Tuesday, November 29, 2011

லீவ் லெட்டர் தேவை இல்லை இனிமே!


"ஸ்கூல் பஸ் வர்ற டைம் ஆச்சு,  சீக்கிரம் சாப்பிடு சனியனே" என்று அவசர அவசரமாக குழந்தையின் வாயில் திணித்து முழுங்கச் செய்யும் தாய்மார்களை நீங்கள் நிஜத்தில் பார்த்திருக்கக் கூடும்.

'அய்யய்யோ , ஆபிஸ் பஸ் வர்ற டைம் ஆச்சு' என்று அவசரம் அவசரமாக முழுங்கி முழுங்காமல் தின்று விட்டு காலையில் பஸ்ஸை பிடிக்க ஓடுபவர்கள் நீங்கலாக கூட இருக்கக் கூடும்.

'ச்சே போன மாசம் தான் இந்த பேன்ட் , புதுசா வாங்கினேன், அதுக்குள்ள இடுப்புல டைட்டு ஆயிடிச்சே' என்று கஷ்டப்பட்டு அந்த பாவரைட் பேண்டை மாட்டிக் கொண்டு ஊர் சுத்த கிளம்புபவர்களும் உண்டு.

'ஆந்த்ரா மெஸ்சுல, பிரியாணி சும்மா கார சாரமா இருக்கும்' அப்பிடின்னுட்டு வாரா வாரம் போய் வெளுத்து வாங்குபர்கள் பல பேர்.

'ஒரு நாளைக்கு எனக்கு நாலு காப்பி குடிச்சாதான் எனக்கு வேலையே ஓடும்' என்போர் பலர்.

எனக்குத் தெரிந்த நண்பர்  வீட்டிற்கு போயிருந்தேன். காலையில் இருந்து பேசிக்கொண்டிருந்து விட்டு, லஞ்ச் டைம் வந்தவுடன், அவரின் அம்மா சுவையான உணவை பரிமாறினார்கள். நன்றாக சாப்பிட்டு முடித்து, அரட்டையை தொடர்ந்த போது, நண்பரின் அம்மா, 'பேசினது போதும்,போய் கொஞ்ச நேரம் தூங்கி எந்திரிங்க' என்று சொன்னார். நான் , 'இல்லம்மா ,சாப்பிட்டவோடனே படுக்குற பழக்கம் எனக்கு இல்ல' என்றேன். அவர் என் அம்மா என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு, 'ஏ உடம்பு வச்சுரும்முன்னு பயமா, நாங்கெல்லாம் ஒரு அரை மணி நேரம் படுத்து ரெஸ்ட் எடுப்பது வழக்கம்' என்றார்.


மேல சொன்ன உதாரணங்கள் எல்லாமே  சாதாரணமாக நடப்பவை தானே என்று இதுவரை நாம் அலட்சியப்படுதியவர்களாக இருந்தால் , இனிமேல் அப்படி அட்லீஸ்ட் செய்யாமல் இருப்பது நலம்.

ஏன்னு கேட்குறீங்களா? ஏன்னா ,  நம் ஜீரணத்தை பாதித்து , நமக்கு 
வயத்து உப்பிசம்,ஏப்பம்,வாயு, வயித்தில் எரிச்சல் அப்புறம் வாந்தி இப்படி பல வயித்துக் கோளாறுகள உண்டு பண்றது மேல சொன்ன மாதிரிக் காரணங்களால் தானாம்.


தல வலியும், வகுத்து வலியும் அனுபச்சவங்குளுக்கு தெரியும் அதோட பவர் என்னென்னு.

மறுபடியும் சொல்லறேன் , கிழே சொன்ன மாதிரி நடந்து கொண்டால், வயித்து உபாதைகளில் இருந்து பெரும்பாலும் தப்பிசிகிடலாமாம்.


1 . உணவில் நிதமும் நீர் மோர் அல்லது தயிர் சேர்த்துக் கொள்ளுங்கள். ஏன்ன, அதுல இருக்குற பாக்டீரியாக்கள் , நம் செரிமானப் பாதையை சென்றடைந்து , அங்கே தங்கிக் கொண்டு நமக்கு நல்லது பண்ணுமாம்.

2 . சாப்பிட்டு முடித்தவுடன்,சாய்ந்து உக்காருவதோ அல்லது லேசா கட்டய கொஞ்சம் சாய்ப்போம் என்பதோ கூடாது. அப்படி சாஞ்சி படுதீங்கன்ன அது அஜீரனத்துல கொண்டு போய் விட்டுடும். உணவு உண்ட பின்,குறைந்தது இரண்டு அல்லது மூன்று மணி சென்று தான் படுக்கைக்கு போகணும்.

3 . எதை சாப்ட்டாலும் மெதுவா அவசரம் இல்லாம , ரசிச்சு , ருசிச்சு சாப்பிடுங்க. நம்ம அவ்வை பாட்டி சொன்ன மாதிரி, 'நொறுங்கத் தின்னுங்க'.
அவசரம் அவசரமா சாப்பிடுரப்ப , காத்து உள்ள போய், அப்புறம் உங்க ஜீரண செயல்பாட்டை ஒரு வழி பண்ணுமாம்.

4 . நல்லா நார் சத்து இருக்குற உணவா சாப்பிடுங்க. இல்லேயின்ன காலைல டாயிலேட்ல முக்கல் முனகல் தான் பண்ணனும்.

5 . அடிக்கடி காபி , கோக் , கட்டிங் போடுறது, அப்புறம் கண்ல தண்ணி வர்ற அளவுக்கு உஸ் உஸ் ன்னு சொல்லிக்கிட்டு நல்ல மசால் , காரம் மிகுந்த உணவுகளை சாப்பிடுவதும் அஜீரணத்தில் கொண்டு போய் விட்டு , ஜெலுசில தேட வச்சிரும்.

6 . இடுப்ப இறுக்கிப் பிடிக்குற பேன்ட் , அல்லது பெல்ட நல்லா இறுக்கி கட்டுறது கூடாது. அப்படி செஞ்சா , ரொம்ப நேரம் உங்க வயிர அழுத்தம் கொடுத்து, உள்ள இருக்குற செரிமான ஆசிட் நெஞ்சுக்கு ஏறி அப்புறம் நெஞ்செரிச்சல் தான். சமயத்துல ஹார்ட் அட்டாக் ரேஞ்சுக்கு பயம் குடித்திடும்.

டிஸ்கி:  உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தாலும் இன்னொரு தடவ ஞாபகப்படுத்துனதா நெனச்சுகொங்க.  (ஆகா நாமளும் உடல் நல பதிவு போட்டாச்சு.)

Sunday, November 27, 2011

நீங்கள் iPhone ரசிகரா?

செல் போன், கேமரா, MP3 பிளயர் என்று தனித்தனியாக இருந்த சாதனங்களை ஒன்றிணைத்து ஒரே சாதனத்தில் வழங்கியது மட்டுமிலாமல் , வெறும்  பட்டன்களை கஷ்டப்பட்டு அழுத்திக் கொண்டிருந்தவர்களை விரல்களால் திரையில் தடவவிட்டு விரும்பிய அப்ளிகேஷனை உடனே ஓபன் செய்தது, இதனை வைத்திருந்தாலே ஒரு பெருமை என்று கர்வம் கொள்ளச் செய்தது என்று ஆப்பிளின் iPhone இன் கவர்ச்சிக்கு கட்டுப்பட்டவர்கள் இந்த உலகத்தில் நிறைய பேர்.

ஆப்பிளின் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ் இறந்தபிறகு, இந்த மாதிரி தொழில்நுட்ப உலகத்தை புரட்டிப் போடும் வித்தைகள் அந்த கம்பனியின் மூலமாக தொடருமா என்று ஐயத்துடன் இருப்பவர்கள் அதன் ரசிகர்கள்.
இன்று நாளிதழில் படித்த ஆப்பிளின் அடுத்த அட்டாக் என்ன என்பதை படித்தவுடன் ஸ்டீவ் ஜாப்ஸ் ஆரம்பித்து வாய்த்த அந்த ஸ்பிரிட் இன்னும் அந்த கம்பனியில் குறையவில்லை என்றே தோன்றுகிறது.

அதற்கு முன், நீங்கள் நான் முன்பு பதிந்த 'ஓடி ஓடி விளையாடலாமா' ( Link)பதிவில் குறிப்பிட்டபடி, Microsoft XBOX 360 , எப்படி நம் உடல் அசைவை புரிந்து கொண்டு அதன் மூலம் நம்மை விளையாட்டை கண்ட்ரோல் செய்ய உதவுகிறது என்றேன் அல்லவா?

நம்  இந்தியர் ஒருவர் (தமிழர் மாதிரி இருக்கிறார்), "வெறும் விளையாட்டை மட்டும் தான் கண்ட்ரோல் செய்ய வேண்டுமா? ஏன் நம் உடல் அசைவின் மூலம் TV சானலை கண்ட்ரோல் செய்யக் கூடாது?" என்று உக்கார்ந்து யோசித்து, அந்த XBOX இல் கொஞ்சம் மாடிபை செய்து, கை அசைவின் மூலம் சானல்களையும், சவுண்ட் வால்யுமை கூட்டி குறைக்கும் அழகை இந்த Linkல் போய் பாருங்கள்.


இந்த மாதிரி வந்துவிட்டால், இனி "அந்த ரிமோட் எங்க போச்சு?" என்று தேட வேண்டியதில்லை. உக்கார்ந்த இடத்தில இருந்து எழுந்து ஒரு ஸ்பெஷல் போஸ் அல்லது டான்ஸ்  கொடுத்து தேவையானவற்றை செய்து கொள்ளலாம்.(எங்கள் வீட்டில் காணமல் போன ரிமோட் தேடுவதே ஒரு பெரிய போராட்டமாக இருக்கும்.)


நேற்று சிங்கையில் நடந்த தொழில்நுட்ப கண்காட்சிக்கு போயிருந்தேன். அங்கே SONY யின் புதிய Tablet PC ஐ பார்த்தபொழுது ,அதனை கூட ரிமோட் கண்ட்ரோல் மாதிரி உபயோகப் படுத்திக் கொள்ளலாம் என்று விளக்கினார்கள். மேலும் அந்த டாப்லெட் இல் பார்க்கும் எந்த ஒரு விடியோவையும் உடனே உங்கள் TV க்கு வயரில்லாமலே அனுப்பி வைத்து பெரிய TV திரையில் பார்த்துக் கொள்ளலாமாம்.(பெரிய சைஸ் ரிமோட்)

சரி ஆப்பிளின் லேட்டஸ்ட் கண்டுபிடிப்பு செய்திக்கு வருகிறேன். நான்  இது வரை சொன்ன  உடல் அசைவின் மூலம் டிவியை கட்டுப்படுத்தும் விஷயம்  பார்த்தோமல்லவா ,கிட்டத்தட்ட அதே விஷயம் ஆனால் கொஞ்சம் வேறு வேறு விசயங்களையும் கொண்டு புதிதாக iTV தயாரிக்கும் முயற்சியில் ஆப்பிள் இறங்கியுள்ளது.

உங்கள் உடல் அசைவின்(Gesture) மூலம் உங்களின் பர்சனல் வீடியோக்களை எடிட் செய்வதும், அதனை வேறு வேறு சாதனங்களுக்கு தூக்கிப் போடலாமாம்.(அதாவது காப்பி செய்வது மற்றும் பல.)

நீங்கள் iTV முன் நின்று கொண்டு உங்கள் நண்பர்களுடன் எடுத்த போட்டவை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்த iTV உங்கள் முகத்தை மேட்ச் செய்து உடனே, அதனை எந்தவிதமான டச் அப் செய்வதோ , இல்லை உங்களை மட்டும் அந்த போட்டோவில் இருந்து வெட்டி எடுத்து தனியாக சேமிக்கவோ ,  அல்லது அந்த ஒரிஜினல் போட்டோவை உங்களின் தனி ஆல்பமாகவோ செய்யமுடியுமாம். அதாவது நீங்கள் செய்யும் போடோசாப் வேலைகள் அனைத்தையும் டிவியின் பெரிய திரையில் பார்த்துக் கொண்டே, உங்கள் கை , உடல் அசைவில் செய்து கொள்வது.

மேலும் நீங்கள் TV யைப் பார்த்து கத்தலாமாம், டிவி அதனைப் புரிந்து கொண்டு உங்கள் கட்டளையை உடனே நிறைவேத்துமாம்.
iPhone ,iPad ஐ காப்பி அடித்து இப்போது பல புதிய ப்ராடக்டுகள் சந்தைக்கு வந்துவிட்டதால், ஆப்பிள் இந்த iTV யில் வேறு என்ன புதுமைகள் இருக்கிறது என்று முழுதும் வெளியிடவில்லை.

அமெரிக்காவில் இருக்கும் செட் டாப் பாக்சுகளைக் கொண்டு , ரிமோட் மூலமாக விளம்பரங்களை ஓட்டிவிட்டு, உங்கள் விருப்பமான நாடகங்களின் காட்சிகளை மட்டும் பார்த்துக் கொள்ளும் வசதி இப்போது உள்ளது.

அதே பாணியில் இந்த iTV யிலோ அல்லது அது மாதிரி எதிர்காலத்தில் வரும் டிவி யில் , நீங்கள் TV யில் குடும்பத்துடன் படம் பார்த்துக் கொண்டுருக்கும் பொழுது , ஏதாவது விரசமான சீன்கள் வந்தால் , "ஐயோ குழந்தைகள் பார்த்து விடப் போகிறார்களே" என்று நெளிய வேண்டியதில்லை. ஜஸ்ட் எழுந்து ஒரு 'சைகை குத்து' விட்டு அடுத்த காட்சிக்கு ஓட்டிவிடும் நாள் தொலைவில் இல்லை.

இதை எழுதும் பொழுது, 'தாவணி கனவுகள்' படத்தில்  , தங்கைகளுடன் சினிமாவிற்கு போகும் பாக்கியராஜ், தன் தங்கைகள் திரையில் வரும் விரசக் காட்சிகளை பார்க்கக் கூடாதென்று,
சில்லறை காசுகளை வேண்டுமென்ற கீழே போட்டுவிட்டு அவர்களை சாமர்த்தியமாக எடுக்க வைக்கும் காட்சியும் நினைவில் வந்து போகின்றது.
 

Friday, November 25, 2011

பள்ளிக் கூடம் போகலாமா?

அன்புள்ள நண்பர்களே , வாசகர்களே, நீங்களோ உங்களுக்குத் தெரிந்தவரோ பள்ளி செல்லும் குழந்தைகள் வைத்திருப்பவர்களா? அந்த குழந்தைகள் படிப்பதை  நினைவு வைக்க ஒரு எளிய டெக்னிக் சொல்லிக் கொடுக்கப் போகிறேன். இந்த டெக்னிக் உங்களில் சில பேருக்கு ஏற்கனவே தெரிந்திருக்கலாம். ஆனால் ஒரு சிலருக்கு தெரியாமல் இருக்கலாம் , அவர்களுக்கு உதவலாமே என்ற எண்ணத்தில் தான் இந்த பதிவு.

அந்த டெக்னிக் சொல்லிக் கொடுக்கும் முன், கொஞ்சம் 'பிளேடு' போட்டுக் கொல்கிறேன். நீங்கலாம் எப்படின்னு தெரியல, நாங்க படிக்குரப்ப , படித்ததை நினைவு வைத்து தேர்வில் வாந்தி எடுக்கும் முறை தான் எங்களுக்கு கற்பிக்கப்பட்டது. ஆனால் படித்ததை எப்படி மறக்காமல் வைத்திருக்கலாம் என்று எந்த வாத்தியும் சொல்லிக் கொடுத்ததில்லை. சும்மா மேம்போக்காக 'புரிஞ்சி படி , ஞாபகம் வரும்' என்றே சொல்லுவார்கள். பிரச்சினை என்னென்ன,
'மொதல்ல புரிஞ்சா தான'.  சில சமயம் அப்படியே புரிந்து விட்டாலும் , அதென்ன மாயமோ ,மந்திரமோ தெரியல, பரிச்சையில் ஆன்ஸ்வர் எழுதும்போது மட்டும் சீக்கிரத்தில் வந்து தொலையாது.


நாம் நினைவில் வைத்து நன்றாக எழுத வேண்டும் என்று பெற்றோர் முதல் ஆசிரியர் வரை கையில் எடுக்கும் ஆயுதம் 'பிரம்பு'. அதிலும் எங்கள் பள்ளியில் ஒரு ஆசிரியர் இருந்தார். அவர் பசங்களை அடிக்க வேண்டும் என்பதற்காகவே ஸ்பெஷல் ஆக பிரம்பு கொண்டுவருவார். என்ன ஸ்பெசல் என்றால், நல்ல மூங்கில் பிரம்பை எங்கிருந்தோ வாங்கி , அதை எண்ணையில் ஊரப் போட்டு , கொண்டுவருவார். அப்போது தான் அடி சும்மா வீச்சு வீச்சுன்னு விழுமென்று.
இவ்வளவு யோசித்து பிரம்பு தயாரித்த ஆசிரியர் , அந்த நேரத்தை கொஞ்சம் உபயோகமாக செலவழித்து , பசங்களுக்கு எப்படி ஈசீ யா சொல்லித் தரலாம் என்று கொஞ்சம் உக்காந்து யோசிச்சு இருக்கலாம்.

