Thursday, September 22, 2011

சிறை என்னை வாட்டுகிறது - கனி மொழி

இப்ப நினச்சி பாத்தா மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. பணத்துக்கு ஆசை பட்டு நான் அந்த தப்ப பண்ணி இருக்க கூடாது. நான் மட்டுமா பண்றேன் , எல்லாரும் தான் பண்றாங்கன்னு செய்ஞ்சி , இப்ப மாட்டிகிட்டு முழிக்றேன். எல்லாத்துக்கும் காரணம் அந்த போன் உரையாடல். 

எங்க அப்பாவும் எவ்ளோவோ ட்ரை பண்ணாரு,என்ன எப்படியாவது இந்த சிறையிலிருந்து மீடுடன்னுமின்னு. ப்சு, அவரும் பாவம் ,வயசாயிருச்சி ,முன்னே இருந்த செல்வாக்கு ,இப்ப அவருக்கு இல்ல ,என்ன பண்ணுவாரு பாவம்.

சரி, இந்த தனிமை கொடுமையிலிருந்து வெளிய வர ,ஒரே வழி , "எதுலவாவது ,உன் கவனத்தை திசை திருப்பு , வாசிக்கிறது, டைரி எழுதுறது,கவிதை எழுதுறது , இதுமாதரி,உனக்கு தான் கவிதை எழுதுறது பிடிக்குமே ,அதுல பெரிய ஆளா வருவேன்னு ,உங்க அப்பா கூட அடிக்கடி சொல்லுவாரே " என் உயிர் தோழி நினவில் சமீபத்தில் என்னை பார்க்க வந்த போது கூறியது நினைவுக்கு வந்தது.

எனக்கு இப்ப இருக்குற மூடுக்கு ,கவிதையில் மனம் செல்லாது என்பதை நான் உணர்ந்தே இருந்தேன். சரி, டைரி எழுதி தான் பார்ப்போமே , ம்ம்ம் என்ன எழுதலாம். பல நினைவுகள் மனதில் ஊசலாட ,சரி, நம் வாழ்கையின் சந்தோஷ   தருணங்களை எழுத ஆரம்பிப்போம் .

என் நினைவு ,பள்ளி பருவத்தில் ஆரம்பிச்சு வரிசையாய் திரைபடம் போல ,காட்சிகளாய் உருள தொடங்கின . எல்லாரயும் போல , என் அப்பா , என்னை பல் விலக்க சொன்னார் ,தலை சீவ சொன்னார் , பள்ளிக்கு போக சொன்னார் ,
நன்றாக படிக்கச் சொன்னார். எல்லாவற்றையும் செய்தேன்.

கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பித்த வயதில் , எனக்கு தமிழில் அதிக  ஈடுபாடு ஏற்பட்டது. பள்ளியில் நடக்கும் பேச்சு போட்டி , கவிதை போட்டி ,பட்டி மன்றம் ,எதையும் விடாம , ஆர்வத்துடன் கலந்து ,ரொம்ப தடவை , முதல் பரிசு வாங்கியதை , என் அப்பா , ஊரே பாக்க ,என்னை தலையில் வைத்து கொண்டாடினார்.

பின் கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தேன். அப்போது தான் கம்ப்யூட்டர்  அறிமுகம் கிடைத்தது. நண்பர் கூட்டம் , சாட்டிங் செய்வதை அறிமுக படுத்த ,நானும் மெல்ல அந்த சோசியல் நெட்வொர்கிங் சைட் களில் ,நடை பயில ஆரம்பித்தேன்.

எனக்கு தமிழ் ஆர்வம் இருந்ததால்,தமிழ் மக்கள் இணையத்தில் எங்கெல்லாம் தென்படுகிறார்களோ, அங்கெல்லாம் என் தடத்தை பதியத் தொடங்கினேன். அப்போது தான் அவன் அறிமுகம் கிடைத்தது.

பல நாள் ,பல மணி நேரம் ,எங்கள் நட்பு ,இணையம் வாயிலாக , எங்களின் நெருக்கத்தை கூட்டத் தொடங்கியது. தமிழ் மேல் இருந்த காதல் ,எங்கள் இருவரையும் ,ஒருவராக மாற்ற தொடங்கியது ,ஆம் ,எங்களுக்குள் காதல் கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. 

