அந்த காலத்து டிசைன் இல் போடப்பட்ட ஒரு பெரிய கோட்டை கதவு. அதன் முனையில் ஈட்டி மாதிரி ,கூரான பல முனைகள். உத்தரவின்றி உள்ளே வர்றவன் டங்குவார கிழிக்க ரொம்ப நாளாக காத்து கிடந்து , துரு பிடித்து ,உன்னை குத்தவா, வேண்டாமான்னு நட்டுக்க்ட்டு நின்னு இருந்திச்சி.
கங்காருவின் வயுத்துல ஒரு சின்ன பய்யி இருக்குமே , அது மாதிரி அவ்வ்ளோவு பெரிய கதவுல , சின்னதா இன்னொரு கதவு. கங்காரு வவுத்துல இருந்து அதோட குட்டி எட்டி பாக்கிற மாதிரி, ஒரு முகம் அப்ப அப்ப எட்டி பாக்குது, வேற யாருமில்ல ,அதான் இந்த காவலன் , வாட்ச்மன் , கங்காணி,கூர்க்கா அப்படின்னு பல பேர்ல சொல்வீங்கள்ல அவனோட முகம் தான். மனு குடுக்க வரும் அப்பாவி ஏழைகளிடம் இவன் காட்டும் பந்தா இருக்குதே , மன்மோகன் சிங்க விட எனக்கு தாண்டா பவரு ஜாஸ்தின்னு அப்படி ஒரு தெனாவட்டு தெரியும்.
சர் சர் னு , கார் வர , அந்த பெரிய கதவு ,தெறக்க அப்புறம் பூட்ட இப்படியே இருக்கு. அப்பதான் அவன் வந்து நிக்கிறான். கால்ல ஹவாய் செப்பல் , கைல ஒரு இத்து போன கடிகாரம் , கசங்கி கசங்காம சட்டை , அதுக்கு சம்பந்தேம இல்லாத ஒரு கலருல பேண்ட்டு போட்டுகிட்டு ,கைல ஒரு பைல். அதுல அவன் சமீபத்தில வாங்கின பிளஸ் டூ மார்க் சீட்.
லேசா அந்த சின்ன கதவை தட்டுறான். பல தடவ தட்டின பிறகு , அந்த சின்ன கதவு திறந்து , மறுபடியும் எட்டி பாக்குது அந்த தெனாவட்டு மூஞ்சி.
"ஏன்னா வேணு? "
" கோர்ஸ்ல சேர அப்ளிகேசன் வாங்கணும்? "
" அதெல்லாம் ரெண்டு மணிக்கு மேல வா"
"இல்ல சார் , முதல்வர் தான் வரச் சொன்னாங்க"
"என்னாது, வரச் சொன்னாரா ,எப்ப சொன்னாரு ?"
--நேற்றைக்கு முதல்வரை அவர் வீட்டில் சந்தித்தது அவன் நினைவில் சுலழ ஆரம்பிச்சு.
....
அவன் அவர் வீட்டுக்கு போன போது, அவர பாக்க ,நிறைய பெற்றோர்கள் கூட்டம். அவனோட அவன் அப்பாவும் வந்திருந்தார். பல மணி நேர வெய்டிங்குக்கு பிறகு , உள்ள போனாங்க.
அப்ப மெல்ல ஆரம்பித்தார் , "சார் பையனுக்கு உங்க காலேசுல ஒரு சீட்டு வேணும்..."
"அப்படியா , எங்க உன் மார்க் ஷீட கொடு பாப்போம் " என்றார் அவர் அவனை பாத்து.
"பய்யன் இங்கிலீஷ்ல நல்ல மார்க் வாங்கிருக்கான் , பி எ இங்கிலீஷ் லிடேரசுர் படிக்க போடுங்க " (அவர் அதன் துறை தலைவர் வேறு ).
"இல்ல சார் பய்யன் சயின்சு படிக்க ஆசைபடுறான் சார் "
"எடமெல்லாம் அல்ரெடி புல்லா போச்சே "
"சார் எதாவது பாத்து செய்ங்க சார் "
"சரி ,புதுசா கம்ப்யூட்டர் கோர்ஸ் ஆரம்பிட்சுருக்கோம் ,செகுறீங்களா?"
