Thursday, January 30, 2014

நான் வெட்கத்துக்கு பக்கத்துல போகாதவ!

இந்தக் காலத்தில் பல பேர் சொல்லும் விஷயம்:

வயசாகிட்டே போகுது , நல்ல பெண் / ஆண்  கிடைக்கமாட்டேன்குது என்ற புலம்பல்.

அவ்வளவு கஷ்டமா என்று ஆராய்ந்தால் , தப்பு அவர்களின் எதிர்பார்ப்பில் தான் உள்ளது. எல்லோருக்கும்   பெண் அல்லது மாப்பிள்ளை இப்படி இருக்க வேண்டும் , அப்படி இருக்க வேண்டும் என்று நிபந்தனைகள்.

"இது தான் மாப்பிள்ளை / பொண்ணு  , கட்டு தாலியை !"  என்ற காலம் போயி , இப்போது மாட்ரிமோனியலிலும் , நண்பர் வட்டாரத்திலும் , வேலை செய்யும் இடங்களிலும் கூட தேடும் நிலைக்கு ஆளாகி உள்ளார்கள்.

சமீபத்தில் நான் ஒட்டுக் கேட்ட ஒரு விஷயம்:

நேரம் இரவு பத்து.  பெங்களூரின் குளிர் உடலை தழுவி குறு குறுப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. நான் சென்னைக்குப் போகலாம் என்று ஒரு ஆம்னி பஸ்சுக்கு காத்திருந்தேன். அருகில் அமர்ந்திருந்தது ஒரு இளம் பெண். காதில் , இளம் பெண்களின் உற்ற தோழனான அலை பேசி.

அந்த நேரத்தில் யாரோ ஒரு பையனுடன் கடலை போட்டுக் கொண்டிருந்தாள் என்று அவள் பேசியதில் இருந்து புரிந்தது.  நார்மலாக போய்க் கொண்டிருந்த உரையாடலில் , அவள் இப்படி ஒரு திடீர் கேள்வி கேட்டாள் போனில் பேசிய பையனிடம்:

"உனக்கு தான் பத்து , பன்னிரண்டு நண்பர்கள் இருக்கங்கல்ல , அதுல ஒரு நல்ல பையனுக்கு எனக்கு ஒரு இன்ட்ரோ கொடேன்!"

அதற்கு அவன் என்ன சொன்னான் என்பதை இவளின் பதிலில் இருந்தே கிரகிக்க முடிந்தது. அவன் அநேகமாக கூறியது:

"நானே ஒரு நல்ல பையன் தானே".

இவளின் பதில்:
"நீ நல்லவன் தான் ஆனா உங் கூட பழகினா பிரியா திட்டுவாளே".

ஆக, நண்பியின் லவ்வர் போனில்  இவளுடன் இரவில் கடலை,  நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஹானர்.

அவனின் கேள்வி: "நீ நல்லவன் அப்ப்டின்ன என்ன எப்படி இருக்கனுமின்னு எதிர்பார்குற?"

இவள் பதில் :  "நான் அப்படி அப்படி இருக்கனுமின்னு எதிர்பாக்கல.  பொதுவா நல்ல பையனா இருக்கணும் "


நான் போக வேண்டிய பஸ் வந்து விட்டதால் , அந்த சுவராசிய உரையாடலை முழுதும் கேக்க முடியல.

சரி தலைப்புக்கு லிங்க் கொடுக்கிற டைம் ஆச்சி:






தப்பான பார்வை - என் தாவணி சாச்சி!

நீங்கள் எதிபார்த்து வந்த விஷயங்கள் இந்த பதிவில் ஏராளமாக உள்ளது .

டூ இன் ஒன் பர்பஸ்  ஆக கடவுள் படைத்த அவயங்களில் இதுவும் ஒன்று.

அதைப் பற்றி , இந்த பதிவில் சகோதரி அருமையாக எழுதியுள்ளார்.

