Friday, September 30, 2011

ஆத்தாடி பாவாடை காத்தாட - பார்ட் 1

எல்லோரும் தொடர் பதிவு போடுறாங்க,நீயும் ஒரு பதிவு போடு , அப்ப தான் பெரிய அப்பா டக்கர் ஆகமுடியும்னு , ஆல மரத்தடில உக்காந்துகிடுருந்த ஒன்றை கண்ணு ஜோசியன், 'கண்ணு மைய' வச்சு பாத்து , குறி சொல்லிட்டான் அப்பு. அதுனால ,வேற வழி இல்ல,எழுதலாமின்னு முடிவு பண்ணிட்டேன். நான் ஒரு வாட்டி முடிவு பண்ணா, எங்க வீட்டுல எவனுமே கண்டுக்க மாட்டயீங்க. அப்படியே மந்திரிச்சி தண்ணி தெளிச்சு போயுட்டு வாடா மகனேன்னு பொடனில அடிச்சு தொரத்திடுவாங்க.

நான் தொடர் பதிவு எழுத ஆசைப்பட்டதுக்கு இன்னும் ரெண்டு காரணம் இருக்கு. எனக்கு எப்பவுமே ரெண்டு ரொம்ப பிடிச்ச நம்பர். ஏன்னா ,கொஞ்சம் யோசிச்சு பாருங்க , நமக்கு கடவுள் , எல்லா முக்கிய விசயத்தையும் ரெண்டு ரெண்டா படசிருகாப்ல. அதாங்க , கிட்னி , காது , மூக்கு ஓட்டை , கண்ணு இப்படி. இன்னும் ஒரு அவயம் கூட ரெண்டா படசுருக்கிற அந்த அற்புத டிசைனர் இருக்காரே , அவருக்கு கோயில் கட்டி கும்புடிரது ரொம்ப பொருத்தம் தானுங்க.

சரி, அந்த ரெண்டு விஷயம் :

  1. நம்ம ஆ.வி புத்தகிதுல, இளமை கவிஞர் திரு.வாலி எழுதுற நினைவு நாடாக்கள் - Rewind  ,அவரோட வாழ்க்கை அனுபவங்கள , தெல்லிய தமிழ்ல , முத்து முத்தா எழுதுறது ரொம்ப படிக்க பிடிக்கும்.  அது மாதிரி நானும் என்னோட நினைவுகள இந்த தொடர் பதிவுல பகிரலாமுன்னு ஆசை. அவரு பெரிய கவிஞர் , நாம என்ன பெரிய பருப்பான்னு கூட மொதல்ல நெனச்சேன். சரி , வந்தது வரட்டும் ,'எடுரா புல்லட்ட' ன்னு முடிவு கட்டியாச்சு. இந்த காட்டாத்து வெள்ளத்த அண வச்சாலும் தடுக்க முடியாது. எப்படிங்க நம்ம பில்ட் அப்பு?

 2. நான் ஒரு சினிமா பாட்டு  பைத்தியம். ரேடியோவுலையோ ,  டிவி லையோ , பாட்டு ஆரம்பிக்ரப்பவே ,அதுல வர்ற பல்லவிய கூட சேர்ந்து  சத்தம் போட்டு பாட ஆரம்பிச்சுருவேன். நீங்க கூட அப்படிதான், இது என்ன பெரிய விசயமாடா ன்னு சொல்றீங்களா. ரைட்டு, நீங்களும் நம்ம கட்சி. அப்படி நான் ரசிச்ச பல பாடல்கள் , அது தொடர்பா ,எதாவது நிகழ்ச்சி இருந்தா அதையும் இணைச்சு ஒரு தொடர் பதிவா எழுதலாம் ங்குறது , என் எண்ணம். நீங்க படிச்சுட்டு காரி துப்ப மாடீங்கன்றது என் திண்ணம். எப்படி நம்ம தீம். இதத் தான் உக்காந்து ஒசிகரதுன்னு பெரியவுக சொன்னாங்களோ.

இன்னைக்கு வெள்ளி கிழம , எல்லா மதத்தவருக்கும் , ஒரு புனித நாள் , அதுவுமில்லாம , அடுத்து வர்ற ரெண்டு நாள் , எல்லாரும் ஓய்வெடுத்து ,ப்ளாக் மேயுற நன்னாள். அதுனால ஒன்னு ரெண்டு ஹிட் கூட கெடைகுமேன்ர நப்பாசை.

மொதல்ல ,இந்த பாட்டை பத்தி சொல்றேன். இதுல வந்தவரு , இந்த பாட்டு வரதுக்கு முன்னாடி அவ்வளவா பிரபலம் ஆகதவரு ,என்னோட அறிவுக்கு எட்டுன வரைக்கும். ஏதோ ஒரு பண்டிகை சமயத்தில தான் வந்துச்சு ,இந்த படமும் அந்த பாட்டும். அப்பல்லா, இவ்வ்ளோவு சேனல் கெடையாது. நம்ம தூர் தர்சன் தான். அதுல சிறப்பு ஒளியும் ஒலியும் போடுவாய்ங்க. அதுல தான் மொத மொதல்ல பாத்து ,கேட்டு ரசிச்சது.


