Friday, September 16, 2011

கமல் படத்தில் இனி முத்தம் இல்லை?

கமல் முத்தத்தில் நனையாத நடிகைகள் குறைவு ,அந்த அளவுக்கு பேர் போன அவர் , இனி தன் படங்களில் முத்த காட்சி இல்லை என்ற அதி முக்கிய  விசயத்தை, சொல்ல போகிறேன்.  அதற்கு முன், என் நண்பனின் நண்பனுக்கு நடந்த இந்த முத்த கதையை கேளுங்களேன் கொஞ்சம் :

அந்த நண்பன் , ஒரு கணினி நிரலும் நிபுணன் . அவனுக்கு ப்ராஜெக்ட் விசயமாக அமெரிக்கா போக வேண்டி வந்தது. குஷியாக அமெரிக்கா சென்று தன் உல்லாச வாழ்வை தொடங்கினான். ஒரு லாங் வீகெண்டில் , அங்கிருந்த 'சாகச பார்க்' சென்று எல்லா சாகச ரைடையும், ட்ரை பண்ணி கொண்டிருந்தான். ஒரு ரைடு பாக்கவே பயங்கரமா இருந்திருக்கு , எவ்வளோவோ பண்ணிட்டோம் ,இது என்ன ஜுஜுபி  அப்படின்னு நெனசுகிட்டு , அதுல உக்காந்து பெல்ட் போட்டுருகாப்ல.

ரைடு தொடங்கி, கண்ணை மூடி தெரகுருதுகுள்ள , முடிஞ்சு நிக்குது. எல்லாரும் ஒரு பரவச உணர்வோட இறங்குறாங்க. ஆனா இவனால மட்டும் எந்திருக்க முடியவே இல்ல. அய்யாவுக்கு ஸ்பைனல் கார்டு ஏதோ ஸ்லிப் ஆகி ,கழுத்துக்கு கீழ புல்லா எந்த உணர்வுமில்லாம ,மரகட்டையா உக்காந்துட்டாரு.

அப்புறம் , ஆம்புலன்ஸ் வந்து ,அவரை அப்படியே , ரொம்ப பழுத்த தக்காளிய பொத்துநாப் ல , எடுபயிங்கல்ல அது மாதிரி ,சூதானமா தூக்கி கொண்டு போயிருக்காங்க . 

ஒரு மூணு மாசம் அமெரிக்காவுல வச்சு ட்ரீட்மெண்டு ,அப்புறம் ஒரு டாக்டர் ,ஸ்பெஷல் ஆ ,இவர் கூடவே ,இந்தியா வரைக்கும் வந்து ,அதுவும் ஸ்பெஷல் விமானத்துல ,ஒரு பாத்து நாள் இருந்து பாத்துட்டு போயிருக்காரு.

ஒரு வழிய இன்னொரு ஆறு மாசம் சிகிட்சையில , நல்ல குணமாகி ,அதே வேலைக்கு போக ஆரம்பிட்சிருக்கரு. அவருக்கு கல்யாணம் பண்ணலாமுன்னு , ரொம்ப தேடி தேடி ,பொண்ணு கெடைக்காம ,நொந்து நூடூள்ஸ் ஆகி, கடைசியில் ,அவங்க நெருக்கமான உறவுல ,எப்படியோ சமாளிச்சி , நிச்சயம் முடிச்சிருக்காங்க.

நிச்சயம் முடிச்சு வழக்கம் போல , பயனும் பொண்ணும், கல்யாண ஆகுறதுக்கு கொஞ்ச நாள் இருக்குறப்ப ,நல்லா சுதிருக்காங்க. அவன் நண்பர்கள் அத பத்தி அவன ஓட்டிஇருக்கிறப்ப ,அவன் சொல்லிருக்கான்:

"  டே பசங்களா, உதட்டு முத்தம் இவ்ளோ சூபேரா இருக்கும்னு நான் கனவுல கூட நினைக்கலடா "


டிஸ்கி : சரி கமல் முத்தம் என்னாச்சுன்னு கேட்குறீங்களா ?  அவருக்கும் எனக்கும் அறிமுகமே இல்ல . ஒரு வேலை அப்படி கெடச்சா, இனிமே முத்த காட்சி வகாதீங்கன்னு ,கேட்கலாமுன்னு இருக்கேன். அதெப்படி சும்மா அவர் மட்டும் அப்படி அனுபவிக்க்கலாமுன்னு ஒரு பொறாம தானுங்கோ !

3 comments:

  1. டிஸ்கி : சரி கமல் முத்தம் என்னாச்சுன்னு கேட்குறீங்களா ? அவருக்கும் எனக்கும் அறிமுகமே இல்ல . ஒரு வேலை அப்படி கெடச்சா, இனிமே முத்த காட்சி வகாதீங்கன்னு ,கேட்கலாமுன்னு இருக்கேன். அதெப்படி சும்மா அவர் மட்டும் அப்படி அனுபவிக்க்கலாமுன்னு ஒரு பொறாம தானுங்கோ !////////////

    ஆஹா, இப்புடிக் கவுத்துட்டீங்களே சார்! சூப்பர்!

    ReplyDelete
  2. நல்ல பதிவு, தலைப்பு எதோ சினிமா கிசு கிசு போல் இருப்பதால், கவனிக்காது விட்டு விட்டோம். வாழ்த்துக்கள், தொடர்ந்தும் எழுதுங்கள், டெம்ப்ளேட் டிசைனை கொஞ்சம் கவனிக்கவும்.

    ReplyDelete
  3. நன்றி ஐடியா மணி.
    நன்றி Real Santhanam Fanz.

    ReplyDelete

படித்தது பிடித்தால் நண்பர்களுக்கு என் பதிவை, மறக்காமல் ,மறக்காமல் அறிமுக படுத்துங்கள்,அப்படியே ,எனக்கும் உங்கள் முத்தை உதிர்த்து விட்டு சென்றால் நானும் பதிவுலகில் பணக்காரன் ஆவேன் உங்கள் தயவில் :-)