Sunday, October 2, 2011

B L A C K D I A M O N D - சவால் சிறுகதைப் போட்டி -2011

ஒரு முக்கிய அறிவுப்பு :

அன்புள்ள வாசகர்களே ,இது நான்  ’யுடான்ஸ்’  திரட்டி தற்போது நடத்தி

வரும் ,சவால் சிறுகதை -2011 போட்டிக்காக எழுதிய சிறுகதை.இதை

படித்துவிட்டு ,உங்களுக்கு பிடித்திருந்தால் , எனக்காக Vote 
செய்து உங்கள் ஆதரவை அளிக்குமாறு வேண்டி , விரும்பி ,தாழ்மையுடன் 
கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ,இந்த

கதையின் முடிவில் இருக்கும் ’யுடான்ஸ்’ லோகோ

பக்கத்தில் உள்ள  Like ஐ

கிளிக் செய்து 

,உங்கள் ஓட்டை பதிவு செய்யவும்.  


B L A C K  D I A M O N D -  சவால் சிறுகதை-2011

சென்னையின் முக்கிய சாலையில் ,பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது அந்த எஸ்.பி ஆபீஸ். அதில் இருந்த ஓர் கார்னர் அறையில் , கம்பீரமாக வீற்றிருந்தார் சுபெரிண்டேன்ட் ஆப் போலீஸ் , திரு.கோகுல். அறை எல்லா நவீன அலங்காரங்களையும் கொண்டு மிக நேர்த்தியாக இருந்தது. விண்டோ ப்ளைண்ட்ஸ் எல்லாம் ஓபன் செய்யப்பட்டு , கண்ணாடியின் வழியாக சென்னையின் பிரதான சாலை தெரிந்தது. அதில் ஒன்றை ஒன்று முந்தியடித்து-கொடுத்த கடனை கேட்டு விரட்டுபவனிடம் இருந்து 'எஸ்' ஆவதைபோல் , ஒரு ஒழுங்கில்லாமல் ஓடிக் கொண்டிருந்தன அந்த வாகனங்கள், ஒரு வித அவசரத்தில்.

ஏதோ ஒரு கான்பிடன்சியல் பைலில் இருந்த பக்கங்களை புரட்டி   , வெகு மும்முரமாக படித்துக் கொண்டிருந்த கோகுலுக்கு ,வயற்றில் ஒருவித ஷார்ப் பெயின் உருவாக ,உடன் கடிகாரத்தை பார்த்தார். 'ஓ மை காட் ,அதுக்குள்ள மணி ரெண்டு ஆயிருச்சா , எப்பவும் இந்நேரதுகெல்லாம் சாப்பிட்டு வந்த்ருப்பேன் ,இன்னைக்கு லேட்டாயிருச்சே. எல்லாம் இந்த ஹை பிரசர் கேஸ் செய்யுற வேல' என்று முனகியவாறே , வீட்டிற்கு போன் செய்தார்.

 மறு முனையில் , அவரின் வீட்டில் வெகு காலமாக வேலை செய்யும் சமையல் காரர் ஆறுமுகம் .

"அய்யா ,சொல்லுங்க அய்யா".
"ஆறுமுகம் அண்ணே , இன்னைக்கு வீட்டுக்கு வந்து சாப்பிட முடியாது போல , நீங்க ஒன்னு பண்ணுங்க , ஒரு ஆட்டோவ பிடிச்சு , சாப்பாட இங்க கொண்டு வந்துருங்க".
"இதோ உடனே வர்றேன் அய்யா".

எஸ்.பி. கோகுலுக்கு , நாற்பது வயது , ஆனால் இன்னும் கல்யாணம் செய்யாமல் , கடமையே கண்ணென்று வாழ்ந்து கொண்டிருப்பவர். ஓவராக , பசி உறக்கம் பாராமல் , குற்றங்கள் நடக்கா வண்ணம் சென்னை அமைதியாக இருக்க வேண்டுமே  என்று உழைத்ததற்கு , அரசாங்கம் கொடுத்த பரிசு இந்த எஸ்.பி பதவி. ஆனால் இயற்கை கொடுத்த பரிசு , வயிற்றில் அல்சர்.

ஆறுமுகம்  அவரின் நோய் அறிந்து , காரம் அதிகமில்லாமல் ,பக்குவமாக சமைத்து போடுவதில் வல்லவர், அதனால் , கோகுல் வெளியே எங்கும் சாப்பிடாமல் , வீட்டிலேயே சாப்பிடும் பழக்கத்திற்கு தன்னை அடிமை ஆக்கிக் கொண்டார். ஆறுமுகத்தின் அந்த அக்கறையான கவனிப்பில் ,கோகுல் அவரை அண்ணன் என்றே கூப்பிடுவார் , உணமையிலேயே ஆறுமுகத்திற்கு ,கோகுலிற்கு அண்ணன் இருந்தால் அவர் வயதுதான் இருக்கும்.

"ஆறுமுகம் வரதுக்கு எப்பிடியும் இருபது நிமிஷமாகும் " என்று தனக்குள் சொல்லிக் கொண்டு , மேசையில் இருந்த தண்ணீரை குடித்து தற்காலிகமாக வயித்து வலிக்கு ஒரு முடிவு கட்டி, அந்த 'எர்கோநோமிக்ஸ்'  பரிந்துரைக்கும் எல்லா  விஷயங்களையும் கொண்ட , லேட்டஸ்ட் டிசைனில் செய்யப்பட்ட, தன் இருக்கையை நன்றாக  தளர்த்தி விட்டுக் கொண்டார். தன் தீரா முதுகு வலிக்கென்றே, பிஸியோ தெரபிஸ்ட் பரிந்துரைத்த படி ,ஸ்பெஷல் பர்மிசனில் ,வெளி நாட்டில் இருந்து அவரால்  தருவிக்கப்பட்ட இருக்கை அது.

லேசாக கண்ணை மூடிய அவரின் நினைவில்  மேசையின் மேலிருந்த அந்த 'பிரசர் ' கேஸ் விஷயங்கள் ,வரி வரியாக ஓடத் தொடங்கின. அந்த கேசின் முக்கிய சாராம்சம் இது தான் :

   "சென்னையில் பல காலமாக புகழ் பெற்று வெற்றி நடை போடும் அந்த நகை கடையில் சமீபத்தில் நடந்த கொள்ளை. நகை கடைகாரருக்கு அரசியல் செல்வாக்கு அதிகம். மேலும் பத்திரிகைகள் இந்த கொள்ளை விசயத்தை நிதமும் கட்டம் கட்டியதால் , அதை உடனே கண்டுபிடிக்க வேண்டும் என்கிற கட்டாயம் தமிழக காவல் துறைக்கு.  எஸ்.பி கோகுல் அந்த கேசுகாகவே அசெய்ன் செய்யப்பட்ட ஸ்பெஷல் ஆபிசர்."