ஆசிரியர் மட்டும் அல்ல, அம்மா ,அப்பா ,எல்லோருமே சொல்லும் சப்பைக் கட்டு, 'அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவமாட்டான்', உண்மையில் இதன் அர்த்தம் வேறென்று தெரிந்து இருந்தாலும் , விடாமல் சும்மா வெளுத்து வாங்கிவிடுவார்கள் தம் பசங்கள் படிக்கவில்லை என்றால்.

நேற்று ஒரு பத்திரிக்கையில் படித்த செய்தி. தென் கொரியாவில் இப்படித் தான் ஒரு அம்மா , தன் மகன் சரியாக மார்க் வாங்கவில்லை என்றால் கையில் கிடைத்ததை எடுத்து அடிப்பாள் போலிருக்கிறது. அவள் மகன் பதினெட்டு வயதானவன், சமீபத்தில் நடந்த மாதிரி கல்லூரி நுழைவுத் தேர்வில் எடுத்த ஸ்கோர் அம்மாவின் கண்ணில் பட்டால் அடி பின்னி விடுவாள் என்று , அந்த ஸ்கோரை கொஞ்சம் மாற்றி ஏழு லட்சம் பேரில் , அறுபத்தி ரெண்டாம் இடத்தில் வந்தது போல மாற்றிக் கொண்டுபோய் , பெருமையாக காட்டி உள்ளான். ஆனால் அவன் அம்மாவோ அந்த ரேங்க் பத்தாதென்று அவனை பேஸ் பால் மட்டையிலும்,கால்ப் மட்டையுலும் அடி பின்னோ பின்னியிருக்கிறாள். வெறுத்துப் போன அந்த பய்யன், அவளை கத்தி எடுத்து கொலை செய்து விட்டான். பின் பயந்து போன அவன், கடந்த எட்டு மாதமாக அவள் உடலை தன் படுக்கையின் கீழே மறைத்து வைத்து வந்துள்ளவன் இப்போது போலிசின் கையில்.

என் பக்கத்து வெட்டுப் பெண் சரியாக படிக்கவில்லை என்று , அவளின் பாட்டி விறகுக் கட்டையால் அடிப்பதை நான் கண்டுள்ளேன். 'முருகா , இன்னைக்கி எந்த வாத்தியார் கிட்டயும் , பிரம்படி வாங்கக் கூடாதென்று'  முருகனுக்கு ஸ்பெஷல் பிரையர் செய்து விட்டு பள்ளிக்கு போன நாட்களை நினைத்தால் இப்பொழுது நினைத்தால் சிரிப்பு வருகிறது.

 எனக்குத் தெரிந்த வரையில் , இப்பொழுதும் பெரும்பாலான பள்ளிகளில் அடிக்கும் முறை முற்றிலும் ஒழியவில்லை. என் எண்ணம் தவறென்றால் , அதற்காக முதலில் மகிழ்ச்சி அடைபவன் நானே. இதை படிக்கும் வாத்தியார்கள் யாராவது இருந்தால், நீங்கள் அவ்வாறு இல்லை என்றாலும் வேறு யாராவது இருந்தால் அவர்களிடம் பக்குவமாக எடுத்துக் கூறுங்கள் ,பிள்ளைகளை அடித்து அவர்கள் மனதில் படிப்பை பற்றி ஒரு பயத்தை உருவாக்காதீர்கள். ஏதோ சொல்லுவாங்கள்ள, 'கடவுள் மேல அன்பு இருக்கணும், பயம் இருக்கக் கூடாது'. அது மாதிரி , 'படிப்பு மேல ஆர்வம் வரச் செய்யணும் , பயம் வரச் செய்யக் கூடாது'.

சரி அந்த டெக்னிக் என்னவென்று சொல்லுகிறேன். அதருக்கு முன் ஒரு சிறிய டெஸ்ட். நீங்கள் பின் வரும் வார்த்தைகளை நினைவு வைக்க வேண்டும்.ஐந்து நிமிடம் உங்களுக்கு டைம்.
     சிறுமி
     பானை
     தவளை
     பயம்
      யானை
      பாம்பு
      நாய்
      சிறுவன்
      சைக்கிள்
       கார்
       மரம்
       பழம்
       மயக்கம்
       டாக்டர்

என்ன மனப் பாடம் செய்து விட்டீர்களா? இப்ப உங்களுக்கு ஒரு கேள்வி, பழத்துக்கு இரண்டு வார்த்தை முன்னால் என்ன வார்த்தை இருந்தது? சைக்கிளுக்கு அடுத்து வந்த வார்த்தை என்ன?  நீங்கள் 'கார்' என்று பார்க்காமல் சொல்லி இருந்தால் நீங்கள் கெட்டிக்காரர்கள். இருந்தாலும் நான் சொல்லும் டெக்னிக் உங்களுக்கு தெரிந்து இருக்கவில்லை என்றால் , நான் முதலில் கஷ்டப் பட்டதை போல் நீங்களும் கஷ்டப்பட்டு தான் கண்டுபிடித்து இருப்பீர்கள் என்பது நிச்சயம்.

சரி ,இதோ அந்த டெக்னிக். கொடுத்த வார்த்தைகளை கோர்த்து உங்கள் சொந்த கற்பனயில் ஒரு கதை உருவாக்குங்கள். உதாரணமாக :

ஒரு சிறுமி தின்பண்டம் எடுபதற்காக பானையில் கைவிட்டாள்.அதிலிருந்து ஒரு தவளை வெளியே தவ்வியது. அவளைப் பார்த்த தவளை பயத்துடன் வெளியே ஓடியது. அப்பொழுது ஒரு யானை அதை துரத்த ஆரம்பித்தது. ஓடிய தவளையை பாம்பு கவ்விப் பிடிக்க ,அந்த பாம்பின் வாலை ஒரு நாய் கடித்தது .
நாயை பார்த்த சிறுவன் சைக்குளுடன் கீழே விழ ,அங்கே வந்த கார் அவன் மேல் மோதாமல் ஒரு மரத்தின் மீது மோதியது. அப்பொழுது மரத்தில் இருந்து ஒரு பழம் டிரைவர் தலையில் விழுந்து அவன் மயக்கமாக , அங்கிருந்த கூட்டம் அவனை டாக்டரிடம் கூட்டிச் சென்றது. 
நீங்கள் உங்கள் குழந்தையை அவர்களாகவே ஒரு கதை உருவாகச் சொல்லவேண்டும் . இல்லையென்றால் உங்கள் கதையை அவர் நினைவு வைக்க தொடங்கி நிச்சயம் மறந்து விடுவார். அப்புறம் 'உள்ளதும் போச்சு லொள்ளக் கண்ணா' தான்.

டிஸ்கி:
இதை எந்த ஒரு பாடத்திருக்கும் உபயோகிக்கலாம். இணையத்தில் இது போல் ஆயிரக் கணக்கான டெக்னிக்குகள் நிறைந்துள்ளன. நடிகை அஞ்சலி ,நடிகர் ஜெய்யை காதல் செய்கிறாரா என்று ஆராய்ச்சியை விட , இதைப் போன்ற விசயங்களுக்கும் கொஞ்சம் நம்ம பிளாகில் எழுதலாமே என்று போட்டுள்ளேன். எப்படி என்று கருத்துச் சொல்லுங்கள் ,அதே சமயத்தில் இந்த டெக்னிக்கை பிறருக்கும் கற்பியுங்கள் ஒகே வா?

Monday, November 21, 2011

கடலை போடுவோருக்கு சமர்ப்பணம்!

"சார் முடிவா என்ன சொல்ல வர்றீங்க?" - சீட்டின் நுனியில் பாதி உக்காந்து உட்காராமல் அருள்.
"இத பாரு அருள் , நீ என் மகள் திவ்யாவ ரெண்டு வருசமா காதலிச்சி இருக்கலாம். அதுக்காக வேலை இல்லாத உனக்கு என் பெண்ணை கட்டி வச்சி, அவ வாழ்க்கை  மோசமாக அமைய நான் சம்மதிக்க மாட்டேன்,நீ போகலாம்" - திவ்யாவின் அப்பா வேதாசலம்.

"சரி,திவ்யாவ வெளிய வரச் சொல்லுங்க,நான் அவ கிட்ட பேசணும்".
"அவ இங்க இல்ல, அவள பாட்டி வீட்டுக்கு போகச் சொல்லிட்டேன்".
"சார்,ஏன் பொய் சொல்றீங்க,நான் அவ மொபைல் எடுக்காம வெளிய எங்கயும் போகமாட்டான்னு எனக்கு நல்லாத் தெரியும்." என்று டிவி யின் அருகில் 'கை'  போன்ற அந்த செல்போன் ஸ்டாண்டில் அவள் போன் இருப்பதை சுட்டிக் காட்டினான்.

திவ்யா வேறு வழியில்லாமல் சமையல் கட்டில் இருந்து வெளியில் வந்து அப்பாவின் அருகில் தயங்கி நின்றாள்.
 "திவ்யா,உனக்கே தெரியும், நான் இவ்வளவு நாள் ஒரு சாப்ட்வேர் கம்பனியில் குப்பை கொட்டிட்டு, சரி நானே ஒரு கம்பனி ஆரம்பிக்கலாம்மின்னு தான் அந்த வேலைய விட்டேன். ஆனால் அதுவே நம்ம காதலுக்கு தடையா இருக்குமின்னு நினைக்கலே" - அருள்.

திவ்யா ஒன்றும் சொல்லாமல் அவனையே  பார்க்க,அருள் தொடர்ந்தான்:

"நான் நிச்சயம் சொந்தமா ஒரு சாப்ட்வேர் கம்பனி வச்சு பெரிய ஆளா வருவேன்,உங்க அப்பா கிட்ட சொல்லு திவ்யா"

திவ்யா என்ன சொல்வது என்று தெரியாமல் அவனையும் ,அப்பாவையும் மாறி மாறி பார்த்தாள். அப்பாவும் , அம்மாவும் நேற்று இரவு கதறியது நினைவில் வர,
"அருள், எங்க அப்பா சொல்றது கரெக்டுன்னு தோணுது,என் வாழ்க்கை வசதியா இருக்கனுமின்னு எங்க அப்பா எதிர் பார்க்குறதில தப்பில்ல" - திவ்யா

அருளுக்கு 'சுர்' என்று கோபம் வர, "ச்சே இவ்வளவு நாள் உன்கூட பழகி, உன்னைப் பத்தி நல்லா தெரிஞ்சதா நினச்சேன், இப்பதான் தெரியுது,உன்னப் பத்தி எனக்கு ஒண்ணுமே தெரியலன்னு, குட் பை" என்று அதற்கு மேல் அங்கே நின்றால் தனக்கு தான் பெரிய அவமானம் என்று 'சட்' என்று அங்கிருந்து கிளம்பினான்.

   ----((((--------------))))--------------(((----------)))-------------

சில வருடங்களுக்குப் பிறகு, அருள் எதிர்பார்த்தபடி, சொந்த கம்பெனி ஆராம்பித்தாலும், சினிமாவில் வருவது போல் ஒரே பாட்டில் பெரிய முதலாளியாக ஆவதெல்லாம் சுத்த 'ஹம்பக்' என்று பட்டு புரிந்து கொண்டான். அவனுக்குத் தெரிந்த ஒருவர், 'நம்ம ஊருக்காரர் ஒருத்தர் இங்க ஜவுளி வியாபாரத்துல கொடிகட்டி பறக்குறாரு, நீ அவரப் போயி பாரு ' என்று அவனை போகச் சொன்னார். அந்த தொழில் அதிபரின் அப்பாயின்ட்மெண்டு கிடைக்க, மறு நாள் காலைக்காக காத்திருந்தான்.

அருள் தயங்கி தயங்கி அந்த தொழில் அதிபரின் வீட்டில் நுழைந்தான். அங்கே அந்த தொழில் அதிபர் ,  தரையில் உக்காந்து சாப்பிட்டுக் கொண்டே, 42 இன்ச் LED டிவியில் ந்யூஸ் பார்த்துக் கொண்டிருந்தவர், இவனைப் பார்த்தவுடன், "வாயா அருள்,அப்படி சோபாவுல உக்காரு ,இதோ வர்றேன்" என்று கை காட்டினார்.

அந்த தொழில்அதிபர் நேராக விசயத்திற்கு வந்தார்:
"தம்பி, நம்ம கடைங்கள்ள ஆகுற வியாபாரத்துக்கு  பில் போடுறதுக்கு ஒரு சாப்ட்வேர் வச்சு இருக்கோம்.அதுல சில மாறுதல்கள் பண்ணனும், முடியுமா?"
"நிச்சயம் முடியும் சார்,என்ன மாறுதல் செய்யணும் சார்"
"கள்ளக் கணக்கு எழுத வைக்கணும்"
"புரியலையே சார்"
"அதாவது கஸ்டமருக்கு ஒரு பில், ஆனா அதுல இருக்குற தொகைய குறைச்சு காமிக்ராப்ல இன்னொரு பில்"
"சரி சார் பண்ணித் தர்றேன்" என்று மிச்ச விவரங்களையும் பேசி முடித்து தன் ஆபிசுக்கு திரும்பினான்.

"ஏன் இப்படி செய்யச் சொல்றாரு" என்று மூளையை கசக்கியவனுக்கு, கொஞ்சம் தாமதமாகத் தான் புரிந்தது, "ஓ, டாக்ஸ் தில்லு முல்லா,இப்படி தான் எல்லாரும் பெரிய பணக்காரன் ஆகுரான்களா".

   ----((((--------------))))--------------(((----------)))-------------


சிறிது நாட்களுக்குப் பின், தொழில்அதிபர் வாயெல்லாம் பல்லாக, "தம்பி ,பரவாயில்ல நான் எதிர்பார்த்த விட சீக்கிரமா பண்ணிடீங்க, நம்ம ஊர்காரைங்கன்ன சும்மாவா" என்று சொல்லியவாறே, கணிசமான தொகையை அவன் வேலைக்கு சம்பளமாக கொடுத்தார். அதுமட்டுமில்லாமல், தன் நட்பு வட்டாரத்தில் அவனை 'ரெக்கமன்ட்' செய்ய, அருளின் சாப்ட்வேர் நிறுவனம், வெகு சீக்கிரத்தில் வெற்றி நடை போடத் தொடங்கியது.

ஆபிஸ் விரிவாக்கம் மற்றும் தொழில் முன்னேற்றத்திற்காக, ஜானை வேலைக்கு சேர்த்தான். ஜானின் MBA மூளையால், மேலும் மேலும் அருளின் நிறுவனம் வளர்ச்சிப் பாதையில் டாப் கியரில் செல்லத் தொடங்கியது. ஜானிடம் எல்லா நிர்வாக பொறுப்புகளையும் ஒப்படைத்துவிட்டு, Technical விசயங்களில் மட்டும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டான் அருள்.

ஒரு நாள், ஜான், கதவைத் தட்டிவிட்டு, அருளின் அறையில் நுழைந்தான்.
"சார், நம்ம ஆபீஸ் ல லேடி ஸ்டாப் யாருமே இல்ல" ஸ்ட்ரைடாக ஆரம்பித்தான் ஜான்.
"ஆமா , நான் தான் ஆரம்பத்திலேயே சொன்னேன்ல, லேடிஸ்களப்  போட்டா,இங்க வேல செய்யற மத்த ஆம்பளைங்க, தேவையில்லாம அவங்ககிட்ட வழியுறது,அப்புறம் லஞ்சு சாப்பிட வெளிய  கூப்பிட்டு போறது, காப்பி குடிச்சி வெட்டி அரட்டையின்னு ஆரம்பிச்டுவீங்க,அதெல்லாம் நம்ம கம்பனிக்கு வேண்டாம்"
"இல்ல சார், அட்லீஸ்ட்  ரிசப்சன்ல ஒரு பெண்ணை போடுறது தான் சார் நல்லா இருக்கும், இதுவரைக்கும் ரிசப்சனிஸ்ட்ன்னு யாரையும் நாம போடல,நம்ம கம்பனி ஸ்டாப்களே மாறி மாறி கவனிச்சுக்க வேண்டி இருக்கு"
ஜானின் தொடர் தொல்லையினால் அருள் சற்றே மனம் இறங்கி "சரி ஏதாவது பண்ணித் தொலை , நான் சொன்னது ஞாபகம் இருக்கட்டும்" என்று அவனை அனுப்பி வைத்தான்.