எங்களுக்கே ஆச்சர்யம் ,இவ்வ்ளோவு நாளு,நான் யார் ,என்ன செஞ்சிகிட்டு இருக்கேன்னு அவனுக்கும், அவன் என்ன செய்றானு நானும் கேட்கவே இல்லையேன்னு. அவன் MBA  படிப்பதையும் , அமெரிக்காவில் வேலை செய்ய வாய்ப்பு காத்து  கொண்டிருப்பதையும் ,அவன் குடும்ப பிண்ணனியும் சொன்னான் . என்னை பற்றி அறிந்ததும் , "சரி நாம கல்யாணம் பண்ணலாமா ?" என்று கேட்டான்.  ஏற்கனவே என் மனம் அவனை முழுதாக நிரப்பி இருந்ததால் , என் அப்பாவிடம் தொடர்பு கொள்ளச் சொன்னேன்.

அப்பாவுக்கும் அவனை பிடித்ததால்,சரியென்று உடனே சம்மதித்தார். எனக்கும் ,என் கம்பெனியிலிருந்து அமெரிக்கா செல்ல வேண்டும் என்று சொல்லி ,சென்னை அமெரிக்க எம்பசி இல் , விசா ஸ்டாம்ப் செய்ய அனுப்பி வைத்தார்கள். அன்று தான் அவனும் விசா ஸ்டாம்ப் செய்ய வந்திருந்தான் ,நாங்கள் மொதல்லேயே திட்டம் போட்டபடி.

விதி அப்போது தான் , அமெரிக்க வெள்ளையன் மூலமாக விளையாடத் தொடங்கியது. எனக்கு எந்த வித கேள்வியும் கேட்காமல் , உடனே விசா கொடுத்து விட்டார்கள் . ஆனால் அவனுக்கு ,என்ன காரணம் என்றே சொல்லாமல் ,  விசா கொடுக்க முடியாது போ என்று சொல்லிவிட்டான் அந்த வெள்ளையன்.

அப்புறம் அவன ஒரு வழியாக தேற்றி , எனக்கு ஆபீஸ்ல கட்டாயம் ,"உடனே அமெரிக்கா கெளம்பி ஆகணும்" என்ற நெலமைய சொல்லி ,"நான் என்ன பண்ணட்டும்" என்று கேட்டேன் .  நீ மட்டும் இப்ப அமெரிக்கா போ , அப்புறம் நம்ம கல்யாணம் முடிச்சி ,எனக்கு H4  எடுத்துகிட்டு, முடிவு பண்ணிக்கலாம் " என்று என்னை அமெரிக்காவுக்கு வழி அனுப்பினான்.  

ஆறு மாத காலம் , மறுபடியும் இணையமே எங்கள் இதயத்தை இணைக்கும் ஒரு நரம்பில்லா பாலமாக இருந்தது. 

தீடிரென்று என் அப்பா போன் செய்து , "குட்டிமா ,நான் சொல்றத கேளு , உனக்கு இப்ப வேற நல்ல நல்ல வரன்கள் வருது ,பேசாம அப்பா சொல்றதை கேழு, அவனை தலை மொழுகிடு ன்னு" சொல்லி   கட் செய்து விட்டார். 

நாளுக்கு நாள் ,அவர் நச்சரிப்பு என் நிம்மதியை கொஞ்சம் கொஞ்சமாக தின்றது. 
அவனிடம் சாட்டில் சொன்ன போது , "நீ என்ன செய்யப் போற ? " என்று பதில் வந்தது. எனக்கு மொதல்ல கோபம் வந்தாலும் அடக்கிட்டு ,சரி அவனுடன் விளையாடுவோமின்னு, அவன் மொபைலை அதிர செய்தேன்.

"வேற வழி இல்லடா" என்று நான் விளையாட்டை ஆரம்பிக்க ,அவன் அது நிஜம் என்று நினைத்து , பேச்சை வேறு விதமாக கொண்டு செல்ல ஆரம்பிக்க , மெல்ல மெல்ல அவன் சுய ரூபம் , வார்த்தைகளாய் என் நெஞ்சை சுட ஆரம்பித்தது .

