டிய சிங்கை செல்லும் விமானம் ,ஓடும் பாதையில் ஓடிக் கொண்டிருப்பதாகச் சொன்னார்கள் அந்த விமானக் கம்பெனியின் ஊழியர்கள்.  சரி , சீப் ஆ முடிக்கலாம்,டைம்  கூட மிச்சப் படுத்தலாம்னு  பாத்து விமான பயணத்தை சூஸ் பண்ணி , இப்ப எல்லாம் வேஸ்ட் என்று நொந்தபடி, மறுபடியும் bus பிடித்து KL-பஸ் நிலையத்தை , இரவு பதினொரு மணிக்கு சென்று சேர்ந்தோம் . அங்கிருந்த ஒரு தமிழ் பஸ் ஏஜன்ட்,இடம் கிடைப்பது கடினம் என்று முதலில் பயம் குடுத்திய அவர், தனக்கு தெரிந்த  சிங்கை பஸ்ஸில் இடம் இருப்பதாகச் சொல்லி எங்களை அழைத்து சென்றார்.  அரை மணி நேரக் காத்திருப்புக்கு பிறகு ,அங்கு வந்த ஒரு சிங்கை செல்லும் தனியார் பஸ்சில் இருந்த கடைசி சீட்டில்  ஏற்றிவிட்டு,  "அண்ணே ,xxx ரிங்கட் தாங்க" என்று டிக்கெட் போட்டார். நான் கையில் இருந்த மலேசிய கரன்சிகளை எண்ணிப் பார்க்க , கிட்டத்தட்ட நூறு ரிங்கட் வரைக்கும் குறைந்தது. ஏனென்றால் ,அவர் கூறிய கட்டணம் வழக்கத்தை விட ஒன்றரை மடங்கு அதிகம். "பக்கத்தில ஏதாவது ATM இருக்கா?" என்று நான் கேட்க ,"என்னண்ணே இப்ப போயி ATM கேட்குறீங்க ,பஸ் வேற கெளம்புற நேரம்" என்றார் அந்த ஏஜன்ட். என்ன செய்றது இப்ப என்று நான் தவிக்கத் தொடங்க, "எவ்வளவு கொறையுது " என்று முன்னால் உட்கார்திருந்த ,எனக்கு முன் பின் அறிமுகம் இல்லாத ஒரு தமிழர் கேட்டார். நான் குறைவதைச் சொல்ல ,சட் என்று தன் பாக்கெட்டில் இருந்து எடுத்துக் கொடுத்தார் அவர். சிங்கை வந்ததும் ,அவர் கொடுத்த அவரின் வங்கி கணக்குக்கு என் கடனை அனுப்பி வைத்த பின் தான் எனக்கு நிம்மதியானது ,அதுவரையில் எனக்கு அந்த மாதிரி ஒரு நெருக்கடி வந்ததில்லை.

அவர் மட்டும் அன்று உதவ வில்லை என்றால், அந்த நடு இரவில், ATM தேடி அலைந்து ,அதன் பின் பஸ் பிடித்து ,சிங்கை வந்திருந்தால் ,கட்டாயம் மறு நாள் நான் ஆபீஸ் போயிருப்பது சந்தேகமே.

சும்மாவா , சொல்லிருக்காங்க பெரியவுங்க! தர்மம் தலை காக்கும் ,தக்க சமயத்தில் உயிர் காக்கும்!Tuesday, October 18, 2011

ஒரு பதிவரின் பாழாப் போன கத!

முஸ்கி:  இந்த பதிவில் வரும் கருத்துக்கள் இந்த பதிவரின் சொந்த கருத்து.
                    "மன்னார் அண்ட் மன்னர் " கம்பனிக்கும் ,இதற்கும் எந்த சம்பந்தமும்
                    இல்லை. ஹை,ஹை நாங்களும் எஸ் ஆவமுள்ள ,
                    இப்ப என்ன செய்வீங்க ...இப்ப என்ன செய்வீங்க!

தென் தமிழகத்தின் ஒரு மூலையில் இருந்த குக்கிராமத்தில், பிறந்தவன்  ராஜாமணி. ஆனால் அவன் பிறந்து கொஞ்ச நாள்ல , அவன் அம்மா இறந்து விட்டதால் ,
அவன் அப்பா "இனிமே உன் பேரை கூட சொல்லி கூப்பிட மாட்டேன்டா " சொல்லிட்டாரு. அப்புறம் ஊர்ல எல்லாம் சேந்து அவனுக்கு ஏனோ பேரே இல்லாம தான் கூப்டாங்க.

பய்யன் கெட்டிக்காரன். படிச்சு ஒரு நாள் , அப்பா நான் நகரத்துக்கு போய் பெரிய "ஆளா "  ஆகப்போறேன் ன்னு சொல்லிட்டு போய்ட்டான்.

அப்புறம் கொஞ்சம் வருஷம் ஆச்சு.

ஒரு நாள் ஊரு பஸ் ஸ்டாண்ட்ல ,ராஜ மணி யோட ,சின்ன வயசு நண்பன் ஒருத்தன் இருக்கான்.அவனப் பாத்து இன்னொருத்தன்.
"என்னடா ,அடிக்கடி பேரு மாத்துவீயே,இப்ப உன் பேரு என்ன?" 
 "கும்புடுரன் சாமி "
"என்னடா ,எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே ?"
"இப்ப தான் பாலா சார் படம் பாத்தேன் ,அதுல இருந்து என் பேர மாத்தி வச்சுகிட்டேன் அப்படின்னு சொன்னான் அவன்.
"இப்படியே மாத்திகிட்டு இருக்காதாட, 'நூறு பேரு வச்ச அபூர்வ சிந்தாமணி" அப்படின்னு எவனாவது பட்டப் பேரு வைக்கப் போறானுங்க அப்படின்னு
சொன்னான் இவன்.

அவிங்க இப்படி பேசிகிட்டு இருக்குறப்ப  , "சர் சர்" ன்னு ஸ்பீட் ஆ ஒரு கார் வருது .  எல்லாரும் ஓடி போயி பாத்தா , 'அர டவுசர் ' போட்டுக்குட்டு ஸ்டைலா ஒருத்தரு இறங்குனாப்ல.

"யாருடா ?" அது , நாய் கீய் பிடிக்க வந்த்ருப்பனோ ,அவன் டவுசர் பாத்தா அப்படி தான் இருக்கு ,அப்பிடின்னு ஒரு பெருசு கேட்டுட்டு ,பொக்க வாய தொறந்து சிரிச்சாப்ல.

அந்த "அர டவுசர்" நேரா போயி அவுக அப்பா முன்னாலே நின்னாப்புல. "யாரு" அப்பிடின்னாரு அவுக அப்பா சைகையில.
 "அப்பா நான் தான்பா"..
 "நான் தான்பா ன்னு யாருடா ,எனக்கு அப்பிடி யாரும் மகன் இல்லியே,ஒருத்தன் இருந்தான்,அவன் எங்கயோ என்னமோ ஆகிறேனுட்டு போயிட்டான்"
"அப்பா நான் தான் பா அது"
"அட பாவி மக்கா , உன் பேர சொல்லிருகலாமில்லை"
"இல்லப்பா என் பேரு உங்களுக்கு பிடிக்காதா , அதுனால் எனக்கு இப்ப பேரே இல்லப்பா"
"சரி சரி உள்ளார போ".

மகனிடம் மெல்ல அவன் வேலையை பத்தி விசாரித்தார் . அவன் சொல்ல ஆரம்பித்தான்:

   "எப்பா  நான் பெரிய டாக்டர் பா.."
   "அப்படியா,நல்லா வரும்படி வருமே.."
    "ஆமாம்பா ,ஆனா பொழுது போலன்ன ,நாங்க தொரட்டி எடுத்துக்கிட்டு போவம்
     "ஏண்டாப்ப இந்த வேல ..."
    " இல்லப்பா ,பட்டனத்துல தென்னை மரம் ஜாஸ்தி , ஆனா ஒரு பயலுக்கும்
     மரம் ஏறத் தெரியாது, தேங்காயெல்லாம் அழுகி , ஒரே  'நாத்தம்'...அதான்
     சுத்தம் பண்றோம் ,அதுவும் "இலவசமா "...
    "அட கருமம் பிடிச்சவனே ,இப்படி கூறு இல்லாம யாராச்சும் இருப்பங்கள"
    "அப்பா,என்னப்பா இப்படி சொல்ற ,எல்லாம் ஒரு கணக்குப்ப,நான் மாட்டும் இல்ல ,நாங்க மூணு பேரு , ஒரு கம்பனி வச்சு இந்த சேவை செய்றோம் ,அதுனால நாங்க சொந்த வேல கூட பாகிரதிள்ள"

   "சரி இப்ப என்னடா இங்க வந்தே"
   "இல்லப்பா ,எங்க கம்பனிக்கு யாரவது சரியா காசு கொடுகலன்ன , நான் அடிகடி தூகிருவேன் ன்னு சொல்லுவேன் ,ஒருத்திய 
     பாத்து சொல்லி பஞ்சாயத்து ஆகி போச்சு,எல்லோரும் கம்பனிய கல்லெறிய  ஆரம்பிச்சுடாங்க "
  "அடடா ,காசு வாங்க  மாட்டேன்னு சொன்ன ,சரி உங்க கம்பெனி பிரண்ட்சு வச்சு பஞ்சாயத்த பேசி முடிக்க வேண்டியது தான"
   "பேசுநாங்க,இந்த கம்பனிக்கும் அவன் சொன்னதுக்கும் சம்பந்த மில்ல ,அப்பிடின்னு சொல்லி என்ன காப்பாதிடான்கப்பா  ...
   ,எப்படிப்பா வெவரமா சொல்லிடோமில்ல?சரி விஷயம்
  வெவகாரம் ஆகுரதுகுள்ள  ,இங்க வந்து ஒளிஞ்சி கிடலாம்ன்னு வந்தேன் "

 "அட புத்தி கெட்டவனே,உனக்கு ஏதாவது இருக்கா"
 "என்னப்பா சொல்றீங்க"
 "உனக்கு பின்னாடி ரெண்டு பேரு வச்சுதான கம்பெனி நடத்துறீங்க"
 "ஆமா ,அவங்க இருக்காங்கன்னு தான் நான் தைரியமா அப்பிடி சொல்லிக்கிட்டு இருந்தேன் ,எல்லாம் கம்பனி, தேங்கா நாத்தம் இத போக வைக்க "
"நீ சரியான ஈ நாடா "
"ஏம்பா"
"அப்புறம் என்னடா ,ஒரு பஞ்சாயத்து ,அதுவும் கம்பெனி விவகாரம்ன, நாங்க எல்லாரும் பொறுப்பு ,மன்னிசிகுடுங்க அப்பிடின்னு சொன்னா பிரச்ன தீந்துசு"
"அதேபிடிப்பா, எங்க மானம் , கம்பனி மானம்"
 "டே ,நல்ல யோசனை பண்ணு , நாளிக்கி இத விட பெரிய பஞ்சாயத்து வந்து,
   எல்லாரும் சேந்து உன்ன மாட்டி விட மாட்டானுங்க ன்னு என்ன நிச்சயம்,
  அப்ப பெரிய ஆபத்தா போயிடும்லாடா,நீ மட்டும் தானடா மாட்டுவ  "
 "ஆமாம்பா ,அப்படி ஒன்னு இருக்குல்ல , நான் நெனச்சே பாக்கல ,இப்ப என்னப்பா செய்ய சொல்றீங்க"

  "பேசாம , தெரட்டி வச்சு தேங்கா 'புடுங்குறத' விட்டுட்டு , உன் டாக்டர் தொழிலைப் பாத்து ,உன் புள்ள குட்டிங்களுக்கு  சொத்து சேறுப்பா!"

 அவன் என்ன சொல்வது என்று தெரியாமல் 'ங்கே ' என்று விழித்தான்.

   

    


Monday, October 17, 2011

தமிழ் மணத்திற்கு பதிவனாகிய என் கேள்விகள்

நண்பர்களே ,நான் தமிழ் மனத்தின் வலையில் கேட்ட கேள்விகள் இது.
அங்கு வெளி வருமா என்பது இன்னும் தெரியாததால் , என்னுடைய பதிவிலேயே இதை மீள் பிரசுரம் செய்கிறேன். நான் கேட்டதில் தவறிருந்தால் சொல்லுங்கள் நண்பர்களே;

அங்கே நாம் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் , எதிர் பார்த்த பூசி மெழுகிய சமாதனம் தான் வந்துள்ளது,நீங்கள் இதுவரை படிக்க வில்லை என்றால் இங்கு சென்று படிக்கலாம்.

இது தான் நான் அங்கு கேட்ட கேள்விகள்:


Respected Tamilmanam Management,
I have few basic questions.


Question #1: When a X person going and telling other person that , I am from 'so and so' organisation , then other person will see him as a representative of that organisation till the complete conversation ends. If that official wanted to express his own personal opinion, he should have quoted with 'in my personal opinion' blah blah or end with "hey guys this is just my personal opinion". This is how any educated management person will behave with his customer.I have never seen this in one of your management guy's response.


When an official goes to a bar with his uniform and behave rudely and abuse others people will still treat him as that official because of the uniform he is wearing. When he entered the bar he should have removed his uniform in the first place.