   ----((((--------------))))--------------(((----------)))-------------

ஒரு வாரத்திற்குப் பிறகு, அலுவலகத்தில் நுழைந்த அருளுக்கு தன் கண்களை நம்ப முடியவில்லை, ரிசப்சனில் திவ்யா. அவளைப் பார்த்ததும் பழைய ஞாபகங்கள் அவனைத் துரத்த, அவளின் குட் மார்னிங் -ஐ சட்டை செய்யாமல் அவன் அறையில் நுழைந்தான். இவ்வாறே பல நாள் ஓடிக் கொண்டிருந்தது.

அவன் பிரத்யோக அறையில் நுழைந்த அருள் , இண்டர்காமில் ஜானை வரச் சொன்னான். ஜான் வந்தவுடன்,
 "ஜான், நம்ம கம்பனி மூலமா ஒரு பெரிய சாப்ட்வேர் ப்ரொடக்ட் தயாரிக்குற ஐடியாவுல இருக்கேன். நம்ம பாலன்ஸ் சீட் காமிக்கச் சொன்னனே"
"சார் இதோ இருக்கு சார்"
"அதை மேய்ந்த அருள், நம்ம கிளையண்ட்ஸ் கொடுக்கவேண்டிய பணமே நெறைய இருக்கும் போல, சீக்கிரம் கலக்ட் செய்ய ஏற்பாடு செய்ங்க,அதே மாதிரி யாரார் கிட்ட இருந்து எவ்வளவு பணம் வரணும்ங்கற லிஸ்ட் கொடுங்க, இந்த ப்ராடக்ட் செய்ய நெறையப் பணம் உடனடி தேவை "
"ஓகே சார்" என்றான் ஜான்.

   ----((((--------------))))--------------(((----------)))-------------

இரண்டு மாதங்களுக்கு பிறகு, அருளின் அறைக்கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தாள் திவ்யா.
"இவ எதுக்கு இங்க வந்தா,இவகிட்ட தான் நாம பேசறதே இல்லையே" என்று எரிச்சலுடன் அவளைப் பார்த்து "என்ன விஷயம்"  என்று கேட்டான் அருள்.
"சார் கவலைப் படாதீங்க, நான் ஒரு ரிசப்சனிஸ்ட் ஆ தான் பேச வந்துருக்கேன்" -திவ்யா
"சரி சரி,மேல சொல்லு" என்று தன் இருக்கையில் சரிவாக உக்கார்ந்து கொண்டான் அருள்.
"ஜான் பத்தி கம்ப்ளைன்ட் செய்ய வந்தேன்,டெய்லி காபி சாப்பிட வா,லஞ்ச் ல தனியா பேச வா,அப்படி இப்படின்னு ஒரே டார்ச்சர் கொடுக்கிறாரு,வேலையே செய்ய விடமாட்டேன்கிறாரு"
"சரி நான் கவனிக்கிறேன் நீ போகலாம்" என்று அவளை அனுப்பிவிட்டு, ஒரு வாரமாக ஜானின் நடவடிக்கையை கண்காணித்தான். திவ்யா சொன்னது அப்படியே நடக்க, ஜானை தன் ரூமுக்கு வரவழைத்தான்.

ஜானை கடுமையாக எச்சரித்து , "சரியாக நடந்து கொள்,இல்லை என்றால் வேலையை விட்டே தூக்கி விடுவேன்" என்று அனுப்பி வைத்தான்.

----((((--------------))))--------------(((----------)))-------------

தன் வீட்டில் கடுமையான மன உளைச்சலில் இருந்த ஜான், மன ஆறுதலுக்காக பைபிள் எடுத்து படிக்க ஆரம்பித்தான். அதில் இருந்த ஒரு விஷயம் அவனுக்கு 'டக்' என்று ஒரு ஐடியாவை கொடுக்க,திருப்தியுடன் படுக்கச் சென்றான்.

இரண்டு  நாள் சென்று, அருளின் மேஜையில் ஜானின் ரெசிக்நேசன் லெட்டர் காத்துக் கொண்டிருந்தது. அருள் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அவன் போயே விட்டான்.

சில நாட்களுக்குப் பிறகு, புதிய மானஜரை வைத்து, கணக்கு சரி பார்க்க,
கஸ்டமர்களிடம் இருந்து வரவேண்டிய பாக்கித் தொகைகள் குறைந்திருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த அருள், வங்கி பண இருப்பை சரி பார்க்க, எதிர்பார்த்த பாலன்ஸ் இல்லை.  ஒரு சந்தேகத்தில் தன்னிடம் இருந்த பழைய லிஸ்டுடன், கஸ்டமர்களிடம் கலெக்ட் செய்த விபரங்களை சரி பார்க்க, எல்லோரிடம் இருந்தும் வந்த பணம்,வர வேண்டியவற்றை விட குறைவாக இருக்க, கஸ்டமரிடம் கூப்பிட்டு விசாரித்தான்.

எல்லா கஸ்டமர்களும் ஒரே விசயத்தை ரிபீட் செய்தார்கள் போனில்:

   "உங்கள் மானஜர் ஜானின் கடிதத்தின் படி, நாங்கள் உங்களுக்குத் தர வேண்டிய தொகையில் பாதி தள்ளுபடி செய்வதாகச் சொல்லியிருந்ததால்,
நாங்கள் மீதத் தொகையை மட்டும் செலுத்திவிட்டோம்,இனி நாங்கள் உங்களுக்கு தர வேண்டிய பாக்கி எதுவுமில்லை"

கஸ்டமர்களின் நம்பிக்கையை இழக்க விரும்பாத அருள் அந்த விசயத்தை அதோடு விட்டு விட்டான்.

Saturday, November 19, 2011

நீங்கள் கோடீஸ்வரன் ஆக ஈசியான வழி!

அந்த பிரபல ஆங்கில நாளிதழில் , வரி விளம்பரங்களுக்கு நடுவில் அந்த விளம்பரம் கட்டம் கட்டப்பட்டு , கண்ணை கவர்ந்தது. 


'பணக் கஷ்டத்தில் கவலைப்படுகிறீர்களா? சம்பாரிக்கும் பணம் போதவில்லையா? அதிக பணம் சம்பாரிக்க வேண்டுமா?  எங்கள் செமினாருக்கு வாருங்கள், பணம் பண்ணும் வித்தை கத்து தரப்படும். நுழைவுக் கட்டணம் ரூபாய் பத்து மட்டுமே.'


"சரி வெறும் பத்து ரூபாய்க்கு  என்னதான் சொல்லிதராங்க போய் பார்ப்பமே" என்று போனேன். அந்த talk நடந்த இடம் ஒரு ஹோடேலில் இருந்த பெரிய கான்பெரென்ஸ் ரூமில். அந்த ரூமின் வாசலில் ஒரு டேபிள் வைத்து ,அதில் அந்த Money Guru எழுதிய புத்தகங்கள் தமிழ் மற்றும் ஆங்கில பதிப்புகளாக விற்பனைக்கு வைக்கப் பட்டிருந்தன. ஒரு முப்பது அல்லது நாற்பது என்னைபோன்ற ஆடுகள் அந்த பேச்சை கேட்டு கோடீஸ்வரன் ஆவதற்கு ஆவலுடன் காத்திருந்தோம்.  ஒரு வழியாக அந்த Money Guru மேடைக்கு வந்து மைக்கைப் பிடித்தார். 

முதலில் அவரை அறிமுகப்படுத்தும் ஒரு சிலைட் காண்பித்தார் திரையில். அதில் அவர் பெயருடன் MBBS, FRCS அப்புறம் வேற என்னவோ டிப்ளோம போட்டிருந்தது. அவர் , தான் ஒரு பிரபல டாக்டர் என்றும், லண்டனில் FRCS முடித்தவர் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார். தான் காலப் போக்கில் பல பணம் பண்ணும் வித்தைகளைக் கற்று, தான் பார்த்த மருத்துவத் தொழிலை விட்டு விட்டு , தான் கற்ற வித்தைகளை மக்களிடம் பரப்பும் உன்னதமான வேலையை முழு நேரத் தொழிலாக மாற்றிக் கொண்டதாக சொல்லி எங்களையெல்லாம் 'புல்' அரிக்க வைத்துக் கொண்டிருந்தார்.

அப்புறம் ஒரு அஞ்சு நிமிசத்துக்கு பணத்தின் அருமை பெருமைகளை சொல்லி உசுப்பேத்தி விட்டுக் கொண்டிருந்தார். அதாங்க மூளை சலவை செய்றதுன்னு சொல்லுவாங்களே. நானும் ,சரி இந்தா சொல்லுவாரு அந்தா சொல்லுவாரு அப்பிடின்னு , காது ரெண்டையும் தீட்டி வச்சு உக்கார்ந்திருந்தேன். நிறுத்தாமல் பேசிக் கொண்டே இருந்தவர் ,டக் என்று கேழே உள்ள படத்தை ஸ்க்ரீனில் காட்டினார்."உங்கள் வீட்டிலும் இந்த ஐஸ்வர்யா காளியின் பாதம் பட வேண்டுமா ?  " என்று கேட்டார்.

எல்லோரும் 'ஆமாம்' என்று தலையை மந்திரிச்சு விட்ட ஆடாக ஆட்டினோம் பலமாக.

உடனே அவர் உதவியாளர்கள் எங்கள் எல்லோருக்கும் ஒரு ரூபாய் நாணயத்தைக் கொடுத்தார்கள்.


Money Guru பேச ஆரம்பித்தார்.
"உங்கள் கையில் இருப்பது , நான் ஸ்பெஷல் ஆக , கல்கத்தா காளியின் பாதங்களில் வைத்து பூஜித்து , அதில் என்னோட பவரை எல்லாம் ஏற்றி உங்களுக்கு கொண்டு வந்துள்ளேன். இதை நீங்கள் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். உங்களை தேடி ஐஸ்வர்யா வந்து விடுவார் என்றார்.(? !!)அடுத்து இந்த வாஸ்து பகவானின் படத்தை காட்டி , நமக்கு தெரிந்த ஈசானி மூலை, வாயு மூலை என்று மேம்போக்காக சொல்லிவிட்டு, இனிமேல் தான் உங்களுக்கு செல்வந்தர் ஆவது  எப்படி என்று சொல்லப் போகிறேன் என்றார்.

வந்திருந்த அனைவரும் உச்ச கட்டத்தை அடையப் போகும் மகிழ்ச்சியில் , கவனமாக அவரை பார்க்க:

அன்புடையீர், நான் சொல்லித்தரப் போகும் வித்தைகள் மிகவும் சக்தி வாய்ந்தவைகள். அதனைப் பயன் படுத்தி பல பேர் கோடீஸ்வரன் ஆகியுள்ளார்கள். இதனை யாரும் குறைத்து மதிப்பிடக் கூடாதென்பதால் ,  நான் இதனை கட்டண அடிப்படையில் சொல்லித் தரபோகிறேன்.

இன்று மதியமும் , நாளை மதியமும் நீங்கள் கலந்து கொண்டு பயன் பெறுங்கள். இதற்கான கட்டணம் வெறும் ஆயிரம் ரூபாய் தான்" என்றாரே பார்க்கலாம்.

  'ஆஹா , இவர் நாம பணக்காரன் ஆவதற்கு வழி சொல்லுவாருன்னு பார்த்தா , அவர் ஆகுறதுக்கு சொல்றாரே " அப்படின்னு சுதாரிச்சு அங்க இருந்து ஓடி வந்துட்டேன்.

வர்றப்ப தான் அந்த ஒரு ரூபாவ பார்த்தேன் , அந்த நாணயம் புகை படிஞ்சி ரெண்டு பக்கமும் கருப்பா இருந்துச்சு.  சரி எதுக்கும் இருக்கடுமின்னு பர்ஸ்ல கொஞ்ச நாளா வச்சுருந்தேன்.

ஒரு நாள் , வெளியூருக்கு போய் விட்டு, அங்கே இருந்த பெட்டிக் கடையில் ஏதோ வாங்கிவிட்டு , பணம் கொடுக்கலாமென்று பார்த்தால், சரியாக ஒரு ரூபாய் குறைந்தது.

வேறு வழியில்லாமல் அந்த கருகிய ஒரு ரூபாய் நாணயத்தைக் கொடுத்தேன்.
அதை வாங்கிப் பார்த்த கடைக்காரர் ,
"சார் வேற காசு கொடுங்க சார் " என்றார்.
"ஏங்க, சிங்கம் தெரியுது பாருங்க, இது செல்லும்ங்க "
"சார், இதப் பாத்தா சுடுகாட்டுல இருந்து எடுத்துட்டு வந்த மாதிரி இருக்கு, எனக்கு வேண்டாம் , வேற கொடுங்க "

என் மனதில் தாரை தப்பட்டை மேளத்துடன் பிணத்தின் நெத்தியில் இருந்த ஒரு ரூபாய் நாணயம் அப்போது தான் நினைவுக்கு வந்தது.Friday, November 18, 2011

விஜயை பாதித்த 'சுறா' வின் கதை என்ன ஆச்சு பாத்தீங்களா?

வீட்டில், ஊரில் விசேஷம் என்றால் விலங்கை/பறவையை  கொன்று விருந்து படைப்பது நம்ம தொன்று தொட்ட கலாச்சாரம்.

"வராதவங்க வந்த்ருகீங்க , இருந்து விருந்து சாப்பிட்டு தான் போகணும்" என்று அவ்வளவு நாள் ஆசையாக வளர்த்த கோழியை உரித்து குழம்பு வைப்பது.

'மகள் / மகனுக்கு   காது குத்து,மறக்காம வந்த்ருங்க' என்று சொந்தங்களை எல்லாம் அழைத்து, கடா வெட்டி விருந்து வைப்பது.

'இன்னைக்கு ராவுத்தர் வீட்டுல கல்யாணம், மட்டன் பிரியாணி சூப்பர் ஆகா இருக்கும், வாங்கடா போகலாம்' என்று ரவுண்டு கட்டுவது.

விலங்கு/பறவைங்க விருந்துக்கு மட்டுமா, 'நாங்க மருந்துக்கும் பயன் படுதுவோம்ல' என்று அந்த விலங்க சாப்பிட்ட அந்த நோய்க்கு நல்லது, சிட்டுக்குருவிய லேகியம் செஞ்சு சாப்பிட்டா 'அந்த' விசயத்துக்கு நல்லதுன்னு அதையும் விடுராதா இல்ல.

இதே மாதிரி தான் சீனர்களும்.  அவங்க சூரியனுக்கு கிழே எந்த ஒரு ஜந்து நகர்ந்தாலும் அத சாப்பிட்டு பாத்துடுவாங்க. 
அந்த மாதிரி அவங்களுக்கு விலங்குகள் மேல ஒரு ஸ்பெஷல் பாசம்.


அதுலயும்  ஒரு குறிப்பிட்ட விலங்க சூப் செய்து சாப்பிடுறது அவங்களுக்கு அலாதி பிரியம். அவங்களோட வீட்டு  திருமணத்தில கட்டாயம் இந்த சூப் ஐட்டம் இருந்தாதான், அந்த விருந்தே 'தட புடலா' இருந்ததா அவங்க உறவுக்காரவுங்க மெச்சுவாங்கலாம். அதுவுமில்லாம, அந்த சூப்ப சாப்பிட்டா,
ஆண்மை வளரும், முகம் பள பளன்னு ஜொலிக்கும், ஹார்ட் அட்டாக் வர்றத தடுக்கும், கொலச்ட்டுரால் குறைக்கும், அவ்வளவு ஏன், கேன்சரக் கூட குணபடுதும்மின்னு, எந்த டுபாகுரோ , அள்ளிவிட, கேட்கணுமா, அந்த விலங்கு சூப் ஒரு காஸ்ட்லியான ஆனா தவிர்க்க முடியாத மோகமா மாறிப் போச்சு அவங்க கலாச்சாரத்துல.

நாம என்ன தான் விருந்துல  ஆடு,மாடு , கோழிய , போட்டி போட்டு கொன்னு சாப்பிட்டாலும், இன்னொரு சைடுல, அதுகள வளத்து , அதோட இனம் அழியாமா பாத்துகிடுறோம்.   ஆனால் , பாவம் , அந்த விலங்க அப்படில்லாம் தீனி போட்டு வீட்ல வளக்க முடியாது.  ஏற்கனவே, சீனவுங்க , ஜனத் தொகையில நம்மளுக்கு சரிக்கு சரியா மல்லுக்கட்டி நிக்குறாங்க. அதுல பெரும்பாலோர் , இப்படி ஒரு விலங்க 'கட்டம்' கட்டி, விடாம சூப்பு வச்சு குடிச்சா என்ன ஆகும்? அந்த இனமே அழியாதா.

