Wednesday, August 20, 2014

இரா.பார்த்திபன் செய்தது சரியா?

கதை , திரை...டைரெக்சன் படத்தைப் பற்றி , இடைவிடாமல் தொல்லைக் காட்சியில் தொல்லை செய்தார்கள் . சும்மா சொல்லக் கூடாது , அதிலேயே படத்தில் வரும் சில வசனங்களைத் தூவி எதிர்பார்ப்பை எகிற வைத்தார்கள். என் மனதில் தோன்றியது , நம் பிரபல பதிவரும் அவர் படத்தில் இது போல் வசனங்களை வைத்து , நம் எதிர்பார்ப்பை தூண்ட வைத்ருக்கலாமென்று.ஆனால் அவரின் டீசரில் ஒன்னையும் காணோம் . ஆனால் சூப்பர் அப்படி, இப்படின்னு அல்லைகைகள் அலும்பு தாங்க முடியலப்பா! அண்ணா , கொஞ்சம் டீசறை மாத்துங்கன்னா ... பாப்போம் சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் ,  ஐ யாம் வைடிங் .

பணப் பற்றாக் குறையோ என்னமோ, சன் நூசில் , திரையுலகத்தில் ஒரு புரட்சி என்ற ரீதியில் ,'விவாத மேடை' என்ற நிகழ்ச்சி வாயிலாக செய்த பட புரமோசன் ஒன்றில்  , நம்ம டைரக்டரிடம்  ஒருவர் கேட்டார்..."சார் , புதிய பாதைக்கபுரம் , இந்த படத்தில்தான் சார் , நீங்க மீண்ட்ருக்கீங்க என்ற ரீதியில் நெஞ்சை நக்கினார் "...பார்த்திபனிடம் ஒரு சங்கடமான ஆமோதிக்கும் ஒப்புதல் சிரிப்பு ...அதைக் கேட்டவுடன் எனக்கும் அதே கேள்வி தான் ....

புதிய பாதையில் உச்சத்தைத் தொட்டவர் , சுகமான சுமைகள் என்று கண்ணீரை "பக்கட் பக்கட்" டாக கொட்டுமளவுக்கு  படம் எடுத்தார். ஆடியன்ஸ் ஒரே அப்செட். அடுத்து 'பொண்டாட்டி தேவை' என்று எடுத்து 'குட் மார்னிங்' என்று கன்றாவி கிரியேட்டிவிட்டியை தன் 'குரு' போல் வைத்து ஒப்பெத்தினார். பருப்பு வேகவில்லை.

என்ன பண்ணுவது என்று தெரியாமல் , 'உள்ளே வெளியே' என்று , டபுள் மீனிங் படத்தை வெளியிட்டார். படம் அவரின் வயிற்றையும் , வாயையும் நிரப்பியது. அடுத்து பூஜைப் போட்டே காசு சம்பாரிப்பவர் என்று பேர் வாங்கினார்.

க.தி.வ.டைரக்சன் படத்தில் அவர் வசனம் வைத்தது :  'குடும்பத்தோடு படம் பாக்க , அதென்ன பொண்ணு பாக்க போர மாதிரியா,போனமா , விசிலடிச்சமா , வந்தமான்னு இல்லமா' .  இப்பவும் , அப்பவும் அவர் நிலை போலும். அதனால் தான் , 'பச்சக் குதிரை ' என்று , மீனாவையும் , கும்கி நமீதாவையும் புரட்டி எடுத்தார்.

'வித்' -அ -கன் ' என்று வார்த்தை ஜாலத்துடன் பரீட்சித்துப் பார்த்தும் போனியாகவில்லை. காலம் ஓடிக் கொண்டிருக்கிறது . அவரின் இந்தப் படத்தில் சொல்வது போல் , டிரண்டு மாறிக் கொண்டிருக்கிறது.

குறும்படம் எடுக்கிறார்கள் , வெற்றி பெற்று , அடுத்த படம் எடுக்கிறார்கள். என்ன பண்ணுவது என்று யோசித்தார். பலர் பிற மொழி படங்களின் குறுந்தகடைப் பார்த்து , உட்டாலக்கடி பண்ணி , காசை அள்ளுவதைப் பார்த்தார். உள்ளம் கொதித்தது.

பொதுவாக , சினிமாவைப் பற்றி படம் எடுத்தால் , ஓடவே ஓடாது என்பது திரையுலக விதி. அதையும் மீறி , கதையே இல்லை என்று சொல்லியாகிவிட்டது , ஆனால் , கதையை விவாதிக்க , ஒரு சினிமா களம் தான் லாயக்கு என்று முடிவு செய்தார். பல படங்களின் டிஸ்கசன் போல் , திரை கதையை கோர்க்க ஆரம்பித்தார்.

பொதுவாக சினிமா டைரக்டர்கள் , தங்கள் முதல் படத்தின் கதையில் , தங்கள் வாழ்வில் நடந்த சுவையான காதல் கத்திரிக்காய் சமாசாரங்களை சீனாக வைப்பார்கள். இந்த படத்திலும் அதே போல் , ஹீரோ டைரகிடர் செய்வதாகக் காட்டி , குத்திக் காட்டுகிறார்.

ஆர்யா, அமலாப் பாலை வைத்து நெஞ்சை நக்கும் ஒரு குறும் படம் எடுத்துக் காட்டுகிறார். சூது கவ்வும் படத்தில் வரும் இல்லாத பெண் ஒன்றை இருப்பது போல் காட்டியதையும் கிண்டல் செய்து , இதிலும் ஒரு சீன் வைத்து தன ஆத்திரத்தை தீர்த்துக் கொள்கிறார்.

என்னடா பெருசா சீன் பிடிக்றீங்க , 'அந்தக் காலத்திலேயே' டுவிஸ்ட் வச்சு படம் எடுத்திருக்காங்க என்று சில பல கருப்பு வெள்ளைப் படங்களைக் காட்டி, 'நூறாண்டு கால சினிமாவுக்கு டிரிபுட் ' என்ற விளம்பரத்திற்கு அர்த்தம் சொல்லிக் கொடுக்கிறார்.