Look at the way he blabbered,it clearly shows,he is an arrogant official:


டெரர்கும்மியா இருந்தாலும் அடுத்தபக்கம் மகளோட போட்டோவைப் போட்டு நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனேயெனப் பொங்கிப் பதிவு போட்டிருக்கானே என்ற இக்குணி இரக்கமேதான். இப்போ உப்பு தின்றிருக்கிறதாலே சொல்கிறேன். கழட்டிடடுமா?


Do you still want us to believe it is his personal opinion? கழட்டிடடுமா - clearly shows he is still talking as Tamilmanam man.


Question #2: I agree we are your service's user and we have to be bound by your Terms and Service. But who gave you the right to abuse your service's users and their family. I never recollect we have agreed to such terms and conditions,what answers you have for these comments:


a) நானும் தொழில்நுட்பக்குழுவினருக்கும் உங்களுக்குப் பதிலெழுதிவிட்டு வந்தால், உமக்கு பயடேட்டா சூப்பரா மட்டுமிருக்காது; சூப்புறமாதிரியுமே இருக்கும்.....


b) அது சரி; அம்மா அப்பா விளையாட்டு விளையாடுகிறவிதத்திலேதான் இருக்கு.


c)ஏங்கவண்டிக்காரன் மகனுல, முரட்டுக்காளையில ஜெய்சங்கரோட ஏதாச்சும் சவால்விட்டுக்கிட்டிருற சீன் பாக்கறப்ப உங்க அம்மா உங்கள பெத்தாங்களா? :-)


d)another one saying I am ready to fight bring your father,uncle,grandpa


Just because you are providing free service, it does not mean that one of your management team member can insult bloggers like this and invite all the family members to fight with him. He sounds like a third class rowdy to me.


Though yours is private organisation, when your employee is behaving badly in public and if it is brought to your attention,normally any ethical company will take discipilinary action against such person.What sort of discipilinary action you are going to take against this person? Instead of that I see you guys are hiding your face and telling it is his personal opinion.


Your honourable admin claims like this "It is irony; if these people are the one tamilmanam thinks to aggregate for keeping Tamil alive, it should simply let Tamil die."


Wow , I can clearly see that you guys are really working your ** off to save tamil.Kudos to your effort.


Q4) It is very common in tamil and english magazines that a celebrity,MLA,MP,VIPs bio-data being published with funny comments.I never seen those person took it very serious and attached the respective magazines. Why your man errupted like this ,is it just because he was one of the founder of TM or because there is something which pokes your some part of your good heart...In tamil there is a say:


குற்றமுள்ள நெஞ்சு குறு குறுக்கும்


PS: I am sure this comment wont be visible,if you really find some values in my question,do post it. Otherwise I am sure TM is an unethical company who is scared of accusation.டிஸ்கி: அங்கே வருண் என்ற நம் சக பதிவரின் , பெயரிலிக்கு இணையான
வக்காலத்தையும் ,அவர் சக பதிவர்களை கூப்பிடும் தோரணை யும் உள்ளது நான் கொடுத்த இணைப்பில். அவரின் அந்த நடத்தையை அங்கேயும் கண்டித்தேன் ,இங்கேயும் கண்டிக்கிறேன்.

Sunday, October 16, 2011

தமிழ் இனி மணம் வீசுமா?

முன்குறிப்பு:

   இது சத்தியமா உள்குத்து பதிவு தான். அத சொல்றதுல தைரியம் இருக்குங்கோ.


சமீபத்தில் படித்த சோக்கு, இப்ப நடக்குற 'பஞ்சாயத்து' நாட்டாமைக்கு பொருந்தலாம்:

    "ஏன் அந்த தலைவர் பேசி முடிச்சவன்னே ,  மக்கள் அலறி அடிச்சி
      ஓடுறாங்க?"
  "ஆமா, மூணு மணி நேரமா பேசுனத, "மைக் டெஸ்டிங்" னு சொல்லிட்டாரே!

இது ஒரு காபி/பேஸ்ட் ஜோக்,உரிமையாளர் சிவம்,திருச்சி.

இன்னும் கொஞ்ச நாளில் , "ஆளே இல்லாம டீ ஆருக்கு ஆத்துற?" அப்படின்னு அந்த திரட்டிகு நெல வந்தாலும் வரலாம்னுன்னு இணைய நிலை அறிவிப்பாளர்கள் முன்னுரைதிருகிரார்கள்.


டிஸ்கி: ஐயா , திரட்டி ஆண்டவனே , இன்னிக்கி உங்க தயவுலதான்
              நம்ம வூட்ல கஞ்சியே குடிச்சோமுங்க. கும்புடுறனுங்க சாமி.

Thursday, October 13, 2011

ஏழாம் அறிவில்,சாம் ஆண்டர்சன்,கவுரவ வேடம்-வீடியோ இணைப்பு

Server 1, click on image:

ஏழாம் அறிவு , இப்ப Online ல் available

நல்ல செங்குத்தான மலை. அதன் உச்சியில் , சீன முறைப்படி அமைந்த ஒரு குரு குலம்.  சூர்யாவின் தோளில் ஒரு பெரிய குச்சி. அதன் இரு முனைகளிலும் , 
ஒரு பெரிய மர அண்டா. அதில் தழும்ப , தழும்ப , நீர் . குடி நீர் அல்ல. சோம பானம்.


அந்த செங்குத்தான மலையில் , கால் இஞ்சில் அமைந்த பல படிக்கட்டுகள் , தோராயமாக ஒரு முப்பதாயிரம் இருக்கும். சூர்யா அதை , நவீன கால OTIS லிப்டுகளை விட ,அதிவேகமாக ஏறி , அந்த கோவிலுக்குள் நுழைகிறார். 

அங்கே , பல சீன கன்னியர்கள் புடை சூழ  , சிம்மாசனத்தில் நான். என் முன்னால் வந்து ,  "ஹெவ் ஹாவ் ஹைச்சி , குங் பாவ் சிக்கன் முன்க்சி ,கண்க்க்சி போகா" என்று  என் காலை தொட்டு வணங்குகிறார் சூர்யா.

நான் மெதுவாக எழுந்து , அந்த சோம பானத்தை , லேசாக நாக்கில் வைத்து சுவைக்க , சீக்கிரம் புரிகிறது , அது போலி சரக்கென்று. " துஞ்சா  லஹி யஹூம ,யன்க்சி புங்க்சி சுகதுமா " என்று சொல்லி காலால் உதைக்கிறேன். 


"இல்லங்க அவர் கொண்டு வந்தது சுத்த சரக்கு தான் , நான் பல்லி,பாம்பு ,பூரான் போட்டு காச்சுறத பார்த்தேன்  , அப்புறம் அதுல இருந்து சூர்யா மோந்துட்டு வர்ரத , நான் என் கண்ணால பார்த்தேன் " என்று சுத்த தமிழிலில் சொல்கிறார்  அஜித்.

"ஆ, மாட்டிகிடீன்களா  ரெண்டு பேரும்"  என்றேன் நான். அவிங்க ரெண்டு பேரும் முழிக்க , "எங்கயா கரப்பான் பூச்சி ,அத போட்டா தான் யா 40%ஆல்கஹால் , ISO  ஸ்டாண்டர்ட் படி " , யாரங்கே , "இவிங்க ரெண்டு பேருக்கும் நூறு பிரம்படி பின்னாலேயே கொடுங்கடா" என்று நான் உத்தரவிட , வில்லச் சிரிப்புடன் விஜய் நுழைகிறார் .

கையில் வைத்திருந்த , எண்ணெயில் பல நாள் ஊறவைத்த மூங்கில் குச்சியால் வெளுத்துகிறார் விஜய் அவர்கள் இருவரின் பின் புறத்தையும்.
அந்த அதிர்ச்சியில் அவர்கள் மூர்ச்சையாகி மடிகின்றனர்.அடுத்த பிறவியில் , சூர்யா , ஒரு இளவரசன். ரஜினி அவரின் பெரியப்பா. ரஜினிக்கு ஒரு பெண் குழந்தை வேண்டுமென்று ஆசை. அவரின் தம்பி கமல். 
அவருக்கும் பெண் குழந்தை வேண்டும் என்று ஆசை. நான் அவர்கள் வீட்டு வேலைக்காரன். விஜய் , தந்தை ரஜினியின் ஒரே மகன். அஜித் ,தந்தை கமலின் இரண்டாவது மகன். விஜயும் ,அஜித்தும் , சூர்யாவும் -குரு குல வாசத்திற்கு படிக்க போகிறார்கள் .  அங்கே அவர்களுக்கு எழுத்துப் பயிற்சி , ஆனால், அவர்களுக்கு , என்ன செய்தும் , மலையாளம்  எழுத கற்றுக் கொடுக்க முடியவில்லை ,குரு நம்பியாரால். அதனை கேள்விப் பட்ட , மன்னன் ரஜினி, என்னை அழைத்து , அவர்களுக்கு ,தினமும் imposition கொடுத்து , train பண்ணச் சொல்கிறார் . நானோ ,அவர்கள் இருவருக்கும் , தப்பு தப்பாக மலையாளத்திற்கு பதில் தமிழ் சொல்லிதர ,அவர்கள் அதனையே follow செய்கிறார்கள். ஒரு நாள் , அரச சபையில் ,பாட்டு போட்டி நடக்க , விஜய் கேரளா  நாட்டில் தங்கி  இருந்து படித்துவிட்டு  வந்து,ஒரு பெரிய டாக்டர் இன் மலையாளம்  லிடரட் என்ற கித்தாப்புடன், செந்தமிழில் பாட , அஜித்தும் , சூர்யாவும் , "அவன் பாடினதுல ஏக பட்ட ஸ்பெல்லிங் மிஸ்டேக்,அது மலையாளம் அல்ல தமிழ் " என்று உண்மையைச் சொல்லி ,விஜயை அடிக்க ,விஜய் கோபத்தில் , அஜித்தை ஓங்கி இடுப்பில் உதைக்க ,அஜித் வலியுடன் ,"எண்ட அம்மே  என்று செத்து விழ, மன்னன் சூர்யா , விஜயை  கழுவில் ஏற்றி கொன்று விடுகிறார்கள். ரஜினி  "இதுக்கு தான் ஆம்பிளப் பிள்ளைங்க வேணாம்னு சொல்றது" என்று கண்ணில் வழிந்த கண்ணீரை , இரு கைகளால் கசக்கி அழ , கமல் , சூர்யாவை ,தன் கையில் இருந்த கோடாரியால் ஒரே போடு போட்டு விட்டு, சூர்யாவின் உடலை பார்த்து ,கோ வென்று மயில் போல் அகவி அழுகிறார். 

அதற்கு அடுத்த பிறவியில் , அதாங்க இப்ப , ரஜினி ,கமலுக்கு அவர்கள் ஆசைப் பட்ட படி , ரெண்டு ரெண்டு பெண் குழந்தைகள் . விஜய் ,அஜித் ,சூர்யா , பெரிய நடிகர்கள். நான் ப்ளாக் ரைட்டர். அஜித்துக்கு ஆகிச்டன்ட் ஆகி ,இடுப்பில் பயங்கர அடி . பின்னர் மருந்து மாத்திரைகளில் ஓரளவு குணமாகிறது.


என்னங்க ஒன்னும் புரியலையா. தல சுத்துதா. தெளிவா உங்களை குழப்பிட்டேனா ?.  எனக்கும் அப்படி தாங்க இருந்துச்சு , 
"கதையல்ல நிஜம்" அப்படின்னு விஜய் TV ப்ரோக்ராம் பாத்தப்ப .அதாங்க நடிகை லட்சுமி அவர்கள் நடத்துற டால்க் ஷோ.

ஒரு டாக்டர் , சில பேத்த , மனோ வசியம் மூலமா , என்னமோ Regression பண்ணி , அதாங்க ,அவங்க முன் ஜென்மத்தில இருந்தத அவங்களுக்கு உணர வச்சதா ,ரெண்டு மூணு பேரு வந்து சொன்னாங்க.

ஒரு மல்லு அம்மா ,முன் ஜென்மத்துல ,அவங்க அப்பா , இவளுக்கு பையனாம் , அப்ப இருந்த இவ பய்யன் , இப்ப இவ புருசனாம் ,அதுக்கும் முன் ஜன்மத்துல ,இந்த அம்மா ,ஒரு பேரரசராம் சீன நாட்டுல.என்னமா குடுக்றாங்க லிங்க் . பருவகாலம் , சரோஜா தேவி எல்லாம் தோத்திருச்சி.

அடுத்து வந்த இன்னொருதரு ,இப்ப ஒரு பிசியோ தெரபிஸ்ட் ,ஆனா முன் ஜன்மத்தில ஒரு emperror , யாரோ அவர , இடுப்புல கோடாரியால ஒரே போடா போட்டு , கொன்னுர்றாங்க ..இப்ப இந்த பிறவில அவருக்கு முதுகுல ஏதோ ஸ்லிப் ஆகி , அப்புறம் ஆபரேஷன் மூலமா சரியாயிடுராறு.