அப்படிதான் ஆகிப் போச்சு இப்ப. அதுனால எல்லாரும் இப்ப கொஞ்சம் முழிசிகிட்டு , இப்படியே விட்டா, ஈக்கோ சிஸ்டத்தையே பாதிக்கும்ன்னு சொல்லி , ஒரு விழிப்புணர்வு உருவாக்கி அத தடுக்க ஆரம்பிச்சுருக்காங்க.

அந்த சூப் பேரு ,  Shark Fin சூப் .  இதுல கொடுமை என்னன்னா,  ஷார்க் மீன அவங்க கொல்ற விதம். அந்த மீனோட , Fin என்று சொல்லப் படுகிற அந்த 'இறக்கை' பார்ட்ட மட்டும் அறுத்து எடுத்திகிட்டு,அத அப்பிடியே கடல்ல போட்டுருவாங்க. அந்த மீன் பாவம் அந்த
Fin வச்சு தான் அதுனால அங்க இங்க போகமுடியும், அத கட் பண்றதால ,அதுனால சரியா நீந்த முடியாம , அப்படியே தண்ணிக்குள்ள மூழ்கி, மித்த மீன்கள் அத உயிரோட கடிச்சி சாப்பிட்டுடும்.

இந்த 'இறக்கை' விலை, ஒரு பவுண்டுக்கு முன்னூறு டாலர் ஆமாம்.
விடுவாங்களா வியாபாரிக, போட்டி போட்டு விக்கிரானுங்க.

நம்மாளுங்க சுறாவ, புட்டு போட்டு சாப்பிடுறாங்க, ஆனா சைனீசுக்கு சுறா கறி மேல அவளவா இண்டரெஸ்ட் இல்ல ,அதனால அந்த கறிக்கு அவ்வளவு மவுசு இல்லையாமாம்.

எனக்கு தெரிஞ்ச சைனீசுகிட்ட கேட்டேன்,
"சூப் எப்படி இருக்குமின்னு"
" சூப் நல்லா தான் இருக்கும் , அந்த Fin டேஸ்ட் ஓகே தான், பெருசா விசேசம் இல்ல"
"அப்புறம் ஏன் இத விழுந்தடிச்சு ரொம்ப காசு போட்டு வாங்கி குடிக்கிறீங்க?"
"எல்லாம் ஒரு கெத்துக்கு தான்".


Thursday, November 17, 2011

ரூம் போடுங்க ப்ளீஸ்!

இது நான் அமெரிக்காவில் பல வருடங்களுக்கு முன் இருந்தபொழுது நடந்தது. அப்ப நான் அமெரிக்காவுக்கு புதுசு.ஒரு நாள் அருகில் இருந்த மாலில் சுத்திப் பாத்துக்கொண்டிருந்தப்ப , அங்க ஒரு சூப்பர் கார் ஒன்ன நிறுத்தி வச்சுர்ந்தாங்க.


"என்னடா இது ,மாலுக்குள்ள கார் இருக்கேன்னு" , கிட்டப் போயி பார்த்தேன். அதுக்கு பக்கத்துல நெறைய பார்முங்க  இருந்துச்சு. வெள்ளைக்காரனுங்க அந்த பார்ம எடுத்து 'கட கடன்னு' என்னத்தையோ எழுதி பக்கத்தில இருந்த பெட்டியில போட்டுட்டு கார ஒரு தடவ ஏக்கத்தோட பாத்துட்டு போய்கிட்டே இருந்தானுங்க.

நானும் அந்த பார்ம எடுத்துப் பார்த்தேன் ,  'நீங்கள் இந்த காரை வெல்ல வேண்டுமா , உங்கள் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை பூர்த்தி செய்து , பக்கிதில் உள்ள பெட்டியில் போடுங்கள், நீங்கள் வெற்றி பெற்றால் , இந்த கார் உங்களுக்கே சொந்தம் ' என்று போட்டுருந்துச்சு.

'ஆசை யாரை விட்டது, நாமளும் போடுவோம் , காசா பணமா , சும்மா நம்ம அட்ரஸ் தான' அப்படின்னு நானும் எங்க குல தெய்வத்தையெல்லாம் வேண்டிக்கிட்டு , நம்ம திருவிளையாடல் தருமி மாதிரி , 'இந்த கார் எனக்கே ,எனக்கே பரிசு விழனும்டா எங்கப்பா'  என்று பய பக்தியுடன் அந்த பெட்டியில் தள்ளிவிட்டுட்டு ,  நானும் அந்த வெள்ளக் காரனுகள மாதிரியே பெருசா மூச்சுவிட்டுட்டு, காரையே திரும்பி திரும்பி பாத்துக்கிட்டே போனேன்.

அப்புறம் வேலை பிசியில  அதப் பத்தி சுத்தமா மறந்துட்டேன். ஒரு வாரம் கழிச்சு ,வீட்டுக்கு ஒரு கடுதாசி வந்துச்சு. 'அய்யா வாழ்த்துக்கள் , உங்களுக்கு ஆயிரம் அமெரிக்க டாலர் மதிப்புடைய வவுச்சர் அனுப்பி உள்ளோம்,அதை வைத்து எங்கள் ரிசார்ட்டில் மூன்று இரவுகள் நீங்கள் தங்கிக் கொள்ளலாம். நீங்கள் செய்யவேண்டியது , இந்த முகவரிக்கு வந்து உங்கள் பரிசினை உறுதிப் படுத்திக்கொள்ளவும்' அப்படின்னு போட்டுருந்துச்சு.


'சரி கார் தான் கிடைக்கல,போய் அங்க தங்குறத உறுதிப் படுதுவோமின்னு' ,ஒரு சனிகிழமை நம்ம 'ஓட்டைக்காரை' ஓட்டிட்டு அங்க போயி சேந்தோம்.
அவங்க கொடுத்த அட்ரசுல ,ஒரு பெரிய காம்பவுண்டு சுவர் , அதுக்குள்ள அழகா பல சின்ன சின்ன பங்களாக்கள் கட்டப்பட்டுகிட்டு இருந்துச்சு.'ஆகா சூப்பரா இருக்கே,பரவாயில்ல மிஸ் பண்ணாம வந்துட்டோம் ' அப்படின்னு மனசுல நெனைசிகிட்டேஉள்ள போயி , அங்க இருந்த வெள்ளைகாரி ஒருத்திகிட்ட விவரத்தசொன்னோம். 'அப்பிடியா,வாங்க வாங்க ,உங்களதைதான் எதிர்பார்த்துகிட்டு இருக்கோம், சீக்கிரம் உள்ள போங்க ' அப்பிடின்னு உள்ள கை காட்டி வழி சொன்னாங்க.

'டவுன் பஸ்ல சீட்டு பிடிக்கறதுக்கு  முண்டி அடிச்சி ஓடிப் போயி ஏறுவானுங்க ' பாருங்க , அது மாதிரி முண்டி அடிசிக்கிட்டி உள்ள ஓடினோம். உள்ள போயி பாத்தா, ஒரு பெரிய ஹால்.  அதுல பலூன்லாம் கட்டி ,ஏதோ பிறந்த நாள் கொண்டாடுற மாதிரி அலங்காரம் பண்ணியிருந்தாங்க.

'என்னடா இது' ,அப்படின்னு சுத்தி முத்தி பாத்தாக்க ,முக்காவாசி வெள்ளைக்காரனுங்க கிட்ட ,நம்ம கைல இருந்த மாதிரியே அந்த கடுதாசி.

அப்ப திடீருன்னு ஒரு கோட்டு சூட்டு போட்ட வெள்ளைக்காரன் ஒருத்தன் மைக்கவச்சி 'பர பரன்னு' என்னமோ பேசினான். நம்ம அப்பதான் கொஞ்சம் கொஞ்சமா அவனுக பேசுற இங்கிலீஷ் புரிஞ்சிகிட்டு இருந்த ஆரம்ப கட்டமா , சத்தியமா அவன் என்ன சொன்னான்னே புரியல.ஆனா எல்லாம் கை தட்டுனானுங்க. விசில் வேற அடிச்சானுங்க.திடீர்னு ஒருத்தன் சாம்பைன் பாட்டில் வேற ஓபன் பண்ணி பீச்சி அடிச்சான் .

நாங்க ஒண்ணுமே புரியாம , காணாம போயிட்ட ஆடு மாதிரி ,'பேந்த பேந்த ' முழிசிகிட்டே கையத் தட்டி வச்சோம். திடீர்னு அங்க இருந்த கோட்டு சூட்டு போட்டவனுங்க , கடுதாசி வச்சுர்ந்தவங்கள ஆளுக்கொண்ணா தள்ளிகிட்டு போனானுங்க.

நம்மளப் பாத்தும் ஒருத்தன் வந்தான். 'அய்யா பரிசு வாங்க வந்தயா' அப்படின்னு கேட்டான். 'ஆமாயா ,ஆமா ,எங்க எங்க ,கொடு சீக்கிரம் 'அப்படின்னு அவன்கிட்ட கேட்டோம். 'இருக்கு,ஆனா அத தர்றதுக்கு முன்னாடி ,நாங்க உங்களுக்கு எங்க கம்பனியப் பத்தி பேசுவோம் ,ஒரு ஒன் ஹவர் ஆகும்,ஓகேவா?" அப்பிடின்னு கேட்டான்.

'ஓஹ் எஸ், தாராளமா பேசு கண்ணு ,ஆனா கண்டிப்பா பரிசு உண்டுல்ல?"
"எஸ் எஸ் " அப்படின்னுட்டு ,எங்களையும் ஒரு ரூமுக்கு தள்ளிட்டு போனான் அந்த வெள்ளையன்.

ரூமுக்குள்ள வச்சு எங்க கிட்ட பேச  ஆரம்பிச்சான்.
  "நீங்க எப்படி வந்தீங்க?" - அவன்
  "கார்ல வந்தோம்"
  "என்டரன்ஸ்ல நுழையுரப்ப என்ன பாத்தீங்க"
  "அழகான வீடுங்க,பங்களாக்கள்"
  "அதுல நீங்க தங்கனுமின்னு ஆசையா இருக்கா?"
  "அடப் பாவி ,அதுக்குதாண்டா நூறு மைல் ,அவசர அவசரமா லொங்கு லொங்குன்னு கார ஒட்டி வந்து சேந்தோம்"
  "சரி,நீங்க இங்கப் பாக்குற வீடு மட்டுமில்ல , நாங்க உலகத்துல பல இடங்கள்ள இந்த மாதிரி வீடு கட்டி வச்சுர்க்கோம், பாருங்க "

அப்பிடின்னுட்டு ஒரு பைல் முழுசும் வித விதமா போட்டோ காமிச்சான்.
நாங்க ஆன்னு வாய் பிழந்து பாகுரதப் பாத்துகிட்டே,
"ஒன்னும் சொல்லட்டுமா,நீங்க நினச்சா ,நீங்களும் இதுக்கு ஓனர் ஆகலாம்" அப்படின்னு மறுபடியும் ஆரம்பிச்சான்.

நாங்க பர பரப்ப ,'எப்படி சொல்லு சொல்லு' ன்னு ஆர்வமானோம்.
'ஒன்னும் இல்ல ,அது ரொம்ப ஈசி ,  இதுக்கு பேரு டைம் ஷேர் ஹௌசிங் ரிசார்ட்ஸ், நீங்க பணம் கட்டுநீங்கன்ன , வருசத்துல நாலஞ்சு வாட்டி நீங்க இந்த வீட்டை உங்க விடுமுறைக் காலங்கள்ல என்ஜாய் பண்ணிக்கலாம், நாங்க உங்களுக்காக இந்த மாதிரி வீடுங்கள எல்லா வசதியோடவும் கட்டி ,
அதன் பராமரிப்ப பாத்துகிடுவோம்,நீங்க ஜாலியாவந்து என்ஜாய் பண்ணிட்டு போகலாம்"   அப்பிடின்னான்.
"ஆஹா ,நல்ல ஸ்கீமா இருக்கே ,எவ்வளவு ஆகும்?" கேட்டோம்.
"அதிகமில்லை" அப்ப்டின்னிட்டு பல ஆயிரம் டாலர் சொன்னான்.
"அய்யா ,நாங்க இப்பதான் அமெரிக்காவுக்குள்ள நுழைந்சிருக்கோம், எங்க கிட்ட அவ்வளவு காசு இல்ல சாமி'  சொன்னோம்,
"கவலைப்பாடாதீங்க ,நீங்க கொஞ்சம் கொஞ்சமா ,இன்ஸ்டால்மென்ட் கட்டிடுங்க" அசராம அடிச்சான் அவன்.

நாங்க பலமான யோசனையைப் போட்டுட்டு, 'இல்லையா ,வந்து,போயி,நாங்க அப்புறம் சொல்றமே' ன்னோம். அவன் மூஞ்சி கொஞ்சம் கோணலாப் போச்சி.'சரி இது தேறாத கேசு' அப்படின்னுட்டு , 'கைய' குலுக்க ஆரம்பிச்சான்.
'அய்யா இந்த வவுச்சர்' அப்படின்னோம் நாங்க விடாம , நாங்க யாரு , விடாக்கண்டன் ஆச்சே. 'வாசல்ல ஒரு அம்மாவைப் பாதீங்கல்ல, அவ கிட்ட போயி கேளு' அப்படின்னுட்டு வேற கிராக்கி பிடிக்க ஓடிட்டான் அந்த பொறம்போக்கு.

நாங்க , மீண்டும் அந்த வெள்ளைகாரியிடம் போயி ,'அம்மா எங்களுக்கு ரூம் போடுங்கம்மா, இந்த வவுச்சர்ல சொன்னபடி' அப்படின்னோம். 'oh டேட்டு சொல்லுங்க ' அப்படின்னாங்க. 'இவுங்க ரொம்ப நல்லவுங்கடா' அப்பிடின்னு நெனைசிகிட்டே , ஒரு நீண்ட வார இறுதி விடுமுறை வர்றமாதிரி ஒரு டேட்டப் பாத்து சொன்னோம். அந்தம்மா சிரிச்சுகிட்டே, 'சாரி சார் ,அது பிளாக் அவுட் டேட்டு' ,அந்த நாள்ல தங்கனும்னா , நீங்க 500$ கட்டனும் எக்ஸ்ட்ராவா' அப்படின்னு ஒரு குண்ட தூக்கிப் போட்டா.

"அட இப்படி வேற ரூல் ஆம்மா, சரி இந்த டேட்டுக்கு போடும்மா'  அப்பிடின்னு இன்னொரு தேதியைக் குடுத்தோம். அந்தம்மா ரொம்ப சீரியஸா அவங்க நோட்ல என்னத்தையோ பாத்துட்டு,

   "சார் ,நீங்க அதிர்ஷ்ட சாலி , அந்த தேதி காலியா இருக்கு, புக் பண்ணட்டுமா'
   "போடுங்க,போடுங்க ,அதுக்குதான இந்த அக்கப் போர் உன்கூட"
  "சார் , ஆனால் நீங்க ஒரு 300$ டாலர் பணம் குடுங்க இப்ப ,செக் கூட வாங்கிப்போம் "
  "அடடா ,மறுபடியுமா ,எதுக்கும்மா 300$, அதான் வவுச்சர் வச்ருக்கமே"
"சார் அந்த வவுச்சர் , basic rate மட்டும் தான் கவர்பன்னும் , நாங்க அங்க குடுக்கப் போற சர்வீசு ,அப்புறம் மெயிண்டனன்சு சார்ஜு ,அதுக்கு இதுக்கு ,அதான் சார் அந்த முன்னூறு"

வந்துச்சு கோபம், என்ன பண்றது ,வெள்ளைக் காரி கிட்ட நம்ம கோபத்தைக் காட்ட முடியுமா , 'போங்கடி நீங்களும் உங்க வவுச்சரும்"   அப்படின்னு மனசுக்குள்ள திட்டிகிட்டே , வந்த வழியப் போனோம்.


அப்புறம் தான் தெரிஞ்சுது ,நம்ம ஆளுக நெறையப் பேரு ,இந்த மாதிரி போயி பல்பு வாங்கிட்டு வந்துர்காயீங்கன்னு.  ஒரு நண்பன் சொன்னான், 'அமெரிக்காவுல உன் போன் நம்பர பிடிங்குரதுக்க்னே நெறைய மாய்மாலம் பன்னுவாயீங்க. உன் போன் நம்பர பல விளம்பரம் செய்ற ஏஜென்சிக்கு வித்துடுவாயீங்க, அதுனால இனிமே சும்மா உன் நம்பரையோ ,அட்ரசையோ கண்ட கண்ட இடத்துல கொடுத்து வைக்காத அப்படின்னான்.