கதவு தட்டப்படும் சத்தம் கேட்க , கோகுல் கண்ணை திறந்து பார்த்த பொழுது, ஆறுமுகம் கையில் , மூன்றடுக்கு எவர் சில்வர் பாத்திரத்தோடு நின்றிருந்தார். 
"வாங்க , அதோ அந்த டீ டேபிள் இருக்கு பாருங்க, அதுல இலையப் போட்டு வைங்க " என்று சொல்லி கை கழுவ சென்றார்.

ஆறுமுகம் கொண்டு வந்த சாப்பாட்டை எஸ்.பி , ருசிக்க தொடங்க , 
"அய்யா , புடலங்கா குடல் புண்ணுக்கு நல்லதுன்னு ஒரு புச்தகித்துல போட்டுரிந்துச்சு , நல்லா பண்ருக்கேனா?" ஆறுமுகம் கேட்டார்.

"ரொம்ப நல்லா வந்துருகுண்ணே" என்றவர் , 'ஆ , அப்புறம் கேக்க மறந்துட்டேன் , உங்க பய்யன் டிகிரி ரிசல்ட் வந்த்ருச்சா ?' என்றார் எஸ்.பி.
"ஆம் வந்து பாஸு பண்டான்யா, நீங்க தான் அவனுக்கு ஒரு வேல வாங்கி கொடுக்கணும் சார் " என்றார் உரிமையோடு ஆறுமுகம். 

"சரி ,அவன இன்னிக்கி , என்ன வந்து பாக்க சொல்லுங்க சரியா " என்று சொல்லிவிட்டு ,உணவு உண்ட திருப்தியில் ,கை கழுவச் சென்றார் எஸ்.பி.

ஆறுமுகம் விடை பெற்று செல்லவும் , அவரின் பர்சனல் தொலை பேசி , 'வீடு வரை உறவு ,காடு வரை பிள்ளை ,கடைசி வரை யாரோ ' என்று அவரின் மனப் போக்கை பறை சாற்றிக் கொண்டே 'ரிங் டோனத்'  தொடங்கியது.

"ஹலோ எஸ்.பி. கோகுல் ஸ்பீகிங் ,சொல்லுங்க கணேஷ்,ஒரு வாரமா என்னை காண்டக்ட் செய்யவே இல்லையே ,என்னாச்சு , ஆர் யு  ஆன் ட்ராக் ? கிவ் மீ சம் அப்டேட் நவ்".

"சார் ,அந்த நகை கடை விசயமா , ஒரு குளூ கெடச்சிருக்கு ,ஆனால் அதுல மேல் அதிக விவரம் சேகரிக்க ,புதுசா ஒரு இன்பார்மர் வேணும் ,நம்ம கிட்ட இருக்கிரவுங்கள கேட்டுப் பாத்துட்டேன் ,அவுங்க எல்லாம் அந்த கடைக்கு போய்ட்டு வர்ற கஸ்டமர்ஸ் , அதுனால அவங்களப் போட்டா சரியா வராது."
என்று சொன்னது  ,இன்ஸ்பெக்டர் கணேசின் குரல். கணேஷ் , இந்த கேசுக்கு ,எஸ் பி யால் ஸ்பெஷல் ஆக போடப்பட்டவர். அவரின் திறமை ,முந்தைய அசைன்மென்ட்களில் பளிசிட்டதால் , கோகுல் ரொம்பவும் இம்ப்ரெஸ் ஆகி ,அவரை வேண்டி வாங்கிக் கொண்டார்.

"சரி ,நீங்களா யாரையாவது பாத்து உடனே பிக்ஸ் பண்ணுங்க , கீப் மீ போஸ்டட்,டோன்ட் abscond like this again" என்றார் எஸ்.பி.
"sorry sir,  வில் கீப் யு போஸ்டட்  சார் " என்று போனை கட் செய்தான் கணேஷ்.

அரை மணி நேரத்திற்கு அப்புறம் ,மறுபடியும் போன் செய்தான் கணேஷ்:
"சார்  ,அந்த கடையிலேயே வேலை செய்யுற விஷ்ணு வ , இந்த கேசுல இன்பா ர்மரா வச்சிருக்க விரும்புறேன் சார்" .
"ஓகே கோ அகெட்" என்று எஸ் பி சொன்னதும் ,
 "பை சார் " என்று வைத்துவிட்டு நகை கடையின் உள்ளே, தன் தொப்பியை கழட்டி விட்டு நுழைந்தான்  கணேஷ்.

அந்த நகைக்கடை மிக பிரமாண்டமாய் , கடையா,இல்ல கடலா  என்று பிரமிக்க வைக்கும் வகையில் இருந்தது. எங்கு பார்த்தாலும் ,தங்கம் ஜொலி, ஜொலித்தது. இந்தியாவிற்கு கடன் கொடுக்கும் உலக வங்கி இங்கு வந்தால் ,நிச்சயமாக இனிமேல் கடன் கொடுக்க யோசிக்கும், ஏன் இந்தியா ஏழை நாடென்று சொல்லி கடன் கேட்கிறார்கள் என்று சந்தேகப்படுவது நிச்சயம்.

அங்கிருந்த ஹாலின் நடுவே , ஒரு கண்ணாடி கூடு , அதில் ஒரு ஆணின் உருவத்துடன் தத்ரூபமாக சிலை. அந்த சிலையின் மீது , ஏராளமான வைர நகைகள். மக்கள் அதன் முன் இருந்த குறிப்பை ஆர்வமாக படித்துக் கொண்டிருந்தார்கள். அதில் கண்ட வாசகங்கள் இவ்வாறு இருந்தது:

அன்பு வாடிக்கையாளர்களே ,

நீங்கள் பொதுவாக , பெண் மானிகுவின் சிலைகளை எல்லா இடங்களிலும் பார்த்திருப்பீர்கள்.  ஆபோசிட் அட்ராக்ட் , ஆபோசிட் என்ற புதிய கான்செப்டில் ,ஒரு ஆண் சிலைக்கு இந்த நகைகளை அணிவிதிருக்கிறோம்.  அந்த சிலை போட்டிருக்கும் நகைகள் மட்டும் விலை உயர்ந்தவை அல்ல. இந்த சிலையின் உடம்பின் பாகங்கள் , ஆப்ரிக்கா மற்றும் பிரேசிலிருந்து ,ஸ்பெஷல் ஆக கொண்டுவரப்பட்ட Black Diamond ல்  செய்யப்பட்டவை.இந்த சிலையின் விலை பல கோடிகள்.இதன் விலையை நீங்கள் சரியாக கணித்தால் ,உங்களுக்கு ஒரு ஆச்சர்ய பரிசு காத்திருக்கிறது. விலையை கணித்து ,பார்மில் உங்கள் ,பெயர் மற்றும் ,முகவரியை எழுதி ,அருகில் உள்ள கண்ணாடி பெட்டியில் போடவும்.

