Wednesday, February 26, 2014

தமிழ் பத்திரிக்கைகள் செய்வது சரியா?

சிம்பு தனக்கும் ஹன்சிகாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லி விட்டார்.
சிம்பு நயன்தாராவுடன் இணைந்து விட்டார்.
அஜித் , சுவாதியை திருமணம் செய்து கொண்டார்.

ரஜினி ஜாதகம் கோடியில் ஒரு ஜாதகம். ரஜினி ஒரு தெய்வீகப் பிறவி.


இவையெல்லாம் என்னவென்று கேட்கிறீர்களா ?  பத்திரிக்கை உலகம் செய்யும் தந்திரம்.

இது இன்று , நேற்றா நடக்கிறது என்று கேட்டால் , பத்திரிக்கை தொடங்கிய காலத்தில் இருந்தே .

பின் வரும் பாடல் 1963 இல் வெளி வந்தது ...இன்னும் பல விஷயங்கள் நம் முன்னணி தமிழ் பத்திரிக்கைகளில் மாறவில்லை ... இது முட்டை முதலிலா இல்லை கோழி முதலிலா என்ற கேள்வியைப் போன்றதே ....பத்திரிக்கையாளர்களைக் கேட்டால் வாசகர்கள் இந்த மாதிரி சென்செசனல் விசயங்களை போட்டால் தான் போட்ட காசையாவது எடுக்க முடிகிறது என்கிறார்கள் ...இதே தான் சினிமாத் துறைக்கும் ...Tuesday, February 18, 2014

சொன்னது நடந்தது!

நான் சென்ற 'குனிஞ்சா டாலர் நட்டம்' என்ற பதிவில் , ஒரு பொது விழிப்புணர்வு எச்சரிக்கையை விட்டிருந்தேன். நான் சொன்ன மாதிரியே, பாவம் ஒரு பால்காரர் , பத்து ரூபாய்க்கு ஆசைப் பட்டு , தான் வங்கியில் இருந்து எடுத்து வந்த பணத்தை இழந்து விட்டாராம் பாவம்.

இன்னொரு வழக்கமான ட்ரிக் யூஸ் பண்ணுவது, "சார் / மேடம் உங்கள் சட்டையில் ஏதோ ஒட்டி இருக்கிறது " என்று கவனத்தை திசை திருப்பி கொள்ளை அடிப்பது.  மற்றொரு ட்ரிக் , "போலிஸ் போல் வேடம் பூண்டு பைக்கில் வந்து , பெண்ணிடம்  நகையை பத்திரமாக வைத்துக் கொள்ள அறிவுறுத்தி , அதனை பாதுகாப்பாக  பேப்பரில்  சுருட்டி தருவதாகச் சொல்லி தந்து விட்டு  செல்வது , நகை உரிமையாளர் பின் வீட்டில் சென்று அந்த பேப்பரை விரித்து பார்த்தால் , நகை கோவிந்தா , கோவிந்தா ஆவது .

அடிப்படையில்  மாஜிக் நிபுணர்கள் செய்வது தான் , "உங்கள் கவனத்தை திசை திருப்பி , நொடியில் தாங்கள் எண்ணியதை முடிப்பது".    தேவையில்லாமல் ஒருத்தர் உங்களுக்கு உதவ வந்தால் - முக்கியமாக நீங்கள் அதிக பணம் கையில் வைத்திருக்கும் பொழுது , பணத்தின் மீது கவனம் வைத்து , உரிய இடத்தில சேரும் வரை கவனத்தை திசை திருப்பாமல் இருப்பது தான் ஒரே வழி.


தினமணியில் வந்த செய்தி இது :

பத்து ரூபாய்த்தாளுக்கு ஆசைப்பட்டு ரூ.1 லட்சத்தை இழந்தார் பால்காரர்

First Published : 18 February 2014 08:57 PM IST
மதுரை அருகே வங்கியில் பணம் எடுத்துவந்த பால்காரரிடம் பத்து ரூபாய்த்தாளை காட்டிய மர்மநபர் அவர் பையிலிருந்த ரூ.1 லட்சத்தை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார்.
  மதுரை மாவட்டம் திண்டியூரைச் சேர்ந்தவர் ராஜு. பால்காரர். இவர் கருப்பாயூரணியில் உள்ள பொதுத்துறை வங்கியில் சேமிப்புக்கணக்கு வைத்துள்ளார். வங்கிக்கு செவ்வாய்க்கிழமை காலை மோட்டார் சைக்கிளில் வந்த ராஜு தனது சேமிப்பிலிருந்து ரூ.1.05 லட்சம் எடுத்துள்ளார். பணத்தை மஞ்சள்பையில் வைத்துக்கொண்டு வெளியே வந்தவர் மோட்டார் சைக்கிள் கேன்பாரில் மாட்டியுள்ளார்.
 அப்போது சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் வந்து கீழே பத்து ரூபாய்த்தாள்கள் சிதறிக்கிடப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். உடனே பணப்பையை விட்டுவிட்டு சிதறிக்கிடந்த பத்துரூபாய்த்தாள்களை ராஜு எடுத்துள்ளார்
  அவர் பத்து ரூபாய்த்தாள்களை எடுத்து நிமிரும்போது மஞ்சள்பையில் இருந்த பணத்தை எடுத்த மர்மநபர் அருகே மோட்டார் சைக்கிளில் தயாராக இருந்த 2 பேருடன் சேர்ந்து வேகமாகச் சென்றுவிட்டார்.
  இதனால் அதிர்ச்சிóயடைந்த ராஜு தனது பையைப் பார்த்தபோது அதில் ரூ.5 ஆயிரம் மட்டுமே எஞ்சியிருந்தது. நூதனமுறையில் தன்னை ஏமாற்றிய மர்மநபர்கள் ரூ.1 லட்சத்தை திருடிச்சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து ராஜு அளித்த புகாரின் பேரில் கருப்பாயூரணிப் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனர்.