அந்த பாட்டு ,  லா லாக்கு டோல் டப்பிமா.  நம்ம நடனப் புயல் , பிரபு தேவா, பாச்சான் மாதிரியே ஆடி , பட்டய கெலபுன பாட்டு. அவர் ஆட்டத்த பாருங்க , அப்படியே , இந்த பாச்சான் ன்னு ஒரு பூச்சி அங்கிட்டு இங்கிட்டு ரப்பரா துள்ளும் பாருங்க ,அந்த மாதிரி ஒரு துள்ளாட்டம் போட்டுருபாறு ,நெனவிருக்கா.





இந்த பாட்ட கேட்குரப்ப , ஊட்டில நாங்க , காலேசுல இருந்து டூர் போனப்ப நடந்தது நெனவுக்கு வரும். ஊட்டி போட் ஹவுஸ் இடத்துக்கு போயி ,பஸ்ல இருந்து இறங்கி , அப்படியே , அந்த பனி கொஞ்சுற , கண்ணுக்கு எட்டுற வரைக்கும் அந்த தண்ணிய , அப்படி ஒரு சில் கிளைமேட்ல பாத்த அந்த அனுபவம் , ஆஹா. அப்படி நின்னு அனுபவிச்சுட்டு இருக்குறப்ப , வேறொரு பெண்கள் காலேஜ் வண்டி வந்து நின்னு , மலர்கள் கொத்து கொத்தா இறங்கி , ஏரியப் பாத்து தாவி வந்துச்சுங்க.  அதுல இருந்த ஒரு கொடி இடையாள், சத்தம் போட்டு , ' லா லாக்கு டோல் டப்பிமா' அப்படின்னு உற்சாகமா கூவிச்சு. எனக்கு எங்க இருந்து அந்த ஐடியா வந்த்சுன்னு தெரியல , நானும் சத்தம் போட்டு , 'உன் இடுப்ப சுத்தி டயர பாரும்மா' அப்படின்னு எடுத்து கொடுத்தேன். அத  கேட்டுட்டு அந்த புள்ள , வெட்கப்பட்டு ஓடிருச்சு. நல்ல வேல ,இந்த ஈவு டீசிங் ங்கற விசயமெல்லாம் அப்ப அவலவா இல்ல.

அதுக்கப்புறம் ,ஹே ஒரு பொண்ண லந்து அடிசிடோம்டானு , இருமாப்பா நெஞ்ச நிமிதிகிட்டு திரிஞ்சேன்.அந்த ஏரியா விட்டு , பொட்டனிக்கல் கார்டன்  போனோம்  , அப்ப இன்னொரு காலேஜ் பஸ்ல இருந்து , இன்னொரு அம்சமான பிகரு இறங்கிச்சி. அது ஒரு டி சர்ட் போட்டிரிந்துச்சு அதுல ஒரு வாசகம் , இன்னும் அப்படியே இருக்குது பாருங்க மனசுல ..."ஒன் இன் தௌசண்டு".  உண்மையிலேயே அவ ஆயிரத்தில் ஒருத்தி , ஏன்ன அவளை நான் கண்டே புடிக்க முடியல அதுக்கப்புறம்.

மீண்டும் சந்திப்போமா. அன்பு நண்பர்களே , ஓட்டையும் , கமெண்டும் மறக்காம போடுங்கப்பு.

6 comments:

  1. காமெடி'ல பிச்சு உதறுறீங்க பாஸ்.. இன்றுதான் உங்க பதிவுகள படிக்கிறேன். ஒரே பதிவுல உங்கள follow பண்ண வெச்சுடீங்க...

    ReplyDelete
  2. ஆஹா நல்லாயிருக்கே..

    ReplyDelete
  3. காலேஜ் டூர் விஷயங்கள் அருமை. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  4. @Mohamed Faaique
    பாலோவ் பண்றதுக்கு நன்றி.நீங்க என்ன ரொம்ப புகழ்றீங்க பாசு.


    @ Riyas
    வருகைக்கும் ,ரசித்ததற்கு நன்றிகள் பல.

    @N.H.பிரசாத்
    வருகைக்கும் ,ரசித்ததற்கும் நன்றிகள் பல.

    @சி.பி.செந்தில்குமார்

    வருகைக்கும் ,ரசித்ததற்கும் நன்றிகள் பல.

    ReplyDelete

படித்தது பிடித்தால் நண்பர்களுக்கு என் பதிவை, மறக்காமல் ,மறக்காமல் அறிமுக படுத்துங்கள்,அப்படியே ,எனக்கும் உங்கள் முத்தை உதிர்த்து விட்டு சென்றால் நானும் பதிவுலகில் பணக்காரன் ஆவேன் உங்கள் தயவில் :-)