அங்கு வந்திருந்த கூட்டம்,வேக வேகமாக , பார்மை நிரப்பி , பெட்டியில் போட்டி போட்டு தள்ளி கொண்டிருந்ததை கண்டு ,தலையில் அடித்துக் கொண்டே உள்ளே சென்றான் இன்ஸ்பெக்டர் கணேஷ் .


மற்ற சில முக்கிய வேலைகளில் கவனத்தை திருப்பினார் எஸ்.பி.
மணி ஐந்து என்று , சுவரில் இருந்த அஜந்தா கடிகாரம் பீதோவன் மெட்டில் அவசரமாக காற்றை இனிமையான ஒலியால் நிரப்பி விட்டு நின்றது.

அறை கதவை தட்டும் ஓசை அவர் கவனத்தை சிதைக்க , 'எஸ் , கெட் இன் ' என்றார் எஸ்.பி கதவை பார்த்து. பார்த்தவுடன் தெரிந்தது , ஆறுமுகத்தின் முகச் சாயல் அப்படியே கொண்ட , அவரின் மகன் , கொஞ்சம் தயங்கி தயங்கி உள்ளே வந்தான். 

"சார் , நான் வந்து ..." இழுத்தான் சுரேஷ்.
"தெரியும்பா , நீ ஆறுமுகத்தோட பய்யன் தானே , உன்னை ரெண்டு மூணு வாட்டி  உங்கப்பா கூட சைக்கிளில் போறத பாத்திருக்கேன்".
"சார் ,அப்பா உங்கள பாத்துட்டு வரச் சொன்னார்".
"ஆமாம்பா , சொன்னாரு உன்னப் பத்தி  , உனக்கு என்ன மாதிரி வேல பாக்கணும்னு  இண்டரெஸ்ட்".
"சார் , நானும் உங்கள மாதிரி பெரிய போலீஸ் ஆபீசர் ஆகணும்".
"அடடா ,பரவயில்லையே , ஏன் இந்த ஆசை ?"
"சார் நான் சிறு வயதில் இருந்து ,துப்பறியும் நாவல்கள் படிச்சு ,அது மேல ஒரு வெறி சார் ,அதான் ..." வெகுளியாக ,தன் மனதில் இருந்த ஆசைகளை சொல்லிவிட்டான் சுரேஷ்.

"சரி, இப்ப போலீஸ் செலக்சன் முடிஞ்சு நாலு மாசம் தான் ஆச்சு, அதுல செலக்ட் ஆனவுன்களுக்கு போஸ்டிங் போடவே இன்னும் அரசாங்கம் ஆர்டர் போடல , இப்ப வர்ற தேர்தல் , அது இதுன்னு வச்சு பாத்தா, அடுத்த செலக்சன் வர்றதுக்கு ரெண்டு மூணு வருஷம் ஆகுமேப்பா  , அதுவரைக்கும் நல்லா தயார் பண்ணனும் என்ன ?" , அவன் ஆசையில் மண் போடாமல் பக்குவமாக சொன்ன  எஸ். பி , அவன் முகத்தில் தெரிந்த ஏமாற்றத்தை பார்த்தார். 

"என்னப்பா ?"
"சார், ரெண்டு மூணு வருஷம் நான் போலிசு செலக்சனுக்கு தயார் பண்ண ரெடி ,ஆனால் அதுவரைக்கும் ,ஏதாவது ஒரு வேலை பாத்தா தான் சார் ,எங்க அப்பாவுக்கு கொஞ்சமாச்சும் சப்போர்ட் பண்ண மாதிரி இருக்கும் ,இல்லேன்னா ரொம்ப கஷ்டமாயிடும் சார் ".

அவனின் நிலை கண்டு இரக்கப்பட்ட எஸ்.பி ,"சரி ,எனக்கு தெரிஞ்ச ஆபீஸ்ல ,ஒரு ஒப்பந்த கிளார்க் வேலை இருக்கு , போறியா ". "சார் போறேன் சார் " என்று சுரேஷ் தலை ஆட்டத் தொடங்க , மறுபடியம் பர்சனல் போனில் ,கண்ணதாசன் கவிக்க தொடங்கினார் .

"சார் ,இட் இஸ் வெரி அர்ஜன்ட்,தொந்தரவுக்கு மன்னிக்கவும் ,நான் இப்ப அந்த ஜூவல்லரி பில்டிங் பேஸ் மென்ல இருந்து பேசுறேன் " என்றான் கணேஷ்.

"இட்ஸ் ஒகே ,கணேஷ் , கோ அஹெட் ,மேல சொல்லுங்க ".
"சார் ,நான் முன்னாடி சொன்ன மாதிரி ,ஒரு இன்பார்மர் அரேஞ்சு பண்ணி ,உள்ள அனுப்பியாட்சி. அவன் ஒரு முக்கிய விஷயம் கொடுத்திருக்கான்.
நீங்க அத உடனே பாக்கணும், சார் இங்க நெறைய தப்பு நடக்குது ,சார் நம்ம ஆளுங்க யாரையும் அனுப்பாதீங்க , வேற யாரவது புதுசா அனுப்புங்க .இத கட்டாயம் நீங்க பாக்கணும்" என்று நீளமாக முடித்தான் கணேஷ்.

"சரி ,நான் இப்பவே அனுப்புறேன் " என்று தொடர்பை துண்டித்த எஸ்.பி , 
"ஏன் புது ஆள அனுப்ப சொல்றான் ,அது என்னவா இருக்கும் " என்று நெற்றி சுருக்கி யோசித்த எஸ்.பி. கோகுல் , எதிரில் இருந்த சுரேஷை பார்த்ததும் ,அந்த  யோசனை உதித்தது.  

