Tuesday, November 15, 2011

பதிவர்களுக்கு என் கேள்வி?

முன் குறிப்பு: இது ஒருவிழிப்புணர்வு பதிவு

சும்மா ஒரு ஜெனரல் நாலேசுக்காக ,நம்ம ப்ளாகுக்கு எங்கிருந்து டிராபிக் வருது அப்பிட்டின்னு ஆராய்ச்சி பண்ணிகிடுருந்தேன். அதாவது பிளாக்கர் ஸ்டேட்ஸ் டாப் கிளிக் பண்ணி பார்த்துக்கிட்டுர்ந்தேன். அதுல ஒரு விஷயம் கண்ணை உறுத்துச்சு:
அது என்ன விசயமின்னா , நானும் கொஞ்ச நாளாவே கவனிக்கிறேன்,இதுவரைக்கும் நான் கேள்விபடாத சைட்கள்ள இருந்து வர்ற ட்ராபிக்.இந்த சைட்கள் எல்லாமே .tk ன்னு முடியுது.


http://fusrodah.tk/
http://bllog.tk
http://postring.tk/
http://profitsites.tk/
http://massprofits.tk/

சரி இந்த சைட்கள்ல நம்ம பதிவு லிங்க் இருக்காஅப்பிடின்னு போய் பார்த்தா ,
இது எல்லாமே ,  கொஞ்சம் பணம் கட்டுங்க , உங்க ப்ளாக் அகில உலக ரேஞ்சுக்கு எங்க சூப்பர் சாப்ட்வேர் மூலமா நாங்க ஆடோமாடிக்க பிரபலப் படுத்துவோம் , அப்புறம் நீங்க உங்க ப்ளாக் மூலமாகவே பெரிய பணக்காரனாகி ,வேலை கீலைன்னு எதுவும் பாக்காம பெரிய கார் ,வீடுன்னு வாங்கி சந்தோசமா லைப் என்ஜாய் பண்ணலாம் அப்படின்னு சொல்ற மேட்டராவே இருக்கு,


இந்த தளங்களுக்குப் போயி அவனுக காட்டுற வீடியோவ கொஞ்சம் உன்னிப்பா கவனிச்சா , பாட்டர்ன் ஒண்ணுதான் ,ஆனா வேற வேற பேர்ல வச்சு பணம் பிடுங்கப் பாகுரானுங்க. கூகிள் ஆண்டவினிடம் இவிகளப் பத்தி கேட்டா ,ஏமாந்த சோணகிரி கதைங்கள அள்ளிக் கொட்டுறாரு.

பதிவர்களுக்கு என் கேள்வி என்னென்னா :

1 உங்களுக்கும் இந்த மாதிரி சைட்டுகளில்இருந்து ட்ராபிக் வருதா?

2 என் பதிவு லிங்க் அங்க எப்படி போயிருக்கும் ,யார் இணைச்சிருப்பாங்க ?


3 யாராவது வெளிய சொல்லாம ,இந்த சைட் கள்ள சேந்து சத்தமில்லாம பணக்காரனா ஆயிடுருகீங்களா?இல்ல வெளிய சொன்னா அசிங்கமுன்னு பணம் கட்டி யாராவது ஏமாந்து இருக்கீங்களா?டிஸ்கி:
ஒண்ணுமே புரியல பதிவு உலகத்தில,
என்னமோ நடக்குது ,மர்மமா இருக்குது4 comments:

 1. இது spam referals எனப்படும் .இது பற்றி மேலும் அறிய அன்பர் பிளாக்கர் நண்பன் தளத்தின் ..<a href="http://bloggernanban.blogspot.com/2011/10/spam-referrals.html">இந்த லிங்கை காணுங்கள்</a>

  ReplyDelete
 2. @சி.பிரேம் குமார்

  ஒஹ் , அது தானா சங்கதி ....ப்ளாக் எழுதுறவங்களை குறி வச்சு இந்த விளம்பரமா..என்னமா யோசிகுரான்கப்பா...
  ஐயா யாரும் ஆசைப்பட்டு பணத்த கட்டி எமாந்துடாதீங்கப்பு! சரியான பாய்ண்டருக்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 3. எனக்குலாம் வந்ததில்லை. ப்ளாக்கரில் உங்களை மட்டும் அவுகளுக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ப பிடிச்சுருக்கு போல... அதான் உங்கள மட்டும் இணைச்சுருக்காக....

  என்ன ஒரு ஓரவஞ்சகம் ஹி..ஹி...ஹி...

  ReplyDelete

படித்தது பிடித்தால் நண்பர்களுக்கு என் பதிவை, மறக்காமல் ,மறக்காமல் அறிமுக படுத்துங்கள்,அப்படியே ,எனக்கும் உங்கள் முத்தை உதிர்த்து விட்டு சென்றால் நானும் பதிவுலகில் பணக்காரன் ஆவேன் உங்கள் தயவில் :-)