Monday, November 7, 2011

என்னை ஏதோ செய்கிறாள் - 2 -கிரைம் தொடர்

குறிப்பு:  முதல் பாகத்தை படிக்காதவர்கள்   Part-1-லிங்க் படித்துவிட்டு இங்கே தொடரவும். 

சஞ்சனாவின் கடிதத்திற்கு அர்த்தம் கண்டுபிடித்தாலும் அதன் உள்அர்த்தம் புரியாமல் இன்ஸ்பெக்டர் மனம் யோசனையில் ஆழ்ந்தது. "சரி நம்ம இன்னும் கொஞ்சம் தீர விசாரித்தால் தான் ஏதாவது விளங்கும் போல" என்று மனதினுள் நினைத்துக் கொண்டே , "ராம் ,வாயா போலாம் , சும்மா எப்பப் பாத்தாலும் அரசியல் வாதிங்க பாதுகாப்புக்கும் , பஞ்சாயத்துக்கும் போயி அலுத்து போன நம்மக்கு, நல்ல வேட்டை,இந்த மாதிரி கேசுங்க கெடச்சி ரொம்ப வருசமாச்சு " என்று சொல்லியவாறே , அவனை ஜீப்பை எடுக்கச் சொல்லி வெளியேறினார்.

கண்ணன் வீட்டிற்கு மறுபடியும் போலீஸ் ஜீப் வந்திருப்பதை பார்த்து , பக்கத்துக்கு வீட்டு ஜன்னல்களும்,கதவுகளும் ஆர்வத்துடன் கவனிக்கத் தொடங்கின. 

"சார் வாங்க சார் , கூப்பிட்டா நானே வந்திருப்பனே" - கண்ணன் 
"இல்ல கண்ணன்,அன்னிக்கி சரியா பாக்க முடியல,உங்க மனைவி இறந்த ரூம் கொஞ்சம் சோதனை போடணும்"  என்று அதில் நுழைந்தார் இன்ஸ்பெக்டர் கணேஷ்.

அந்த ரூமில் சஞ்சனா போட்டோ வைத்து அதற்கு மாலை போடப்பட்டு , ஜீரோ வாட்ஸ் எலெக்ட்ரிக் பல்ப் எரிந்து கொண்டிருந்தது. கண்களை சுழற்றி பார்வையிட்ட கணேஷின் கண்களில் அந்த போட்டோ பட்டது. அதில் சஞ்சனா மற்றும் இரு பெண்கள் சிரித்தவாறே இருக்க,சஞ்சனா கையில் ஒரு கோப்பை .இன்ஸ்பெக்டர் அருகில் நின்றிருந்த  கண்ணனை பார்த்து ,
"அந்த போடோல இருக்குறது உங்க மனைவி தான?"
"ஆமா  சார் , அவ காலேஜுல, திருக்குறள் போட்டி வச்சு முதல் பரிசு 
வாங்குனப்ப எடுத்த போட்டோவாம்,கல்யாணம் ஆகி அவ எங்கிட்ட பெருமையா சொல்லிகிட்டுருந்தா "
"அப்படியா ,அப்ப உங்க மனைவிக்கி தமிழ் மேல ரொம்ப ஈடுபாடுன்னு சொல்லுங்க,கூட இருக்குற ரெண்டு பேரு அவங்க பிரண்ட்சா?"
"ஆமா சார், அப்படிதான் அவங்க அப்பா,அம்மா சொல்லிக்கிட்டுருந்தாங்க"
"உங்க மனைவிக்கி எந்த ஊரு?'
"சார் , மணப்பாறை சார் "
"எது இந்த முறுக்குக்கு பேமசா இருக்குமே அதா?"
"ஆமா சார்"
"சரி, உங்க மாமனார் விலாசம் கொடுங்க ,விசாரிக்கணும்"

             ௦௦௦௦௦௦௦௦*******௦௦௦௦௦௦௦

மணப்பாறை எஸ்.ஐ கார்த்திக் ,கணேஷின் வேண்டுகோளுக்கிணங்க , சஞ்சனாவின் வீட்டில் விசாரித்துவிட்டு ,கணேஷிற்கு போன் செய்தார்.
"சொல்லுங்க கார்த்திக், ஏதாவது தெரிஞ்சுச்சா?"
"சார் நான் விசாரிச்ச அளவுல பெருசா ஒன்னும் தெரியல சார்,அந்த பொண்ணு எம்.ஏ தமிழ் படிச்சிருக்கு போல , கண்ணன் தூரத்து உறவினன் போல , பய்யன் வெளி நாட்டுல வேல செய்றதுனால, வசதிக்கு குறச்சல் இருக்காதுன்னு கட்டிக் கொடுத்திருக்காங்க, இது வரைக்கும் அவனப் பத்தி எந்த கம்ப்ளைன்ட்டும் அம்மாகிட்ட சஞ்சனா சொன்ன மாதிரி தெரியல,மக இறந்த துக்கத்துல இருக்கிறதால இதுக்கு மேல விஷயம் எதுவும் கறக்க முடியல சார்,வேணும்னா ஸ்டேஷன் கூட்டி வச்சு முறைப்படி அவ அப்பாவ விசாரிக்கவா  "
"ஓ அப்படியா, பரவாயில்லங்க கார்த்திக், விசாரிச்சதுக்கு தேங்க்ஸ், நான் வேற ஏதாவது வேண்டியிருந்தா அப்புறம் கூப்பிடுறேன்"
"ஓகே சார் " என்று கார்த்திக் போனை வைத்தார்.