திடீர் என்று , ஹிரோவும் , ஹிரோயினும் , தனித் தனியாக குளிப்பதைக் காட்டி சூடேத்துகிறார். கேட்டால் , 'ஆடியன்ஸ் வெக்ஸ் ' ஆயிடுவாங்கன்னு ப்ரொட்யுசர் கவலைப் பட்டார் என்று சால்ஜாப்பு சொல்லி பலியை நம் மீது போட்டுவிடுவாராக்கும். ஆனால் உண்மை என்னவென்று , எனக்கு அவர் சன் தொலைக் காட்சியில் காலை வணக்கம் நிகழ்ச்சியில் சொன்னதில் இருந்தே அவரைப் பற்றி புரிந்து கொள்ள முடிந்தது . அவரிடம் , 'நீங்க இப்ப எந்த கீரோயின் கூட கிரோவா நடிக்க ஆசைப் படுறீங்க ' என்று கேட்டதுக்கு , 'நித்யா மேனன் ' என்று சொல்லி 'ஏ' ன்னா அவங்கதான் 'ஹெவியா ' நடிப்பாங்க என்று புன்முறுவலுடன் சொல்லியதில் இருந்தே.

அவரிடம் திறமை இருக்கிறது இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அவரும் சராசரி மனிதன் தானே. அவரின் இப்படத்தில் தம்பி ராமையா சொல்வது போல் , 'திறமை , அனுபவம் ' மட்டும் போதாது , லக்கு வேணுமாம் , அதுக்கு நான் எங்கே போவேன்' என்று வசனம் வரும். அதனால் தான் என்னவோ   இரா .பார்த்திபனில் இருந்து ராதா கிருஷ்ணன் பார்த்திபனாகி 'லக்'கை தேடிக் கொண்டுள்ளார்.

படத்தில் எனக்குப் பிடித்த ஒரே வசனம் ,

அமலா பால் ஆர்யாவிடம் :  இன்னைக்கு நைட் என்ன டிப்பன் ?
ஆர்யா:  நீ போதும்!

அப்புறம் நானும் இரா.பார்த்திபன் விசிறி தானே அப்புறம் எப்படி இருப்பேன் ...இல்ல இல்ல இராதா கிருஷ்ணன் பார்த்பன் விசிறியாக்கும்!


'அஞ்சால்' அலுப்பு மருந்துக்கு இது எவல்லவோ தேவலை ...போங்க என்ஜாய் பண்ணுங்க , அப்புறம் மறந்திடுங்க!Monday, July 14, 2014

இது செல்வராகவன் கதை இல்லை!


விக்னேஷ் அன்று ரொம்ப சந்தோசமாக இருந்தான். அவன் நீண்ட நாளாக காத்திருந்த ,  ஒரு எம் என் சி கம்பெனியில் மென் துறை வல்லுநர் வேலை. அவன் தங்கியிருந்த இளவட்ட மேன்சனில் அவனுக்கு ஒரே பாராட்டு மழை. "மச்சக்காரன்டா , இனிமே உன் காட்டுல ஒரே பொண்ணுங்க மழைதான் !" என்று ஆளாளுக்கு ஏத்தி விட்டுப் போனார்கள்.


விக்னேஷ் கிராமப் புறத்தில் உள்ள ஒரு கல்லூரியில் , கணிப்பொறியியல் படித்தவிட்டு, அங்கே இங்கே என்று கிடைத்த வேலையை பார்த்து விட்டு , இப்போது தான் , ஒரு நல்ல வேலையை ஒரு வழியாகப் பிடித்தவன். அவன் துரதிர்ஷ்டம் , அவன் இது வரைப் பார்த்த வேலையில் இதுவரை பெண்களே இருந்ததில்லை. அதற்காகவே , அவன் ஒரு நல்ல கம்பனியில் , பெண்கள் புடை சூழ , வேலை செய்ய வேண்டுமென்பது அவன் அவா.

அன்று வேலைக்கு சேரும் நாள். ஆவலுடன் , இருப்பதில் நல்ல உடையாக தேர்ந்தெடுத்து உடுத்திக் கொண்டு போனான். அந்த எம் என் சி  கம்பனியில் நுழைய எத்தனிக்க , அங்கிருந்த வடக்கத்தி காவலாளி பேட்ஜ்  இல்லாத இவனைப் பார்த்தவுடன் , புதுசு என்று தெரிந்து கொண்டு தன் பவுசைக் காட்ட ஆரம்பித்தான். 'எங்கே போற பெரிய மொதலாளி மாதிரி ' என்ற தொனியில் அவனை மறித்தான். அவனிடம் தன்னிடம் இருந்த ஈமெயில் காட்ட , 'உள்ள போயி , வலது பக்கம் திரும்பி , அங்க இருக்கிற கான்பரன்ஸ் ஹாலில்  உக்காரு' என்று உடைந்த ஆங்கிலத்தில் கட்டளையிட்டான்  அந்த காவலாளி.

தான் கொண்டு வந்திருந்த எல்லா சான்றிதழ்களையும் சோதித்துவிட்டு  அவனை அவசர புகைப்படம் எடுத்து, கையில் சுடச் சுட  'ஐ டீ ' கார்டை நீட்டினார்கள். பின், 'ஓரியன்டேசன்' என்ற பெயரில் நாள் முழுதும் கம்பனி பாலிசிஐ வாந்தி எடுத்து , அவனையும் , மற்ற புதுசுகளையும் நனைத்து எடுத்துவிட்டார்கள். விக்னேசின் ஒரே ஆறுதல் , சில பல பளிச் பிகர்கள். கிடைத்த லஞ்ச் கேப்பில் ஜொள்ளு விட கிடைத்த சந்தர்ப்பம். இருந்த சில பல பளிச்களில் அவனுக்குப் பிடித்த பிகரை , மனதுக்குள் 'லைக்' போட்டுக் கொண்டான்.


மறு நாள், அவன் டீமை சந்திக்கும் நாள் என்பதால் ஆவலுடன் , வேலைக்கு  முன்னதாகவே வந்து விட்டான் . அன்று 'ஐ டீ' இருந்ததால், மிஸ்டர் பீன் போல் அதை தூக்கி காட்டிக் கொண்டே உள்ளே போனான். அதிசயமாக எல்லா காவலாளிகளும் அவனுக்கு 'காலை வணக்கம்' வைத்தனர்.

அவன் டேமஜருக்காக காத்திருந்தான். அப்போது அந்த அதிசயம் நடந்தது. ஆம் அங்கே , அவன் முன்பு லைக் போட்டு வைத்த பிகர் , அங்கே வந்தாள் . வந்தது மட்டுமில்லாமல் , 'ஹாய் ' என்றாள். அவ்வளவு தான் , விக்னேசின் மண்டையில், உடனே , ஜி.வீ பிரகாசுடன் , நா முத்துக் குமாரும் சேர்ந்து , புதுசாக மெட்டுப் போட்டு பாட்டே கட்டமைக்க ஆரம்பித்து விட்டார்கள்.

