Wednesday, May 29, 2013

தலைக்காவேரி காணோம்..

 சமீபத்தில் நான் மிக நீண்ட காலமாகவே போகவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த , கர்நாடகாவில் உள்ள கூர்க் என்ற கோடைவாசாத் தலத்திற்கு போயிருந்தேன்.

நல்ல மிதமான குளிர் , எங்கு பார்த்தாலும் காப்பி தோட்டங்கள், ரம்மியமான இயற்கை சூழல் என்று நன்றாகத்தான் இருந்தது. சரி சுத்தி என்ன பார்க்கலாம் என்று விசாரித்த போது , ஒரு பாக்கேஜ் ஆக சொன்ன இடங்களில்  'தலைக்காவேரி' என்ற இடமும் இருந்தது.

சரி , இவிங்க தான் நம்மக்குத் தண்ணி தரமாற்றயீங்க , அட்லிஸ்ட் அது வர்ற இடத்தயாவது பாப்போமின்னு கிளம்பினோம். வழியெல்லாம்  சிந்தனை , அது ஒரு நீர் வீழ்ச்சியா  இருக்கும் .என்ற நெனப்பில் , வெய்யக் காலமா போறமே , தண்ணி வருமா என்று . அப்புறம் எனக்குள் ஒரு ஆறுதல், ச்சே காவேரி எவ்வொளவு பெருசு , தஞ்சாவூறு  ஜில்லாவுக்கே தண்ணி பாச்சுற  , ஊரு கட்டாயம் நெறைய தண்ணி விழுகும் , நாம நல்லா பாக்கலாமின்னு...

ஒரு ஐம்பது கிலோ மீட்டர் கார் பயணத்திற்கு பிறகு அங்கே போய்ச்சேர்ந்தோம். நல்ல மலை சூழ்ந்த இடத்தில கோவில் போன்ற தோற்றத்துடன் பெரிய  அகண்ட படிகளாக இருந்தது அந்த இடம், சரி உள்ளதான் அருவி எங்கயோ இருக்கும் போல என்று , அந்த படிகளில் ஏறி நடந்தோம் சுற்றி இருந்த மலைகளை ரசிதுக்கொண்டே.



கொஞ்ச தூரத்திற்குப் பிறகு , ஒரு குளம் மாதிரி சுத்தி படிக்கட்டுகளுடன் இருந்தது கொஞ்சம் தண்ணி. அதைச் சுற்றி பலர் பூசை செய்து கொண்டிருந்தார்கள். நாங்கள் என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை என்று அந்த குளத்தை எட்டிப் பார்த்தோம். அங்கே தண்ணியைப் பாத்தவுடன் அதில் காசெரியும் நல்ல பழக்கம் தவறாமல் பின் பற்றியிருந்தார்கள் பலர் என்பதைக் கண்டுணர்ந்தோம்.



இவ்வளவு தானா என்று சந்தேகத்துடன்  சுற்றிப் பார்த்தால் , சிறிது தூரத்தில் ஒரு மலை உச்சியை நோக்கி செங்குத்தாக கல் படிக்கட்டு போய்க் கொண்டிருந்தது. அதில் பலர் மெதுவாக ஏறிக் கொண்டிருந்ததைக் கண்டதும் , கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டு பிடித்தது போல் ஒரு மகிழ்ச்சி எங்களுக்குள் ஏற்பட , அந்த படிக்கட்டுகளை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.

எப்படியாவது அந்த மலை உச்சியை அடைந்து , காவேரித் தாயை கண் குளிர தரிசிப்போம் என்று ஆவலுடன் ஏறத் தொடங்கினோம். சில பல படிகள் ஏறியவுடன் மூச்சு வாங்க ஆரம்பித்தது. நாம வேற பல்க் பாடியா போயிட்டதுநால , ஒரே தஸ் புஸ்.

