Tuesday, January 28, 2014

அழகிரி vs கருணாநிதி

அண்ணன் தம்பி சண்டை. பெருசு மண்டையைப் போட்டவுடன் யார் பதவிக்கு வருவது என்று போட்டா போட்டி என்று ஒரு சிலரும் , தேர்தல் வருவதால் மீடியா கவனத்தை திமுகா மேல் திருப்ப ஒரு சதி என்று ஒரூ சிலரும் கருத்துக்  கூறும் கால கட்டம்.

யார் குடும்பத்தில் தான் இது நடக்கவில்லை என்று கேள்வி வேறு. கருப்பு எம் ஜி யாரை வைத்தா இவ்வளவு சண்டையும் என்றால் ,  இல்லை என்று சொன்னாலும் ,  அவ்வாறு ஒரு மாயை உருவாக்கி விட்டதால் , நாம் நம்பித் தான் ஆக வேண்டும். ஆனால் உள் குத்து விவகாரம் என்னவென்று , அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.

இந்த பத்திரிக்கைகளில்  வரும் செய்திகளைப் பார்த்தால் , என்னமோ இவங்களே பக்கத்துல உக்காந்து எல்லாத்தையும் கேட்ட மாதிரி எழுதுறாங்க , எப்படியோ வியாபாரம் ஆனா சரி.

ஒரு தாமாசு என்னன்னா ,  அழகிரி பேட்டினாலும்  சரி, இல்ல தாத்தா வோட பேட்டினாலும்  சரி …
மேட்டர் பில் பண்றது ரொம்ப ஈசி…

நமக்குத் தெரிஞ்ச குண்டக்க மண்டக்க கேள்வியப் போட வேண்டியது ,  அப்புறம் அதுக்குப் பதில் அழகிரியோ இல்ல தாத்தோவோ சொல்ற மாதிரி எழுதனுமின்ன ரொம்ப சிம்பிள் :

"அத நீங்க அவங்க கிட்ட தான் கேட்கனும்"

இந்த மாதிரி பேட்டியப் படிக்கிற நம்முக்குதான் ஒரே கிர்.

சரி அத விடுங்க …இதுக்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்க வடக்க ஒரு கட்சி இருக்குன்னு சந்தோசபட்டா ,அவிங்களோட ஆட்டம் , கொஞ்சம் கரடு முரடாதான் இருக்கு .

எது எப்படியோ , நம்மளுக்கு நம்ம பிரச்சினை  தீரனும் :

நல்ல ரோடு , நல்ல குடி தண்ணி , போக்குவரத்து , சகாய விலையில் மளிகை பொங்கித் தின்ன …

வேற வழியில்ல , ராமன் ஆண்டாலும் , ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலயில்லையின்னு .
பேசாம குவார்டர் அடிச்சு கவுந்தாப் போதுமின்னு நினைக்கிற கூட்டம் வேற இருக்கு. வெளங்கிடும் .
என்னத்த செஞ்சி என்னத்தப் பண்ண…மோடி வருவார் , செல்வம் தேடி தருவார் என்று ஒரு கூட்டம்.

இதுல என்னடானா ,  நடக்குறதெல்லாம் பாத்திட்டு , நம்ம வீட்டு வாண்டுகளெல்லாம்  இப்பவே , வீட்ல இந்த பாதி உனக்கு , அந்த பாதி எனக்குன்னு ஏழரயக் கூற்றானுங்க என்ன செய்ய.

வீட்டுக்கார மேடம் நம்ம கிட்ட இது பத்திக் கேட்க வந்தா , நாமளும் , 
 "அத அவங்க கிட்ட கேளுன்னு " தண்ணி காட்ட வேண்டியதா இருக்கு.

அப்புறம் தலைவன் எப்படி , தொண்டர் அப்படி வேற என்ன செய்ய.

எப்படியோ , டவுசர் கிழியும், அப்புறம் இன்னா அது , இதயம் நனையும் , தேர்தலுக்கப்புரம் , நாம நம்ம வேலைய பாக்க , அவுங்க அவுங்க வேலையப் பாக்கப் போயிடுவாங்க ….

No comments:

Post a Comment

படித்தது பிடித்தால் நண்பர்களுக்கு என் பதிவை, மறக்காமல் ,மறக்காமல் அறிமுக படுத்துங்கள்,அப்படியே ,எனக்கும் உங்கள் முத்தை உதிர்த்து விட்டு சென்றால் நானும் பதிவுலகில் பணக்காரன் ஆவேன் உங்கள் தயவில் :-)