அவள் மெல்ல அருகில் வந்து , தலை முடியை கோதினாள்.மீசையை ஆசையுடன் தடவி கன்னத்தை செல்லமாக கிள்ளினாள். மெல்ல குனிந்து, தன் உதட்டை குவித்து... கிர் கிர் கிர் என்று அலாரம் அலறத் தொடங்கியது.
"ச்சே ,சனியன் பிடிச்ச அலாரம் ,இப்பவா அடிச்சி தொலைக்கணும் ,ஹ்ம்ம் நல்ல கனவு ,உன்னை " என்று ஓங்கி டைம் பீசின் தலயில் வைத்தான் ஒன்று. கண்ணை மூடி கொண்டு வலுகட்டாயமாக அவளை மறுபடியும் வர வழைக்க பார்த்தான், ம்ஹீம் ,ஒன்னும் நடக்கல, அப்படி இப்படி புரண்டு , அவனை அறியாமலே தூங்கத் தொடங்கினான்.
அவன் எழுமுன் , அவனை பத்தி ஒரு இன்ட்ரோ. ஒரு எம் என் சீ பிராடக்ட் கம்பெனில , மார்க்கெட்டிங் எக்சிகிடிவ் , இருபத்தி நாலு வயதாகும் , கன்னி கழியாத பையன். அழகான பெண்கள் எங்கிருந்தாலும் , அவர்கள் கண்ணிலிருந்து மறையும் வரை , ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனிப்பவன்.
என்ன அது , ஏதோ சத்தம் கேட்குது , ஓ எந்திரிசுடான் போல ,வாங்க அவன் என்ன செய்யுறான்னு பாப்போம், அதுவுமில்லாம இதுக்கு மேல அவனுக்கு பில்ட் அப் கொடுக்குறதுக்கு அவனிடம் ஸ்பெஷல் எதுவும் இல்லேங்க.
கண்ணை கசக்கி கொண்டே எழுந்து , டைம் ஐ பார்த்தான்... ஷிட் எட்டே காலா , இன்னைக்கு எல்லாம் சொதப்ப போகுதா , ஒரு இம்போர்டன்ட் கிளயன்ட்கு டெமோ , ஓடத் தொடங்கினான் ..வேற எங்க , பாத் ரூம் இத்யாதி இத்யாதி ...
எல்லாம் முடித்து , சமையல் கட்டில் இருந்த அம்மாவை நோக்கி ஓடினான் , 'ஏம்மா, நேத்தே சொன்னன்ல , சீக்கிரம் எழுப்புன்னு ,ஏன் எழுப்பலை?' என்று திட்ட ஆரம்பிக்க, "சாரிடா கண்ணா , நீ தான் அலாரம் வச்சிருப்பன்னு நெனச்சேண்டா , நானும் இன்னிக்கி கொஞ்சம் கூடுதலா தூங்கிட்டேன் போல ,எல்லாம் அந்த வலி நிவாரணி பண்ண வேலை" என்றாள் அம்மா. "போம்மா , இன்னிக்கி எல்லா வேலையும் கெட்டு போகப் போகுது" என்று கத்த ஆரம்பிக்க , "இந்தா , மொதல்ல இந்த தோசைய சாப்பிடு " என்று அவன் குணம் அறிந்து அவன் வயிற்றை நிரப்பினாள் அம்மா.
அம்மா கொடுத்ததை அவசரமாக வாயில் திணித்து , ரெண்டு மடக்கு காப்பியையும் குடித்து விட்டு , உடை மாற்ற ஓடினான். "அம்மா ,இங்க வச்ச ,என் பெல்ட காணம், எங்கேம்மா வச்ச?" "உன் பெல்ட வச்சு நான் என்னடா பண்ணபோறேன்,அங்க தா எங்கியாவது கெடக்கும் நல்லா தேடுடா ,இவனக்கு கால காலத்துல ஒருத்திய கட்டி வக்கிர வரைக்கும் ,என் உசிர வாங்காம விடமாட்டான் " .
ஒரு வழியாக பெல்டை கண்டுபிடித்து மாட்டி , வண்டி சாவிய எடுத்து , பஜாஜ் பல்சரை உதைக்க ,அது ஸ்டார்ட் ஆகும் மூடே இல்லாமல் அமைதியாக இருந்தது. ப் ச் ச்சே ,இது வேறயா ,நமக்கு இன்னிக்கி ஏழர தான் , சும்மாவா சொன்னாரு மர்பி. விறு விறு என்று பஸ் ஸ்டாப் நோக்கி நடக்க இல்ல ஓட ஆரம்பித்தான். என்னிக்கும் இல்லாத திருநாளா , அவன் போக வேண்டிய பஸ் புறப்படும் தொனியில் ஊர ஆரம்பிக்க , ஓடிப் போய் ஏறி விட்டான்.