--தொடரும்


Tuesday, June 24, 2014

ஹா ஹா ...ஹி ஹி ....


இது தினமலரில் வந்த வாட்ஸ் அப் கலக்கல்...

Wednesday, June 18, 2014

சூப் பாய்ஸ்

இது ஒரு  காக்டெயில்  சாங்க்ஸ்  காதல் சகதியில் சிக்கி பெண்களை வெறுப்பவர்க்கு. இது என் பேஸ் புக் ஸ்டேடஸ் அல்ல.


Thursday, May 22, 2014

கருணாநிதி என்ன கடவுளா?

என்னைப் பொறுத்தவரை அருமையான கட்டுரை , படித்து மகிழ்வீர் ...


http://www.dinamani.com/editorial_articles/article935616.ece

Sunday, April 13, 2014

நடு நிசி நாய்கள்!

"தூக்கமே வரலப்பா , அதனாலதான் ஒரு குவார்ட்டர் அடிக்கிறேன்!" என்று சாக்கு சொல்லி தூக்கத்தை வரவழைப்பார் பலர்.  'அது என்ன மாயமோ , மந்திரமோ தெரியல',  அவ்வாறு குவார்ட்டர் அடிச்சு கவுந்தால் ,  விடியும் முன்பே , மூன்று அல்லது நான்கு மணிக்கெல்லாம் தூக்கம் போய் விடுகிறது. "ஏன்?"  என்று நண்பனிடம் கேட்டால் , "உடம்பு நல்லா 'ரெஸ்டு  எடுத்திருசிள்ள, அதனால் தான் "என்கிறான். உண்மை இல்லை என்று தெரிந்தாலும் , அவன் மனம் வருத்தப் படாமல் இருக்க வேண்டுமே என்று ஆமாம் என்று ஒத்துக் கொள்ள வேண்டியதாயிற்று.

கடந்த வெகு சில நாட்களாக , அப்படி குவார்டர் கோவிந்தன் முயற்சி எதுவ்மில்லாமலே , மூன்று மணிக்கெல்லாம் தூக்கம் போய்விட்டது. போய்விட்டதென்பதை விட, போக வைத்துவிட்டன.  யார் தெரியுமா ?  மறுபடியும் பதிவுத் தலைப்பை படியுங்கள். ஆமாம் ,  தெரு நாய்கள். என்ன காரணம் என்றே தெரியவில்லை , சரியாக , அதிகாலை மூன்று மணிவாக்கில் ,  ஒன்றன் பின் ஒன்றாக , மாறி  மாறி , குலைத்து படுத்தி எடுத்தன. அதிலும் , ஒரு நாயின் குரல் நிதமும் கேட்பதால் நன்றாக பழகி விட்டது. மற்ற நாய்களெல்லாம் குலைத்து  களைத்த பின்பும் , அது மட்டும் விடுவதாய் இல்லை.  விடாக் கொண்டனாக நீட்டிக் கொண்டே போனது.  எனக்கு மட்டும் நாய் பாஷை தெரிந்து இருந்தால், கெட்ட வார்த்தையால் அதை திட்டி ஒரு வழி பண்ணியிருக்கலாம். 

இது பண்ணும் ரகளையால் , ஆபீசுக்கு  நேரத்தில் எழுந்து செல்லும் என்னைப் போன்றவனுக்கு இந்த திடீர் நாய் தொந்தரவுகள் பெரிய இம்சை அரசனாக மாறிக் கொண்டிருந்தது.  பெங்களூரில் , நேரத்தில் செல்லாமல், வழக்கத்தை விட வெறும் பதினைந்து நிமிடம் தாமதம் பண்ணினாலே , அது இரண்டு மணி நேர ட்ராபிக்கில் கொண்டு விடும் ஆபத்தான நிலையில் உள்ள காலமிது. எனவே, நேரத்தில் செல்வதற்கு நான் எடுக்கும் முயற்சிக்கு , இந்த நாய் தொந்தரவு ஒரு பெரிய சவாலாகவே இருந்தது.

நேற்று இரவு, படுக்கச் செல்லும் முன், "கடவுளே, இன்றைக்கு , நாய் தொந்தரவு இல்லாமல் தூங்க விடப்பா! " என்று வணங்கி திரு நீரிட்டு , படுத்துக் கொண்டேன். சரியாக ,  அதிகாலை , இரண்டு அரை மணி அளவில் , குய்யோ முறையோ என்று இந்தியில் ஒரே சத்தம். என்னடா , நாய்கள் எல்லாம் இந்தி கற்றுக் கொண்டுவிட்டதோ என்று சந்தேகம். திடுக்கென்று எழுந்து ,  சன்னல் வழியாக , வீட்டின் முன் இருந்த ரோட்டைப் பார்த்தேன்.

என் வீட்டின்  முன்னால் , ஒரு பிரபலமான பெரிய மருத்துவ மனை உள்ளது.  அதன் வாசல் அருகே , ஒரு டூ வீலர் நின்றிருந்தது. அதில் இருந்த ஒருவனை, அந்த மருத்துவ மனையின் காவலாளிகள் , குண்டுக் கட்டாக உள்ளே கொண்டு சென்றார்கள். அந்த இரவில் அந்தக் காட்சியைப் பார்த்தவுடன் , மிச்சம் ஒட்டிக் கொண்டிருந்த தூக்கம் ஓடியே விட்டது. உள்ளே கொண்டு செல்லப்பட்டவன் , இந்தியில் கத்திக் கொண்டிருந்தான். என்னதான் நடக்கிறது என்று பார்ப்போம் என்று , வீட்டு மாடியில் இருந்து, கதவை திறந்து, ரோட்டைப் பார்த்துக் கொண்டிருந்தேன்  அந்த இரவு நேரத்தில் அர்த்தம் கெட்டத் தனமாக.

