Monday, October 31, 2011

தைரியம் இருந்தா கை வச்சிப் பாருடா!

வழக்கமாக சந்திக்கும் அந்த கால்வாய் ஒட்டிய ஜாகிங் ட்ராக் வந்து சேர்ந்தார்கள் 
சாகுலும் , பிரதீப்பும். அவர்கள் இருவரும் சிங்கையில் உள்ள ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்பவர்கள்.

நிதமும் காலை ஆறு முதல் ஏழு வரை , மெது ஓட்டம் செய்து கொண்டே ,அவர்கள் பார்த்த , படித்த, கேள்விப்பட்ட விசயங்களை பரிமாறிக் கொள்வார்கள்.

"ச்சே ஒரே வெக்கையா இருக்கு " என்று சட்டையை கழட்டி வெற்றுடம்புடன் ஓடத் தொடங்கினான் சாகுல்.
"என்னடா , நீ சல்மான் கான் ரசிகனா ,சொல்லவே இல்ல ?" கேட்டது பிரதீப்.
"இல்லையே ஏன் கேட்குற ?' 
"நானும் பாக்குறேன் , முந்தி வந்த படத்தில இருந்து இப்ப வந்த படம் வரைக்கும்,ஒரு சீன்ஆவது சட்டைய கழடிருவேன்னு பிளான் பண்ணி செய்றாரே "





"அவர் பாடி சிக்ஸ் பாக் ,நம்ம பாடி ஒன் சாக்" - சாகுல்

"சரி விஷயம் கேள்விபட்டயா, சும்மா கார் மேல கை வச்சு நின்னா , அந்த கார்  உனக்கு பரிசா கெடைக்கும் " - பிரதீப்
"ஹா , சும்மா கை வச்சா காரா" -சாகுல் 


 
"ஆமாண்டா , கார்ல ஒரு கை ஸ்டிக்கர் இருக்கும் ,யார் ஸ்டிக்கர்  மேல கை வச்சுகிட்டே, அதே இடத்தில அசையாம 
ரொம்ப நேரம் நிக்குரான்களோ ,அவங்களுக்கு அந்த கார் பரிசு ,அது சாதாரண கார் இல்ல , சுபாரு காரு ...அதுவும்  லக்சரி மாடல் ... "




"அடடா , விளம்பரம் செய்றதுக்கு ஒரு அளவே இல்லையா , கை அசைக்காம எப்படி ரொம்ப நேரம் இருக்கிறது" - சாகுல்

"இடையில ஒரு பத்து நிமிஷம் பிரேக் எடுதுக்கெலாம்,நீ ட்ரை பண்றீயா" - பிரதீப்.

"நம்மக்கு கார் மேல அவ்ளவா இன்ட்ரஸ்ட் இல்ல, அதுவுமில்லாம கார வாங்கி , இங்க ரோட்ல ஒட்றதுக்கு,அப்புறம் பார்க் பண்றதுக்கே , டெய்லி காசு அழணும், பேசாம நான் நினைக்கிற போட்டி வச்சா பாக்கலாம்"  - சாகுல்



"என்ன போட்டி?" ஆர்வத்துடன் பிரதீப்.

"யாரு நம்ம ஹன்சிகா தோள் மேல ரொம்ப நேரம் கை வச்சு நிக்ரான்களோ  அவங்களுக்கு ஹன்சிஹா கூட டின்னர்,எப்படி நம்ம ஐடியா" - சாகுல்

"போடங்..ஏற்கனவே ரொம்ப பயலுக ஹன்சிகா ,ஹன்சிகா ன்னு கோவில் கட்டுற ரேஞ்சுக்கு அனத்திக்கிட்டு கெடகாயீங்க, இதுல நீ வேற கெளம்பிட்ட" - பிரதீப்.


டிஸ்கி: என்னங்க ரெடியா கை வைக்க , கார் மேல!

2 comments:

  1. தைரியமிருந்தா, கை வச்சி பாருடா’னு பிகரு போட்டோ போட்டு இருந்தீங்க... வேகமா வந்தா, கார் மேல கை வைக்க சொல்ரீங்க...

    ஆமா... அதிக பட்சமா எவ்வளவு நேரம் கை வைத்து இருந்திருக்கிறாங்க???

    ReplyDelete
  2. @Mohamed Faaique

    Last year, 45-year-old Singaporean Aloysius Lim lasted 75 hours and 17 minutes, but the ultimate record belongs to George Lee from 2008. He palmed the car for an astonishing 81 hours and 32 minutes to win the duel. How far will this year’s ‘palmers’ go? Stay tuned!
    Go to this URL for latest update:

    http://paultan.org/2011/10/31/subaru-palm-challenge-weather-not-being-kind-only-58-contestants-remain-three-malaysians-still-standing/

    ReplyDelete

படித்தது பிடித்தால் நண்பர்களுக்கு என் பதிவை, மறக்காமல் ,மறக்காமல் அறிமுக படுத்துங்கள்,அப்படியே ,எனக்கும் உங்கள் முத்தை உதிர்த்து விட்டு சென்றால் நானும் பதிவுலகில் பணக்காரன் ஆவேன் உங்கள் தயவில் :-)