அதுக்கப்புறம் கொஞ்ச நாளைக்கி உனக்கு அந்த பரிசு விழுந்துருக்கு அப்படி இப்படின்னு ஒரே கடுதாசியா வரும் எதுவும் கண்டுகிறது இல்லை.

இந்த விஷயம் அப்புறம் இந்தியாவுல கூட வந்துச்சு ,எனக்கு தெரிஞ்சவுங்க ஏதோ ஒரு வடநாட்டுல ரிசாடு கட்டுறாங்கன்னு ,பணம் கட்டி ஏமாந்து இருக்காங்க . இதே ஸ்கீம்ல , தேக்கு மரம் வச்சு ,நாங்க உங்களைப் பணக்காரன் ஆகுரோமின்னு கூட கொஞ்ச வருஷம் முந்தி நல்ல கல்லா கட்டுனது நினைவிற்கு வந்து போகுது.

இப்ப சில வருசத்துக்கு முன்ன ,பெங்களூருல அதே மாதிரி ஒருத்தன்
கிளப் மகேந்திரா ரிசார்ட்டு ன்னு ஆரம்பிச்சி சக்கப் போடு போட்டுக்கிட்டுருந்தாப்ல.

ஆள் பார்க்க ஒரு மார்க்கமா இருப்பாப்ல, இவரு நல்லவரா , கெட்டவரா , எனக்கு அனுபவம் இல்ல,தெரிஞ்சவுங்க சொல்லுங்க. தலைவரு நல்லா சம்பாரிச்சு ,சொந்த ஹெலிகாப்டர் கூட வச்ருக்கதா எங்கயோ படிச்சா நினைவு.


டிஸ்கி: சரி மாலுகுள்ள கார் படம் போடலாமின்னு கூகிள் கிட்ட சொல்லி தேடினா ,இந்த லிங்க் கிடைச்சிச்சி, நமக்கு நடந்தது ஒரு பத்து ,பன்னெண்டு வருசத்துக்கு முந்தி, ஆனா இந்த லிங்குல உள்ள மிச்சவுங்க அனுபவத்தைப் படிச்சிப் பாத்தா,இப்பயும் கூட அதே கூத்து நடக்குது போல, டைம் கிடைச்சா மேஞ்சு பாருங்க  http://www.knowledgesutra.com/discuss/tsfitd-car-giveaway-malls.omWednesday, November 16, 2011

எட்டாம் அறிவு - விமர்சனம்

புதிதாக வந்துள்ள ஒரு திரைபடத்தின் கதை சுருக்கத்தை படித்தேன். சும்மா சொல்லக் கூடாது , என்னமா யோசிகிரான்கப்பா ஹாலிவூட்காரனுங்க. சும்மா எப்பப் பாத்தாலும் காதல், கத்ரிக்கா இல்லேன்னா வீச்சருவா ,கத்தி , கபடான்னு நம்மாளுங்களும் இருக்காங்களே.

நிகழ்காலத்துல மனுஷனுக்கு இருக்குற பல கவலைகளில பெரிய கவலை, வயசாகுறது. நாம தான் பாக்குறம்ல, பொம்பளைங்க முகம் சுருக்கம் வந்து முதிர்ச்சியா தெரியக்கூடாதுன்னு விதம் விதமா மேக்கப் போட்டு மறைக்கப் பாக்குறத. (ஆம்பளைங்க மட்டும் என்னவாம் ன்னு சண்டைக்கு வராதீங்க)

 இதுக்கெல்லாம் முடிவு கட்டும் விதமா,  நம்ம ஜீன்குள்ள போயி , அந்த வயசாக்குற சமாச்சாரத்த அப்படியே சுவிட்ச் ஆப் பண்ணிட்டா அப்புறம் யாருக்குமே வயசாகுதுல்ல?  ஆனா எல்லோரும் சின்னப் பிள்ளையாவே இருந்தா உலகம் நல்ல இருக்குமா? அப்பிடின்னு லாஜிக் கேள்வி கேப்பாங்களே விமர்சன வித்தகர்கள்? (எஸ்பசல்லி தமிழ் பிளாக் விமர்சன வித்தகர்கள்), அதுனால அந்த ஜீன் சமாச்சரதுள்ள ஒரு சின்ன கண்டிஷன் ,அதாவது  வயசு ஏறும் ஆனா இருபத்தி அஞ்சு வயசு தான்  மாக்சிமும்.
அதாவது ஓல்ட் பீப்ளோட வயது இருபத்தஞ்சு தான் எவள்ளவு வருஷம் ஆனாலும்.

எதிர் காலத்துல(2161)  கண்டுபிடிச்சி ,அதுனால எல்லோரும் சாகாமா இளமையா 
இருக்குறதா ஒரு பின்புலம் அமைச்சி , அதுனால என்னென்ன கூத்து நடக்குதுன்னு கதை டெவலப் பண்ணி இருக்காங்கலாமாமம்.

சரி வெற்றிகரமா ஜீன் மாடிபை செஞ்சாச்சு,எல்லோரும் இளமையா சந்தோசமா இருக்காலாமே, என்ன கூத்து / பிரச்னை இருக்கப் போது அப்பிடின்னு நினைக்றீங்களா? கொஞ்சம் யோசிச்சு பாருங்க,யாருமே சாகலைன்ன, ஏதாவது செஞ்சு ஜனத் தொகைய கொறைகனுமே. இல்லேன்னா பூமி தாங்குமா, உணவு சுழற்சி நடக்குமா?

அதுக்கும் ஒரு லாஜிக், எல்லாருக்கும் குறிப்பிட்ட வயசு (25)  வரைக்கும் தான் ஆயுசு.  அதுக்கு மேல வாழனுமின்ன உழைச்சு ,வியாபாரம் பண்ணி லைப் டைம் டாப் அப் பண்ணிக்கலாம். எல்லோர் கைலையும் அவங்களுக்கு இன்னும் எவ்ளவு ஆயுசு அப்பிடின்னு
ஒரு கடிகாரம் காட்டும்.  அந்த டயத்த கீப் பண்ண , ஒரு போலீஸ் (TIME KEEPER), அவங்க வேலையே டயம் முடிஞ்சி போனவங்க பிளக்க புடுங்கி மேல
அனுப்புறது.  இந்த சூழ்நிலையில என்ன ஆகும் யோசிங்க? 

ஏழைகிட்ட இன்னும் ரொம்ப  வருஷம் வாழ டைம் இருக்கு. ஆனா பணக்காரனுக்கு  இன்னும் கொஞ்சம் வருஷம் தான் பாக்கி. ஏழைக்கி அவனோட அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய வழி  தேவை, அதுக்கு அவனோட இருபத்தஞ்சு  வருசத்துல மிச்சம் இருக்குறத  அவன் பணக்காரனுக்கு வித்துக்கலாம்.
அதாவது இப்ப கிட்னி , உயிர் எல்லாம் பணத்துக்காக கொடுகிரான்களே அது மாதிரி. இப்ப என்ன ஆகும்,  உயிர் வாழுற டைம் ஒரு கரன்சியா மாறிடுது. அதச் சுத்தியே எல்லா வர்த்தகமும் நடக்க ஆரம்பிக்குது. யார் ரொம்ப வாழ் நாள் சேத்து வச்ருக்கானோ அவன் தான் பணக்காரன்.

அப்படிப்பட்ட உலகத்துல ஒரு ஹீரோ வுக்கு அதிர்ஷ்டவசமா இன்னொருத்தர் கிட்ட இருந்து லம்பா  எக்ஸ்ட்ரா லைப் டைம் சொத்தா கிடைக்குது. அத அவன்கிட்ட இருந்து புடுங்குறதுக்கு அவன கொலை குற்றத்துல சிக்க வைக்க பாக்கிறாங்க.
அதுனால அவருக்கு என்ன நடக்குது ,அதுல ஹீரோயன் அப்படி இப்படின்னு கதைய சுவராஸ்யமா கொண்டு போறாங்களாம்.

படம் பேரு  In Time.
டிஸ்கி: படம் இந்த வாரம் போகலாமான்னு யோசிக்கிறேன், போயிட்டு வந்தவங்க சொல்லுங்கப்பா எப்படி இருந்துச்சுன்னு....Tuesday, November 15, 2011

பதிவர்களுக்கு என் கேள்வி?

முன் குறிப்பு: இது ஒருவிழிப்புணர்வு பதிவு

சும்மா ஒரு ஜெனரல் நாலேசுக்காக ,நம்ம ப்ளாகுக்கு எங்கிருந்து டிராபிக் வருது அப்பிட்டின்னு ஆராய்ச்சி பண்ணிகிடுருந்தேன். அதாவது பிளாக்கர் ஸ்டேட்ஸ் டாப் கிளிக் பண்ணி பார்த்துக்கிட்டுர்ந்தேன். அதுல ஒரு விஷயம் கண்ணை உறுத்துச்சு:
அது என்ன விசயமின்னா , நானும் கொஞ்ச நாளாவே கவனிக்கிறேன்,இதுவரைக்கும் நான் கேள்விபடாத சைட்கள்ள இருந்து வர்ற ட்ராபிக்.இந்த சைட்கள் எல்லாமே .tk ன்னு முடியுது.


http://fusrodah.tk/
http://bllog.tk
http://postring.tk/
http://profitsites.tk/
http://massprofits.tk/

சரி இந்த சைட்கள்ல நம்ம பதிவு லிங்க் இருக்காஅப்பிடின்னு போய் பார்த்தா ,
இது எல்லாமே ,  கொஞ்சம் பணம் கட்டுங்க , உங்க ப்ளாக் அகில உலக ரேஞ்சுக்கு எங்க சூப்பர் சாப்ட்வேர் மூலமா நாங்க ஆடோமாடிக்க பிரபலப் படுத்துவோம் , அப்புறம் நீங்க உங்க ப்ளாக் மூலமாகவே பெரிய பணக்காரனாகி ,வேலை கீலைன்னு எதுவும் பாக்காம பெரிய கார் ,வீடுன்னு வாங்கி சந்தோசமா லைப் என்ஜாய் பண்ணலாம் அப்படின்னு சொல்ற மேட்டராவே இருக்கு,


இந்த தளங்களுக்குப் போயி அவனுக காட்டுற வீடியோவ கொஞ்சம் உன்னிப்பா கவனிச்சா , பாட்டர்ன் ஒண்ணுதான் ,ஆனா வேற வேற பேர்ல வச்சு பணம் பிடுங்கப் பாகுரானுங்க. கூகிள் ஆண்டவினிடம் இவிகளப் பத்தி கேட்டா ,ஏமாந்த சோணகிரி கதைங்கள அள்ளிக் கொட்டுறாரு.

பதிவர்களுக்கு என் கேள்வி என்னென்னா :

1 உங்களுக்கும் இந்த மாதிரி சைட்டுகளில்இருந்து ட்ராபிக் வருதா?

2 என் பதிவு லிங்க் அங்க எப்படி போயிருக்கும் ,யார் இணைச்சிருப்பாங்க ?


3 யாராவது வெளிய சொல்லாம ,இந்த சைட் கள்ள சேந்து சத்தமில்லாம பணக்காரனா ஆயிடுருகீங்களா?இல்ல வெளிய சொன்னா அசிங்கமுன்னு பணம் கட்டி யாராவது ஏமாந்து இருக்கீங்களா?டிஸ்கி:
ஒண்ணுமே புரியல பதிவு உலகத்தில,
என்னமோ நடக்குது ,மர்மமா இருக்குதுMonday, November 14, 2011

விஜய் சொன்னது சரியா?

நீங்கள் அனைவரும் எங்கேயும் எப்போதும் படம் பார்த்திருப்பீர்கள். அதில் ஒரு விஷயம் , ரெண்டு ஜோடிகளுக்கு நடப்பதாக காட்டி இருப்பார்கள். முதல் ஜோடி - அந்த புது மாப்பிள்ளை ஒரு நிறுத்தத்தில் இறங்க முடிவு செய்து இறங்கிவிட்டு பின் மறுபடியும் அதே பஸ்ஸில் ஏறி உயிரை விடுவது. ரெண்டாவது ஜோடி - ஜெய் அவர் ஊரில் இறங்க முடிவு செய்துவிட்டு பின் வேறொருவரின் அட்வைஸ் -ல் , இறங்காமல் தொடர்ந்து பயணித்து உயிரை விடுவது.

நாமும் இவ்வாறே முதலில் ஒரு முடிவு எடுத்துவிட்டு ஏதோ ஒரு காரணத்தினால் , வேற சாய்ஸ் தேர்ந்துடுத்துவிட்டு , 'ச்சே, மொதல்ல நெனச்சதே சரியா இருந்திருக்கும் போல ' என்று பல சமயங்களில் கட்டாயம் புலம்பியிருப்போம்.  'நான் ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா ஏன் பேச்சை நானே கேட்கமாட்டேன்' அப்படின்னு இருந்தா, இந்த மனக் குழப்பத்துக்கான தேவையே இருக்காது அப்படின்னு நான் நினைக்கிறேன். ஏதோ சொல்வாங்களே , 'புத்திக்கு தெரியுது , மனசுக்கு தெரியலையே ' அதுமாதிரி தான் நம்ம கதைகளும்.


இப்ப ஒரு உதாரணத்துக்கு , கடைக்கு சேலை எடுக்க மனைவியுடன் போன எத்தனையோ கணவன்மார்கள் இத கட்டாயம் அனுபவிச்சிருப்பீங்க. மொத ஒரு கடையில ஏறி, கஷ்டப்பட்டு சூஸ் பண்ணுவாங்க . அதுக்கப்புறமும் விடாம, வேற சேலைகளை அதே கடையிலையோ அல்லது இன்னும் ரெண்டும் மூணு கடை ஏறி இறங்கி அலுக்காம பாத்துட்டு கடைசியா வேற ஒரு சேலைய வாங்கிட்டு, "ச்சே அந்த மொத சேலையே ரொம்ப நல்லா இருந்தா மாதிரி தோணுதே ,ச்சே மிஸ் பண்ணிட்டேனே " என்று புலம்புவார்கள்.

ஆண்கள் மட்டும் சும்மாவா, "அந்த எலெக்ட்ரானிக்ஸ் அயிட்டம் நல்லா இருக்கு அத வாங்கணும் "அப்பிடின்னு பல நாள் ஆராய்ச்சி பண்ணிட்டு ,கடைசி நிமிசத்தில ஏதோ ஒரு ரீசன் ல ,வேற மாடல் வாங்கிட்டு வந்துட்டு, "ச்சே அந்த மாடலே வாங்கி இருக்கணுமோ" என்று கவலையில் ஆள்பவர்களும் உண்டு.

குழைந்தைகளிடம் பெருமையாக , 'உனக்கு என்ன டிரஸ் பிடிக்குது ' என்று அவர்களை காமிக்க சொல்லிவிட்டு , அவர்கள் செலக்ட் செய்ததை எடுக்காமல் , "அது குவாலிடி சரியில்லை, இதுக்கு போய் இவ்வளவு விலையா?" , அப்படி இப்படி என்று தம் மேதாவித்தனத்தை காட்டி ,அவர்களுக்கு பிடிக்காத ஆனால் தமக்கு பிடித்த டிரெஸ்ஸை தன குழந்தையின் தலை மேல் கட்டும் பெற்றோர்களும் உண்டு .

அது மட்டுமா, பள்ளி முடித்து , இந்த கல்லூரியா ,அந்த கல்லூரியா , கல்லூரி முடித்து இந்த ஸ்பெஷல் கோர்ஸ் இல்ல அந்த ஸ்பெஷல் கோர்சா என்று குழம்பி ஒரு வழியாக ஒன்றை தேர்ந்தெடுத்து விட்டு ,அப்புறம் வருத்தப் படுவது.

இதுக்கெல்லாம் மேல,  கல்யாணத்துக்கு பொண்ணோ/ மாப்பிள்ளையோ  முதலில் ஒரு வரனைப் பார்த்து விட்டு, அப்புறம் பல வித நிர்பந்தங்களினால் வேற ஒன்னை கட்டிவிட்டு மனதுக்குள் புலம்புவர்களும் இருக்கிறார்கள்.

ஆனால் கொஞ்சம் நல்லா நினச்சிப் பார்த்தா..

     பார்த்தவுடனே டக்குன்னு பிடிச்ச துணி, இடம் , முகம் , ஆண்/பெண்,பெயர்,வேற  எதுவேணா பாருங்க ,அந்த குட் பீலிங், திருப்தி நீங்க அதுக்கப்புறம் வேற சிறந்ததா ஆராய்ந்து தேர்ந்தேடுதுருந்தாலும் கிடைக்காது .

  ஆங்கிலத்தில் கூட சொல்வாங்களே , First Impression is the best Impression... இது அடுத்தவுங்க நம்ம மேல வைக்குற மதிபீடுக்கு மட்டுமில்ல , நாம ஆசைபடுற எந்த ஒரு விசயதுக்குன்னும் கூட நாம எடுத்துக்கலாமே.