அப்போது , திடீர் என்று ரோட்டின், எதிர் திசையில் இருந்து ஒருவன் ஓடி வந்தான். அவன் அந்த டூ வீலர் அருகே , நின்று , கீழே விழுந்து கிடந்த , ஹெல்மட்டை எடுத்துக்கொண்டான். பின், சுற்றும் முற்றும் பார்த்து , ரோட்டின் ஓரத்தில் கிடந்த , ஒரு கல்லை கையில் எடுத்துக் கொண்டான். அவன் சட்டை முழுதும் கிழிந்து தொங்கிக் கொண்டிருந்தது. அவன் நேராக நிற்க முயற்சி செய்தாலும் ,  ஏனோ தள்ளாடிக் கொண்டிருந்தான். கையில் கல்லுடன் , மருத்துவ மனையின் உள்ளே இருந்தவர்களைப் பார்த்து, 'ஏ  டாக்டர் , மருவாதியா அவனை  விடுறியா இல்லை இந்த கல்ல எடுத்து கண்ணாடிக் கதவ உடைக்கவா ' என்று இந்தியில் மிரட்டினான்.

'ஆ  இப்ப தான் ஆட்டம் களை கட்டுதுப்பா' என்று , நப்பாசையுடன் ,  மாடியின் பால்கனியில் பார்ப்பதற்கு தோதாக நின்று கொண்டேன்.  சுதாரிப்பாக , என் வீட்டு லைட் எதுவும் ஒளிரச் செய்யவில்லை.  அந்த கல்லுடன் இருந்த நபர் திடீர் என்று ஒரு "அபவுட்  டர்ன்" அடித்து என்னைப் பார்த்தான். அய்யயோ , கதை கந்தலாகப் போகுதே, கல் நம் மீது தான் , என்று ஒரு பயம் குபுக் என்று அடியில் இருந்து எழுந்தது.

 அப்போது தான் அந்த அதிசயம் நடந்தது. என்னைப் பார்த்தவன் , திடீர் என்று ஒரு வித பீதியுடன் , வந்த வழியே ஓட ஆரம்பித்தான். அப்படியே ஓடியவன் , திரும்பி வரவே இல்லை. சில நிமிடங்களில் , அடுத்த தெருவில் இருந்த நடு நிசி  நாய்கள் அவனை துரத்தும் சத்தம் மட்டும் நன்றாகக் கேட்டது .

அவன் ஏன் ஓடினான் என்று மட்டும் விளங்கவில்லை. ஒரு வேளை , வெள்ளை பனியனுடன் , அரை இருட்டில் நின்றிருந்த என்னைப் பார்த்து பேய் என்று பயந்து விட்டானோ என்னவோ.

"யார் இவர்கள், இந்த நேரம் கெட்ட நேரத்தில், ஏன் சண்டைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்?" , என்று என் மனம் கேள்வி கேட்டுக் கொண்டிருக்க , சிறிது நேரத்தில் ,  போலிஸ் ஜீப் வந்தது. உள்ளே, சென்ற அந்த அதிகாரி, அங்கு பிடித்து வைக்கப் பட்டிருந்த , அந்த இந்தி இளைஞன் உடன் வெளியே வந்தார். அவனை, அங்கிருந்த பார்வையாளர்கள் நாற்காலியில் அமர வைத்து ,  விசாரிக்க , அவன் , 'சார் நான் எப்பயும் குடிக்கிறது  இல்ல , இன்னைக்குதான்' என்று சத்தமாக கன்னடத்தில் சொன்னான். அதுக்கப்புறம் அவன் என்ன சொன்னான் என்று சரியாக கேட்கவில்லை. அதற்க்கு அந்த காவல் அதிகாரி, 'எல்லாம் டேசனில் பேசலாம் வா' என்று அவனை தான் கொண்டு வந்திருந்த ஜீப்பில் ஏற்றினார்.

அப்பாடா ஒரு வழியா பிரச்சினை முடிந்தது என்று, கதவை மூடிவிட்டு , திரும்பவும் கட்டிலில் வந்து படுத்தேன். ஒரு பதினைந்து நிமிடம் தான் , மீண்டும் , "டம் டும்" , என்று ஏதோ உடைக்கும் சத்தம்.
மீண்டும் , சன்னல் வழியாக எட்டிப் பார்த்தேன். அங்கே நான் கண்ட காட்சி:

அந்த மருத்துவ மனை காவலாளிகள் சிலரும் , அங்கிருந்த வேறு சில நபர்களும் , அந்த குடிகார இளைஞன் விட்டுச் சென்ற அவனின் , "டூ வீலரை" , அடித்து நொறுக்கி கொண்டிருந்தார்கள். அவர்களின் நோக்கம் , எப்படியாவது , அந்த வண்டிக்கு "மாக்சிமம் டேமேஜ்" உண்டாக்க  வேண்டும் என்பது தெளிவாக தெரிந்தது.   சில ரவுடிகள், ஒருவனைத் தாக்கும் போது , "உள் காயம்" மட்டும்  வருமாறு மட்டும் பார்த்து பார்த்து அடிப்பார்களே , அதுபோல் , அந்த வண்டியை நன்றாக கவனித்து விட்டு ,  மீண்டும் அதனை , அங்கிருந்த ஓப்பன் பார்க்கிங் இடத்தில் கொண்டு நிறுத்தி வைத்துவிட்டார்கள்.

சில பல நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு பைக்கில் , இரு போலிஸ் காவலர்கள் வந்து , அந்த இளைஞனின் வண்டியை பற்றிக் கேட்க , அந்த மருத்தவ மனை காவலாளிகள் , அந்த டூ வீலரை ஸ்டார்ட்  செய்ய முயற்சி செய்வது போல் செய்து , "ஸ்டார்ட் ஆகல சார்!" என்று சொல்ல, அந்த போலீஸ்காரர்கள் ஏதோ உத்தரவு பிறப்பித்துவிட்டு சென்று விட்டார்கள்.

அடாடா , நாட்டுல என்னன்னோமோ நடக்குதேப்பா , "அட ஆண்டாவா!" , என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டே, மறு நாள் எழுந்திருக்க வேண்டுமே, இல்லேன்னா  , டிராபிக் பேஜாராப் பூடுமே என்று பயந்து கொண்டே வராத தூக்கத்தை வரவழைத்து , தூங்கியே போனேன்!

Tuesday, March 18, 2014

நிமிர்ந்து நில் - வேலைக்காகுமா ?

நிமிர்ந்து நில் படம் பார்க்கலாம் என்று தியேட்டருக்கு சென்றேன். போவதற்கு முன்னால் , படத்தின் கதை , 'எவனோ ஒருவன்' , 'ரமணா', மற்றும் 'அந்நியன்' சாயல் என்று மட்டும் தெரியும். சரி , போய் தான் பார்ப்போம் என்று போனேன்.