"தம்பி சுரேஷ், நீ ஆசைப்பட்டபடி வேலை கண்டிப்பா கெடைக்கும் ,அதுவரைக்கும் நான் சொன்ன அந்த வேலைக்கு, இந்த முகவரில போயி ,நான் சொன்னேன்னு ,அங்க இருக்குற ,என் நண்பர்  'கண்ணன்' ங்குரவர , நாளைக்கி பாக்கணும் என்ன?"

சரிங்க சார் என்று எழுந்தான் சுரேஷ்.

"அப்புறம் ,நீ இப்ப வீட்டுக்கு போறயா,இல்ல வேற வேற எங்கயாவது பிரண்ட்ச பாக்க போணுமா ?" கேட்டது எஸ்.பி.

"இல்ல சார் ,வீட்டுக்கு தான் போகணும்"
"அப்ப ஒரு வேலை பண்ணு , உனக்கு *** ஜுவெல்ஸ்  தெரியுமாப்பா ?"
"தெரியாது சார் , ஆனா , டீ.வீல ,வெளம்பரம் பாத்துருக்கேன் "

பட பட வென்று அதன் முகவரியை ஒரு துண்டு பேப்பரில் எழுதி ,இந்த இடத்துக்கு போயி ,இன்ஸ்பெக்டர் கணேஷ் , அங்க பேஸ்மண்ட் ல  இருப்பாரு ,அவர போயி பார்த்து ,அவர் குடுக்கிரத, எங்கிட்ட உடனே வந்து கொடுக்கணும், ஒகே ?" என்றார் அவருக்கு பழகிப்போன  அதிகார குரலில்.

சுரேஷ் ஒரு வழியாக அந்த  பேஸ் மண்டை அடைந்து , கணேஷை தேட ஆரம்பித்தான். அங்கிருந்த ஒரு காரில் , இன்ஸ்பெக்டர் கணேஷ் ,
"இவன் சரியா வருவானா ? என்று கேட்டார் ,சீட்டில் அமர்ந்திருந்தவனை பார்த்து ."எஸ் சார், he looks perfect" வந்தது பதில். 

சுரேஷின்  தோளில் யாரோ தட்டினார்கள். திரும்பிய பொழுது , சிங்கம் சூர்யா போல, மிடுக்காக ஒரு இளைஞன் .  

"நீ சுரேஷ் தான?"
"ஆமா சார் , உங்களுக்கு  எப்படி என்ன ?" சுரேஷ் கேள்வியை முடிப்பதற்குள் ,
அவன் போட்டோவை ஐ போனில் காமித்தான் இன்ஸ்பெக்டர் கணேஷ்.
"அதுக்குள்ள எஸ்.பி  சார் என் போட்டோ வை  உங்களுக்கு அனுபிச்சிடாரா?"
"ஆமாம் ,இந்தா இத போயி அவர்கிட்ட கொடு " என்று சொல்லிய கணேஷ் ,
ஓங்கி சுரேஷ்  மண்டையில் தடியால் அடித்தான்.  

அந்த காரில் இருந்து இறங்கினான் , இன்பார்மர் விஷ்ணு.
கணேஷ் விஷ்ணுவிடம் ," சரி , நீ இப்ப ,நான் முன்ன சொன்ன மாதிரி ,அந்த SMS  ஐ ,நான் சொல்றப்ப  அனுப்பு   எஸ் பி கோகுல் சாருக்கு " என்றான் இன்ஸ்பெக்டர் கணேஷ் .

கணேஷ், தன் செல் போனில் ,எஸ்.பியை அழைத்து , 
"சார் ,யாரும் இன்னும் வரலையே சார் "
"அப்படியா ,ஒரு புது பையன அனுபிச்சனே , ச்சே ,அந்த பையன்ட்ட ,செல் போன் இருக்கான்னு கூடத் தெரியலையே ,எங்க போயிட்டான் " என்று எஸ்.பி புலம்ப , "சார் மை போன் பாட்டரி  இஸ் dying , ஐ வில் ஆஸ்க் தி இன்பார்மர் டு send யு எ பாஸ் வேர்டு,ப்ளீஸ் use it in our  portal  "  என்று தன் போனை வேண்டும் என்றே துண்டித்தான் இன்ஸ்பெக்டர் கணேஷ்.

விஷ்ணுவை பார்த்து  , கண்ணால் சிமிட்டி சமிக்ஞை கொடுக்க , அவன் போனின் ,டிராப்டில்  இருந்த அந்த மெசேஜ் ,எஸ்.பி கோகுலை , சாட்டிலைடின் வழியாக உடனே அடைந்தது.  

"டெக்னாலஜி ஹாஸ் இம்ப்ரூவுடு எ லாட் சார் " என்றான் விஷ்ணு ,கணேசை பார்த்து சிரித்துக் கொண்டே.
"சரி ,சரி நகையெல்லாம் கொண்டு வந்தயா?"
"oh yes, இங்க பாருங்க சார் , பெட்டியை திறந்தான் விஷ்ணு ,உள்ளே,சிலையில் பார்த்த நகைகளின் அச்சு அசல் காப்பி.

சரி ,இவனுக்கு , நல்லா கரி பூசி ,அந்த கெமிக்கல்ஸ் போட்டு, நாம கொண்டு வந்த நகை எல்லாம் போட்டு,இன்னைக்கு நைட்டு , அந்த ஷோ கேஸ்ல கொண்டு போயி நிக்க வச்சிடு ,அப்புறம் நான் சொன்ன பாங்க்ல போயி,அந்த manager கிட்ட பெர்சனலா கொடுத்து , என்னோட லாகர்ல ட்ராப் பண்ணச் சொல்லு  ,,நாளைக்கு காலைல  ,நீ ஹாங்காங் போயிடு, நான் இங்க எல்லாம் சரியானப்புறம் ,உன்னோட பங்க  ,சுவிஸ் பாங்க்ல வந்து சேரும் படி பாத்துகிறேன் , talk to you later" என்று விஷ்ணுவை பாத்து  சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு வெளியே ஓடினான் இன்ஸ்பெக்டர் கணேஷ்.

எஸ்.பி ஆபிசில் , மேசையில் பிங்கர் கிராஸ் பண்ணி ,டென்சனுடன் இருந்த கோகுல் , SMS வந்தடைந்த பீப் கேட்டவுடன் அவசரமாக , இன்பாக்ஸ் ல் இருந்த அந்த மெசேஜ்-ஐ  ஓபன் செய்தார்,அதில்:

   Mr.கோகுல் ,
   S W 62 HF - இதுதான் குறியீடு.  கவனமாக  தட்டச்சவும் .