  உளவியல் ரீதியா பார்த்தாலும் , நீங்க மொத மொத தேர்ந்துடுக்குற எந்த ஒரு விசயமும் , உங்களோட ஆள் மனதின் சப் கான்சியஸ் சாய்ஸ். அது எப்பவுமே கரெக்ட் ஆ இருக்கும் உங்க பெர்சொனாலிட்டி படி. ஆனால் , இன்னொரு மனது இருக்கே , அதாங்க கான்சியஸ் மைன்ட், அது என்னென்ன குறைபாடு இருக்குனு கணக்கு போட்டு , வேற சாய்ஸ் எடுக்க வச்சு ,அப்புறம் உங்கள ஒரு ஏக்க நிலையில வச்சுருது.


நீங்க ஒரு சோதனை முயற்சியா , உங்க மனசுக்கு மொதல்ல 'பட்'டுன்னு எது பிடிசிச்சோ, அத மட்டும் சிறிய லெவல்-ல சூஸ் பண்ணி பாருங்களேன் , கட்டாயம் உங்களுக்கு ஒரு திருப்தி கிடைக்கும் , மத்தவங்களுக்கு அது எவ்வளவு சின்ன திருப்தியா இருந்தாலும்,உங்களுக்கு அது பெரிய நிறைவைக் கொடுக்கும்.


டிஸ்கி : நீங்க ஏற்கனவே ஒரு தடவ நல்லா யோசிச்சு முடிவெடுத்து அதையே செயல்படுத்துபவரா , ஐயா/அம்மா , நீங்க மனிதரல்ல , தெய்வம்...பெரிய பெரிய ஞானிகள் காலம் காலமா சொல்லிக்கிட்டு வர்றத இயற்கையாவே பெற்ற பெரும் பாக்கியசாலி!
    
அப்புறம் அந்த பேமஸ் விஜய் பன்ச் வசனத்த எழுதின ஒரிஜினல் புண்ணியவான் வாழ்க! இந்த வசனத்த தெலுகு ,மலையாளம் ,கன்னடம் ,ஹிந்தி அப்படின்னு பல மொழிகள்ல வேற வேற ஹீரோக்கள் சொல்லிட்டாங்க..ஒரிஜினலா சொன்னது யாருப்பா?

Saturday, November 12, 2011

ஓடி ,ஓடி விளையாடலாமா?

சின்ன வயதில் நாம் ஓடி ஆடி விளையாட எத்தனை வித விதமான வாய்ப்புகள் இருந்தன என்பதை எண்ணி பாக்கும் பொழுது ,அடடா , சுகமான அந்த நாட்கள், மீண்டும் வாராதா...
   பட்டாம் பூச்சி விரட்டியது
   கிட்டி புள்ள விள்ளாண்டது
   கோலி குண்டு அடித்தது 
   பொன் வண்டு பிடித்தது
   
   மழையில் காகித கப்பல்
   கிரிகெட் தென்னம் மட்டையில்.
    
   டென்னிகாட் , பையர் இன் தி மௌன்டைன்
   டாக் அண்ட் தி போன்

   கண்ணாமூச்சி லே லே 
   குலை குலையா முந்திரிக்கா 

   ஐஸ் பால் ஓட்டம்
   பாண்டி ஆட்டம் 

    தாயக் கட்டை 
   ராஜா மட்டி
        
  ஆனால் இன்று குழந்தைகள் விளையாட இவ்வளவு வாய்ப்புகள் உள்ளதா என்று பார்த்தால் , நிச்சயமாக இல்லையென்றே சொல்ல முடியும். காரணம் மாறி வரும் டிரன்ட், இட நெருக்கடி , படிப்பே பிரதானம் என்று எதுகெடுத்தாலும் அந்த டூஷன்,இந்த டூஷன். கிடைக்கும் விடுமுறை நாட்களில் ,போகோ டிவி ,கம்ப்யுட்டர் கேம்ஸ் என்று உக்கார்ந்த இடத்தை விட்டு நகராமல் மணிகணக்கில் தவம்.  இதனால் குழந்தைகளுக்கு பல பிரச்சினைகள் , அதில் முக்கியமானது , குழந்தைகளுக்கு போதிய உடற்பயிற்சியின்மை.

குழந்தைகளுக்கு பிடித்த டிவி , அதில் அவர்களுக்கு பிடித்த கேம்ஸ் , அதே சமயம் அவர்களுக்கு உடற்பயிற்சியும் கிடைக்க வேண்டும். என்ன செய்யலாம் ? உண்மையிலேயே உக்காந்து யோசித்து, மைக்ரோசாப்ட் அதற்க்கு தீர்வு ஒன்று கொண்டு வந்துள்ளது:

        Microsoft XBOX 360 Kinect

இந்த Kinect என்ற சென்சார் தான் இந்த தீர்வின் காரண கர்த்தா.  உங்களுக்கு பிடித்த விளையாட்டை டிவி யில் ஓட விட்டு , நீங்கள் எழுந்து நின்று கொண்டு , நீங்களே அந்த விளையாட்டில் பங்கு கொண்டு , உங்கள் உடலை அசைப்பதன் மூலம் அதில் பங்கு கொள்ளலாம்.  சும்மா சொல்லக் கூடாது , ஒவ்வொரு விளையாட்டும் அருமை.  

உங்கள் குழந்தைகள் டான்ஸ் ஆடுவதில் விருப்பமா,அதுக்கும் உள்ளது கேம்,
திரையில் வரும் உருவம் சொல்லிக் கொடுப்பதை ஆடி பழகலாம். 

அவர்களுக்கு விலங்குகள் மேல் பிரியமா, Kinectimals உள்ளது.

உங்கள் ஊரில் , இயற்கை எழில் கொஞ்சும் பார்க் இல்லையா  ,அதில் மெது ஓட்டம் ஓட வேண்டும் என்று கனவில் மட்டுமே நினைத்ததுண்டா ..வெளியில் ஓடினால் மற்றவர்கள் பார்பார்களே என்று வெக்கமா ...உடல்பயிற்சி ஒரே போர் , அத யார் செய்வா என்று தள்ளிப் போடுகிறீன்களா, கவலை வேண்டாம் இருக்கவே இருக்கு , You Shape Fitness Evolved 2012.

இந்த விளக்க விடியோவை பாருங்கள்:

      உடற்பயிற்சி விளையாட்டின் வீடியோ :


டிஸ்கி:

விலை என்ன , எங்கே கிடைக்கும் என்பதையெல்லாம் , கூகிள் ஆண்டவனிடம்  கேளுங்கள் ,அவர் கொடுப்பார். 

Friday, November 11, 2011

என்னை ஏதோ செய்கிறாள் - இறுதி பாகம் - கிரைம் தொடர்

காலை நேரம். பள்ளி ஆரம்பிக்க இன்னும் ஐந்து நிமிடங்களே இருந்ததால் ,
அந்த  பிரபல பள்ளியின் வாசலில் மாணவர்கள், அவர்களை ட்ராப் செய்ய வந்த பெற்றோர்கள் என்று ஒரே பர பரப்பாக இருந்தது.

 பள்ளி இருந்த தெருவுக்கு அடுத்த தெருவில் 'ஜீப்பை' நிறுத்திவிட்டு இன்ஸ்பெக்டர் கணேஷ் மற்றும் கான்ஸ்டபில் ராம் மப்டியில்
அந்த பள்ளியை நோக்கி நடக்கத் தொடங்கினர்.

வகுப்பு ஆரம்பிக்கும் இரெண்டாவது மணி அடித்தவுடன், வாசல் துடைத்து விட்டதைப் போல் சுத்தமாக, ஒரு தலை கூட கண்ணில் படாதபடி மாணவர்கள் மாயமாய் மறைந்து விட்டனர்.

இன்ஸ்பெக்டர் கணேஷ் பள்ளி முதல்வரின் அறை எங்கே உள்ளது என்று விசாரித்து, அதனுள் கதவைத் தட்டி விட்டு உள்ளே நுழைந்தனர்.

அவர்கள் இருவரையும் பார்த்த பள்ளி முதல்வர், 'யாரென்று' கேள்வி தொனிக்கும் முக பாவத்தில் அவர்களைப் பார்க்க, இன்ஸ்பெக்டர் தன் அடையாள அட்டையை காட்டிவிட்டு , வந்த விசயத்தை சுருக்கமாகச் சொன்னார். பள்ளி முதல்வர் 'பெல்' ஒலித்து , ப்யூனை வரவழைத்து ,

"போய், கலா மிஸ்ஸை வரச் சொல்லுப்பா" என்றார்.

    ௦௦௦௦((((((((((௦௦௦௦௦௦௦௦௦௦௦LOL

கலா மிஸ் , பிள்ளைகளுக்கு , திருவள்ளுவரைப் பற்றியும் ,அவர் குறள்களின் சிறப்புகளையும் அவர்களுக்கு புரியும் வண்ணம் எளிய தமிழில்
கதை சொல்லி பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.ப்யூன் வந்து அழைத்தவுடன் , பிள்ளைகளுக்கு உடனடி அசைன்மென்ட்டாக ஒரு குறளை போர்டில் எழுதிவிட்டு , அதன் அர்த்தத்தை அமைதியாக யோசித்துக்கொண்டிருங்கள் என்று சொல்லிவிட்டு , ஒரு வித பதட்டத்துடன் முதல்வர் அறையினுள் நுழைந்தாள்.

அவளைப் பார்த்தவுடன் முதல்வரை முந்திக் கொண்டு இன்ஸ்பெக்டர் கணேஷ்,
  "நீங்க தான் கலாவா?"
  "ஆமா, நீங்க? " என்று தயக்கத்துடன் கலா.
 "இந்த போட்டோ ,நீங்க தான 'ப்ளோ அப்' செய்ய கொடுத்துர்ந்தீங்க?" என்று
ஒரு பெரிய போட்டோவும் , அதனுடன் ஒரு கடிதத்தையும் கொடுத்தார் இன்ஸ்பெக்டர்.

அந்த போட்டோவில், சஞ்சனாவும் ,  கலாவும் இருக்க , சஞ்சனாவின் கையில் ஒரு வெற்றிக் கோப்பை. (ஆமாம் அதே போட்டோ , அவள் வீட்டில் முன்பு கணேஷ் பார்த்தது).  அந்த கடிதத்தில்,

"உங்களுக்கும் , சஞ்சனா,MLA  மற்றும் ஜமுனா கொலைகளுக்கும் தொடர்பு உள்ளது என்று நம்புகிறோம். நீங்கள் ஜமுனா வீட்டில் விட்டுச் சென்ற போட்டோ கலக்சன் ரெசிப்ட் எங்களுக்கு உங்களை கண்டுபிடிக்க உதவியது. நீங்கள் முவரும் இருந்த போட்டோவில் ,ஏன் ஜமுனாவை கிராப் செய்துவிட்டு,உங்கள் இருவரின் உருவம் மட்டும் இருக்குமாறு 'ப்ளோ அப்'  செய்யச் சொன்னீர்கள்' என்று எனக்கு தெரிய வேண்டும். நீங்களாக முன் வந்து நடந்த உண்மைகளை சொன்னால் உங்களுக்கு நல்லது. இந்த பள்ளியில் உங்களை விசாரிக்காமல் , ஸ்டேசனில் விசாரிக்க விரும்புகிறோம். புரிந்துணர்வுடன் கூடிய ஒத்துழைப்பை எதிர் பார்க்கிறோம்".

இப்படிக்கு,
இன்ஸ்பெக்டர் கணேஷ்

அந்த கடிதத்தை படித்தவுடன், காலாவிற்கு  நெற்றியில் வேர்க்க ஆரம்பிக்க, அவள் தொண்டையில் குரல்வளை மேலும் கீழும் ஏறி இறங்க ஆரம்பித்தன. திடீரென்று பலமாக இருமத் தொடங்கினாள். அவள் இருமல் அடங்காமல் வந்து கொண்டே இருந்தது. அவள் பள்ளி முதல்வரைப் பார்த்து திக்கி திணறி, 'பை...மாத்திரை' என்றாள்.

பள்ளி முதல்வர் மறுபடியும் ப்யூனை கூப்பிட்டு, 'ஸ்டாப் ரூம் போய் , கலா மிஸ் கைப்பைய உடனே எடுத்துட்டு வாங்க, சீக்கிரம்' என்று கட்டளையிட்டாள். ப்யூன் கொண்டு வந்து தந்த பையை வாங்கிய இன்ஸ்பெக்டர் கணேஷ், 'என்ன புதுசா டிராமா போடுறா' என்ற ரீதியில் அவளிடம் கொடுக்கலாமா ,வேண்டாமா என்ற தொனியில் கலாவைப் பார்க்க,
 'சார் ப்ளீஸ் மாத்திரை போடணும் , இப்படி கொடுங்க என் பையை' என்று இருமிக் கொண்டே கெஞ்சினாள்.

முதல்வர், 'சார் ப்ளீஸ் கொடுங்க, அவங்களுக்கு இந்த இருமல் கம்ப்ளைன்ட் இருக்குறத முன்னாலேயே எனக்கு சொல்லி இருக்காங்க, மாத்திரைய போட விடுங்க ப்ளீஸ்' என்று அவளுக்கு வக்காலத்து வாங்க , வேறு வழியில்லாமல் அவளிடம் பையை கொடுத்தார் இன்ஸ்பெக்டர்.

வேகமாக பையில் இருந்து எதையோ எடுத்து முழுங்கிய கலா, சிறிது நேரத்தில் ஆசுவாசம் அடைந்து, இன்ஸ்பெக்டரை பார்த்து ,
"சார் ,என்னை மன்னிச்சிடுங்க, நான் நடந்த உண்மையை சொல்லிடுறேன்.இங்கயே இப்பவே சொல்லிடுறேன்" என்றவள் தொடர்ந்து,

"நான்,சஞ்சனா,ஜமுனா மூவரும் திக் பிரண்ட்ஸ். எங்கள் மூவருக்கும் திருக்குறள் என்றாள் உயிர். எங்களுக்குள்ள எந்த நல்லது /  பொல்லாதது    நடந்தாலும் , அதுக்கு  ஏத்த மாதிரி ஒரு குறள் சொல்லிக்கிறது எங்க வழக்கம்.

அந்தளவுக்கு நாங்க திருக்குறள் சொல்றதுல எக்ஸ்பெர்ட். நாங்க படிச்சது ஒரு கோ -எட் காலஜ். அங்க எங்க நட்பு வட்டாரத்தில் இருந்தவர் தான் இறந்துபோன எம்.எல்.ஏ தயாளன்.

ஜமுனா ஓவரா ஜெலஸ் உடைய கேரக்டர். என்ன தான் நாங்க மூணு பேர் நல்ல நட்போட பழகினாலும், சஞ்சனாவோட தமிழ் கவிதை எழுதும் திறமை , மற்ற எல்லா விசயங்கள்ளையும் அவளே முதலா இருக்கிறது ஜமுனாவுக்கு எப்பவுமே கொஞ்சம் எரிச்சல்."

--என்றவள் 'சார்,எனக்கு கொஞ்சம் தள்ளாடுது, நிக்க முடியல. நான் உக்காந்துகிட்டே  சொல்லட்டுமா? ' என்று கணேசைப் பார்த்து கேட்டாள்.

அவளை உக்காரச் சொல்லிவிட்டு, 'மேல சொல்லுங்க' என்றார் இன்ஸ்பெக்டர்.

"தயாளன் , சஞ்சனாவ அடிக்கடி பாராட்டி பேசுறது ஜமுனாவுக்கு சுத்தமா பிடிக்கலை. எப்படியோ தயாளனை தன்னை காதலிக்க வச்சுட்டா ஜமுனா.
ஆனாலும் தயாளன்  சஞ்சனாவ பாராட்டுறத நிப்பாட்டல. அது சஞ்சனா மேல ஜமுனா வச்சுக்கிட்டுருந்த கோபத்த அதிகமாக்கிச்சி."

"அப்புறம் எங்க காலஜ் படிப்பு முடிஞ்சி, சஞ்சனாவுக்கு கல்யாணம் ஆச்சி.
  சஞ்சனாவோட புருஷன் துபாய் போயிட்டதால ,சஞ்சனா பொழுது போறதுக்கு ப்ளாக் ஆரம்பிச்சி அதுல தன்னோட தமிழ் திறமய எழுத்து மூலமா நிரூபிசிக்கிட்டுருந்தா. அத அப்பப்ப எங்களுக்கும்
face book  ல ஷேர் பண்ணிக்குவா. அப்ப தான் , தயாளனும் , அவளோட face book  ல ஜாயின் பண்ணாரு. அவளோட wall ல அவர் கமெண்ட் போடுறது ,பாராட்றது அப்படின்னு அவங்க நட்பு மறுபடியும் வளர்ந்தது ஜமுனாவுக்கு சுத்தமா பிடிக்கல."