"சரி சார் "
"கொஞ்சம் பணம் கட்ட வேண்டி இருக்குமே "
"பரவல்ல சார் "
"சரி உங்க பையன என்னை காலேசுல வந்து பாக்க சொல்லுங்க "
..
--"யே என்னப்பா ,எப்ப வரச் சொன்னாரு முதல்வர் னு கேட்டா எங்கயோ பராக்கு பாக்குற ? "
"நேத்து சார்."
"சரி சரி ,உள்ள போ ன்னு " , ஒரு வழியா , கேட்ட தொரந்துவிட்டான்.
அவன் மெல்ல முதல்வர் அறை நோக்கி போக ஆரம்பித்தான். வழியில் கொஞ்சும் மைனாக்கள் ,கலர் கலரா நின்றிருந்தன. அட நெச மைனாங்க ,
நீங்க வேற மைனானு நெனச்ருபீங்களே. கருப்பும் ஒரு கலர் தானுங்களே .
ஒரு வழியா முதல்வர் அறைய கண்டு பிடித்து , வெளியில் நின்றிந்த பியூனிடம் , தன் ,பெயர் எழுதி ,அந்த துண்டு சீட்டை கொடுத்தான். அந்த ப்யூன் பெரியவர் , க்ரீசென்று ஒரு மாதிரி சத்தம் போடுற அந்த குட்டி கதவை திறந்து உள்ளே போக, அது தான மீண்டும் மூடி ,திறந்து ஒரு சின்ன குத்தாட்டம் போட்டு நின்றது.
கொஞ்ச நேரம் கழிச்சு , அவர் வெளியே வந்து ,உள்ள போப்பா னு கைய காட்டுனாரு. அவன் கொஞ்சம் மெதுவாக உள்ளே போனான். முதல்வர் அவனை மேலும் கீழும் பாத்துட்டு , கையில் வைத்துருந்த பயில கேட்டாரு. அவன் அதை கொடுத்துட்டு , என்ன நினைச்சானோ , டபக்குன்னு
அவர் முன்ன போட்டிருந்த சேர்ல உக்கந்திட்டான்.
முதல்வர் மூஞ்சில கோபம் கொப்புளிக்க ஆரம்பிச்சுடுசு. "யே , உன்ன யாரு உக்காரச் சொன்னா? எந்திரி மொதல்ல ?"
"என்னடா இது மதுரைக்கு வந்த சோதனினு" , பய்யன் எந்த்ரிச்சபுல.
அவர் கோபமாக , ஒரு சீட்டை எடுத்து , அதுல கோழி , நெளி நெளி யா ஆயி போகுமே , அது மாதிரி , அவர் கைக்கு வந்தத கிறுக்கி , போயி வெளிய இருக்கிற கவுன்ட்டர் ல கொடுன்னு , பொடனில தள்ளாத கொறையா அவன அனுபிச்சாறு.
அவன் வெளியே போயி , அந்த கவுடர்ல அந்த கோழி பீய ,சாரி சீட்ட கொடுக்க , அத வாங்கிட்டு ,அவர் பணத்த எடுன்னு மிரட்ட ,அவன் பேன்டுல கை விட்டு ,பணத்த கொடுத்து ஒரு வழியா வாங்கிட்டான் சீட்டு .
அப்புறம் மூணு வருஷம் ,இல்லாத கொட்டம் எல்லாம் அடிச்சு , இப்ப அவன் ஒரு பெரிய கணினி வல்லுனன இருக்காப்ல.
டிஸ்கி : சொல்ல மறந்துட்டேனே , அவன் கொஞ்சம் , உருண்டு திரண்டு இருந்ததால ,அவனுக்கு நாங்க வச்ச பேரு சோனா , உண்மை பெயரு சோமநாதன்.
சரி தான்!ஆளாளுக்கு சோனா பேர சொல்லியே தேத்திடுங்க!
ReplyDelete