Wednesday, November 9, 2011

என்னை ஏதோ செய்கிறாள் - 4 - கிரைம் தொடர்



நண்பர்களே என் தொடரின் இறுதிபாகத்தை பதியும் முன் ,உங்களுக்கு இந்த சிறு தடங்கல். "தடங்கலுக்கு வருந்துகிறோம்" அப்படின்னு முன்னொரு காலத்தில , தூர்தர்சன் மட்டுமே இருந்து, இப்ப இருக்குற எந்த சானேல்களும் இல்லாம இருந்தப்ப , முக்கியமான ஒரு மணி நேர நாடகம் வர்றப்பயோ, இல்ல 'ஒளியும் ஒலியும்' வர்றப்பயோ , திடீர்னு ஒரு கார்டு போடுவாங்களே , 'தடங்கலுக்கு வருந்துகிறோம்' அது மாதிரின்னு வச்சுகோங்களேன்.

ஆனால் இந்த தடங்கல் எதுக்குன்ன , இந்த கதைத் தொடரை எப்படி எழுத ஆரம்பிச்சேன் அப்பிடின்னு சொல்றதுக்காக. அதாங்க இந்த ஹாலிவூட் , ஏன் நம்ம கோலிவூட் படங்களோட DVD க்கள்ள இருக்குமே , 'திரைக்கு பின்னால் ', அது மாதிரி , இது 'கதைக்கு பின்னால் ' அப்பிடின்னு கூட வச்சுகோங்களேன்.

நம்ம எல்லோருக்கும் தாத்தா , அய்யன் வள்ளுவனார் அவர்களோட ரசிகன் நானு. அவர் குறள்கள் டச் பண்ணாத விசயமே இல்ல. ஒரு நாள் ,  என்னோட ஆண்டுராயிடு போன்ல , புதுசா என்ன கேம் வந்துருக்குன்னு மார்கெட்ல தடவிட்டு இருக்குறப்ப , திருக்குறள் வித் மீனிங்க்ஸ்  அப்படின்னு கண்ல தட்டுபட்டது. 





அப்பப்ப தினமலர்ல முன்னாடி ,'தினம் ஒரு குறள்னு ' படிச்சதோட சரி. அப்புறம் அப்படியே விட்டுப் போச்சி. ஆகா ,நம்ம தலைவர் குறள்கள் மீனிங் புரியாம தவிச்சுகிட்டு இருந்தமே ,இப்ப திடீர்னு இத பாத்தவொன்னே ,சரி எதுக்கும் டவுன்லோட் பண்ணி வச்சிருப்போம். எப்பயாவது ட்ரைன்ல ,பஸ்ல பொழுபோரதுக்கு படிக்க உதவியா இருக்குமுன்னு டவுன்லோட் செஞ்சுகிட்டேன். 

இந்த அப்ளிகேசன்ல என்ன விசேஷம்ன, ஒரு திருக்குறளுக்கு ,வெவ்வேறு பெருந் தலைகளோட விளக்கம் கொடுத்துருக்காங்க. சும்மா சில குறள்களோட விளக்கங்களைப் படிச்சிப் பார்த்தப்ப , சில பல குறள்கள்ள , மு.வ , சாலமன் பாப்பையா, கருணாநிதி விளக்கங்கள் கொஞ்சம் அப்படி இப்படின்னு மாறுபட்டு இருந்தது கூட ஆச்சர்யமா இருந்துச்சு.

தலைவர் வள்ளுவரோட குறள்கள் MBA படிப்புக்கு உதவுற அளவுக்கு அதுல விஷயம் இருக்குன்னு கூட ஒருத்தரு அழகா ஒரு புக்கே  போட்டது கூட இப்ப ஞாபகத்துக்கு வருது.

அப்படியே சும்மா புரட்டி ,வள்ளுவர் அய்யா ,என்னென்ன கவர் பண்ணிருக்காருன்னு சும்மா ரேண்டமா பாத்தப்ப , இந்த தொடர்ல யூஸ் பண்ண குறள்கள் தட்டுபட்டுச்சு. அப்ப திடீர்னு ஒரு ஐடியா , சரி இந்த குறள்கள அடிப்படையா வச்சு ஒரு க்ரைம் எழுதலாமேன்னு.  

மொதல்ல ஐடியா வந்தது ,சமூகத்துல இப்ப நடக்குற கொலை,கொள்ளை , கள்ளக் காதல் ,இதப் பத்தி அவர் அப்பவே நெறைய எழுதியிருக்குராறு ,சரி இந்த மாதிரிக் குற்றங்கள அடிப்படயா வச்சு வள்ளுவனார் சொன்ன அறிவுரையை லிங்க் பண்ணுவோமுன்னு நினைச்சி ஆரம்பிச்சி ,சரி ரொம்ப அறுவையா போயுடுமொன்னு பயத்துல , கிரைமா மாத்திட்டேன். 

இதுல பாருங்க, அய்யா எழுதுனது பல நூறு வருசத்துக்கு முன்னே ,கட்டாயம் அப்ப அவரைச் சுத்தி நடந்தத வச்சு தான் அவர் எழுதியிருக்கணும். அந்த மாதிரி விஷயங்கள் இப்பவும் நம்மள சுத்தி நடக்குறப்ப, நாம எவ்வளவு நூறு வருஷம் ஆனாலும் 'அடிப்படை புத்தி' மட்டும் பிறவி மேல பிறவி எடுத்தும்  மாறவே இல்லைன்னு தான் தெளிவா காட்டுது. 

நீங்களும் போன்ல டவுன்லோட் பண்ணி ஆர்வமிருந்தாக்க படிங்க :


கட்டாயம் அடுத்த பதிவுல நம்ம 'க்ரைம' முடிச்சி வக்கிறேன். அதுவரைக்கும் ,

'தடங்கலுக்கு வருந்துகிறேன்!'

--தொடரும் ...


1 comment:

  1. ethu eppadiyoo emakku arumaiyaana oru thriller kathai'yondu padikka thanthathukku nanrikal

    ReplyDelete

படித்தது பிடித்தால் நண்பர்களுக்கு என் பதிவை, மறக்காமல் ,மறக்காமல் அறிமுக படுத்துங்கள்,அப்படியே ,எனக்கும் உங்கள் முத்தை உதிர்த்து விட்டு சென்றால் நானும் பதிவுலகில் பணக்காரன் ஆவேன் உங்கள் தயவில் :-)