அதுக்கப்புறம் வந்தாரு இவுங்கள அப்படி பேச வச்ச மகராசன் ,அவரும் ஒரு டாக்டர் ஆம். அவரு ஒரு கத சொன்னாரு :
அவருக்கு வந்த ஒரு பேசண்டு, பயங்கர குண்டாம் . இவங்க ஹிப்னாடிசதுல அவங்கள ஒல்லி ஆகினான்கலாம். ஆனா ,அந்த அம்மா ,நல்லா சாப்பிட்டு ,திரும்பவும் குண்டடிசிடாங்கலாம். இவரு சரி Regression பண்ணலாம்னு ,அவங்க முன் ஜென்மத்துக்கு போய் பாத்தா , அந்த பேசண்ட், முன் ஜென்மத்துல சோத்துக்கே வழி இல்லாம பஞ்ச பரதேசியா , வெறும் வயுத்தோட காலத்த ஒட்டுனாங்கலாமாம்.

இந்த நிகழ்ச்சிய,நான் வேற கைல Red  Label ஓட பாத்தவுன்னே, எனக்கு திடீர்னு என்ன ஆச்சுன்னு தெரியல ..கை கால் எல்லாம் வெறச்சது..முடி அப்படியே நட்டுகிட்டு நிக்குது ...என் மண்டை பின்னால ஒரு ஒளி வட்டம் ....அப்படியே என் ஐந்து அறிவு , extend ஆகி ஆறா மாறிச்சி ...அப்புறம் என் முழி கரு வலயம் மேல போயிருச்சி ..திடீர்னு என் உச்சி மண்ட வழியா ஏழாம் அறிவு மெல்ல கொஞ்சம் கொஞ்சமா வெழிய வரப் பாக்குறப்போ  ...யாரோ என் முகத்தில போர்வைய மூடி ஒரே இருட்டாய்ருச்சு ...

கொஞ்ச நேரத்துல , திடீர்னு பொடனில,கைல ,கால் ,உடம்புன்னு ,ஒரு இடம் பாக்கி விடாம , சும்மா DTS சத்தத்தோட,சரா மாரியா வந்து விழுந்தது பாருங்க  அடி ..உங்க அடி இல்ல , எங்க அடி இல்ல ...அப்படி ஒரு மரண அடி ...எவளவு நாளு அடக்கி வசிருந்தான்களோ தெரியல .. நான் அப்படியே flat ...  ஹீம் இன்னையோட மூணு வாரம் ஆச்சுங்க , ஒரு பயலும் பக்கத்துல வந்து பேச மாட்டேன்னு ஓடுராங்க ,என்ன பாத்தவொடனே.


டிஸ்கி:  பா பா ப்ளாக் ஷீப் , ஹாவ் யு எனி வுல்...

                லண்டன் பிரிட்ஜ் இஸ் பாலிங் டௌன், பாலிங் டௌன்....

                 மேரி கேட லிட்டில் லாம்ப் ,லிட்டில் லாம்ப் ....

                  வீல்ஸ் ஆர் கோயிங் அப் அண்ட் டௌன்,அப் அண்ட் டௌன்...

                  ஓல்ட் மெக் டெனால்ட்டு கேட பார்ம்...

                    ஓஹஅம்சி வசா ஹைலா , ஆசை பைல, ஒஹ் சி ...


                மேல உள்ள பாட்டெல்லாம் கேளுங்க ,கேளுங்க ,கேட்டுகிட்டே இருங்க மச்சி,இது ரொம்ப ஹாட்.


Wednesday, October 12, 2011

கண்கள் இரெண்டால்,உன் கண்கள் இரெண்டால்(சவால் சிறுகதைப் போட்டி -2011)

முக்கிய அறிவிப்பு:

நண்பர்களே , இது , நான் ,சவால் சிறுகதைப்  போட்டி - 2011 - க்காக( யுடான்ஸ் திரட்டி நடத்தும் ),எழுதிய, மூன்றாவது கதை.  "நீ அடங்க மாட்டியா" என்று சொல்லி பயப்படும் என் அன்பு நண்பர்களே ,வாசக மக்களே, பயப்படாதீங்க, மூணுக்கு மேல எழுதினா, கம்பனி லாஸ் ஆகிரும் என்று என்
கைகளை கட்டிப் போட்டதால் , நான் என் வன்முறையை இத்தோடு நிறுத்தி ,அடுத்த வருட போட்டிக்கு இப்போதிருந்தே தயார் படுத்திக் கொள்கிறேன். அதுவரை உங்களுக்கு என்னிடம் இருந்து தற்காலிக விடுதலை. ரைட்டா , ரைட்டு...
 (சும்மா தமாசு பரிசல் ,ஆதி மற்றும் கேபிள் ஜி)

கண்கள் இரெண்டால்,உன் கண்கள் இரெண்டால்(சவால் சிறுகதை போட்டி -2011)

மணி "ஆறு" என்று அலாரம் அலறியபடி , ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அனிதாவை எழுப்பியது . திடிக்கிட்டு எழுந்த அனிதா , கலைந்திருந்த ஆடைகளை  சரி செய்து கொண்டே , "இன்னிக்கி சீக்கிரம் போய் , அந்த பெண்டிங்  வேலைய முடிச்சுரனும் , இல்லேன ,அந்த முசுடு மேனேஜர் , டீம் மீட்டிங் -ல வச்சு , மானத்த வாங்கிடுவான்" என்று மனதினுள் முனு முணுத்தவாறே , தன் வீட்டு வேலைகளை செய்ய ஆரம்பித்தாள். 

லஞ்ச்-கு தேவையானதை குக்கரில் வைத்துவிட்டு , கடிகாரத்தை பார்க்க , "மணி ஆறரை ,இப்ப ரீத்து -வ எழுப்பினாதான் ,அவ ரகளைய முடிச்சு ,எழுந்து வர்றதுக்கு சரியா இருக்கும்" என்று போய் அவள் செல்ல மகளை எழுப்பினாள்.

"அம்மா ,இன்னும் பத்து நிமிஷம்மா -ப்ளீஸ் " கெஞ்சினாள் ரீத்து.
"சரி , கரெக்ட் -ஆ பத்து நிமிஷத்தில வந்து  அம்மா வந்து எழுப்புவேன் ,சத்தம் போடாம எந்திரிக்கணும் என்ன? " - அனிதா.
"ஓகே" என்று comfortar -ஐ இழுத்து போர்த்திக் கொண்டாள் ரீத்து.

ஆறரைக்கு , வழக்கம் போல் ரீத்து அடம் பிடிக்க ஆரம்பித்தாள். 
"ஓ , அம்மா நான் இன்னைக்கு ஸ்கூல் போக மாட்டேன்" , வீல் என்று பக்கத்துக்கு வீட்டுக்கு கேட்குமாறு அலறி, தன் சுப்ரபாரத்தை தொடங்கி வைத்தாள் அவள் .

"ஏண்டி செல்லம் போ மாட்ட ,அம்மாகிட்ட சொல்லு " என்று அவளை தாஜா செய்து , ஒரு வழியாக பிரேக் பாஸ்ட் சாப்பிட வைத்து , மற்ற எடு பிடி வேலைகளையும் செய்து வைத்து ,அவளை பள்ளிக்கு அனுப்பி வைத்தாள் அனிதா.

பெரிய போருக்கு பின் ஏற்பட்ட அந்த அமைதியை அனுபவித்து ரசித்து ,தனக்கு பிடித்த பாடலை முனுமுனுத்தபடியே   குளித்து உடை மாற்றி , கிடைத்த பாக்ஸ் -இல் லஞ்ச்சை திணித்துக் கொண்டாள்.

இதுவரை நடந்த களேபரத்தை கண்டு கொள்ளாமல் உறங்கிக் கொண்டிருந்த கணவன் விமலிடம், "என்னங்க நான் கெளம்புறேன், மறக்காம லஞ்ச் எடுத்துட்டு போய்டுங்க" என்று அக்கறையுடன் சொல்லி விட்டு  வீட்டிலிருந்து அனிதா வெளியேறினாள்.

                         ----------oOoOo--------------------------
வழக்கமாக ஏறும் பஸ்ஸில் ஏறி, கிடைத்த சீட்டில் உக்கார்ந்தாள் அனிதா. அவள் அவசரத்தை புரியாமல் , டிரைவர் அலட்சியமாக , ஸ்லோவாக ஓட்டுவது போல் பட்டது அவளுக்கு. திடீர் என்று பஸ், ' ஒரு சடன் பிரேக்' போட்டு, அடுத்து வந்த சிக்னலில் நின்றது. சில நிமிடத்  துளிகளுக்கு பிறகு , கிரீன் விழுந்தும் பஸ் எடுக்கவில்லை. "ஐயோ டைம் ஆகுதே" என்று கவலையாக ஜன்னலின் வெளியே பார்த்தாள் அனிதா.

ஒரு போக்குவரத்து கான்ஸ்டபுள், பத்து குழந்தைகளை , வரிசையாக கை பிடித்து
'ஜீப்ரா கிராசிங் '  வழியாக ரோடை க்ராஸ் பண்ண உதவிக் கொண்டிருந்தார்.அந்தக் குழந்தைகளின் கையில் இருந்த குச்சியை பார்த்தவுடன் தான் அவர்கள் பார்வை அற்றவர்கள் என்பதை உணர்ந்தாள்.

அவள் மனம் , இரண்டு நாட்களுக்கு முன் கணவன் விமலுடன் பேசிக் கொண்டிருந்ததை  நினைவில் Play செய்ய ஆரம்பித்தது:

      ரீத்துவுக்கு கதை சொல்லி தூங்கப் பண்ணி விட்டு, தங்களின் தனி
      அறையில் வந்து படுக்கையில் சரிந்தான் விமல். அவன் தலையை   கோதி விட்ட அனிதா,
                " ஏங்க உங்கட்ட ஒன்னு சொல்லணும்" .
                "சொல்லு ஸ்வீட் ஹார்ட்".
                "வர்ற சனிகிழம உங்க பர்த் டே ,நினைவிருக்கா"
                "ஆமா அதுக்கென்ன, உனக்கு எத்தன தடவ சொல்றது,
                   எனக்கு பர்த் டே கொண்டாடுறதுல அவ்வளவா இன்டெரெஸ்ட் இல்லேன்னு"
                "தெரியுங்க, ஆனால் இந்த தடவ உங்கள விடுறதா இல்ல,உங்க
                  நண்பர்கள்  பாமிலி -ய கூப்பிட்டு விருந்து வைப்போம் ,அப்படியே ஒரு
                  கெட் டுகதர் வச்ச மாதிரியும் இருக்கும்,நம்ம கொழந்தைக்கும் வெளயாட நண்பர்கள் கெடச்ச மாதிரியும் ஆச்சு"
                "அவங்க யாருக்கும் சோத்துக்கு பஞ்சமில்லாம செழுமையா இருக்குறவங்க,அவங்கள கூப்பிட்டு சோறு போடறதுக்கு , இல்லாத ஏழைபட்டவன்களுக்கு கொடுத்தாலாவது புண்ணியம்"
                "இப்படியே சொல்லிக்கிட்டு இருங்க, நாள பின்ன , ஒரு ஹெல்ப் -ன்னு கேட்குறதுக்கு ஆள் இல்லாம போகப் போகுது"


சீறிக் கொண்டு சென்ற மற்ற வாகனங்களின் போட்ட சத்தத்தில், அவள் எண்ணம் தடைபட்டவளாக , அனிதா தான் இறங்க வேண்டிய ஸ்டாப் -ஐ எதிர் நோக்கத் தொடங்கினாள்.

----------oOoOo--------------------------ஒரு வழியாக  வேலைகளை முடித்து , லஞ்சிற்கு உட்கார்ந்த அனிதாவிற்கு,
கணவன் ஞாபகம் வர, அவன் நம்பரை கூப்பிட , போன் அடித்துக் கொண்டே இருந்தது. சரி , "வழக்கம் போல எதாவது மீட்டிங் ஆ இருக்கும்"
என்று நினைத்தவளுக்கு ,அவன் பர்த் டே  ஞாபகம் மீண்டும் வந்தது. எதாவது வித்யாசமா செய்யணும்,அவனுக்கு என்ன பிடிக்கும் என்று யோசிக்கத் தொடங்கினாள்.

ஏழரை மணிக்கு வீட்டில் நுழைந்த அனிதா, பக்கத்துக்கு வீட்டில் இருந்து வந்த ரீத்துவை பார்த்து, "ஹாய் செல்லக் குட்டி, பசிக்குதாடா?" எனக் கேட்க,
"ஆமாம் , ஆனா நான் இப்ப தான் குக்கி பிஸ்கட் சாப்பிட்டேனே" என்றவளை வாரி எடுத்து ஒரு முத்தம் கொடுத்துவிட்டு, "நீ TV பாரு, அம்மா , அப்பா வரதுக்குள்ள டின்னர் பண்ணிர்றேன் " என்று சமையல் அறைக்கு ஓடினாள்.

லேப் டாப்பை திறந்து, கீதா ஆச்சல் அவர்களின் "என் சமையல் அறையில்", ப்ளாக் சென்று ,விமலுக்கு பிடித்த
அய்டத்தை பார்த்து, சமைத்து முடித்து , அவன் வந்ததும் , எல்லோரும் சேர்ந்து டின்னர் சாப்பிட்டு முடிக்க , இரவு பத்தாகி விட்டது. "சரி,போய் , ரீத்துவ தூங்க வச்சிட்டு வாங்க" என்று கணவனை விரட்டிவிட்டு, படுக்கையில் விழுந்தவளை ,  கால் மணி நேரத்தில் வந்து படுத்த விமலின் வாசம் எழுப்பியது.