போலீஸ் நிலைய போன் ஒலித்தது ,அதனை எடுத்த கான்ஸ்டபில் ,
"அப்படியா ,எங்க ,அவர் வீட்லையா,சரி நான் அய்யா கிட்ட உடனே சொல்றேன்" என்று வைத்துவிட்டு, இன்ஸ்பெக்டர் கணேஷிடம் வந்து ,
"சார் , நம்ம ஊரு MLA வை யாரோ கொலை பண்ணிடான்கலாம்,
 பாடி அவர் வீட்ல தான் கெடக்காம்" என்று அதிர்ச்சி கம் பவ்யத்துடன் சொன்னார்.

"என்ன?" என்று உடனே இருக்கையை விட்டு எழுந்த இன்ஸ்பெக்டர் , மற்ற காவலர்கள் இருவரை அழைத்துக் கொண்டு எம்.எல்.எ வீட்டிற்கு விரைந்தனர்.

MLA வீட்டில் அவரின் அடிவருடிகள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுது கொண்டிருந்தனர் . இன்ஸ்பெக்டர் கணேஷ் , MLA பாடியை பார்க்க, மண்டை உடைபட்டு , தரை எங்கும் ரத்தக் காடாக இருக்க , சுத்தி வேற ஏதும் தடயம் இருக்கிறதா என்று பார்க்க தொடங்கிய கணேஷுக்கு வேற எதுவும் கிடைக்கவில்லை.ஆக வேண்டிய காரியத்தை உடன் வந்த போலிஸ்களுக்கு கட்டளையிட்டுவிட்டு, வீட்டை விட்டு வெளியில் இறங்கினார் இன்ஸ்பெக்டர்.

இறந்து போன அந்த MLA மிகவும் இளைய வயது. சமீபத்தில் தொடங்கிய கட்சியில் பணத்தை தண்ணியாக செலவழித்து ,புதிதாக ஆரம்பித்த மாநில கட்சியில் சேர்ந்து , குறுகிய காலத்தில் MLA ஆகிவிட்டவர்.

அரசியல் எதிரிகளா , இல்லை உள்கட்சி சதியா என்ற ரீதியில் போலிஷ் விசாரணை போய்க்கொண்டிருக்க , அவரின் மனைவி , இன்ஸ்பெக்டரிடம் வந்து அந்த கடிதத்தை கொடுத்தார். அதனைப் படித்த இன்ஸ்பெக்டர் கணேஷ் , ஒரு சின்ன ஜெர்க்குடன் நாற்காலியின் நுனிக்கு வந்தார்.  அந்த கடிதத்தில்,



எனைத்துணையார் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
 தேரான் பிறனில் புகல்.

குறிப்பு :  சாலமன் பாப்பையா

இதென்னடா புது வகை கொலைகாரனா இருக்கான் , ஒரு வேளை , தமிழ் இலக்கியம் அதிகமா படிச்ச மென்டலா இருப்பானோ ,சஞ்சனா கேசுக்கும் இதுக்கும் தொடர்பு இருக்குற மாதிரி இருக்கே , ஆனால் செத்துப் போன ரெண்டு பேருக்கும் ஒரு தொடர்பும் இருக்குற மாதிரி தெரியலையே ..ஹ்ம்ம் இண்டரஸ்டிங் , சரி இந்த குறள் மீனிங் என்னன்னு பாப்போம் என்று மீண்டும் ராமின் போனை வாங்கி அர்த்தத்தை படித்தார், அது :

அடுத்தவன் மனைவியை விரும்பித் தன் பிழையைச் சிறிதும் எண்ணாமல் அவ்வீட்டில் நுழைபவன் எத்தனைப் பெருமை உடையவனாய் இருந்துதான் என்ன?

"ஹா ,இதுல போட்ருக்க படி பார்த்தா , MLA ஏதோ வம்பிழுத்த மாதிரி தெரியுதே"

ஏதோ லேசாக பிடிபட்ட மகிழ்ச்சியில் , மீண்டும் சஞ்சனாவின் வீட்டிற்கு விசாரிக்க கிளம்பினார். கண்ணன் வெளி நாட்டில் இருந்ததால் ,அவனுக்கு எதுவும் தெரியவில்லை. பக்கத்து வீடுகளில் விசாரிக்க , MLA வோ , அவரின் ஆட்களோ வந்து போனதற்கான அறிகுறியோ வேறு  எந்த மேலதிக தகவுலும் 
கிடைக்காமல் வெறுத்துப் போய் ஸ்டேஷன் திரும்பினார் இன்ஸ்பெக்டர்.

--தொடரும் ...



3 comments:

  1. சூப்பர் த்ரில்லர் சார்... அசத்துங்க...

    ReplyDelete
  2. அய்யோ அய்யோ இப்படி அழைய விட்டுட்டீர்ங்களே. சீக்கிரம் அடுத்த பாகத்தைப் போடுங்கள். இல்லாவிட்டால் என் மண்டை வெடித்த சாபத்துக்கு ஆளாகுவீர்கள்...

    ReplyDelete
  3. @Mohamed Faaique and
    @ஷர்மி

    வருகைக்கும் தொடரும் ஆதரவுக்கும் நன்றிகள் பல.

    ReplyDelete

படித்தது பிடித்தால் நண்பர்களுக்கு என் பதிவை, மறக்காமல் ,மறக்காமல் அறிமுக படுத்துங்கள்,அப்படியே ,எனக்கும் உங்கள் முத்தை உதிர்த்து விட்டு சென்றால் நானும் பதிவுலகில் பணக்காரன் ஆவேன் உங்கள் தயவில் :-)