  - விஷ்ணு 


எஸ் பி  உடனே  உளவுத்துறை portal வெப்சைட் அட்ரஸ் ஐ , இணைய உலாவியில்  கொடுத்து ,தன் கடவுச் சொல்லை  அடிக்க ,

"வெல்கம் திரு கோகுல் , உங்களுக்கு ஒரு பிரைவேட் மெசேஜ் உள்ளது ,அதனை திறக்க , குறியீடு எழுத்துக்களை ,இந்த பாப் அப்பில்  இருந்து தேர்வு செய்யவும் " என்று ஒரு பெண் குரல் இனிமையாக ஒலித்தது.

கோகுல் , SMS ஐ பார்த்து , ஒவ்வொரு எழுத்தாக கவனமாக விசை பலகையில்  உள்ளிடத் தொடங்கினார். மறுபடியம் அந்த பெண் குரல், 'சாரி சார், உங்கள் குறியீடு தவறாக உள்ளது ,மீண்டும் முயற்சிக்கவும்". கோகுல் மீண்டும் ,மீண்டும் முயற்சிக்க , 'சாரி சார் ,யு ஹாவ் எக்சீடடு தி லிமிட் , திஸ் மெசேஜ் வில் பி destroyed' என்று சொல்லி அவர் கண் முன்னே ,அவருக்கு வந்த அந்த பிரைவேட் மெசேஜ் ஐ, தன் வாயில் போட்டு மெல்லத் தொடங்கியது அந்த பெண்ணின் அழகிய செவ்வாய்.

எஸ் பி கோகுல், உடனே இன்ஸ்பெக்டர் கணேஷை அழைக்க , "சாரி ,நீங்கள் தொடர்பு கொள்ளும் எண் தற்போது உபயோகத்தில் இல்லை " என்றது அந்த வசீகர குரல்.


இரவு வந்தது. "இந்நேரம் விஷ்ணு எல்லா வேலையும் முடிச்சிருப்பான் ,சரி , நம்ம வேலைய  இப்ப ஆரம்பிக்கலாம்"  என்று  இன்ஸ்பெக்டர் கணேஷ் ஆவலுடன் , அந்த பிரைவேட் பாங்கின் உள் நுழைந்தார்.அந்த பாங்கில் ,லாக்கர் facility, வேறு எந்த பாங்கிலும் இல்லாத பாதுகாப்பை கொண்டது.  அதே சமயத்தில், customer  pre authorize செய்த ,வேறு நபர்கள் ,லாக்கர் -ல் எதுவும் டிராப் செய்யும் புதுமையான வசதி கொண்டது. அதனாலேயே ,அந்த பாங்கில் ,பல high profile கஸ்டமர்கள். 

 இன்ஸ்பெக்டர்  கணேஷுக்கு கடவுச் சொற்களை , நியாபகம் வைப்பதில் எப்போதும் தகராறு,முதல்  ஓரிரண்டு எழுத்துக்கள் மட்டுமே அவன் நினைவுக்கு வரும். தன் சட்டை பையில் கை விட்டு , ஒரு தாளில் எழுதி வைத்த, கடவுச் சொல்லை பார்த்தான் . இல்லையே , அந்த கடவுச்சொல் , ஆங்கில எழுத்து M  என்று இருக்குமே ,மீண்டும் தன் சட்டை பையில் துழாவ ,
"ஷிட் ,காலேல ,அந்த பேப்பர் இங்க வச்சிருந்தேன் , விஷ்ணுவுக்கு ,எஸ் பீக்கு அனுப்ப வேண்டிய குறியீடு எண்ணை வேறொரு பேப்பர் ல தான எழுதினேன். ஷிட்ஷிட் ,அப்படி இருக்குமோ'".

உடனே விஷ்ணுவுக்கு அழைக்க , " busy, please text me" என்றது அவனிடம் இருந்து வந்த SMS. உடனே வேகமாக , touch pad ல் ,கணேஷ் -ன்  விரல்கள் வேகமாக அந்த மெசேஜ் -ஐ ஒத்த ஆரம்பித்தன.
  "உன் சென்ட் மெசேஜ் ல், இருந்து ,நீ எஸ் பீக்கு அனுப்புன மெசேஜ் -ஐ , பார்வர்ட் செய் உடனே".

 விஷ்ணுவிடம் இருந்து வந்த forwarded மெசேஜ் -ஐ ,செக் செய்ய அதில் இருந்த குறியீடும் வேறாக இருந்தது. சரி ,வீட்டில் போய் பார்த்து விட்டு நாளை வரலாம் என்று முடிவு செய்து அந்த பாங்கிலிருந்து வீட்டிற்கு திரும்பினான் இன்ஸ்பெக்டர் கணேஷ்.

"ஆல் டன் சார் " என்று விஷ்ணுவிடம் இருந்து மெசேஜ் வந்தது.
ஒரு பெரிய குற்றத்தை செய்த எந்த பயமும் இல்லாமல் இருக்க , சிவாஸ் ரீகளை ,அளவாக வாயில் ஊத்திவிட்டு ,நிம்மதியாகத்  தூங்கத் தொடங்கினான். அவன் கனவில் , "வெளி நாடு அழகிகளுடன் அவன் கூத்தும் குடியுமாக இருப்பது போல்..."

அவன் போன் , "விளையாடு மங்காத்தா ,விடமாட்டா எங்காத்தா ,வெளி வேஷம் போடாட்ட,இந்த வெற்றி கிட்ட வாராதா " என்று அதி காலையில் மிரட்ட ஆரம்பித்தது.

எதிர் முனையில் விஷ்ணு ,"சார் ,all set, flight is about to take off" என்றான் .
"ஓகே , best of luck ,catch u later,lets not talk any longer" என்று அவசரமாக துண்டித்தான் இன்ஸ்பெக்டர் கணேஷ் .  வயிற்ரய் கலக்குவது போல் இருக்க , ஒரு புஸ்தகத்துடன் ,பாத்ரூமில் நுழைந்தான் .  பாத்ரூமை விட்டு வெளியே வர ,அரை மணி நேரத்திற்கு மேல் ஆகியது ,எப்போதும் அப்படித்தான்.