"என்னம்மா , ரொம்ப டயர்டா இருக்கா, தூங்கிட்டயா?"
"இல்லங்க, உங்க பர்த் டே பத்தி தான் நினச்சுகிட்டு இருந்தேன்"
"மறுபடியுமா,சொன்னா கேட்க மாட்டியா நீயி"
"ஒரு ஐடியா வந்துச்சு,மொதல்ல அதக் கேளுங்க"
"சரி சொல்லு"

தான் காலையில் பார்த்த அந்த கண் தெரியாத பிள்ளைகளைப்  பற்றி சொல்லி ,"உங்க பர்த் டேவ , அவங்க கூட கொண்டாடலாமே" என்ற அவளின் ஐடியாவை தயங்கி தயங்கி சொல்ல,அவனோ உலக அதிசயமாக ,  தயங்காமல் , உடனே ஓகே பார்க்கலாம் என்று சொல்லிவிட்டான்.

----------oOoOo--------------------------


விமல் முதல் நாளே, 'அன்னை தெரசா பார்வையற்றோர் பள்ளி'-க்கு போன் செய்து சொல்லியிருந்ததால், அவன் அங்கு குடும்பத்துடன் சென்றவுடன்,
அந்த பள்ளியின் முதல்வர் அவர்களை அன்புடன் வரவேற்றார். அன்று மூன்று வேளையும் அந்த குழந்தைகளுக்கு ஸ்பெஷல் உணவு வழங்கியதற்கு தன் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார். அப்பள்ளி குழந்தைகளுடன் பழகி,அவர்களின் வெவ்வேறு திறமைகளை கண்டு வியந்து மகிழ்ந்து, பிரியா விடை பெற்று வீடு வந்து சேர்ந்தனர் அம்மூவரும்.

ரிச்சா தனக்கு புதிய நண்பர்கள் கிடைத்த மகிழ்ச்சியில் இருக்க, விமல் அனிதாவிடம்,
     "அங்க ஒரு பொண்ணு ,நல்லா ஆக்டிவா பேசிக்கிடுர்ந்துச்சே
       கவனிச்சயா"
    "ஆமாங்க அவளுக்கு,நம்ம ரிச்சாவ விட ஒரு ரெண்டு வயசு தான்
     கூட இருக்கும், அவ பேரு கயல் விழி"
    "அப்படியா , நல்ல பேரு ஆனா பாவம் பார்வைக்கு கொடுப்பினை இல்ல  ,இந்த ஆண்டவன நெனச்சா,எனக்கு கோவம் கோவமா வருது"
   "அவள பத்தி விசாரிசேங்க, அவ பிறவியிலேயே குருடு இல்லையாமாம்,
      அவ கதைய கேட்டா, பயங்கர சோகம்ங்க,இந்த ஆம்பிளைங்க எதுக்கு இப்படி இருக்கீங்களோ தெரியல"
    "அப்படியா, உன் ஆம்பிளைங்க குறை சொல்லற பஞ்சாயத்த ஆரம்பிட்சிட்டயா,அந்த பிள்ளையப் பத்தி சொல்லு மொதல்ல" என்று ஆர்வமானான் விமல்.

 "அந்த பொண்ணோட அப்பா ,நல்ல வசதியான குடும்பம். ஆனா அவனுக்கு குடி பழக்கம். வீட்லயே வாங்கி வச்சு குடிக்க ஆரம்பிச்சுட்டான்.சொத்தெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கரைய ,ஒரு நாள் - கயல் விழி , "குடிகாதீங்கப்பா"ன்னு , அவன் வாங்கிட்டு வந்த பாட்ல உடச்சிட்டதால, அவளை கோபத்தில புடிச்சி தள்ளி விட்டுட்டான், கீழ விழுந்ததுல , கண்ணு பக்கத்தில அடி பட்டு , கண் நரம்பு கட்டாகி,பார்வை போயிடிச்சு. அந்த சோகத்துல அவன் அப்பன் மேலும் மேலும் குடிச்சி போய் சேர,அவ அம்மாவும் அல்பாயுசுல போய் சேர்ந்துட்டா,அவ இப்ப அந்த பள்ளில" என்று சொல்லி முடித்தாள் அனிதா.

விமலுக்கு சுருக்கென்று குத்தியது, அடிக்கடி பார்ட்டி,டென்ஷன் என்று சாக்கு சொல்லி குடித்தது நினைவுக்கு வர, "சரி , வாங்க டைம் ஆச்சு,எல்லாம் படுக்க போகலாம்" என்று கோபமாக விரட்டி விட்டான்.


----------oOoOo--------------------------


மறு நாள், வேலை மும்முரத்தில் இருந்த விமலுக்கு, பார்வையற்றோர் பள்ளியிலிருந்து முதல்வர் பெயர் அவன் செல் போனின்  காலர் ஐடியில் தெரிய,
  "ஹல்லோ விமல் ஹியர்"
  "சார்,நான் தான்,நேத்து நீங்க வந்திட்டு போனீங்களே ,அந்த பள்ளியின்
    முதல்வர் பேசறேன்"
 "சொல்லுங்க சார்"
 "சார் மறுபடியும் உங்களுக்கு நன்றி தெரிவிச்சுக்கிறேன்,ஒரு சின்ன உதவி
  பண்ணனுமே"
 "சொல்லுங்க சார் முடிஞ்சா செய்றேன்"
 "உங்களால நிச்சயம் முடியும்னு நம்புறேன்,உங்க நண்பர்கள்ட்ட சொல்லி,
   ரெண்டு மூணு பழைய கம்ப்யூட்டர் விலைக்கு வாங்கித் தரமுடியுமா,
  நீங்க IT ல இருக்கறதால கேட்குறேன்"
 "சார், நிச்சயமா செய்றேன் சார்" என்ற விமல் , கயல் விழி நினைவு வந்தவனாக ,அவளை பற்றி விசாரிக்க,அவளுக்கு ஆபரேஷன் செய்தால் பார்வை வர வாய்ப்பு இருப்பதையும்,சில லட்சங்கள் செலவு செய்ய ஆளில்லாமல் இருப்பதையும் கேட்டறிந்தான்.

கயல் விழி நினைவாக விமல் லஞ்சில் கூட சோகமாக இருக்க,அவன் நண்பன் விஷ்ணு, "என்னடா, நேத்து உன் பர்த் டே,செலவு பண்ணக் கூடாதுன்னு வழக்கம் போல எங்களுக்கெல்லாம் சொல்லல" என்று அவனை கிண்டல் செய்ய ஆரம்பிக்க, தான் பர்த் டே கொண்டாடியதையும் ,கயல் விழி ஆபரேஷன் பணம் தேவை வரை சொல்லி முடித்தான்.

சிறிது நேரம் யோசித்த விமல், "ஒரு ஐடியா,நேத்து TV ல ஒரு Ad பாத்தேன்,
நம்ம "***" TV  , "10 minutes of fame" அப்படின்னு ஒரு போட்டி நிகழ்ச்சி நடத்துது,
"பத்து நிமிசத்துல சமுதாயத்துக்கு உருப்படியா ஒரு மெசேஜ் சொல்லணும் , அது ஒரு நாடகமாகவோ ,இல்ல குரும்படமாகவோ கூட இருக்கலாம்,visual -ஆ இருக்கணும்  , யார் சிறப்பா செய்றாங்களோ அவங்களுக்கு பத்து லட்சம் பரிசாம்,நாம ஏன் அத முயற்சி பண்ணக் கூடாது?" என்றான்.

"பண்ணலாம்,ஆனா ,நமக்கு அதெல்லாம் பண்ண அனுபவமே இல்லையே" என்றான் விமல்.
"எதுக்கு கவலை படுற,நம்ம பிரண்ட் கோகுல் -கு ,காலேஜ் ல இருந்தே ,இந்த விஷயமெல்லாம் அத்துப்படி,கவலைய விடு ,நான் அவன்ட்ட பேசிக்கிறேன்"
"சும்மாவா சொல்றோம், நீ எல்லா விசயத்தையும் இப்படி விரல் நுனியுல வச்சி இருகிறதால தான், உன்னை நாங்க இன்பார்மர் விஷ்ணு -னு கூப்பிடுறோம், ரொம்ப நன்றிடா விஷ்ணு என்ன புரிஞ்சிகிட்டு இவ்வளவு சீக்கிரம் ஐடியா குடுத்ததுக்கு" என்று அவனை மெச்சினான் விமல்.

----------oOoOo--------------------------விமலின் நண்பன் கோகுல், பர பரப்பாக,ஒரு ஸ்கிட்(skit) யோசித்து,
அதில் வரும் வசனங்களை பிரிண்ட் செய்து, சிறு சிறு துண்டுகளாக 
ஆக்கி கொண்டிருந்தான்.

அதில் சில வசனங்கள் இவ்வாறு இருந்தன:

Mr.கோகுல் ,

S W 62 HF - இதுதான் குறியீடு. கவனமாக.. .
- விஷ்ணு
-------------------

Sir,

எஸ்.பி ,கோகுலிடம் நான் தவறான குறியீடைதான் கொடுத்திருக்கிறேன் .
கவலை வேண்டாம்."
-விஷ்ணு


கோகுல் i-போனின்  திரை,  'விஷ்ணு இன்பார்மர்'  என்று ஒளிர்ந்தது .கோகுல் போன்-ஐ எடுத்து, "எஸ். பீ கோகுல் பேசுறேன்" என்று ஆரம்பிக்க,
"டே,நீ எப்ப டா ,எஸ். பீ ஆன,சொல்லவே இல்ல" என்று ஆச்சர்யப்பட்டான் விஷ்ணு.
"அட நாயி , அந்த TV contest கு ,ஸ்கிட் எழுதிகிட்டு இருந்தேனா,அதுல என் காரக்டர் போலிஷ் எஸ்.பீ,அந்த காரக்டர்ல அப்படியே இன்வால்வ் ஆய்ட்டேன் "  என்றான் கோகுல்.
"ஆமா பெரிய விக்ரம், அப்ப நானு,விமல் என்னவா நடிக்கப் போறோம் ?" - விஷ்ணு கேட்க,அவன் காரக்டர்-ஐ அவனுக்கு விளக்கி , வசனம் கூட ரெடியாயுருச்சு,சொதப்பாம , நல்லா நடிச்சி 
நாம அந்த பரிச வாங்கணும் , கயல் விழிக்கு ஆபரேஷன் செய்யணும்"
என்று நினைவூட்டினான் கோகுல்.
"சரி,ரொம்ப தேங்க்ஸ்,நான் விமல்ட்ட சொல்லிர்றேன்,கலகிருவோம் மாப்ஸ்"
என்று வைத்தான் விஷ்ணு.
----------oOoOo--------------------------

ஒரு வழியாக அந்த TV யின் பிரத்யோக ஸ்டுடியோவில் , ஸ்கிட்(skit) செய்து முடித்தார்கள் விமல்,கோகுல் மற்றும் விஷ்ணு. யூனிட்டில் இருந்தவர்கள், பிரமாதமாக இருந்ததாக கை தட்டியது அவர்களுக்கு நம்பிக்கை கொடுத்தது."SMS votes கூட உண்டு,கண் தெரியாதவங்களுக்கு உதவி செய்யனும்னு நீங்க அந்த ஸ்கிட் -ல சொன்ன மெசேஜ் , உண்மைய்லையே உங்களுக்கு பப்ளிக் ட்ட அதிக வாக்கு வாங்கிக் கொடுக்கும் பாருங்க ,என் பல வருட அனுபவத்தில் சொல்றேன் " என்று ப்ரொடக்சன் மானேஜர் ஸ்பெஷல் ஆக கூப்பிட்டு பாராட்டினார்.

சிறிது நாட்களுக்கு பின்...அன்று அவர்கள் செய்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்
நாள்,மற்றும் அன்று தான் வின்னெர்ஸ் அறிவிப்பும் கூட, எனவே , விமல் வீட்டில்,கோகுல் ,விஷ்ணு ,அனிதா,ரிச்சா மற்றும் பலர், ஆர்வத்துடன் TV-ஐ பார்த்துக் கொண்டிருந்தனர்.இன்பார்மர்  விஷ்ணு, அவப்போது TV நிறுவனத்தில் இருந்த  ,யாருக்கோ போன் செய்து , SMS Vote நிலவரத்தை அறிந்து , "நாம தான் லீடிங் " என்று டென்ஷன்-ஐ எகிறச் செய்து
கொண்டிருந்தான்.

TV announcer பல மொக்கை வசனங்களை சம்பிரதாயமாக சொல்லிவிட்டு,
"...and the winner is......."  .....xxxx team.....என்று வேறு யாரோவோட  பெயரை அறிவித்தார்.

விமல் வீட்டில் இருந்த அனைவரும் தொங்கிய முகத்துடன்அதிர்ச்சியுடன்  எழுந்தனர்.ரிச்சா ஒன்றும் புரியாமல் , அப்பா , நீங்க தான வின்னர் ,சொல்லுங்கப்பா " என்று விமலை உலுக்கினாள்.