தியேட்டர்  வாசலிலயே , நிமிர்ந்து நிற்க வாய்ப்பு கிடைத்தது. அதாவது , டிக்கட் விலை ,  நூறு ரூபாய் , ஆனால் கொடுத்ததோ , ஏதோ ஒரு நுழைவுச் சீட்டு , நிச்சயம் அரசுக்கு வருமானம் போகும் , டிக்கட் அல்ல.  அதை தட்டிக் கேட்க , நான் என்ன கேபிள் அண்ணனின் 'கேட்டால் கிடைக்கும்', மெம்பர் ஆ என்ன. எங்க ஊரில் எல்லாம் சென்னை மாதிரி இல்லை. கேட்டால் , கேட்டதுக்கு மேலேயே மொத்து கிடைக்கும் ஊர். அதனால் பொத்திக் கொண்டு , உள்ளே நுழைந்தேன்.

படம் அப்படி , இப்படி என்று , நடை முறைக்கு ஒவ்வாத காட்சி அமைப்பில் சென்று கொண்டிருந்தது. பிற பதிவர்கள் இதன் விமர்சனத்தை அல்ரெடி பிரிச்சு மேய்ந்த்ருப்பார்கள் , எனவே அந்த தப்பை நான் செய்யப் போவதில்லை. கமல் அடிக்கடி சொல்வாரே, 'கடவுள் இல்லைன்னு சொல்லலே ,  அப்படி இருந்தா நல்லா இருக்கும்' , அதுபோல் , இந்த படத்தில் நடப்பது போல் , நடந்தா நல்லா இருக்கும் , ஆனா , நம் வாழ் நாளில் நடப்பது சந்தேகமே.

படத்தின் ஒரு சீனில் ,  ஜெயம் ரவி, டீ  குடிக்கலாம் என்று , போலிஸ் காரர் , தம்பி ராமையாவிடம் சொல்ல , தம்பி ராமையா , 'உன் டீக்கு நீ கொடு, என் டீக்கு நான் கொடுக்கிறேன் ' என்றார். அதைக் கேட்டவுடன் , எனக்கு அன்று காலையில் நடந்த நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது.

நான் வழக்கம் போல் , என் நாயைக் கூட்டிக் கொண்டு , வாக்கிங் சென்றேன். வழியில் , ஒரு வடைக் கடை. அந்த காலை வேளையில் அது மிகவும் பிசி.  எல்லா வடையும் வெறும் ஐந்து ரூபாய் தான்.

நான் வடை வாங்கலாம் என்று அந்த கடைக்குப் போனேன். அங்கே, இருவர் வடை சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அவர்களை எதேச்சையாப் பார்த்த பொழுது , அவர்களின் பெரிய விருமாண்டி மீசை என் கவனத்தைக் கவர்ந்தது. எங்கயோ இவரை  பார்த்திருக்கோமே , என்று என் மனம் அடித்துக் கூறியது.

அந்த இருவரில் ஒருவர், இருபது ரூபாய்  நோட்டை எடுத்து , வடைக் கடைகாரரிடம் நீட்டினார். உடனே அந்தக் கடைகாரர் , 'சார் வைங்க  சார் , இருக்கட்டும் ' என்றார். அதற்க்கு அந்த பெரிய மீசைக்காரர் , ' இல்ல அவர் சாப்பிட்டதுக்கு வாங்கிக்கோங்க ' என்று மற்றொருவரைக் காட்டி மீண்டும் இருபது ரூபாயை நீட்டினார்.

கடைக்காரர் , மிகவும் விபரமாக , 'சார் இந்த கடையே அவருதுதான் ' என்றார்.  என்னடா இது ஓவர் பில்ட் அப் ஆ இருக்கே என்று , அவர்கள் இருவரையும் கவனித்தபோது , அவர்களின் பேன்ட்  கலர் அவர்களை காட்டிக் கொடுத்தது.


நான் வடையை சுவைத்துக் கொண்டே இடத்தை காலி செய்தேன் . சும்மா சொல்லக் கூடாது , வடை செம டேஸ்டு .  என்னாது , நிமிர்ந்து நில்லா , அட போங்க சார், உங்க வெளாட்டுக்கு அளவே இல்ல. சமுத்திரக் கனியே , அமலா பால் கூட டூயட் பாட ரெடி யாயிட்டாரு.

இந்த காமடிய பாருங்க , உண்மை விளங்கும்:


Wednesday, February 26, 2014

தமிழ் பத்திரிக்கைகள் செய்வது சரியா?

சிம்பு தனக்கும் ஹன்சிகாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லி விட்டார்.
சிம்பு நயன்தாராவுடன் இணைந்து விட்டார்.
அஜித் , சுவாதியை திருமணம் செய்து கொண்டார்.

ரஜினி ஜாதகம் கோடியில் ஒரு ஜாதகம். ரஜினி ஒரு தெய்வீகப் பிறவி.


இவையெல்லாம் என்னவென்று கேட்கிறீர்களா ?  பத்திரிக்கை உலகம் செய்யும் தந்திரம்.

இது இன்று , நேற்றா நடக்கிறது என்று கேட்டால் , பத்திரிக்கை தொடங்கிய காலத்தில் இருந்தே .

பின் வரும் பாடல் 1963 இல் வெளி வந்தது ...இன்னும் பல விஷயங்கள் நம் முன்னணி தமிழ் பத்திரிக்கைகளில் மாறவில்லை ... இது முட்டை முதலிலா இல்லை கோழி முதலிலா என்ற கேள்வியைப் போன்றதே ....பத்திரிக்கையாளர்களைக் கேட்டால் வாசகர்கள் இந்த மாதிரி சென்செசனல் விசயங்களை போட்டால் தான் போட்ட காசையாவது எடுக்க முடிகிறது என்கிறார்கள் ...இதே தான் சினிமாத் துறைக்கும் ...Tuesday, February 18, 2014

சொன்னது நடந்தது!

நான் சென்ற 'குனிஞ்சா டாலர் நட்டம்' என்ற பதிவில் , ஒரு பொது விழிப்புணர்வு எச்சரிக்கையை விட்டிருந்தேன். நான் சொன்ன மாதிரியே, பாவம் ஒரு பால்காரர் , பத்து ரூபாய்க்கு ஆசைப் பட்டு , தான் வங்கியில் இருந்து எடுத்து வந்த பணத்தை இழந்து விட்டாராம் பாவம்.