Tuesday, February 11, 2014

குனிஞ்சா டாலர் நட்டம்!

இன்று தினமணியில் இந்த தகவலைப் படித்தேன். அது பில் கேய்ட்ஸ் பற்றியது ....அதாகப்பட்டது அவர் சாப்பிட்ட பிளேட்டை , அவரே கழுவிக்ராராம். நம் வீட்டில் பிள்ளைகளை செய்யச் சொன்னால் அவர்கள் பண்ணும் அழிச்சாட்டியம் இருக்கிறதே அப்பப்பா .

இவரின் நேரம் எவ்வாறு பொன்னானது என்பதற்காக ,  'அவர் குனிஞ்சு கீழ கெடக்குற நோட்ட எடுக்கிற  நேரத்தைவிட அவர் அந்த நேரத்தில் சம்பாரிக்கும் தொகை மிக அதிகம் அதனால் அவர் கிழே டாலர் நோட்டுக் கிடந்தால் எடுக்க மாட்டார்' என்று வேடிக்கையாக சொல்வதுண்டு.

ஆனால் நான் அப்படில்லாம் இல்லை , கட்டாயம் குனிஞ்சு எடுப்பேன் என்கிறார் இந்த தகவலின் படி.
காசின் அருமையை அறிந்த எவரும் , எவ்வளவு பணக்காரனாக இருந்தாலும் , இதையே செய்வர்.

அதே நேரத்தில் , இதற்க்கு ஒரு தொடர்புடைய ஒரு பொது எச்சரிக்கையும் பதிவு செய்ய விழைகிறேன்.

நீங்கள் வங்கியில் பணம் எடுத்துக் கொண்டு வரும்போது, யாராவது , "சார்/ மேடம் , நூறு ரூப கீழ விழுந்துருச்சு பாருங்க " என்று சொன்னால் , உடனே குனிந்து எடுக்க முயலாதீர்கள் . ஏனென்றால் , இந்த ட்ரிக்கை பயன் படுத்தி , பிக் பாகெட் கொள்ளையர்கள் , பல பேரிடம் பணப் பையை பறித்துச் சென்றுள்ளார்கள். எனவே கவனமாக இருங்கள். இங்கே பெங்களூரில் , இன்னும் சில கொள்ளை ட்ரிக் க்குகளை , படத்துடன் விளக்கி ப்ளெக்ஸ் பேனர் ஆங்காங்கே மக்களின் விழிப்புணர்வுக்காக வைத்துள்ளது மிகவும் பாராட்ட வேண்டிய முயற்சி , இதை வைத்துள்ள போலிசுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள் .


Sunday, February 9, 2014

பக்திக்கு அளவே இல்லையா?

நாங்கள் சிறுவர்களாக இருந்த போது ,  தப்பித் தவறி வானத்தில் ஏரோப்பிளேன் பறந்தால் போதும்.
நாங்களும் கொஞ்ச தூரம் தரையில் அதனை விரட்டிச் செல்வோம் அது கண்ணுக்கெட்டும்  தூரம் வரை.

அதிலும் பசங்கள் விடும் கமண்ட்ஸ் :

"டே ஒரு வெள்ளைக்காரி டாட்டா காட்டுறா "
"டே  டிரைவர் நம்மளப் பாத்து சிரிக்கிறார்டா "

அந்த பிளேன்  போவதோ , பல அடிகள் உயரத்தில் ....அங்கிருந்து பார்த்தால் , நாமெல்லாம் ஒரு சிறு எறும்பே. 

இன்று தின மலரில் இந்த படத்தைப் பார்த்தவுடன் , சிரிப்பு தாளவில்லை. நாங்கள்  அன்று டவுசர் போட்ட விபரம் அறியா பச்சைப் பிள்ளைகள். இவர்கள் , வேட்டி கட்டிய , அரசியல் வியாதிகள். இதில் எத்தனைப் பேர் , பதவியில் உள்ளவர்களோ. இவர்கள் கையில் , வேட்டிக்கும் ,சேலைக்கும் ஆசைப்பட்டு ஓட்டைப் போட்ட மாக்களே , நீங்கள் மக்கள் ஆவது எப்போது?நன்றி தினமலர்.