அப்புறம் அவனிடம் இருந்து ,பல நாட்கள் தொடர்பே இல்லை. என் அப்பாவின் தொந்தரவும் அதிகரிக்க , அங்கேயே வேலை செய்யும் ,அவருக்கு தெரிந்த ஒரு வரனை குறிப்பிட்டு ," நீ அடுத்த வாரமே ,இங்க வர்ற , கல்யாணத்த முடிக்கிற" ன்னு இதுவரை நான் கோப பட்டு பாக்காத என் அப்பா , அப்படி கத்தியது, என் காதில் இன்னும் கேட்டுகிட்டே இருக்கு.

ஆபீசில் அவசரமாக இந்திய போய் வர வேண்டும் என்று உத்தரவு வர ,அங்கே என் அப்பா , அவர் சொன்னபடி ,திருமணத்தை நடத்தி முடித்து விட்டார். "நீ இனிமே வேலை பாக்கத் தேவை இல்லை" என்று வேலையையும் விட வைத்தார்.

அப்புறம் என் கணவுருடன், மீண்டும் அமெரிக்கா பயணம். வாழ்க்கையில் மெல்ல சுவாரசியம் துளிர்க்க தொடங்கியது. அதுவரை , நன்றாக பேசிக் கொண்டிருந்த என் கணவர் , தீடீர் என்று கோப படத் தொடங்க ,எவ்வளோவ விசாரித்தும் ,காரணமே சொல்லாமல் , "நீ பேசாம ஊருக்கு  போயிடு " ன்னு சொல்லி ,என்னை வலுக் கட்டாயமாக  அனுப்பி வைத்தார்.

ஆறு மாதம் கழித்து,என் கணவரிடம் இருந்து ஒரு மெயில் , "மனைவிக்கு , என் அப்பாவின் வற்புறுத்தலால் தான் ,நான் உன்னை கல்யாணம் செய்ய வேண்டி வந்தது , ஆனால் நான் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலிக்கிறேன் , நான் அவளை விட்டு விலக முடியாது , என்னை மன்னித்து விடு ".

அந்த மெயிலை வைத்து என் அப்பா , என்னவெல்லாமோ செய்து பார்த்தார். போலிஷ் கம்ப்ளைன்ட் ,சட்ட நடவடிக்கை என்று , ஆனாலும் காலம் கரைகிறதே தவிர , என் நடத்தை களங்கப் பட்டது தான் மிச்சம்.


டிஸ்கி :   அவள் பெயர் கனி மொழி.


7 comments:

  1. எப்படியோ பதிவு நல்லா இருக்கு!

    ReplyDelete
  2. வாங்க சார், சூப்பர் பாஸ்டா இருக்கீங்களே ..நன்றி

    ReplyDelete
  3. இது எந்தக் கனிமொழி பாஸ்?

    ReplyDelete
  4. வாங்க பாசு ,சிந்தாதிரி பேட்டை , மீனாக்க தான்.

    ReplyDelete
  5. கனி மொழியா அது யாரு?????கனிமொழி படத்துல நடிச்சாங்களோ???!!!

    ReplyDelete
  6. சிறையில் அவங்களுக்கு "ராச" உபசாரம் தானே!!!அப்ப எங்கே தனிமை வாட்ட போகுது!!!!

    ReplyDelete
  7. வருகைக்கு நன்றி » мσнαη « •
    சிந்தாதிரி பேட்டை , மீனாக்க தான்
    அந்த ப்ரூட் லாங்குவேஜு.

    ReplyDelete

படித்தது பிடித்தால் நண்பர்களுக்கு என் பதிவை, மறக்காமல் ,மறக்காமல் அறிமுக படுத்துங்கள்,அப்படியே ,எனக்கும் உங்கள் முத்தை உதிர்த்து விட்டு சென்றால் நானும் பதிவுலகில் பணக்காரன் ஆவேன் உங்கள் தயவில் :-)