நண்பர்கள் அனைவரும் சோகமாக விடைபெற்று சென்றதும், விமல் ,'சிரிப்போ சிரிப்பு ' என்று அடுத்து வந்த ப்ரோக்ராம் டைட்டில் -ஐ பார்த்து  கடுப்பாகி, TV-ஐ அணைத்து விட்டு, "கயல் விழிக்கு வேற ஏதாவது ஏற்பாடு பண்ணனும்,இந்த வருஷம் போனஸ் வரும் , அப்புறம் , ரிச்சவுக்கு நக வாங்க கொஞ்சம் பணம் வச்சுருகொமே,அத கூட சேத்துக்கனும்,அப்ப கூட பத்தாது போல இருக்கே" என்று யோசிக்கத் தொடங்கினான்.

விமலின் போன் 'Informar Vishnu' என்று அவன் போட்டோவுடன் அழைத்தது:
"டே விமல்" என்றான் விஷ்ணு அவசரத்துடன்.
 "நீ உடனே கெளம்பி , அன்னைக்கு போனமே அந்த TV ஸ்டுடியோவுக்கு வா,இன்னைக்கு ரெண்டுல ஒன்னு பாத்திடுவோம் அவனுகள " என்று சொல்லி விட்டு கட் செய்துவிட்டான்.

விமலுக்கு தலையும் புரியல ,வாலும் தெரியல, "என்னாவா இருக்கும்" என்று யோசித்தபடி ,அனிதாவிடம் சொல்லிவிட்டு ஸ்டுடியோவுக்கு பைக்-ல் பறந்தான்.

விமல்,விஷ்ணு,கோகுல் ஆகிய மூவரும், அந்த TV நிறுவன இயக்குனரின் அறைக்கு சென்று,அவர் எதிரில் இருந்த இருக்கையில் அவர் சைகையின் படி அமர்ந்தார்கள். அந்த இயக்குனர் எழுந்து நின்று கொண்டே,

  "விமல்,  எங்க நிறுவன PRO கார்த்தி  ,உங்க நண்பர் விஷ்ணுவுக்கு நண்பர்,
   அவர் சொல்லித்தான் , நீங்க மூணு பேரும், ஏன் இந்த contest -ல போட்டி போட்டீங்கன்னு,எங்களுக்கு எல்லா விவரமும் தெரிஞ்சது. நாங்க இந்த மாதிரி contest நடத்துறது சும்மா 'டி ஆர் பீ '  ரேட்டிங் உயர்துரதுக்கு. மத்தபடி
 நாங்க பரிசு குடுக்கிற மாதிரி காமிக்கிறது,நாங்க முன்னாடியே ஏற்பாடு
செஞ்ச எங்க டீம் ஆளுங்களுக்கு தான்" என்று சொல்லி நிறுத்தினார்.

 கேட்டதை ஜீரணிக்க முடியாமல் , கோகுல் - "அப்ப , இந்த நடுவர் , அவங்க அளப்பர செய்றது இதெல்லாம் கூட..."

"ஆமாம் அதுவும் திட்டமிட்ட நாடகம்" என்றார் இயக்குனர்.

"ரொம்ப நன்றி சார் " என்று விமல் எழ, "நல்ல TV,போங்கடா நீங்களும் உங்க பாழாப் போன TV யும் " என்று விஷ்ணு கோபமாக கத்திக்கொண்டே எழ,

"wait..wait...நான் இன்னும் முடிக்கல...நாங்க கயல் விழிக்கு உதவி செய்யப் போறோம்...ஆனால் நீங்க இந்த மேட்டர யாருகிட்டயும் மூச்சு விடக் கூடாது...உங்க பொறுப்பு இதோட முடிஞ்சு போச்சு...deal ஓகே வா? " என்றார் அந்த வியாபர புலி.

"எப்படியாவது கயல் விழிக்கு நல்லது நடந்தா சரி,நாங்க ஒதுங்கிக்றோம்" என்று மூவரும் ஒத்துக் கொண்டு வெளியேறினர்.

மீண்டும் அந்த TV ல் , "உலகத் தொலை காட்சிகளிலேயே முதல் முறையாக,ஒரு பார்வை அற்றவருக்கு உதவி செய்கிறோம்" மற்றும் "கயல் பார்வை போனது எப்படி ,குற்றம் நடந்தது என்ன?"  என்று மீண்டும் மீண்டும் விளம்பரப் படுத்தி , கயல் விழி ஆபரேஷன் செய்து, கண் கிடைத்து மகிழ்வதை கூட விடாமல்  Live ஆக காட்டி அந்த TV 'டி ஆர் பீ '  ரேட்டிங்கை உச்சத்தில் கொண்டு நிறுத்தியதை சொல்லவும் வேண்டுமா?டிஸ்கி: நான் இந்த கதையை ,தமிழ்  பதிவுலக ஜாம்பவான்கள், கேபிள் சங்கர்,செங்கோவி, டாக்டர் ஐடியா மணி,அவிய்ங்க ராசா மற்றும் எண்ணிலடங்கா அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் , என்னையும் மதித்து, follow செய்யும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் சமர்ப்பிக்கின்றேன். ஏன்ன, நீங்க இல்லேன்னா , நான் இல்ல...

     "சொன்னா தெரியாது ,சொல்லுக்குள்ள அடங்காது,
     என் மேல நீங்க வச்ச அன்பு, பாசம்"

..யோவ் யாருயா DJ அது ...நிப்பாட்டுயா பாட்ட ....எனக்கு தல ரசிகனும் வேணும் ,  தளபதி ரசிகனும் வேணும் ...ரைட்டா , ரைட்டு...

  இப்ப நீங்க என்ன பண்ணணும்ன , யுடான்ஸ் லோகோ பக்கதுல Like இருக்கு பாருங்க ,அங்க வச்சி ,சும்மா  'நச்' னு.. ஒரு ...சீ சீ , அதுல்லங்க , உங்க mouse ஆல ஒரு செல்ல 'குட்டு' ...அம்புடுதேன்.


 

குறிப்பு : மேல உள்ள வணக்கம் இமேஜ் ,கூகிள் ஆண்டவர் கொடுத்தது , அது உங்கதுன்ன , உங்களுக்கும் என்னோட நன்றி தலைவா!

Monday, October 10, 2011

கல்லூரி மாணவர்கள் பெரிய பருப்பா?

இன்று தினசரியில் படித்த செய்தி , கோழிகோட்டில் ,ஒரு மாணவனுக்கும் ,
எஸ்.எப்.ஐ கோஷ்டிக்கும் இடையே மூண்ட ஏதோ ஒரு ஈகோ மோதலில் , ரெண்டு பக்கமும் ஐயோ பத்திகிச்சு...ஐயோ பத்திகிச்சு...


இத படிச்சவோன்ன , ஆஹா ,பதிவுக்கு மேட்டர் சிக்கிடுசுடா அப்படின்னு
மனசு அப்படியே கொசு வர்த்தி சுத்த ஆரம்பிட்சிட்டது.

நாங்கள் வழக்கம் போல , ஜாலி யாக , எங்கள் கல்லூரிக்கு செல்லும் பொது போக்குவரத்தில் ஏறினோம். பஸ் எப்போதும் போல் கூட்டமாக, குப்பை வண்டியில் , குப்பைகளெல்லாம் தொங்கி வழியுமே ,அது போல எங்களை தன் முதுகில் ஏற்றிக் கொண்டு பாவமாக போய்க் கொண்டிருந்தது.

நம்ம முன்னாள் வருங்காலத் தூண்கள் ,அதாங்க நாங்க , வழக்கம் போல் , டிக்கெட் எடுக்கமாட்டோம் என்று , கொண்ட கொள்கையை , விட்டு விடாமல் ,
உறுதி பூண்டு , கண்டக்டர் , "டிக்கெட் ,டிக்கெட்"  என்று காட்டெருமையாக ( எவளவு நாளைக்கி கரடி?)  கத்தியும், காதில் வாங்காதது போல ,"அவன் அவன் - அவுங்க அவுங்க" ஜோலிய பாத்துக் கிட்டு இருந்தோம்.

கல்லூரியை அடைவதற்கு இன்னும் ஒரு ரெண்டு கிலோ மீட்டர் தான் பாக்கி.நடத்துனர் , தன் கையில் இருக்கும் நோட்டுகளை பார்த்தார். அதிக பட்சம் , மூன்று ரூபாய் கலக்சன் . அவர் வேற வழியில்லாம , தன் அதிகாரத்தை வாயில் எடுத்தார். அதாங்க , விசில் அடிச்சார் .

வண்டி நின்றது. மாணவர்கள் நெஞ்சம் கொதித்தது. மீசை துடித்தது.
"அய்யகோ , இந்த கொடுமையை கேட்பாரில்லையா" என்று ஒவ்வொருவருக்கும் வீரம் பொங்கியது. ஒருவன் விட்டான் சவுண்ட் , ஓட்டுனரை பார்த்து. அது அவரின் குடும்பத்தையே களங்கப் படுத்திய வார்த்தை. ஒட்டுனற்கும் கோபம் வந்தது , அவரும் ,இது வரை  மாணவர்கள் டிக்சனரியில் இல்லாத வார்த்தைகளில் , எல்லோரையும் வைது கொண்டே , இனி சி.எம் வந்து சொன்னாக் கூட ,வண்டி எடுக்க மாட்டேன்டா என்று இறங்கி போய் விட்டார் .

கல்லூரி முதல்வர் காரில் பறந்து வந்தார். போக்குவரத்து கழகத்தில் இருந்தும் ஆட்கள் வந்து, எங்களை எல்லாம் காட்சி எடுத்து,  ஒரு வழியாக பஸ் கல்லூரி  வந்து அடைந்தது.

அப்போதிருந்தே மாணவர்களுக்கு எங்கள் முதல்வர் மேல் ஒரு காட்டமாக இருந்தது. " உனக்கு ஒரு நா வைகிரோம்டி ஆப்பு " என்று அந்த நல்ல நாளுக்காக காத்திருந்தார்கள்.

அது பரீட்சை ஆரம்பிக்கும் சீசன். எங்கள் வயிற்றில் ஆசிட் - ஐ ஊற்ற , விட்டாரு ஒரு அறிக்கை , "எதிர் வரும் Internal டெஸ்ட் இல் ,ஒரு நாளிக்கு ஒரு பாடத்திற்கு பதிலாக , இரண்டு பாடங்களுக்கு தேர்வு நடத்தப்படும், காலையில் ஒரு தேர்வு, மாலையில் ஒரு தேர்வு".

மீண்டும் எங்களுக்கெல்லாம் மூக்கு புடைக்க ஆரம்பித்து , கண்கள் 'விஜயகாந்தாய்'  மாறின. யாரும் பரிச்சை எழுதக் கூடாது என்று எல்லோரும் முடிவு கட்டினோம்.

முதல் தேர்வு நாள் அன்று கல்லூரிக்கு போய் சேர்ந்தோம். எங்களை எல்லாம் போக வேண்டாம் என்ற ஒரு கல்லூரி நாடாமை அனவுன்சு செய்தான். ஆனால் அப்படி சொன்ன அந்த  பெரிய மனிதன் உள்பட அவங்களின் மொத்த டிபார்ட்மண்டும் , பரீட்சை எழுதப் போய்விட்டார்கள்.பாருங்க எப்படின்னு ,சொல்றது ஒன்னு ,செய்றது ஒன்னு.

"அட நாதாரிங்களா , இவனுங்கள நம்பி நாம ஒன்னும் படிக்காம வந்துட்டோமே ", அப்படின்னுட்டு உண்மைலயே உக்காந்து ஓசிசோம்.
சரி , பேசாம , நாம ஆட்டத்த தொடங்கி வைப்போம்னு,நாங்க யாரும் எழுதல அந்த மொதல் பரிச்சய.

அப்புறம் என்ன, "யே , அந்த டிபார்ட்மன்ட் காரைன்களே எழுதல, நாமளும் எழுதக்கூடாதுன்னு"  விஷயம் , தீயை விட வேகமாக பரவியது. அதுக்கப்புறம் ஒரு பயலும் எழுதல.

அதோட விட்டாயீன்களா, "மாணவர் வயிற்றில் அடிக்கும் முதல்வர் ஒழிக" என்று அடுத்த இன்னிங்க்ஸ் தொடங்கி விட்டார்கள். "இத பெரிய லெவல்ல கொண்டுபோனும்டா" என்று யோசித்த சில புண்ணிய ஆத்மாக்கள், எஸ்.எப்.ஐ தொடர்பு கொண்டு ஆதரவு கேட்டது. அவர்களும் சேர்ந்து கொள்ள ,  "அநியாயம் செய்யும் முதல்வரை , பதவியை விட்டு தூக்க வேண்டும் " என்று பேனர்களுடன்,  மாணவ கண் மணிகள் அனைவரும் ,
 திடீர் என்று அண்ணா ஹசாரே -வாக மாறி விட்டார்கள். ஆமாம் , மாபெரும் உண்ணாவிரத போராட்டம் என்று  உண்டியல் குலுக்கி ,  மேடை , பந்தல் என்று அமர்களமாக, ஊரின் நடுவே, மைக்குடன் , முதல்வரை வாங்கு வாங்கு என்று வாங்கிக் கொண்டிருந்தார்கள்.