இன்னொரு வழக்கமான ட்ரிக் யூஸ் பண்ணுவது, "சார் / மேடம் உங்கள் சட்டையில் ஏதோ ஒட்டி இருக்கிறது " என்று கவனத்தை திசை திருப்பி கொள்ளை அடிப்பது.  மற்றொரு ட்ரிக் , "போலிஸ் போல் வேடம் பூண்டு பைக்கில் வந்து , பெண்ணிடம்  நகையை பத்திரமாக வைத்துக் கொள்ள அறிவுறுத்தி , அதனை பாதுகாப்பாக  பேப்பரில்  சுருட்டி தருவதாகச் சொல்லி தந்து விட்டு  செல்வது , நகை உரிமையாளர் பின் வீட்டில் சென்று அந்த பேப்பரை விரித்து பார்த்தால் , நகை கோவிந்தா , கோவிந்தா ஆவது .

அடிப்படையில்  மாஜிக் நிபுணர்கள் செய்வது தான் , "உங்கள் கவனத்தை திசை திருப்பி , நொடியில் தாங்கள் எண்ணியதை முடிப்பது".    தேவையில்லாமல் ஒருத்தர் உங்களுக்கு உதவ வந்தால் - முக்கியமாக நீங்கள் அதிக பணம் கையில் வைத்திருக்கும் பொழுது , பணத்தின் மீது கவனம் வைத்து , உரிய இடத்தில சேரும் வரை கவனத்தை திசை திருப்பாமல் இருப்பது தான் ஒரே வழி.


தினமணியில் வந்த செய்தி இது :

பத்து ரூபாய்த்தாளுக்கு ஆசைப்பட்டு ரூ.1 லட்சத்தை இழந்தார் பால்காரர்

First Published : 18 February 2014 08:57 PM IST
மதுரை அருகே வங்கியில் பணம் எடுத்துவந்த பால்காரரிடம் பத்து ரூபாய்த்தாளை காட்டிய மர்மநபர் அவர் பையிலிருந்த ரூ.1 லட்சத்தை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார்.
  மதுரை மாவட்டம் திண்டியூரைச் சேர்ந்தவர் ராஜு. பால்காரர். இவர் கருப்பாயூரணியில் உள்ள பொதுத்துறை வங்கியில் சேமிப்புக்கணக்கு வைத்துள்ளார். வங்கிக்கு செவ்வாய்க்கிழமை காலை மோட்டார் சைக்கிளில் வந்த ராஜு தனது சேமிப்பிலிருந்து ரூ.1.05 லட்சம் எடுத்துள்ளார். பணத்தை மஞ்சள்பையில் வைத்துக்கொண்டு வெளியே வந்தவர் மோட்டார் சைக்கிள் கேன்பாரில் மாட்டியுள்ளார்.
 அப்போது சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் வந்து கீழே பத்து ரூபாய்த்தாள்கள் சிதறிக்கிடப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். உடனே பணப்பையை விட்டுவிட்டு சிதறிக்கிடந்த பத்துரூபாய்த்தாள்களை ராஜு எடுத்துள்ளார்
  அவர் பத்து ரூபாய்த்தாள்களை எடுத்து நிமிரும்போது மஞ்சள்பையில் இருந்த பணத்தை எடுத்த மர்மநபர் அருகே மோட்டார் சைக்கிளில் தயாராக இருந்த 2 பேருடன் சேர்ந்து வேகமாகச் சென்றுவிட்டார்.
  இதனால் அதிர்ச்சிóயடைந்த ராஜு தனது பையைப் பார்த்தபோது அதில் ரூ.5 ஆயிரம் மட்டுமே எஞ்சியிருந்தது. நூதனமுறையில் தன்னை ஏமாற்றிய மர்மநபர்கள் ரூ.1 லட்சத்தை திருடிச்சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து ராஜு அளித்த புகாரின் பேரில் கருப்பாயூரணிப் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனர்.

Tuesday, February 11, 2014

குனிஞ்சா டாலர் நட்டம்!

இன்று தினமணியில் இந்த தகவலைப் படித்தேன். அது பில் கேய்ட்ஸ் பற்றியது ....அதாகப்பட்டது அவர் சாப்பிட்ட பிளேட்டை , அவரே கழுவிக்ராராம். நம் வீட்டில் பிள்ளைகளை செய்யச் சொன்னால் அவர்கள் பண்ணும் அழிச்சாட்டியம் இருக்கிறதே அப்பப்பா .

இவரின் நேரம் எவ்வாறு பொன்னானது என்பதற்காக ,  'அவர் குனிஞ்சு கீழ கெடக்குற நோட்ட எடுக்கிற  நேரத்தைவிட அவர் அந்த நேரத்தில் சம்பாரிக்கும் தொகை மிக அதிகம் அதனால் அவர் கிழே டாலர் நோட்டுக் கிடந்தால் எடுக்க மாட்டார்' என்று வேடிக்கையாக சொல்வதுண்டு.

ஆனால் நான் அப்படில்லாம் இல்லை , கட்டாயம் குனிஞ்சு எடுப்பேன் என்கிறார் இந்த தகவலின் படி.
காசின் அருமையை அறிந்த எவரும் , எவ்வளவு பணக்காரனாக இருந்தாலும் , இதையே செய்வர்.

அதே நேரத்தில் , இதற்க்கு ஒரு தொடர்புடைய ஒரு பொது எச்சரிக்கையும் பதிவு செய்ய விழைகிறேன்.

நீங்கள் வங்கியில் பணம் எடுத்துக் கொண்டு வரும்போது, யாராவது , "சார்/ மேடம் , நூறு ரூப கீழ விழுந்துருச்சு பாருங்க " என்று சொன்னால் , உடனே குனிந்து எடுக்க முயலாதீர்கள் . ஏனென்றால் , இந்த ட்ரிக்கை பயன் படுத்தி , பிக் பாகெட் கொள்ளையர்கள் , பல பேரிடம் பணப் பையை பறித்துச் சென்றுள்ளார்கள். எனவே கவனமாக இருங்கள். இங்கே பெங்களூரில் , இன்னும் சில கொள்ளை ட்ரிக் க்குகளை , படத்துடன் விளக்கி ப்ளெக்ஸ் பேனர் ஆங்காங்கே மக்களின் விழிப்புணர்வுக்காக வைத்துள்ளது மிகவும் பாராட்ட வேண்டிய முயற்சி , இதை வைத்துள்ள போலிசுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள் .


Sunday, February 9, 2014

பக்திக்கு அளவே இல்லையா?