இந்நேரம் , விஷ்ணு flight பறக்க ஆரம்பிச்சுருக்கும் , சரி நாம ,அந்த லாக்கர் ,கடவு குறி  எங்கன்னு பார்ப்போம் என்று தேடத் தொடங்கினான் ,அவன் போனிற்கு வந்த SMS - ஐ கவனிக்காமலே. பலமாக தேடியும் எங்கும் காணக் கிடைக்கவில்லை அந்த குறியீடுகள் .ஒரு வேளை,ஆபீஸ் ல இருக்குமோ ,சரி போய் பார்ப்போம்.

மணி காலை ஒன்பதை நெருங்க ,வேகமாக தன் uniform-ஐ அணிந்து கொண்டு , மொதல்ல அந்த லாக்கர் ஓபன் பண்ணி ,கொள்ளை அடித்த நகைகளையும் ,black diamond    -யும் , வேற ஒரு இடத்துக்கு transfer பண்ணிட்டு , விஷ்ணு வ , எஸ் பி கிட்ட  ,போட்டு குடுத்திடுவோம். அவன் இனிமே ஜென்மத்துக்கும் இந்தியா வர முடியாத படி , இன்டர்போல் வரைக்கும் காய் நகர்த்தனும் ,அவன் மனம் சதுரங்கம் ஆடத் தொடங்கியது.

ஸ்டீயரிங் வீலை,ஸ்டைல் ஆக வளைத்த படி ,தன் செல் போனில் மணி பார்க்க ,மெசேஜ் waiting,என்று மின்னியது அந்த iphone screen. வேகமாக அதை ஓபன் செய்ய , மெசேஜ் விஷ்ணுவிடமிருந்து :

சார் , நீங்க கொடுத்த பேப்பர் கூட இன்னொரு paper இருந்தது ,அதுலயும் வேற ஏதோ குறிஈடு இருந்தது. எதுக்கு வம்புன்னு ,அதையும் எஸ்.பி போனுக்கு அனுபிட்சுட்டேன்.

இன்ஸ்பெக்டர் கணேஷின் முகம் வெளிரத் தொடங்கியது. ஷிட் , என்ன முட்டாள் தனம் பண்ணிட்டான்  இந்த பரதேசி , எஸ்.பி  ஆபீஸ் -ஐ நோக்கி ஜீப்பை விரட்டினான் இன்ஸ்பெக்டர்.

அவசரமாக ,எஸ் பி ஆபிசில் நுழைய , அவனை எதிர் பார்த்து கொண்டிருப்பது போல் , எஸ் பி கோகுல் அவனை வரவேற்றார்.

"வாய்யா கணேசு " அவர் குரலின் வித்யாசத்தை உணர்ந்தவனாக ,
"சார் ,எஸ் சார் "என்று விறைப்பாக ஒரு சல்யூட் அடித்தான். 
"என்னய்யா ,நேத்து ஒரு மெசேஜ் ,அந்த இன்பார்மர் விஷ்ணு அனுபிச்சான்,அதுல இருந்த குறிஈடு வேலை செய்யல ,ஏன் ?" என்று வினவினார் கோகுல்.
"சாரி சார் ,ஏதோ தப்பாயிருச்சி, அந்த இன்னொரு மெசேஜ் பற்றி கேட்கலாம் என்று கணேஷ் வாய் திறக்கவும் , அவன் போனில் இன்னொரு மெசேஜ் வந்த பீப் கேட்கவும் சரியாக இருந்தது. மறுபடியம் விஷ்ணுவிடம் இருந்து அந்த மெசேஜ்:

  Sir,
  எஸ்.பி ,கோகுலிடம்  நான் தவறான குறியீடைதான் கொடுத்திருக்கிறேன் .
  கவலை வேண்டாம்."
 -விஷ்ணு 

இன்ஸ்பெக்டர் கணேஷ் ஒரே குழப்பமாகி , சார் ,எனக்கு ஒரு அர்ஜென்ட் வேலை,நான் இப்ப ஒரு அரை மணி நேரத்துல ,உங்கள வந்து பார்க்கிறேன்" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து ஓடத் தொடங்கினான்.

விரைவாக அந்த பேங்க் -ஐ அடைந்து , அங்கிருந்த தன் நண்பனாகிய மேனேஜர் இடம்  தான் லாக்கர் கடவு குறியீடு மறந்த விசயத்தை சொல்ல ,அவர் சிரித்துக் கொண்டே , ஒரு பார்மில் கை ஒப்பம் வாங்கிவிட்டு , புதிய கடவு குறியீட்டை செட் செயுமாறு ,அந்த சிறிய உபகரணத்தை நீட்டினார் . கணேஷ் , வேகமாக, black diamond என்று செட் செய்து விட்டு , லாக்கர் இருந்த திசை நோக்கி ஓடினான் .

வேகமாக லாக்கரை திறந்த கணேஷுக்கு கிடைத்தது ஒரு கடிதம் மட்டுமே . அதில் விஷ்ணு எழுதி இருந்தது :

"சார் ,சாரி , இவ்வளவு நகைகளை பங்கு போட எனக்கு விருப்பம் இல்லை.இந்த சதியில் ,உங்கள் உழைப்பை விட ,என் உழைப்பு மிகவும் அதிகம் .வெறும் ஐடீயாவுக்கு ,நீங்கள் கேட்ட 90% மிகவும் அதிகம் . உங்களுக்கு என் நன்றி மட்டுமே , இனிமே ,இந்த உலகத்தில நானும் ஓர் பெரிய மனிதன். நீங்க அடிக்கடி சொல்ற  ,காசுள்ளவன் எது சொன்னாலும் அது கோடி ரூபா பெரும்னு, அது மாதிரி ,இந்த பெரிய மனிதனின்  நன்றி ,அந்த 10%-கு சமம் இப்போ".

இன்ஸ்பெக்டர் கணேஷ்கு கண்ணெல்லாம் இருட்டியது. ச்சே ,நல்லா ஏமாந்திட்டோம். கணேசை அவமானம்,கோபம் எல்லாம் பிடுங்கி தின்ன ஆரம்பித்தது. எங்கு செல்வது என்று திக்கிலாம்மல் ,ஜீப்பை ஓட்டத் தொடங்கினான் . என்ன செய்வது என்று தீவிரமாக யோசித்த கணேஷ் ,தன்
 i-போனில் ,வீடியோ ரெகார்டிங் செய்யத் தொடங்கினான்.