கல்லூரி நிர்வாகம் , வேறு வழி இல்லாமல் முதலில் கால வரையற்ற விடுமுறை அறிவித்தது. அண்ணா ஹசாறேக்கள் அசராமல் , உண்ணா விரதத்தை தொடர (தாக சாந்தி குஸ்பூ வைன்ஸ் ல் அடிக்கடி)  , ஒரு வழியாக அதை முடிவுக்கு கொண்டு வந்தார்கள். எப்படி தெரியுமா?

  அந்த முதல்வர், வேறு கல்லூரிக்கு, துணை முதல்வாராக மாற்றம் செய்யப் பட்டார்.

   அரும் பாடு பட்டு , மயிரையும் , சாரி ,உயிரையும் துச்சமென மதித்து நாங்கள் செய்த , அந்த விடுதலை போராட்டத்திற்கு , ஊக்கம் கொடுக்கும் விதமாக , நாங்கள் எல்லாம் கல்லூரி வந்ததாக அட்டெண்டன்ஸ் போடப்பட்டு , ஏதோ ஒரு மார்க்கும் போட்டு ஒப்பேத்தினார்கள்.


டிஸ்கி: "ஒரு மாணவன்ட கத" அப்படின்னு பதிவு தலைப்பு வைக்கலாம்னு நெனச்சேன். அப்புறம் அது மலையாள பிட்டு  படம் டைட்டில் மாதிரி ஆகி ,
ஹிட் எக்குத் தப்பா எகிறி ,  கூகுளே என் ப்ளாக் தூக்கிட்டா , என்ன ஆறது அப்படின்னு , நின்னு யோசிச்சு , என் முடிவ மாத்திட்டேன்.

முன்னால் , இந்நாள், மாணவ கண்மணிகளே , ஓட்ட மறக்காம போட்டு,
இந்த விடுதலை போராட்டத்திற்கு உயர்வு செய்யுங்கள். நன்றி.

 

Sunday, October 9, 2011

இவர்கள் மனிதர்களா?

அன்று ஒரு நாள் , அலுவலக வேலைகளை முடித்து விட்டு, வீட்டிற்கு திரும்புவதற்காக ,பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்து நின்ற ஒரு பஸ் நிறுத்தத்தில் இருந்து இறங்கினார் அந்த பெண்மணி. நல்ல டீசன்டான உடையில் , பார்த்தாலே தெரிந்தது ,வேலைக்கு போய்விட்டு திரும்புகிறார் என்று.

அவருக்கு எப்படியும்  முப்பதுக்கு மேல் வயதிருக்கும். அவர் வீடு கொஞ்சம் தொலைவில் உள்ளது போலும். அவர் விறு விர்வென்று நடக்கத் தொடங்கினார்.
அவர் நடந்து செல்லும் பாதை அருகில் , ஒரு கழிவு நீர் செல்லும் சாக்கடை இருந்தது, கொஞ்சம் ஆழமான பள்ளம். அவர் அதனை நோக்கி போகத் தொடங்கினார். ஐயோ விழபோகிறார் என்று நான் நினைக்கும் பொழுதே ,நல்லவேளையாக அங்கிருந்த , தடுப்பை உணர்ந்து ,மீண்டும் சரியான பாதையில் செல்லத் தொடங்கினார்.அடுத்து அவர் செய்தது , ஒரு நாள் முனை சந்திப்பு ,இங்கும் அங்கும் சீறிப் பாயும் வாகனங்கள் , அது ஒரு நீளமான ஜங்ஷன் ,அவர் வால்க்கர் சைன் போட்டதும் , விறு விறுவென்று ,அதனை கிராஸ் செய்யத் தொடங்கினார். 

டே இதுல என்னடா ஆச்சர்யம் என்கிறீர்களா , அவர் ஒரு கண் தெரியாத பெண்மணி. ஆனால்,வெறும் ஒரு குச்சியுடன் , அவ்வப்போது தடுமாறினாலும் ,
நிமிர்ந்த நடையுடன் அவர் நடந்து சென்றதும் என் மனதில் பல கேள்விகள் ஓடின.

டெய்லி அதே ஆபீஸ், போறது ,வரதுன்னு எவ்வளவு அலைச்சல். நாமும் ஒரு கோடிஸ்வரனா இருந்த , பேசாம வீட்ல உக்காந்து சாப்பிடலாம். இப்படி பஸ் ,ட்ராபிக் நு ஒரே இம்சைப்பா,என்று நம்மக்கு எல்லாம் இருந்தும் ,அது இல்ல ,இது இல்ல என்று குறை பட்டுக்கொள்கிறோம். ஆனால் இவர்கள் எப்படி , ஒரு பெரிய குறை இருந்தும் , தன்னம்பிக்கையுடன் செயல்படுகிறார்கள்.

பாவம், இப்படி கண் தெரியாதவங்கள ,ஆபீஸ் அனுப்புறாங்க ,ஆனா அட்லீஸ்ட் ,யாராவது பஸ் நிலையம் வந்து காத்திருந்து அலைசுகிட்டு போலாமே என்றும் ஒரு கேள்வி.

அப்புறம், நாம குருடு தான , நம்மள யார் பாத்து என்ன சொன்னா என்ன , என்றில்லாமல் ,அவர்கள் ஜீன்ஸ் ,டீசர்ட் என்று மிக நேர்த்தியாக உடை உடுத்தி செல்வதை பார்த்தபொழுது, காமா சோமா என்று உடை உடுத்தும் என்னையே பிடிக்கவில்லை.

மற்றொரு நாள், தொலைக் காட்சியில் ,அந்த மனிதனை பற்றி காண்பித்தார்கள்.
நல்ல செங்குத்தான பாறையில், ஒரு கை தேர்ந்த வல்லுனரை போல் ,அவர் மலை ஏறத் தொடங்கினார். பின்னர் தான் தெரிந்தது அவரும் ஒரு பார்வையற்றவரே.

இதில் அதிசயம் என்னவென்றால், அவர் நாக்கின் மூலமாக , சயின்ஸ் கண்டுபிடிப்புடன் ஏறியதே. அந்த சயின்ஸ் கண்டுபிடிப்பு இருக்குல்ல ,அப்புறம் என்ன ,என்று சாதாரணமாக நினைக்காதீர்கள்.  

ஒரு விஷயம் சொல்கிறேன் ,கேளுங்கள் / படியுங்கள். நான் பெங்களூருவில் உள்ள அந்த மிகப் பெரிய நிறுவனத்தில் சேர்ந்த புதிது , அப்படி புதிதாக சேர்ந்தவர்களுக்கு ,கம்பனியின் கோர் வேல்யூஸ் கற்றுக் கொடுப்பதற்காக ,
ஒரு இரண்டு நாள் , ஒரு ரிசார்ட் ல் , பல வேடிக்கை ,விளையாட்டுக்கள் மூலம் 
எங்களை ஈடு படுத்திக் கொண்டிருந்தார்கள். சும்மா சொல்லக் கூடாது ,
ரெண்டும் நாளும் , நல்ல சாப்பாடு , செம கட்டு , கட்னோம். அந்த விளையாட்டின் ஒரு அங்கமாக ,  Rappelling  என்று கூப்பிட்டு போனார்கள்.

அதுக்கு முன்னால் அப்படி என்றால் என்ன அர்த்தம் என்றே தெரியாது. நாங்கள் சென்ற வாகனம் , பல கல் குவாரிகளை கடந்து சென்றது. நம்ம தெலுகு படத்துல காமிப்பான்களே அது மாதிரி. 

ஒரு ஆர்வத்துடன் ,கரடு , முரடான பாதையில் அழைத்து சென்றது வண்டி.குண்டும் குழியுமாக இருந்த ரோட்டில் ,தூக்கி யடித்து ,உடம்பெல்லாம் வலி எடுக்க ஆரம்பித்தது.

எப்படா வரும் என்று மனம் நோக ஆரம்பித்தபோது , ஒரு வழியாக ,அந்த சின்ன பாறை குன்றின் அருகில் வண்டி நின்றது. அங்கே , நல்ல தடிமனான , கயிட்ட்ருடன் காத்துக் கொண்டுர்ந்தார்கள் அவர்கள். 

இந்த பாறையின் மேல் கைற்றை பிடித்து ஏற வேண்டும் , அதுதான் Rappling என்றார்கள் .  அடங்கொக்க மக்கா, இது தான அது , இவ்ளோவு சின்ன மலையா 
இருக்கு , இது என்ன பிரமாதம் என்று, ஒரு சிலர் , ஏறிய பிறகு ,நானும் ஏற ஆரம்பித்தேன். ஆனால் அதன் உச்சியை அடைவதற்குள் நான் பட்ட பாடு.

இத்தனைக்கும் எனக்கு கண் நன்றாகத் தெரியும், இடுப்பை சுற்றி , சூப்பர் men ஜட்டி மாதிரி, கயிறினால் போடப்பட்ட ,அந்த சேப்டி ஹார்ர்நெஸ் ஜட்டி வேறு ,
என்னை தாங்கி பிடித்துள்ளது. மேல வேற ஒருத்தர் ,ரெடியாக ,நான் ஏறி வந்த கையிற்றை கெட்டியாக பிடித்து கொண்டுள்ளார் . எனவே, கீழ விழ , நூறு சதவீதம் சான்சு கெடையாது.  இருந்தும் ,நான் செத்து, பிழைத்து ஏறினேன்.

ஒரு வழியாக உச்சியை அடைந்தவுடன் , மறுபடியும் வந்த வழியே , இறங்க வேண்டும் என்றார்கள். அட சாமிகளா , இன்னும் இந்த கொடும முடியலையா,
சரவணா என்று, தட்டு தடுமாறி , இறங்கிவிட்டேன் .  ஏறுவதை விட ,இறங்குவதற்கு கொஞ்சம் பயமாகவே இருந்தது. ஏன்ன ,நான் கொஞ்சம் பல்க் பாடி பாருங்க.

கிரவுண்டை அடையும் பொழுது , நான் பட்ட கஷ்டத்திற்கு ஒத்தடம் கொடுப்பது போல் , காதில் விழுந்தது ,ஒரு சில கரவொலிகள் அங்கிருந்த ஏனைய ,அறிமுகம் இல்லாத என்னுடன் வந்திருந்த மற்ற பார்டீசிபண்ட்ஸ் -களிடமிருந்து .அதில் விஷேசம் என்னவென்றால் , ஒரு சில பிகர்களும் கைதட்டினார்கள்.(ஆம்பிளைங்க கை தட்டல் யார்க்கு வேணும்.)

இந்த மாதிரி கஷ்டம் உள்ள அந்த வீர விளையாட்டை , அதை விட ,உயரமான ,
செங்குத்தான பாறையில், இவர் செய்தது ,உண்மையிலேயே எனக்கு இன்றும் 
நம்பிக்கை கொடுக்கும் ஆச்சரியாமான விசயமே .

அவர் ஏறும் அந்த காணொளி ,இங்கே உள்ளது , அதனை காண 

இங்கே சுட்டவும்.****Video******


டிஸ்கி : ஏன் நெகடிவ் ஆக ,பதிவு தலைப்பு வைத்தேன் என்றால் , அப்படி வச்சா தான் , நம்ம ஆளுங்க , எட்டி பாக்குறாங்க. எல்லாம் தினசரி பத்திரிகைகள் , நம்மள , sensational news போடுறேன்னு சொல்லி அப்படி ஆக்கி வச்சுடாங்க, என்ன பண்றது.

Saturday, October 8, 2011

இன்னும் நான்கு நாட்களில்


இன்னும் நான்கு நாட்களில் நடக்கப் போகிறது அந்த அதிசயம். அதற்கு முன்னால் , நண்பர்களே உங்களுக்கு வாழ்க்கையில் சில விஷயங்கள் நடப்பதை பார்க்கும் பொழுது , இதே மாதிரி முன்னால கூட நடந்த மாதிரியே இருக்கே  என்று எப்போதாவது தோன்றியுள்ளதா?

ஆங்கிலத்தில் கூட தேஜாவு என்று சொல்வார்களே. 

உங்களுக்காக சிறப்பு ஏற்பாட்டில் , வெளி நாட்டில் இருக்கும் , என் நண்பன் ,
அவன் வெளிநாட்டு பிகருடன் ,கடற் கரையில் , உல்லாசமாக  இருந்த போது,அவனுக்கு அதே மாதிரி அனுபவம் ஏற்பட்டதை,ஸ்பெஷல் எபக்டில் பதிந்து அனுப்பி உள்ளான்.

எனக்கு மட்டும் தான் அனுப்பினான் என்று நினைத்து கொண்டிருந்தேன் , அப்புறம் தான் தெரிந்தது , ஊருக்கே அனுப்பி இருக்கிறான் என்று.

நீங்கள் ஏற்கனவே பார்த்திருந்தால் , மீண்டும் இன்னொரு முறை , பார்க்கவும்.
பார்க்காதவர்கள் ,  இதனை கட்டாயம் பார்க்க வேண்டும். அது மட்டுமில்லாமல் ,
பார்த்து , மேலும் நூறு பேரையாவது பார்க்கச் செய்ய வேண்டும். இல்லை என்றால் , உங்களுக்கு அக்டோபர் பதி நாளில் , ஆமாம் இன்னும் நான்கு நாட்களில் அந்த அதிசயம் ,உங்கள் கண் முன்னே நடந்தே தீரும்.


இந்த தேஜவு சுட்டியை கிளிக்கவும்.