மேலும் கொஞ்சம் தண்ணியை குடித்துவிட்டு, கலா தொடர்ந்தாள்:

"இடையில ,தயாளன் அரசியல்ல இறங்கி கொஞ்சம் கொஞ்சமா பிரபலம் அடஞ்சுகிட்டு வந்தாரு. அவரோட அரசியல் வளர்ச்சிய கருதி, ஜமுனாவ விட்டுட்டு வேற பெரிய பின்னணி உள்ள பொண்ண கல்யாணம் செஞ்சிகிட்டார்,ஆனா அதுக்கு சஞ்சனா தான் காரணமின்னு தப்பா நினச்ச ஜமுனா, அவங்க ரெண்டு பேருக்கும் தொடர்பு இருக்கிறதா கதை கட்டி அவங்கள பழி வாங்க நினைச்சா. அவங்க face book கம்மன்ட்ச்களை , வெட்டி , ஒட்டி ,தப்பான அர்த்தம் வர்ற மாதிரி ஸ்க்ரீன் சாட் தயார் செஞ்சு, அத சஞ்சனா புருஷன் மெயில் ஐ டீ க்கு அனுப்ப போறதா மிரட்டி இருக்கா. அத தாங்க முடியாம தான் அவ தூக்கு மாட்டி செத்துப் போயிட்டா. "

"அப்ப MLA தயாளான யார் கொன்னது" என்று ஆர்வத்துடன் கணேஷ் கேக்க, கலா தொடர்ந்தாள்.

"தான் எதிர்பார்த்தபடி சஞ்சனா செத்துட்டதால மகிழ்ச்சி அடைஞ்சாலும் ஜமுனாவுக்கு அது பத்தாம, தயாளனை சிக்க வைக்கனுமின்னு அவன் வீட்டுக்கு போய் மிறட்டுரப்ப வந்த தகராருல , அவனையும் கொன்னுட்டா".

"அப்ப ஜமுனா ஏன் சாகனும்,அவ தற்கொலை பண்ணிகிட்டாளா?" என்று ஆர்வம் மிகுதியில் பள்ளி முதல்வர் கேட்க 'இல்ல மேடம்' என்று தலையை ஆட்டினாள் கலா.

மெல்ல அவள் நினைவு அன்று நடந்ததை ரீவைண்டு பண்ணி பார்த்தது:

ஜமுனாவின் செல் போன் 'மின்சாரக் கண்ணா,என் மன்னா' என்று ரிங் டோனுடன் அழைக்க , அதை எடுத்து ஹல்லோ சொன்னவுடன்,

 " ஹாய் ஜமுனா,நான் தாண்டி கலா பேசுறேன்"
"ஹாய் டீ, எப்படி இருக்க கலா?"
 "ஹ்ம்ம், சஞ்சனா விஷயம் கேள்விப் பட்டையா?"
"ஹ்ம்ம் , கேள்விப்பட்டேன்,இப்ப தான் எனக்கு சந்தோசம்"
" என்னடி இப்படிச் சொல்ற?"
"அப்புறம் அவளைப் பாத்தாலே கொல்லனும் போல இருக்கும் இப்ப அவளே போயி சேந்துட்டா, அவ போட்ட ஆட்டத்துக்கு சரியான தண்டனை "
"ச்சே போடி நீ இன்னும் திருந்தவே இல்ல" என்று கலா கோபத்துடன் போனை வைத்தாள். சஞ்சனா நினைவாக அவள் போட்டோவை பெரிது படுத்தி மாட்டனும் என்று நினைத்தவள் , 'அவர்கள் மூன்று பேர் இருக்கும் சஞ்சனாவின் திருக்குறள் போட்டியின் போது எடுத்த அந்த போட்டோவை எடுத்துக் கொண்டு கடைக்கு சென்று,` தான் மற்றும் சஞ்சனா மட்டும் இருக்குமாறு பெரிது படுத்த ஸ்டுடியோவில்  ஆர்டர் கொடுத்துவிட்டு வெளியே வந்தாள்.

அப்போது கலாவின் செல் போன் ஒலிக்க, மறு முனையில் ஜமுனா.

"டீ கலா, என்னடி கோபப் பட்டு போனை வச்சுட்ட, மறுபடியும் கூபிடுவன்னு பார்த்தேன் ,கூப்பிடல"
"எனக்கு உன் மேல கோபம்"
"சரிடி, நீ எங்க இருக்க, ப்ரீயா இருந்தா என் வீட்டுக்கு வாயேன் , நாம இதப் பத்தி டீடைல் ஆக பேசலாம்,நான் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் தரப் போறேன்" என்று வற்புறுத்திக் கூப்பிட,கலாவும் அவள் வீட்டிற்கு போனாள்.

பேச்சு சுவராசியத்தில், ஜமுனா நடந்த உண்மைகளை சொல்லிவிட, கோபத்தில் ஜமுனாவை தள்ளிய கலாவிற்கு அவள் அப்படி பொட்டென்று செத்துப் போவாள் என்று கனவில் கூட நினைக்கவில்லை. ஜமுனாவிற்கு புத்தி சொல்லும் விதமாக அவளும் ஒரு குறளை எழுதி விட்டு போய் விட்டாள்.

ரீவைண்ட் முடிந்த கலா, ப்ரின்சிபல் மேடத்தை பார்த்து,

 'நான் எதிர்பாரா விதமா அவள கொன்னுட்டேன் மேடம் ' என்று அழ ஆரம்பித்தாள்.

திடீர் என்று அவள் வாயில் இருந்து நுரை தள்ள, 'இன்ஸ்பெக்டர் , நான் விச மாத்திரை சாப்பிட்டுட்டேன்.எனக்கு எப்படியும் தண்டனை கிடைக்கும் , நான் இதுக்கு மேல உயிர் வாழ விரும்பல' என்று மயங்கிச் சரிந்தாள்.


கலா மிஸ்ஸின் வகுப்பில் இருந்த மாணவர்கள் டீச்சர் இன்னும் வரலையே என்று வாசலைப் பார்த்துகொண்டு ,போர்டில் இருந்த குறளின் அர்த்தமும் புரியாததால் , கூச்சல் போடத் தொடங்கினர். அந்த போர்டில் இருந்த குறள் கலா மிஸ் எதிர்பார்க்காமலே அவளுக்கு நடந்த செயலுக்கு பொருத்தமாக அமைந்து விட்டது. அந்த குறள் இது தான்:


அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் பிறவினை
 எல்லாந்  தரும்.

இந்த குறள் ஓரளவுக்குப் புரிந்தாலும் , புரியாதவர்களுக்கு, விளக்கம் இதோ :

எந்த உயிரையும் கொல்லாதிருப்பதே அறச்செயலாகும். கொலை செய்தல்
தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும்.

--முற்றும்.Wednesday, November 9, 2011

என்னை ஏதோ செய்கிறாள் - 4 - கிரைம் தொடர்நண்பர்களே என் தொடரின் இறுதிபாகத்தை பதியும் முன் ,உங்களுக்கு இந்த சிறு தடங்கல். "தடங்கலுக்கு வருந்துகிறோம்" அப்படின்னு முன்னொரு காலத்தில , தூர்தர்சன் மட்டுமே இருந்து, இப்ப இருக்குற எந்த சானேல்களும் இல்லாம இருந்தப்ப , முக்கியமான ஒரு மணி நேர நாடகம் வர்றப்பயோ, இல்ல 'ஒளியும் ஒலியும்' வர்றப்பயோ , திடீர்னு ஒரு கார்டு போடுவாங்களே , 'தடங்கலுக்கு வருந்துகிறோம்' அது மாதிரின்னு வச்சுகோங்களேன்.

ஆனால் இந்த தடங்கல் எதுக்குன்ன , இந்த கதைத் தொடரை எப்படி எழுத ஆரம்பிச்சேன் அப்பிடின்னு சொல்றதுக்காக. அதாங்க இந்த ஹாலிவூட் , ஏன் நம்ம கோலிவூட் படங்களோட DVD க்கள்ள இருக்குமே , 'திரைக்கு பின்னால் ', அது மாதிரி , இது 'கதைக்கு பின்னால் ' அப்பிடின்னு கூட வச்சுகோங்களேன்.

நம்ம எல்லோருக்கும் தாத்தா , அய்யன் வள்ளுவனார் அவர்களோட ரசிகன் நானு. அவர் குறள்கள் டச் பண்ணாத விசயமே இல்ல. ஒரு நாள் ,  என்னோட ஆண்டுராயிடு போன்ல , புதுசா என்ன கேம் வந்துருக்குன்னு மார்கெட்ல தடவிட்டு இருக்குறப்ப , திருக்குறள் வித் மீனிங்க்ஸ்  அப்படின்னு கண்ல தட்டுபட்டது. 

அப்பப்ப தினமலர்ல முன்னாடி ,'தினம் ஒரு குறள்னு ' படிச்சதோட சரி. அப்புறம் அப்படியே விட்டுப் போச்சி. ஆகா ,நம்ம தலைவர் குறள்கள் மீனிங் புரியாம தவிச்சுகிட்டு இருந்தமே ,இப்ப திடீர்னு இத பாத்தவொன்னே ,சரி எதுக்கும் டவுன்லோட் பண்ணி வச்சிருப்போம். எப்பயாவது ட்ரைன்ல ,பஸ்ல பொழுபோரதுக்கு படிக்க உதவியா இருக்குமுன்னு டவுன்லோட் செஞ்சுகிட்டேன். 

இந்த அப்ளிகேசன்ல என்ன விசேஷம்ன, ஒரு திருக்குறளுக்கு ,வெவ்வேறு பெருந் தலைகளோட விளக்கம் கொடுத்துருக்காங்க. சும்மா சில குறள்களோட விளக்கங்களைப் படிச்சிப் பார்த்தப்ப , சில பல குறள்கள்ள , மு.வ , சாலமன் பாப்பையா, கருணாநிதி விளக்கங்கள் கொஞ்சம் அப்படி இப்படின்னு மாறுபட்டு இருந்தது கூட ஆச்சர்யமா இருந்துச்சு.

தலைவர் வள்ளுவரோட குறள்கள் MBA படிப்புக்கு உதவுற அளவுக்கு அதுல விஷயம் இருக்குன்னு கூட ஒருத்தரு அழகா ஒரு புக்கே  போட்டது கூட இப்ப ஞாபகத்துக்கு வருது.

அப்படியே சும்மா புரட்டி ,வள்ளுவர் அய்யா ,என்னென்ன கவர் பண்ணிருக்காருன்னு சும்மா ரேண்டமா பாத்தப்ப , இந்த தொடர்ல யூஸ் பண்ண குறள்கள் தட்டுபட்டுச்சு. அப்ப திடீர்னு ஒரு ஐடியா , சரி இந்த குறள்கள அடிப்படையா வச்சு ஒரு க்ரைம் எழுதலாமேன்னு.  

மொதல்ல ஐடியா வந்தது ,சமூகத்துல இப்ப நடக்குற கொலை,கொள்ளை , கள்ளக் காதல் ,இதப் பத்தி அவர் அப்பவே நெறைய எழுதியிருக்குராறு ,சரி இந்த மாதிரிக் குற்றங்கள அடிப்படயா வச்சு வள்ளுவனார் சொன்ன அறிவுரையை லிங்க் பண்ணுவோமுன்னு நினைச்சி ஆரம்பிச்சி ,சரி ரொம்ப அறுவையா போயுடுமொன்னு பயத்துல , கிரைமா மாத்திட்டேன். 

இதுல பாருங்க, அய்யா எழுதுனது பல நூறு வருசத்துக்கு முன்னே ,கட்டாயம் அப்ப அவரைச் சுத்தி நடந்தத வச்சு தான் அவர் எழுதியிருக்கணும். அந்த மாதிரி விஷயங்கள் இப்பவும் நம்மள சுத்தி நடக்குறப்ப, நாம எவ்வளவு நூறு வருஷம் ஆனாலும் 'அடிப்படை புத்தி' மட்டும் பிறவி மேல பிறவி எடுத்தும்  மாறவே இல்லைன்னு தான் தெளிவா காட்டுது. 

நீங்களும் போன்ல டவுன்லோட் பண்ணி ஆர்வமிருந்தாக்க படிங்க :


கட்டாயம் அடுத்த பதிவுல நம்ம 'க்ரைம' முடிச்சி வக்கிறேன். அதுவரைக்கும் ,

'தடங்கலுக்கு வருந்துகிறேன்!'

--தொடரும் ...


Tuesday, November 8, 2011

என்னை ஏதோ செய்கிறாள் - 3 -கிரைம் தொடர்

முந்தைய பாகங்களைப் படித்து விட்டு தொடரவும்.
       part 1 

       Part 2இன்ஸ்பெக்டர் கணேஷ் , தன் உயரதிகாரிக்கு இரண்டு கொலைகளைப் பற்றியும் விளக்க அழைக்கப்பட்டார். சஞ்சனா கொலைக்கும் , MLA கொலைக்கும் இடையில் உள்ள ஒரே பேட்டர்ன் , இரண்டு திருக்குறள் டச். ஆனால் அந்த குறள்களின் அர்த்தங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாததையும் எடுத்துக் கூறினார். என்ன பண்ணுவீங்களோ எனக்குத் தெரியாது ,சீக்கிரம் முடிக்கணும் என்று உத்தரவு வர , "என்கிட்டே எகிறுனா நான் என்ன பண்ணுவேன், இளையதாசன் தான இந்த கதைய எழுதுறாரு ,அவரப் போயி கேளுங்க " என்று மனதினுள் நினைத்தவாறே , "எஸ் சார் , ஓகே சார் ,நோ சார் " என்று மணி ரத்னம் ஸ்டைல் பதில்களைச் சொல்லி , விட்டால் போதும் என்று அங்கிருந்து நழுவினார் இன்ஸ்பெக்டர்.

ஸ்டேசனில் உக்கார்ந்து நாயர் கடை டீயை சுவராஸ்யமாக உறிஞ்சி குடித்துக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் கணேஷ்,கான்ஸ்டபில் ராமின் வருகைக்காக காத்திருந்தார்.  கான்ஸ்டபில் ராம் மழையில் நனைந்ததால் உடல் நடுங்க , இன்ஸ்பெக்டரின் அறைக்கு வந்து ஒரு சல்யுட் வைத்தார். 

"என்னய்யா , MLA ஒய்ப் என்ன சொல்றாங்க?"
"சார் , MLA பத்தி நல்லா விசாரிச்சேன் ,நீங்க சொன்னபடி ,அவரின் அந்தரங்க விஷயம் பத்தி கேட்டுப் பார்த்தேன், ரகசியம் எதுவுமில்ல"
"நல்லா கேட்டியா , அரசியல்ல இருக்குறாப்ல ,வேற ஏதாவது பொம்பள விவகாரம் எதாச்சும் இருக்கா"
"சார் ஆள் ஒழுக்கமான ஆள் தான் போல இருக்கு சார், தான் காலேஜுல ஒரு பொண்ண விரும்புனதக் கூட பொண்டாட்டி கிட்ட மறக்காம சொல்லிருக்கரு சார்"
"அப்படியா ,யார் அந்த பொண்ணுன்னு வெவரம் கேட்டியா?"
"இல்ல சார் , காலேஜுல லவ் பண்றது சகஜமான விசயமாசேன்னு ஒன்னும் மேக்கொண்டு கேட்கல சார்"
"சரி விடு, போய் தலையத் துவட்டு மொதல்ல" என்று ராமை அனுப்பி வைத்துவிட்டு தலையை பிடித்துக் கொண்டு உக்கார்ந்தார்.

ஏதோ உள்ளுணர்வு எச்சரிக்க ,உடனே MLA மனைவிக்கு போனைப் போட்டார்.

"அம்மா ,நான் இன்ஸ்பெக்டர் கணேஷ் பேசுறன்"
"சொல்லுங்க சார்" ரொம்பவும் சன்னமாக MLA வின் மனைவி.
"கான்ஸ்டபில் கிட்ட அய்யாவோட காலஜ் காதலி பத்தி ஏதோ சொன்னிங்கன்னு கேள்விப் பட்டேன்."
"ஆமா சார், ஏன் கேட்குறீங்க?"
"இல்ல ,அவங்க யார் ,என்ன விவரமுன்னு கேட்கலாமுன்னு..."
"அவங்க பேரு ஜமுனா, திண்டுக்கல் சேந்தவங்க,எங்க கல்யாணத்துக்கப்புறம் 
  ஒரு நாள் அவங்க வந்திருந்தாங்க, அவங்க போன் நம்பர் மட்டும் இருக்கு வேணுமா சார் "
"கொடுங்க ,கொடுங்க " ஆர்வத்துடன் அந்த நம்பரை கேட்டு வாங்கினார் கணேஷ். 

