Monday, October 10, 2011

கல்லூரி மாணவர்கள் பெரிய பருப்பா?

இன்று தினசரியில் படித்த செய்தி , கோழிகோட்டில் ,ஒரு மாணவனுக்கும் ,
எஸ்.எப்.ஐ கோஷ்டிக்கும் இடையே மூண்ட ஏதோ ஒரு ஈகோ மோதலில் , ரெண்டு பக்கமும் ஐயோ பத்திகிச்சு...ஐயோ பத்திகிச்சு...


இத படிச்சவோன்ன , ஆஹா ,பதிவுக்கு மேட்டர் சிக்கிடுசுடா அப்படின்னு
மனசு அப்படியே கொசு வர்த்தி சுத்த ஆரம்பிட்சிட்டது.

நாங்கள் வழக்கம் போல , ஜாலி யாக , எங்கள் கல்லூரிக்கு செல்லும் பொது போக்குவரத்தில் ஏறினோம். பஸ் எப்போதும் போல் கூட்டமாக, குப்பை வண்டியில் , குப்பைகளெல்லாம் தொங்கி வழியுமே ,அது போல எங்களை தன் முதுகில் ஏற்றிக் கொண்டு பாவமாக போய்க் கொண்டிருந்தது.

நம்ம முன்னாள் வருங்காலத் தூண்கள் ,அதாங்க நாங்க , வழக்கம் போல் , டிக்கெட் எடுக்கமாட்டோம் என்று , கொண்ட கொள்கையை , விட்டு விடாமல் ,
உறுதி பூண்டு , கண்டக்டர் , "டிக்கெட் ,டிக்கெட்"  என்று காட்டெருமையாக ( எவளவு நாளைக்கி கரடி?)  கத்தியும், காதில் வாங்காதது போல ,"அவன் அவன் - அவுங்க அவுங்க" ஜோலிய பாத்துக் கிட்டு இருந்தோம்.

கல்லூரியை அடைவதற்கு இன்னும் ஒரு ரெண்டு கிலோ மீட்டர் தான் பாக்கி.நடத்துனர் , தன் கையில் இருக்கும் நோட்டுகளை பார்த்தார். அதிக பட்சம் , மூன்று ரூபாய் கலக்சன் . அவர் வேற வழியில்லாம , தன் அதிகாரத்தை வாயில் எடுத்தார். அதாங்க , விசில் அடிச்சார் .

வண்டி நின்றது. மாணவர்கள் நெஞ்சம் கொதித்தது. மீசை துடித்தது.
"அய்யகோ , இந்த கொடுமையை கேட்பாரில்லையா" என்று ஒவ்வொருவருக்கும் வீரம் பொங்கியது. ஒருவன் விட்டான் சவுண்ட் , ஓட்டுனரை பார்த்து. அது அவரின் குடும்பத்தையே களங்கப் படுத்திய வார்த்தை. ஒட்டுனற்கும் கோபம் வந்தது , அவரும் ,இது வரை  மாணவர்கள் டிக்சனரியில் இல்லாத வார்த்தைகளில் , எல்லோரையும் வைது கொண்டே , இனி சி.எம் வந்து சொன்னாக் கூட ,வண்டி எடுக்க மாட்டேன்டா என்று இறங்கி போய் விட்டார் .

கல்லூரி முதல்வர் காரில் பறந்து வந்தார். போக்குவரத்து கழகத்தில் இருந்தும் ஆட்கள் வந்து, எங்களை எல்லாம் காட்சி எடுத்து,  ஒரு வழியாக பஸ் கல்லூரி  வந்து அடைந்தது.

அப்போதிருந்தே மாணவர்களுக்கு எங்கள் முதல்வர் மேல் ஒரு காட்டமாக இருந்தது. " உனக்கு ஒரு நா வைகிரோம்டி ஆப்பு " என்று அந்த நல்ல நாளுக்காக காத்திருந்தார்கள்.

அது பரீட்சை ஆரம்பிக்கும் சீசன். எங்கள் வயிற்றில் ஆசிட் - ஐ ஊற்ற , விட்டாரு ஒரு அறிக்கை , "எதிர் வரும் Internal டெஸ்ட் இல் ,ஒரு நாளிக்கு ஒரு பாடத்திற்கு பதிலாக , இரண்டு பாடங்களுக்கு தேர்வு நடத்தப்படும், காலையில் ஒரு தேர்வு, மாலையில் ஒரு தேர்வு".

மீண்டும் எங்களுக்கெல்லாம் மூக்கு புடைக்க ஆரம்பித்து , கண்கள் 'விஜயகாந்தாய்'  மாறின. யாரும் பரிச்சை எழுதக் கூடாது என்று எல்லோரும் முடிவு கட்டினோம்.

முதல் தேர்வு நாள் அன்று கல்லூரிக்கு போய் சேர்ந்தோம். எங்களை எல்லாம் போக வேண்டாம் என்ற ஒரு கல்லூரி நாடாமை அனவுன்சு செய்தான். ஆனால் அப்படி சொன்ன அந்த  பெரிய மனிதன் உள்பட அவங்களின் மொத்த டிபார்ட்மண்டும் , பரீட்சை எழுதப் போய்விட்டார்கள்.பாருங்க எப்படின்னு ,சொல்றது ஒன்னு ,செய்றது ஒன்னு.