அதற்க்கு வந்த கமண்ட்ஸ் பார்க்கும் போது , அது குறுக்குப் புத்தியுடன்
கிண்டல் செய்யும் ஆண்களின் குறும்பா , இல்லை சில பெண்களுக்கே அந்த கவலை உள்ளதால் அப்படி கேட்டுளார்களா என்று தெரியவில்லை.

திடீர் என்று நீ ஏன் இந்த ஆராய்ச்சியில் இறங்கினாய் என்கிறீர்களா , நான் தலைப்பில் கொடுத்த வரி சமீபத்தில் வீரம் படத்தில் வரும் பாடலின் ஒரு வரி. ஏனோ அது என்னை கவர்ந்ததால் , சரி ஒரு லிங்க் கொடுப்போம் என்று கூகிளை நோண்ட , இந்த பதிவு கண்ணில் பட்டது.

விருப்பமுள்ளவர்கள் இதனைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

http://rammalar.wordpress.com/2008/08/03/மார்பகமே-மார்பகமே/

அப்புறம் அது எந்த பாட்டு என்று கேட்பவர்களுக்கு :

Tuesday, January 28, 2014

ஒலியும் ஒளியும்.

அந்தக் கால தூர்தர்ஷனில் , வெள்ளிகிழமை  என்றாலே நினைவுக்கு வருவது.

அது என்ன மந்திரமோ , மாயமோ தெரியல , திடீரென்று பழைய  பாடல்கள் மேல் ஒரு ஈர்ப்பு வந்துள்ளது எனக்கு.

பொழுது போக்க , யூ டுபில் அப்படி பழையப் பாடல்களைத் தேடி தேடி கேட்ட போது , அதை தரவேற்றம் செய்த புண்ணியவான்கள் , அவர்கள் கற்பனையையும் சேர்த்து அந்த பாடல்களின் காட்சி அமைப்பாக சேர்த்திருப்பது , மிகவும் ரசிக்கத் தக்கதாகவே இருக்கிறது.

அப்படி நான் சமீபத்தில் ரசித்த இரண்டு:




அழகிரி vs கருணாநிதி

அண்ணன் தம்பி சண்டை. பெருசு மண்டையைப் போட்டவுடன் யார் பதவிக்கு வருவது என்று போட்டா போட்டி என்று ஒரு சிலரும் , தேர்தல் வருவதால் மீடியா கவனத்தை திமுகா மேல் திருப்ப ஒரு சதி என்று ஒரூ சிலரும் கருத்துக்  கூறும் கால கட்டம்.

யார் குடும்பத்தில் தான் இது நடக்கவில்லை என்று கேள்வி வேறு. கருப்பு எம் ஜி யாரை வைத்தா இவ்வளவு சண்டையும் என்றால் ,  இல்லை என்று சொன்னாலும் ,  அவ்வாறு ஒரு மாயை உருவாக்கி விட்டதால் , நாம் நம்பித் தான் ஆக வேண்டும். ஆனால் உள் குத்து விவகாரம் என்னவென்று , அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.

இந்த பத்திரிக்கைகளில்  வரும் செய்திகளைப் பார்த்தால் , என்னமோ இவங்களே பக்கத்துல உக்காந்து எல்லாத்தையும் கேட்ட மாதிரி எழுதுறாங்க , எப்படியோ வியாபாரம் ஆனா சரி.

ஒரு தாமாசு என்னன்னா ,  அழகிரி பேட்டினாலும்  சரி, இல்ல தாத்தா வோட பேட்டினாலும்  சரி …
மேட்டர் பில் பண்றது ரொம்ப ஈசி…

நமக்குத் தெரிஞ்ச குண்டக்க மண்டக்க கேள்வியப் போட வேண்டியது ,  அப்புறம் அதுக்குப் பதில் அழகிரியோ இல்ல தாத்தோவோ சொல்ற மாதிரி எழுதனுமின்ன ரொம்ப சிம்பிள் :

"அத நீங்க அவங்க கிட்ட தான் கேட்கனும்"

இந்த மாதிரி பேட்டியப் படிக்கிற நம்முக்குதான் ஒரே கிர்.