Friday, October 7, 2011

அவள் வருவாளா? (சவால் சிறுகதைப் போட்டி -2011)

ஒரு முக்கிய அறிவுப்பு :

அன்புள்ள வாசகர்களே ,இது நான் ’யுடான்ஸ்’ திரட்டி தற்போது நடத்தி
வரும் ,சவால் சிறுகதை -2011 போட்டிக்காக எழுதிய இரண்டாவது சிறுகதை.இதை படித்துவிட்டு ,உங்களுக்கு பிடித்திருந்தால் , எனக்காக Vote
செய்து உங்கள் ஆதரவை அளிக்குமாறு வேண்டி , விரும்பி ,தாழ்மையுடன்
கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ,இந்த
கதையின் முடிவில் இருக்கும் ’யுடான்ஸ்’ லோகோ
பக்கத்தில் உள்ள Like ஐ கிளிக் செய்து ,உங்கள் ஓட்டை பதிவு செய்யவும்.

முதல் கதை இன்னும் வாசிக்காதவர்கள் இங்கே படித்து பார்க்கவும்:
       

அவள் வருவாளா? (சவால் சிறுகதைப் போட்டி -2011)
 
 
 "டே, சீக்கிரம் வெளிய வாடா,அவங்க எல்லாம் வந்த்ருவாங்கடா" அவசரப்படுத்தினான் குகன். குளித்து விட்டு வெளியே வந்தவன்  சரவணன்.
அவசரமாக உள்ளே போன குகன், "என்னா எழவடா தின்னே , நாத்தம் கொடல புறட்டுதுடா , எருமை மாடு "  என்று ஓங்கி கதவை அறைந்து சாத்தினான்.

தலையை காசித் துண்டால் துவட்ட ஆரம்பித்த சரவணனைப் பார்த்து ,
"அதெப்பிடிரா மாப்ளை , 8.30 to 9.௦௦00  மணிக்கி தான் வர்றாங்க,அதுக்கு கொஞ்சம் முன்னாடி வந்தா என்ன, அவங்க 'கருப்பு' போயிடுமா? " என்றான் சின்னி ஜெயந்த். "அட கர்மம் பிடிச்சவனே, ஒரு லெட்டர மாத்திப் போட்டு உயிரை வாங்கிறியே,உன் பேர எவனாவது மாத்திப் போட்டு கூப்பிடப் போறாங்க ஒரு நாளு,அப்ப தெரியும்"  என்று முறைத்த சரவணன், சின்னியையும் , குகனையும் , வாங்கடா ,பஸ் போயிரப் போகுது " என்று நினைவு படுத்தினான்.

அவர்கள் மூவரும் பஸ்சில் ஏறி ,கடைசி இருக்கையில் அமர்ந்தார்கள்.
பஸ் வேகமெடுத்து நகர ஆரம்பிக்க, ஒரு பெண்ணின் செல் போன் ,
"மாமா , நீங்க எங்க இருக்கீங்க" என்று ரிங்க்டோனத் தொடங்கியது.
உடனே சின்னி வேகமாக , "இங்க தான் கடைசி சீட்ல இருக்கேன் புள்ள" என்று டைம் பார்த்து எடுத்து விட , கண்டக்டர் உள்பட பயணிகள் அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.

பஸ் அந்த மூவரையும் அவர்கள் படிக்கும் கோ-எட் காலேஜுல் உதிர்த்து விட்டு சென்றது. அங்கிருந்த மற்ற வகுப்பு நண்பர்களுடன் அவர்கள், சிரித்து பேசிக் கொண்டு, கடிகாரம் 8.30  - ஐ தொடுவதற்கு காத்திருக்கத் தொடங்கினார்கள்.

மணி 8.30 ஐத் தொடவும், மாணவிகள் வரத் தொடங்க ஆரம்பித்தார்கள்.அவரவர்கள் அவர்களுக்கு பிடித்த கேங்குடன், ஐக்கியமாக ,அப்பாவின் ஸ்கூட்டரில் இருந்து இறங்கிய ரம்யா,அவரை அனுப்பி வைத்துவிட்டு , இவர்கள் மூவரையும் பார்த்து ,சிரித்துக் கொண்டே வந்து , "என்னங்கடா , மச்சான்ஸ்,என்ன பண்றீங்க?" என்று கேட்டாள்.  சின்னி சும்மா இருக்காமல் , "சரவணன் ஒரு புக் படிச்சான் ,அதப் பத்தி பேசிக்கிட்டு இருக்கோம்" என்றான். அப்படியா "என்ன புக் , என்ன புக் ?"  என்று ரம்யா ஆர்வம் அடங்கமாட்டாமல் கேட்டாள்.
சின்னி - "சரவணா சொல்லுடா அத"
எனக் கேட்க ,  "நீயே சொல்லுடா சின்னி" என்று அவன் மறுக்க, "ஒண்ணுமில்ல ,பெண்கள் தலையில் பேன் பார்ப்பது எப்படி?" அப்பிடின்னு படிச்சிருக்கான்," நீ உன் தலைய கொஞ்சம் குடேன் " என்று சின்னி சொல்ல ,அவனை கையை ஓங்கி அடித்தாள் ரம்யா.

அப்போது , பக்கத்தில் இருந்த ஒரு மாணவ ஜோடியின் செயல்பாடுகள் அவர்கள் கவனத்தை ஈர்த்தது. மெதுவாக ,  அந்த ஜோடி பேசுவதை ஒட்டுக் கேட்க ஆரம்பித்தார்கள்:

 அவன்:  "என்னம்மா , ஒன்னும் பேசாம இருக்க"
  அவள்:  "உன் மேல கோபம்"
  அவன்: "ஏன், என்னாச்சு"
  அவள்: " வர வர ,நீங்க என்ன கொஞ்சுறதே இல்ல"
  அவன்: "சரி , நான் ஒரு கவித படிக்கிறேன் கேளேன்,

                   செவ்வாய் கிரகத்தில் தண்ணி இருக்கிறதா
                  என்று தேடுகிறார்கள்,
                  அவர்களுக்கு தெரியாது , நான் உன் 'செவ்வாயில்' ஊரும்
                  தண்ணீரில்  மூழ்கி, காணாமல் போய்விடும்
                  அபாயத்தில் இருக்கிறேன் என்று!

             எப்படி செல்லம் இருக்கு என்று 'திடீர்' வைரமுத்துவாக மாறினான்.

இதனை கேட்ட நம் கதையின் கதாபாத்திரங்கள் நால்வரும்,
"இன்னொரு முறை சொல்லுங்க" என்று சத்தமாக கோரஸ் பாட,அந்த இருவரும் அலறி தெறித்து  ஓடிவிட்டார்கள்.


வகுப்பு ஆரம்பிக்கும் முதல் மணி அடிக்க ,அவர்கள் நால்வரும் , கிளாஸ் -ல் நுழைந்து ,அவரவர் இடத்தில அமர்ந்தார்கள்.

சின்னியின் முன்னால் இருந்த இருக்கையில் இருந்த 'மல்லு ; குட்டி,
கொஞ்சம் ராகமாக ,ஆனால் மெதுவாக ,
  "கடலின் அக்கர போவோரே , கானம் பிறையில் போவோரே,
    போய் வரும்போ எந்து கொண்டுவரும் "  என்று பாடுவதை சின்னி கேட்டு விட்டான். உடனே , 'ரெண்டு கிலோ இருட்டு கடை அல்வா கொண்டுவரும்' என்று கடிக்க ,அவளின் அழகிய, பெரிய கண்கள் , மேலும் பெரிதாகி முறைக்க ஆரம்பித்தாள். 'விடுமா ,விடுமா ' என்று அவளை சமாதானப் படுத்தினான்  அவள் அருகில் இருந்த குகன்.


                                                                                                                                                                    

மறு நாளும் , காலை விடிந்தவுடன் , தங்கள் 'கல கல'  ஆட்டத்தை அந்த நால்வர் கூட்டணி கல்லூரி வளாகத்தில் தொடங்கியது. அப்போது சரவணன், நாய் மாதிரி முகத்தை வைத்து கொண்டு இஸ் இஸ் என்று முகர ஆரம்பித்தான். "ஏதோ ஒரு புது வாடை வருதே" என்று அவன் கேட்க, ரம்யா  வேகமாக, "இவன் கிட்ட இருந்து தான் வருது , ஏன்டா சாக்ஸ தொவடான்னு சொன்னா கேக்கிறையா? " என்று சின்னியை கை காட்டினாள். 'இல்ல ,இது ஒரு சென்ட் வாட,அவன் கிட்ட இருந்து தான் வருது , ஒரு பாட்டிலே கொட்டிருப்பானோ?' என்று முன்னால் செல்லும் அந்த மாணவனை பார்த்து கை காட்டினான் சரவணன்.

"ஹலோ , கொஞ்சம் நில்லுங்க பிரதர்" என்று அவனை ஓரம் கட்டினார்கள்.
"புதுசா இருக்கியே , பேர் என்ன?" என்று ராகிங் செய்ய முடிவு  செய்து அதட்ட,
" பரசுராம்".
"இப்ப வந்து சேர்ந்துருக்க, transfer கேஸ் தானே , என்ன அட்டூழியம் பண்ணி TC கொடுத்தாங்க" - சின்னி.
"அப்படிலாம் ஒன்னும் இல்ல " .
"சார் ன்னு சேத்து சொல்லணும், எங்க படிச்ச முன்னால?" - சரவணன்.
"** காலஜுல படிச்சேன் சார்"
"அது நல்ல காலஜ் ஆச்சே , இங்க ஏன்ப்பா வந்த?" - குகன் 
"எங்க அப்பா தான் , நான் அங்க இருந்தா கெட்டுப் போவேன்னு , அவர் பார்வையிலேயே இருக்கனுமுன்னு ,இங்க கொண்டு வந்து போட்டாரு சார்".
"அப்படியா , பெரிய வில்லனா இருக்காரே ,யாருடா உங்க அப்பா?" - சின்னி.
"இந்த கல்லூரி முதல்வர் , எஸ்.பி.கோகுல் , எங்க அப்பா"
"அடங்கொக்க மக்கா,இத மொதல்லையே சொல்லி தொலைக்க வேண்டி தானே " என்று அவனை அனுப்பி வைத்தார்கள்.

இந்த இடத்தில, கல்லூரி முதல்வர் எஸ்.பி.கோகுல் அறிமுகம் செய்து வைக்க வேண்டியது முறையல்லவா, அவர் ஒரு கண்டிப்பான முதல்வர்,மாணவர்களின் அத்து மீறல்களை  கண்காணிக்க , மாணவர்களுக்குள்ளேயே, informer வைத்து , எல்லா விசயங்களையும் கறந்து விடும் புத்திசாலி. அதுவுமில்லாமல் எப்படி  குறியீடு வார்த்தைகள் கொண்டு மெசேஜ் அனுப்புவது என்று கூட அந்த  iformar -களுக்கு ட்ரைனிங் கூட கொடுத்து வைத்து ,மிகவும் புத்திசாலிதனமாக  நடந்து கொள்வதாக நினைக்கும்  ஒரு பிறவி. அவ்வாறு அவர் வைத்த informer களில் ஒருவன் தான் - விஷ்ணு. அவன் , இந்த கதையின் ஆரம்பித்தில் சொன்ன நால்வர் படிக்கும் அதே வகுப்பில் படிப்பவன். விஷ்ணுவுக்கும் ,
அந்த நால்வருக்கும் ஆகவே ஆகாது, முன்னாளில் ஏற்பட்ட ஏதோ ஒரு 'சில்லறை மேட்டர்' தகராறால்.

பரசுராம் , வேற மேஜர் எடுத்திருந்தாலும் , இந்த நால்வர் கூட்டணியில் மெதுவாக தன்னை இணைத்து கொண்டு 'ஐவர்' கூட்டணி ஆகி விட்டான். ஆரம்பத்தில் , ரம்யா அவனிடம் அவ்வளவாக ஒட்டவில்லை.

ரம்யா ஏதோ ஒரு காரணத்தினால் அன்று கல்லூரி வரவில்லை. அந்த நால்வரும் ,கல்லூரி எதிரே இருந்த , 'நாயர்' கடைக்கு ,  சாயா அருந்தச் சென்றார்கள்.  "டே மாப்ள ,நோட்டு வச்சிருந்தா , ஒரு சிகரட் வாங்குடா" என்றான் சரவணன்,பரசுராமை பார்த்து. "எனக்கு ஒரு வட" என்று சின்னியும்
சொல்ல ," டே மச்சான் , என்ட்ட, புக் வாங்க எங்க அப்பா கொடுத்த ,500 ரூபா தாண்டா இருக்கு , அது புக் வாங்கவே சரியா இருக்கும்டா " என்று மறுத்தான் பரசுராம். "டே குகா,போயி நாயர்ட்ட எல்லாருக்கும் ஒரு 1 பை 
2 டீ மட்டும் சொல்லுடா என்று கடையின் உள்ளே அனுப்பி விட்டு ,இவர்கள் வெளியே நின்றார்கள்.