நாங்கள் சிறுவர்களாக இருந்த போது ,  தப்பித் தவறி வானத்தில் ஏரோப்பிளேன் பறந்தால் போதும்.
நாங்களும் கொஞ்ச தூரம் தரையில் அதனை விரட்டிச் செல்வோம் அது கண்ணுக்கெட்டும்  தூரம் வரை.

அதிலும் பசங்கள் விடும் கமண்ட்ஸ் :

"டே ஒரு வெள்ளைக்காரி டாட்டா காட்டுறா "
"டே  டிரைவர் நம்மளப் பாத்து சிரிக்கிறார்டா "

அந்த பிளேன்  போவதோ , பல அடிகள் உயரத்தில் ....அங்கிருந்து பார்த்தால் , நாமெல்லாம் ஒரு சிறு எறும்பே. 

இன்று தின மலரில் இந்த படத்தைப் பார்த்தவுடன் , சிரிப்பு தாளவில்லை. நாங்கள்  அன்று டவுசர் போட்ட விபரம் அறியா பச்சைப் பிள்ளைகள். இவர்கள் , வேட்டி கட்டிய , அரசியல் வியாதிகள். இதில் எத்தனைப் பேர் , பதவியில் உள்ளவர்களோ. இவர்கள் கையில் , வேட்டிக்கும் ,சேலைக்கும் ஆசைப்பட்டு ஓட்டைப் போட்ட மாக்களே , நீங்கள் மக்கள் ஆவது எப்போது?நன்றி தினமலர்.

Thursday, January 30, 2014

நான் வெட்கத்துக்கு பக்கத்துல போகாதவ!

இந்தக் காலத்தில் பல பேர் சொல்லும் விஷயம்:

வயசாகிட்டே போகுது , நல்ல பெண் / ஆண்  கிடைக்கமாட்டேன்குது என்ற புலம்பல்.

அவ்வளவு கஷ்டமா என்று ஆராய்ந்தால் , தப்பு அவர்களின் எதிர்பார்ப்பில் தான் உள்ளது. எல்லோருக்கும்   பெண் அல்லது மாப்பிள்ளை இப்படி இருக்க வேண்டும் , அப்படி இருக்க வேண்டும் என்று நிபந்தனைகள்.

"இது தான் மாப்பிள்ளை / பொண்ணு  , கட்டு தாலியை !"  என்ற காலம் போயி , இப்போது மாட்ரிமோனியலிலும் , நண்பர் வட்டாரத்திலும் , வேலை செய்யும் இடங்களிலும் கூட தேடும் நிலைக்கு ஆளாகி உள்ளார்கள்.

சமீபத்தில் நான் ஒட்டுக் கேட்ட ஒரு விஷயம்:

நேரம் இரவு பத்து.  பெங்களூரின் குளிர் உடலை தழுவி குறு குறுப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. நான் சென்னைக்குப் போகலாம் என்று ஒரு ஆம்னி பஸ்சுக்கு காத்திருந்தேன். அருகில் அமர்ந்திருந்தது ஒரு இளம் பெண். காதில் , இளம் பெண்களின் உற்ற தோழனான அலை பேசி.

அந்த நேரத்தில் யாரோ ஒரு பையனுடன் கடலை போட்டுக் கொண்டிருந்தாள் என்று அவள் பேசியதில் இருந்து புரிந்தது.  நார்மலாக போய்க் கொண்டிருந்த உரையாடலில் , அவள் இப்படி ஒரு திடீர் கேள்வி கேட்டாள் போனில் பேசிய பையனிடம்:

"உனக்கு தான் பத்து , பன்னிரண்டு நண்பர்கள் இருக்கங்கல்ல , அதுல ஒரு நல்ல பையனுக்கு எனக்கு ஒரு இன்ட்ரோ கொடேன்!"

அதற்கு அவன் என்ன சொன்னான் என்பதை இவளின் பதிலில் இருந்தே கிரகிக்க முடிந்தது. அவன் அநேகமாக கூறியது:

"நானே ஒரு நல்ல பையன் தானே".

இவளின் பதில்:
"நீ நல்லவன் தான் ஆனா உங் கூட பழகினா பிரியா திட்டுவாளே".

ஆக, நண்பியின் லவ்வர் போனில்  இவளுடன் இரவில் கடலை,  நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஹானர்.

அவனின் கேள்வி: "நீ நல்லவன் அப்ப்டின்ன என்ன எப்படி இருக்கனுமின்னு எதிர்பார்குற?"

இவள் பதில் :  "நான் அப்படி அப்படி இருக்கனுமின்னு எதிர்பாக்கல.  பொதுவா நல்ல பையனா இருக்கணும் "


நான் போக வேண்டிய பஸ் வந்து விட்டதால் , அந்த சுவராசிய உரையாடலை முழுதும் கேக்க முடியல.

சரி தலைப்புக்கு லிங்க் கொடுக்கிற டைம் ஆச்சி:


தப்பான பார்வை - என் தாவணி சாச்சி!

நீங்கள் எதிபார்த்து வந்த விஷயங்கள் இந்த பதிவில் ஏராளமாக உள்ளது .

டூ இன் ஒன் பர்பஸ்  ஆக கடவுள் படைத்த அவயங்களில் இதுவும் ஒன்று.

அதைப் பற்றி , இந்த பதிவில் சகோதரி அருமையாக எழுதியுள்ளார்.

அதற்க்கு வந்த கமண்ட்ஸ் பார்க்கும் போது , அது குறுக்குப் புத்தியுடன்
கிண்டல் செய்யும் ஆண்களின் குறும்பா , இல்லை சில பெண்களுக்கே அந்த கவலை உள்ளதால் அப்படி கேட்டுளார்களா என்று தெரியவில்லை.

திடீர் என்று நீ ஏன் இந்த ஆராய்ச்சியில் இறங்கினாய் என்கிறீர்களா , நான் தலைப்பில் கொடுத்த வரி சமீபத்தில் வீரம் படத்தில் வரும் பாடலின் ஒரு வரி. ஏனோ அது என்னை கவர்ந்ததால் , சரி ஒரு லிங்க் கொடுப்போம் என்று கூகிளை நோண்ட , இந்த பதிவு கண்ணில் பட்டது.

விருப்பமுள்ளவர்கள் இதனைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

http://rammalar.wordpress.com/2008/08/03/மார்பகமே-மார்பகமே/

அப்புறம் அது எந்த பாட்டு என்று கேட்பவர்களுக்கு :

Tuesday, January 28, 2014

ஒலியும் ஒளியும்.