"அட நாதாரிங்களா , இவனுங்கள நம்பி நாம ஒன்னும் படிக்காம வந்துட்டோமே ", அப்படின்னுட்டு உண்மைலயே உக்காந்து ஓசிசோம்.
சரி , பேசாம , நாம ஆட்டத்த தொடங்கி வைப்போம்னு,நாங்க யாரும் எழுதல அந்த மொதல் பரிச்சய.

அப்புறம் என்ன, "யே , அந்த டிபார்ட்மன்ட் காரைன்களே எழுதல, நாமளும் எழுதக்கூடாதுன்னு"  விஷயம் , தீயை விட வேகமாக பரவியது. அதுக்கப்புறம் ஒரு பயலும் எழுதல.

அதோட விட்டாயீன்களா, "மாணவர் வயிற்றில் அடிக்கும் முதல்வர் ஒழிக" என்று அடுத்த இன்னிங்க்ஸ் தொடங்கி விட்டார்கள். "இத பெரிய லெவல்ல கொண்டுபோனும்டா" என்று யோசித்த சில புண்ணிய ஆத்மாக்கள், எஸ்.எப்.ஐ தொடர்பு கொண்டு ஆதரவு கேட்டது. அவர்களும் சேர்ந்து கொள்ள ,  "அநியாயம் செய்யும் முதல்வரை , பதவியை விட்டு தூக்க வேண்டும் " என்று பேனர்களுடன்,  மாணவ கண் மணிகள் அனைவரும் ,
 திடீர் என்று அண்ணா ஹசாரே -வாக மாறி விட்டார்கள். ஆமாம் , மாபெரும் உண்ணாவிரத போராட்டம் என்று  உண்டியல் குலுக்கி ,  மேடை , பந்தல் என்று அமர்களமாக, ஊரின் நடுவே, மைக்குடன் , முதல்வரை வாங்கு வாங்கு என்று வாங்கிக் கொண்டிருந்தார்கள்.

கல்லூரி நிர்வாகம் , வேறு வழி இல்லாமல் முதலில் கால வரையற்ற விடுமுறை அறிவித்தது. அண்ணா ஹசாறேக்கள் அசராமல் , உண்ணா விரதத்தை தொடர (தாக சாந்தி குஸ்பூ வைன்ஸ் ல் அடிக்கடி)  , ஒரு வழியாக அதை முடிவுக்கு கொண்டு வந்தார்கள். எப்படி தெரியுமா?

  அந்த முதல்வர், வேறு கல்லூரிக்கு, துணை முதல்வாராக மாற்றம் செய்யப் பட்டார்.

   அரும் பாடு பட்டு , மயிரையும் , சாரி ,உயிரையும் துச்சமென மதித்து நாங்கள் செய்த , அந்த விடுதலை போராட்டத்திற்கு , ஊக்கம் கொடுக்கும் விதமாக , நாங்கள் எல்லாம் கல்லூரி வந்ததாக அட்டெண்டன்ஸ் போடப்பட்டு , ஏதோ ஒரு மார்க்கும் போட்டு ஒப்பேத்தினார்கள்.


டிஸ்கி: "ஒரு மாணவன்ட கத" அப்படின்னு பதிவு தலைப்பு வைக்கலாம்னு நெனச்சேன். அப்புறம் அது மலையாள பிட்டு  படம் டைட்டில் மாதிரி ஆகி ,
ஹிட் எக்குத் தப்பா எகிறி ,  கூகுளே என் ப்ளாக் தூக்கிட்டா , என்ன ஆறது அப்படின்னு , நின்னு யோசிச்சு , என் முடிவ மாத்திட்டேன்.

முன்னால் , இந்நாள், மாணவ கண்மணிகளே , ஓட்ட மறக்காம போட்டு,
இந்த விடுதலை போராட்டத்திற்கு உயர்வு செய்யுங்கள். நன்றி.

 

5 comments:

 1. உங்களுக்குள்ள இப்படி ஒரு ரவுடியா??? ஹி..ஹி..

  ReplyDelete
 2. @மதுரன்
  நன்றி

  @Mohamed Faaique
  ஹி,ஹி, நானும் ரவுடி தான் , நம்புங்க...

  ReplyDelete
 3. உங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது பார்வையிடவும் :-)

  http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_29.html

  ReplyDelete
 4. @ஆமினா
  மீண்டும் நன்றி!

  ReplyDelete

படித்தது பிடித்தால் நண்பர்களுக்கு என் பதிவை, மறக்காமல் ,மறக்காமல் அறிமுக படுத்துங்கள்,அப்படியே ,எனக்கும் உங்கள் முத்தை உதிர்த்து விட்டு சென்றால் நானும் பதிவுலகில் பணக்காரன் ஆவேன் உங்கள் தயவில் :-)