உள்ளே போன குகனிடம் , "ஏற்கனவே அக்கவுண்டுல நெறைய balance இருக்கு " என்று நாயர் கடுப்படிக்க ஆரம்பித்தார். குகன் அவரிடம் கெஞ்சி கூத்தாடி , நான்கு கப்களில் டீ மட்டும் வாங்கி வந்தான். சின்னி எனக்கு வட வேணும் என்று சொல்லி உள்ளே போய், 'நாயர் ,இன்னும் வட வல்ல" என்று சொல்ல , நாயர் 'கரண்டி' எடுத்து காமிக்க,வெளியில் ஓடி வந்து விட்டான்.  டீ கடையில் இருந்து , "தேவதையை கண்டேன் , காதலில் விழுந்தேன்" என்று FM  ஒலிக்கத் தொடங்க, பரசுராம் , மெய் மறந்து அதை கேட்க ஆரம்பித்தான். அதனை கவனித்த மற்ற மூவரும், நைசாக அவன் பாக்கெட்டில் இருந்து , 500 ஐ எடுத்து, நாயர் கடையில் செட்டில் செய்துவிட்டு தேவையானவைகளை அள்ளிக் கொண்டு வந்து சாப்பிடத் தொடங்கினார்கள். அந்த பாட்டு முடிந்தவுடன் ,சுய நினைவு திரும்பிய ,பரசுராம் , "டே மக்கா ,வச்சுடிங்களா ஆப்பு" என்று அலறினான்.
"சரி அது இருக்கட்டும் , யார்ர அந்த தேவத" என்று துழாவினார்கள் கேள்விகளால் பரசுராமை. வேறு வழியில்லாமல் , ரம்யா தான் அது என்று போட்டுடைத்தான்.

சில நாட்களுக்கு பிறகு , சில பல ஹீரோ வேலைகள் காட்டி , ஒரு வழியாக ரம்யாவை மடக்கி விட்டான் பரசுராம்.அவர்கள் காதல் ,நாளொரு மேனி ,பொழுதொரு வண்ணமாக வளரத் தொடங்கியது.

                                                                                                                                                     

சரவணன்,குகன்,சின்னி மற்றும் ரம்யா , அவர்கள் வகுப்பில் பாடத்தை கவனித்துக் கொண்டிருக்க, பரசுராம் வெளியில் நின்று , சன்னல் வழியாக , அவர்கள் அனைவரையும் வெளியே வருமாறு சைகை செய்தான்.

வேறு வேறு காரணம் சொல்லி , ஒவ்வொருவராக, வெளியில் வந்து சேர்ந்து , "என்னடா ஆச்சு?" என்று கேட்க, பரசுராம் சொல்ல ஆரம்பித்தான்:
"எங்க அப்பாவுக்கு , நானும் , ரம்யாவும் லவ் பண்றது எப்படியோ தெரிஞ்சுடுச்சி போல , அவருக்கு அது பிடிக்கல ,அவர் குணம் உங்க எல்லாருக்கும் தெரியுமே." . "இத்தனைக்கும் நாங்க காலேஜ் வெளிய மட்டும் தான் அப்ப அப்ப ரகசியமா சந்திப்போம் ,யார் போட்டு கொடுத்தா " என்றாள் ரம்யா  கவலையுடன். சின்னியும் ,சரவணனும் ,ஒருவரை ஒருவர் பார்த்து , "எங்களுக்கு தெரியும்,அவனுக்கு இன்னிக்கி தண்ணி காட்றோம்" என்றார்கள் கோரசாக. 

                                                                                                                                                              

குகனுக்கு தெரிந்த ஒரு நண்பன் , விஷ்ணுவுக்கும் நண்பன்,அவன் மூலமாக ,  விஷ்ணுவை அன்று இரவு ,   'குஸ்பூ wines' வரவழைத்தார்கள் , ரம்யாவின் நண்பர்கள். விஷ்ணு அடித்த beer இல் , சின்னி , போதை மாத்திரை போட்டு வைக்க, அதை குடித்த விஷ்ணு இல்லாத கெட்ட ஆட்டம் போடத் தொடங்கினான். அதை ஒன்று விடாமல் குகன் செல் போனில்  படம் பிடித்துக் கொண்டான்.

மறு நாள், பரசுராம் , நண்பர்கள் நால்வரிடமும் அப்பா அவர் நண்பரிடம் போனில் பேசியதையும் ,"அவர் ரம்யாவுக்கு என்ன தொல்லை வேணா கொடுக்கலாம்,எனக்கு பயமா இருக்கு ,ஒரு வேளை ரம்யாவ காலஜ விட்டே தூக்கினாலும் கூட ஆச்சர்யப் படுரதுகில்ல"  என்று நடுக்கத்துடன்  விவரித்தான். சிறிது நேரம் யோசித்த சரவணன், 'பேசாம நான் சொல்றத கேளு, நீ நாளிக்கு காலையில , ரம்யாவ  கூட்டிட்டு போயி ,கல்யாணம் செய். இது தான் பிளான் , நாளைக்கு காலையில் பரசுராம் வீட்டுக்கு குகன் ,சின்னி நீங்க ரெண்டு பெரும்  குக னோட சித்தப்பா கார்ல போய் கூட்டிட்டு வாங்க , நானும் , என் பிரண்டு சைலஜாவும் , ரம்யாவ கூட்டிட்டு  வர்றோம் '  என்று எல்லா சினிமாவில் வரும் அரதப் பழசான ஐடீயாவைச் சொன்னான். மற்ற நண்பர்கள் அதை ஆமோதித்தனர். அதை அவர்களுக்கு தெரியாமல் ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தான் விஷ்ணு.

விஷ்ணு, உடனே ,  எஸ்.பி.கோகுல்கு போன் செய்து விசயத்தை சொல்ல ஆரம்பித்தான். கூடவே , குகனின் சித்தப்பா வீடு தன்னோட வீட்டுக்கு பக்கத்தில் இருப்பதயும் ,அந்த காரின் எண்ணை ,சிறிது நேரம் கழித்து SMS  இல் அனுப்புவதாகவும் கூறி போனை வைத்தான்.


                                                                                                                                                          

விஷ்ணு போனில் போட்டுக் கொடுத்த விஷயம்,  குகனுக்கு அவன் நண்பன் மூலமாக தெரியவும் , அவனும் ,சின்னியும்,அவனை காலேஜ் விடுதியில் வைத்து பிடித்து நோண்ட ஆரம்பிக்க, 'உங்கட்ட ஏன் சொல்லணும்' என்று அவன் போக்கு காட்டத் தொடங்கினான். சின்னி குகனின் போனில் இருந்த விஷ்ணுவின் குத்தாட்டத்தை காட்டி, எஸ்.பி யிடம் காட்டப்போவதாக மிரட்டவும், வேறு வழியில்லாமல், தான் கார் எண்ணை இன்னும் SMS செய்யவில்லை என்பதையும் சொல்லி விட்டான்.

குகன் , அவனை தப்பான கார் எண் அனுப்பச் சொல்ல ,விஷ்ணு கீழ் வரும் மெசேஜ்-ஐ அனுப்பினான்:
  
  Mr. கோகுல்,
  SW 62HF - இதுதான் குறியீடு.

  -விஷ்ணு

சரவணன்,குகனுக்கு நிலவரத்தை அறிய  கூப்பிட, அவன் , விஷ்ணு மாட்டிக் கொண்டதை கூறி ,நான் பரசுவுக்கு மெசேஜ் அனுப்பி விடுகிறேன்,கவலை வேண்டாம் என்றான். பின் , குகன், விஷ்ணுவின் போன்-ல் இருந்து ,கீழ் வரும் SMS -ஐ அனுப்புமாறு கூறி,விஷ்ணுவும் அனுப்பி வைத்தான்,அது
:

Sir,


எஸ்.பி ,கோகுலிடம் நான் தவறான குறியீடைதான் கொடுத்திருக்கிறேன் .

கவலை வேண்டாம்."

-விஷ்ணு


அதற்கு பிறகு ,குகனும் , சின்னியும் , விஷ்ணுவை , ஒரு ரூமில அடைத்து வைத்தார்கள்.அவனிடம் இருந்த செல்போனையும் பிடுங்கி வைத்து கொண்டார்கள்.

_______________________________________________________________________

விஷ்ணுவின்  மெசேஜ் -ஐ பார்த்த எஸ்.பி , கோபால் , தனக்கு தெரிந்த போலீஸ் SI  க்கு போனில் தகவல் கூற , அவர் கவலை வேண்டாம் , அவர்களை காருடன் கையும் களவுமாக பிடிக்கலாம் என்று சொல்லி விட்டார்.

போலிசார் தப்பான எண் கொண்ட காரை தேடிக் கொண்டிருக்க, அவர்கள் கண்ணில் மண்ணை தூவி விட்டு, குகனும்,சின்னியும் ,ஒரு வழியாக அந்த கோவிலுக்கு பரசுராமுடன் வந்து சேர்ந்தார்கள்.

நேரம் விரைவாக ஓடத் தொடங்கியது , ஆனால் ,சரவணனும் , ரம்யாவும் வந்தபாடில்லை. அய்யர் காத்திருந்து விட்டு , மணி பண்ணி ரெண்டாச்சு ,நல்ல நேரம் முடிஞ்சாச்சு,எனக்கு வேற appointment இருக்கு  என்று இடத்தை காலி செய்து கொண்டு போய் விட்டார்.

 அந்த மூவரும் எங்கு தேடியும் , சரவணனையும் ,ரம்யாவையும்  கண்டு பிடிக்க முடியவில்லை. வேறு வழியில்லாமல் , எஸ்.பி கோகுலிடம் சொல்ல , அவர்களை அழைத்து கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்றார் அவர்.


அவர்களுக்கு வந்த SMS களை, அங்கிருந்த SI , கம்ப்யூட்டர் மூலமாக பிரிண்ட் அவுட் எடுத்து , ரெகார்ட் ல வக்கணும் , என்று பொறுமையாக scale வைத்து கிழித்துக் கொண்டிருந்த பொழுது ,  எஸ்.பி.கோகுலின் போனுக்கு ,
விஷ்ணு விடம் இருந்து ஒரு அழைப்பு வந்தது.

SI -ஐ அதை அட்டென்ட் செய்ய, விஷ்ணு அவசரமாக,
"சார் ,இப்ப தான் தப்பிச்சேன் , உங்க வீட்டுல வந்து விசயத்த சொல்லலாம்னு போனப்ப,அங்க சரவணனும் , ரம்யாவும்  , உங்க வீடு வேலைகாரன்ட்ட ஏதோ லெட்டர் கொடுத்திட்டு அவசரமா போய்ட்டாங்க"
என்று சொல்லி முடித்தான்.

எல்லோரும் விரைவாக ,  எஸ்.பி கோகுல் வீட்டிற்கு போய் ,அந்த கடிதத்தை படித்தார்கள். அதில்:

அன்பில்லா பரசுராமுக்கு,

நம் காதல் பிரச்சினை ஆரம்பித்தவுடன் ,நீ ஒரு கோழை போல்,எங்க அப்பா வ நெனச்சா பயமா இருக்கு என்று அதனை தடுக்க , நீயாக எந்த
முயற்சியும் செய்யவில்லை. இந்த விசயத்தில் சரவணன் எடுத்த அக்கறை எனக்கு பிடித்திருந்தது. உன்னை திருமணம் செய்து ,உன் அப்பாவிற்கு நான் இரண்டாவது அடிமையாய் இருப்பதை விட, சரவணன் உடன் வாழ்வதே
என் எதிர் காலத்துக்கு நல்லது,நாங்கள் இந்த ஊரை விட்டே போகிறோம் ,தயவு செய்து எங்களை தேட வேண்டாம்" .


உன் முன்னாள் காதலி,
ரம்யா.


பரசுராம் ஒரு மூலையில் உக்காந்து அழத் தொடங்க, எஸ்.பி.கோகுல் , "கவலை படாத , நான் உனக்கு நல்ல பொண்ணு பாக்கிறேன்" என்று ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார். குகனும் , சின்னியும் , அழுவதா ,சிரிப்பதா என்று தெரியாமல் ,தலையில் அடித்துக் கொண்டே சேர்ந்து பாடினார்கள் :

"பெண் மனசு ஆழமின்னு , ஆம்பிளைக்கு தெரியும் ..."

டிஸ்கி ௦: சுத்த அபத்தம் ,இப்படி நடக்க சான்ஸ் இல்ல எனும் கலாசார காவலர்கள் , இந்த லிங்க் கொஞ்சம் படிக்கவும். இக்காலத்தில் இது வெகு சகஜம் என்று செய்திதாள்களில் வரும் செய்திகள் கட்டியம்
கூறுகின்றன.டிஸ்கி 1:  இந்த பதிவில் வரும் பெயர்கள் ,நிகழ்ச்சிகள் ஒரு கற்பனையே.
                  உங்கள் பெயர் இதில் இருந்தால் , அது எல்லாம் வல்ல அந்த         இறைவனின் விளையாட்டு என்று எண்ணி ,உவகை கொண்டு , இன்புற்று இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

டிஸ்கி 2 : அன்பு நண்பர்களே , நான் மூன்றாவது கதை எழுதி அனுப்பவா வேண்டாமா என்று ,தயவு செய்து ,பின்னூட்டத்தில் சொல்க. ஏன் எனில் , எனக்கு 'வன்முறையில்'  எப்போதும் நம்பிக்கை இல்லை.


டிஸ்கி 3: இன்னும் என்ன யோசிகிறீங்க ,மொதல்ல ஓட்டப் போட்டுட்டு ,அப்புறம் யோசனை பண்ணுங்க மக்களே!