எஸ்.பி கோகுல்கு ,கணேஷ் அனுப்பிய MMS  போய் சேர்ந்தது. அவர் அதை ஓபன் செய்ய , இன்ஸ்பெக்டர் கணேஷின் முகம் திரையில் தோன்றி பேச ஆரம்பித்தது :

"
சார் , இந்த நகை கடை ஓனர் ஒரு  பிராடு . கோடி கணக்கில் வரி ஏய்ப்பு செய்துள்ளார். அதை மறைக்கவே இந்த கொள்ளை நாடகத்தை நடத்தி உள்ளார் .நான் கண்டுபிடித்ததை அவர் உணர்ந்து கொண்டார் போல, என்னிடம் பேரம் செய்தார் , சம்மதிகவில்லை என்றால் ,என்னை வேலையில் இருந்து தூக்கி விடுவதாக மிரட்டினார். அப்போது தான் ,அவர் கடையில் வேலை செய்யும் ,அவரின் சொந்த அக்காள் மகன் ,என்னிடம் வந்து பேசினான். அவன் ஏழையாக இருப்பதால் அவன் மாமா ,பெண் தர மறுத்து விட்டார் என்றான் .அவர் மேல் இருந்த கோபத்தில் ,பேசாம , அங்கிருக்கும் சிலையை திருடேன் என்று நாநும் தவறுதலாக சொல்லப் போக ,அவன் என்னையும் அந்த திட்டத்தில் சேர்த்துக் கொண்டான். ஆனால் என்னை ஏமாற்றி விட்டு ,அத்தனை நகைகளுடன் ,வெளி நாட்டிற்கு பறந்து விட்டான்.  நான் இனிமேல் உங்கள் முகத்தில் முழிக்கவும் ,பணியில் சேரவும் விருப்பமில்லை .நான் இந்த உலகத்தை விட்டு போகிறேன் ."

அவன் தலயில் ரிவால்வர் வைப்பதும் ,தனக்கு தானே சுடுவதையும் , புளிச்சென்று சிவப்பாக ரத்தம் திரை மறைத்ததையும் , எஸ் பி கோகுல் ,இமை இமைக்காமல் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தார்.


இந்த முடிவு சப் என்று இருக்கிறது என்று முடிவு கட்டுபவர்களா நீங்கள் ,உங்களுக்காக கொஞ்சம் மசாலா :

"பயணிகளுக்கு ஒரு அறிவிப்பு , இன்னும் அரை மணி நேரத்தில் , நாம் ஹாங்காங் விமான நிலையத்தில் தரை இறங்கப் போகிறோம். நீங்கள் உங்கள் சீட் பெல்டை போட்டுகொள்ளவும். Cabin crews...." என்ற அறிவிப்பை கேட்டவுடன் ,விமானத்தில் இருந்த , விஷ்ணு , கண்ணில் சிறுது எரிச்சல் இருந்ததை அடக்கிக் கொண்டு,நிமிர்ந்து உக்காரந்தான்.

சன்னல் வழியாக கிழே பார்க்க , கடலில்  அங்கொன்றும் ,இங்கொன்றுமாக செல்லும் கப்பல்கள் ,ஒரு பொம்மை போல் சிறிதாக தெரிய ஆரம்பித்தது.  
இன்னும் சிறிது நேரத்தில் ஹாங்காங் , அப்புறம் நம் லைப் ஜாலி ஜாலி தான் , தனக்குள் சிரித்துக் கொண்டே ,சீட் பெல்டை அணிய ஆரம்பித்தான்.

மறுபடியும் காப்டன், "இட் இஸ் அன் எமர்ஜன்சி , வி ஆர் அபௌட் டு கிராஷ் , உங்கள் சீட்டை , நீரில் மிதக்க உபயோகித்து கொள்ளவும்" என்று சொல்லி முடிக்கவும் , விமானம் தண்ணீரை கீழித்து ,உள்ளே மூழ்கவும் சரியாக இருந்தது.

அந்த Black Diamon நீரின் அடியில் பத்திரமாக ,அதன் மூலத்தை நோக்கி விரைவாக மூழ்க ஆரம்பித்தது.


59 comments:

  1. நல்லாயிருக்கு பாஸ்.. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. கதை நல்லா இருக்கு! ஓட்டும் போட்டுவிட்டேன்!

    ReplyDelete
  3. @Mohamed Faaique
    @Powder Star - Dr. ஐடியாமணி

    உங்கள் அன்பிற்கும் ,ஆதரவிற்கும் நன்றிகள் பல. உங்கள் படைப்புகளையும் இந்த போட்டியில் காண ஆவலாக உள்ளேன்.

    ReplyDelete
  4. @cablesankar
    வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  5. @கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி)
    நன்றி நண்பரே, மறக்காமல் போடவும்.

    ReplyDelete
  6. Very,very confusing style and failed to follow the style of SUJATHA - sorry to pass such a cooment but it is the fact; try to improve

    R.S.Mani

    ReplyDelete
  7. @R.S.Mani
    கருத்துக்கு நன்றி, will try to improve.

    ReplyDelete
  8. After suicide, who sent the MMS to Gokul?

    ReplyDelete
  9. @Anonymous
    சுட்டவுடன் உயிர் போகாது என்று நினைகிறேன்,கொஞ்ச நேரமாவது துடிக்கும் அதனால கணேஷ் ,சென்ட் அ அமுகிருகாலம்னு கற்பனை பண்ணேன்... முன்னே பின்ன சுட்டதிலிங்க, யாரையாவது வச்சு ட்ரை பண்லாம்னு
    இருக்கேன், யாராவது ரெடியா இருந்தா கம்மேன்ட்ல சொல்லுங்க பாசு.

    இன்னும் கொஞ்சம் திகிலா மாத்தனும்னா , சுரேஷ் ஓட ஆவி சுட்டமாதிரி கூட நீங்க சேத்துக்கலாம் , உடனே ஒரு பேய் கதையா மாறிடும், எப்பூடி?

    ReplyDelete
  10. @Anonymous
    இல்லேன்னா நீங்க கேட்ட கேள்வியவே , நல்லா போல்ட் லெட்டர் ல போட்டு , எஸ்.பீ. அதை தன்னோட பாசுக்கு
    சொல்றமாதிரியும் , அதுக்கு கிழே , ஒரு பேக் கிரௌண்டு மியூசிக்போட்டு , சவால் போட்டி 2012 இல் தொடரும் அப்படின்னு கூட போடலாம்.

    ச்சே இதுக்கு தான் நான் ரொம்ப தமிழ் படம் பாக்கக் கூடாது ,என்னமா ஐடியா வருது , இளையதாசா , நீ எங்கயோ போயிட்ட ராசா!

