Wednesday, November 16, 2011

எட்டாம் அறிவு - விமர்சனம்

புதிதாக வந்துள்ள ஒரு திரைபடத்தின் கதை சுருக்கத்தை படித்தேன். சும்மா சொல்லக் கூடாது , என்னமா யோசிகிரான்கப்பா ஹாலிவூட்காரனுங்க. சும்மா எப்பப் பாத்தாலும் காதல், கத்ரிக்கா இல்லேன்னா வீச்சருவா ,கத்தி , கபடான்னு நம்மாளுங்களும் இருக்காங்களே.

நிகழ்காலத்துல மனுஷனுக்கு இருக்குற பல கவலைகளில பெரிய கவலை, வயசாகுறது. நாம தான் பாக்குறம்ல, பொம்பளைங்க முகம் சுருக்கம் வந்து முதிர்ச்சியா தெரியக்கூடாதுன்னு விதம் விதமா மேக்கப் போட்டு மறைக்கப் பாக்குறத. (ஆம்பளைங்க மட்டும் என்னவாம் ன்னு சண்டைக்கு வராதீங்க)

 இதுக்கெல்லாம் முடிவு கட்டும் விதமா,  நம்ம ஜீன்குள்ள போயி , அந்த வயசாக்குற சமாச்சாரத்த அப்படியே சுவிட்ச் ஆப் பண்ணிட்டா அப்புறம் யாருக்குமே வயசாகுதுல்ல?  ஆனா எல்லோரும் சின்னப் பிள்ளையாவே இருந்தா உலகம் நல்ல இருக்குமா? அப்பிடின்னு லாஜிக் கேள்வி கேப்பாங்களே விமர்சன வித்தகர்கள்? (எஸ்பசல்லி தமிழ் பிளாக் விமர்சன வித்தகர்கள்), அதுனால அந்த ஜீன் சமாச்சரதுள்ள ஒரு சின்ன கண்டிஷன் ,அதாவது  வயசு ஏறும் ஆனா இருபத்தி அஞ்சு வயசு தான்  மாக்சிமும்.
அதாவது ஓல்ட் பீப்ளோட வயது இருபத்தஞ்சு தான் எவள்ளவு வருஷம் ஆனாலும்.

எதிர் காலத்துல(2161)  கண்டுபிடிச்சி ,அதுனால எல்லோரும் சாகாமா இளமையா 
இருக்குறதா ஒரு பின்புலம் அமைச்சி , அதுனால என்னென்ன கூத்து நடக்குதுன்னு கதை டெவலப் பண்ணி இருக்காங்கலாமாமம்.

சரி வெற்றிகரமா ஜீன் மாடிபை செஞ்சாச்சு,எல்லோரும் இளமையா சந்தோசமா இருக்காலாமே, என்ன கூத்து / பிரச்னை இருக்கப் போது அப்பிடின்னு நினைக்றீங்களா? கொஞ்சம் யோசிச்சு பாருங்க,யாருமே சாகலைன்ன, ஏதாவது செஞ்சு ஜனத் தொகைய கொறைகனுமே. இல்லேன்னா பூமி தாங்குமா, உணவு சுழற்சி நடக்குமா?

அதுக்கும் ஒரு லாஜிக், எல்லாருக்கும் குறிப்பிட்ட வயசு (25)  வரைக்கும் தான் ஆயுசு.  அதுக்கு மேல வாழனுமின்ன உழைச்சு ,வியாபாரம் பண்ணி லைப் டைம் டாப் அப் பண்ணிக்கலாம். எல்லோர் கைலையும் அவங்களுக்கு இன்னும் எவ்ளவு ஆயுசு அப்பிடின்னு
ஒரு கடிகாரம் காட்டும்.  அந்த டயத்த கீப் பண்ண , ஒரு போலீஸ் (TIME KEEPER), அவங்க வேலையே டயம் முடிஞ்சி போனவங்க பிளக்க புடுங்கி மேல
அனுப்புறது.  இந்த சூழ்நிலையில என்ன ஆகும் யோசிங்க? 

ஏழைகிட்ட இன்னும் ரொம்ப  வருஷம் வாழ டைம் இருக்கு. ஆனா பணக்காரனுக்கு  இன்னும் கொஞ்சம் வருஷம் தான் பாக்கி. ஏழைக்கி அவனோட அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய வழி  தேவை, அதுக்கு அவனோட இருபத்தஞ்சு  வருசத்துல மிச்சம் இருக்குறத  அவன் பணக்காரனுக்கு வித்துக்கலாம்.
அதாவது இப்ப கிட்னி , உயிர் எல்லாம் பணத்துக்காக கொடுகிரான்களே அது மாதிரி. இப்ப என்ன ஆகும்,  உயிர் வாழுற டைம் ஒரு கரன்சியா மாறிடுது. அதச் சுத்தியே எல்லா வர்த்தகமும் நடக்க ஆரம்பிக்குது. யார் ரொம்ப வாழ் நாள் சேத்து வச்ருக்கானோ அவன் தான் பணக்காரன்.

அப்படிப்பட்ட உலகத்துல ஒரு ஹீரோ வுக்கு அதிர்ஷ்டவசமா இன்னொருத்தர் கிட்ட இருந்து லம்பா  எக்ஸ்ட்ரா லைப் டைம் சொத்தா கிடைக்குது. அத அவன்கிட்ட இருந்து புடுங்குறதுக்கு அவன கொலை குற்றத்துல சிக்க வைக்க பாக்கிறாங்க.
அதுனால அவருக்கு என்ன நடக்குது ,அதுல ஹீரோயன் அப்படி இப்படின்னு கதைய சுவராஸ்யமா கொண்டு போறாங்களாம்.

படம் பேரு  In Time.
டிஸ்கி: படம் இந்த வாரம் போகலாமான்னு யோசிக்கிறேன், போயிட்டு வந்தவங்க சொல்லுங்கப்பா எப்படி இருந்துச்சுன்னு....2 comments:

  1. நம்ம நாட்டுல இந்த மாதிரி படம் பண்ணினா பாதி பேருக்கு புரியாது. அதை சமாளிக்க லாஜிக் இல்ல, படம் குப்பை, இயக்குனர் அங்க சருக்கிட்டாரு, அப்படி இருந்திருக்கலாம், இப்படி இருந்திஎருக்கலாம்’னு கதை கட்டுவானுங்க..

    ReplyDelete
  2. ஆமாம் ..நீங்க சொல்றது உண்மைதான்...நம்ம விமர்சன பதிவர்கள் இருக்காங்களே, இது நொட்டை அது நொட்டை ன்னு
    ஒரே கஷ்டமப்பா..

    ReplyDelete

படித்தது பிடித்தால் நண்பர்களுக்கு என் பதிவை, மறக்காமல் ,மறக்காமல் அறிமுக படுத்துங்கள்,அப்படியே ,எனக்கும் உங்கள் முத்தை உதிர்த்து விட்டு சென்றால் நானும் பதிவுலகில் பணக்காரன் ஆவேன் உங்கள் தயவில் :-)