வெகு நேரம் அந்த என்னை தொடர்பு கொண்டும் நோ ரிப்ளையாக இருந்தது.
திண்டுக்கல் இன்ஸ்பெக்டரை தொடர்பு கொண்டு ,விவரம் கூறி , ஜமுனாவின் அட்ரசைக் கண்டுபிடித்து ஒரு நடை பார்த்து வருமாறு வேண்டிக் கொண்டார் .

திண்டுக்கல் எஸ்.ஐ ,ஜமுனாவின் அட்ரசைக் கண்டுபிடித்து , அங்கே போய் பார்க்க ,வீடு பூட்டி இருந்தது . பக்கத்து வீட்டில் விசாரிக்க , முந்தா நேத்து இருந்தே பூட்டி இருக்கு சார் என்றார்கள். அந்த எஸ்.ஐ கணேஷுக்கு விசயத்தை செல்லில் கூப்பிட்டு தெரிவத்தார். ஜமுனாவின் பக்கத்து வீட்டுக் காரரிடம் ,ஜமுனா வந்தாங்கன்னா எங்க நம்பரக் கூப்பிடச் சொல்லுங்க என்று அவரின் நம்பரை கொடுத்துவிட்டு புறப்பட்டார் அந்த இன்ஸ்பெக்டர்.

மறு நாள் காலையில் , திண்டுக்கல் எஸ்.ஐ மொபைல் அதிர , 
"ஹலோ எஸ் ஐ பேசுறன், யார் அங்க"
"சார் , நான் ஜமுனா வீடு பக்கத்து வீட்ல இருந்து கூப்பிடுறன் சார்"
"எந்த ஜமுனா?"
"சார் நேத்து வந்து விசாரிசீங்கல்ல "
"அட ஆமாம் ,மறந்தே போயிட்டேன்,சொல்லுங்க என்ன விஷயம்,அவங்க வந்துட்டாங்களா?"
"இல்ல சார், அவங்க வீட்ல இருந்து ஒரே bad smell வருது சார்,நாதம் பொண நாத்தமுன்னு சொல்லுவாங்கல்ல அது மாதிரி இருக்கு சார், கொஞ்சம் வந்து பாருங்க சார் ப்ளீஸ்  "
"அப்படியா சரி நான் உடனே வரேன்".

      ௦௦௦௦௦௦௦௦(((()))))))))))௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦

ஜமுனாவின் வீட்டை உடைத்து உள்ளே புகுந்த போலீசார் ,கர்சீப் கொண்டு மூக்கை உடனே பொத்திக் கொண்டனர். உள்ளே ஹாலில் , ஒரு பெண்ணின் பிணம் அழுகத் தொடங்கிய நிலையில். பக்கத்து வீட்டுக் காரரை கூப்பிட்டு காமிக்க ,அவர் அருவருப்புடன் அந்த உடம்பை பார்த்துவிட்டு , "ஆமா சார் ,அவங்க தான் அது " என்று கன்பார்ம் செய்தார்.

திண்டுக்கல் எஸ்.ஐ ,அப்போது தான் டீ.டேபிளின் மேல் இருந்த அந்த காகிதம் அவர் கண்ணைக் கவர ,அதனை எடுத்துப் படித்தார் . அதில் இருந்தது ,கரெக்டா யுகிசுருபீங்களே ,ஆமா அதே தான் ,மறுபடியும் ஒரு திருக்குறள் :

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
 தீயுழி உய்த்து விடும்.

 குறிப்பு : கருணா நிதி 


திண்டுக்கல் எஸ்.ஐக்கு  , இன்ஸ்பெக்டர் கணேஷ் சொன்ன விஷயங்கள் நினைவுக்கு வர, உடனே அவரை தொடர்பு கொண்டு பேசி விவரத்தை எடுத்துரைத்தார். ஓவர் தி போன்லயே குறளைப் படிக்கச் சொல்லி கேட்டுக் கொண்ட இன்ஸ்பெக்டர் கணேஷ் , ஆர்வத்துடன் ராமின் போனில் மீண்டும் குறளைத் தேடி பொருள் அறிந்தார். பொருள் உங்களுக்கு தெரியவில்லை என்றால் இது தான் அது :

பொறாமை எனும் தீமை ஒருவனுடைய செல்வத்தையும் சிதைத்துத் தீய
வழியிலும் அவனை விட்டுவிடும்.


இந்த கேச தீத்தே ஆகணும் என்ற வெறியில் இன்ஸ்பெக்டர் கணேஷ் ,திண்டுக்கல்லுக்கு உடனே கிளம்பிவிட்டார். வெளியில் நல்ல மழை சாத்தோ சாத்து என்று சாத்திக் கொண்டிருந்தது.

திண்டுக்கல்லை அடைந்து போலீஸ் ஸ்டேசனில்  நுழைந்த இன்ஸ்பெக்டர் கணேஷை வரவேற்றார் அந்த ஊரின் எஸ்.ஐ.   டீ உபசரிப்புக்கு பின் ,
"என்ன சார் நல்ல மழையில் கெளம்பி வந்துடீங்களே "
"ஆமா சார், இன்னும் எத்தனை கொலை விழப் போகுதே ,எப்படியாச்சும் கண்டுபிடிக்கணும் பாருங்க , ஏற்கனவே மேல இருந்து பிரசர் வேற , MLA மர்டர் 
பெரிய விசயமாயடிச்சி, பத்திரிக்க காரனுங்க வேற , இல்லாததையும் பொல்லாததையும் எழுதி , நம்ம வேலைக்கு வெட்டு வச்ருவாங்க போல"
"ஆமா சார், நானும் ஆரம்பத்துல இருந்து இப்ப தான் கேஸ் டீடைல்ஸ் பார்த்தேன்,
 ஒன்னும் புரியலையே சார் "
"நாம தான் படிசிருக்கமே சார் எப்படியும் கொலையாளி ஏதாவது ஒரு விஷயம் அஜாக்கிரதையா விட்டுட்டுப்  போயிருப்பான்  சார் , அந்த ஜமுனா வீட்டை நல்லா சோதனை செஞ்சீங்களா"
"ஒ எஸ் , ஒன்னும் கெடைக்கல சார்  , இதோ இந்த பேப்பர் தான் இதுல  அந்த குறள்"

அந்த பேப்பரின் பின்புறத்தை பார்த்த இன்ஸ்பெக்டர் கணேஷ் ஒரு நிமிடம் திகைத்து , "சார் அத இப்படிக் கொடுங்க " என்று வாங்கிப் பார்த்தவரின் முகம் , குழம்பிக் கிடந்த குட்டை மெல்லத் தெளிவதைப் போல ,கொஞ்சம் கொஞ்சமாக பிரகாசிக்கத் தொடங்கியது.

--தொடரும் 

டிஸ்கி : அடுத்த பதிவில் முடிவடையும். பிடித்திருந்தால் நண்பர்களுக்கு பரிந்துரைக்கவும் . நன்றி. 
Monday, November 7, 2011

என்னை ஏதோ செய்கிறாள் - 2 -கிரைம் தொடர்

குறிப்பு:  முதல் பாகத்தை படிக்காதவர்கள்   Part-1-லிங்க் படித்துவிட்டு இங்கே தொடரவும். 

சஞ்சனாவின் கடிதத்திற்கு அர்த்தம் கண்டுபிடித்தாலும் அதன் உள்அர்த்தம் புரியாமல் இன்ஸ்பெக்டர் மனம் யோசனையில் ஆழ்ந்தது. "சரி நம்ம இன்னும் கொஞ்சம் தீர விசாரித்தால் தான் ஏதாவது விளங்கும் போல" என்று மனதினுள் நினைத்துக் கொண்டே , "ராம் ,வாயா போலாம் , சும்மா எப்பப் பாத்தாலும் அரசியல் வாதிங்க பாதுகாப்புக்கும் , பஞ்சாயத்துக்கும் போயி அலுத்து போன நம்மக்கு, நல்ல வேட்டை,இந்த மாதிரி கேசுங்க கெடச்சி ரொம்ப வருசமாச்சு " என்று சொல்லியவாறே , அவனை ஜீப்பை எடுக்கச் சொல்லி வெளியேறினார்.

கண்ணன் வீட்டிற்கு மறுபடியும் போலீஸ் ஜீப் வந்திருப்பதை பார்த்து , பக்கத்துக்கு வீட்டு ஜன்னல்களும்,கதவுகளும் ஆர்வத்துடன் கவனிக்கத் தொடங்கின. 

"சார் வாங்க சார் , கூப்பிட்டா நானே வந்திருப்பனே" - கண்ணன் 
"இல்ல கண்ணன்,அன்னிக்கி சரியா பாக்க முடியல,உங்க மனைவி இறந்த ரூம் கொஞ்சம் சோதனை போடணும்"  என்று அதில் நுழைந்தார் இன்ஸ்பெக்டர் கணேஷ்.

அந்த ரூமில் சஞ்சனா போட்டோ வைத்து அதற்கு மாலை போடப்பட்டு , ஜீரோ வாட்ஸ் எலெக்ட்ரிக் பல்ப் எரிந்து கொண்டிருந்தது. கண்களை சுழற்றி பார்வையிட்ட கணேஷின் கண்களில் அந்த போட்டோ பட்டது. அதில் சஞ்சனா மற்றும் இரு பெண்கள் சிரித்தவாறே இருக்க,சஞ்சனா கையில் ஒரு கோப்பை .இன்ஸ்பெக்டர் அருகில் நின்றிருந்த  கண்ணனை பார்த்து ,
"அந்த போடோல இருக்குறது உங்க மனைவி தான?"
"ஆமா  சார் , அவ காலேஜுல, திருக்குறள் போட்டி வச்சு முதல் பரிசு 
வாங்குனப்ப எடுத்த போட்டோவாம்,கல்யாணம் ஆகி அவ எங்கிட்ட பெருமையா சொல்லிகிட்டுருந்தா "
"அப்படியா ,அப்ப உங்க மனைவிக்கி தமிழ் மேல ரொம்ப ஈடுபாடுன்னு சொல்லுங்க,கூட இருக்குற ரெண்டு பேரு அவங்க பிரண்ட்சா?"
"ஆமா சார், அப்படிதான் அவங்க அப்பா,அம்மா சொல்லிக்கிட்டுருந்தாங்க"
"உங்க மனைவிக்கி எந்த ஊரு?'
"சார் , மணப்பாறை சார் "
"எது இந்த முறுக்குக்கு பேமசா இருக்குமே அதா?"
"ஆமா சார்"
"சரி, உங்க மாமனார் விலாசம் கொடுங்க ,விசாரிக்கணும்"

             ௦௦௦௦௦௦௦௦*******௦௦௦௦௦௦௦

மணப்பாறை எஸ்.ஐ கார்த்திக் ,கணேஷின் வேண்டுகோளுக்கிணங்க , சஞ்சனாவின் வீட்டில் விசாரித்துவிட்டு ,கணேஷிற்கு போன் செய்தார்.
"சொல்லுங்க கார்த்திக், ஏதாவது தெரிஞ்சுச்சா?"
"சார் நான் விசாரிச்ச அளவுல பெருசா ஒன்னும் தெரியல சார்,அந்த பொண்ணு எம்.ஏ தமிழ் படிச்சிருக்கு போல , கண்ணன் தூரத்து உறவினன் போல , பய்யன் வெளி நாட்டுல வேல செய்றதுனால, வசதிக்கு குறச்சல் இருக்காதுன்னு கட்டிக் கொடுத்திருக்காங்க, இது வரைக்கும் அவனப் பத்தி எந்த கம்ப்ளைன்ட்டும் அம்மாகிட்ட சஞ்சனா சொன்ன மாதிரி தெரியல,மக இறந்த துக்கத்துல இருக்கிறதால இதுக்கு மேல விஷயம் எதுவும் கறக்க முடியல சார்,வேணும்னா ஸ்டேஷன் கூட்டி வச்சு முறைப்படி அவ அப்பாவ விசாரிக்கவா  "
"ஓ அப்படியா, பரவாயில்லங்க கார்த்திக், விசாரிச்சதுக்கு தேங்க்ஸ், நான் வேற ஏதாவது வேண்டியிருந்தா அப்புறம் கூப்பிடுறேன்"
"ஓகே சார் " என்று கார்த்திக் போனை வைத்தார்.

போலீஸ் நிலைய போன் ஒலித்தது ,அதனை எடுத்த கான்ஸ்டபில் ,
"அப்படியா ,எங்க ,அவர் வீட்லையா,சரி நான் அய்யா கிட்ட உடனே சொல்றேன்" என்று வைத்துவிட்டு, இன்ஸ்பெக்டர் கணேஷிடம் வந்து ,
"சார் , நம்ம ஊரு MLA வை யாரோ கொலை பண்ணிடான்கலாம்,
 பாடி அவர் வீட்ல தான் கெடக்காம்" என்று அதிர்ச்சி கம் பவ்யத்துடன் சொன்னார்.

"என்ன?" என்று உடனே இருக்கையை விட்டு எழுந்த இன்ஸ்பெக்டர் , மற்ற காவலர்கள் இருவரை அழைத்துக் கொண்டு எம்.எல்.எ வீட்டிற்கு விரைந்தனர்.

MLA வீட்டில் அவரின் அடிவருடிகள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுது கொண்டிருந்தனர் . இன்ஸ்பெக்டர் கணேஷ் , MLA பாடியை பார்க்க, மண்டை உடைபட்டு , தரை எங்கும் ரத்தக் காடாக இருக்க , சுத்தி வேற ஏதும் தடயம் இருக்கிறதா என்று பார்க்க தொடங்கிய கணேஷுக்கு வேற எதுவும் கிடைக்கவில்லை.ஆக வேண்டிய காரியத்தை உடன் வந்த போலிஸ்களுக்கு கட்டளையிட்டுவிட்டு, வீட்டை விட்டு வெளியில் இறங்கினார் இன்ஸ்பெக்டர்.

இறந்து போன அந்த MLA மிகவும் இளைய வயது. சமீபத்தில் தொடங்கிய கட்சியில் பணத்தை தண்ணியாக செலவழித்து ,புதிதாக ஆரம்பித்த மாநில கட்சியில் சேர்ந்து , குறுகிய காலத்தில் MLA ஆகிவிட்டவர்.

அரசியல் எதிரிகளா , இல்லை உள்கட்சி சதியா என்ற ரீதியில் போலிஷ் விசாரணை போய்க்கொண்டிருக்க , அவரின் மனைவி , இன்ஸ்பெக்டரிடம் வந்து அந்த கடிதத்தை கொடுத்தார். அதனைப் படித்த இன்ஸ்பெக்டர் கணேஷ் , ஒரு சின்ன ஜெர்க்குடன் நாற்காலியின் நுனிக்கு வந்தார்.  அந்த கடிதத்தில்,எனைத்துணையார் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
 தேரான் பிறனில் புகல்.

குறிப்பு :  சாலமன் பாப்பையா

இதென்னடா புது வகை கொலைகாரனா இருக்கான் , ஒரு வேளை , தமிழ் இலக்கியம் அதிகமா படிச்ச மென்டலா இருப்பானோ ,சஞ்சனா கேசுக்கும் இதுக்கும் தொடர்பு இருக்குற மாதிரி இருக்கே , ஆனால் செத்துப் போன ரெண்டு பேருக்கும் ஒரு தொடர்பும் இருக்குற மாதிரி தெரியலையே ..ஹ்ம்ம் இண்டரஸ்டிங் , சரி இந்த குறள் மீனிங் என்னன்னு பாப்போம் என்று மீண்டும் ராமின் போனை வாங்கி அர்த்தத்தை படித்தார், அது :

அடுத்தவன் மனைவியை விரும்பித் தன் பிழையைச் சிறிதும் எண்ணாமல் அவ்வீட்டில் நுழைபவன் எத்தனைப் பெருமை உடையவனாய் இருந்துதான் என்ன?

"ஹா ,இதுல போட்ருக்க படி பார்த்தா , MLA ஏதோ வம்பிழுத்த மாதிரி தெரியுதே"

ஏதோ லேசாக பிடிபட்ட மகிழ்ச்சியில் , மீண்டும் சஞ்சனாவின் வீட்டிற்கு விசாரிக்க கிளம்பினார். கண்ணன் வெளி நாட்டில் இருந்ததால் ,அவனுக்கு எதுவும் தெரியவில்லை. பக்கத்து வீடுகளில் விசாரிக்க , MLA வோ , அவரின் ஆட்களோ வந்து போனதற்கான அறிகுறியோ வேறு  எந்த மேலதிக தகவுலும் 
கிடைக்காமல் வெறுத்துப் போய் ஸ்டேஷன் திரும்பினார் இன்ஸ்பெக்டர்.

--தொடரும் ...