அந்தக் கால தூர்தர்ஷனில் , வெள்ளிகிழமை  என்றாலே நினைவுக்கு வருவது.

அது என்ன மந்திரமோ , மாயமோ தெரியல , திடீரென்று பழைய  பாடல்கள் மேல் ஒரு ஈர்ப்பு வந்துள்ளது எனக்கு.

பொழுது போக்க , யூ டுபில் அப்படி பழையப் பாடல்களைத் தேடி தேடி கேட்ட போது , அதை தரவேற்றம் செய்த புண்ணியவான்கள் , அவர்கள் கற்பனையையும் சேர்த்து அந்த பாடல்களின் காட்சி அமைப்பாக சேர்த்திருப்பது , மிகவும் ரசிக்கத் தக்கதாகவே இருக்கிறது.

அப்படி நான் சமீபத்தில் ரசித்த இரண்டு:
அழகிரி vs கருணாநிதி

அண்ணன் தம்பி சண்டை. பெருசு மண்டையைப் போட்டவுடன் யார் பதவிக்கு வருவது என்று போட்டா போட்டி என்று ஒரு சிலரும் , தேர்தல் வருவதால் மீடியா கவனத்தை திமுகா மேல் திருப்ப ஒரு சதி என்று ஒரூ சிலரும் கருத்துக்  கூறும் கால கட்டம்.

யார் குடும்பத்தில் தான் இது நடக்கவில்லை என்று கேள்வி வேறு. கருப்பு எம் ஜி யாரை வைத்தா இவ்வளவு சண்டையும் என்றால் ,  இல்லை என்று சொன்னாலும் ,  அவ்வாறு ஒரு மாயை உருவாக்கி விட்டதால் , நாம் நம்பித் தான் ஆக வேண்டும். ஆனால் உள் குத்து விவகாரம் என்னவென்று , அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.

இந்த பத்திரிக்கைகளில்  வரும் செய்திகளைப் பார்த்தால் , என்னமோ இவங்களே பக்கத்துல உக்காந்து எல்லாத்தையும் கேட்ட மாதிரி எழுதுறாங்க , எப்படியோ வியாபாரம் ஆனா சரி.

ஒரு தாமாசு என்னன்னா ,  அழகிரி பேட்டினாலும்  சரி, இல்ல தாத்தா வோட பேட்டினாலும்  சரி …
மேட்டர் பில் பண்றது ரொம்ப ஈசி…

நமக்குத் தெரிஞ்ச குண்டக்க மண்டக்க கேள்வியப் போட வேண்டியது ,  அப்புறம் அதுக்குப் பதில் அழகிரியோ இல்ல தாத்தோவோ சொல்ற மாதிரி எழுதனுமின்ன ரொம்ப சிம்பிள் :

"அத நீங்க அவங்க கிட்ட தான் கேட்கனும்"

இந்த மாதிரி பேட்டியப் படிக்கிற நம்முக்குதான் ஒரே கிர்.

சரி அத விடுங்க …இதுக்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்க வடக்க ஒரு கட்சி இருக்குன்னு சந்தோசபட்டா ,அவிங்களோட ஆட்டம் , கொஞ்சம் கரடு முரடாதான் இருக்கு .

எது எப்படியோ , நம்மளுக்கு நம்ம பிரச்சினை  தீரனும் :

நல்ல ரோடு , நல்ல குடி தண்ணி , போக்குவரத்து , சகாய விலையில் மளிகை பொங்கித் தின்ன …

வேற வழியில்ல , ராமன் ஆண்டாலும் , ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலயில்லையின்னு .
பேசாம குவார்டர் அடிச்சு கவுந்தாப் போதுமின்னு நினைக்கிற கூட்டம் வேற இருக்கு. வெளங்கிடும் .
என்னத்த செஞ்சி என்னத்தப் பண்ண…மோடி வருவார் , செல்வம் தேடி தருவார் என்று ஒரு கூட்டம்.

இதுல என்னடானா ,  நடக்குறதெல்லாம் பாத்திட்டு , நம்ம வீட்டு வாண்டுகளெல்லாம்  இப்பவே , வீட்ல இந்த பாதி உனக்கு , அந்த பாதி எனக்குன்னு ஏழரயக் கூற்றானுங்க என்ன செய்ய.

வீட்டுக்கார மேடம் நம்ம கிட்ட இது பத்திக் கேட்க வந்தா , நாமளும் , 
 "அத அவங்க கிட்ட கேளுன்னு " தண்ணி காட்ட வேண்டியதா இருக்கு.

அப்புறம் தலைவன் எப்படி , தொண்டர் அப்படி வேற என்ன செய்ய.

எப்படியோ , டவுசர் கிழியும், அப்புறம் இன்னா அது , இதயம் நனையும் , தேர்தலுக்கப்புரம் , நாம நம்ம வேலைய பாக்க , அவுங்க அவுங்க வேலையப் பாக்கப் போயிடுவாங்க ….

Sunday, January 19, 2014

எம் ஜி ஆரின் கலக்கல் கும்மி!


ஒரு வழியாக இந்தியா  சந்திராயன் , மங்கள்யான் என்று  விண்வெளியில் தனது 'வீரத்தை ' நிலை நாட்ட அடியெடுத்து வைத்துள்ளது.  செவ்வாய் கிரகம் , சந்திரன் கிரகம் போன்றவை இந்தியாவின் 'ஜில்லா' வாக முடியுமா என்பது காலத்தின் கையில் என்றாலும் , பல வருடங்கள் முன் , இந்தியாவின் விண்வெளி ஆசைக்கு எந்த மாதிரியான மனப் போக்கு மக்கள் மனதில் இருந்தது என்பதற்கு கிழே உள்ள பாடல் காட்சியும் ஒரு சாட்சி.  இதில் தலைவர் சட்ட சபை ரகளை முதல் கூடங்குளம் பிரச்சினைக்கு இணையான பிரச்சினை, ஜாதி பிரச்சினை , நம் இட்லி ,வடை கண்டு பிடிப்பு  என்று பல விசயங்களை கேலியும் கிண்டலுமாகத் தொட்டு சென்ற போது , பல வருடங்களுக்குப் பின்பும் நாம் இன்னும் மாறாமல் இருப்பதை எண்ணி ஆச்சரியப் படுகிறேன்.  வாழ்க இந்தியா...குடியரசு தினத்திற்கு என் முன் கூட்டிய வாழ்த்துக்கள்... நீங்களும் இதை கண்டு களியுங்கள் ,  enjoyment guranteed!