அப்போதான் அது கண்ணில் பட்டது , அதைப் பார்த்தவுடன் , அடடா நம்ம தமிழ் ஆளுக கைவண்ணமா இந்த படிக்கட்டுகள் என்று ஒரு மகிழ்ச்சி , அதே சமயத்தில் அது மனதையும் பிசைந்தது. பாலா படத்தின் பரதேசியும் ஞாபகத்திற்கு வந்தது.  எப்படி அந்த படம் , சாதாரணக் கூலித் தொழிலாளிக்கும் , கார்பொரட்ட்டில் வேலை செய்பவருக்கும் பொருந்தியதோ, அதே போல் தான் இதுவும்.

அது என்னவா ...சொல்றேன் ....அது வேற ஒண்ணுமில்ல ,அந்த கல் படிக்கட்டில்  , தமிழில் ஒரு வாக்கியம் ,அந்த படிக்கட்டு வேலை செய்த தொழிலாளியால் செதுக்கப்பட்டிருந்தது. அது,

'சாமி எங்களுக்கு இன்னும் நெறைய கல்லு வேல கெடைக்கனும் '

கொஞ்சம் நெனச்சிப் பாருங்க , நீங்க எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும், நாமெல்லாம் என்ன கொம்பிடுறோம் சாமிகிட்ட , 'சாமி இருக்குற வேலைய விட பெரிய சம்பளமா வேலை கெடைக்கணும் , இல்லன்ன , ரெசசன் அது இதுன்னு சொல்லி தூக்கிடாம  , வேலை ஓடனும், இல்லன்ன  என் பிசினஸ்  நல்லா வளர்ந்து , இன்னும் லாபம் வரனுமின்னு தான'. இந்த தொழிலாளியும் பாவம் தன் வேண்டுதலா  இப்படி எழுதி வச்சிருக்கிறாரு ...அங்க இருக்குறப் படியப் பார்த்தப்ப ,அவர் வேண்டுதல கடவுள் நிச்சயம் நிறவேதிட்டாருன்னு தெரிஞ்சது , அவ்ளோவு படிங்க.



ஒரு வழியா மேல போனா , சுத்தி மலைகள் , கண்ணுக்கெட்டிய தூரம் வரை பறந்து விரிந்த காட்சி பரவசமாக்கியது. மனதில் தோன்றியது ஒவ்வொரு கடின உழைப்புக்குப் பின்னால் ஒரு சுக உணர்வு இருக்குமே அந்த பரவசம் எங்களுக்கு. ஆனாப் பாருங்க , தேடி தேடித் பார்த்தோம் , ஒரு அருவி கூட கண்ல தெம்படல.


எங்கே தேடுவேன் , காவேரிய எங்கே தேடுவேன்  என்று பாடிக் கொண்டே , வந்த வழியாக இறங்கி மறுபடியும்  குளத்துக்கே போயி , எங்கள் விசாரணையை ஆரம்பித்தோம். அதில் கிடைத்த தகவல்...அந்த குளம் தான் தலைக் காவேரி.  மற்றும் அது குளம் அல்ல , அது ஒரு தண்ணீர் ஊற்று ..அந்த ஊற்றுதான் சிறுக சிறுக பெருகி ஓடி , அவ்வளவு பெரிய ஆறாக மாறி , நம் தமிழ் நாடு வரை வருகிறது என்று ...இயற்கையின் ஆச்சர்யமே என்றும் புதிர் தானே...

நன்றி வணக்கம்.

2 comments:

  1. நான்கூட ரொம்ப நாளா கூர்க் செல்ல திட்டமிட்டிருந்தேன் ..இன்னும் சான்ஸ் அமையல

    ReplyDelete
  2. .இயற்கையின் ஆச்சர்யமே என்றும் புதிர் தானே...!!!!

    ReplyDelete

படித்தது பிடித்தால் நண்பர்களுக்கு என் பதிவை, மறக்காமல் ,மறக்காமல் அறிமுக படுத்துங்கள்,அப்படியே ,எனக்கும் உங்கள் முத்தை உதிர்த்து விட்டு சென்றால் நானும் பதிவுலகில் பணக்காரன் ஆவேன் உங்கள் தயவில் :-)