Tuesday, July 23, 2013

ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை!!!

 •    தலைப்பை கொடுத்த வாலிக்கு இறை அஞ்சலி.

 •    சொன்னா புரியாது படத்தின் ஒரு காமடி டயலாக் , ஹலோ எப் எம்மில் அடிக்கடி போடுகிறார்கள் , கொஞ்சம் கடி என்றாலும் சட்டென்று சிரிப்பை வரவழைத்தது :
              மனோபாலா:  உன் பேர சொன்னதுக்கே இந்த அடி அடிகிரானுங்க 
            சிவா :       என் புல் நேம் சொன்னீங்களா?
              மனோபாலா :  உன் புல் நேம் என்ன?
                சிவா :   என் புல் நேம்  'சிவா '

 •  ஆனாலும் மிர்ச்சி சிவா ,  தமிழ் பட நெனப்புலேயே வண்டி ஓட்டுனா எப்படி , கொஞ்சம் நடைய  மாத்துங்க , இல்லன்னே சீக்கிரம் காணாமப் பூடுவீங்க.

 • இயக்குனர் இமயத்தின் சமீபத்திய படத்தில் விரல் சூப்பும் காட்சியை சிலாகித்தவர்கள் / வெறுத்தவர்கள் , மரியானில் கதா நாயகி லாலி பாப் சாப்பிடுவதை டைட் குளோசப்பில் காட்டியதை குறிப்பிடக் காணோம் , ஒரு வேளை ரொம்ப சார்டாக இருந்ததினாலோ ?

 • அஜித்,சாலினி போல் இணை  பிரியாமல் ஜோடியாக இருப்போம் என்று தலையில்  அடித்து சத்தியம் செய்யும் சிம்புவிற்கு , அப்பா , அம்மாவைப் போல் என்று சொல்லத் தெரியவில்லை ஏன்? அவங்களுதும் காதல் கல்யாணம் தானே

 •   ரஜினிக்கு ஏன் இவ்வளவு தடுமாற்றம் கோச்சடையானை வெளியிடுவதில், பேசாம  மகள் விருப்பத்திற்கே விட்டுருக்கலாம்.

 • இவரால் பாவம் கே எஸ் ரவிக்குமார்க்கும் கெட்டகாலம் …ஹிட்டு கொடுத்து நாளாச்சு ….முதல்ல இவர நம்பி அவர் ஜக்கு பாயி ஆரம்பிச்சு அப்புறம் டிராப் ஆகி , பின்ன சரத்குமார் மூலமா பிளாப் ஆகி …

 • பிரபல  நாளிதழில்  ,  தலைவா படத்துனால , விஜய் மேல அம்மா   காண்டாகி , அவரையும் , அந்த பட தயாரிபாளரையும்   உள்ள போட்டுடாங்கன்னு குத்து மதிப்பா அடிச்சு விடுரானுங்கோ , யாரும் கோபப் படக் காணுமே…  படத்த ஓட வைக்க என்னமா ரீல் வுடுரானுன்கப்பா.

 • காற்றுள்ள போதே தூற்றிக் கொள்லனும்மின்னு இன்னைக்கி பொறந்த நாள் கொண்டாடும் அந்த கீரோ அண்ணனும் ,கீரோ  தம்பியும்   படம் வெளியிட்டு  காசு பாக்கிறது சில பேருக்கு ஏன் உறுத்துது …  தொன்று தொட்டு எல்லா கீரோவும் துட்டுக்கு தான மாரடிகிறாங்க ?

 • இந்த ஹோட்டல் ல அந்த அயிட்டம் நல்லாருக்குமின்னு  தேடிப்போனா அன்னைக்கி மட்டும் கன்றாவியா கொடுகிரானுன்களே ஏன் ?

பின் குறிப்பு :  பல பிராப்ள பதிவர்கள் எல்லாம் கீட்சரில் கண்ட மேனிக்கி  கீச்சுவதால் நானும் கீச்சிப் பார்த்தேன் ..அட போங்கப்பா இந்த வெளாட்டுக்கு நான் வரல...            

2 comments:

 1. பல விஷயங்களை தந்து ரசிக்க வைத்தீர்கள். உங்க ப்ளாக்கை கொஞ்சம் ரீ டிசைன் பண்ணுங்க முதலில் பதிவு வரட்டும் அதன் பின் படித்தீர்களா என்பது போல விஷயங்கள் கிழே வரட்டும்

  ReplyDelete
 2. நன்றி தல , ரொம்ப நாளா அங்கிட்டு போகல , கொஞ்சம் மாத்திட்டேன் , இப்ப நீங்க ரொம்ப நேரம் தடவ வேண்டாம் டேபிலேட்ட :-)

  ReplyDelete

படித்தது பிடித்தால் நண்பர்களுக்கு என் பதிவை, மறக்காமல் ,மறக்காமல் அறிமுக படுத்துங்கள்,அப்படியே ,எனக்கும் உங்கள் முத்தை உதிர்த்து விட்டு சென்றால் நானும் பதிவுலகில் பணக்காரன் ஆவேன் உங்கள் தயவில் :-)