    ReplyDelete
  11. @Anonymous
    On a serious note, you gave me an idea for developing an iphone app which allows one to send a delayed or deferred SMS and MMS. I believe already some app might be there,googling for it might tell it. If not ,we shall develop it. Since you gave the idea, you will get 90% and I will get 10% of the revenue.

    I wont behave like Vishnu character, I promise. :-)

    ReplyDelete
  12. @கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன்

    மீண்டும் நன்றிகள் பல.

    ReplyDelete
  13. @Thuvarakan

    நன்றி பாசு , ஓட் போட்டாச்சா?

    ReplyDelete
  14. கதை நல்லா இருக்கு பாஸ்

    ReplyDelete
  15. @வைரை சதிஷ்

    வருகைக்கும் ,ரசித்தமைக்கும், ஓட்டு போட்டதற்கும் நன்றிகள் பல.

    ReplyDelete
  16. நல்ல முயற்சி இளையதாசன்..வாக்களிக்கிறேன்.

    ReplyDelete
  17. நன்றி செங்கோவி.மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  18. dear ilayadasan, thanks for yr comment about my KAVIDHAI.. and as u told i read yr story, really it s very nice. i like it man. keep it up.

    ReplyDelete
  19. @sundaravadivelu

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  20. மாப்ள கதை நல்லா இருக்குய்யா ஓட்டும் போட்டுட்டேன்...பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  21. @விக்கியுலகம்

    நன்றி மாப்ஸ்.

    ReplyDelete
  22. ஓட்டுப் போட்டாச்சுங்க. நானும் ஒரு கதை எழுதப்போறேன் :)

    ReplyDelete
  23. @வருண்
    எழுதுங்க தலைவா,பதில் ஓட்டு நிச்சயம். நன்றிகள் பல.

    ReplyDelete
  24. இளையதாசா ---

    உன் சிறுகதை மிகவும் அருமை, கதை ஓட்டமும் அருமை. இன்னும் எழுது, படிக்க ஆவலாக உள்ளேன்.

    ஒரு சின்ன கருத்து : சில ஆங்கில வார்த்தையை அப்படியே ஆங்கிலத்தில் எழுது... தமிழில் அப்படியே ஒலி பெயர்த்திருப்பது , படிப்பர்வர்களுக்கு கடினமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

    ReplyDelete
  25. கதை ஓக்கே, வாழ்த்துக்கள்

    ReplyDelete
  26. @சி.பி.செந்தில்குமார்
    நன்றி நண்பரே.

    ReplyDelete
  27. நன்றி நண்பா ..
    வில் டூ :-)

    ReplyDelete
  28. @திருநெல்வேலிக்காரன்
    நன்றி நண்பா ..
    வில் டூ :-)

    ReplyDelete
  29. சூப்பர்... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  30. @சசிகுமார்
    நன்றி நண்பரே!

    ReplyDelete
  31. கதை நல்லாயிருக்கு. போட்டிக்கு என்ற போது ஒரு முடிவுடன் அனுப்புவதே நல்லது. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  32. @சே.குமார்,
    நன்றி நண்பரே!

    ReplyDelete
  33. கதை படத்துடன் சரியாக பொருந்துகின்றது வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ஓட்டும் போட்டாச்சு

    ReplyDelete
  34. @veedu

    நன்றிகள் பல நண்பரே!

    ReplyDelete
  35. nice story.....but what happened to that boy suresh.

    ReplyDelete
  36. @தேவைகளற்றவனின் அடிமை said...

    நன்றி நண்பரே..விரைவில் பார்ட் டூ வரும் ,அதில் சொல்கிறேன்.

    ReplyDelete
  37. கதை நல்லா இருக்கு!

    ReplyDelete
  38. @vinothiny dk
    நன்றி நண்பரே!

    ReplyDelete
  39. @இராஜராஜேஸ்வரி

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  40. கதை நன்றாக உள்ளது... இரண்டாவது கதையைத் தான் முதலில் படித்து கமெண்ட் போட்டேன். அது பிடிக்கவேயில்லை. ஆனால் இந்தக் கதை பரவாயில்லை ரகம்.

    தொடருங்கள்... வாழ்த்துகள்

    ReplyDelete
  41. @சுந்தர் (காங்கோ)

    மிக்க நன்றி.

    ReplyDelete
  42. கதை சூப்பர் ... வோட்டும் போட்டாச்சு

    ReplyDelete
  43. @மாய உலகம்
    @ADAM

    நன்றி நண்பர்களே.

    ReplyDelete
  44. கதை நன்று!

    எழுத்துப்பிழைகளை கவனித்து நீக்குங்களேன்.!

    ReplyDelete
  45. @சுரேகா..
    நன்றி ,சுட்டிக்காட்டியதற்கு , சரி செய்றேன்.

    ReplyDelete
  46. கதை நன்றாகவே இருக்கிறது வாழ்த்துகள்!

    ReplyDelete
  47. @ஷைலஜா
    நன்றி மேடம்.

    ReplyDelete
  48. அந்த Black Diamon நீரின் அடியில் பத்திரமாக ,அதன் மூலத்தை நோக்கி விரைவாக மூழ்க ஆரம்பித்தது./

    இந்த முடிவு சிறப்பாக பொருந்துகிறது!

    பாராட்டுக்கள்..

    ReplyDelete
  49. @இராஜராஜேஸ்வரி

    //இந்த முடிவு சிறப்பாக பொருந்துகிறது!

    பாராட்டுக்கள்..//

    Thanks a lot.

    ReplyDelete
  50. ஒக்கே.. வாழ்த்துக்கள்

    --- உங்களுடன் எனது இந்தக் கதை மூலம் போட்டி போடும் வலை-நண்பன்

    ReplyDelete
  51. கதை நன்றாக இருக்கிறது,கொஞ்சம் சுருக்கியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும், வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  52. சிறுகதை எழுத சொன்னால் குறுங்கதை எழுதிவிட்டீர்கள் போலிருக்கிறதே.

    கதை நன்றாக இருக்கிறது. மங்காத்தா படத்தின் பிரதிபலிப்போ என எண்ணும் வகையில் கதையில் ஆங்காங்கே நெடி.

    வாழ்த்துகள். நன்றி.

    ReplyDelete

படித்தது பிடித்தால் நண்பர்களுக்கு என் பதிவை, மறக்காமல் ,மறக்காமல் அறிமுக படுத்துங்கள்,அப்படியே ,எனக்கும் உங்கள் முத்தை உதிர்த்து விட்டு சென்றால் நானும் பதிவுலகில் பணக்காரன் ஆவேன் உங்கள் தயவில் :-)