சரி அத விடுங்க …இதுக்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்க வடக்க ஒரு கட்சி இருக்குன்னு சந்தோசபட்டா ,அவிங்களோட ஆட்டம் , கொஞ்சம் கரடு முரடாதான் இருக்கு .

எது எப்படியோ , நம்மளுக்கு நம்ம பிரச்சினை  தீரனும் :

நல்ல ரோடு , நல்ல குடி தண்ணி , போக்குவரத்து , சகாய விலையில் மளிகை பொங்கித் தின்ன …

வேற வழியில்ல , ராமன் ஆண்டாலும் , ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலயில்லையின்னு .
பேசாம குவார்டர் அடிச்சு கவுந்தாப் போதுமின்னு நினைக்கிற கூட்டம் வேற இருக்கு. வெளங்கிடும் .
என்னத்த செஞ்சி என்னத்தப் பண்ண…மோடி வருவார் , செல்வம் தேடி தருவார் என்று ஒரு கூட்டம்.

இதுல என்னடானா ,  நடக்குறதெல்லாம் பாத்திட்டு , நம்ம வீட்டு வாண்டுகளெல்லாம்  இப்பவே , வீட்ல இந்த பாதி உனக்கு , அந்த பாதி எனக்குன்னு ஏழரயக் கூற்றானுங்க என்ன செய்ய.

வீட்டுக்கார மேடம் நம்ம கிட்ட இது பத்திக் கேட்க வந்தா , நாமளும் , 
 "அத அவங்க கிட்ட கேளுன்னு " தண்ணி காட்ட வேண்டியதா இருக்கு.

அப்புறம் தலைவன் எப்படி , தொண்டர் அப்படி வேற என்ன செய்ய.

எப்படியோ , டவுசர் கிழியும், அப்புறம் இன்னா அது , இதயம் நனையும் , தேர்தலுக்கப்புரம் , நாம நம்ம வேலைய பாக்க , அவுங்க அவுங்க வேலையப் பாக்கப் போயிடுவாங்க ….





Sunday, January 19, 2014

எம் ஜி ஆரின் கலக்கல் கும்மி!


ஒரு வழியாக இந்தியா  சந்திராயன் , மங்கள்யான் என்று  விண்வெளியில் தனது 'வீரத்தை ' நிலை நாட்ட அடியெடுத்து வைத்துள்ளது.  செவ்வாய் கிரகம் , சந்திரன் கிரகம் போன்றவை இந்தியாவின் 'ஜில்லா' வாக முடியுமா என்பது காலத்தின் கையில் என்றாலும் , பல வருடங்கள் முன் , இந்தியாவின் விண்வெளி ஆசைக்கு எந்த மாதிரியான மனப் போக்கு மக்கள் மனதில் இருந்தது என்பதற்கு கிழே உள்ள பாடல் காட்சியும் ஒரு சாட்சி.  இதில் தலைவர் சட்ட சபை ரகளை முதல் கூடங்குளம் பிரச்சினைக்கு இணையான பிரச்சினை, ஜாதி பிரச்சினை , நம் இட்லி ,வடை கண்டு பிடிப்பு  என்று பல விசயங்களை கேலியும் கிண்டலுமாகத் தொட்டு சென்ற போது , பல வருடங்களுக்குப் பின்பும் நாம் இன்னும் மாறாமல் இருப்பதை எண்ணி ஆச்சரியப் படுகிறேன்.  வாழ்க இந்தியா...குடியரசு தினத்திற்கு என் முன் கூட்டிய வாழ்த்துக்கள்... நீங்களும் இதை கண்டு களியுங்கள் ,  enjoyment guranteed!