பஸ்சில் அவளவாக கூட்டமில்ல,காலியாக இருந்த ஜன்னல் ஓர சீட்டாக
பாத்து அமர்ந்தான். சிறிது நேரம் கழித்து,அடுத்த ஸ்டாப்பில் ,ஒரு நவீன இளம் மங்கை ஏறினாள். இவன் கண்கள் வழக்கம் போல் , அவளை பிரித்து மேயத் தொடங்கின. "இங்க வந்து உக்காந்தா எவ்ளோவு நல்லா இருக்கும் " என்றது அவன் மனம். இவன் அருகில் வந்த அவள் ,அவனை ஒரு முறை ஏற இறங்க பாத்து விட்டு ,என்ன நினைத்தாளோ, அவனுக்கு முன் இருந்த சீட்டில் உட்காந்துவிட்டாள்.
பஸ்சில் 'கண்ணும் கண்ணும் நோக்கியா ,கொள்ளை கொள்ளும் மாபியா " ஒலித்து கொண்டிருந்தது. அவன் இருதயம் ,ஹை ஸ்பீட் இல் துடிக்க ஆரம்பிக்க , ஒரு இனம் புரியாத , அவஸ்தையில் , அவளையே பாக்க ஆரம்பித்தான். அவளோ , ஹான்ட்ஸ் ப்ரீ இல் ,யாரிடமோ பேசிக் கொண்டிருந்தாள்.
இவன் மனம் கேள்விகளை அடுக்க ஆரம்பித்தது ," யார்ட்ட பேசுவா? ஒரு வேளை பாய் பிரண்டோ? ச்சே இருக்காது , இது மாதிரி லட்டு பிகுரெலாம் எனக்கு மடிய மாட்டேங்குதே....ஒரு வேளை அவள் தோழியோ ...இவ்வ்ளோவ் நேரம் பேசுறாள்" . இவன் காதில் இயர் போன் ஐ மாட்டிக் கொண்டு ,FM கேப்பது போல , மெல்ல அவன் உடம்பை முன் நோக்கி நகர்த்தி , கூர்ந்து அவள் பேச்சை கவனிக்க முயற்சித்தான்.
படக் கென்று அந்தப் பெண் இவன் பக்கம் திரும்பி முறைக்க , இவன் பாட்டு கேப்பது போல் முகத்தை வைத்துக் கொண்டான். கொஞ்ச நேரம் சென்று ,மறுபடி முயற்சிக்க , மீண்டும் அவள் முறைத்தாள்.
அடுத்த ஸ்டாப் வந்தது போல் ,அவள் மெதுவாக எழுந்து ,இவன் பக்கம் திரும்பினாள். அவள் எதுவும் கத்தி , ஆர்ப்பாட்டம் செய்வாளோ என அஞ்சி , "ஆக்ச்சோல்லி ஐ வாஸ் நாட் லுகிங் அட் யு " என்று என் அப்பன் குதிருக்குள் இல்லை கணக்கா அவன் ஆரம்பிக்க, அவள் ,
"யோவ் அதெல்லாம் இருக்கட்டும் , மொதல்ல ஜிப் அ போடுயா ,காலங்காத்தால வந்துட்டானுங்க ,
தொறந்து போட்டுகிட்டு " என்று வசை பாடத் தொடங்கினாள்.
க்ளைமாக்ஸ் பஞ்ச் எதிர்பார்த்தேன்
ReplyDeleteஹஹஹா...கலக்கல் மாப்ள!
ReplyDeleteவாங்க சி.பி.செந்தில்குமார் , விக்கியுலகம் ... ரசித்தமைக்கு நன்றிகள் பல.
ReplyDeleteஇனிய நண்பா,
ReplyDeleteகலக்கல் பதிவு .
சூப்பர் ....
யானைக்குட்டி
இனிய நண்பா,
ReplyDeleteகலக்கல் பதிவு .
சூப்பர் ....
யானைக்குட்டி
@யானைகுட்டி
ReplyDeleteநன்றி தலைவா!
@FOOD
ReplyDeleteவருகைக்கு நன்றி சார், கருத்துக்கும்.
ஹி ...ஹி...
ReplyDelete@NAAI-NAKKS
ReplyDeleteவந்தமைக்கும் ,ரசித்தமைக்கும் நன்றி.
பேரு சூப்பருங்க.